தேசியக் குடிமக்கள் பதிவேடு
- - - - - - - - - - - - - -
- தேசியக் குடிமக்கள் பதிவேடு (NRC – National Register of Citizens) என்பது உண்மையான இந்தியக் குடிமக்கள் யார் என்பதை முடிவு செய்வதற்கான இந்தியக் குடிமக்களின் பட்டியல் ஆகும். இந்தப் பட்டியலில் இடம் பெறாதவர்கள் சட்டவிரோத குடியேறிகளாக கருதப்படுவார்கள்.
- 1951 ஆம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி நாடெங்கிலும் 1951-ல் முதலாவது பட்டியல் தயாரிக்கப்பட்டது.
- தேசிய மக்கள் பதிவேடானது முதன்முறையாக அஸ்ஸாமில் மட்டுமே திருத்தப்பட்டிருக்கிறது.
- தற்பொழுது, தேசியக் குடிமக்கள் பதிவேடானது மக்கள் தொகைக் கணக்கெடுப்புடன் தொடர்புடையது அல்ல. ஆனால் இந்த தேசியக் குடிமக்கள் பதிவேடானது ஒருவரது பெயர் 1951 ஆம் ஆண்டின் தேசியக் குடிமக்கள் பதிவேட்டிலோ அல்லது 1971 ஆம் ஆண்டு மார்ச் 24 ஆம் தேதி நள்ளிரவு வரை தயாரிக்கப்பட்ட மாநிலத்தின் ஏதாவது ஒரு வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றிருந்தாலோ அவரை அவருடைய குடும்பத்துடன் தொடர்புபடுத்துகிறது.
- தேசியக் குடிமக்கள் பதிவேடானது இந்தியாவில் உள்ள அஸ்ஸாம் மாநிலத்திற்கு மட்டுமே உள்ளது.
D - வாக்காளர்
- D – வாக்காளர் என்பது ‘சந்தேகத்திற்குரிய வாக்காளர்’ அல்லது ‘ஐயமுள்ள வாக்காளர்’ என்று பொருள். சரியான குடிமக்கள் சான்றிதழ் இல்லாததால் அரசாங்கம் இவர்களுடைய வாக்குரிமையைப் பறித்து ‘D - வாக்காளர்’ என்று இவர்களை வகைப்படுத்தியுள்ளது. NRC கணக்கெடுப்பின் போது சுமார்48 லட்சம் மக்கள் ‘D - வாக்காளர்’ அடையாள அட்டையைப் பெற்றுள்ளனர்.
வெளிநாட்டினராக அறிவிக்கப்பட்டவர்கள்
- வெளிநாட்டினருக்கான சட்டத்தின் கீழ் சிறப்புத் தீர்ப்பாயங்களினால் ‘D– வாக்காளர்கள்’ விசாரிக்கப்படுகிறார்கள்.
- இவர்கள் குடிமக்கள் உரிமை கோரிக்கையை அந்தத் தீர்ப்பாயங்களில் நிரூபிக்கத் தவறினால், அவர்கள் ‘வெளிநாட்டவராக’ அறிவிக்கப்படுவார்கள்.
- அவ்வாறு அறிவிக்கப்பட்டவர்கள் நாட்டில் உள்ள 6 தடுப்புக் காவல் முகாம்களில் ஏதாவது ஒன்றிற்கு அனுப்பப்படுவார்கள். இந்த தடுப்புக் காவல் முகாம்கள் குற்றவாளிகளுக்காகவும் நாடு கடத்தப்பட்டவர்களுக்காகவும் சிறைச் சாலைகளுக்குள்ளே அமைந்திருக்கும்.
- 2017 ஆம் ஆண்டு டிசம்பர் 31 ஆம் தேதியின்படி 91,206 நபர்கள் வெளிநாட்டினராக அறிவிக்கப்பட்டுள்ளனர்.
தேசிய குடிமக்கள் பதிவேடு திருத்தம் - அஸ்ஸாம்
- வங்காள தேசத்திலிருந்து வரும் சட்ட விரோதமாக குடியேறுபவர்களின் பிரச்சனைகளை தேசியக் குடிமக்கள் பதிவேடு செயல்முறை குறிப்பிடும்.
- தேசியக் குடிமக்கள் பதிவேடானது 1951 ஆம் ஆண்டு முதன் முறையாக வெளியிடப்பட்டது. இதில் குடிமக்களின் பெயர்கள், அவர்களுடைய வீடுகள் மற்றும் அவர்களுடைய சொத்துகள் ஆகியவை பதிவு செய்யப்பட்டிருக்கின்றன.
- வெளி நாட்டவர்களை அடையாளப்படுத்துவதற்காக தேசிய குடிமக்கள் பதிவேட்டைத் திருத்த வேண்டும் என்ற கோரிக்கை அஸ்ஸாம் கிளர்ச்சியின் போது எழுந்தது (1979 – 1985).
- தேசியக் குடிமக்கள் பதிவேடானது குடியுரிமைச் சட்டம், 1955 மற்றும் குடியுரிமை (குடிமக்களின் பதிவுகள் மற்றும் தேசிய அடையாள அட்டைகளை வழங்குதல்) விதிகள், 2003 ஆகிய இரண்டிலும் உள்ள விதிமுறைகளின்படி திருத்தப்பட்டிருக்கிறது.
மார்ச் 24, 1971 – குறிப்பு தினம் (cut off date)
- 1970-ன் இறுதியில் வங்காள தேசத்திலிருந்து சட்ட விரோதமாக குடியேறியவர்களைக் கண்டறிதல், வெளியேற்றுதல் மற்றும் நாடு கடத்துதலை வலியுறுத்தி அனைத்து அஸ்ஸாம் மாணவர்களின் சங்கமானது அஸ்ஸாம் கிளர்ச்சியை முன்னின்று நடத்தியது.
- மேலும் அரசியல் உறுதியற்ற தன்மை, அடிக்கடி வேலைநிறுத்தம், தேர்தல்கள் புறக்கணிப்பு ஆகியவை அஸ்ஸாம் மாநிலத்தை சவாலான நிலைக்குத் தள்ளின.
- இந்தக் கிளர்ச்சியைக் கட்டுப்படுத்த 1985 ஆம் ஆண்டு ‘அஸ்ஸாம் ஒப்பந்தம்’ கையெழுத்திடப்பட்டது. இந்த அஸ்ஸாம் ஒப்பந்தமானது ராஜீவ் காந்தி மற்றும் அஸ்ஸாம் இயக்கத்தை வழி நடத்திய அனைத்து அஸ்ஸாம் மாணவர்கள் சங்கத்தின் (AASU – All Assam Students Union) தலைவர் மற்றும் அனைத்து அஸ்ஸாம் கன சங்ராம் பரிஷத் (AAGSP – All Assam Gana Sangram Parishad) ஆகியோர்களுக்கிடையே கையெழுத்தானது.
- ஆறு ஆண்டுகள் நடைபெற்ற வெளிநாட்டினருக்கு எதிரான கிளர்ச்சி 1985 ஆம் ஆண்டு ஏற்படுத்தப்பட்ட ‘அஸ்ஸாம் ஒப்பந்ததின்’ மூலம் முடிவுக்கு வந்தது. இந்த அஸ்ஸாம் ஒப்பந்தத்தில் 1971 ஆம் ஆண்டு மார்ச் 24 ஆம் தேதி குறிப்பு தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
குடியுரிமை
- அஸ்ஸாம் ஒப்பந்தத்திற்கு பின்பு 1966 ஆம் ஆண்டு ஜனவரி 1க்கு முன்பு வங்காள தேசத்திலிருந்து வந்த இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர்களுக்கு இந்தியக் குடியுரிமை வழங்குவதற்காக குடியுரிமைச் சட்டம் 1955 திருத்தப்பட்டது.
- 1966 ஆம் ஆண்டு ஜனவரி 1 முதல் 1971 ஆம் ஆண்டு மார்ச் 25 வரையிலான இடைப்பட்ட காலத்தில் வங்காள தேசத்திலிருந்து இந்தியாவிற்கு வந்தவர்கள், இந்தியக் குடியுரிமையைப் பெற மாநிலத்தில் தங்களைப் பதிவு செய்து, 10 ஆண்டுகள் அங்கு தங்கியிருக்க வேண்டும்.
- 1971 ஆம் ஆண்டு மார்ச் 25க்குப் பிறகு வந்தவர்கள் நாடுகடத்தப்படுவார்கள்.
தேசியக் குடிமக்கள் பதிவேடு – இறுதி வரைவு
- 2018 ஆம் ஆண்டு ஜூலை 30-ம் தேதி அஸ்ஸாம் மாநில அரசானது இறுதி தேசியக் குடிமக்கள் பதிவேட்டின் வரைவை வெளியிட்டது.
- இந்த வரைவின்படி , 3.29 கோடி மக்களுள் 2.9 கோடி மக்கள் தேசியக் குடிமக்கள் பதிவேட்டில் இணைப்பதற்கு தகுதியுடையவர்கள் என்று கண்டறியப்பட்டுள்ளது.
- இந்தப் பதிவேட்டில் சேர்க்கப்படாத07 லட்சம் மக்கள் ‘சட்ட விரோத குடியேறிகளாக’ அறிவிக்கப்பட்டுள்ளனர்.
- உண்மையான இந்தியக் குடிமக்களின் பெயர்களை இணைப்பதற்காக 1971 ஆம் ஆண்டு மார்ச் 24 ஆம் தேதியை குறிப்பு தினமாகக் கொண்டு, 1951 ஆம் ஆண்டிற்குப் பிறகு தேசியக் குடிமக்கள் பதிவேடு திருத்தம் செய்யப்பட்ட முதலாவது மாநிலம் அஸ்ஸாம் ஆகும்.
- முதலாவது தேசியக் குடிமக்கள் பதிவேடானது இந்த ஆண்டின் தொடக்கத்தில் டிசம்பர் 31 மற்றும் ஜனவரி 1க்கு இடைப்பட்ட நள்ளிரவில்9 கோடி மக்களின் பெயர்களுடன் வெளியிடப்பட்டது.
சேர்க்கப்படாத 40 லட்சம் மக்கள்
- இணைக்கப்படாத 40 லட்சம் மக்கள் தங்களின் கோரிக்கைகள் மற்றும் ஆட்சேபணைகளை தகுந்த ஆதாரங்களுடன் மறு ஆய்வுக்காக சமர்ப்பிக்கலாம்.
- NRC அலுவலகம் கோரிக்கைப் படிவுகளை விநியோகம் செய்யும். பெயர் இணைக்கப்படாத மக்கள் இந்த கோரிக்கைப் படிவுகளை பூர்த்தி செய்து சமர்ப்பிக்க வேண்டும்.
- இந்த ஆவணங்கள் சரிபார்க்கப்பட்டு இறுதி வரைவில் பெயரைச் சேர்க்க ஏற்றுக் கொள்ளப்பட்டதா அல்லது நிராகரிக்கப்பட்டதா என்பதை NRC அலுவலகம் மற்றொரு தேதியில் வெளியிடும்.
- இறுதி NRC-ல் விடுபட்டவர்கள் வெளிநாட்டினருக்கான தீர்ப்பாயத்தில் முறையீடு செய்யலாம். இந்த தீர்ப்பாயம் வழங்கும் தீர்ப்பை எதிர்த்து உயர் நீதிமன்றத்தை அணுகலாம்.
NRC – ஐ செயல்படுத்துதல்
- தேசியக் குடிமக்கள் பதிவேட்டை சட்ட ரீதியிலான அமைப்புகள் (Statutory Authorities) நிர்வகிக்கின்றன. உதாரணம்: மாநில அரசாங்கத்தினால் நியமிக்கப்பட்ட உள்ளூர் பதிவாளர்கள் மற்றும் மாவட்ட ஆட்சியாளர்கள்.
- மாநில அரசாங்கத்தின் உயர் அதிகாரி NRC-ன் பல்வேறு வகையான செயல்பாடுகளை மக்கள் பதிவிற்கான பொதுப் பதிவாளருடன் (RGI – Registrar General of citizen Registration) இணைந்து பணிகளை ஒருங்கிணைப்பார்.
- - - - - - - - - -