TNPSC Thervupettagam

தமிழ் இணையக் கல்விக் கழகம்

June 27 , 2023 569 days 4794 0

(For the English version of this Article Please click Here)

  • தமிழ் இணையக் கல்விக் கழகம் என்பது, தமிழ்நாடு கூட்டுறவுச் சங்கங்கள் சட்டம் 1975, பிரிவு 27 என்பதின் கீழ் தமிழ் இணையப் பல்கலைக் கழகமாக நிறுவப்பட்டு தகவல் தொழில் நுட்பவியல் மற்றும் எண்ணிமச் சேவைகள் துறையின் கீழ் இயங்கி வருகிறது.
  • தமிழ் இணையப் பல்கலைக்கழகமானது தமிழ் இணையக் கல்விக்கழகமாக 2010 ஆம் ஆண்டு ஜூலை 16 ஆம் நாள் பெயர் மாற்றம் செய்யப்பட்டது.
  • தமிழ் இணையக் கல்விக் கழகத்தின் முக்கியமான குறிக்கோள் தமிழ்க் கல்வியை இணையம் மூலம் புலம்பெயர்ந்தத் தமிழர்களுக்கு அளிப்பது, தமிழ் நூல்களை மின்னுருவாக்கம் செய்வது மற்றும் கணினித் தமிழை வளர்ப்பது என்பதாகும்.

நோக்கங்கள்

  • தமிழ் மொழியில் சான்றிதழ், மேற்சான்றிதழ் பட்டயம், மேற்பட்டயம் மற்றும் பட்டம் முதலிய கல்வித் திட்டங்களை நடத்துதல்.
  • கணினித் தமிழை மேம்படுத்துதல்.
  • தமிழ் மின் நூலகம் மற்றும் மின் களஞ்சியத்தை நிர்வகித்தல்.
  • தமிழர் பண்பாடு மற்றும் நாகரீகம் பற்றியத் தகவல்களை உலகம் முழுவதும் உள்ள புலம் பெயர்ந்தத் தமிழர்களுக்கும், மற்றவர்களுக்கும் அளித்தல்.

கல்வித் திட்டங்கள்

  • தமிழ் இணையக் கல்விக் கழகத்தால் மழலைக் கல்வி, சான்றிதழ்க் கல்வி. மேற்சான்றிதழ் கல்வி, பட்டயம், மேற்பட்டயம் மற்றும் இளநிலைப் பட்டம் (தமிழியல்) முதலான கல்வித் திட்டங்கள் அளிக்கப் படுகின்றன.
  • அதன் விவரங்கள் பின்வருமாறு:

மழலைக் கல்வி

  • மழலைக் கல்வி என்பது இளஞ்சிறார்களுக்காக வடிவமைக்கப் பட்டுள்ளது.

சான்றிதழ் கல்வி

  • சான்றிதழ் கல்வி பின்வரும் மூன்று நிலைகளில் வழங்கப் படுகின்றன. அவையாவன
  • அடிப்படை நிலை (1 மற்றும் 2 ஆம் வகுப்புகளுக்கு இணையானது)
  • இடை நிலை (3 மற்றும் 4 ஆம் வகுப்புகளுக்கு இணையானது)
  • மேல் நிலை (5 மற்றும் 6 ஆம் வகுப்புகளுக்கு இணையானது)
  • இக்கல்வித் திட்டத்தின் வாயிலாக இதுவரை மொத்தம் 11,162 மாணவர்கள் தேர்ச்சிப் பெற்று உள்ளனர்.

மேற்சான்றிதழ் கல்வி

  • மேற்சான்றிதழ் கல்வி பின்வரும் மூன்று நிலைகளில் வழங்கப் படுகின்றன. அவையாவன
  • நிலை 1 (7 மற்றும் 8 ஆம் வகுப்புகளுக்கு இணையானது)
  • நிலை 2 (9 மற்றும் 10 ஆம் வகுப்புகளுக்கு இணையானது)
  • நிலை 3 (11 மற்றும் 12 ஆம் வகுப்புகளுக்கு இணையானது)
  • இக்கல்வித் திட்டத்தின் வாயிலாக இது வரை மொத்தம் 1,225 மாணவர்கள் தேர்ச்சி பெற்று உள்ளனர்.

இளநிலைப் பட்டக் கல்வி (தமிழியல்)

  • இளநிலைப் பட்டக் கல்வி (தமிழியல்) பாடத் திட்டமானது பட்டயம், மேற்பட்டயம் மற்றும்  பட்டம் முதலான கூறுநிலைகளை உள்ளடக்கியதாகும்.
  • இக்கல்வித் திட்டத்தின் வாயிலாக இதுவரையில் தேர்ச்சி பெற்றுள்ள மாணவர்களின் எண்ணிக்கை விவரங்கள் பின்வருமாறு:
  • பட்டயப் படிப்பு - 2372
  • மேற்பட்டயப் படிப்பு - 1755
  • பட்டப் படிப்பு -1394
  • மேற்கூறிய கல்வித் திட்டங்கள் 27 நாடுகளில் உள்ள 135 தொடர்பு மையங்களின் மூலமாக வழங்கப் படுகின்றன.
  • அதன் விவரங்கள் தமிழ் இணையக் கல்விக்கழகத்தின் இணைய தளத்தில் (www.tamilvu.org) பதிவேற்றம் செய்யப் பட்டுள்ளன.

இதர திட்டங்கள்

தீராக் காதல் திருக்குறள்

  • தமிழ் இணையக் கல்விக்கழகம் திருக்குறளின் பெருமைகளை இன்றைய தலைமுறையினர் அறியும் வண்ணம் 'தீராக் காதல் திருக்குறள்' என்ற பெயரில் தீந்தமிழ் நிகழ்ச்சிகளை ஒருங்கிணைத்து நடத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. இதன் முதல் நிகழ்ச்சியாக தமிழ்நாட்டில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்குக் 'குறளோவியம்' என்ற தலைப்பில் ஓவியப் போட்டி நடத்தப்பட்டது.
  • அதில் சிறந்த ஓவியங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு,  அம்மாணவர்களுக்கு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் 2022 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 15 ஆம் தேதி  (திருவள்ளுவர் தினம்) அன்று வள்ளுவர் கோட்டத்தில் பரிசுகள் வழங்கப் பட்டன.
  • அந்த ஓவியப் போட்டியில் சிறப்பான 365 ஓவியங்கள் தேர்வு செய்யப் பட்டு நாட்காட்டிப் புத்தகமாக மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் வெளியிடப்பட்டது.
  • இந்நாட்காட்டிப் புத்தகம் ஒரு முடிவில்லா நாட்காட்டியாக வடிவமைக்கப்பட்டு தமிழ் இணையக் கல்விக் கழகத்தில் கிடைக்கிறது.
  • 2022 டிசம்பர் மாதம் 21 ஆம் தேதி அன்று கலைவாணர் அரங்கத்தில் 'குறள் இனிது' என்ற தலைப்பில் திருக்குறள் நாட்டிய நாடகம் நடத்தப்பட்டது.

தமிழ்ப் பரப்புரைக் கழகம்

  • தமிழ் மொழியை இரண்டாம் மற்றும் மூன்றாம் மொழியாக வெளிநாடுகளில் கற்பிக்கும் அமைப்புகளுக்கு நிதியுதவி வழங்குதல் மற்றும் ஆசிரியர்களுக்குப் பயிற்சி அளித்தல் ஆகியவற்றிற்காக "தமிழ்ப் பரப்புரைக்கழகம்* உருவாக்கப்பட்டு இதற்காக ரூ.1 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப் பட்டுள்ளது.
  • இணையவழி தமிழ்க் கல்வியானது, தற்பொழுது 6 நிலைகளில் வழங்கப்பட்டு வருகின்றது.
  • இது இப்பொழுது 5 நிலைகளாக (திறன் அடிப்படையில்) மாற்றியமைக்கப்பட்டுஅதற்கு வேண்டிய பாடங்கள் எழுதும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
  • தமிழ் கற்கும் மாணவர்களுக்கு நிலை-1 என்பதின் முதல் பருவத்திற்கான பாடநூல்கள் வெளியீடு, துணைக் கருவிகள் வெளியீடு மற்றும் தமிழ்ப் பரப்புரைக் கழகச் செயல்பாடுகளின் தொடக்க விழா மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் தலைமையில் 2022 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 24 ஆம் தேதி அன்று நடைபெற்றது.
  • தமிழ்ப் பரப்புரைக் கழகத்தால் பின்வரும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன:
  • சிலம்பாட்டப் பயிற்சிக்கான அடிப்படைப் பயிற்சி காணொலிகளாகப் படமாக்கம் செய்யப் பட்டு உள்ளது.
  • தேவாரப் பாடல்கள் சமகால இசை மற்றும் காட்சிகளாக வழங்கப் படுகின்றன.
  • தன்னார்வல ஆசிரியர்களுக்காகத் தமிழ் கற்பிப்பதற்காக "ஆசிரியர் பட்டயப் பயிற்சி" என்ற கல்வித் திட்டமானது தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக் கழகத்துடன் இணைந்து வழங்கப் படவுள்ளது.
  • இணைய வழியில் தமிழ் கற்பிப்பதற்குத் தேவையான ஆசிரியர் தொகுப்பு அமைப்பு ஒன்று உருவாக்கப் பட்டு உள்ளது.
  • மாணவர்களுக்கு இணைய வழியில் தமிழ் வகுப்புகள் நடத்தும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
  • உயர்கல்வியில் "தமிழைப் பிழையின்றி எழுதுவோம்" என்ற தமிழ் இலக்கணப் புத்தகமானது உருவாக்கப்பட்டுள்ளது.
  • இளநிலைத் தமிழியல் பட்டக் கல்விக்கான பாடத்திட்டம் சீராய்வு செய்யப்பட்டு, அதற்கு வேண்டிய பாடங்கள் எழுதும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
  • முதுகலைத் தமிழ்ப் பட்டக் கல்விக்கான புதிய பாடத் திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.

தமிழிணையம் - மின்நூலகம்

  • தமிழ் இணையக் கல்விக் கழகமானது தமிழிணையம் என்ற ஒரு மின் நூலகத்தை (www.tamildigitallibrary.in) உருவாக்கியுள்ளது. இம்மின் நூலகத்தில் 18 ஆம் நூற்றாண்டு முதல் தமிழ் இலக்கியம், சமயம், வரலாறு, மருத்துவம் முதலிய பொருண்மைகளைக் கொண்ட அரிய நூல்கள், பருவ இதழ்கள் மற்றும்  பனை ஓலைச் சுவடிகள் உள்ளன.
  • இந்த மின் நூலகம் தெற்காசிய மொழிகளில் மிகப்பெரிய மின் நூலகமாகத் திகழ்கிறது.
  • 70 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நூல்கள், பருவ வெளியீடுகள் மற்றும் 7,68,097 பனை ஓலைச் சுவடிகள் இடம் பெற்றுள்ளன.
  • தமிழிணைய மின் நூலகம் தொடர்ச்சியாக மேம்படுத்தப் பட்டும், அரிய ஆவணங்களை வழங்கியும் வருகிறது.
  • இந்த இணைய மின் நூலகத்தை 4, 41, 22, 519  பயனர்கள் பார்வையிட்டுள்ளனர்.

உள்ளடக்கத் தமிழ் மின்நூலகம்

  • மின்நூலக இணைய தளத்தைப் பார்வைக் குறைபாடுடையவர்களும் நன்கு பயன்படுத்தும் வகையில் உள்ளடக்கத் தமிழ் மின்நூலகமாக மாற்ற ரூ1.00 கோடி ஒதுக்கீடு செய்யப் பட்டு உள்ளது.
  • தற்போது, 14 இலட்சம் பக்கங்களை உருபடத்திலிருந்து எழுத்துணரி முறையில் (OSR Technology) மாற்றும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

அரிய ஒளி-ஒலி ஒளிப்படங்கள் மற்றும் பிற வரலாற்று ஆவணங்கள் மின்னுருவாக்கம்

  • அரிய ஒளி-ஒலி, ஒளிப்படங்கள் மற்றும் பிற வரலாற்று ஆவணங்களை மின்னுருவாக்கம் செய்ய இதுவரையில் ரூ.1.00 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
  • இதுவரையில் 5,535 ஒளி - ஒலி, ஒளிப்படங்கள் மற்றும் பிற ஆவணங்கள் மின்னுருவாக்கப் பட்டுள்ளன.
  • மின் நூலக இணையதளத்தை மறுசீரமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்ற நிலையில்,  இந்தப் பணிகள் முடிவடைந்த பின் மேற்கண்ட பொருண்மைகள் அனைத்தும் இணையத்தில் பதிவேற்றம் செய்யப் படும்.

தமிழர் தகவலாற்றுப்படை

  • தமிழ்மொழி, இலக்கியம், சுலைகள் பற்றிய ஒரு விரிவான மற்றும் ஒருங்கிணைந்தக் களஞ்சியமாகத் தமிழர் தகவலாற்றுப் படையினைத் தமிழ் இணையக் கல்விக் கழகமானது உருவாக்கியுள்ளது.
  • இந்தத் திட்டத்தின் கீழ் தமிழக வரலாறு மற்றும் பண்பாடு சார்ந்த 31,158 ஒளிப்படங்களைக் கொண்ட www.tagavalsatruppadai.In என்ற இணையதளத்தையும் அது உருவாக்கியுள்ளது.
  • இந்தத் தகவலாற்றுப்படைக் களஞ்சியமானது தொடர்ச்சியாக மேம்படுத்தப் பட்டும், கூடுதல் கலைப் பொருட்கள் மற்றும் நினைவுச் சின்னங்களின் தகவல்கள் இதில் பதிவேற்றம் செய்யப் பட்டும் வருகின்றது.
  • இந்த இணையதளத்தை 27,71,565 முறை பயனர்கள் பார்வையிட்டுள்ளனர்.

மெய்நிகர் அருங்காட்சியகம் உருவாக்குதல்

  • தமிழக வரலாறு மற்றும் பண்பாடு சார்ந்தப் பொருண்மைகளுக்காக ஒரு மெய்நிகர் அருங் காட்சியகம் அமைக்க ரூ.7.5 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு, அதற்கு முதலாம் ஆண்டிற்கு ரூ.1.50 கோடி வழங்கப்பட்டுள்ளது.
  • இராஜேந்திர சோழனின் கடற்பயணங்கள் மற்றும் தென்கிழக்கு ஆசிய கடல் வாணிபம், சிலப்பதிகாரம் - புகார்க் காண்டம் - இந்திரவிழா ஆகியவற்றிற்கான கருப்பொருளுக்காக ஒரு விருப்ப ஒப்பந்தப்புள்ளி கோரப் பட்டுள்ளது.

கப்பலோட்டிய தமிழனின் 150வது பிறந்த நாள் விழா - நூல்கள் மற்றும் கையெழுத்துப் பிரதிகளை இணையத்தில் வெளியிடல்

  • 'கப்பலோட்டிய தமிழன்'  வ.உ.சிதம்பரனார் அவர்களின் 150வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு அவரது நூல்கள் மற்றும் கையெழுத்துப் பிரதிகள் மின்மயமாக்கப்பட்டு தமிழ் இணையக் கல்விக் கழக இணையத்தில் வெளியிடுதலுக்கான திட்டப் பணிகளில், 127 நூல்கள், கையெழுத்துப்பிரதிகள், ஒளிப்படங்கள், ஆவணங்கள் மற்றும் பல்லூடக ஆவணங்கள் மின்னுருவாக்கம் செய்யப்பட்டு, வ.உ.சி. அவர்களுக்காக சிறப்பாக உருவாக்கப் பட்ட இணையப் பக்கம் 2022 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 18 ஆம் தேதி அன்று மாண்புமிகு முதலமைச்சர் அவர்களால் திறக்கப்பட்டது (https://www.tamildgltalibrary.In/voc).
  • தற்போது வரையில் உயர்கல்வித் துறை மற்றும் இன்னபிற துறைகளின் கீழ் செயல்படும் அனைத்துப் பல்கலைக் கழகங்களிலும் இருந்து 354 முனைவர் பட்ட ஆய்வுச் சுருக்கம், ஆய்வுத் தொகுப்புகள் மற்றும் கலைச் சொற்களின் பட்டியல் பெறப்பட்டு ஆவணப்படுத்தப் பட்டுள்ளன.
  • இந்த உள்ளடக்கங்கள் இணைய நூலக வலைதளத்தில் வெளியிடப் பட்டு இந்தப் பொருண்மைகளுக்கான ஒப்புகைச் சான்று வழங்கப்பட்டு வருகின்றன.

ஆய்வு மற்றும் உருவாக்கம் -- கணினித் தமிழ்ப் பிரிவு

கணினி மொழியியல்

  • கணினி மொழியியல் பிரிவானது இலக்கணக் குறிப்புடன் விரிதரவு, இருமொழி இணை தரவு (தமிழ் - ஆங்கிலம்) வரைபடத் தரவுதளம், தமிழ் இலக்கியங்களுக்கான சொல்லடைவு மற்றும் தொடரடைவுகள், கணினிக்கான தமிழ் இலக்கணம் உருவாக்குதல், கணினித் தமிழ்  கருவிகள், இலக்கணக் குறிப்பு அளிக்கும் கருவிகள், வட்டெழுத்துகள் போன்ற எழுத்துருக்கள் மற்றும் ஒருங்குறிச் செயல்பாடுகள் போன்றவற்றைச் செயல்படுத்துகிறது.

Use case (பயன்பாட்டு வழக்கு) மற்றும் கணிணிக் கருவிகள் உருவாக்கம்

  • தமிழ் இணையக் கல்விக் கழகத்தின் பாடங்களுக்கான Usecase (பயன்பாட்டு வழக்கு) எழுதப் பட்டுள்ளதோடு மின் நூலகத்திற்கான Usecase (பயன்பாட்டு வழக்கு) எழுதும் பணியும் நடைபெற்று வருகிறது.

கணித்தமிழ்ப் பேரவை (KTP)

  • கணித்தமிழ்ப் பேரவை என்பது கணினித் தமிழ் குறித்து மாணவர்களிடையே விழிப்பு உணர்வை ஏற்படுத்த தமிழ் இணையக் கல்விக் கழகத்தால் உருவாக்கப்பட்ட ஒரு திட்டம் ஆகும்.
  • கல்லூரி மாணவர்கள் தமிழ் உள்ளடக்கம், செயலி உருவாக்கம் மற்றும் தமிழ்க் கட்டுரைகள் எழுதுதல் போன்றவற்றைச் செயல்படுத்துவதற்கு வேண்டி துறைசார்ந்த வல்லுநர்கள் அவர்களை ஊக்குவிக்கின்றனர்.
  • இதுவரை தமிழகம் முழுவதும் பல்கலைக் கழகங்கள் / கல்லூரிகளில் 212 கணித் தமிழ்ப் பேரவை மையங்கள் தொடங்கப்பட்டுள்ளன.

கணினித் தமிழ்க் கருவிகள் உருவாக்கம்

  • கடந்த 2022-23-ஆம் ஆண்டு அறிவிப்பின்படி கணினித் தமிழ்க் கருவிகள் உருவாக்குவதற்கான பணி ஆணைகள் வழங்கப் பட்டுள்ளன. அவை பின்வருமாறு
  • 1. Chatbot and Question & AnsweringSystem for Tamil
  • 2. A Syntactic Parser for Tamil: A Data driven Approach
  • 3. PoS and Semantic role of labelling
  • 4. Developing a sentiment Analyzer Tool for Code Mixed Tamil Online Text
  • 5. Real–time multi-dialect automatic speech recognition system for Tamil
  • 6. Multimodal Fused Tamil Handwritten and Palm-leaf character recognition tool based on neural network
  • 7. Hyphenation Support for Tamil typesetting
  • கணினித் தமிழில் நிரலாக்கப் போட்டி

  • தமிழ் இணையக் கல்விக்கழகம் வேலூர் தொழில்நுட்பக் கல்வி நிறுவனத்துடன் இணைந்து  2022 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 19 ஆம் தேதி அன்று மாணவர்களை ஊக்குவிப்பதற்காக ஒரு நிரலாக்கப் போட்டியை நடத்தியது.
  • அதில் கீழ்க்கண்டத் தலைப்புகளுக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன.
  • 1. Identifying context based precedent rulings for a given case in Tamil.
  • 2. Identifying name boards on the bus stop (Udhavi)
  • 3. Sign language subtitle generator in Tamil.

-------------------------------------

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்