தமிழ்நாட்டின் விடுதலைப் போராட்ட வீரர்கள் பாகம் – 10
(For English version to this please click here)
49. தாண்டவராயன் பிள்ளை
ஆரம்ப கால வாழ்க்கை மற்றும் பின்னணி
- 1700 ஆம் ஆண்டில் சிவகங்கை இராஜ்ஜியத்தில் அரளிக்கோட்டையில் (முல்லையூர்) பிறந்த இவர் காத்தவராயப் பிள்ளையின் மகன் ஆவார்.
- இவர் கற்காத்தர் வேளாளர் சமூகத்தைச் சேர்ந்தவர்.
- தமிழ் மீது ஆழ்ந்தப் பற்று கொண்ட அவர் கல்வி, திறன் மற்றும் ஞானத்தில் மிகச் சிறந்து விளங்கினார்.
நிர்வாகத்தில் இவரின் பங்கு மற்றும் சாதனைகள்
- தளவாய் மற்றும் பிரதானி: சிவகங்கை சமஸ்தானத்தின் மூன்று ஆட்சியாளர்களின் கீழ், இவர் தளவாய் (இராணுவத் தலைவர்) மற்றும் பிரதானி (முதலமைச்சர்) ஆகப் பணியாற்றினார்.
- அரசர்களுக்குச் சேவை: இவர் மன்னர் சசிவர்ண பெரிய உதயத் தேவர் (1730–1750) மற்றும் முத்து வடுகநாத தேவர் (1750–1772) மன்னரின் கீழ் பணியாற்றினார்.
- பின்னர் இவர் ராணி வேலு நாச்சியாரின் கீழ் பணியாற்றினார்.
- இராணுவ மற்றும் இராஜதந்திர முயற்சிகள்: பிரிட்டிஷ் படையெடுப்பாளர்களைத் தவிர்க்க ராணி வேலு நாச்சியாருக்கு இவர் அறிவுறுத்தல்களை வழங்கினார்.
நிர்வாக திறன்கள் மற்றும் தனிப்பட்ட குணங்கள்:
- நிர்வாகமும், மேம்பாடும்: இவர் சிறந்த நிர்வாகத்திற்காகப் புகழ் பெற்றவர் மற்றும் சிவகங்கை சமஸ்தானத்தின் வளர்ச்சிக்குப் பொறுப்பானவர் ஆவார்.
- பண்புக்கூறுகள்: தொண்டு, மேன்மை, குடும்ப மரியாதை, இசையின் மீதான ஈடுபாடு மற்றும் திறன் சார்ந்த கணக்கியல் ஆகியவற்றிற்கு இவர் பெயர் பெற்றவர் ஆவார்.
- அங்கீகாரம் மற்றும் கௌரவம்: ராஜசூலி வடுகநாதத் துரையால் இவர் பாராட்டப்பட்டு, பல்லக்கு, ஊன்றுகோல், குதிரை, நிலம் போன்றப் பரிசுகளால் கௌரவிக்கப்பட்டார்.
மரபு மற்றும் பங்களிப்புகள்
- செல்வாக்கு: இவர் அரசத் தோட்டத்தின் செல்வத்தைப் பாதுகாத்து, மருது சகோதரர்கள் உட்பட மற்றவர்களுக்கும் அதனைக் கற்பித்து வலுவான பாசப் பிணைப்புகளை வளர்த்தார்.
முக்கிய வரலாற்றுப் பாத்திரங்கள்
- இராணுவ ஆதரவு: இவர் அம்மைய நாயக்கனூர் போரின் போது நாயக்கர்களுக்கு தங்குமிடம் மற்றும் வேண்டிய உதவிகளை அளித்து, சசிவர்ணத் தேவர் மற்றும் மருது சகோதரர்களுடன் இணைந்து போரில் வீரத்தை வெளிப்படுத்தினார்.
கலாச்சாரத் தாக்கம்
- இலக்கியக் குறிப்பு: தமிழ்த் தாத்தா உ.வே.சா அவர்களால் வெளியிடப்பட்ட கவிஞர் கவிராஜரின் "மான் விடு தூது" என்ற தமிழ்ப் படைப்பில் அவரது நற்பண்புகள் விரிவாக உள்ளன.
மதுரைக்கு எதிரானப் பிரச்சாரம்
- வாரிசு மற்றும் மோதல்: 1750 ஆம் ஆண்டு சசிவர்ணத் தேவர் இறந்த பிறகு, அவரது மகன் முத்துவடுகநாத தேவர் அரசரானார்.
- 1752 ஆண்டின் போது, ராமநாத சேதுபதி மற்றும் முத்து வடுகநாதர் ஆகியோர் மதுரையின் ஆட்சியாளர்களாக நியமிக்கப்பட்டனர்.
- மைசூர் தளபதி மாயன்னா என்பவர் விஜயகுமார் நாயக்கரைத் தோற்கடித்து அரியணையை கைப்பற்றினார்.
- எதிர் தாக்குதல்: ராமநாடு தலைவர் வெள்ளையன் மற்றும் சிவகங்கை அமைச்சர் தாண்டவராயப் பிள்ளை ஆகியோர் மாயன்னாவை எதிர்த்து வெற்றிகரமானப் பிரச்சாரத்தை முன்னெடுத்து, அவரைத் தோற்கடித்து, மதுரையை சரியான ஆட்சியாளர்களுக்காக மீட்டனர்.
கோவில் திருப்பணிகள்
- குன்னக்குடி முருகன் கோவில்: தாண்டவராயப் பிள்ளை குன்னக்குடி முருகன் கோவிலின் திருப்பணிகளை மேற்பார்வையிட்டார்.
- வையாபுரி குளம் மற்றும் நந்தவனம் வேதப் பள்ளி: அவர் வையாபுரி குளத்தை நிறுவி, நந்தவனம் வேதப் பள்ளியை நிறுவி, சமய மற்றும் கல்வி உள்கட்டமைப்புக்குப் பங்களித்தார்.
- மேலும் சில பங்களிப்புகள்: திருப்பத்தூர் மற்றும் திருக்கோட்டியூரில் உள்ள கோவில்களின் கட்டுமானம் மற்றும் பராமரிப்புக்கு அவர் பெரும் பங்களிப்புகளை வழங்கினார்.
- முருகக் கடவுளுக்கான தினசரிச் சடங்குகள் மற்றும் பிரசாதங்கள் செய்யப்படுவதை உறுதி செய்தது என்பது சமயக் கடமைகளில் அவரது அர்ப்பணிப்பை எடுத்துக் காட்டுகிறது.
தாமரைப் பதக்க விருது
- மரியாதை மற்றும் அங்கீகாரம்: ஏப்ரல் 28, 1747 ஆண்டில், தாண்டவராயப் பிள்ளைக்கு மன்னர் முத்து வடுகநாத தேவர் மூலம் தாமரைப் பதக்கம் வழங்கப்பட்டது.
- இந்த கௌரவ விருது, சசிவர்ணத் தேவருடன் இணைந்து அவர் ஆற்றியப் பெரும் பங்களிப்பை அங்கீகரித்து, சிவகங்கை அரசின் முதல் அமைச்சராக அவரது பெரு மதிப்பிற்குரியப் பதவியை அடையாளப்படுத்துகிறது.
காளையார் கோவிலில் போர்
- தாக்குதல் மற்றும் தற்காப்பு: 1772 ஆம் ஆண்டில், சிவகங்கை அரசு மேஜர் ஸ்மித் மற்றும் பான்ஞ்சூர் இராணுவத்தின் அச்சுறுத்தல்களை எதிர் கொண்டது.
- தாண்டவராயப் பிள்ளை ஊரைக் காக்க பெரும் பாதுகாப்புகளையும், பொறிகளையும் ஏற்பாடு செய்தார்.
- சிவகங்கையைக் கைப்பற்றுதல்: அவரது பெரும் முயற்சிகள் இருந்த போதிலும், ஜூன் 21, 1772 ஆம் ஆண்டில், ஸ்மித்தும், பான்ஞ்சூரும் சிவகங்கை மற்றும் காளையார் கோயில் பகுதியைக் கைப்பற்றினர் என்ற நிலையில் இது எதிர்தரப்பினருக்கு பெரிய இழப்பாக அமைந்தது.
இறுதி பிரச்சாரங்கள் மற்றும் இறப்பு
- மறுசீரமைப்பு முயற்சிகள்: முத்துவடுகநாத தேவர் இறந்த பிறகு, தாண்டவராயப் பிள்ளை, மருது சகோதரர்களால் ஆதரிக்கப்பட்டு, ராணி வேலுநாச்சியாருக்கு ஆறுதல் கூறி இழந்த அந்த ராஜ்யத்தை மீட்டெடுப்பதாக உறுதியளித்தார்.
- தாண்டவராயப் பிள்ளை கோபால நாயக்கருடன் தொடர்பு வைத்திருந்தமையால் திண்டுக்கல் அருகே உள்ள விருப்பாச்சியில் தஞ்சம் புகுந்தனர்.
- உதவிக்கான வேண்டுகோள்: டிசம்பர் 1772 ஆம் ஆண்டில், தாண்டவராயப் பிள்ளை ஹைதர் அலிக்கு நவாபிடமிருந்து ஆட்சிப் பிரதேசங்களை மீட்டெடுக்க ஆதரவு கோரி ஒரு கடிதம் எழுதிய நிலையில், அதற்காக வேண்டி ஹைதர் அலி ஆயிரக்கணக்கான குதிரைகளையும் வீரர்களையும் வழங்கினார்.
இறப்பு மற்றும் மரபு:
- தாண்டவராயப் பிள்ளை 1773 ஆம் ஆண்டில் வயோதிகம் மற்றும் உடல்நலக் குறைவால் விருப்பாச்சியில் காலமானார்.
50. சி.பி. ராம சுவாமி ஐயர்
ஆரம்ப காலச் சட்ட வாழ்க்கை மற்றும் அரசியல் தொடர்புகள்
- புகழ்பெற்ற வழக்கறிஞர்: சி.பி. ராம சுவாமி ஐயர் சென்னை மாகாணத்தில் ஒரு முக்கிய வழக்கறிஞராக இருந்தார் என்பதோடு அவருடைய சட்ட நிபுணத்துவம் மற்றும் அரசியல் செயல்பாடுகளுக்காக அவர் புகழ்பெற்றவராக விளங்கினார்.
- இந்தியப் பணியாளர்கள் சங்கம்: இவர் கோபால கிருஷ்ண கோகலேவின் அபிமானி என்பதால் இவர் கோகலேவின் சீர்திருத்தக் கொள்கைகளுடன் தன்னை இணைத்துக் கொண்டு, பூனாவில் உள்ள இந்தியப் பணியாளர்கள் சங்கத்தில் சேர்ந்தார்.
சட்ட மற்றும் அரசியல் சாதனைகள்
- 1912 ஆம் ஆண்டு அன்னி பெசன்டிற்கு எதிரான உயர்மட்டக் காவல் வழக்கில், ஜிட்டு நாராயணையாவின் சார்பாகப் போராடி, நாராயணையாவின் இரண்டு மகன்களின் விடுதலையை உறுதி செய்தார்.
- அன்னி பெசன்ட் உடனான ஒத்துழைப்பு: தன்னாட்சி இயக்கத்தை ஒழுங்கமைப்பதில் ஈடுபட்டு அன்னி பெசன்டின் உதவியாளராக மாறினார்.
- அங்கு இவர் துணைத் தலைவராகப் பணியாற்றியதோடு மட்டுமல்லாமல், அந்த இயக்கத்திற்காக ‘நியூ இந்தியா’ என்ற நாளிதழையும் வெளியிட்டார்.
- கட்டுப்பாடுகளின் கீழ் திருத்துதல் பணி : 1917 ஆம் ஆண்டில் ஆங்கிலேயர்களால் டாக்டர். அன்னி பெசன்ட் சிறையில் அடைக்கப்பட்ட போது, ராம சுவாமி ஐயர் தேசத் துரோகச் சட்டத்தால் விதிக்கப்பட்ட அச்சிடுதல் கட்டுப்பாடுகளைத் தவிர்ப்பதற்காக தனது தோட்டத்தில் இருந்தபடி ‘நியூ இந்தியா’வைத் திருத்தி வெளியிட்டார்.
வழக்கறிஞர் பணி மற்றும் சட்டப் பாதுகாப்பு
- கலெக்டர் ஆஷ் கொலை வழக்கு (1912): இவர் கலெக்டர் ஆஷ் கொலை தொடர்பான வழக்கில் வாஞ்சிநாதன் சார்பில் வாதிட்டார்.
- சுப்பிரமண்ய பாரதிக்கு ஆதரவு: 1918 ஆம் ஆண்டில் இவர் மீண்டும் சென்னை மாகாணத்தில் நுழைந்த பிறகு கைது செய்யப்பட்ட சுப்ரமணிய பாரதியின் விடுதலைக்கு உதவினார்.
- ராம சுவாமி ஐயர் பிரிட்டிஷ் அதிகாரிகளுக்கு எதிராக, இந்தியப் பிரதிவாதிகளுக்கு என்று வாதாட சட்ட உதவிக்கு கட்டணம் எதுவும் வசூலிக்கவில்லை.
அரசியலில் பங்கு மற்றும் சட்டமன்றச் சாதனைகள்
- இந்திய தேசிய காங்கிரஸ்: இவர் பண்டித ஜவஹர்லால் நேருவுடன் 1917-1918 காலம் வரை இந்திய தேசிய காங்கிரஸின் செயலாளராகப் பணியாற்றினார்.
- இவர் காங்கிரஸ் இயக்கத்தின் ஆரம்ப காலத் தலைவராக இருந்தார்.
- சட்டமன்ற மேலவை உறுப்பினர் (1919): சீர்திருத்தப் பட்ட அரசியலமைப்பின் கீழ், மெட்ராஸ் நகரத்திலிருந்துச் சட்டமன்ற மேலவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
- அட்வகேட்-ஜெனரல் (1920): இவர் மெட்ராஸ் பிரசிடென்சியின் அட்வகேட்-ஜெனரலாக நியமிக்கப் பட்டார் என்பதோடு இவர் நகர மாநகராட்சிகள் சட்டம் மற்றும் மெட்ராஸ் உள்ளூர் ஆணையச் சட்டம் அறிமுகப் படுத்தப் படுவதற்கும் காரணமாக இருந்தார்.
நிர்வாக மற்றும் இராஜதந்திரப் பங்களிப்புகள்
- மெட்ராஸ் நிர்வாகக் குழு (1923): பொதுப்பணி, நீர்ப்பாசனம், துறைமுகங்கள் மற்றும் மின்சாரம் ஆகியவற்றை மேற்பார்வையிடும் மெட்ராஸ் ஆளுநரின் நிர்வாகக் குழுவிற்கு இவர் பரிந்துரைக்கப்பட்டார்.
- பன்னாட்டு சங்கத்தின் பிரதிநிதி (1926-1927): ஜெனீவாவில் உள்ள பன்னாட்டுச் சங்கத்தின் இந்தியப் பிரதிநிதியாக இவர் பணியாற்றினார் மற்றும் பொது சுகாதாரக் குழுவின் அறிக்கையாளராக இருந்தார்.
- மெட்ராஸ் இசை சங்கம் (1927): இவர் இந்திய தேசிய காங்கிரஸின் 1927 அமர்வின் போது இந்தியக் கலை மரபுகளை ஆதரிக்கவும், பாதுகாக்கவும் மெட்ராஸ் இசை சங்கத்தை இவர் தொடங்கினார்.
பிற்காலத்தில் இவரின் பங்கு மற்றும் சாதனைகள்
- சட்ட உறுப்பினர் மற்றும் வட்ட மேசை மாநாடுகள் (1931-1932): இவர் இந்திய அரசாங்கத்தின் சட்ட உறுப்பினராக செயல்பட்டார் என்பதோடு லண்டனில் நடந்த முதல் மற்றும் மூன்றாவது வட்ட மேசை மாநாடுகளில் கலந்து கொண்டார்.
- உலகப் பொருளாதார மாநாட்டின் பிரதிநிதி (1933): உலகப் பொருளாதார மாநாட்டில் கலந்து கொண்டு, இந்தியாவின் ஒரே பிரதிநிதியாக இவர் இந்தியாவைப் பிரதிநிதித்துவப்படுத்தினார்.
திருவிதாங்கூர் திவான் மற்றும் சமூகச் சீர்திருத்தங்கள்
- கோயில் நுழைவுச் சட்டம் (1936): திருவிதாங்கூர் திவானாக இருந்த இவர், கோயில் நுழைவுச் சட்டத்தை அறிமுகப் படுத்தினார் என்ற நிலையில், இந்துக் கோயில்களில் அனைத்து சாதியினரும் நுழைவதை அனுமதிப்பதன் மூலம் தீண்டாமையை ஒழிப்பதற்கான இந்தியாவின் முதல் அரசு நடவடிக்கையாக இச்சட்டம் அமைந்தது.
- இந்த குறிப்பிடத் தக்கச் சீர்திருத்தத்திற்காக இவர் மகாத்மா காந்தியிடமிருந்துப் பாராட்டைப் பெற்றார்.
மரபு மற்றும் இறப்பு
- சி.பி. ராம ஸ்வாமி ஐயர் செப்டம்பர் 26, 1966 அன்று காலமானார்.
51. கே.ஏ. காசி விஸ்வநாத முதலியார்
ஆரம்பகால வாழ்க்கை மற்றும் பின்னணி
- பிறப்பு மற்றும் குடும்பம்: இவர் மார்ச் 8, 1912 ஆம் ஆண்டு, தமிழ்நாட்டின் திருச்செங்கோட்டில், அருணாச்சல முதலியாருக்குப் பிறந்தார்.
- மகாத்மா காந்தி மற்றும் சி.ராஜகோபாலாச்சாரி (ராஜாஜி) ஆகியோரின் தத்துவங்களால் ஈர்க்கப் பட்டு, சிறு வயதிலிருந்தே சமூகச் சீர்திருத்தங்களில் இவர் தீவிரமாக ஈடுபட்டார்.
சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபாடு
- செயல்பாடு: இவர் சுதந்திரப் போராட்டத்தில் பங்கேற்று, தீண்டாமை ஒழிப்பு மற்றும் கள் கடைகளுக்கு எதிரான போராட்டம் ஆகியவற்றில் ஈடுபட்டார்.
- சிறைவாசம்: இவர் அரசியல் நடவடிக்கையில் ஈடுபட்டதால் கைது செய்யப்பட்டு அலிப்பூர் சிறையில் ஆறு மாதங்கள் அடைக்கப்பட்டார்.
தலைமைத்துவம் மற்றும் சமூக சேவை
- திருச்செங்கோடு தாலுகா குழு: 1934 ஆம் ஆண்டு முதல் 1954 ஆம் ஆண்டு வரை திருச்செங்கோடு தாலுகா குழுவின் தலைவராகப் பணியாற்றி அவர் சமூகச் சேவையில் மிகத் தீவிரமாக ஈடுபட்டார்.
- நிதி திரட்டுதல்: இவர் ஹரிஜனங்கள் (பட்டியலிடப்பட்ட சாதியினர்) மற்றும் நெசவாளர்கள் சமூகத்தின் நலனுக்காக பெரும் நிதி சேகரித்து, சமூக மேம்பாட்டிற்கான தனது அர்ப்பணிப்பை வெளிப்படுத்தினார்.
- தலைவர்களுடனான சந்திப்புகள்: இவருக்கு காந்தி, ஜவஹர்லால் நேரு, மற்றும் சுபாஷ் சந்திர போஸ் (நேதாஜி) போன்ற முக்கியத் தலைவர்களை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது, இது அவரது செயல்பாடு மற்றும் தலைமைத்துவத்தை மாற்றியமைக்க வழி வகுத்தது.
நெசவாளர் நலனுக்கானப் பங்களிப்புகள்
- நெசவாளர் கூட்டுறவுச் சங்கம்: திருச்செங்கோட்டில் நெசவாளர் கூட்டுறவு சங்கத்தை நிறுவி, 1942 ஆம் ஆண்டு முதல் 1980 ஆம் ஆண்டு வரை அதன் தலைவராகவும், செயலாளராகவும் பணியாற்றினார் என்ற நிலையில் நெசவாளர்களின் நலனில் இந்த அமைப்பு மிகவும் முக்கியப் பங்காற்றியது.
- காசி விஸ்வநாதன் நகர்: திருச்செங்கோட்டில் உள்ள நெசவாளர் காலனிக்கு, நெசவாளர் சமுதாய நலனுக்காக அவர் ஆற்றிய ப்பங்களிப்புகளை கவுரவிக்கும் வகையில், அதற்கு "காசி விஸ்வநாதன் நகர்' எனப் பெயரிடப்பட்டது.
- திறப்பு விழா: நெசவாளர் காலனி திறப்பு விழாவின் போது, சிறப்பு விருந்தினராக ராஜாஜி கலந்து கொண்டு, அந்த நிகழ்ச்சியின் முக்கியத்துவத்தையும், காசி விஸ்வநாத முதலியாரின் முயற்சிக்கு அங்கீகாரம் அளித்ததையும் அவர் எடுத்துரைத்தார்.
- இறப்பு:
- கே.ஏ. காசிவிஸ்வநாத முதலியார் செப்டம்பர் 11, 1980 அன்று காலமானார்.
-------------------------------------