TNPSC Thervupettagam

தி இந்து நாளிதழ் - 140 ஆண்டுகாலப் பயணம்

September 26 , 2018 2252 days 7823 0

To read this article in English - Click Here

தி இந்து நாளிதழ் - தொடக்கக் காலங்கள்

  • தி இந்து என்பது சென்னையைத் தலைமையிடமாகக் கொண்ட இந்திய தினசரி செய்தித்தாள் ஆகும்.
  • தி இந்து 1878 ஆம் ஆண்டு செப்டம்பர் 20 அன்று வார செய்தித்தாளாக மதராஸில் தொடங்கப்பட்டது. அப்போது இது ‘டிரிப்பிளிகேன் சிக்ஸ்’ (Triplicane Six) என்று அழைக்கப்பட்டது.

  • தி இந்து ஜி. சுப்பிரமணிய ஐயர் (தஞ்சாவூர் மாவட்டத்தில் பள்ளி ஆசிரியராகப் பணியாற்றியவர்) மற்றும் எம். வீரராகவாச்சாரியார் (பச்சையப்பன் கல்லூரியின் விரிவுரையாளர்) ஆகியோரின் தலைமையில் டி.டி. ரங்காச்சாரியா, பி.வி. ரங்காச்சாரியா, டி. கேசவ ராவ் பண்ட்லு மற்றும் என். சுப்பா ராவ் பண்ட்லு ஆகிய 4 சட்ட மாணவர்கள் மற்றும் 2 ஆசிரியர்களை அக்குழு கொண்டது.
  • தி இந்துவின் முதலாவது பதிப்பாசிரியர் சுப்பிரமணிய ஐயர் ஆவார். தி இந்து செய்தித்தாளின் முதலாவது மேலாண் இயக்குநர் வீரராகவாச்சாரியார் ஆவார்.
  • தி இந்துவின் தொடக்க பதிப்பானது 100 நகல்களுக்கு மேல் ஜார்ஜ்டவுனில் ஸ்ரீநிதி அச்சகத்தில் அச்சிடப்பட்டன.

புகைப்படங்கள்: தி இந்து

  • 1995 ஆம் ஆண்டில் தி இந்து செய்தித்தாளானது நிகழ்நேர (Online) பதிப்பை வழங்கும் முதலாவது இந்திய செய்தித்தாளாக உருவெடுத்தது.

1883 - 1904

  • தி இந்து செய்தித்தாளானது 1883 - ஆம் ஆண்டிலிருந்து வாரத்திற்கு மூன்று முறை வெளிவரத் தொடங்கியது. மேலும் இது 1889 ஆம் ஆண்டிலிருந்து மாலைநேர நாளிதழாக வெளிவரத் தொடங்கியது.
  • தி இந்து செய்தித்தாளின் ஒற்றை நகலின் மதிப்பு நான்கு அனா (Four Annas) ஆகும். இந்திய தேசிய காங்கிரஸ் மாநாடு 1887 ஆம் ஆண்டில் மதராஸில் நடைபெற்ற பின்பு, தி இந்துவில் தேசியச் செய்திகள் குறிப்பிடத்தக்க அளவு அதிகரித்தன.
  • வீரராகவாச்சாரியார் மற்றும் சுப்பிரமணிய அய்யர் ஆகியோருக்கு இடையேயான தொடர்பு 1898 ஆம் ஆண்டு அக்டோபரில் முறிந்தது.

  • தி இந்துவிலிருந்து சுப்பிரமணிய அய்யர் வெளியேறினார். அதன்பின் வீரராகவாச்சாரியார் தி இந்து செய்தித்தாளின் முழு உரிமையாளரானார். வீரராகவாச்சாரியார், கருணாகர மேனனை தி இந்து செய்தித்தாளின் பதிப்பாசிரியராக நியமித்தார்.

1905 - 1925

  • 1905 ஆம் ஆண்டு தி இந்து செய்தித்தாளானது 800 நகல்களின் பிரசுரத்துடன் எஸ். கஸ்தூரிரங்க அய்யங்காரால் வாங்கப்பட்டது.
  • 1923 ஆம் ஆண்டில் சுழல் அச்சிடும் கருவியை (Rotary Press) வாங்கிய முதலாவது செய்தித்தாள் தி இந்து ஆகும்.
  • 1923 ஆம் ஆண்டு டிசம்பரில் கஸ்தூரிரங்க அய்யங்கார் காலமானார்.

  • 1925 ஆம் ஆண்டில் தி இந்து செய்தித்தாளின் அலுவலகத்தில் கஸ்தூரிரங்க அய்யங்காரின் உருவப்படத்தை மகாத்மா காந்தி திறந்து வைத்தார்.

1926 - 1940

  • 1933 ஆம் ஆண்டில் தி இந்து செய்தித்தாளின் அலுவலகங்கள் இலண்டன், பம்பாய் மற்றும் கொல்கத்தா ஆகிய நகரங்களில் திறக்கப்பட்டன.
  • 1934 ஆம் ஆண்டில் கஸ்தூரி ஸ்ரீனிவாசன் தி இந்து செய்தித்தாளின் பதிப்பாசிரியரானார்.
  • கஸ்தூரி ஸ்ரீனிவாசன் இந்திய செய்தித்தாள் அறக்கட்டளை (Press Trust of India) என்ற அமைப்பை நிறுவினார். இவர் 1956 ஆம் ஆண்டு பத்ம பூஷண் விருது பெற்றார்.
  • 1936 ஆம் ஆண்டில் தி இந்து செய்தித்தாளின் ஞாயிறு பதிப்பானது அகன்ற தாள் வடிவத்தில் (Broadsheet Format) வெளியிடப்பட்டது.

புகைப்படங்கள்: தி இந்து

  • 1939 ஆம் ஆண்டில் தி இந்து செய்தித்தாளானது தி டைம்ஸ், தி மான்செஸ்டர் கார்டியன் மற்றும் இதர செய்தித்தாளில் வரும் செய்திகளை வெளியிடும் அனைத்து இந்திய உரிமையைப் பெற்றது. இந்த உரிமையைப் பெறும் முதலாவது செய்தித்தாள் தி இந்து ஆகும்.
  • பி அண்ட் டி தொலைஅச்சு இணைப்பை (P & T Teleprinter link) பெறும் முதலாவது இந்திய செய்தித்தாள் தி இந்து ஆகும்.
  • 1940 ஆம் ஆண்டில் தி இந்து செய்தித்தாளானது காலை நாளிதழாக வெளிவரத் தொடங்கியது.

புகைப்படங்கள்: தி இந்து

1941 - 1965

  • 1947 ஆம் ஆண்டில் தி இந்து செய்தித்தாளானது விமானம் மூலம் தனது பிரதிகளை இந்தியாவின் மற்ற நகரங்களுக்கு கொண்டு சென்றது. மேலும் வாரத்திற்கு ஒருமுறை வெளிவரக்கூடிய பொழுதுபோக்கு விசயங்களையும் உள்ளடக்கிய விளையாட்டு மற்றும் பொழுதுபோக்கு இதழ் இதே ஆண்டில் தொடங்கப்பட்டது.
  • 1959 ஆம் ஆண்டில் கஸ்தூரி அண்ட் சன்ஸ் நிறுவனம் பதிவு செய்யப்பட்டது. மேலும் இந்நிறுவனம் பட்டியலிடப்படாத பொது நிறுவனமாக உருவெடுத்தது.
  • 1963 ஆம் ஆண்டில் மதராஸ் மற்றும் மைசூர் மாகாணங்களுக்கு தனது பிரதிகளை கொண்டு செல்வதற்காக ஹெரான் விமானத்தை வாங்கிய முதலாவது இந்திய செய்தித்தாள் தி இந்து செய்தித்தாளாகும். இதற்கு அடுத்த ஆண்டில் கேரளா மற்றும் ஆந்திரப் பிரதேசத்திற்கு தனது பிரதிகளை கொண்டு செல்வதற்காக டகோடாஸ் என்ற விமானத்தை தி இந்து நிறுவனம் வாங்கியது.
  • 1965 ஆம் ஆண்டில் தி டைம்ஸ் (லண்டன்) ஆனது “ஒரு தெற்கத்திய அசையழுத்தத்துடன் கூடிய ஒரு தேசியக் குரல்” என்று கூறி, உலகின் சிறந்த செய்தித்தாள்களில் ஒன்றாக தி இந்துவை மதிப்பிட்டது. தி இந்து செய்தித்தாளின் நீண்ட காலமாக பதிப்பாசிரியராக பணியாற்றிய ஜி. கஸ்தூரி 1965ம் ஆண்டின் ஆகஸ்டில் அதன் பதிப்பாசிரியராக நியமிக்கப்பட்டார்.

புகைப்படங்கள்: தி இந்து

1966 - 2000

  • 1968 ஆம் ஆண்டு தி இந்து செய்தித்தாளிற்கு உலக பத்திரிக்கைத்துறை சாதனை விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது.
  • 1970 ஆம் ஆண்டில் முதன்முறையாக மதராஸ் மாகாணத்திற்கு வெளியில் பெங்களுருவில் பெங்களுரு பதிப்பு தொடங்கப்பட்டது.
  • 1986 ஆம் ஆண்டில் தில்லி பதிப்பு தொடங்கப்பட்டது. மதராஸிலிருந்து செயற்கைக்கோள் மூலமாக செய்திகள் தில்லிக்கு அனுப்பப்பட்டன.
  • 1995 ஆம் ஆண்டில் இணையதள பதிப்பைப் பெற்ற முதலாவது இந்திய செய்தித்தாள் தி இந்து ஆகும்.

2001 - தற்பொழுது வரை

  • 2005 ஆம் ஆண்டில் புகழ்பெற்ற மரியோ கார்சியாவால் தி இந்து செய்தித்தாள் விரிவான மறுவடிவமைப்பிற்கு உட்படுத்தப்பட்டது.
  • 2006 ஆம் ஆண்டில் தி இந்து மின்னணு செய்தித்தாள் (e-paper) தொடங்கப்பட்டது.
  • 2013 ஆம் ஆண்டில் அரசியல் மற்றும் பொதுக் கொள்கைகளுக்கான தி இந்து மையம் தொடங்கப்பட்டது.
  • 2015 ஆம் ஆண்டில் தி இந்துவின் மும்பை பதிப்பு தொடங்கப்பட்டது.
  • 2015 ஆம் ஆண்டு ஏற்பட்ட தென் இந்திய வெள்ளத்தின்போது, பணியாளர்கள் செய்தித்தாள் அலுவலகத்திற்கு வரமுடியாத சூழ்நிலை ஏற்பட்டதால், தி இந்து தொடங்கப்பட்ட 1878 ஆம் ஆண்டிலிருந்து முதன்முறையாக, அந்த வருடம் டிசம்பர் 2 அன்று சென்னையில் தி இந்து இதழின் அச்சுப் பிரதி வெளியிடப்படவில்லை.
  • 2016 ஆம் ஆண்டில், சமீபத்தில் மறுவடிவாக்கம் பெற்ற thehindu.com ஆனது சிறந்த இணைய செய்தித் தளத்திற்காக, செய்தித்தாள்கள் மற்றும் செய்தி வெளியீட்டாளர்களுக்கான உலக அமைப்பின் (WAN - IFRA, World Association of Newspapers and News Publishers) “தெற்கு ஆசிய டிஜிட்டல் ஊடக விருது வழங்குதலின்போது” தங்கம் வென்றது.

  • 2018 ஆம் ஆண்டில் சிறிய பெட்டி (briefcase) என்ற பணம் செலுத்தி பயன்படுத்தக்கூடிய செயலியை வெளியிட்டது.
  • 2018 ஆம் ஆண்டு மார்ச் வரை உள்ள புள்ளி விவரத்தின்படி 11 மாநிலங்களில் 21 இடங்களில் இது வெளியிடப்படுகிறது.
  • பெங்களுரு, சென்னை, ஹைதராபாத், திருவனந்தபுரம், விஜயவாடா, கொல்கத்தா, மும்பை, கோயம்புத்தூர், மதுரை, நொய்டா, விசாகப்பட்டினம், கொச்சி, மங்களூரு, திருச்சிராப்பள்ளி, ஹப்ளி, மொஹாலி, அலகாபாத், கோழிக்கோடு, லக்னோ, கட்டாக் மற்றும் பாட்னா ஆகியவை தி இந்து வெளியிடப்படும் 21 இடங்களாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்