TNPSC Thervupettagam

தமிழ்நாட்டின் விடுதலைப் போராட்ட வீரர்கள் பாகம் – 08

August 27 , 2024 3 hrs 0 min 12 0

தமிழ்நாட்டின் விடுதலைப் போராட்ட வீரர்கள் பாகம் – 08

(For English version to this please click here)

38. டி. எஸ்.அவினாசிலிங்கம் செட்டியார்

ஆரம்ப கால வாழ்க்கை மற்றும் கல்வி

  • பிறந்த தேதி: மே 5, 1903.
  • பிறந்த இடம்: திருப்பூர், ராஸ் பிரசிடென்சி.
  • பெற்றோர்: கே.சுப்ரமணிய செட்டியார்.

கல்வி:

  • இவர் திருப்பூர் மற்றும் கோவையில் உயர்நிலைப் பள்ளியில் கல்வி பயின்றார்.
  • இவர் 1923 ஆம் ஆண்டு சென்னை பச்சையப்பா கல்லூரியில் பட்டம் பெற்றார்.
  • இவர் மதராஸ் சட்டக் கல்லூரியில் சட்டம் பயின்றார்.

இந்திய சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபாடு

  • அரசியல் தொடர்பு: இந்திய தேசிய காங்கிரஸ்.
  • பங்கேற்பு:
  • இவர் ஒத்துழையாமை இயக்கம் மற்றும் வெள்ளையனே வெளியேறு இயக்கம் ஆகியவற்றில் தீவிரமாக பங்கேற்றார்.
  • இவர் காந்தியின் தத்துவத்தை ஏற்று, கோவை மாவட்டக் காங்கிரஸ் கமிட்டியின் தலைவராகப் பணியாற்றினார்.
  • பங்களிப்புகள்:
  • 1934 ஆம் ஆண்டு, மகாத்மா காந்தியின் தென்னிந்திய சுற்றுப் பயணத்தின் போது வழி நடத்தி, ஹரிஜன நல நிதிக்காக இவர் ₹2.5 லட்சம் சேகரித்து, நன்கொடை அளித்தார்.
  • இவர் சுதந்திரப் போராட்டத்தின் போது நான்கு முறை கைது செய்யப்பட்டார் (1930, 1932, 1941, மற்றும் 1942).

அரசியல் வாழ்க்கை:

  • இவர் 1934 ஆம் ஆண்டு முதல் 1945 ஆம் ஆண்டு வரை இம்பீரியல் சட்ட சபையில் உறுப்பினராக இருந்தார்.
  • இவர் 1946 ஆம் ஆண்டு மதராஸ் சட்ட மேலவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்.

கல்வி அமைச்சராகப் பங்கு (மதராஸ் பிரசிடென்சி)

  • பதவிக்காலம்: 1946-1949.
  • முதல்வர்: தங்குதூரி பிரகாசம் மற்றும் ஓ.பி.ராமசாமி ரெட்டியார்.

முக்கியப் பங்களிப்புகள்:

  • இவர் காலத்தில் மதராஸ் பிரசிடென்சி முழுவதும் உள்ள மேல்நிலைப் பள்ளிகளில் தமிழ் பயிற்று மொழியாக அறிமுகப்படுத்தப்பட்டது
  • மேலும் 1946 ஆம் ஆண்டு இவரால் தமிழ் வளர்ச்சிக் கழகம் (தமிழ் அகாடமி) நிறுவப்பட்டது, இதன் மூலம் முதல் தமிழ் கலைக் களஞ்சியம் உருவாக்கப்பட்டது. (இந்நூல் 1954 மற்றும் 1968 ஆகிய ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில் வெளியிடப்பட்டது)
  • இவர் சுப்பிரமணிய பாரதியின் கவிதைகளைத் தேசியமயமாக்கினார்
  • இவர் மதராஸ் பல்கலைக் கழகத்தில் தமிழ் மற்றும் பிற இந்திய மொழிகளுக்கான பேராசிரியர் பணியை உருவாக்கினார்
  • இவரது காலக் கட்டத்தில் 6 ஆம் வகுப்பிலிருந்தே திருக்குறள் பாடத்திட்டத்தின் ஒரு பகுதியாக அறிமுகப் படுத்தப்பட்டது

பிற்கால அரசியல் வாழ்க்கை

  • மக்களவை: இவர் 1952 ஆம் ஆண்டு முதல் 1957 ஆம் ஆண்டு வரை திருப்பூர் தொகுதியைப் பிரதிநிதித்துவப்படுத்தினார்.
  • ராஜ்யசபா: இவர் 1958 ஆம் ஆண்டு முதல் 1964 ஆம் ஆண்டு வரை ராஜ்யசபா உறுப்பினராக பணியாற்றினார்.

சமூக சீர்திருத்தங்கள்:

  • இவர் தீண்டத்தகாதவர்களின் மேம்பாட்டிற்காகவும் விதவை மறுமணத்திற்காகவும் வெகுவாகப் போராடினார்.
  • இவர் அனைத்து சாதி குழந்தைகள் படிக்கும் விதமாக, கோயம்புத்தூரில் ராமகிருஷ்ணா வித்யாலயா பள்ளியை நிறுவினார்.

மரியாதைகள் மற்றும் மரபு

  • பத்ம பூஷன்: கல்வி மற்றும் இலக்கியத்திற்கான அவரதுப் பங்களிப்புகளுக்காக 1970 ஆம் ஆண்டு வழங்கப்பட்டது

மற்ற விருதுகள்:

  • ஜி.டி.பிர்லா விருது
  • ஜம்னாலால் பஜாஜ் விருது (1985)

நிறுவப்பட்ட நிறுவனங்கள்:

  • இவர் நிறுவிய நிறுவனம், அவினாசிலிங்கம் பெண்களுக்கான இல்ல அறிவியல் கல்லூரி (1957), இது 1988 ஆம் ஆண்டு அவினாசிலிங்கம் பெண்களுக்கான பல்கலைக்கழகமாக மாறியது.

வெளியீடுகள் மற்றும் படைப்புகள்

  • பொருளாதாரம், காந்தியின் கல்விக் கொள்கை மற்றும் வார்தா திட்டம் பற்றி குறிப்பிடத்தக்கப் படைப்புகளை அவர் எழுதியுள்ளார்
  • திருகேதார யாத்திரை பற்றி தமிழில் குறிப்புகளை அவர் எழுதியுள்ளார்.

இறப்பு:

  • தனது 88வது வயதில் நவம்பர் 21, 1991 அன்று அவர் காலமானார்.

39. எஃப்.ஜி. நடேச ஐயர்

ஆரம்ப கால வாழ்க்கை மற்றும் கல்வி

  • பிறந்த தேதி: நவம்பர் 11, 1880
  • பிறந்த இடம்: புதுக்கோட்டை, தமிழ்நாடு
  • பெற்றோர்: ஜானகி அம்மையார் மற்றும் கங்காதர சாஸ்திரி

தென்னிந்திய ரயில்வேயில் பணி

  • தொழில்: ரயில்வே அதிகாரி.
  • சாதனைகள்:
  • 1935-இல் மாவட்டப் போக்குவரத்துக் கண்காணிப்பாளராகப் பணியாற்றி ஓய்வு பெற்றார் என்பதோடு இந்தப் பதவியை வகித்த முதல் இந்தியரும் இவரே ஆவார்.

இந்திய சுதந்திரப் போராட்டத்தில் பங்கு

  • இவர் 1914 ஆம் ஆண்டு இந்திய தேசிய காங்கிரஸில் இணைந்தார்.
  • இவர் முதலாம் உலகப் போரின் போது, இந்திய தேசிய காங்கிரஸின் பல்வேறு வருடாந்திர அமர்வுகளில் ஒரு பிரதிநிதியாக தன்னை அதில் பிரதிநிதித்துவப்படுத்தினார்.

முக்கிய காங்கிரஸ் அமர்வுகள்:

  • பம்பாய் மாநாடு (1915): இவர் பிரதிநிதியாக பங்கேற்றார்.
  • லக்னோ மாநாடு (1916): பிரிவு குழு உறுப்பினர்.
  • இவர் காங்கிரஸ்-இந்திய முஸ்லிம் லீக்கின் சீர்திருத்தத் திட்டம் குறித்த விவாதங்களில் பங்கேற்றார்.
  • மதராஸ் மாநாடு (1917): இவர் ஒரு பிரதிநிதியாக அதில் பங்கேற்றார்.
  • இவர் அகில இந்திய காங்கிரஸ் குழுவின் உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
  • இவர் பிரிவு குழுவின் ஒரு உறுப்பினராக இருந்தார்.
  • இவர் ஒப்பந்தத் தொழிலாளர் குறித்தத் தீர்மானத்தை ஒரு வெளிப்படையான அமர்வில் முன் வைத்தார்.
  • இவர் ஹோம் ரூல் இயக்கம் மற்றும் சாத்வீக எதிர்ப்பு ஆகியவற்றுக்கான ஆதரவையும் வழங்கினார்.

இந்திய ஹோம் ரூல் இயக்கம்:

  • 1910-களில் அன்னி பெசன்ட் மற்றும் பிறர் தலைமையிலான ஹோம் ரூல் இயக்கம் இயக்கத்தை இவர் ஆதரித்தார்.
  • திருமதி அன்னி பெசன்ட், ஜார்ஜ் அருண்டேல் மற்றும் பி.பி.வாடியா ஆகியோரின் சிறை வாசத்தைத் தொடர்ந்து, மதராஸ் மாகாண மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை ஆதரித்தார்.

தமிழ் நாடகம் மற்றும் திரைத்துறையில் பங்களிப்பு

முன்னோடி:

  • இவர் நவீன தமிழ் நாடகம் மற்றும் திரைத்துறையின் முன்னோடிகளில் ஒருவராக அங்கீகரிக்கப் பட்டவர் ஆவார்.

இறப்பு

  • இறந்த தேதி: ஜனவரி 23, 1963.

40. எஸ்.ஏ. சாமிநாத ஐயர்

ஆரம்ப கால வாழ்க்கை மற்றும் கல்வி

  • தஞ்சாவூர் சாமிநாத ஐயர் என்றழைக்கப்படும் எஸ்.ஏ.சாமிநாத ஐயர் தமிழ்நாட்டின் தஞ்சை மாவட்டத்தில் பிறந்தவர் ஆவார்.
  • இவரின் தந்தை சங்கரநாராயண தீட்சிதர் ஆவார்.
  • கல்வியை முடித்த சாமிநாத ஐயர், நாகப்பட்டினத்தில் வழக்கறிஞராக தனது பணியைத் தொடங்கினார், பின்னர் 1887 ஆம் ஆண்டு தஞ்சைக்கு குடிபெயர்ந்தார், அங்கு அவர் தஞ்சை மாவட்ட நீதிமன்றத்தில் அரசு வழக்கறிஞராகப் பணியாற்றினார்.

அரசியல் ஈடுபாடு

  • அரசியலில் நுழைவு: சாமிநாத அய்யர் நாகப்பட்டினத்தில் தனது வழக்கறிஞர் பணியில் ஈடுபட்டிருந்த போது அரசியலில் ஆர்வம் காட்டினார்.
  • அவர் நாகப்பட்டினத்தில் மாநகராட்சியில் தேர்ந்தெடுக்கப்பட்டார் மற்றும் 1880களின் முற்பகுதியில் மாநகராட்சியின் உறுப்பினராகவும் பணியாற்றினார்.
  • சென்னை வாசிகள் சங்கம்: 1882 ஆம் ஆண்டில், மாவட்டத்தில் சென்னை வாசிகள் சங்கத்தின் கிளையை அமைப்பதில் அவர் முக்கியப் பங்காற்றினார்.
  • பிரம்ம ஞான சபை: 1883 ஆம் ஆண்டில், அவர் நாகப்பட்டினத்தில் பிரம்ம ஞான சபையின் கிளையை நிறுவி அதன் செயலாளராகப் பணியாற்றினார்.
  • இந்திய தேசிய காங்கிரஸில் ஈடுபாடு: 1885 ஆம் ஆண்டில், சாமிநாத ஐயர் கும்பகோணத்திற்குச் சென்று, சர் ஏ. சேஷய்யா சாஸ்திரிக்குப் பிறகு தஞ்சை மக்கள் சங்கத்தின் தலைவராகப் பொறுப்பேற்றார்.
  • பம்பாயில் நடைபெற்ற இந்திய தேசிய காங்கிரஸின் முதல் அமர்வுக்கு அச்சங்கத்தின் ஒரே பிரதிநிதியாகப் பங்கேற்றார்.
  • உப்பு வரி விமர்சனம்: அந்த அமர்வின் போது, ​​சாமிநாத ஐயர் உப்பு வரியை கடுமையாக விமர்சித்தார் என்பதோடு வரியை அதிகரிப்பது அநீதியானது மற்றும் மக்களுக்கு பெரும் சுமையை ஏற்படுத்தும் என்றும் குறிப்பிட்டார்.
  • இந்திய தேசிய காங்கிரஸின் அரசியலமைப்பு: 1887 ஆம் ஆண்டு மதராசில் நடைபெற்ற இந்திய தேசிய காங்கிரஸின் அமர்வில், இந்திய தேசிய காங்கிரஸின் அரசியலமைப்பை உருவாக்கிய 35 பேர் கொண்ட குழுவின் உறுப்பினராக சாமிநாத ஐயர் நியமிக்கப் பட்டார்.
  • அவர் இந்திய தேசிய காங்கிரஸின் 1886, 1889 மற்றும் 1894 ஆம் ஆண்டு அமர்வுகளிலும் பங்கேற்றார்.

குடிமைத் தலைமை

  • தஞ்சை நகராட்சி: சாமிநாத ஐயர் 1886 ஆம் ஆண்டு தஞ்சை மாவட்ட வாரியத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார் மற்றும் 1887 ஆம் ஆண்டு தஞ்சை நகராட்சி மன்றத்தின் தலைவராக நியமிக்கப் பட்டார்.
  • தஞ்சையில் விக்டோரியா மகாராணியின் ஆட்சிப் பொன்விழாக் கொண்டாட்டங்களுக்குத் தலைமை வகித்தது மட்டுமல்லாமல், தஞ்சையில் உள்ள ராஜா மிராஸ்தார் மருத்துவமனையின் செயலாளராகவும் தேர்ந்தெடுக்கப் பட்டார்.
  • பிரம்ம ஞான சபைக்குத் தலைமை: 1892 ஆம் ஆண்டு சாமிநாத அய்யர், பிரம்ம ஞான சபையின், தஞ்சை கிளையின் தலைவராகப் பொறுப்பேற்றார்.
  • கும்பகோணம் கோவில் குழு: சாமிநாத ஐயர் தஞ்சை மாவட்டம் கும்பகோணம் கோட்டத்தில் உள்ள இந்து கோவில்களை நிர்வகிக்கும் கும்பகோணம் கோவில் குழுவிற்கு உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
  • அவர் 1885 ஆம் ஆண்டு முதல் இறக்கும் வரை குழுவில் உறுப்பினராக இருந்தார்.

பரிந்துரைகள் மற்றும் பிரச்சாரங்கள்

  • நில வருவாய்ப் போராட்டம்: 1892 ஆம் ஆண்டு, தஞ்சாவூர் மாவட்ட மிராசிதர்கள், நில வருவாய் உயர்வுக்கு எதிராக போராட்டம் நடத்திய போது, ​​சாமிநாத அய்யர் அந்த இயக்கத்தை வழி நடத்தினார்.
  • கிறிஸ்தவ மிஷனரி பள்ளிகள் சர்ச்சை: சாமிநாத ஐயர் கிறிஸ்தவ மிஷனரி பள்ளிகளுக்கு எதிரான போராட்டங்களில் ஈடுபட்டதோடு மிஷனரிகளின் பெரும் ஆடம்பரமான செலவுகளை விமர்சித்தார் என்பதோடு இவர் தேசியப் பள்ளிகளை நிறுவுவதற்கும் வாதிட்டார்.

இறப்பு

  • எஸ்.ஏ.சாமிநாத ஐயர் 1899 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 12 ஆம் தேதி காலமானார்.

41. டி. பி. கிருஷ்ணசாமி பாவலர்

பிறப்பு மற்றும் ஆரம்ப கால வாழ்க்கை

  • டி. பி. கிருஷ்ணசாமி பாவலர் ஆகஸ்ட் 29, 1890 அன்று சென்னை சிந்தாதிரிப்பேட்டையில் பிறந்தார்.
  • இவர் புகழ்பெற்ற தமிழறிஞர்  டி. பி. மீனாட்சிசுந்தரனாரின் மூத்த சகோதரர் ஆவார்.

சுதந்திர இயக்கத்திற்கான பணி மற்றும் பங்களிப்பு

  • முத்தியால்பேட்டை பள்ளியில் தலைமை தமிழாசிரியராகப் பாவலர் பணியாற்றினார்.
  • இருப்பினும், 1917 ஆம் ஆண்டில், அன்னி பெசன்ட் கைது செய்யப்பட்ட பிறகு, அவர் இந்திய தேசிய காங்கிரஸில் சேரவும், சுதந்திரப் போராட்டத்தில் தீவிரமாகப் பங்கேற்கவும் தனது ஆசிரியர் பதவியை ராஜினாமா செய்தார்.

இலக்கிய மேதை

  • பாவலர் தமிழ் இலக்கியத்தில் தனது அசாதாரண திறமைக்காக அறியப் பட்டவர் ஆவார்.
  • தன்னிச்சையாக கவிதை இயற்றும் திறன் கொண்ட அவரது திறமை அவருக்குப் பம்மல் சம்பந்த முதலியார் என்பவரிடமிருந்து "ஆசுகவி" என்ற புனைப் பெயரைப் பெற்றுத் தந்தது.
  • நாடகம் ஒரு மேலாதிக்க ஊடகமாக இருந்த நேரத்தில், பிரிட்டிஷ் ஆட்சிக்கு எதிராக மக்களை ஊக்குவிக்கவும், மக்களை அணி திரட்டவும் நாடகத்தை அவர் ஒரு சக்தி வாய்ந்த கருவியாகப் பயன்படுத்தினார்.

நாடகங்கள்

  • அவரது குறிப்பிடத்தக்க நாடகங்களில் ஒன்றான "கதரின் வெற்றி" 1922 ஆம் ஆண்டு காதி இயக்கத்தின் அடையாளமாக அரங்கேற்றப்பட்டது.
  • ஆங்கிலேய அரசு இந்நாடகத்தைத் தடை செய்தாலும், பாவலர் சமயோசிதமாக அதற்கு "கதர் பக்தி" என்று பெயர் சூட்டி, தொடர்ந்து அரங்கேற்றம் செய்து, அதன் மூலம் சுதந்திரப் போராட்ட உணர்வைப் பறைசாற்றினார்.
  • பிரிட்டிஷ் ஆட்சியின் கொடுமைகளை ஆங்கிலப் பார்வையாளர்களுக்கு வெளிப்படுத்தும் இந்த நாடகத்தையும் லண்டனில் அரங்கேற்றினார்.
  • 1923 ஆம் ஆண்டில், நாக்பூரில் நடந்த கொடி எதிர்ப்பை அடிப்படையாகக் கொண்டு பாவலர் "தேசிய கொடி" என்ற நாடகத்தை எழுதினார்.
  • இந்த நாடகம் தமிழகம் முழுவதும் தேசியக் கொடியைப் பாதுகாக்கும் செய்தியைப் பரப்பியது.

மற்ற குறிப்பிடத்தக்கப் படைப்புகள்

  • அவரது நாடகமான "பாம்பே மெயில்" மூவர்ண காதிக் கொடியை ஏற்றிய காட்சிகளைக் கொண்டிருந்தது என்பதோடு இது பார்வையாளர்களிடையே ஆழ்ந்த தேசபக்தி உணர்வுகளைத் தூண்டியது.
  • பாவலாரின் நாடகங்கள் உணர்ச்சித் தீவிரம் மற்றும் தேசிய உணர்வால் அறியப்பட்டவை.

பத்திரிகை மற்றும் இலக்கியப் பங்களிப்புகள்

  • பாவலர் "தேசபந்து", "பாரதி" மற்றும் "இந்திராய சமாச்சாரம்" போன்ற பத்திரிகைகளை நடத்தி, ஒரு சிறந்தப் பத்திரிகையாளராகவும் இருந்தார்.

பன்முகத் திறமை

  • ஒரு பல்துறை மேதையான பாவலர் ஓர் "சதாவதானி" ஆவார், அதாவது ஒரே நேரத்தில் நூறு வெவ்வேறு மனநலப் பணிகளைச் செய்யும் திறன் கொண்டவராக அவர் விளங்கினார்.
  • இந்தியச் சுதந்திரப் போராட்டத்திற்காக தனது திறமைகள் அனைத்தையும் அர்ப்பணித்தார்.

மறைவு

  • டி. பி. கிருஷ்ணசாமி பாவலர் மார்ச் 1, 1934 ஆம் ஆண்டு மறைந்தார்.

-------------------------------------

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்