தீவிரமாகும் மார்பர்க் வைரஸ்
- ஆப்பிரிக்க நாடுகளான ருவாண்டா, காங்கோ, கென்யா, உகாண்டாவில் மார்பர்க் வைரஸ் தீவிரமாகப் பரவியுள்ளது. ருவாண்டாவில் மட்டும் 15 பேர் மார்பர்க் வைரஸுக்குப் பலியாகியுள்ளனர். எபோலா வைரஸின் குடும்பத்தைச் சேர்ந்ததுதான் இந்த மார்பர்க் வைரஸ்.
- எபோலா பாதித்தால் காய்ச்சல், வாந்தி, ரத்தப்போக்கு, வயிற்றோட்டம் ஏற்படும். ஆகவே, மார்பர்க் பண்புகளும் எபோலாவை ஒத்துள்ளன. எபோலாவைப் போல் இதுவும் உயிரிழப்பை ஏற்படுத்தும். மார்பர்க் வைரஸ் பழந்தின்னி வெளவால் களிடமிருந்து விலங்குகளுக்கும், விலங்குகளிடமிருந்து மனிதர்களுக்கும் பரவுகிறது. இந்த வைரஸ் மனிதர் களுக்கிடையே எளிதாகப் பரவுவதால் நோய் பாதித்தவர்கள் தனிமைப்படுத்தப் படுகிறார்கள்.
- ஆர்டி - பிடிஆர் சோதனைகள் மூலம் மார்பர்க் வைரஸ் பாதிப்பைக் கண்டறிய லாம். மார்பர்க் வைரஸுக்குத் தடுப்பூசி எதுவும் இல்லை. இந்த வைரஸால் பாதிக்கப்பட்டவர் களுக்கு அதன் அறிகுறிகள் மூன்று வாரங்கள் வரை நீடிக்கும். நோய் பாதிப்பின் அறிகுறிகள் இரண்டாம் நாளிலிருந்து தெரிய ஆரம்பிக்கும்.
- காய்ச்சல், தலைவலி, உடல் வலி, வயிற்றுபோக்கு, வாந்தி உணர்வு, வயிற்றில் வலி போன்றவை ஏற்படும். கண், மூக்கு, காது, வாய், பிறப்புறுப்புகளில் ரத்தம் வருதல் ஆகியவை இந்த வைரஸின் தீவிர அறிகுறிகள் என உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.
நன்றி: இந்து தமிழ் திசை (07 – 12 – 2024)