TNPSC Thervupettagam

தமிழ்நாட்டின் விடுதலைப் போராட்ட வீரர்கள் பாகம் – 16

September 22 , 2024 114 days 680 0

தமிழ்நாட்டின் விடுதலைப் போராட்ட வீரர்கள் பாகம் – 16

(For English version to this please click here)

84. வைரப்பன்

பிறப்பு மற்றும் ஆரம்ப கால வாழ்க்கை

  • பிறந்த தேதி: 22 மே 1906.
  • பிறந்த இடம்: வேதாரண்யம், தமிழ்நாடு.
  • பெற்றோர்: காளிதீதன், வைரம்மாள்.

சுதந்திர இயக்கத்தில் ஈடுபாடு

  • வைரப்பன் மகாத்மா காந்தியின் கொள்கைகள் மற்றும் சித்தாந்தங்களால் ஆழமாக ஈர்க்கப் பட்டார்.
  • இவர் சர்தார் வேதரத்தினம் பிள்ளையுடன் நெருங்கிய தொடர்பைப் பேணி வந்தார்.

உப்புச் சத்தியாகிரகம்:

  • காந்திஜி வடக்கே உப்பு வரியை எதிர்த்துப் போராட்டம் நடத்திக் கொண்டிருந்த போது, இவர்  அகஸ்தியப் பள்ளி உப்புச் சத்தியாகிரகத்தில் கலந்து கொண்டார்.

அங்கீகாரம் மற்றும் மரியாதை

  • தாமரைப் பட்டையம் (1972):
  • 25வது சுதந்திர தின விழாவில் முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியிடமிருந்து தாமரைப் பட்டையம் விருதை வைரப்பன் பெற்றார்.
  • சிலை:
  • சுதந்திரப் போராட்டத்தில் அவர் ஆற்றியப் பங்களிப்பைக் கவுரவிக்கும் வகையில், வேதாரண்யத்தில் உள்ள உப்புச் சத்தியாகிரக கட்டிடத்தில் 2010 ஆம் ஆண்டு இவருக்கு வெண்கலச் சிலை நிறுவப்பட்டது.

85. லட்சுமி கிருஷ்ணன்

பிறப்பு மற்றும் ஆரம்ப கால வாழ்க்கை

  • பிறந்த இடம்: கோயம்புத்தூர், தமிழ்நாடு.
  • கல்வித்தகுதி: பள்ளியில் எட்டாம் வகுப்பு வரை பயின்றார்.
  • பர்மாவுக்கு இடமாற்றம்: பள்ளிப் படிப்பை முடித்தவுடன் தன் தந்தையுடன் பர்மாவுக்கு இடம் பெயர்ந்தார்.

சுதந்திர இயக்கத்தில் ஈடுபாடு

  • இந்திய தேசிய ராணுவம்:
  • இவர் இந்திய தேசிய ராணுவத்தின் ஜான்சி படைப் பிரிவில் சேர்ந்தார்.
  • நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் தலைமையில் ஜெயவாடியில் ஆறு மாதங்கள் தன்னார்வத் தொண்டு செய்து பயிற்சியும் பெற்றார்.
  • அவர் ராணி ஜான்சி படைப் பிரிவில் பிரிவுத் தளபதியாக பணியாற்றினார்.
  • போஸின் மரணத்திற்குப் பிறகு அவர் தனது சொந்தக் கிராமத்திற்குத் திரும்பினார்.

86. மு. பக்தவத்சலம்

பிறப்பு மற்றும் ஆரம்ப கால வாழ்க்கை

  • பக்தவத்சலம், 1897 ஆம் ஆண்டு அக்டோபர் 9 ஆம் தேதி, சென்னை மாகாணத்தின் செங்கல் பட்டு மாவட்டத்தில் உள்ள நசரத்பேட்டையில் பிறந்தார்.
  • அவர் இந்திய தேசிய காங்கிரஸின் உறுப்பினராக இருந்தார்.

கல்வி:

  • அவர் தனது ஆரம்பக் கல்வியை சென்னையில் உள்ள கிறிஸ்டியன் மிஷன் பள்ளியிலும், பி.எஸ். உயர்நிலைப் பள்ளியிலும் பயின்றார்.
  • அவர் 1916 ஆம் ஆண்டு மதராஸ் பிரசிடென்சி கல்லூரியில், பொருளாதாரத்தில் பட்டம் பெற்றார்.
  • பிறகு, அவர் சென்னை சட்டக் கல்லூரியில் சேர்ந்து அல்லாடி கிருஷ்ணசாமி ஐயரிடம் வழக்கறிஞராகப் பயிற்சி பெற்றார்.

அரசியல் மற்றும் சுதந்திர இயக்கத்திற்கான பணிகள்:

  • ஆரம்ப கால அரசியல் ஈடுபாடு: இவர் கல்லூரியில் படிக்கும் போது; மகாத்மா காந்தியால் ஈர்க்கப்பட்டு, டாக்டர் அன்னி பெசன்ட் தலைமையிலான ஹோம் ரூல் இயக்கத்தில் சேர்ந்தார்.

சுதந்திரப் போராட்டம்:

  • பக்தவத்சலம் ரௌலட் மசோதாவுக்கு எதிரான போராட்டத்தில் கலந்து கொண்டார்.
  • அவர் 1921 ஆம் ஆண்டில் சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டார்.
  • அவர் ஒத்துழையாமை இயக்கத்தில் தீவிரமாக ஈடுபட்டு 1932 ஆம் ஆண்டில் சிறையில் அடைக்கப்பட்டார்.
  • அவர் 1933 ஆம் ஆண்டு வரை “இந்தியா” என்ற தமிழ் நாளிதழை நிர்வகித்தார்.
  • அவர் தனிநபர் சத்தியாகிரகப் போராட்டத்தின் போது 9 மாதங்கள் சிறையில் இருந்தார் (1940-41).
  • அவர் வெள்ளையனே வெளியேறு இயக்கத்தின் போது 2 ஆண்டுகள் சிறையில் இருந்தார் (1942).

அரசியலில் பங்கு:

  • அவர் 1937 ஆம் ஆண்டில் சென்னை மாநகராட்சியின் துணை மேயராக பணியாற்றினார், அதே ஆண்டு ராஜாஜியின் அமைச்சகத்தில் பாராளுமன்றச் செயலாளராக நியமிக்கப்பட்டார்.
  • 1946 ஆம் ஆண்டில் அவர் அமைச்சரவையில் சேர்ந்தார் மற்றும் 1963 ஆம் ஆண்டு வரை அவர் பல்வேறு அமைச்சர் பதவிகளை வகித்தார்.
  • அவர் மார்ச் 24, 1947 முதல் ஏப்ரல் 6, 1949 வரை பொதுப் பணித் துறை மற்றும் தகவல்துறை அமைச்சராகவும், ஏப்ரல் 13, 1954 முதல் மார்ச் 15, 1962 வரை வேளாண்மை அமைச்சராகவும் பணியாற்றினார்.
  • அவர் ஏப்ரல் 13, 1957 முதல் மார்ச் 15, 1962 வரை உள்துறை அமைச்சராகவும் இருந்தார், மேலும் மார்ச் 3, 1962 முதல் அக்டோபர் 2, 1963 வரை நிதி மற்றும் கல்வி அமைச்சராகவும் பதவி வகித்தார்.
  • அவர் அக்டோபர் 2, 1963 ஆம் ஆண்டில் சென்னை மாநிலத்தின் முதலமைச்சரானார், மார்ச் 5, 1967 வரை அந்தப் பதவியை வகித்தார்.
  • தனது ஆட்சிக் காலத்தில், அவர் மதுரைப் பல்கலைக்கழகத்தை நிறுவியதோடு, குந்தா மற்றும் பெரியாறு நீர்மின் திட்டங்களையும் திட்டமிட்டுச் செயல்படுத்தினார்.
  • முதன் முதலில் மாநில அளவிலான நெடுஞ்சாலைத் துறையையும் அவர் உருவாக்கினார்.
  • கூடுதலாக, அவர் கோயில் கட்டிடக்கலை, இசை மற்றும் சிற்பக் கலையை மேம்படுத்தும் போது, கோயில்களின் நிர்வாகத்தையும் மேம்படுத்தினார்.

முக்கியப் பங்களிப்புகள்:

  • அவர் கோயம்புத்தூர் வேளாண்மைக் கல்லூரியில் கல்வி பயின்ற நிலையில் பின்னாளில் அந்தக் கல்லூரி ஒரு முதன்மையான நிறுவனமாக வளர்ந்தது.
  • கோயில் நிர்வாகத்தைப் பொறுத்தமட்டில், யுனெஸ்கோவின் உதவியுடன் அவர் கோயில்களைப் புதுப்பித்து, பெரிய அளவிலான சீரமைப்புத் திட்டங்களை மேற்கொண்டார்.

இந்தி எதிர்ப்புப் போராட்டம்:

  • அவர் ஹிந்தியைக் கட்டாய மொழியாக கொண்டு வருவதை ஆதரித்தார்.
  • அவர் ஆங்கிலம், இந்தி, தமிழ் ஆகிய மூன்று மொழி கொள்கையை நடைமுறைப்படுத்தினார்.

வெளியீடுகள்:

  • எழுதிய புத்தகங்கள்:
  • நியாயமற்ற இந்தி எதிர்ப்புக் கொள்கை: மு. பக்தவத்சலம் மொழிப் பிரச்சினை பற்றிப் பேசுகிறார் (1978, கே. பெருமாள் உடையார் உடன் இணைந்து எழுதியவர்)
  • மேற்கு ஆசியா: பிரச்சனைகள் மற்றும் வாய்ப்புகள் (1985)

குடும்பத் தொடர்புகள்:

  • மகள்: சரோஜினி வரதப்பன், சமூக ஆர்வலர்.
  • பேத்தி: ஜெயந்தி நடராஜன், அரசியல்வாதி மற்றும் முன்னாள் மத்திய அமைச்சர்.

இறப்பு

  • இவர் பிப்ரவரி 13, 1987 ஆம் ஆண்டில் தனது 89வது வயதில் காலமானார் என்ற நிலையில்  பெரியவர் பக்தவத்சலம் என்ற பெயருடன் நினைவிடத்தில் புதைக்கப் பட்டுள்ளார்.

87. எஸ். மஞ்சு பாஷினி

ஆரம்ப கால வாழ்க்கை:

  • மஞ்சுபாஷினி செப்டம்பர் 24, 1906 ஆம் ஆண்டில் பிறந்தார் என்பதோடு அவர் ஒரு பழமைவாத மற்றும் வசதியான குடும்பத்தில் இருந்து வந்தவர் ஆவார்.
  • அவர் எழும்பூரில் உள்ள பிரசிடென்சி பெண்கள் பள்ளியில் எட்டாம் வகுப்பு வரை படித்தார்.
  • அவர் தனது 12வது வயதில் சுப்பிரமணியம் என்பவரை மணந்தார் என்ற நிலையில், பின்னாளில்  சுப்பிரமணியம் வழக்கறிஞராகவும், சென்னை உயர் நீதிமன்ற நீதிபதியாகவும் ஆனார்.
  • அவர் தமது கணவரின் ஆதரவுடன் எஸ்.எஸ்.எல்.சி பயின்றார்.

சுதந்திரப் போராட்டம்:

  • காந்திஜியின் சுதந்திர அழைப்பால் ஈர்க்கப்பட்ட அவர், 1942 ஆம் ஆண்டில் வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் தீவிரமாக ஈடுபட்டு சிறைவாசம் அனுபவித்தார்.
  • அவர் உப்புச் சத்தியாகிரகம், தம்பு செட்டி தெருவில் மேற்கொள்ளப் பட்ட வெளிநாட்டுப் பொருட்கள் எரிப்பு மற்றும் ராஜாஜி ஏற்பாடு செய்த வேதாரண்யம் உப்புச் சத்தியாக்கிரக ஊர்வலத்தில் பங்கேற்றார்.
  • அம்மு சுவாமிநாதனுடன் சேர்ந்து ஆண்டுகள் வேலூர் சிறையில் கழித்த அவர், 1941-42 ஆம் ஆண்டில் பர்மிய அகதிகளுக்கு மறுவாழ்வு அளிக்க சென்னையில் ஒரு முகாமை ஏற்பாடு செய்தார்.

சமூக நலன் மற்றும் பங்களிப்புகள்:

  • அவர் தி.நகரில் காங்கிரஸின் செயல்பாட்டு உறுப்பினராக இருந்தார், அங்கு அவர் கூட்டங்கள் மற்றும் மாநாடுகளை ஏற்பாடு செய்தார், 10,000 சேவா தள் (பெண்கள் தொண்டர்கள்) அமைப்பில் பயிற்சி அளித்தார்.
  • கூடுதலாக, சென்னையிலுள்ள ஹிந்திப் பிரச்சாரச் சபையில் அவர் காந்திஜியின் பிரார்த்தனைக் கூட்டத்தை ஏற்பாடு செய்தார்.

பால மந்திர்:

  • கே. காமராஜால் ஊக்குவிக்கப்பட்ட அவர், 1949 ஆம் ஆண்டு பால மந்திரை நிறுவினார் என்பதோடு அவர் இதனைக் காங்கிரஸ் மைதானத்தில் இரண்டு குடிசைகளில் இருந்த இரண்டு குழந்தைகளுடன் தொடங்கினார்.
  • இதன் முதல் செயற்குழுவின் தலைவராக காமராஜ் பணியாற்றினார் என்ற நிலையில் தாம் இறக்கும் வரை அதன் கெளரவப் பொதுச் செயலாளராக மஞ்சுபாஷினி செயல்பட்டார்.
  • அவரது முயற்சிகளால் பல சமூக சேவகர்கள் பாலா மந்திரில் தங்கள் நேரத்தை செலவிடத் தூண்டியது.

மரபு:

  • அவர் செப்டம்பர் 23, 1996 அன்று காலமானார்.

88. ஊத்தம்பட்டி புன்னைவன அய்யா சௌந்தர பாண்டியன் நாடார்

ஆரம்ப கால வாழ்க்கை மற்றும் பின்னணி:

  • தமிழ்நாட்டின் திண்டுக்கல்லில் உள்ள பட்டிவீரன் பட்டியில் செப்டம்பர் 15, 1893 ஆம் ஆண்டில் பிறந்த இவர், ஒரு மதிப்புமிக்க காபி பயிரிடும் தோட்டக் குடும்பத்தைச் சேர்ந்தவர்.
  • இவரது குடும்பத்துக்கு கொடைக்கானல் அருகே எஸ்டேட் உள்ளது.
  • இவர் நாடார் சமூகத்தின் முடிசூடா மன்னராக அறியப்பட்டார்.

அரசியல் வாழ்க்கை:

  • அவர் பி.டி. ராஜனால் பரிந்துரைக்கப்பட்ட பின்பு, 1920 ஆம் ஆண்டு முதல் 1937 ஆம் ஆண்டு வரை மதராஸ் சட்ட சபையில் முதல் நாடார் சமூகத்தின் உறுப்பினராகப் பணியாற்றினார்.
  • அவர் நீதிக்கட்சியிலும், சட்ட சபையிலும் நாடார் சமூகத்தைப் பிரதிநிதித்துவப் படுத்தினார்.
  • கூடுதலாக, அவர் 1928 ஆம் ஆண்டு முதல் 1930 ஆம் ஆண்டு வரை ராமநாதபுர மாவட்ட வாரியத்தின் தலைவராகவும், 1943 ஆம் ஆண்டு முதல் 1947 ஆம் ஆண்டு வரை மதுரை மாவட்ட வாரியத்தின் தலைவராகவும் இருந்தார்.

சமூகச் செயல்பாடுகள்:

  • அவர் பெரியார் ஈ.வே.ராமசாமி நிறுவிய சுயமரியாதை இயக்கத்தில் சேர்ந்தார்.
  • அவர் 1929 ஆம் ஆண்டில் நடைபெற்ற முதல் சுயமரியாதை மாநாட்டின் தலைவராக தேர்ந்தெடுக்கப் பட்டார்.
  • கூடுதலாக, அவர் தலித்துகள் மேம்பாட்டிற்காக பாடுபட்டார் என்பதோடு கமுதி இறக்குமதி வரியையும் அவர் வெற்றிகரமாக ரத்து செய்தார்.

சமூகச் சீர்திருத்தம்:

  • அவர் 1937 ஆம் ஆண்டு முதல் 1940 ஆம் ஆண்டு வரை இந்தி எதிர்ப்புப் போராட்டத்திற்கு நிதியுதவி அளித்ததாகக் கூறப்படுகிறது.

பிற்கால வாழ்க்கை மற்றும் மரபு:

  • சென்னையில் உள்ள பாண்டி பஜார், சௌந்தரபாண்டியன் நாடார் நினைவாக பெயரிடப்ப ட்டதாக நம்பப்படுகிறது.
  • கலைஞர் கருணாநிதி ஆட்சியின் போது பாண்டி பஜார் நுழைவாயிலில் நாகப்பா ஜெகநாதனால் செதுக்கப்பட்ட இவருடைய சிலையானது திறந்து வைக்கப் பட்டது.
  • பின்னர் பஜாரின் பெயர் "சௌந்தர  பாண்டியன் அங்காடி" என புதுப்பிக்கப் பட்டது.

சமூகப் பங்களிப்புகள்:

  • அவர் காயமொழியில் நாடார் சமூகத்தினருக்கான பள்ளிகள் மற்றும் நிறுவனங்களை அமைப்பதில் தீவிரமாக இருந்தார்.

இறப்பு:

  • அவர் பிப்ரவரி 22, 1953 ஆம் ஆண்டில் காலமானார்.

89. சர்தார் வேதரத்தினம் பிள்ளை

ஆரம்ப கால வாழ்க்கை மற்றும் பின்னணி:

  • வேதரத்தினம் பிள்ளை பிப்ரவரி 25, 1897 அன்று தமிழ்நாட்டின் வேதாரணியில் பிறந்தார்.
  • இவர் உப்பு வியாபாரிகளான அப்பாக்குட்டி பிள்ளை மற்றும் தங்கம் ஆச்சி ஆகியோரின் மகன் ஆவார்.
  • சர்தார் வேதரத்தினம் பிள்ளை சைவப் பிள்ளை சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதோடு தமிழ்க் கவிதைகள் இயற்றுவதிலும், சிவன் கோயில்களை நிர்வகிப்பதிலும் அவர் பெயர் பெற்றவர் ஆவார்.
  • கடவுள் பக்தியுள்ள மற்றும் தேசபக்தியுள்ள குடும்பத்தில் வளர்ந்த அவர், மகாத்மா காந்தி மற்றும் சர்தார் படேல் போன்ற தலைவர்களால் ஆழமாக ஈர்க்கப்பட்டார்.

சுதந்திரப் போராட்டம்

  • இளம் வயதிலேயே வேதரத்தினம் பிள்ளை இந்தியாவின் சுதந்திரப் போராட்டத்தில் தீவிரமாகச் ஈடுபட்டார்.
  • அவர் காதிக்காக பெருமளவில் வாதிட்டதோடு உள்ளூர்ப் பொருட்களை ஊக்குவிக்கும் சுதேசி இயக்கத்திலும் பங்கேற்றார்.
  • 1930 ஆம் ஆண்டில், காந்தியின் உப்புச் சத்தியாக்கிரகத்தின் போது அவரும், ராஜாஜியும் உள்ளூர் அணிவகுப்புக்குத் தலைமை தாங்கினர்.
  • ஆங்கிலேய ஆட்சிக்கு எதிராக அவர் மேற்கொண்ட நடவடிக்கையானது, அபராதம், சிறைத் தண்டனை மற்றும் அவரது சொத்துக்களைப் பறிமுதல் செய்தல் உள்ளிட்ட கடுமையான விளைவுகளை ஏற்படுத்தியது.

அங்கீகாரம் மற்றும் செயல்பாடு

  • 1931 ஆம் ஆண்டு, சுதந்திரப் போராட்டத்திற்கு ஆற்றியப் பங்களிப்பிற்காக வேதரத்தினம் பிள்ளைக்கு "சர்தார்" என்ற பட்டம் வழங்கப்பட்டது.
  • அவர் 1942 ஆம் ஆண்டில் முக்கிய தலைவர்கள் கைது செய்யப்பட்ட பிறகு, காந்திஜியின் போதனைகள் மற்றும் முயற்சிகளை நிலை நிறுத்த அவர் அயராது உழைத்தார்.
  • அவர் 1944 ஆம் ஆண்டில் கஸ்தூரிபா காந்தியின் மரணத்தைத் தொடர்ந்து, பெண்கள் மற்றும் குழந்தைகள் நல மையங்களுக்கு ஆதரவளிக்க நிதி கோரினார்.
  • அவர் 1946 ஆம் ஆண்டில் கஸ்தூரிபா காந்தி கன்யா குருகுலம் என்ற அமைப்பை நிறுவி ஏழைப் பெண்களுக்கு இலவசக் கல்வி மற்றும் தங்குமிட வசதியை அளித்தார்.

சமூகப் பங்களிப்புகள்

  • வேதரத்தினம் பிள்ளை, தாழ்த்தப்பட்ட சமூகத்தினருடன் பணியாற்றியதற்காக அங்கீகரிக்கப் பட்டு, தமிழக அரசிடமிருந்து தங்கப் பதக்கம் பெற்றார்.
  • அவர் மூன்று முறை சட்டமன்ற உறுப்பினராக பணியாற்றியதோடு, அந்தச் சமயத்தில், அவர் தனது முழு சம்பளத்தையும் ஸ்ரீ ராமகிருஷ்ணா மிஷனுக்கு நன்கொடையாக வழங்கினார்.
  • தீவிரத் தேசியவாதியான அவர், தமிழ் மொழியைப் போற்றும் அதே வேளையில், ஹிந்தியை ஒருங்கிணைக்கும் மொழியாக அமைக்க வாதிட்டார்.

பிற்கால வாழ்க்கை மற்றும் மரபு

  • வேதரத்தினம் பிள்ளை 1961 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 24 ஆம் தேதி சட்டமன்றத்தில் பணியில் இருந்த போதே காலமானார்.
  • 1998 ஆம் ஆண்டில், அவரது 101வது பிறந்தநாளைக் குறிக்கும் வகையில் அவரது நினைவாக அஞ்சல்தலை வெளியிடப்பட்டது.

                -------------------------------------

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்