TNPSC Thervupettagam

தமிழ்நாட்டின் விடுதலைப் போராட்ட வீரர்கள் பாகம் – 07

August 24 , 2024 142 days 750 0

தமிழ்நாட்டின் விடுதலைப் போராட்ட வீரர்கள் பாகம் – 07

(For English version to this please click here)

32. வெண்ணி காலடி

ஆரம்ப கால வாழ்க்கை மற்றும் பின்னணி

  • 18 ஆம் நூற்றாண்டின் தளபதி மற்றும் வீரம் மிக்க போர் வீரனாகத் திகழ்ந்தவர் "பெரிய காலடி" என்றழைக்கப்பட்ட வெண்ணி காலடி ஆவார்.
  • இவர் தமிழ்நாட்டின், இன்றைய தென்காசியின் சங்கரன்கோவில் தாலுக்காவில் அமைந்துள்ள நெற்கட்டும்செவல் என்ற ஒரு பகுதியின் நிர்வாக மற்றும் ராணுவ ஆளுநரான விளங்கிய பூலித்தேவரின் கீழ் பணியாற்றினார்.
  • இந்த காலக் கட்டத்தில், பூர்வீக தமிழ் நிலங்களில் தங்கள் கட்டுப்பாட்டை விரிவுபடுத்த முயன்ற பிரிட்டிஷ் காலனித்துவ சக்திகளின் அச்சுறுத்தலுக்குள் இப்பகுதி இருந்தது.

பிரிட்டிஷ் ஆக்கிரமிப்புக்கு எதிரான எதிர்ப்பில் பங்கு

  • கான் சாஹிப் என்ற பட்டத்தைப் பெற்றிருந்த முகமது யூசுப் கான், இந்தப் பகுதியில் பிரிட்டிஷ் ஆதிக்கம் செலுத்துவதற்கான முயற்சிகளில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார்.
  • யூசுப் கான் முன்பு வாசுதேவ நல்லூர் போரில் தோல்வியைச் சந்தித்தார், ஆனாலும் பிரிட்டிஷ் ஆக்கிரமிப்பை நீட்டிப்பதற்கான தனது முயற்சிகளை மீண்டும் தொடங்கினார்.

வீரப் போர் மற்றும் தியாகம்

  • தொடர்ந்து நான்கு மாதங்களாக நீண்ட போரால் வகைப்படுத்தப்பட்ட ஒரு கடுமையான போரில், வெண்ணி காலடி தனது அசாதாரண வீரத்தை வெளிப்படுத்தினார்.
  • அந்தச் சண்டையின் போது, ​​அவரது வயிறு பலமாக வெட்டப்பட்டது.
  • எனினும் போரைத் தொடரத் தீர்மானித்த அவர், தனது தலையணியிலிருந்து ஒரு துணியைக் கிழித்து, இரத்தப் போக்கைத் தடுக்க வயிற்றில் சுற்றிக் கொண்டார்.
  • பலத்த காயம் இருந்தபோதிலும், வெண்ணி காலடி தொடர்ந்து வீரத்துடன் போராடினார்.

வெற்றி மற்றும் இறுதி தியாகம்

  • அப்போரில் வெற்றி பெற்ற பிறகு, வெண்ணி காலடி அவர்கள் வெற்றி பெற்ற செய்தியை தனது அரசரான பூலித்தேவனிடம் தெரிவித்தார்.
  • இருப்பினும், அவரது காயங்கள் மிகவும் கடுமையானவை, மேலும் அவர் தனது அரசரின் மடியிலேயே உயிர் நீத்தார் என்பதோடு தனது மண்ணின் சுதந்திரத்திற்காக தனது கடைசி மூச்சு வரை போராடியவர் வெண்ணி காலடி ஆவார்.

33. ஜெ. சிவசண்முகம் பிள்ளை

ஆரம்ப வாழ்க்கை மற்றும் கல்வி

  • ஜெகநாதன் சிவசண்முகம், 24 பிப்ரவரி 1901ல் மதராசில் பிறந்தார்.
  • தனது பள்ளிப் படிப்பையும், லயோலா கல்லூரியில் மேற்படிப்பையும் சென்னையில் பயின்றார்.
  • பின்னர் மதராஸ் பல்கலைக் கழகத்தில் முதுகலைப் பட்டம் பெற்றார்.

அரசியல் வாழ்க்கை

  • சிவசண்முகம் பிள்ளை இந்திய தேசிய காங்கிரஸில் ஒரு முக்கிய நபராக இருந்தார் மற்றும் இந்திய அரசியலில் குறிப்பிடத்தக்கப் பங்களிப்பை வழங்கினார், அவையாவன:
  • சென்னை மேயர்:
  • 1938 ஆம் ஆண்டு, அவர் பட்டியலிடப் பட்ட சாதியிலிருந்து சென்னையின் முதல் மேயரானார்.
  • சென்னை சட்டப் பேரவையின் சபாநாயகர்:
  • இந்தியாவின் சுதந்திரத்திற்குப் பிறகு, சிவசண்முகம் 1951 ஆம் ஆண்டு மதராஸ் சட்ட மன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
  • சட்டமன்றத்தின் முதல் சபாநாயகராக நியமிக்கப்பட்ட அவர் 1951 ஆம் ஆண்டு முதல் 1955 ஆம் ஆண்டு வரை அந்தப் பதவியினை வகித்தார்.
  • மத்திய அரசுப் பணி தேர்வு ஆணையம்:
  • 1955 ஆம் ஆண்டு முதல் 1961 ஆம் ஆண்டு வரை, சிவசண்முகம் அரசு ஊழியர்களின் ஆட்சேர்ப்பு மற்றும் நியமனம் ஆகியவற்றை மேற்பார்வையிடும் மத்திய அரசுப் பணி தேர்வு ஆணையத்தில் பணியாற்றினார்.
  • ராஜ்யசபா:
  • 1962 ஆம் ஆண்டு, அவர் இந்திய நாடாளுமன்றத்தின் மேலவையான ராஜ்யசபாவிற்கு பரிந்துரைக்கப் பட்டு, அங்கு அவர் 1968 ஆம் ஆண்டு வரையில் பணியாற்றினார்.

வெளியீடுகள்

  • சிவசண்முகம் பிள்ளை ஒரு எழுத்தாளர் என்பதோடு மற்றும் பல படைப்புகளை வெளியிட்டார், அவையாவன:
  • ஆதி திராவிடர்களின் வரலாறு.
  • வாழ்க்கை, ராவ் பகதூர் எம்.சி.ராஜாவின் தேர்ந்தெடுக்கப்பட்ட எழுத்துக்கள் மற்றும் சொற் பொழிவுகள் (1930), இதனை எம்.சி.ராஜாவுடன் இணைந்து எழுதினார்.
  • பயிர்ச் சாகுபடி செய்யும் குத்தகைத் தொழிலாளர்களின் சட்டப்பூர்வப் பாதுகாப்பு.

இறப்பு

  • ஜெ.சிவசண்முகம் பிள்ளை 1975 பிப்ரவரி 17 அன்று தனது 73வது வயதில் காலமானார்.

34. பி. சுப்பராயன்

ஆரம்ப வாழ்க்கை மற்றும் கல்வி

  • பிறந்த தேதி: செப்டம்பர் 11, 1889.
  • பிறந்த இடம்: திருச்செங்கோடு அருகில், நாமக்கல் மாவட்டம்.
  • குடும்பப் பின்னணி: ஜமீன்தாரி குடும்பத்தைச் சேர்ந்தவர்.

கல்வி:

  • இவர் மதராஸ் பிரசிடென்சி கல்லூரியில் பட்டம் பெற்றார்.
  • இவர் ஆக்ஸ்போர்டில் உள்ள கிறிஸ்ட் சர்ச் கல்லூரியில் முதுகலைப் பட்டம் பெற்றார்.
  • இவர் டப்ளின் பல்கலைக்கழகத்தில் சட்ட முனைவர் பட்டம் (LLD) பெற்றார்.

வழக்கறிஞராக வாழ்க்கை

  • சட்டப் பயிற்சி: 1918 ஆம் ஆண்டு இவர் மதராஸ் உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞர் பணியைத் தொடங்கினார்.

அரசியல் வாழ்க்கை

  • இணைந்த அமைப்பு: இந்திய தேசிய காங்கிரஸ்.
  • காங்கிரஸில் இணைதல்: மகாத்மா காந்தியின் சீடரானார் மற்றும் 1933 ஆம் ஆண்டு இந்திய தேசிய காங்கிரஸில் சேர்ந்தார்.

அமைச்சர் பதவி:

  • 1937 ஆம் ஆண்டு மதராஸ் பிரசிடென்சியின் முதலமைச்சராக இருந்த ராஜாஜியால் இவர் சட்டம் மற்றும் கல்வி அமைச்சராக நியமிக்கப்பட்டார்.
  • வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் பங்கேற்பு:
  • வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் தீவிரமாகப் பங்கேற்றார்.
  • காங்கிரஸ் தலைவர்கள் சத்தியமூர்த்தி மற்றும் எம்.பக்தவத்சலம் ஆகியோருடன் இவரும் கைது செய்யப் பட்டார்.

சுதந்திரத்திற்குப் பிந்தைய பங்களிப்புகள்

  • அரசியல் நிர்ணய சபை: இவர் 1947 ஆம் ஆண்டு  இந்திய அரசியலமைப்புச் சபையின் உறுப்பினர் ஆனார்.
  • தூதரகப் பொறுப்பு: 1949 ஆம் ஆண்டு முதல் 1951 ஆம் ஆண்டு வரை இந்தோனேசியாவுக்கான இந்தியாவின் முதல் தூதராகப் பணியாற்றினார்.
  • ராஜ்யசபா உறுப்பினர்: 1954 ஆம் ஆண்டு முதல் 1957 ஆம் ஆண்டு வரை ராஜ்யசபா உறுப்பினராகப் பதவி வகித்தார்.
  • மக்களவை உறுப்பினர்: 1957 ஆம் ஆண்டு திருச்செங்கோட்டில் இருந்து மக்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டு 1962 ஆம் ஆண்டு வரை அதில் பணியாற்றினார்.

ஆளுமை மற்றும் பிற்கால வாழ்க்கை

  • மகாராஷ்டிரா ஆளுநர்: இவர் 1962 ஆம் ஆண்டு மகாராஷ்டிரா ஆளுநராக நியமிக்கப்பட்டார்.
  • இறப்பு: அக்டோபர் 6, 1962 அன்று தனது 73வது வயதில் காலமானார்.

35. சிதம்பரம் சுப்ரமணியம்

ஆரம்ப கால வாழ்க்கை மற்றும் கல்வி

  • பிறந்த தேதி: ஜனவரி 30, 1910.
  • பிறந்த இடம்: செங்குட்டைப்பாளையம், பொள்ளாச்சிக்கு அருகில், கோயம்புத்தூர் மாவட்டம், தமிழ்நாடு (முன்னர் செயின்ட் ஜார்ஜ் கோட்டையின் பிரசிடென்சி).
  • கல்வி:
  • இவர் பொள்ளாச்சியில் ஆரம்பக் கல்வியை முடித்தார்.
  • சென்னையில் உள்ள பிரசிடென்சி கல்லூரியில் (மராஸ் பல்கலைக்கழகத்துடன் இணைந்தது) இயற்பியலில் பி.எஸ்சி பட்டம் பெற்றார்.
  • மேலும் சென்னை மதராஸ் சட்டக் கல்லூரியில் சட்டத்தில் பட்டம் பெற்றார்.

அரசியல் வாழ்க்கை

  • ஆரம்ப கால ஈடுபாடு மற்றும் சுதந்திரப் போராட்டம்
  • ஒத்துழையாமை இயக்கம்: கல்லூரி நாட்களில் ஒத்துழையாமை இயக்கத்தில் ஈடுபாடு கொண்ட உறுப்பினராக இருந்தார்.
  • வெள்ளையனே வெளியேறு இயக்கம்: இவர் வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் பங்கேற்றதற்காக 1942 ஆம் ஆண்டு  சிறையில் அடைக்கப்பட்டார்.
  • அரசியலமைப்புச் சபை: அரசியலமைப்புச் சபை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு இந்திய அரசியலமைப்பை உருவாக்குவதில் பெரும் பங்களித்தார்.

மதராஸ் மாநிலத்தில் இவர் பங்கு (1952-1962):

  • முதல்வர் ராஜாஜி மற்றும் கே. காமராஜ் ஆகியோரின் கீழ் கல்வி, சட்டம் மற்றும் நிதி அமைச்சராகப் பணியாற்றினார்.
  • அவரது பதவிக் காலத்தில் மதராஸ் சட்டமன்றத்தின் முதல் சபை முன்னவராக (ஆளும் கட்சியின் தலைவர்) இருந்தார்.

தேசியத் தலைமை:

  • மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு 1962 ஆம் ஆண்டு எஃகு மற்றும் சுரங்கத் துறை        அமைச்சராகப் பணியாற்றினார்.
  • அவர் உணவு மற்றும் வேளாண்மை அமைச்சராக, பசுமைப் புரட்சியில் முக்கியப் பங்காற்றியதோடு, உணவு தானியங்களில் இந்தியாவை தன்னிறைவு பெற்ற நாடாகவும் அவர் மாற்றச் செய்தார்.

பசுமைப் புரட்சி:

  • நவீன விவசாயக் கொள்கையின் சிற்பியாக இருந்த அவர், எம்.எஸ்.சுவாமிநாதன் மற்றும் பி.சிவராமன் ஆகியோருடன் இணைந்து அதிக மகசூல் தரும் விதை வகைகளையும், தீவிர உரப் பயன்பாட்டையும் அறிமுகப்படுத்தினார்.
  • சென்னையில் தேசிய வேளாண் அறக்கட்டளையையும், திருச்சிராப்பள்ளியில் பாரதிதாசன் மேலாண்மை நிறுவனத்தையும் நிறுவினார்.

பிற்கால அரசியல் பாத்திரங்கள்:

  • பிரதமர் இந்திரா காந்தியின் கீழ், 1971 ஆம் ஆண்டு முதல் 1974 ஆம் ஆண்டு வரை நுகர்வோர் விவகாரங்கள், உணவு மற்றும் பொது விநியோகத் துறை அமைச்சராகப் பணியாற்றினார்.
  • அவர் 1971 ஆம் ஆண்டு முதல் 1972 ஆம் ஆண்டு வரை திட்டக் குழுவின் துணைத் தலைவராக இருந்து பொருளாதாரக் கொள்கைகளை வடிவமைப்பதில் முக்கியப் பங்காற்றினார்.
  • 1975 ஆம் ஆண்டு முதல் 1977 ஆம் ஆண்டு வரை நிதி அமைச்சராக இருந்த அவர், அவசரச் சட்டம் நடைமுறையில் இருந்த போது இந்திய ரூபாயின் மதிப்புக் குறைப்பு குறித்து ஆலோசனை வழங்கினார்.
  • பிரதமர் சரண் சிங்கின் கீழ், 1979 ஆம் ஆண்டு முதல் 1980 ஆம் ஆண்டு வரை அவர் பாதுகாப்பு அமைச்சராக நியமிக்கப்பட்டார்.
  • அவர் 1990 ஆம் ஆண்டு முதல் 1993 ஆம் ஆண்டு வரை மகாராஷ்டிரா ஆளுநராகப் பணி ஆற்றினார், ஆனால் பிரதமர் பி.வி. நரசிம்ம ராவின் நிர்வாகத்தை விமர்சித்ததால் தனது பதவியினை ராஜினாமா செய்தார்.

விருதுகள் மற்றும் அங்கீகாரங்கள்

  • பாரத ரத்னா: பசுமைப் புரட்சியை ஏற்படுத்தியதற்காக 1998 ஆம் ஆண்டு வழங்கப்பட்டது.

மற்ற விருதுகள்:

  • ஒய்.பி.சவான் தேசிய ஒருங்கிணைப்பு விருது
  • யு தாண்ட் பீஸ் விருது (1996)
  • நார்மன் போர்லாக் விருது (1996)
  • அனுவ்ரத் விருது (1988)

வெளியீடுகள் மற்றும் மரபு

  • புத்தகங்கள்:
  • இந்திய விவசாயத்தில் புதிய உத்தி.
  • நான் உலகைச் சுற்றி வந்த சில நாடுகள்.
  • என் கனவுகளின் இந்தியா.

நினைவேந்தல்கள்:

  • 2010 ஆம் ஆண்டு அவரது நினைவாக ஒரு நினைவு நாணயம் மற்றும் தபால் தலை வெளியிடப் பட்டது.
  • பாரதீய வித்யா பவனால் ஆண்டுதோறும் சிறந்த குணநலன்களுக்கான ஸ்ரீ சிதம்பரம் சுப்ரமணியம் விருது வழங்கப்படுகிறது.

மரணம்

  • இறந்த நாள்: இவர் தனது 90 வயதில் சென்னையில் நவம்பர் 7, 2000 அன்று காலமானார்.
  • மரபு: ஜவஹர்லால் நேரு, லால் பகதூர் சாஸ்திரி மற்றும் குல்சாரிலால் நந்தா ஆகியோரின் கீழ் பணியாற்றிய கடைசி கேபினட் அமைச்சர் இவர் ஆவார்.

36. வீரன் சுந்தரலிங்கம்

ஆரம்ப கால வாழ்க்கை

  • பிறந்த தேதி: ஏப்ரல் 16, 1771.
  • பிறந்த இடம்: பாஞ்சாலங்குறிச்சிக்கு அருகில் உள்ள கோவர்ணகிரி கிராமம், தூத்துக்குடி மாவட்டம், தமிழ்நாடு.
  • பெற்றோர்: காலடி மற்றும் முத்தருளி.

பாளையக்காரர் போர்களில் பங்கு

  • பதவி: பாளையக்காரரான வீரபாண்டிய கட்டபொம்மனின் தளபதி.

ஆங்கிலேயர்களுக்கு எதிரான போராட்டம்:

  • பிரிட்டிஷ் கிழக்கிந்திய கம்பெனிக்கு எதிரான எதிர்ப்பில் குறிப்பிடத்தக்கப் பங்கு வகித்தார்.
  • முதல் பாளையக்காரர் போரில் (1799) பங்கு கொண்டார் என்பதோடு இந்த மோதலின் போது அவர் இறந்ததாக நம்பப்படுகிறது.
  • இரண்டாம் பாளையக்காரர் போரின் போது (1800-1801) கட்டபொம்மனின் தம்பி ஊமைத் துரைக்கு உதவிய போது அவர் கொல்லப்பட்டிருக்கலாம் என்று சில தகவல்கள் தெரிவிக்கின்றன.

மரபு

  • நினைவிடம்: 2009 ஆம் ஆண்டு கோவர்ணகிரியில், சுந்தரலிங்கத்திற்கு நினைவிடம் கட்ட, தமிழக அரசு திட்டமிட்டது.

37. எஸ்.என். சுந்தராம்பாள்

பிறப்பு மற்றும் ஆரம்ப கால வாழ்க்கை

  • பிறப்பு: அக்டோபர் 7, 1913, வீரபாண்டி, திருப்பூர்.
  • குடும்பம்: நாச்சிமுத்து கவுண்டரின் மகள்.
  • பின்னணி: இவர் வசதியான குடும்பத்தில் பிறந்தார் என்பதோடு சமூக சேவையில் இவருக்கு வலுவான விருப்பமும் இருந்தது.

சுதந்திரப் போராட்டத்தில் ஆரம்பகால ஈடுபாடு

  • தேசபக்தியின் விளைவாக செய்த முதல் செயல் (1928): காங்கிரஸ் கட்சியின் காலனித்துவ எதிர்ப்பு முயற்சிகளை ஆதரிப்பதற்காக, ஒரு பொதுக் கூட்டத்தில் மகாத்மா காந்திக்கு தங்க வளையல்களை அவர் வழங்கினார்.

சுதந்திரப் போராட்டத்தின் முக்கிய இயக்கங்களில் பங்கேற்பு

  • சத்தியாகிரகப் போராட்டம் (1941): இவர் சத்தியாகிரகப் போராட்டத்தின் போது பிறந்த மகனுடன் கைது செய்யப்பட்டு மூன்று மாதங்கள் வேலூர் சிறையில் அடைக்கப்பட்டார்.
  • வெள்ளையனே வெளியேறு இயக்கம் (1942): இவர் வெள்ளையனே வெளியேறு இயக்கத்தின் அகிம்சைப் போராட்டங்களில் ஈடுபட்டு அதற்காக ஏழு மாதங்கள் வரையில் வேலூர் சிறையில் அடைக்கப்பட்டார்.
  • பிரிட்டிஷ் அரசாங்கத்திற்கு எதிரான போராட்டம் (1943): இவர் திருப்பூரில் ஒரு குறிப்பிடத் தக்க வகையில் ஒரு ஆர்ப்பாட்டத்தை ஏற்பாடு செய்தார், மேலும் இந்தப் போராட்டமானது அவருடைய மூன்று மாத சிறைத் தண்டனைக்கு வழிவகுத்தது.

சுதந்திரத்திற்குப் பிந்தையச் செயல்பாடு மற்றும் சமூகப் பணி

  • விவசாயிகள் நலன்: இவர் விவசாயிகளின் உரிமைகளுக்காகத் தொடர்ந்து செயல்படுவது மற்றும் அவர்களின் நலனுக்காக போராட்டங்களை ஏற்பாடு செய்வது ஆகியவற்றால் ஈடுபட்டு வந்தார்.
  • அனாதை இல்லம் நிறுவுதல்: 1970களின் முற்பகுதியில் வினோபா பாவேவைச் சந்தித்த பிறகு திருப்பூரில் உள்ள அங்கேரிபாளையத்தில் ஒரு அனாதை இல்லத்தை அவர் நிறுவினார்.

மரபு மற்றும் இறப்பு

  • இறப்பு: திருப்பூரில் ஆகஸ்ட் 20, 2007 அன்று இறந்தார்.

-------------------------------------

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்