TNPSC Thervupettagam

தமிழ்நாட்டின் விடுதலைப் போராட்ட வீரர்கள் பாகம் – 13

September 13 , 2024 75 days 527 0

தமிழ்நாட்டின் விடுதலைப் போராட்ட வீரர்கள் பாகம் – 13

(For English version to this please click here)

63. சோளிங்கபுரம் தேவராஜன்

ஆரம்ப கால வாழ்க்கை மற்றும் பின்னணி

  • தேவராஜன் தமிழ்நாட்டின் வட ஆற்காடு மாவட்டத்தில் உள்ள சோளிங்கபுரத்தில் 1902  ஆம் ஆண்டு பிறந்தார்.

சுதந்திர இயக்கப் பங்கேற்பு

  • தேவராஜன் ராஜாஜியுடன் இணைந்து சுதந்திரப் போராட்டத்தில் தீவிரமாக ஈடுபட்டார்.
  • இவர் வாலாஜா தாலுகாவில் உள்ள காங்கிரஸ் கமிட்டியின் செயலாளராகப் பணியாற்றினார்.

கைதுகள் மற்றும் சிறைகள்

  • இவர் 1939 ஆம் ஆண்டு சத்தியாகிரகத்தில் ஈடுபட்டதற்காக கைது செய்யப்பட்டு அலிப்பூர் சிறையில் அடைக்கப்பட்டார்.
  • 1942 ஆம் ஆண்டில் வெள்ளையனே வெளியேறு இயக்கத்தின் போது மீண்டும் கைது செய்யப் பட்டு இரண்டு ஆண்டுகள் தஞ்சாவூர் சிறையில் இருந்தார்.

சுதந்திரத்திற்குப் பிந்தைய அங்கீகாரம்

  • இவர் சுதந்திரத்திற்குப் பிறகு, மதராஸ் மாநில அரசு வழங்கிய 10 ஏக்கர் நில மானியத்தை நிராகரித்து, "எனது தாய் தேசத்தின் சுதந்திரத்திற்காக ஊதியம் பெறுவது சரியல்ல" என்று கூறினார்.
  • 1966 ஆம் ஆண்டில், தீண்டாமையை ஒழிப்பதில் அவர் ஆற்றியப் பங்களிப்பிற்காக, அவருக்கு தங்கப் பதக்கம் வழங்கப்பட்டது.

64. அக்கூர் அனந்தாச்சாரி

ஆரம்ப கால வாழ்க்கை மற்றும் கல்வி

  • அனந்தாச்சாரி ஒரு நடுத்தர வர்க்க குடும்பத்தில் பிறந்தார்.
  • சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள இந்துப் பள்ளியில் படிக்கும் போது, இவர் சுதந்திரப் போராட்டத் தலைவர்களான பாலகங்காதரத் திலகர், லாலா லஜபதிராய், பிபின் சந்திரபால் ஆகியோரின் சொற்பொழிவுகளால் ஈர்க்கப்பட்டார்.

சுதந்திர இயக்கங்களில் ஆரம்ப காலப் பங்கேற்பு

  • அனந்தாச்சாரி 16 வயதில், 1919 ஆம் ஆண்டு ஒத்துழையாமை இயக்கத்தில் சேர்ந்தார்.
  • அவர் 1927 ஆம் ஆண்டில், நீல் சிலை சத்தியாகிரகத்தின் போது கைது செய்யப்பட்டார் மற்றும் 1929 ஆம் ஆண்டில் சைமன் கமிஷனைப் புறக்கணித்தார், இந்த இரு நிகழ்வுகளின் போது அவர் ஓராண்டு சிறைவாசத்தை அனுபவித்தார்.

பிற்காலப் போராட்டங்கள் மற்றும் சிறைவாசங்கள்

  • அவர் 1930 ஆம் ஆண்டு உப்பு சத்தியாகிரகத்தில் பங்கேற்றதற்காக வேலூர் சிறையிலும், 1932 ஆம் ஆண்டு ஒத்துழையாமை இயக்கத்தின் போது பெல்லாரி சிறையிலும் அடைக்கப்பட்டார்.
  • அவர் 1941 ஆம் ஆண்டில் பாதுகாப்புக் கைதியாக கைது செய்யப்பட்டு திருச்சி சிறையில் அடைக்கப் பட்டார்.

கூடுதல் பங்களிப்புகள் மற்றும் மரபு

  • அனந்தாச்சாரி தீண்டாமை ஒழிப்பு மற்றும் காதி இயக்கத்தின் தீவிர ஆதரவாளராக செயல் பட்டார்.
  • அவர் பல மொழிக் கொள்கையை ஊக்குவித்தார் என்பதோடு, வாலாஜா பேட்டையில் தீனபந்து ஆசிரமம் என்று அழைக்கப்படும் இலவசப் பள்ளியின் மூலம் ஹிந்தியைப் பரப்பினார்.
  • அவர் மகாத்மா காந்தி, ஜவஹர்லால் நேரு மற்றும் பிற குறிப்பிடத்தக்க நபர்களின் வாழ்க்கை வரலாற்றையும் எழுதினார் என்பதோடு அவர் பிரேம்சந்த் மற்றும் சுதர்சன் ஆகியோரின் இந்திக் கதைகளை தமிழில் மொழிபெயர்த்தார்.

65. வி. சுப்பையா பிள்ளை

ஆரம்பகால வாழ்க்கை மற்றும் பின்னணி

  • வி. சுப்பையா பிள்ளை 1910 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 2 ஆம் தேதி நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யத்தில் பிறந்தார்.
  • இவர் வேதாரண்யம் பிள்ளை, வண்ணம்மாள் தம்பதியருக்கு மகனாகப்  பிறந்தார்.

சுதந்திர இயக்கத்தில் ஈடுபாடு

  • சர்தார் வல்லபாய் படேல், சர்தார் வேத ரத்தினம் பிள்ளை, காந்திஜி ஆகியோரின் சீடரான வி. சுப்பையா பிள்ளை, சர்தார் பட்டேலின் தலைமையில் 1929 ஆம் ஆண்டில் நடைபெற்ற தமிழ் மாகாண அரசியல் மாநாட்டில் தீவிரமாகப் பங்கேற்றார்.
  • மேலும் அவர் 1932 ஆம் ஆண்டில் வேதாரண்யம் உப்பு சத்தியாகிரக இயக்கத்தில் ஈடுபட்டார், வெளிநாட்டுப் பொருட்களைப் புறக்கணித்தும் மதுவிலக்கை ஆதரித்தும், தீண்டாமைக்கு எதிராகப் போராடினார்.
  • வி. சுப்பையா பிள்ளை 1932 மார்ச் 12 அன்று திருச்செந்தூரில் கைது செய்யப்பட்டு கோவை மற்றும் மதுரை சிறைகளில் 6 மாதங்கள் சிறையில் அடைக்கப்பட்டார்.
  • அவர் ஆகஸ்ட் 23, 1932 ஆம் ஆண்டில் விடுவிக்கப்பட்டார்.

அங்கீகாரம் மற்றும் மரபு

  • 1972 ஆம் ஆண்டில், இந்திய அரசானது அவரது தியாகத்தைக் கௌரவித்து தாமரைப் பட்டயம் வழங்கி அவருக்கு 27 ஜூலை 1972 அன்று தியாகி ஓய்வூதியம் வழங்கியது.
  • சுப்பையா பிள்ளையின் சுதந்திரப் போராட்டத்திற்கு அவர் ஆற்றியப் பங்களிப்பை மிகவும் நன்கு கௌரவிக்கும் வகையில் வேதாரண்யத்தில் உள்ள உப்புச் சத்தியாகிரகக் கட்டிடத்தில் 29 ஏப்ரல் 2022 அன்று அவருக்கு வெண்கலச் சிலை நிறுவப்பட்டது.

இறப்பு

  • வி.சுப்பையா பிள்ளை 27 ஏப்ரல் 1979 ஆம் ஆண்டில் காலமானார்.

66. ஸ்ரீ என்.ஜி. ராஜன்

ஆரம்ப கால வாழ்க்கை மற்றும் கல்வி

  • ஸ்ரீ என்.ஜி. ராஜன் 1924 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 2 ஆம் தேதி தமிழ்நாட்டின் நாகப்பட்டினத்தில் பிறந்தார்.
  • இவர் ஸ்ரீ கே. நடேசப் பிள்ளை மற்றும் சௌந்திரவல்லி அம்மாள் ஆகியோருக்கு மகனாகப் பிறந்தார்.
  • இவர் நாகப்பட்டினத்தில் உள்ள தேசிய மேல்நிலைப் பள்ளியில் 8 ஆம் வகுப்பு வரை படித்தார்.

செயல்பாடுகள்

  • 1935 ஆம் ஆண்டில் பண்டித ஜவஹர்லால் நேருவின் உரையால் ஈர்க்கப்பட்ட ஸ்ரீ என்.ஜி. ராஜன் சுதந்திர இயக்கத்தில் சேர்ந்தார்.
  • அவர் தனது தந்தையுடன், காரைக்காலுக்கு குடிபெயர்ந்தார், அங்கு அவர் உள்ளூர் சுதந்திரப் போராளிகள் மற்றும் கம்யூனிஸ்ட் தலைவர்களால் ஈர்க்கப்பட்டார்.
  • அவர் 1943 ஆம் ஆண்டில், மகாத்மா காந்தியின் உண்ணாவிரதப் போராட்டத்தின் போது, ​​காந்தியைப் பாதுகாக்க வைஸ்ராய் வேவலிடம் வேண்டுகோள் விடுத்து கையெழுத்து இயக்கத்தை வழி நடத்தினார்.

கைதுகள் மற்றும் சிறைவாசங்கள்

  • செப்டம்பர் 1947 ஆம் ஆண்டில், ஊர்வலத்தின் போது காவல்துறையைத் தாக்கியதற்காக ஸ்ரீ என்.ஜி. ராஜன் கைது செய்யப்பட்டு ஆறு மாத சிறைத் தண்டனை விதிக்கப்பட்டார்.
  • பின்னர் பாண்டிச்சேரி நீதிமன்றம் மற்றும் பாரீஸ் பிரபுக்கள் சபை மூலம் இந்த தண்டனை ரத்து செய்யப்பட்டது.
  • அவர் கூட்டங்கள் மற்றும் ஊர்வலங்கள் மீதான தடைகளை மீறியதற்காகப் பலமுறை கைது செய்யப்பட்டு மொத்தம் ஒரு வருடம், இரண்டு மாதங்கள் மற்றும் 17 நாட்கள் சிறையில் இருந்தார்.

அரசியல் வாழ்க்கை மற்றும் அங்கீகாரம்

  • காரைக்கால் நகராட்சியில் 1968 ஆம் ஆண்டில் கவுன்சிலராக தேர்ந்தெடுக்கப்பட்ட ஸ்ரீ என்.ஜி. ராஜன், 1977 வரை அந்தப் பதவியை வகித்தார்.
  • அவர் பிரெஞ்சு ஆட்சிக்கு எதிரான சுதந்திரப் போராட்டத்தில் ஆற்றியப் பங்கிற்காக, இந்திய அரசு அவருக்கு தாமரைப் பட்டமும், கௌரவச் சான்றிதழும் வழங்கியுள்ளது.

மரணம்

  • ஸ்ரீ என்.ஜி. ராஜன் நவம்பர் 4, 1994 அன்று காலமானார்.

67. ஜி. காசிநாதன்

ஆரம்ப கால வாழ்க்கை மற்றும் பின்னணி

  • ஜி.காசிநாதன் நாகப்பட்டினம் மாவட்டம், வேதாரண்யம் அருகே உள்ள சர்வகத்தலையில் 1924 ஆம் ஆண்டு ஜனவரி 22 ஆம் தேதி அன்று பிறந்தார்.
  • இவர் கோவிந்தசுவாமிக்கு மகனாகப் பிறந்தார்.

இந்திய தேசிய ராணுவத்தில் சேவை

  • காசிநாதன் ஆரம்பத்தில் இந்திய தேசிய ராணுவத்தில் உறுப்பினராகவும், பின்னர் ரங்கூனில் உள்ள களப் பயிற்சி அமைப்பில் சிப்பாய் ஆகவும் பணியாற்றினார்.
  • அவர் பிரிட்டிஷ் படைகளுடன் போரிட்டார், ஆனால் அவர் பிடிபட்டு ரங்கூனில் 10 மாதங்கள் சிறையில் அடைக்கப்பட்டார்.

அங்கீகாரம் மற்றும் மரியாதை

  • காசிநாதனுக்கு 1973 ஆம் ஆண்டு தமிழக அரசாலும், 1988 ஆம் ஆண்டு இந்திய அரசாலும் சுதந்திரப் போராட்ட வீரருக்கான தாமரைப் பத்திர விருது வழங்கப்பட்டது.

மரணம்

  • ஜி.காசிநாதன் 23 ஏப்ரல் 1991 அன்று சர்வகத்தலையில் காலமானார்.

                                          

68. மாசிலாமணி பிள்ளை மற்றும் ஜெபமணி அம்மாள்

ஆரம்ப கால வாழ்க்கை மற்றும் பின்னணி

  • மாசிலாமணி பிள்ளை 1886 ஆம் ஆண்டு தமிழ்நாட்டில் தூத்துக்குடிக்கு அருகிலுள்ள கொம்பாடியில் பிறந்தார்.
  • இவர் தூத்துக்குடியில் உள்ள செயின்ட் பிரான்சிஸ் சேவியர் பள்ளியில் படித்து, தச்சு வேலை செய்து வந்தார்.

சுதந்திர இயக்கத்திற்கான பங்களிப்பு

  • மாசிலாமணி பிள்ளை, சுதேசி இயக்கத்தை மேம்படுத்துவதற்காக இலவசமாக வழங்கிய நூல் நூற்பு சக்கரங்களை தயாரித்து விநியோகிப்பதில் புகழ் பெற்றவர்.
  • அவர் இந்திய சுதந்திரம் பற்றிய கருத்துக்களை தீவிரமாகப் பரப்பினார் மற்றும் இந்திய விடுதலைக்காக வாதிடுவதற்காக கிராமம் கிராமமாக பயணம் செய்வதில் அவரது அயராத முயற்சிகளுக்காக "சிம்மக் குரலோன்" என்று புனைப் பெயர் பெற்றார்.

முக்கிய இயக்கங்களில் ஈடுபாடு

  • மகாத்மா காந்தி மற்றும் ஜவஹர்லால் நேரு போன்ற முக்கிய சுதந்திரப் போராட்ட வீரர்களின் உரைகளை தமிழில் மொழிபெயர்த்து, ஒரு பேச்சாளராக முக்கியத்துவம் பெற்றார்.
  • மாசிலாமணி பிள்ளை, 1930 ஆம் ஆண்டு உப்பு சத்தியாகிரகத்தில் பங்கேற்றதற்காக ரூ. 200 ரூபாய் அபராதமும், ஓராண்டு சிறைத் தண்டனையும் விதிக்கப் பட்டது.
  • இவர் 1931 ஆம் ஆண்டில் கராச்சியில் நடந்த அகில இந்திய காங்கிரஸ் மாநாட்டிலும் கலந்து கொண்டு, காந்திஜியின் அடிப்படை உரிமைகள் குறித்த தீர்மானத்தை ஆதரித்தார்.

பிற கைதுகள் மற்றும் சிறைவாசங்கள்

  • 1941 ஆம் ஆண்டில் மாசிலாமணிப் பிள்ளை, தனிநபர் சத்தியாகிரகம் நடத்தியதற்காக ரூ. 200 ரூபாய் அபராதமும், ஆறு மாதம் அவருக்கு சிறைத் தண்டனையும் விதிக்கப் பட்டது.
  • மேலும் இவர் அபராதத்தைச் செலுத்த மறுத்ததால் கூடுதல் சிறைத் தண்டனையை அவர் அனுபவித்தார்.
  • பின்னர் இவர் 1942 ஆம் ஆண்டு வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் பங்கேற்றதற்காக பல்வேறு சிறைகளில் 30 மாதங்கள் சிறையில் அடைக்கப்பட்டார்.

சமூகப் பங்களிப்புகள் மற்றும் மரபு

  • மாசிலாமணி பிள்ளை தனது சொந்தச் செலவில் முதியோர்களுக்கான பள்ளியை நடத்தி வந்தார் என்பதோடு அவருடைய இந்த முயற்சிக்கு அவரது மனைவி ஜெபமணி அம்மாள் உறுதுணையாக இருந்தார்.
  • இவர்கள் இருவரும் சேர்ந்து, இரண்டாம் உலகப் போருக்கு எதிரான போராட்டத்தில் பங்கேற்றதற்காக தூத்துக்குடியில் கைது செய்யப்பட்ட முதல் தம்பதிகள் ஆவர்.
  • மாசில்லாமணி பிள்ளையின் பங்களிப்புகள் பரவலாக அங்கீகரிக்கப்பட்டன, மேலும் அவரது தேசபக்திப் பாடல்கள் மற்றும் செயல்பாட்டிற்காக அவர் நினைவு கூரப்பட்டார்.
  • அவரது நினைவாக தூத்துக்குடியில் உள்ள தெருக்களுக்கு 'மாசில்லாமணி புரம்' என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது.

69. வெள்ளையத் தேவன்

பின்னணி மற்றும் ஆரம்ப கால வாழ்க்கை

  • வெள்ளையத் தேவன், சேதுபதி சாம்ராஜ்யத்தில் உள்ள சாயல்குடி கிராமத்தின் தலைவரான மங்களத் தேவரின் மகன் ஆவார்.
  • வீரபாண்டிய கட்டபொம்மனின் படையில் ஒரு முக்கியத் தளபதியாக இருந்த அவர், தனது தீவிர துணிச்சலுக்குப் பெயர் பெற்றவர்.

வீரச் செயல்கள் மற்றும் விசுவாசம்

  • ஒரு முக்கியமான போரின் போது வீரபாண்டிய கட்டபொம்மனின் உயிரைக் காப்பாற்றியதில் வெள்ளையத் தேவன் பிரபலமடைந்தார்.
  • கட்டபொம்மனின் உயிர் பிழைப்பதில் அவரது துணிச்சல் கருவியாக இருந்தது, இது உள்ளூர் நாட்டுப்புறக் கதைகளில் "துணிச்சலான வெள்ளையத் தேவனின் காவியம்" என்று கொண்டாடப் படுகிறது.
  • வெள்ளையத் தேவனின் தைரியத்தையும், விசுவாசத்தையும் கட்டபொம்மன் மிகவும் வெகு ஆழமாக மதிப்பிட்டதால், கட்டபொம்மன் அவரை "என் தந்தை" என்று மிகவும் மரியாதையுடன் குறிப்பிட்டார்.

இராணுவ சாதனைகள்

  • அவர் போரில் பயமற்ற அணுகுமுறைக்காக அறியப்பட்டார் மற்றும் ஒரு போரிலும் தோல்வி அடைந்ததாக அறியப்படவில்லை.
  • அவரது வீரம் ஒரு உள்ளூர் கவிதை மற்றும் நாட்டுப்புற இசையின் மூலம் அழியாததாக அமைந்தது.
  • செப்டம்பர் 1, 1799 ஆவணித் திருவிழாவின் போது, ​​வெள்ளையத் தேவன் திருச்செந்தூரைத் தாக்குதலுக்கு எதிராகப் பாதுகாத்தார், அதனால் காயம் அடைந்தார், ஆனால் கட்டபொம்மனும் ஊமைத்துரையும் திரும்பும் வரை அவர் தைரியமாகப் போராடினார்.

அங்கீகாரம் மற்றும் மரபு

  • வெள்ளையத் தேவனின் குறிப்பிடத்தக்கப் பங்களிப்புகள் இருந்த போதிலும், அவரது துணிச்சல் பெரும்பாலும் வரலாற்று பதிவுகளில் மறைக்கப் படுகிறது.
  • இருப்பினும் அவரது பெயர் உள்ளூர் கதைகள் மற்றும் பாடல்களில் கொண்டாடப்படுகிறது.

மரணம்

  • வெள்ளையத் தேவன் திருச்செந்தூரில் நடந்த போரின் போது இறந்தார், ஆனால் அவர் இறந்த தேதி தெளிவாக பதிவு செய்யப்படவில்லை.

70. பி.வி. அய்யாசாமி

ஆரம்ப கால வாழ்க்கை மற்றும் பின்னணி

  • பி.வி. அய்யாசாமி 1920 ஆம் ஆண்டு தமிழ்நாட்டின் சேலத்தில் உள்ள அம்மாபேட்டை அருகே உள்ள வித்யானாரில் வீராசாமி மற்றும் முனியம்மாள் ஆகியோருக்கு மகனாகப் பிறந்தார்.
  • அவர் காந்தியின் சித்தாந்தத்தால் ஈர்க்கப்பட்டார் மற்றும் காமராஜ், ராஜாஜி மற்றும் சர்தார் வேத ரத்தினம் பிள்ளை போன்ற முக்கியத் தலைவர்களுடன் நெருங்கியத் தொடர்புகளையும் கொண்டிருந்தார்.

சுதந்திர இயக்கத்திற்கானப் பங்களிப்பு

  • அய்யாசாமி இந்தியச் சுதந்திரப் போராட்டத்தில் தீவிரமாக ஈடுபட்டார், மேலும் அவர் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியில் பணியாற்றினார்.
  • 1941 ஆம் ஆண்டில் சத்தியாகிரகத்திலும், 1942 ஆம் ஆண்டில் வெள்ளையனே வெளியேறு இயக்கத்திலும் பங்கேற்றார்.

சிறைவாசம் மற்றும் அங்கீகாரம்

  • 1942 ஆம் ஆண்டில், பி.வி. அய்யாசாமி கைது செய்யப்பட்டு பதினைந்து மாதங்கள் பெல்லாரி சிறையில் அடைக்கப்பட்டார்.
  • சுதந்திரப் போராட்டத்திற்கு அவர் ஆற்றியப் பங்களிப்பைப் போற்றும் வகையில், 1972 ஆம் ஆண்டில் இந்திய அரசால் அவருக்கு சுதந்திரப் போராட்ட வீரருக்கான தாமரைப் பத்திர விருது வழங்கப்பட்டது.

மரணம்

  • பி.வி. அய்யாசாமி 1989 ஆகஸ்ட் 27 அன்று காலமானார்.

                -------------------------------------

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்