TNPSC Thervupettagam

தமிழ்நாட்டில் LGBT சமூகத்தினரின் உரிமைகள் - பகுதி 2

November 29 , 2023 409 days 689 0

(For English version to this please click here)

தமிழ்நாட்டில் LGBT சமூகத்தினரின் உரிமைகள்

சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவு

  • சொற்களஞ்சியம் - இச்சமூகத்தினரைப் பற்றிக் கண்ணியமான முறையில் உரையாடுவதற்கான விதிமுறைகளின் பட்டியலைக் கொண்டு வருமாறு அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

திருநங்கைகள் (உரிமைகள் பாதுகாப்பு) தொடர்பான விதிகள்

  • இவ்விதிகளைப் பொறுத்தவரை, சமூக நலத்துறை இயக்குனரிடமிருந்து வரைவு விதிகளும் பெறப்பட்டதோடு, அதற்கு 2019 ஆம் ஆண்டு மத்தியச் சட்டத்தின்  கீழான ஆய்வுகளும் மற்றும் இணக்கங்களும் தேவைப்படுகிறது.
  • இந்தச் சுற்றறிக்கையினை முதலமைச்சருக்கு அனுப்புவதற்கு முன்னதாக சட்டத் துறையின் ஒப்புதலையும் பெற வேண்டும்.

திருநங்கைகள் தொடர்பான கொள்கை

  • திருநங்கைகள் சமூகத்தினைச் சேர்ந்த நபர்களுக்கான பிரத்தியேக கொள்கையினைத் தயாரிக்குமாறு திருநங்கைகள் நல வாரியச் செயலாளருக்கு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.
  • மாநிலத் திட்டக் குழுவினைச் சேர்ந்த அதிகாரிகள் உட்பட சம்பந்தப்பட்ட அனைத்துப் பங்குதாரர்களுடனும் கலந்தாலோசித்து இந்தக் கொள்கைகளானது உருவாக்கப் படும்.

சொற்களஞ்சியம்

  • சமூக நலம் மற்றும் பெண்களுக்கு அதிகாரமளித்தல் துறையின் சார்பில் தமிழ்நாடு அரசிதழில் அதற்குரிய விதிமுறைகளின் படி சொற்களஞ்சியமானது வெளியிடப் பட்டது.
  • ஊடகத்துறையினர், LGBTQIA சமூகத்தினைச் சேர்ந்த உறுப்பினர்களை எவ்வாறு சரியாக விவரிப்பது என்பது பற்றியதாக இச்சொற்களஞ்சியம் உள்ளது.
  • அதற்கு சட்டரீதியான ஆதரவுகளும் வழங்கப்படும்.
  • எந்தவொரு மன்றமும் LGBTQIA சமூகத்தினரைப் பற்றி உரையாற்றும் போதெல்லாம், அரசிதழில் குறிப்பிடப்பட்டுள்ள விதிமுறைகளைப் பயன்படுத்தி மட்டுமே அவற்றை விவரிக்க வேண்டியது கட்டாயமாகும் என்று குறிப்பிடப் பட்டுள்ளது.

இந்த நடவடிக்கைகள் எதைக் குறிப்பிடுகிறது?

  • ஒரே பாலின உறவுகளைக் குற்றமாக கருதும் இந்தியத் தண்டனை சட்டத்தின் 377வது பிரிவினை 2018 ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றமானது ரத்து செய்தது.
  • ஆனால் LGBTQIA சமூகத்தினைச் சேர்ந்த உறுப்பினர்கள் நாட்டில் பரவலான பாகுபாடுகளை தொடர்ந்து எதிர்கொண்டு வருகின்றனர்.

கண்ணியம் மற்றும் மரியாதை

  • LGBTQIA சமூகத்தைச் சேர்ந்த நபர்களைப் பற்றி உரையாடும் போது அதிக கண்ணியத்துடனும் மரியாதையுடனும் நடத்துவதற்கு இந்த முயற்சிகள் மேற்கொள்ளப் படுகிற.

உள்ளடக்கம்

  • LGBTQIA சமூகத்தைச் சேர்ந்த நபர்கள் சமூகத்தின் முக்கியமான செயல்பாடுகளிலிருந்து ஓரங்கட்டப்பட்டுள்ளனர்.
  • அவர்கள் தொடர்பான கொள்கைகள் மற்றும் விதிகளை நடைமுறைப் படுத்துவதற்கான முன்னுரிமையினை அளிக்க வேண்டிய நேரம் இது என்று குறிப்பிடப் பட்டது.

பன்முகத்தன்மையின் பிரதிபலிப்பு

  • இச்சொற்களஞ்சியமானது சமூகத்தின் பன்முகத் தன்மையைப் பிரதிபலிக்கிறது.

சமூகத்தின் முன்னேற்றம்

  • இது LGBTQIA சமூகத்தினைச் சேர்ந்த நபர்களின் மேம்பாட்டிற்கும் உதவுகிறது.

இது ஒரு முன்மாதிரியாக செயல்படுகிறது.

  • தமிழக அரசு வெளியிடும் இக்கலைச்சொற்கள் தமிழ் பேசும் நபர்கள் வாழும் உலகின் அனைத்துப் பகுதிகளுக்கும் சென்று சேரும்.

மூன்றாம் பாலினத்தவரின் குறிப்பிடத்தக்கச் சாதனைகள்

  • 30 வயதான திருநங்கை சமூக ஆர்வலரான கிரேஸ் பானு என்பவர் சமுதாய நலனுக்காக ஆற்றியச் சேவைகளுக்காக தமிழக அரசால் பாராட்டப்பட்டு, 2021 ஆம் ஆண்டில் முதன்முதலில் ‘சிறந்த மூன்றாம் பாலினத்தவர்’ விருதினைப் பெற்றுள்ளார்.
  • சென்னையில் நடைபெற்ற சுதந்திர தின விழாவின் நிகழ்ச்சியில் அவருக்கு இவ்விருதானது வழங்கப்பட்டது.

​​​​​​​

  • சமூக நலம் மற்றும் பெண்களுக்கு அதிகாரமளித்தல் துறையால் இந்த விருதானது வழங்கப்பட்டது.
  • திருநங்கைகள் மற்றும் அவர்களைச் சேர்ந்த சமூகத்தினருக்காக அவர்கள் ஆற்றியப் பங்களிப்பை அங்கீகரிக்கும் வகையில் இது முதன்முறையாக தமிழக அரசால் அறிமுகப் படுத்தப்பட்டுள்ளது.
  • தூத்துக்குடியைச் சேர்ந்த பானு என்ற நபர், ஒரு பெண் என்ற பாலின விழிப்புணர்வின் காரணமாக குடும்பத்தினையும், IT துறையில் பணியாற்றும் போது ஏற்பட்ட விரும்பத்தகாத அனுபவங்களால் தமது பணியினையும் விட்டு வெளியேறி, இச்சமூகத்தினருக்காகப் பணியாற்றத் தொடங்கினார்.
  • இருப்பினும், அவரது கஷ்டங்களும் கடின உழைப்பும் இந்தியாவின் முதல் காவல் துணை ஆய்வாளரான பிரித்திகா யாஷினி உட்பட பல திருநங்கை சாதனையாளர்களுக்கு ஒரு முன்மாதிரியாக மாறியது.

​​​​​​​

  • திருநங்கைகளுக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பு உரிமைகளை உறுதி செய்ததற்காக மாநிலத்தில் பல்வேறு விருதுகளைப் பெற்றுள்ளார்.
  • 2022 ஆம் ஆண்டிற்கான சிறந்த திருநங்கைக்கான விருதினை விழுப்புரத்தைச் சேர்ந்த 53 வயதினை அடைந்த மர்லிமா முரளிதரனுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் வழங்கினார்.
  • விருதின் ஒரு பகுதியாக 1 லட்ச ரூபாய்க்கான ரொக்கப் பரிசும் வழங்கப்படுகிறது.
  • கடந்த 25 வருடங்களாக மூன்றாம் பாலினத்தவரின் மேம்பாட்டிற்காக சிறப்பாகப் பணியாற்றியதற்காக சமூக நலம் மற்றும் பெண்களுக்கு அதிகாரமளித்தல் துறையின் விருதினைச் செஞ்சியைச் சேர்ந்த மர்லிமா அவர்கள் பெற்றார்.

​​​​​​​

  • 1995 ஆம் ஆண்டு குடிமுறைப் பொறியியலில் இளங்கலைப் படிப்பினை முடித்தார்.
  • திருநங்கைகள் அங்கீகாரம் பெறப் போராடத் தொடங்கும் போது இவரும் தனது வாழ்க்கையினைத் தொடங்கினார்.
  • அவர் செஞ்சியில் கட்டுமானத் தொடர்பு வணிகம் தொடர்பான ஒரு அலுவலகத்தை நடத்தி வருகிறார்.

​​​​​​​

  • இன்றுவரையில், பிச்சை எடுக்கவோ அல்லது பாலியல் நோக்கத்திற்கான வியாபாரத்தில் ஈடுபடவோ விரும்பம் இல்லாத 70 திருநங்கைகளுக்கு அவர் உதவியுள்ளார்.
  • மேலும் எட்டு மாற்றுத் திறனாளிகளுக்கு பழச்சாறு கடைகள், மாடுகள், ஆடுகள் மற்றும் கோழிகளை வளர்த்தல் போன்ற வசதிகளைத் தனது சொந்தச் செலவிலிருந்து ஏற்பாடு செய்து தந்துள்ளார்.
  • அவர் பலருக்கு வேலைகளை ஏற்பாடு செய்து வழங்கியுள்ளதோடு, மேலும் செஞ்சி, கண்டாச்சிபுரம் மற்றும் திருவண்ணாமலையைச் சேர்ந்த மூன்று மாற்றுத் திறனாளிகளுக்கு சொந்தமாக வீடு கட்டத் தேவையான திட்டங்களை இலவசமாக வழங்கியும், மேலும் கட்டுமானத்திற்கான நிதியையும் ஏற்பாடு செய்து கொடுத்தும் உதவி செய்துள்ளார்.

​​​​​​​

  • 2023 ஆம் ஆண்டுக்கான சிறந்த திருநங்கைக்கான விருதானது வேலூரைச் சேர்ந்த B ஐஸ்வர்யா (47) என்பவருக்கு, திருநங்கைகளுக்கு அவர் ஆற்றிய சேவையினைப் பாராட்டி முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் வழங்கினார்.
  • சமூக நலம் மற்றும் மகளிர் உரிமைத் துறை சார்பில் மாநிலச் தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அவருக்கு ரூ.1 லட்சம் ரொக்கப் பரிசினை முதல்வர் ஸ்டாலின் அவர்கள் வழங்கினார்.
  • திருநங்கைகளுக்கு முன்மாதிரியாக B ஐஸ்வர்யா அவர்கள் இருந்து வருகிறார்.
  • கடந்த 22 ஆண்டுகளாக திருநங்கைகளின் முன்னேற்றத்திற்காக தனது கிராமப்புற மற்றும் நாடகக் கலைகள் மூலம் விழிப்புணர்வினை அவர் ஏற்படுத்தி வருகிறார்.

  • திருநங்கைகளின் நலனுக்காக வேண்டி சிறப்பாகப் பணியாற்றுவதோடு அவர்களில் முன்மாதிரியாகத் திகழும் திருநங்கைகளை கௌவுரவிக்கும் வகையில் 2021 ஆம் ஆண்டு முதல் தமிழக அரசானது சிறந்த திருநங்கைக்கான விருதினை வழங்கி வருகிறது.
  • இவ்விருதிற்குத் தேர்வு செய்யப்பட்ட திருநங்கைகளுக்கு 1 லட்சம் ரூபாய்க்கான காசோலையும், பாராட்டுச் சான்றிதழும் வழங்கப்படுகிறது.

மூன்றாம் பாலினச் சமூகத்தினை சேர்ந்த குறிப்பிடத்தக்க நபர்கள்

  • C. தேவி - தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்ட முதல் திருநங்கை
  • K. குணவதி - தமிழகத்தின் முதல் திருநங்கை செவிலியர்

  • கற்பகா - திருநங்கை நடிகை
  • மாயா ஜாபர் - திருநங்கை ஆர்வலர் மற்றும் மருத்துவர்
  • நர்த்தகி நடராஜ் - சங்கீத நாடக அகாடமி விருதைப் பெற்ற முதல் திருநங்கை.
  • குடிமக்களுக்கான இந்தியாவின் நான்காவது உயரிய விருதான பத்மஸ்ரீ விருது பெற்ற முதல் திருநங்கை
  • பத்மினி பிரகாஷ் - முதல் திருநங்கை செய்தி வாசிப்பாளர்
  • A. ரேவதி - திருநங்கை எழுத்தாளர் மற்றும் சமூக ஆர்வலர்
  • மாலினி ஜீவரத்தினம் - பால் புதுமையர் விருது பெற்ற திரைப்படத் தயாரிப்பாளர், தயாரிப்பாளர், நடிகர், நிகழ்ச்சித் தொகுப்பாளர் மற்றும் சமூக ஆர்வலர்.
  • கோபி சங்கர் மதுரை - 2016 ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டப் பேரவைத் தேர்தலின் இளம் வேட்பாளர்.
  • பொது அலுவலகத்தினை வெளிப்படையாக நடத்தும் முதல் ஊடுபாலின மற்றும் பால்புதுமையர்
  • லிவிங் ஸ்மைல் வித்யா – தமிழ் எழுத்தாளர், கலைஞர் மற்றும் நடிகர்

​​​​​​​

  • கல்கி சுப்ரமணியம் - திருநங்கை தொழிலதிபர் மற்றும் சகோதரி அறக்கட்டளையின் நிறுவனர்
  • கிரேஸ் பானு - தமிழ்நாட்டின் பொறியியல் கல்லூரியில் அனுமதிக்கப்பட்ட முதல் திருநங்கை
  • எஸ்தர் பாரதி - முதல் திருநங்கைப் பாதிரியார்
  • டாக்டர் சுதா - 2014 ஆம் ஆண்டு கௌரவப் பட்டம் பெற்ற முதல் திருநங்கை
  • எஸ். ஸ்வப்னா - முதல் திருநங்கை இந்திய நிர்வாகச் சேவை மாணவர்.
  • ரோஸ் வெங்கடேசன் - தமிழ்நாட்டின் முதல் திருநங்கை பெண் தொலைக்காட்சி தொகுப்பாளர்
  • K. பிரித்திகா யாஷினி - தமிழக காவல்துறையின் முதல் திருநங்கை பெண் காவல்துறை உதவி ஆய்வாளர்.
  • டாக்டர் மீனா கந்தசாமி - இருபால் கவிஞர், புனைவுக் கதை எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர் மற்றும் சமூக ஆர்வலர்.

​​​​​​​

  • தமிழகத்தில் பல ஆண்டுகளாக பல்வேறு LGBT நிறுவனங்கள் நிறுவப் பட்டுள்ளன.
  • இந்தச் சங்கங்கள் LGBT நபர்களைப் பற்றிய விழிப்புணர்வினை ஏற்படுத்துவதோடு, LGBT நபர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுக்கு உதவி எண்களையும் மேலும் கல்வி மற்றும் பணியிடக் கொள்கைகள் தொடர்பான விழிப்புணர்வுக்கான பிரச்சாரம் போன்றவற்றையும் வழங்குகின்றன.
  • திருநங்கைகள் ஆர்வலர், சட்டமன்றத் தேர்தலில் போட்டி, கல்வி, மருத்துவம், செய்தி வாசிப்பாளர், வழக்கறிஞர், காவல்துறை, எழுத்தாளர் போன்ற பல்வேறு துறைகளில் LGBTQ சமூகத்தினைச் சேர்ந்த பலர் வெற்றி பெற்றுள்ளனர்.

​​​​​​​

-------------------------------------

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்