TNPSC Thervupettagam

தமிழ்நாட்டின் விடுதலைப் போராட்ட வீரர்கள் பாகம் – 09

August 29 , 2024 137 days 776 0

தமிழ்நாட்டின் விடுதலைப் போராட்ட வீரர்கள் பாகம் – 09

(For English version to this please click here)

42. வி. எஸ். சீனிவாச சாஸ்திரி

ஆரம்பகால வாழ்க்கை மற்றும் பின்னணி

  • வலங்கைமான் சங்கர நாராயண ஸ்ரீனிவாச சாஸ்திரிகள் 1869 ஆம் ஆண்டு செப்டம்பர் 22 ஆம் நாள், தமிழ்நாட்டில், திருவாரூர் மாவட்டத்தில் உள்ள வலங்கைமான் தாலுகாவில் பிறந்தார்.

அரசியல் ஈடுபாடு

  • அவர் ஒரு செல்வாக்கு மிக்க இந்தியச் சுதந்திரப் போராட்ட வீரரான கோபால கிருஷ்ண கோகலேவின் பக்தியுள்ள சீடராக இருந்ததோடு அவரது இந்தியப் பணியாளர் சங்கத்திலும் அவர் சேர்ந்தார்.
  • 1908 ஆம் ஆண்டு, சீனிவாச சாஸ்திரி இந்திய தேசிய காங்கிரஸில் உறுப்பினரானார்.
  • 1911 ஆண்டில், அவர் சென்னை மாவட்ட காங்கிரஸ் கமிட்டியின் செயலாளராக நியமிக்கப் பட்டார்.
  • அவர் 1913 ஆம் ஆண்டு மெட்ராஸ் சட்ட மேலவைக்கும், பின்னர் 1916 ஆம் ஆண்டில் இந்திய இம்பீரியல் சட்ட சபைக்கும் பரிந்துரைக்கப் பட்ட போது, அவரது அரசியல் செல்வாக்கு உயர்ந்தது.

ரெளலட் சட்டம் எதிர்ப்பு

  • சீனிவாச சாஸ்திரி ரெளலட் சட்டத்தைக் கடுமையாக விமர்சித்தார்.
  • 1919 ஆம் ஆண்டு, அவர் ஐக்கியப் பேரரசின் பிரபுக்கள் மன்றத்தில் உறுப்பினரானார்.

லிபரல் கட்சியின் உருவாக்கம்

  • ஒத்துழையாமை இயக்கச் செயல்பாடுகளில் இந்தியத் தேசிய காங்கிரஸின் தலைவர்களுடன் உடன்படாத சீனிவாச சாஸ்திரி 1922 ஆம் ஆண்டு கட்சியிலிருந்து விலகினார்.
  • அவர், சர் தேஜ் பகதூர் சப்ருவுடன் இணைந்து, இந்தியச் சுதந்திரக் கட்சியை (இந்திய லிபரல் கட்சி) நிறுவி, பின்னர் இந்திய நலக் கழகத்தின் தலைவராகப் பணியாற்றினார்.

தன்னாட்சி இயக்கத்திற்கு ஆதரவு அளித்தல்

  • 1924 ஆம் ஆண்டு, சீனிவாச சாஸ்திரி இந்தியாவிற்கு தன்னாட்சி பெற வேண்டும் என்று அன்னி பெசன்ட் உடன் இங்கிலாந்து சென்றார்.
  • அவர் 1930 ஆம் ஆண்டு, இந்தியத் தொழிலாளர்களின் அரச ஆணைக் குழுவின் உறுப்பினர் ஆனதால், தொழிலாளர் இயக்கத்திற்கான அவரது பங்களிப்புகள் குறிப்பிடத் தக்கவையாக இருந்தன.

வட்ட மேசை மாநாடுகளில் பங்கேற்பு

  • 1930 ஆம் ஆண்டு முதல் 1931 ஆம் ஆண்டு வரை லண்டனில் நடந்த, இந்தியாவின் எதிர்காலத்தை நன்கு விவாதிக்கவும், வடிவமைப்பதையும் நோக்கமாகக் கொண்ட வட்ட மேசை மாநாடுகளில் அவர் தீவிரமாகப் பங்கேற்றார்.

பிற்கால வாழ்க்கை மற்றும் மரபு

  • அவர் தனது பிற்காலத்தில், ஸ்ரீனிவாச சாஸ்திரி அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தராகப் பணியாற்றினார்.
  • அவர் ஏப்ரல் 17, 1946 அன்று காலமானார்.

43. வி.வி. எஸ். ஐயர்

ஆரம்ப கால வாழ்க்கை மற்றும் பின்னணி

  • வி.வி.எஸ். ஐயர் தமிழ்நாட்டின் திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் உள்ள வரகனேரி கிராமத்தில் 1881 ஆம் ஆண்டு பிறந்தார்.
  • அவர் சட்டத்தில் பட்டம் பெற்று வழக்கறிஞராகப் பணியாற்றினார்.

அரசியல் செயல்பாடு

  • லண்டனில் சட்டம் படிக்கும் போது, ​​வீர் சாவர்க்கருடன் வி.வி.எஸ். ஐயர் நட்பு கொண்டு புரட்சிகர நடவடிக்கைகளில் ஈடுபட்டார்.
  • இந்தியா முழுவதும் போராட்டங்களை ஒழுங்கமைப்பதில் முக்கியப் பங்காற்றிய அவர், சாவர்க்கரின் “The Indian War of Independence - 1857” நூலினை ஆங்கிலத்திலும், தமிழிலும் மொழி பெயர்த்துப் பரப்புவதில் முக்கியப் பங்காற்றினார்.

தமிழ் இலக்கியப் பங்களிப்புகள்

  • வி.வி.எஸ் ஐயர் ஒரு அர்ப்பணிப்புள்ள தமிழ் அறிஞராக இருந்ததோடு தமிழ் இலக்கியத்திற்கும் அதன் வளர்ச்சிக்கும் குறிப்பிடத்தக்கப் பங்களிப்பை வழங்கினார்.
  • தேசபக்தன்’ என்ற தமிழ் இதழின் ஆசிரியராகவும் அவர் இருந்தார்.

அகிம்சைக்கு மாறுதல்

  • ஆரம்பத்தில் தீவிரவாத சுதந்திரப் போராட்ட வீரர்களுடன் தொடர்பு கொண்டிருந்த அவர், 1917 ஆம் ஆண்டில் காந்தியின் பாண்டிச்சேரி வருகையின் வந்த போது, அஹிம்சை (அகிம்சை) கொள்கைக்கு மாறியதோடு காந்தியின் கொள்கைகளுடன் தன்னை இணைத்துக் கொண்டார்.

பிற்கால வாழ்க்கை மற்றும் மரபு

  • வி.வி.எஸ். ஐயர் இந்தியாவிற்குத் திரும்பி, பாண்டிச்சேரியில் குடியேறியதோடு, சுப்பிரமணிய பாரதி மற்றும் மண்டையம் ஸ்ரீனிவாச்சாரி போன்ற பிற சுதந்திரப் போராட்ட வீரர்களுடன் தனது பணியையும் தொடர்ந்தார்.
  • அவரது பாரிஸ்டர் தேர்வில் தேர்ச்சி பெற்ற போதிலும், அவர் அந்த பட்டத்தை ஏற்கவில்லை.

44. கே.பி. சுந்தராம்பாள்

ஆரம்ப கால வாழ்க்கை மற்றும் பின்னணி

  • கே.பி. சுந்தராம்பாள் அக்டோபர் 11, 1908 ஆம் ஆண்டு தமிழ்நாட்டின் அப்போதைய சேலம் மாவட்டத்தில் உள், கொடுமுடியில் பிறந்தார்.
  • இசை மற்றும் நடிப்பு மீதான அவரது ஆரம்ப கால ஈடுபாடு இளம் வயதிலேயே தொடங்கியது.

இந்திய சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபாடு

  • சுந்தராம்பாள், அவரது கணவர் எஸ்.ஜி.கிட்டப்பாவுடன் இணைந்து, இந்திய சுதந்திரப் போராட்டத்தில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தினார்.
  • அவர்கள் இந்திய தேசிய காங்கிரஸின் தீவிர ஆதரவாளர்கள் ஆனதோடு தங்களின் பிரபலத்தையும் கலைத் திறமையையும் பயன்படுத்தி மேலும் முன்னேறிச் சென்றனர்.

சுதந்திர இயக்கத்திற்கான பங்களிப்பு

  • சுந்தராம்பாள் சுதந்திர இயக்கத்தின் போராட்டத்தையும், தியாகங்களையும் எடுத்துரைக்கும் வகையில் பல கிராமபோன் இசைத் தட்டுகளைப் பதிவு செய்தார்.
  • சுகந்திர இயக்கத்திற்கான ஆதரவின் சின்னமாக விளங்கும் காதியை அணிந்து சுதந்திரப் போராட்டத்திற்கான முயற்சியை மேற்கொண்டு பல்வேறு தேர்தல்களில் காங்கிரஸ் கட்சி வேட்பாளர்களுக்காக தீவிரமாகப் பிரச்சாரம் செய்தார்.
  • காங்கிரசின் பிரதிநிதியாக அவர் 1951 ஆம் ஆண்டில் மெட்ராஸ் சட்ட மேலவைக்கு அவர் தேர்ந்தெடுக்கப் பட்டார்.
  • இவ்வாறாக ஒரு இந்தியச் சட்டமன்றத்திற்குச் சினிமாவில் இருந்து சென்ற முதல் திரைப்படக் கலைஞர் ஆவார்.
  • கே.பி. சுந்தராம்பாள் செப்டம்பர் 1980 ஆம் ஆண்டு காலமானார்.

45. மு. வீரராகவாச்சாரியார்

ஆரம்ப கால வாழ்க்கை மற்றும் பின்னணி

  • மு. வீரராகவாச்சாரியார் 1857 ஆம் ஆண்டு தமிழ்நாட்டின் செங்கல்பட்டு மாவட்டம், ஆத்தூரில் பிறந்தார்.
  • இவர் தனது பள்ளிப் படிப்பை முடித்துவிட்டு மெட்ராஸில் கல்லூரிப் பட்டம் பெற்றார்.

தி இந்து உருவாக்கம்

  • 1878 ஆம் ஆண்டு, வீர ராகவாச்சாரியார், ஜி. சுப்பிரமணிய ஐயர், டி.டி. ரங்காச்சாரியார், பி.வி. ரங்காச்சாரியார், டி. கேசவ ராவ் பந்துலு, மற்றும் என். சுப்பா ராவ் பந்துலு ஆகிய திருவல்லிக்கேணியின் அறுவர்கள் என்று அழைக்கப்படும் நபர்கள் இணைந்து ஆங்கில மொழி செய்தித்தாள் 'தி இந்து'வை நிறுவினர்.
  • லிட்டன் பிரபுவின் கீழ் பிரிட்டிஷ் நிர்வாகத்திற்கு எதிராக, ஒழுங்கமைக்கப்பட்ட பொதுக் கருத்தை வெளிப்படுத்த ஒரு தளத்தின் தேவையால் இந்த முயற்சி உருவாக்கப் பட்டது.

மகாஜன சபையில் பங்கு

  • மே 16, 1884 ஆம் ஆண்டில், வீரராகவாச்சாரியார், மற்ற இரண்டு கூட்டாளிகளுடன் சேர்ந்து, 'மகாஜன சபை'யை நிறுவினார்.
  • இந்தப் பொது அமைப்பு பிரிட்டிஷ் இந்திய அரசுக்கு எதிரான குறைகளை நிவர்த்தி செய்வதை நோக்கமாகக் கொண்டது.
  • வீரராகவாச்சாரியார் அந்த சபாவின் இணைச் செயலாளராகப் பல ஆண்டுகள் பணியாற்றினார்.

இந்திய தேசிய காங்கிரசுடன் தொடர்பு

  • பம்பாயில் நடைபெற்ற இந்திய தேசிய காங்கிரஸின் முதல் அமர்வில் வீரராகவாச்சாரியார் ஒரு பிரதிநிதியாக இருந்தார்.
  • 1887 ஆம் ஆண்டு மற்றும் 1894 ஆம் ஆண்டில் சென்னையில் நடைபெற்ற காங்கிரஸ் அமர்வுகளின் போது, அவர் இணைச் செயலாளராகவும் பணியாற்றினார்.
  • அவர் பொதுக் கூட்டங்களில் உரையாற்றுவதிலும், இந்திய அதிகாரிகள் அல்லாதவர்களை சட்ட மேலவைக்கு நியமனம் செய்தல் உள்ளிட்ட பல்வேறு செயல்களின் சீர்திருத்தங்களுக்காக வாதிடுவதிலும் தீவிரப் பங்கு கொண்டிருந்தார்.

பத்திரிகை மற்றும் அரசியலுக்கான பங்களிப்புகள்

  • தி இந்து’ பத்திரிகையின் ஆசிரியராக, வீரராகவாச்சாரியார் இந்தியாவின் வளம் மற்றும் அரசியல் நலன்களை முன்னேற்றுவதை நோக்கமாகக் கொண்ட இயக்கங்களில் ஆழ்ந்த ஈடுபாடு கொண்டிருந்தார்.
  • அவரது தலையங்கப் பணியும், அரசியல் செயல்பாடும், பொதுக் கருத்தை வடிவமைப்பதிலும், இந்திய உரிமைகளுக்காக வாதிடுவதில் குறிப்பிடத்தக்கவையாக உள்ளன.

பிற்கால வாழ்க்கை மற்றும் மரபு

  • வீரராகவாச்சாரியார் தனது உடல்நிலை மோசமடைந்து 1905 ஆம் ஆண்டு ஓய்வு பெறும் வரை ‘தி இந்து’வை தொடர்ந்து நடத்தினார்.
  • அதற்குப் பிறகு இவர் அந்தச் செய்தித்தாளை கஸ்தூரி ரங்க அய்யங்காருக்கு விற்றார்.
  • வீரராகவாச்சாரியார் அக்டோபர் 6, 1906 ஆம் ஆண்டில் காலமானார்.

46. ஏ. ரங்க சுவாமி ஐயங்கார்

ஆரம்பகால வாழ்க்கை மற்றும் பின்னணி

  • பிறந்த தேதி: 1877.
  • பிறந்த இடம்: எருகாட்டூர் கிராமம், தஞ்சாவூர் மாவட்டம், தமிழ்நாடு.
  • குடும்பம்: நரசிம்ம ஐயங்காரின் மகன்.
  • கல்வி: ரங்க சுவாமி ஐயங்கார் தனது ஆரம்பக் கல்வியை நாகப்பட்டினம், கோயம்புத்தூர் மற்றும் மெட்ராஸில் பெற்று, அதன் மூலம் கலை மற்றும் சட்டப் படிப்பில் பட்டம் பெற்றார்.

தொழில் மற்றும் பத்திரிகை

  • மெட்ராஸ் செயலகம்: ஆரம்பத்தில் சென்னை செயலகத்தில், அரசுப் பணியில் எழுத்தராகச் சேர்ந்தார், ஆனால் 1902 ஆம் ஆண்டில் தஞ்சாவூரில், சட்டத் தொழிலை மேற்கொள்வதற்காக அந்தப் பதவியினை ராஜினாமா செய்தார்.
  • தி இந்து: அவர் தி ஹிந்துவில் பணி புரிந்தார், இருப்பினும் 1915 ஆம் ஆண்டு அவரது கூட்டாண்மைக்கான கோரிக்கை நிராகரிக்கப்பட்டதால் பின்னர் அதிலிருந்து விலகினார்.
  • சுதேசமித்ரன்: அவர் பின் சுதேசமித்திரனைக் கையகப்படுத்தி, அதன் ஆசிரியராகி, அதனைச் சுதந்திரத்துக்கான குரலாக மாற்றினார்.

அரசியல் ஈடுபாடு

  • தன்னாட்சி இயக்கம்: திருமதி அன்னி பெசண்டின் தன்னாட்சி இயக்கத்தில் இவர் 1914 ஆம் ஆண்டு முதல் 1918 ஆம் ஆண்டு வரை தீவிரமாகப் பங்கேற்று, ஹோம் ரூல் லீக்கின் செயலாளராகப் பணியாற்றினார்.
  • இங்கிலாந்துக்கு காங்கிரஸ் தூதுக்குழு: 1919 ஆம் ஆண்டில், இந்தியாவிற்கு முழு சுயராஜ்யம் கோரி காங்கிரஸ் தூதுக்குழுவின் ஒரு பிரதிநிதியாக இங்கிலாந்து சென்றார்.
  • வட்டமேஜை மாநாடு: இவர் காந்திஜியின் அரசியல் செயலாளராகவும், அரசியலமைப்பு ஆலோசகராகவும் 1931 ஆம் ஆண்டு நடந்த இரண்டாவது வட்டமேசை மாநாட்டில் கலந்து கொண்டார்.

இறப்பு

  • இறந்த தேதி: பிப்ரவரி 5, 1934 ஆம் ஆண்டு காலமானார்.

47. பனப்பாக்கம் ஆனந்தசார்லு

ஆரம்ப கால வாழ்க்கை மற்றும் பின்னணி

  • பிறந்த தேதி: ஆகஸ்ட் 5, 1843.
  • பிறந்த இடம்: பனப்பாக்கம், செங்கல்பட்டு அருகில், தமிழ்நாடு.
  • மெட்ராஸுக்கு இடம் பெயர்வு: இவர் தனது 10 வயதில் சென்னைக்குக் குடிபெயர்ந்தார், பின்னர் சென்னையிலேயே அவர் தமது சட்டப் பணியைத் தொடர்ந்தார்.

அரசியல் மற்றும் பத்திரிகைப் பங்களிப்புகள்

  • பத்திரிக்கை: இவர் நேட்டிவ் பப்ளிக் ஒபினியன் மற்றும் தி மெட்ராசி போன்ற பத்திரிகைகளுக்குப் பங்களித்தார்.
  • தி இந்து: இவர் 1878 ஆம் ஆண்டு பிரிட்டிஷ் ஆட்சிக்கு எதிராக பொதுமக்களின் கவலைகளை வெளிப்படுத்த தி இந்துவை நிறுவ உதவினார்.
  • திருவல்லிக்கேணி இலக்கியச் சங்கம் மற்றும் மெட்ராஸ் மகாஜன சபா: இவர் அறிவுசார் சொற்பொழிவு மற்றும் அரசியல் வாதத்தை மேம்படுத்துவதற்காக இந்த அமைப்புகளை நிறுவினார்.

இந்திய தேசிய காங்கிரசுடன் தொடர்பு

  • இந்திய தேசிய காங்கிரஸின் முதல் அமர்வு: இவர் 1885 ஆம் ஆண்டு பம்பாயில் நடந்த முதல் அமர்வில் கலந்து கொண்டார்.
  • நாக்பூர் அமர்வு: 1891 ஆம் ஆண்டு நாக்பூரில் நடைபெற்ற காங்கிரஸ் மாநாட்டின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
  • 1906-ல் காங்கிரஸ் பிளவு: இவர் 1906 ஆம் ஆண்டு ஏற்பட்ட காங்கிரஸ் பிளவின் போது மிதவாதிகளுடன் இணைந்தார்.

மரியாதைகள் மற்றும் மரபு

  • ராவ் பகதூர் மற்றும் CIE: இவர் 1897 ஆம் ஆண்டு ராவ் பகதூர் மற்றும் இந்தியப் பேரரசின் நண்பன் போன்ற பட்டங்களுடன் கௌரவிக்கப்பட்டார்.
  • இறந்த தேதி: இவர் ஜனவரி 4, 1908 ஆம் ஆண்டு காலமானார்.

48. கமலா ராமசாமி

ஆரம்ப கால வாழ்க்கை மற்றும் குடும்பப் பின்னணி

  • சொந்த ஊர்: தமிழ்நாட்டின் திருச்சிராப்பள்ளியில் பிறந்தவர்.
  • குடும்பம்: சுதந்திரப் போராட்ட வீரர் டி.எஸ்.எஸ்.ராஜனின் பேரன் ராமசாமியின் மனைவி.

அரசியல் ஈடுபாடு மற்றும் செயல்பாடு

  • சிபிஐ தலைவர் கே.பால தண்டாயுதத்தின் இலட்சியத்தால் கம்யூனிஸ்ட் இயக்கத்தில் இவர் ஈர்க்கப் பட்டார்.
  • வெள்ளையனே வெளியேறு இயக்கம் (1942): வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் தீவிரமாக ஈடுபட்டு, திருச்சியில் நடந்த பொது வேலைநிறுத்தத்தில் அவர் பங்கேற்றார் என்பதோடு வேலை நிறுத்தத்தில் ஈடுபட்ட நான்கு பெண்களில் இவரும் ஒருவராவார்.

சிறைவாசம் மற்றும் போராட்டங்கள்

  • தென்னிந்திய இரயில்வே போராட்டம் (1946): இவர் தென்னிந்திய இரயில்வே போராட்டத்தை ஆதரித்ததற்காக ஓராண்டு சிறைவாசம் சென்றார்.
  • இந்தியப் பாதுகாப்புச் சட்டம் (1947): இந்தியப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் ஜனவரி 1947 ஆம் ஆண்டு, மீண்டும் கைது செய்யப் பட்டார் என்ற நிலையில் அந்த நேரத்தில் இந்தியாவில் சிறையில் இருந்த ஒரே பெண்மணி இவர் ஆவார்.
  • கர்ப்ப காலத்தில் அவரது சிறைவாசம் தேசத்தில் கவலையை ஏற்படுத்தியது என்பதால் அது ஏப்ரல் 1947 ஆம் ஆண்டில் அவரது விடுதலைக்கு வழிவகுத்தது.

சுதந்திரத்திற்குப் பிந்தைய காலக் கட்டம் மற்றும் அங்கீகாரம்

  • ஓய்வூதிய மறுப்பு: கமலா மற்றும் அவரது கணவர் ராமசாமி ஆகியோருக்கு சுதந்திரப் போராட்ட வீரர்களுக்கான ஓய்வூதியம் வழங்கப் பட்டது என்றாலும் அவர்கள் தனிப்பட்ட ஆதாயம் தேடுவதை விட தங்கள் செயல்களை கடமையாக கருதுவதாக கூறி அதனை மறுத்து விட்டனர்.

இறப்பு  

  • இறப்பு: கமலா ராமசாமி ஜூன் 9, 2019 அன்று தனது 93வது வயதில் காலமானார்.

-------------------------------------

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்