TNPSC Thervupettagam

தமிழ்நாட்டின் விடுதலைப் போராட்ட வீரர்கள் பாகம் – 04

July 24 , 2024 12 hrs 0 min 183 0

(For English version to this please click here)

20. எப்.ஜி. நடேச ஐயர்

ஆரம்ப கால வாழ்க்கை மற்றும் கல்வி

  • எப்.ஜி.நடேச ஐயர் புதுக்கோட்டையில் ஜானகியம்மையார் மற்றும் கங்காதர சாஸ்திரிகளுக்கு 1880 நவம்பர் 11 அன்று பிறந்தார்.

தொழில் மற்றும் பங்களிப்புகள்

  • நடேச ஐயரின் முறையான வாழ்க்கை பெரும்பாலும் தென்னிந்திய இரயில்வே நிறுவனத்தில் இருந்தது.
  • அங்கு இவர் 1935 ஆம் ஆண்டு மாவட்டப் போக்குவரத்து கண்காணிப்பாளராகப் பதவி உயர்ந்தார் என்பதோடு இந்தப் பதவியை வகித்த முதல் இந்தியர் இவர் ஆவார்.

அரசியல் செயல்பாடு

  • நடேச ஐயர் இந்திய தேசிய காங்கிரஸில் (INC) ஒரு முக்கியப் போராளி மற்றும் இந்திய சுதந்திர இயக்கத்தில் குறிப்பிடத்தக்கப் பங்காற்றினார்.
  • இவர் 1914 ஆம் ஆண்டு இந்திய தேசிய காங்கிரஸில் சேர்ந்தார் மற்றும் அதன் அமர்வுகளில் தீவிரமாக ஈடுபட்டார் என்பதோடு பம்பாய் (1915), லக்னோ (1916) மற்றும் மெட்ராஸ் (1917) ஆகிய காங்கிரஸ் கூட்ட அமர்வுகளில் திருச்சிராப்பள்ளியை அவர் பிரதிநிதித்துவப்படுத்தினார்.
  • 1917 ஆம் ஆண்டு மெட்ராஸ் அமர்வில், இவர் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் தேர்ந்தெடுக்கப் பட்ட உறுப்பினராக இருந்தார் மற்றும் ஒப்பந்தத் தொழிலாளர் குறித்த தீர்மானத்தை முன்வைப்பதில் குறிப்பிடத்தக்க வகையில் பங்காற்றினார்.
  • அவர் இந்திய ஹோம் ரூல் இயக்கத்தின் வலுவான ஆதரவாளராக இருந்தார் மற்றும் திருமதி அன்னி பெசன்ட் மற்றும் ஜார்ஜ் அருண்டேல் போன்ற முக்கிய நபர்களின் சிறைவாசத்தைத் தொடர்ந்து சென்னை மாகாண மாநாட்டில் சாத்வீகமான எதிர்ப்புத் தீர்மானத்தில் பங்கேற்றார்.

தமிழ் நாடகம் மற்றும் திரைத்துறைக்குப் பங்களிப்பு

  • இவரது அரசியல் வாழ்க்கைக்கு கூடுதலாக, நடேச ஐயர் நவீன தமிழ் நாடகம் மற்றும் திரைத்துறையில் ஒரு முன்னோடியாக திகழ்ந்தார் என்ற நிலையில் தமிழ்நாட்டின் கலாச்சாரத்தைப் பரப்புவதில் குறிப்பிடத்தக்கப் பங்களிப்பை வழங்கினார்.

மரபு மற்றும் இறப்பு

  • நடேச ஐயர் 23 ஜனவரி 1963 அன்று காலமானார்.

21. பி. கக்கன்

ஆரம்ப கால வாழ்க்கை

  • பி.கக்கன் 1909 ஜூன் 13 அன்று மதுரையில் பிறந்தார்.
  • 8 ஜூலை 1939 அன்று, அவர் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்குள் ஐந்து தலித்துகள் கொண்ட குழுவை வழி நடத்தினார் என்ற வகையில் இது கோவில் நுழைவு இயக்கத்தில் ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லை எட்டியது.
  • ஹரிஜன் சேவக் சங்கத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த நிகழ்வு உயர்சாதி இந்துக்களின் கடுமையான எதிர்ப்பை எதிர்கொண்டது என்ற போதிலும் இது ஒரு வரலாற்றுச் சாதனை ஆகும்.

இந்திய சுதந்திர இயக்கத்தில் பங்கு

  • அவர் தனது இளமைப் பருவத்திலிருந்தே, தலித்துகள் மற்றும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினரை மேம்படுத்துவதற்கான இயக்கங்களில் தீவிரமாக ஈடுபட்டார்.
  • கக்கன் இந்திய சுதந்திரப் போராட்டம் மற்றும் தலித் உரிமைகள் இயக்கத்தில் அவரது பங்கிற்காக நன்கு அறியப்பட்டவர் ஆவார்.
  • 1942 ஆம் ஆண்டில் வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் ஈடுபட்டதற்காக கைது செய்யப் பட்டு 1.5 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப் பட்டார்.
  • கோவில்களில் ஜாதி வேறுபாடின்றி அனைவரும் நுழையலாம் என்பதை ஊக்குவித்த 1936 ஆம் ஆண்டு திருவிதாங்கூரில் வெளியிடப் பட்ட கோவில் நுழைவு பிரகடனத்தின் மூலம் ஈர்க்கப் பட்டதனால்  மதராசில் கோவில் நுழைவு இயக்கமானது புதுவேகம் பெற்றது.
  • கக்கன் உட்பட  மதுரை காங்கிரஸின் உறுப்பினர்கள் ஜூன் 1939 ஆம் ஆண்டில் தாழ்த்தப்பட்ட சமூகங்களைச் சேர்ந்தவர்கள் மீனாட்சி கோவிலுக்குள் நுழைவதற்கு என்று கோயில் நுழைவு பிரச்சாரக் குழு ஒன்றை நிறுவினர்.
  • இந்த முயற்சி மேலே குறிப்பிட்ட வரலாற்று நிகழ்வில் உச்சக் கட்டத்தை அடைந்தது.
  • 1939 ஆம் ஆண்டு ஜூலை 17 ஆம் தேதி, மெட்ராஸ் பிரசிடென்சியின் முதல்வர் சி. ராஜ கோபாலாச்சாரி,  மதராஸ் கோயில் நுழைவிற்கான அவசரச் சட்டத்தை நிறைவேற்றினார்.

அரசியலமைப்பு உருவாக்கத்தில் பங்களிப்பு

  • கக்கன், மதராஸ் மாகாணத்தில் இருந்து காங்கிரஸ் கட்சியில், அரசியல் நிர்ணய சபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்.
  • தனித் தொகுதிகள் மற்றும் இட ஒதுக்கீடு குறித்த விவாதங்களில் அவர் தீவிரமாகப் பங்கேற்றார்.

பிற்காலப் பங்களிப்புகள்

  • கக்கன் 1951 ஆம் ஆண்டு மதுரையிலிருந்து மக்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
  • காங்கிரஸ் கட்சியின் தீவிர உறுப்பினரான இவர் 1957 ஆம் ஆண்டு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவராக நியமிக்கப்பட்டார்.
  • 1957 ஆம் ஆண்டு முதல் 1967 ஆம் ஆண்டு வரை மதராஸ் சட்டமன்ற உறுப்பினராகவும் இருந்தார்.
  • பல முக்கியப் பதவிகளான பொதுப்பணித் துறை (1957-62), விவசாயம் (1962-63), மற்றும் உள்துறை அமைச்சர் (1963-67) போன்ற பதவிகள் உள்பட கக்கன் தொடர்ந்து இரண்டு தமிழ்நாடு அரசாங்கங்களில் அமைச்சராகப் பணியாற்றினார்,
  • சட்டமன்ற உறுப்பினராகவும், செயற்குழு உறுப்பினராகவும், நேர்மையான, கடின உழைப்பு மிக்க தலைவராக இவர் கொண்டாடப்பட்டார்.
  • அமைச்சராக இருந்த போது அவர் செய்த குறிப்பிடத்தக்கச் சாதனைகளில் ஒன்று அணைகள் கட்டுவதும், தமிழகத்தில் விவசாயக் கல்லூரிகளை நிறுவியதும் ஆகும்.
  • 1967 ஆம் ஆண்டு தேர்தலில் எதிர்க்கட்சியான திமுகவிடம் தோல்வியடைந்த பிறகு, கக்கன் அரசியலில் இருந்து ஓய்வு பெற்றார்.

இறப்பு மற்றும் மரபு

  • கக்கன் 23 டிசம்பர் 1981 அன்று காலமானார்.
  • இன்றைய தமிழகத்தில் தலித் அரசியல் மற்றும் விவசாயச் சீர்திருத்தங்களை வடிவமைப்பதில் இவரது பங்கிற்காக, அவர் ஒரு சிறந்த தலைவராகக் கருதப் படுகிறார்.

22. தட்டை கிருஷ்ணமாச்சாரி

ஆரம்ப கால வாழ்க்கை

  • திருவள்ளூர் தட்டை கிருஷ்ணமாச்சாரி 1899 நவம்பர் 26 அன்று சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிக்குப் பிறந்தார்.
  • மெட்ராஸ் பல்கலைக்கழகத்தில் அவர் கல்வி பயின்றார்.
  • 1928 ஆம் ஆண்டில், அவர் TTK கம்பெனி லிமிடெட் என்ற நிறுவனத்தை நிறுவினார்.
  • சில ஆண்டுகளுக்குப் பிறகு, இவர் முழு நேர அரசியலில் இணைந்தார்.

சுதந்திர இயக்கத்தில் ஈடுபாடு

  • கிருஷ்ணமாச்சாரி 1937 ஆம் ஆண்டில் சென்னை சட்டமன்றத்திலும், 1942 ஆம் ஆண்டில் மத்திய சட்டமன்றத்திலும் உறுப்பினரானார்.

அரசியலமைப்பு உருவாக்கத்திற்கான பங்களிப்புகள்

  • கிருஷ்ணமாச்சாரி மதராசிலிருந்து காங்கிரஸ் கட்சியின் சார்பில் அரசியல் நிர்ணய சபைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
  • வரைவுக் குழுவின் உறுப்பினராக, அவர் 4014 மணி நேரத்தை அந்தக் குழுவின் பல பணிகளுக்கு அர்ப்பணித்தார்.
  • சட்டசபையில், பேச்சுச் சுதந்திரம் மற்றும் அவசரகால விதிகள் உள்ளிட்ட பல பிரச்னைகளில் அவர் தலையிட்டார்.

சுதந்திரத்திற்குப் பிந்தைய அரசியல் வாழ்க்கை

  • கிருஷ்ணமாச்சாரி 1955 ஆம் ஆண்டு முதல் 1957 ஆம் ஆண்டு வரை மத்திய இரும்பு மற்றும் எஃகு அமைச்சராக இருந்தார்.
  • பின்னர், 1956 ஆம் ஆண்டில் நிதி அமைச்சராக சிறிது காலம் பணியாற்றினார்.
  • அவரது பதவிக் காலத்தில், முக்கிய வரி சீர்திருத்தங்களைக் கொண்டு வந்தார் என்பதோடு அவர் மூலதன ஆதாயங்கள், செல்வம், எஸ்டேட் மற்றும் செலவுகள் மீதான வரிகளை அறிமுகப் படுத்தினார்.
  • முந்த்ரா ஊழல் காரணமாக, அவர் 1958 ஆம் ஆண்டு ராஜினாமா செய்தார்.
  • ஆனால் 1963 ஆம் ஆண்டு நேருவின் அமைச்சரவைக்கு அவர் திரும்ப அழைக்கப்பட்டு இரண்டு ஆண்டுகள் நிதி அமைச்சராகப் பணியாற்றினார்.
  • இந்தியத் தொழில்துறை மேம்பாட்டு வங்கி மற்றும் யூனிட் டிரஸ்ட் ஆஃப் இந்தியா உள்ளிட்ட நிதி நிறுவனங்களை அமைப்பதில் அவர் முக்கியப் பங்கு வகித்தார்.

முக்கிய குறிப்புகள்

  • 1954 ஆம் ஆண்டில், கிருஷ்ணமாச்சாரி மக்களவைச் செயலகத்தால் வெளியிடப்பட்ட வெள்ளி விழா நினைவுத் தொகுதியின் ஒரு பகுதியாக, ‘பாராளுமன்ற வாழ்க்கை 1929-54’ என்ற தனது நினைவுக் குறிப்பை எழுதியுள்ளார்.
  • இறப்பு: மார்ச் 7, 1974 அன்று காலமானார்.

23. பெருமாள் வரதராஜுலு நாயுடு

ஆரம்ப கால வாழ்க்கை

  • பெருமாள் வரதராஜுலு நாயுடு 1887 ஆம் ஆண்டு ஜூன் 4 ஆம் தேதி பிரிட்டிஷ் இந்தியாவின் மெட்ராஸ் பிரசிடென்சியில் உள்ள ராசிபுரத்தில் தெலுங்கு பாலிஜா நாயுடு குடும்பத்தில் பிறந்தார்.
  • இவரது தந்தை பெருமாள் நாயுடு ஒரு பணக்கார நிலப்பிரபு ஆவார்.
  • வரதராஜுலு நாயுடு தனது ஆரம்பக் கல்வியை மதராசில் பயின்று, ஆயுர்வேத மருத்துவராகப் பயிற்சி பெற்றார்.

அரசியல்

  • வரதராஜுலு நாயுடு ஆரம்பத்தில் அரசியலில் நுழைந்து இந்திய தேசிய காங்கிரஸில் உறுப்பினரானார்.
  • பின்னர் அரசியல் நடவடிக்கைகளில் கவனம் செலுத்துவதற்காக 1917 ஆம் ஆண்டில் அவர் தனது மருத்துவப் பயிற்சியை கை விட்டார்.
  • 1924 ஆம் ஆண்டு முதல் 1926 ஆம் ஆண்டு வரை அவர் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் (TNCC) தலைவராக இருந்தார்.

சேரன்மாதேவி பள்ளி சர்ச்சை

  • ஒரு தேசியப் பள்ளியான சேரன்மாதேவி குருகுலத்தில் பிராமணர் மற்றும் பிராமணர் அல்லாத மாணவர்களுக்கு தனித்தனியாக உணவளிக்கும் ஒரு நடைமுறையை எதிர்த்து சேரன்மாதேவி பள்ளிப் பிரச்சனையில் வரதராஜுலு நாயுடு ஈடுபட்டார்.
  • அவரது பல்வேறு முயற்சிகள் பள்ளியின் கொள்கைகளில் குறிப்பிடத் தக்க மாற்றங்களுக்கு வழி வகுத்தது மற்றும் காங்கிரஸ் கட்சிக்குள் சாதிப் பிரச்சினைகளை முன்னிலைப் படுத்தியது.

கோவில் நுழைவு இயக்கம்

  • வரதராஜுலு நாயுடு தனது வாழ்க்கையின் பிற்பகுதியில், மதராஸ் பிரசிடென்சியில் கோயில் நுழைவு இயக்கங்களை தீவிரமாக ஆதரித்தார் என்பதோடு சமூக ரீதியாக பின்தங்கிய குழுக்களின் உரிமைகளுக்காகவும் வாதிட்டார்.

இதழியல்

  • வரதராஜுலு நாயுடு 1925 ஆம் ஆண்டில் ‘தமிழ்நாடு’ என்ற வாராந்திரத் தமிழ் செய்தித்தாளை நிறுவினார்.
  • அவர் 1931 ஆம் ஆண்டில் ‘தி இந்தியன் எக்ஸ்பிரஸ்’ என்ற நிறுவனத்தையும் தொடங்கினார் ஆனாலும் நிதி நெருக்கடி காரணமாக ஒரு வருடத்திற்குள் அந்தச் செய்தித்தாளை அவர் விற்க வேண்டியிருந்தது.

முக்கியப் பங்களிப்புகள்

  • அரசியல் தலைமை: தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவராகவும், குறிப்பிடத்தக்க போராட்டங்கள் மற்றும் இயக்கங்களில் வக்கீலாகவும் அவர் பணியாற்றினார்.

24. சி. ஆர். நரசிம்மன்

ஆரம்ப கால வாழ்க்கை

  • சி. ஆர். நரசிம்மன் 1909 ஆம் ஆண்டு மதராஸ் மாகாணத்தின் சேலத்தில் சக்ரவர்த்தி ராஜ கோபாலாச்சாரி மற்றும் சக்கரவர்த்தி அலமேலு மங்கம்மா ஆகியோருக்கு மகனாகப் பிறந்தார்.
  • பிரபல சுதந்திரப் போராளியான அவரது தந்தை ஒரு பிரபல வழக்கறிஞர் மற்றும் சேலம் நகராட்சி உறுப்பினராக இருந்தார்.
  • நரசிம்மன் 1920 ஆம் ஆண்டு தனது 11வது வயதில் இந்திய சுதந்திரப் போராட்டத்தில் இணைந்து 1930 ஆம் ஆண்டு வேதாரண்யம் உப்புச் சத்தியாகிரகத்தில் பங்கேற்றதற்காக சிறையில் அடைக்கப் பட்டார்.

பாராளுமன்ற செயல்பாடுகள்

  • நரசிம்மன் தனது நாடாளுமன்றச் செயல்பாடுகளை 1951 ஆம் ஆண்டு தொடங்கினார்.
  • அவர் 1951 ஆம் ஆண்டில் கிருஷ்ணகிரி தொகுதி தேர்தலில் மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப் பட்டார்.
  • அவர் சி. துரைசாமி கவுண்டரை விட 6,194 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
  • அவர் 1957 ஆம் ஆண்டில் ஜி.டி. நாயுடுவை விட 367 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
  • மேலும் 1962 ஆம் ஆண்டில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் (திமுக) கே.ராஜா ராமிடம் தோல்வி அடையும் வரையில் அதன் உறுப்பினராகப் பணி புரிந்தார்.
  • அவரது தந்தை இந்திய தேசிய காங்கிரஸிலிருந்து விலகி சுதந்திரக் கட்சியில் இணைந்தாலும், நரசிம்மன் 1960 ஆண்டு வரையில் காங்கிரஸிலேயே இருந்தார், பின்னர் சுதந்திரக் கட்சியில் சேர்ந்தார்.

உள்ளூர் நிர்வாகம் மற்றும் பிற பங்களிப்புகள்

  • 1970 ஆம் ஆண்டில், நரசிம்மன் மெட்ராஸ் மாநகராட்சிக்குத் தேர்ந்தெடுக்கப் பட்டதோடு 1975 ஆம் ஆண்டு வரையில் அங்கு பணியாற்றியதோடு மாநகராட்சிக்குள் சுதந்திரக் கட்சியையும் வழி நடத்தினார்.
  • அவர் திருச்செங்கோட்டில் உள்ள காந்தி ஆசிரமத்தின் தலைவராகவும், தமிழ்நாடு மதுவிலக்குக் குழுவின் உறுப்பினராகவும் பணியாற்றினார்.

முக்கிய பங்களிப்புகள்

  • இந்தியச் சுதந்திரப் போராட்டம்: வேதாரண்யம் உப்புச் சத்தியாக்கிரகம் மற்றும் இதர பிற நடவடிக்கைகளில் அவர் பங்கேற்றார்.
  • பாராளுமன்றப் பணி: 1951 முதல் 1962 வரை அவர் மக்களவையில் கிருஷ்ணகிரியைப் பிரதிநிதித்துவப் படுத்தினார்.
  • உள்ளூர் நிர்வாகம்: அவர் மெட்ராஸ் மாநகராட்சிக்குப் பங்களித்தது மற்றும் உள்ளூர் அமைப்புகளில் தலைமைப் பதவிகளை வகித்தது மிகவும் குறிப்பிடத்தக்கது.

இறப்பு

  • அவர் 1989 ஆம் ஆண்டில் தனது 80 வயதில் இறந்தார்.

-------------------------------------

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்