TNPSC Thervupettagam

தமிழ்நாட்டின் விடுதலைப் போராட்ட வீரர்கள் பாகம் – 11

September 5 , 2024 130 days 710 0

தமிழ்நாட்டின் விடுதலைப் போராட்ட வீரர்கள் பாகம் – 11

(For English version to this please click here)

52. டாக்டர் சுவாமிநாத சாஸ்திரி

ஆரம்ப கால வாழ்க்கை மற்றும் கல்வி

  • பிறப்பு மற்றும் குடும்பம்: டாக்டர் சுவாமிநாத சாஸ்திரி 1887 ஆம் ஆண்டு மாசிமகம் நாளில் தமிழ்நாட்டின் கும்பகோணத்தில் பிறந்தார்.
  • இவரது தந்தை வாசுதேவ சாஸ்திரி, தாயார் லட்சுமி அம்மாள் ஆவர்.
  • கல்வி: அவர் மெட்ராஸ் மருத்துவக் கல்லூரியில் பட்டம் பெற்றார், மேலும் அங்கு முறையான மருத்துவப் பயிற்சியும் மேற்கொண்டார்.

மருத்துவப் பயிற்சி மற்றும் சமூக சேவை

  • மருத்துவப் பயிற்சி: இவர் திருச்சியில் மருத்துவப் பயிற்சி பெற்றார், அங்கு அவர் ஏழைகளுக்கு இலவசமாக சிகிச்சை அளித்து, சமூக நலனுக்கான தனது அர்ப்பணிப்பை நன்கு வெளிப்படுத்தினார்.
  • ஹரிஜனங்களுக்கான ஆதரவு: அவர் தனது மருத்துவச் சேவைகளை ஹரிஜனங்களுக்கு (பட்டியலிடப்பட்ட சாதிகள்) விரிவுபடுத்தினார் மற்றும் தீண்டாமை மற்றும் விதவை மறுமணத்திற்கு எதிரான போராட்டம் உள்ளிட்ட சமூகச் சீர்திருத்தங்களையும் தீவிரமாகப் பிரச்சாரம் செய்தார்.

இந்திய சுதந்திர இயக்கத்தில் ஈடுபாடு

  • கைதுகள் மற்றும் சிறைவாசம்: சுதந்திரப் போராட்டத்தில் தீவிரமாக ஈடுபட்டதன் காரணமாக அவர் பலமுறை கைது செய்யப்பட்டார், அதன் பலனாக அவர் மீண்டும் மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டதால் அவரது உடல்நிலை சிறிது பாதிக்கப் பட்டது.
  • சிறைச்சாலையில் மருத்துவச் சேவைகள்: பிரிட்டிஷ் காவல்துறை அவரைச் சிறையிலிருந்த கைதிகளுக்கு மருத்துவச் சிகிச்சை அளிக்குமாறு கேட்டுக் கொண்ட நிலையில், அவர் கடினமான சூழ்நிலையில் இருந்தும் கூட தொடர்ந்து அர்ப்பணிப்புடன் அவர் பணியாற்றினார்.

குடும்பத்தின் பங்களிப்புகள்

  • அவரது மனைவி கல்யாணி சாஸ்திரியும் சுதந்திரப் போராட்டத்தில் தீவிரமாகப் பங்கேற்றவர் ஆவார்.
  • இவர் 1932 ஆம் ஆண்டில், வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் ஈடுபட்டதற்காக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
  • மேலும் இவர் பேச்சுத் திறமைக்குப் பெயர் பெற்றவர், இதனால் பல இளைஞர்களைச் சுதந்திரப் போராட்டத்தில் சேரத் தூண்டினார்.

தலைமை மற்றும் அங்கீகாரம்

  • திருச்சி ஹரிஜன சேவா சங்கம்: இவர் ஹரிஜனங்களின் நலனுக்காக அர்ப்பணிக்கப்பட்ட அமைப்பான திருச்சி ஹரிஜன சேவா சங்கத்தின் முதல் தலைவராக பணியாற்றியவர் ஆவார்.
  • சுதந்திரத்திற்குப் பிந்தைய அங்கீகாரம்: அப்போதைய இந்தியக் குடியரசுத் தலைவரான டாக்டர் ராஜேந்திர பிரசாத் அவர்கள் சுதந்திரத்திற்குப் பிறகு, ஹரிஜன சமூகத்திற்கான அவரது அர்ப்பணிப்பு, சேவையைப் பாராட்டி தங்கச் சுழலும் சக்கரம் வழங்கி அவரைக் கௌரவித்தார்.

இலக்கியப் பங்களிப்புகள்

  • இவர் சமூகச் சீர்திருத்தங்கள் மற்றும் சுதந்திர இயக்கம் தொடர்பான கருத்துக்கள் மற்றும் தகவல்களைப் பரப்புவதற்குப் பங்களிக்கும்  வகையில் ‘கைராட்டை’ என்ற தமிழ் இதழை வெளியிட்டார்.

உடல்நலக் குறைவு மற்றும் இறப்பு

  • உடல்நலம் குன்றுதல்: தொடர்ச்சியான சிறைவாசம் மற்றும் அது தொடர்பான இடையுறுகளால் அவரது உடல்நிலை மோசமடைந்தது.

மரணம்:

  • டாக்டர் சுவாமிநாத சாஸ்திரி ஜூலை 13, 1946 ஆம் ஆண்டில் காலமானார்.  

53. கல்லிடைக்குறிச்சி எஸ். சுப்ரமணிய ஐயர்

ஆரம்ப கால வாழ்க்கை மற்றும் கல்வி

  • எஸ்.சுப்ரமணிய ஐயர் தமிழ்நாட்டின் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள கல்லிடைக்குறிச்சி கிராமத்தில் செப்டம்பர் 15, 1917 ஆம் ஆண்டில் பிறந்தார்.
  • இவரது தந்தை சிவராம ஐயர், தாயார் கனகவல்லி அம்மாள் ஆவர்.
  • இவர் பத்தாம் வகுப்பு வரை படித்தார், ஆனால் சுதந்திரப் போராட்டத்தில் தொடர்ச்சியாக ஈடுபட்டதால் அவரது முறையான கல்வி தடை பட்டது.

சுதந்திர இயக்கத்தில் இவரின் செயல்பாடுகள் மற்றும் பங்கு

  • ஆரம்ப கால ஈடுபாடு: இவர் இளம் வயதிலேயே இந்திய தேசிய இயக்கத்தில் இணைந்து இந்தியச் சுதந்திரத்திற்கான வலுவான அர்ப்பணிப்பை வெளிப்படுத்தினார்.
  • இறுதித் தேர்வு நிகழ்வு: V.O. சிதம்பரம் பிள்ளையின் தலைமையில் நடைபெற்றக் கூட்டத்தில் ஆங்கிலேயருக்கு எதிரான இவரது தீவிரமானச் சொற்பொழிவு காரணமாக இவரால் SSLC இறுதி நிலைத் தேர்வு எழுத அனுமதிக்கப் படவில்லை.

சுதந்திர இயக்கத்திற்கான பங்களிப்புகள்

  • உதவி ஆசிரியர்: 1938 ஆம் ஆண்டு முதல் 1940 ஆம் ஆண்டு வரை, ஆங்கிலேயர்களுக்கு எதிரான நிலைப்பாட்டிற்குப் பெயர் பெற்ற ‘சுதந்திரச் சங்கு’ என்ற தமிழ் இதழின் துணை ஆசிரியராகப் பணியாற்றினார்.
  • தனி நபர் சட்டமறுப்பு இயக்கம்: ஜனவரி 22, 1941 அன்று மெட்ராஸில் தனிநபர் சட்ட மறுப்பு இயக்கம் தொடங்கப்பட்டது.
  • ஆங்கிலேய அரசாங்கத்திற்கு எதிரான நடவடிக்கைகளுக்காக அவர் காவல் துறை அதிகாரி கிராஸ்வெல் என்பவரால் கைது செய்யப் பட்டார்.
  • சிறைவாசம் (1941): இவருக்கு ஆங்கிலேயருக்கு எதிராக பிரச்சாரம் செய்ததற்காகவும், அரசாங்க எதிர்ப்பு இதழில் அவரது பங்களிப்புகளுக்காகவும் ஆறு மாத கடுங்காவல் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.
  • வெள்ளையனே வெளியேறு இயக்கம்: இவர் வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் பங்கேற்றதற்காக 1942 ஆம் ஆண்டில் மீண்டும் கைது செய்யப்பட்டு, ஓராண்டு அலிப்பூர் சிறையில் அடைக்கப் பட்டார்.

சுதந்திரத்திற்குப் பிந்தைய அங்கீகாரம்

  • காங்கிரஸ் கமிட்டியில் இவர் பங்கு : அவர் மாநில மற்றும் மாவட்ட அளவில் காங்கிரஸ் கமிட்டியில் பல்வேறு பதவிகளில் பணியாற்றியதோடு, மேலும் இவர் இந்தப் பிராந்தியத்தின் அரசியல் மற்றும் சமூக வளர்ச்சிக்குப் பாடுபட்டார்.
  • தாமரைப்  பத்திரம் (1972): சுதந்திரப் போராட்டத்திற்கு அவர் ஆற்றியப் பங்களிப்பைப் பாராட்டி மத்திய அரசு அவருக்கு தாமரைப் பத்திரத்தை வழங்கியது.
  • ரோட்டரி கிளப் கௌரவம் (1997): மெட்ராஸ் ரோட்டரி கிளப் சுதந்திர இயக்கத்திற்கு அவர் ஆற்றிய குறிப்பிடத்தக்கப் பங்களிப்பிற்காக கௌரவித்தது.

மரபு மற்றும் இறப்பு

  • இறப்பு: கல்லிடைக்குறிச்சி எஸ்.சுப்ரமணிய ஐயர் ஜூன் 2, 1998 ஆம் ஆண்டில் காலமானார்.

54. வீர ராகவ நாயுடு

ஆரம்ப கால வாழ்க்கை மற்றும் கல்வி

  • வீர ராகவ நாயுடு தமிழ்நாட்டில் உள்ள நாகப்பட்டினம் மாவட்டத்தில் தில்லையாடியில் பிறந்தார்.
  • இவர் தில்லையாடி அய்யாசாமி செந்தமிழ் வித்யா சாலையில் ஏழாம் வகுப்பு வரை படித்தார்.

இந்திய தேசிய இராணுவத்தில் ஈடுபாடு

  • 1942 ஆம் ஆண்டில், சிங்கப்பூரில் இந்திய தேசிய ராணுவத்தில் சேர்ந்த அவர், நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் நெருங்கிய நண்பரானார்.
  • ஆரம்பத்தில் பத்திரிகைக் குழுவோடு பணி புரிந்த அவர், பின்னர் களப் பிரச்சாரப் பிரிவில் இணைந்தார்.

பர்மா முன்னணியில்  பங்கு

  • வீர ராகவ நாயுடு பக்தன் முகாமில் பயிற்சி பெற்று ரங்கூன் நகரில் அவர் பணியமர்த்தப் பட்டார்.
  • லூயிஸ் ஸ்ட்ரீட் மெஸ்ஸில் உள்ள ஃபோர்மேன் பிரிண்டிங்கில் முன்-வரிசைக் குறியீட்டு வார்த்தைகள், புத்தகங்கள் மற்றும் INA ரகசிய ஆவணங்களைத் தயாரிப்பது அவரது பொறுப்பாகும்.

சிறைவாசம்

  • ரங்கூன் ஒரு திறந்த நகரமாக மாறியதும், அவர் லூயிஸ் தெரு மெஸ்ஸில் கைது செய்யப்பட்டு ரங்கூன் மத்திய சிறையில் 15 மே 1945 முதல் மார்ச் 3, 1946 வரை அடைக்கப்பட்டார்.
  • நேதாஜி போஸ் இறந்த பிறகு, வீர ராகவ நாயுடு தனது சொந்தக் கிராமத்திற்குத் திரும்பினார்.

இறப்பு:

  • அவர் 2012 ஆம் ஆண்டு ஜனவரி 12 அன்று நாகப்பட்டினம் மாவட்டம் தில்லையாடியில் காலம் ஆனார்.​​

55. ஐ.பி. அரங்க சாமி ராஜா

ஆரம்ப கால வாழ்க்கை

  • ஐ.பி. அரங்க சாமி ராஜா தமிழ்நாட்டின் ராஜபாளையத்தில் 1886 ஆம் ஆண்டு பூபால் ராஜ் மற்றும் லட்சுமி அம்மாள் ஆகிய இணையோருக்குப் பிறந்தார்.

தன்னாட்சி இயக்கத்தில் பங்கு

  • ஐ.பி. அரங்க சாமி ராஜா 1915 ஆம் ஆண்டில் அன்னி பெசன்ட் தொடங்கிய தன்னாட்சி இயக்கத்தில் தீவிரமாக ஈடுபட்டு 1916 ஆம் ஆண்டில் ராஜபாளையத்தில் இந்த அமைப்பின் ஒரு கிளையை நிறுவினார்.

செயல்பாடுகள் மற்றும் கைதுகள்

  • அவர் வெளிநாட்டுப் பருத்திப் துணிகளின் மீதான புறக்கணிப்பிற்குத் தலைமை தாங்கி அதற்காக 13 ஜனவரி 1922 அன்று பொது இடையூறுச் சட்டத்தின் கீழ் கைது செய்யப் பட்டார் என்ற நிலையில் அதற்காக ஸ்ரீவில்லிபுத்தூர் துணைச் சிறையில் ஏழு நாட்கள் இவருக்கு கடுங்காவல் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
  • அவர் 1921 ஆம் ஆண்டில் ஸ்ரீவில்லிபுத்தூரில் காதி இயக்கத்தைத் தொடங்குவதில் முக்கியப் பங்காற்றினார்.

உப்புச் சத்தியாகிரகம் மற்றும் பிற்கால வாழ்க்கை

  • 1930 இல், ராஜபாளையத்தில் இருந்து உப்புச் சத்தியாகிரக அணிவகுப்பில் ஆறு பேர் கொண்ட குழுவை ஐ.பி. அரங்க சாமி ராஜா வழி நடத்தினார்.

இறப்பு:

  • அவர் 1950 ஆம் ஆண்டு மே 7 அன்று காலமானார்.

56. ஹனுமந்தன் பட்டி எஸ். கிருஷ்ண சுவாமி ஐயங்கார்

ஆரம்ப கால வாழ்க்கை

  • கிருஷ்ணசுவாமி ஐயங்கார் 1883 ஆம் ஆண்டு தமிழ்நாட்டில் உள்ள மதுரை மாவட்டம், ஹனுமந்தன் பட்டி கிராமத்தில் பிறந்தார்.

சுதந்திர இயக்கப் பங்கேற்பு

  • கிருஷ்ணசுவாமி ஐயங்கார் ஒரு செல்வாக்கு மிக்க சொற்பொழிவாளர் என்பதோடு 1907 ஆம் ஆண்டில் வங்காளத்தில் சுதேசி இயக்கத்தில் அவர் தீவிரமாகப் பங்கேற்றார்.
  • அவர் அன்னி பெசன்ட் அவர்களால் தொடங்கப்பட்ட தன்னாட்சி இயக்கத்தில் இணைந்து தீவிரமாகப் போராட்டங்களில் பங்கேற்றார்.

சிறைவாசம் மற்றும் அங்கீகாரம்

  • அவரது போராட்டங்களுக்காக அவர் ஆங்கிலேயர்களால் பலமுறை கைது செய்யப்பட்டு உள்ளதோடு பொதுக் கூட்ட தடைகளை மீறியதற்காக 1923 ஆம் ஆண்டு திண்டுக்கல் சிறையில் அவர் ஓராண்டு காலம் சிறை வைக்கப்பட்டார்.
  • இவரை மதுரையைச் சேர்ந்த சுதந்திரப் போராட்ட வீரரான முத்து ராமலிங்கத் தேவர், “பிராமணக் குடும்பத்தில் பிறந்த சிங்கம்” என்று புகழ்ந்தார்.

கவிதை மற்றும் மரபு

  • கிருஷ்ணசுவாமி ஐயங்கார் ஒரு கவிஞரும் ஆவார் என்ற நிலையில் தேசியவாதம் தொடர்பான பாடல்களை அவர் எழுதியுள்ளார்.

57. நாமக்கல் எஸ். ஆர். ஹனுமந்த ராவ்

ஆரம்ப கால வாழ்க்கை மற்றும் பின்னணி

  • எஸ்.ஆர். ஹனுமந்த ராவ் 1911-ம் ஆண்டு விஜயதசமி நாளில் நாமக்கல்லில் பிறந்தார்.
  • இவரின் தந்தை "தடபுடல்" எஸ்.ஆர். ராகவேந்திர ராவ், ஒரு புகழ்பெற்ற வழக்கறிஞர் ஆவார்.

சுதந்திர இயக்கத்தில் ஆரம்ப கால ஈடுபாடு

  • ஹனுமந்த ராவ் முதன்முதலில் தனது 17 வது வயதில் சுதந்திரப் போராட்டத்தில் பங்கேற்றார்.
  • இவர் 1927 ஆம் ஆண்டு நீல் சிலையை இடிக்கும் நோக்கில் நடைபெற்ற நீல் சிலை சத்தியாக் கிரகத்தின் போது கைது செய்யப்பட்டு, பெர்ஹாம்பூர் சிறையில் அடைக்கப்பட்டார்.

அடுத்தடுத்த கைதுகள் மற்றும் செயல்பாடுகள்

  • ஹனுமந்த ராவ் கள்ளக் கடைகளை அடைத்து போராட்டம் நடத்தியதற்காகவும், வெளிநாட்டுப் பொருட்களை புறக்கணித்ததற்காகவும், ஒத்துழையாமை இயக்கத்தில் பங்கேற்றதற்காகவும் மீண்டும் கைது செய்யப்பட்டார்.
  • பல ஆண்டுகள் ராசிபுரம் சிறையில் இருந்த அவர், 1941 ஆம் ஆண்டில் தனிநபர் சத்தியாக் கிரகத்தின் போது பெல்லாரி சிறையில் அடைக்கப்பட்டார்.

தொடர்ச்சியான போராட்டம்

  • அவர் 1942 ஆம் ஆண்டு வெள்ளையனே வெளியேறு இயக்கத்தின் போது, ​காவல் துறையினரால் கொடூரமாகத் தாக்கப்பட்டு அதனால் அவரது முகத்திலும் உடலிலும் நிலையான அடையாளங்களை ஏற்படுத்திய பலத்த காயங்கள் ஏற்பட்டன.
  • இருப்பினும் அவரது செயல்பாடுகள் காதி இயக்கம், மதுவிலக்கு இயக்கம், தீண்டாமை ஒழிப்பு என விரிவடைந்தது.

சேவை மற்றும் மரபு

  • அவர் 1932 ஆம் ஆண்டு முதல் 1945 ஆம் ஆண்டு வரை நாமக்கல் காங்கிரஸ் கமிட்டி உறுப்பினராகப் பணியாற்றினார்.

58. வி. எம். முனுசாமி

ஆரம்ப கால வாழ்க்கை மற்றும் பின்னணி

  • வி.எம். முனுசாமி 1913 ஆம் ஆண்டு அக்டோபர் 2 ஆம் தேதி அன்று முதல் உலகப் போர் வீரர்களான முருகேசன் மற்றும் முத்தம்மாள் ஆகியோருக்குப் பிறந்தார்.
  • ஆரம்பத்தில் தீவிரவாதத்தின் பக்கம் சாய்ந்த அவர் பின்னர் காந்தியின் அகிம்சை கொள்கைகளால் ஈர்க்கப்பட்டார்.

சுதந்திர இயக்கத்திற்கானப் பங்களிப்பு

  • முனுசாமி தேசியவாத இயக்கங்களில் தீவிரமாக ஈடுபட்டார் என்பதோடு அவரது நடவடிக்கைகளுக்காக அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.
  • 3 ஆண்டுகள் சிறைத் தண்டனைக்குப் பிறகு அவர் விடுவிக்கப்பட்டார்.
  • அவர் மே 1930 ஆம் ஆண்டில், ஆங்கிலேயர் ஆட்சிக்கு எதிராக முழக்கங்கள் மற்றும் மேடை நாடகங்கள் நடத்தியதற்காக வேலூர் கோட்டை துணைச் சிறையில் 7 ஆண்டுகள் அடைக்கப் பட்டார்.

கைதுகள் மற்றும் சிறைவாசம்

  • அவர் 1942 ஆம் ஆண்டில் வெள்ளையனே வெளியேறு இயக்கத்தின் போது, ​​மீண்டும் கைது செய்யப் பட்டு, பொட்டி ஸ்ரீராமுலு, சுந்தரேசன் சண்முகம் உள்ளிட்டச் சுதந்திரப் போராட்ட வீரர்களுடன் 7 ஆண்டுகள் வேலூர் கோட்டை துணைச் சிறையில் அடைக்கப் பட்டார்.

மரணம்

  • வி.எம். முனுசாமி 19 பிப்ரவரி 2008 ஆம் ஆண்டு அன்று தனது 94வது வயதில் காலமானார்.

                -------------------------------------

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்