TNPSC Thervupettagam

தமிழ்நாட்டின் விடுதலைப் போராட்ட வீரர்கள் பாகம் – 14

September 18 , 2024 118 days 530 0

தமிழ்நாட்டின் விடுதலைப் போராட்ட வீரர்கள் பாகம் – 14

(For English version to this please click here)

71. ஹாலஸ்யம்

பிறப்பு மற்றும் ஆரம்ப கால வாழ்க்கை

  • ஹாலஸ்யம் தமிழ்நாட்டின் திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் உள்ள அங்காரா கிராமத்தில் பிறந்தார்.
  • இவரது பெற்றோர் நாராயணசாமி ஐயர் மற்றும் பெருந்திரு அம்மாள் ஆவர்.

கல்வி:

  • ஹாலாஸ்யம் சென்னை சட்டக் கல்லூரியில் சட்டம் பயின்றார்.
  • இவர் படிப்பை முடித்தவுடன் ஒரு தகுதியான வழக்கறிஞரானார்.

தொழில்:

  • இவர் வழக்கறிஞராகப் பணியாற்றி வந்தார்.

அரசியல் மற்றும் சமூகப் பங்களிப்புகள்

சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபாடு:

  • காதி இயக்கம்: தன்னம்பிக்கையின் அடையாளமாக விளங்கிய, இந்தியாவில் தயாரிக்கப்பட்ட துணிகளைப் பயன்படுத்துவதை ஊக்குவிப்பதில் ஹாலஸ்யம் தீவிரமாகப் பங்கேற்றார்.
  • தீண்டாமை இயக்கம்: மேலும் அவர் தீண்டாமையை ஒழிப்பதற்கும், சமூக சமத்துவத்தை மேம்படுத்துவதற்கும் பாடுபட்டார்.
  • கோவில் நுழைவு இயக்கம்: அவர் தாழ்த்தப்பட்ட மக்கள் கோவில்களில் நுழையும் உரிமைக்காக வாதிட்டார்.

கைதுகள் மற்றும் சிறைகள்:

  • பிரிட்டிஷ் உப்புச் சட்டங்களுக்கு எதிரான முக்கியமான ஒத்துழையாமைப் பிரச்சாரமான 1930 உப்பு சத்தியாகிரகத்தின் போது, அவர் கைது செய்யப்பட்டார்.
  • 1942 ஆம் ஆண்டு நடந்த வெள்ளையனே வெளியேறு இயக்கத்தின் போது அவர் மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டார்.
  • மேலும் அவர் 1942 ஆம் ஆண்டில் காலனித்துவக் கொள்கைகளுக்கு எதிரான ஒரு போராட்டமான கரூர் ரயில் தடம் புரண்ட போராட்டத்தில் ஈடுபட்டதற்காக கைது செய்யப் பட்டார்.

வகித்த அரசியல் பதவிகள்:

  • ஹாலஸ்யம் 1935 ஆம் ஆண்டில் சட்ட மேலவை உறுப்பினராகப் பணியாற்றினார்.
  • அவர் சட்டமன்ற உறுப்பினராக 1936 ஆம் ஆண்டில் பதவி வகித்தார்.
  • அவர் மாவட்டக் காங்கிரஸ் தலைவராக காங்கிரஸ் கட்சியை வழிநடத்தினார்.
  • அவர் மதராஸ் பல்கலைக்கழகத்தின் ஒரு செனட் உறுப்பினராக பல்கலைக்கழகத்தின் சிறந்த நிர்வாகத்திற்குப் பங்களித்தார்.

மற்ற சாதனைகள்

  • அவர் தனது சொற்பொழிவுக்காக, ஒரு சிறந்தச் சொற்பொழிவாளராக புகழ் பெற்றார்.
  • அவர் மொழிபெயர்ப்பாளராகவும், மொழியியலாளர் ஆகவும், மொழிகளை மேம்படுத்துவதற்கும், அவற்றைப் பாதுகாப்பதற்கும் பங்களித்தார்.

இறப்பு

  • அவர் ஜனவரி 7, 1954 அன்று தனது 58 வயதில் காலமானார்.

72. பெருஞ்சித்திரனார்

பிறப்பு மற்றும் ஆரம்ப கால வாழ்க்கை

  • பிறந்த தேதி: 10 மார்ச் 1933.
  • பிறந்த இடம்: சேலம், தமிழ்நாடு.
  • பெற்றோர்: துரைசாமி, திருமதி. குஞ்சம்மாள் துரைசாமி.

கல்வி மற்றும் ஆரம்ப காலப் பணி

  • ஆரம்ப கால இலக்கியப் பணி:
  • பெருஞ்சித்திரனார் பள்ளிப் பருவத்திலேயே தமிழ்க் கவிதைகளை இயற்றத் தொடங்கினார்.
  • தனது கவிதைத் திறமைக்காகப் புகழ்பெற்ற கவிஞர் பாரதிதாசனின் பாராட்டு உட்பட, பல பாராட்டுகளை அவர் பெற்றார்.

அரசியல் மற்றும் சமூகப் பங்களிப்புகள்

  • 1972 தமிழ்நாடு சுதந்திர மாநாடு: இந்த மாநாட்டைத் தடுக்கும் நோக்கில் அரசாங்கம் விதித்த தடை உத்தரவுகளை மீறி, அவர் மாநாட்டின் தொடக்கத்தை ஏற்பாடு செய்தார்.
  • கடுமையான கட்டுப்பாடுகள் இருந்த போதிலும் அந்த மாநாடு நடத்தப்பட்டது என்பதோடு, பெருஞ்சித்திரனார், மற்ற பங்கேற்பாளர்களுடன் சேர்த்து, அந்தத் தடை உத்தரவை மீறியதால் கைது செய்யப்பட்டார்.
  • அடுத்தடுத்த மாநாடுகள்: 1973 மற்றும் 1974 ஆம் ஆண்டுகளில் தமிழர் சுய நிர்ணய மற்றும் சுயாட்சிக்காக தொடர்ந்து வாதிடுவதற்காக, இதே போன்ற மாநாடுகளை அவர் ஏற்பாடு செய்தார்.

முக்கிய மாநாடுகளில் பங்கேற்பு:

  • தமிழ்நாடு தேசிய சுய நிர்ணய மாநாடு (1990): தமிழர் உரிமைக்கான தனது தொடர் அர்ப்பணிப்பை வலியுறுத்தும் வகையில், தஞ்சையில் தமிழர் தேசிய இயக்கத் தலைவர் ப. நெடுமாறன் நடத்திய மாநாட்டில் அவர் பங்கேற்றார்.

சிறைவாசங்கள்:

  • மொத்த சிறைவாசங்கள்: அவர் தனது வாழ்நாளில் 8 முறை கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப் பட்டுள்ளார்.
  • சிறையில் இருந்த காலம்: அவர் சுமார் 27 மாதங்கள் சிறையில் இருந்துள்ளார்.

இறப்பு

  • அவர் ஜூன் 11, 1995 அன்று தனது 62 வயதில் காலமானார்.

73. பத்மசானி அம்மாள்

பிறப்பு மற்றும் ஆரம்ப கால வாழ்க்கை

  • பிறந்த தேதி: 1897
  • பிறந்த இடம்: மதுரை, தமிழ்நாடு

குடும்பப் பின்னணி

  • தந்தை: ஸ்ரீவில்லிபுத்தூர் சுந்தரராஜ ஐயங்கார்
  • கல்வி: அவர் தந்தை அளித்த ஊக்கத்தால், மதுரையில் உள்ள பெண்கள் பள்ளியில் பயின்றார்.
  • கணவர்: சீனிவாச வரதன்
  • இவர் மானாமதுரையில் உள்ள ஓர் பாடசாலையில் தமிழ் பண்டிதர் மற்றும் ஆசிரியராகப் பணியாற்றினார்.
  • மேலும் இவர் தனது ஆசிரியர் பணியை விடுத்து, மதுரையில் தேசபக்தன் மற்றும் நவசக்தி இதழ்களின் நிருபராகவும், மேலாளராகவும் செயல்பட்டு சுதந்திர இயக்கத்தில் சேர்ந்தார்.

சுதந்திர இயக்கத்தில் ஈடுபாடு

செயல்பாடுகள் மற்றும் பங்களிப்புகள்:

  • பத்மசானி அம்மாள் மற்றும் அவரது கணவர் இருவரும் இணைந்து, சுதந்திரப் போராட்டத்தில் தீவிரமாகப் பங்கெடுத்தனர்.
  • இவர்கள் தேசிய நோக்கத்தை மேம்படுத்துவதற்காக ‘சுப்ரமணிய பாரதி’யின் பாடல்களைப் பாடினர்.
  • இவர்கள் ‘காதி இயக்கத்தில்’ ஈடுபட்டு மதுரையில் நூற்பு சக்கரங்களைத் தயாரித்தனர்.
  • சுப்ரமணியம் சிவாவால் நிறுவப்பட்ட ‘ஸ்ரீ பரத ஆசிரமத்தில்’ சேர்ந்து அதற்கு ஆதரவளித்து, சிவாவின் சிறைவாசத்தின் போது அவர்கள் அதனைப் பராமரித்து வந்தனர்.

போராட்டங்கள் மற்றும் சிறைவாசம்:

  • 1922 ஆம் ஆண்டில் மதுரையில் மதுக்கடைகளுக்கு எதிராகப் போராட்டம் நடத்தியதற்காக சீனிவாச வரதன் கைது செய்யப்பட்டார்.
  • பத்மசானி அம்மாள் காவல் நிலையத்தில் அவரைச் சந்தித்து அங்கு சீனிவாச வரதனின் பணியை அவர் தொடர்வதாக உறுதியளித்தார்.
  • அவர் உப்புச் சத்தியாகிரகம், மதுவிலக்கு இயக்கம், வெளிநாட்டுப் பொருள் விற்கும் கடைகளுக்கு எதிரான போராட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு இயக்கங்களில் பங்கேற்றார்.
  • மேலும் இந்த நடவடிக்கைகளில் ஈடுபட்டதால் அவர் பல ஆண்டுகள் சிறையில் இருந்துள்ளார்.

காங்கிரஸ் ஈடுபாடு:

  • பத்மசானி அம்மாள் இந்திய தேசிய காங்கிரஸில்’ சேர்ந்தார்.
  • அவர் திருப்பூரில் நடந்த ‘மதராஸ் பிரசிடென்சி மாநாட்டில்’ மதுரையைப் பிரதிநிதித்துவப் படுத்தினார்.
  • காங்கிரஸால் வழங்கப்பட்ட ஜமுனாலால் பஜாஜ் என்ற நிதியிலிருந்து, சுதந்திரப் போராட்ட வீரர்களுக்கான நிதியுதவியைப் பெற  அவர் மறுத்துவிட்டார்.

பொது ஈடுபாடுகள்:

  • அவர் பாரதியார், நாமக்கல் ராமலிங்கம் பிள்ளை, சுப்ரமணியம் சிவா ஆகியோர் எழுதிய பாடல்கள் மற்றும் நாடகங்கள் மூலம் சுதந்திரப் போராட்டத்தைப் பரப்புவதில் ஈடுபட்டார்.
  • கோவில்பட்டியில் டாக்டர் வரதராஜுலு நாயுடு, குளித்தலையில் டி.வி.கல்யாணசுந்தரம், ஆய்பாடியில் ராஜாஜி ஆகியோர் ஏற்பாடு செய்த கூட்டங்களில் அவர் உரை நிகழ்த்தினார்.
  • அவர் காந்திஜி தலைமையில் பெல்காமில் நடைபெற்ற காங்கிரஸ் மாநாட்டில் தமிழ்நாட்டைப் பிரதிநிதித்துவப்படுத்தினார்.

74. வாலாஜாபேட்டை கல்யாணராமன்

பிறப்பு மற்றும் ஆரம்ப கால வாழ்க்கை

  • பிறந்த தேதி: 1907
  • பிறந்த இடம்: குட்டியம் கிராமம், வட ஆற்காடு மாவட்டம், தமிழ்நாடு.

ஆரம்ப காலச் செயல்பாடுகள்

  • மாணவராக நிகழ்த்திய செயல்பாடு:
  • கல்யாணராமன் ஆசிரியர் பயிற்சிப் பள்ளியில் மாணவராக இருந்த போது, ​​ஆங்கிலேயர்களின் தடைகளை மீறி இந்திய தேசியக் கொடியை ஏற்றினார்.
  • இந்த மீறல் நடவடிக்கைக்காக அவர் கைது செய்யப்பட்டு ஒரு எச்சரிக்கையுடன் விடுவிக்கப் பட்டார்.

சுதந்திர இயக்கத்தில் ஈடுபாடு

  • சட்ட மறுப்பு இயக்கம் (1932):
  • கல்யாணராமன் சட்ட மறுப்பு இயக்கத்தில் கலந்து கொண்டு ஓராண்டு வேலூர் சிறையில் அடைக்கப் பட்டார்.
  • மேலும் சிறைவாசங்கள்:
  • 1939 ஆம் ஆண்டில் கல்யாணராமன் ஒன்பது மாதங்கள் அலிப்புரம் மற்றும் பெல்லாரி சிறைகளில் பாதுகாப்புக் கைதியாக சிறைவாசம் அனுபவித்தார்.
  • ஆகஸ்ட் இயக்கத்தின் போது அவர் கைது செய்யப்பட்டு வேலூர் மற்றும் தஞ்சாவூர் சிறைகளில் அடைக்கப்பட்டார்.

அரசியல் மற்றும் சமூகப் பங்களிப்புகள்

  • இவர் வட ஆற்காடு காங்கிரஸ் குழுவின் செயலாளராகப் பணியாற்றினார்.
  • மேலும் அவர் பல ஆண்டுகள் மாவட்ட ஆட்சிக் குழு உறுப்பினராகப் பணியாற்றினார்.

சமூகச் சீர்திருத்தங்கள்:

  • அவர் மது அருந்துவதற்கு எதிராக தீவிரமாகப் போராட்டம் நடத்தினார்.
  • இவர் தனது வாழ்நாளின் பெரும்பகுதியை ஹரிஜன மக்களின் நலனுக்காக அர்ப்பணித்தார்.
  • இவர் வட ஆற்காடு ஹரிஜன சேவா சங்கத்தின் தலைவராகப் பணியாற்றினார்.

அங்கீகாரம் மற்றும் மரியாதை

  • மாநில அரசு மரியாதை (1956):
  • சமூக நலன் மற்றும் சுதந்திர இயக்கத்திற்கான இவரதுப் பங்களிப்புகளுக்காக, இவருக்குத் தங்கப் பதக்கம் வழங்கப்பட்டது.
  • தாமரைப் பட்டயம் (1972):
  • இவர் இந்திய சுதந்திரப் போராட்டத்தில் பங்கேற்றதற்காக தாமரைப் பட்டயத்தைப் பெற்றார்.

75. கே.ஆர். நல்லசிவம்

பிறப்பு மற்றும் ஆரம்ப கால வாழ்க்கை

  • பிறந்த தேதி: 1925
  • பிறந்த இடம்: சென்னிமலை, கோயம்புத்தூர் மாவட்டம், தமிழ்நாடு.

சுதந்திர இயக்கத்தில் ஈடுபாடு

  • தனிநபர் சத்தியாகிரக இயக்கம்:
  • அகிம்சை வழியில் ஆங்கிலேயர் ஆட்சிக்கு சவால் விடுவதை நோக்கமாகக் கொண்ட இந்த இயக்கத்தில் நல்லசிவம் தீவிரமாகப் பங்கேற்றார்.

சிறைவாசங்கள்:

  • 1941 மற்றும் 1942: சுதந்திரப் போராட்டத்தில் பங்கேற்றதற்காக நல்லசிவம் இரண்டு முறை சிறைத் தண்டனை பெற்றார்.
  • 1948: விவசாய இயக்கத்தில் ஈடுபட்டதற்காக அவர் ஓராண்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
  • 1957 மற்றும் 1961: சோசலிஸ்ட் கட்சி நடத்திய இயக்கத்தில் சட்டங்களை மீறிப் பங்கேற்றதற்காக அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.

பிற்காலப் பங்களிப்புகள்

  • ஆசிரியர் பணி:
  • 1957 ஆம் ஆண்டு முதல் 1962 ஆம் ஆண்டு வரை, விவசாய மற்றும் சமூகப் பிரச்சினைகளை மையமாகக் கொண்ட “தமிழக விவசாயி” என்ற பத்திரிக்கையின் ஆசிரியராக அவர் பணியாற்றினார்.

76. காஞ்சிபுரம் டாக்டர் பி.எஸ். சீனிவாசன்

பிறப்பு மற்றும் ஆரம்ப கால வாழ்க்கை

  • பிறந்த தேதி: 20 ஜூலை 1893
  • பிறந்த இடம்: பட்டுக்கோட்டை, தஞ்சாவூர் மாவட்டம், தமிழ்நாடு.

கல்வி மற்றும் மருத்துவராக வாழ்க்கை

  • பி.எஸ். சீனிவாசன் பிரசிடென்சி கல்லூரியிலும், சென்னை மருத்துவக் கல்லூரியிலும் கல்வி பயின்றார்.
  • இவர் 1917 ஆம் ஆண்டில் மருத்துவராகப் பட்டம் பெற்றார்.

மருத்துவராகப் பயிற்சி:

  • பி.எஸ். சீனிவாசன் காஞ்சிபுரத்தில் ஒரு மருத்துவராகப் பணியாற்றத் தொடங்கினார்.
  • பின்பு இவர் காஞ்சிபுரத்தில் ஒரு பிரபலமான மருத்துவமனையை நிறுவினார்.

சுதந்திர இயக்கத்தில் ஈடுபாடு

  • செல்வாக்கு மற்றும் தலைமை:
  • பி.எஸ். சீனிவாசன் காந்திஜியின் உரைகளால் ஈர்க்கப்பட்டு, அவர் இந்திய தேசிய இயக்கத்தில் சேர்ந்தார்.
  • ராஜாஜி, சத்தியமூர்த்தி, பக்தவச்சலம், காமராஜ் போன்ற முக்கிய காங்கிரஸ் தலைவர்களுடன் அவருக்கு நெருங்கிய தொடர்பு இருந்தது.

காங்கிரஸ் தலைமை:

  • பி.எஸ். சீனிவாசன் செங்கல்பட்டு மாவட்டக் காங்கிரஸ் குழுவின் முதல் செயலாளராகவும், பின்னர் தலைவராகவும் பணியாற்றினார்.
  • சுதந்திரப் போராட்டத்தில் தீவிரமாகப் பங்கேற்றதற்காக நான்கு முறை கைது செய்யப்பட்டு, அவர் பல ஆண்டுகள் சிறையில் இருந்தார்.

அரசியல் மற்றும் நிர்வாகப் பாத்திரங்கள்

  • சட்டமன்ற மற்றும் நகராட்சிப் பணிகள்:
  • பி.எஸ். சீனிவாசன் 1937 ஆம் ஆண்டில் சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
  • இவர் 1949 ஆம் ஆண்டில் மதராஸ் பிரசிடென்சி கவுன்சில் உறுப்பினரானார்.
  • இவர் காஞ்சிபுரம் நகராட்சி உறுப்பினராக 25 ஆண்டுகள் பணியாற்றினார்.
  • இவர் 1938 ஆம் ஆண்டு முதல் 1958 ஆம் ஆண்டு வரை காஞ்சிபுரம் நகராட்சித் தலைவராகப் பணியாற்றினார்.

இறப்பு

  • இவர் 1962 ஆம் ஆண்டில் தனது 69 வது வயதில் காலமானார்.

77. ஆரணி சுப்ரமணிய சாஸ்திரி

பிறப்பு மற்றும் ஆரம்ப கால வாழ்க்கை

  • பிறந்த ஆண்டு: 1879
  • பிறந்த இடம்: ஆரணி கிராமம், வட ஆற்காடு மாவட்டம், தமிழ்நாடு.
  • பெற்றோர்: மங்கலம் விஸ்வநாத சாஸ்திரி மற்றும் வெங்கம்மா.

கல்வி மற்றும் சட்டப் பணி

  • கல்வி: சுப்ரமணிய சாஸ்திரி சட்டத்தில் பட்டப் படிப்பை முடித்தார்.
  • சட்டப் பணி: அவர் வெற்றிகரமாக ஒரு வழக்கறிஞராகி  தனது தொழிலின் மூலம் புகழ் மற்றும் செல்வத்தைப் பெற்றார்.

அரசியல் மற்றும் சமூகப் பங்களிப்புகள்

  • காங்கிரஸ் தலைமை:
  • இவர் 1904 ஆம் ஆண்டில் வட ஆற்காடு காங்கிரஸ் குழுவின் செயலாளராகப் பணியாற்றினார்.
  • இவர் 1912 ஆம் ஆண்டில் பிபின் சந்திர பால் தலைமையில் நடைபெற்ற சென்னை காங்கிரஸ் குழுவின் ஆறாவது அரசியல் மாநாட்டை ஏற்பாடு செய்தார்.

சுதந்திர இயக்கத்தில் ஈடுபாடு:

  • இவர் 1919 ஆம் ஆண்டில் காந்திஜியின் சத்தியாகிரக இயக்கத்தில் சேர்ந்தார்.
  • மேலும் இவர் ஒத்துழையாமை இயக்கத்தில் இணைந்து நீதிமன்றத்தைப் புறக்கணிக்க, 1920 ஆம் ஆண்டில் வழக்கறிஞர் தொழிலைக் கை விட்டார்.
  • அவர் 1920 ஆம் ஆண்டில் நாக்பூர் காங்கிரஸ் மாநாட்டின் போது உருவாக்கப்பட்ட மொழியியல் அடிப்படையிலான காங்கிரஸ் குழுவின் முதல் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
  • அவர் ராஜாஜியுடன் இணைந்து வேலூரில் பொதுக்கூட்டம் நடத்தியதற்காக 1921 ஆம் ஆண்டில் கைது செய்யப்பட்டு வேலூர் சிறையில் அடைக்கப்பட்டார்.

கல்விப் பங்களிப்புகள்

  • பள்ளி அறக்கட்டளை: இவர் வேலூரில் ஒரு பள்ளியைத் தொடங்கினார், அது தற்போது வரை தொடர்ந்து செயல்பட்டு வருகிறது.

                -------------------------------------

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்