TNPSC Thervupettagam

தேசியப் புலனாய்வுத் துறைச் சட்டம், 2008 – பாகம் 02

May 31 , 2024 30 days 152 0

(For English version to this please click here)

தேசியப் புலனாய்வுத் துறையை நிறுவுதல்

  • தேசியப் புலனாய்வுத் துறையானது 2009 ஆம் ஆண்டு, தேசியப் புலனாய்வுத் துறைச் சட்டம், 2008 என்ற சட்டத்தின் விதிகளின் கீழ், உருவாக்கப்பட்டது.
  • இது நாட்டின் மத்தியப் பயங்கரவாத எதிர்ப்பு குறித்த சட்ட அமலாக்கத் துறையாகும்.
  • 26/11 சம்பவம் என்று பிரபலமாக அறியப்படும், 2008 ஆம் ஆண்டு மும்பை பயங்கரவாதத் தாக்குதலின் பின்னணியில் தேசியப் புலனாய்வுத் துறை நிறுவப்பட்டது.

தலைமையகம் மற்றும் கிளை அலுவலகங்கள்

  • தேசியப் புலனாய்வுத் துறையின் தலைமையகம் புதுதில்லியில் உள்ளது.
  • கூடுதலாக, ஹைதராபாத், கௌஹாத்தி, மும்பை, லக்னோ, கொச்சி, கொல்கத்தா, ஜம்மு மற்றும் ராய்ப்பூர் ஆகிய அமைப்புசார் இடங்களில் நாடு முழுவதும் தேசியப் புலனாய்வுத் துறையின் கிளை அலுவலகங்கள் அமைந்துள்ளன.
  • தேசியப் புலனாய்வுத் துறைக்கு இந்த அலுவலகங்கள் நாடு முழுவதும் விசாரணைகளை திறம்பட ஒருங்கிணைத்து நடத்த உதவுகின்றன.

சிறப்புப் பிரிவு: TFFC அமைப்பு (பயங்கரவாத நிதி மற்றும் கள்ளப் பணத்தினைக் கண்டறிவதற்கான அமைப்பு)

  • தேசியப் புலனாய்வுத் துறையானது அதன் கிளை அலுவலகங்களுக்கு கூடுதலாக, TFFC அமைப்பு எனப்படும் ஒரு சிறப்புப் பிரிவை இயக்குகிறது.
  • இந்தச் சிறப்புப் பிரிவானது, போலி ரூபாய் நோட்டுகள் மற்றும் பயங்கரவாத நிதி தொடர்பான பிரச்சனைகளைத் தீர்ப்பதில் கவனம் செலுத்துகிறது.
  • பயங்கரவாத நடவடிக்கைகளை ஆதரிக்கும் நிதி வலைபின்னல் அமைப்புகளை சீர்குலைப்பதில் TFFC அமைப்பு முக்கியப் பங்கு வகிக்கிறது.

தலைமை மற்றும் நிர்வாக ஆட்சிமுறை

  • தேசியப் புலனாய்வுத் துறையானது, மத்திய அரசால் நியமிக்கப்பட்ட ஒரு தலைமை இயக்குநர் தலைமையில் உள்ளது.
  • தலைமை இயக்குநருக்கு ஒரு மாநிலத்தில் உள்ள காவல்துறை தலைமை இயக்குநருக்கு நிகரான அதிகாரங்கள் உள்ளன.
  • இந்திய அரசாங்கத்தின் உள்துறை அமைச்சகத்தின் நிர்வாகக் கட்டுப்பாட்டின் கீழ், தேசியப் புலனாய்வுத் துறை சட்டத்தின் கீழ் குறிப்பிடப்பட்டுள்ளக் குற்றங்களை விசாரிக்கவும், வழக்குத் தொடரவும் தேசிய புலனாய்வுத் துறையானது செயல்படுகிறது.

மாநில ஒத்துழைப்பு

  • மாநில அரசுகளானது தேசியப் புலனாய்வுத் துறைக்கு, தேசியப் புலனாய்வுத் துறைச் சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளக் குற்றங்களை விசாரிக்க முழு உதவி மற்றும் ஒத்துழைப்பை வழங்குகின்றன.
  • இந்தக் கூட்டு முயற்சியானது நாடு முழுவதும் பயனுள்ள சட்ட அமலாக்கத்தையும் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளையும் உறுதி செய்கிறது.

இந்தியாவில் தீவிரவாதத்தின் பின்னணி

  • இந்தியா அடிக்கடி பயங்கரவாதத் தாக்குதல்களுக்கு இலக்காக உள்ளது என்ற நிலையில்  இவை பெரும்பாலும் அண்டை நாடுகளில் இருந்து வருகிறது.
  • நகர்ப்புற மையங்கள் மற்றும் கிராமப்புறங்கள் உட்பட பல்வேறு பகுதிகளில் பயங்கரவாத தாக்குதல்கள் நடந்துள்ளன.

மாநிலங்களுக்கு இடையிலான சிக்கல் மற்றும் சர்வதேச இணைப்புகள்

  • பல பயங்கரவாதச் சம்பவங்களானது மாநில எல்லைகள் மற்றும் சர்வதேச அளவில் கூட சிக்கலான தொடர்புகளை வெளிப்படுத்துகின்றன.

  • இந்தச் சம்பவங்கள் பெரும்பாலும் ஆயுதங்கள் மற்றும் போதைப்பொருள் கடத்தல், கள்ள நோட்டுப் புழக்கம் மற்றும் எல்லை ஊடுருவல் போன்ற செயல்களை உள்ளடக்கியது.

மையப்படுத்தப்பட்ட புலனாய்வுத் துறையின் தேவை

  • பயங்கரவாதத்தின் பன்முகத் தன்மை மற்றும் அதன் தேசிய மாற்றங்களைக் கருத்தில் கொள்ளும் போது, ஒரு மையப்படுத்தப்பட்ட அமைப்பின் தேவை இருந்தது.
  • இந்தத் துறையானது, தேசிய அளவில் பயங்கரவாதம் தொடர்பான குற்றங்கள் மற்றும் பிற குற்றங்களை விசாரிக்கிறது.

தேசியப் புலனாய்வுத் துறையை நிறுவுவதற்கான பரிந்துரைகள்

  • பல்வேறு நிபுணர் குழுக்களும், இரண்டாவது நிர்வாகச் சீர்திருத்த ஆணையமும் அத்தகைய புலனாய்வுத் துறையை நிறுவ பரிந்துரை செய்தன.
  • இந்தப் பரிந்துரைகள் இந்தியாவின் வளர்ந்து வரும் பாதுகாப்புச் சவால்களை எதிர்கொள்வதில் ஒரு மையப்படுத்தப்பட்ட அமைப்பின் முக்கியத்துவத்தை வலியுறுத்தியது.

2008 ஆம் ஆண்டின் தேசியப் புலனாய்வுத் துறைச் சட்ட முன்மொழிவு

  • அரசாங்கம் கவனமாக பரிசீலித்த பிறகு, தேசியப் புலனாய்வுத் துறைச் சட்டம், 2008 என்ற சட்டத்தினை இயற்ற முன்மொழிந்தது.
  • இந்தப் புலனாய்வுத் துறைச் சட்டம் தொடர்பான சட்டங்களின் கீழ், குறிப்பிட்ட வழக்குகளை விசாரிக்க உடன்சார்ந்த அதிகார வரம்பு மற்றும் அதிகாரத்துடன் கூடிய தேசியப் புலனாய்வுத் துறையை நிறுவுவதை நோக்கமாகக் கொண்டது.

தேசியப் புலனாய்வுத் துறையின் செயல்பாடுகள்

விசாரணை மற்றும் வழக்கு

  • தேசியப் புலனாய்வுத் துறைச் சட்டத்தின் அட்டவணையில், பட்டியலிடப் பட்ட குற்றங்களை விசாரித்து அதன் மீது வழக்குத் தொடர்வதே தேசியப் புலனாய்வுத் துறையின் முதன்மைப் பணியாகும்.
  • இது பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளில் கவனம் செலுத்துவதோடு அது தொடர்புடைய வழக்குகளின் முழுமையான விசாரணையை உறுதி செய்கிறது.

தகவல் பகிர்வு

  • தேசியப் புலனாய்வுத் துறையானது பயங்கரவாதத்தை எதிர்க்கும் வகையில் உளவுத்துறை சார்ந்தத் தகவல்களை சேகரித்து, ஒருங்கிணைத்து, பகுப்பாய்வு செய்கிறது.
  • மத்திய மற்றும் மாநில அரசு மட்டங்களில் உள்ள சட்ட அமலாக்கப் பிரிவுகள் மற்றும் மற்றப் புலனாய்வு அமைப்புகளுக்கு இது முக்கிய உள்ளீடுகள் மற்றும் உளவுத்துறை சார்ந்த தகவல்களைப் பகிர்ந்து கொள்கிறது.

வழிகாட்டுதல் மற்றும் ஒத்துழைப்பு

  • இந்தப் புலனாய்வுத் துறையானது மத்திய மற்றும் மாநில அரசுகளின் மற்றப் புலனாய்வு நிறுவனம் மற்றும் விசாரணை நிறுவனங்களுக்கு உதவி வழங்குகிறது.
  • மேலும் இதன் புலனாய்வுத் திறன்களை மேம்படுத்த, தேவையான போது மற்ற நிறுவனத்தின் உதவியையும் நாடுகிறது.

வேகமான அமலாக்கம்

  • தேசியப் புலனாய்வுத் துறை சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள விதிகளை விரைவாகவும் திறம் படவும் செயல்படுத்துவதை உறுதி செய்ய தேவையான நடவடிக்கைகளை தேசியப் புலனாய்வுத் துறை எடுக்கிறது.
  • இதில் விசாரணை செயல்முறைகளை ஒழுங்குபடுத்துதல் மற்றும் சட்ட நடவடிக்கைகளை விரைவுபடுத்த சிறந்த நடைமுறைகளை பின்பற்றுதல் ஆகிய செயல்களைச் செய்கிறது.

குறிக்கோள்

நிபுணத்துவத்திற்கான அர்ப்பணிப்பு

  • தேசியப் புலனாய்வுத் துறையானது, அதனை ஒரு உயர் தொழில்முறை புலனாய்வுத் துறையாகக் கருதுகிறது என்பதோடு அதன் உயர்ந்த சர்வதேச தரத்தை நிலை நிறுத்தவும் உறுதி பூண்டுள்ளது.
  • ஒவ்வொரு அம்சத்திலும் அதன் முழுமையான தன்மையை உறுதி செய்து, துல்லியமாகவும் செயல்திறனுடனும் விசாரணைகளை நடத்த முயல்கிறது.
  • இந்தப் புலனாய்வுத் துறையானது பயங்கரவாத எதிர்ப்பு மற்றும் தேசியப் பாதுகாப்பு தொடர்பான விசாரணைகளில் சிறந்த துறையாக தன்னை நிலை நிறுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • தேசியப் புலனாய்வுத் துறையானது, தேசிய அளவில் புலனாய்வுத் தரத்தை உயர்த்த, உயர் பயிற்சி பெற்ற பணியாளர்கள் மற்றும் கூட்டாகப் பணிபுரியும் பணியாளர்களைக் கொண்டு உருவாக்க  முயல்கிறது.
  • தேசியப் புலனாய்வுத் துறையின் முக்கிய நோக்கங்களில் ஒன்று தற்போதுள்ள மற்றும் சாத்தியமான பயங்கரவாதக் குழுக்கள் அல்லது தனிநபர்களுக்கு எதிரான பாதுகாப்பை உருவாக்குவதாகும்.
  • புலனாய்வுத் துறையானது, அதன் நடவடிக்கைகள் மற்றும் விசாரணைகள் மூலம், பயங்கரவாத நடவடிக்கைகளைத் தடுப்பதையும், தேசியப் பாதுகாப்பை உறுதி செய்வதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.

மையப்படுத்தப்பட்ட தகவல் களஞ்சியம்

  • பயங்கரவாதம் தொடர்பான அனைத்துத் தகவல்களின் மையக் களஞ்சியமாக விளங்க தேசியப் புலனாய்வுத் துறை முயற்சிக்கிறது.
  • பயங்கரவாத நடவடிக்கைகள் பற்றியத் தரவுகளைச் சேகரித்து ஒழுங்கமைப்பதன் மூலம் புலனாய்வுத் துறையானது, தனது உளவுத்துறை திறன்களை மேம்படுத்துவதையும் தேசியப் பாதுகாப்பு முயற்சிகளை வலுப்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.

லட்சியம்

விரிவான விசாரணை 

  • அதிநவீன அறிவியல் முறைகளைப் பயன்படுத்தி பட்டியலிடப் பட்டக் குற்றங்கள் பற்றிய விரிவான விசாரணைகளை நடத்துதல், தம்மிடம் ஒப்படைக்கப்பட்ட அனைத்துக் வழக்குகளையும் விசாரிப்பதை உறுதி செய்ய உயர் தரத்தில் அமைப்புகளை அமைத்தல்.  

திறமை வாய்ந்த விசாரணை: 

  • பயனுள்ள மற்றும் விரைவான விசாரணைகளை உறுதி செய்தல் மற்றும்  சரியான நேரத்தில் நீதி வழங்கப் படுவதற்கு முன்னுரிமை அளிக்கிறது.

சிறப்பான தொழில்முறை மற்றும் ஒருமைப்பாடு: 

  • இத்துறையானது முழுவதும் தொழில்நிபுணத்துவம், முடிவுகள் சார்ந்த அமைப்பாக வளர்ச்சி அடைதல், இந்திய அரசியலமைப்பு மற்றும் சட்டங்களை நிலை நிறுத்துதல் மற்றும் மனித உரிமைகள் மற்றும் தனிமனித கண்ணியத்தைப் பாதுகாப்பதற்கு முன்னுரிமை அளித்தல்.

தொழிலாளர் வளர்ச்சி: 

  • தொடர்ச்சியான பயிற்சி மற்றும் சிறந்த வழிமுறைகள் மற்றும் நடைமுறைகளை வெளிப் படுத்துவதன் மூலம் தொழில்முறைப் பணியாளர்களை வளர்ச்சியடையச் செய்தல்.

அறிவியல் அணுகுமுறை: 

  • தமக்கு ஒதுக்கப்பட்ட கடமைகளை நிறைவேற்றுவதில் அறிவியல் மனப்பான்மை மற்றும் முற்போக்கான மனப்பான்மையைப் பயன்படுத்துதல்.

தொழில்நுட்ப ஒருங்கிணைப்பு: 

  • அனைத்து துறைசார் நடவடிக்கைகளிலும் செயல்திறனை மேம்படுத்த, நவீன முறைகள் மற்றும் அதிநவீனத் தொழில்நுட்பத்தை ஒருங்கிணைத்தல்.

கூட்டமைப்பு மற்றும் ஒத்துழைப்பு: 

  • சட்ட விதிகளின்படி மாநில அரசுகள், ஒன்றியப் பிரதேசங்கள் மற்றும் பிற சட்ட அமலாக்கத் துறைகளுடன் தொழில்முறை மற்றும் இணக்கமான உறவுகளைப் பேணுதல்.

மாநிலங்களுக்கு வழிகாட்டல்: 

  • பயங்கரவாத வழக்குகளை விசாரிப்பதில் அனைத்து மாநிலங்களுக்கும், புலனாய்வு அமைப்புகளுக்கும் உதவி வழங்குதல்.

தகவல் பகிர்வு: 

  • பயங்கரவாதம் தொடர்பான அனைத்துத் தகவல்களிலும் ஒரு விரிவான தரவுத் தளத்தை நிறுவுதல், அதனை நிர்வகித்தல் மற்றும் அதனை மாநிலங்கள் மற்றும் பிற தொடர்புடைய நிறுவனங்களுடன் பகிர்ந்து கொள்தல்.

சட்டப் பகுப்பாய்வு: 

  • மற்ற நாடுகளில் உள்ள பயங்கரவாதம் தொடர்பானச் சட்டங்களை ஆய்வு செய்தல் மற்றும் பகுப்பாய்வு செய்தல், மேலும் தற்போதுள்ள இந்தியச் சட்டங்களின் தன்மையைத் தொடர்ந்து மதிப்பீடு செய்தல் மற்றும் தேவையான மாற்றங்களை முன்மொழிதல்.

பொது மக்களின் நம்பிக்கை: 

  • பயங்கரவாதத்தை எதிர்த்துப் போராடுவதற்கு தன்னலமற்ற மற்றும் அச்சமற்ற முயற்சிகளின் மூலம் இந்திய குடிமக்கள் மத்தியில் நம்பிக்கையை உருவாக்குதல்.

விரிவான அதிகார வரம்பு

  • தேசியப் புலனாய்வுத் துறையானது இந்தியாவின் இறையாண்மை, பாதுகாப்பு மற்றும் ஒருமைப்பாட்டைக் குலைக்கும் குற்றங்களை விசாரிப்பதற்கும், வழக்குத் தொடருவதற்கும் ஒரே சமயத்தில் அதிகார வரம்பைக் கொண்டுள்ளது:

பயங்கரவாதம்:

  • இத்துறை குண்டுவெடிப்புகள், விமானம் மற்றும் கப்பல்கள் கடத்தல், அணுமின் நிலையங்கள் மீதான தாக்குதல்கள் போன்ற பயங்கரவாதத் தாக்குதல்களை ஆய்வு செய்கிறது.

சர்வதேசக் குற்றங்கள்:

  • சர்வதேச ஒப்பந்தங்கள், உடன்படிக்கைகள், மரபுகள் மற்றும் ஐ.நா தீர்மானங்களை நடைமுறைப் படுத்தும் சட்டங்களின் கீழ் குற்றங்களைக் கையாளுதல்.

விரிவாக்கப்பட்ட அதிகாரம்:

  • 2019 ஆம் ஆண்டு முதல், தேசிய புலனாய்வுத் துறையின் அதிகார வரம்பானது மனிதக் கடத்தல், கள்ள நோட்டு, தடை செய்யப்பட்ட ஆயுத உற்பத்தி அல்லது விற்பனை மற்றும் வெடி பொருட்கள் போன்ற குற்றங்கள் வரை விரிவடைகிறது.
  • இந்த விரிவுபடுத்தப்பட்ட அதிகாரம் தேசியப் புலனாய்வுத் துறைக்கு வெளிவரும் அச்சுறுத்தல்களைத் திறம்பட எதிர்கொள்ளவும், அதிக விழிப்புணர்வு மற்றும் செயல்திறனுடன் செயல்பட்டு தேசியப் பாதுகாப்பை நிலைநாட்டவும் உதவுகிறது.

தேசியப் புலனாய்வுத் துறை திருத்தச் சட்டம், 2019

மீள்பார்வை:

  • தேசியப் புலனாய்வுத் துறை திருத்தச் சட்டம், 2019, தேசியப் புலனாய்வுத் துறையின் திறன்கள் மற்றும் அதிகார வரம்பை மேம்படுத்த பல முக்கிய விதிகளை அறிமுகப்படுத்தியது. கீழ்க்கண்ட விதிகள் இதில் அடங்கும்:

விரிவாக்கப்பட்ட நிலப்பரப்பின் மீதான அதிகார வரம்பு:

  • இந்தியாவிற்கு அப்பால் பட்டியலிடப் பட்ட குற்றங்களைச் செய்யும் தனிநபர்களுக்கு தேசியப் புலனாய்வுத் துறை சட்டத்தின் விதிகளை விரிவுபடுத்துவதாகும்.
  • இதில் இந்தியக் குடிமக்கள் அல்லது தேசிய நலன்களைப் பாதிக்கும் குற்றங்களும் அடங்குகிறது.

தேசியப் புலனாய்வுத் துறை அதிகாரிகளுக்கு மேம்படுத்தப்பட்ட அதிகாரங்கள்:

  • தேசியப் புலனாய்வுத் துறை அதிகாரிகளுக்கு, இந்தியாவிற்குள் மட்டுமின்றி, நாட்டிற்கு வெளியே நடத்தப்படும் விசாரணைகளுக்கு, காவல்துறை அதிகாரிகளுக்கு நிகரான அதிகாரங்கள், கடமைகள், சலுகைகள் மற்றும் பொறுப்புகளை வழங்குகிறது.

மத்திய அரசின் உத்தரவுகள்:

  • மத்திய அரசுக்கு, இந்திய எல்லைக்கு அப்பால் செய்யப்படும் பட்டியலிடப் பட்ட குற்றங்கள் தொடர்பான வழக்குகளைப் பதிவு செய்து விசாரிக்க, அவற்றை உள்நாட்டுச் சம்பவங்களாகக் கருதிட தேசியப் புலனாய்வு துறைக்கு உத்தரவிட அதிகாரம் உள்ளது.
  • இந்த உத்தரவின் மூலம் தேசியப் புலனாய்வுத் துறையானது, நாடு கடந்த குற்றங்கள் இந்திய எல்லைக்குள் நடந்தால் அதே அதிகாரத்துடன் கையாள்வதற்கான அதிகார வரம்பை விரிவுபடுத்துகிறது.
  • மேலும் இது எல்லை தாண்டிய குற்றச் செயல்களை திறம்பட எதிர்த்துப் போராடும் அரசாங்கத்தின் திறனை மேம்படுத்துகிறது.
  • இந்த விதியானது வலுவான விசாரணை நடவடிக்கைகளின் மூலம், நாடு கடந்த குற்றங்கள் மற்றும் பயங்கரவாதத்தை எதிர்த்துப் போராடுவதற்கான இந்தியாவின் உறுதிப்பாட்டை வலுப்படுத்துகிறது.
  • மேலும் இந்த விதியானது, இந்தியாவின் தேசியப் பாதுகாப்பு மற்றும் நலன்களைப் பாதிக்கும் வகையில் வெளிநாட்டில் மேற்கொள்ளப் படும் குற்றங்களுக்கு எதிராக நீதியை வழங்க தேசியப் புலனாய்வுத் துறைக்கு அதிகாரம் அளிக்கிறது.

சிறப்பு நீதிமன்றங்கள்:

  • தேசியப் புலனாய்வுத் துறை சட்டத்தின் கீழ் வழக்குகளைத் தீர்ப்பதற்கான சிறப்பு நீதிமன்றங்களாக அமர்வு நீதிமன்றங்களை நியமிக்க மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு அதிகாரம் உள்ளது.
  • இந்தச் சிறப்பு நீதிமன்றங்கள் தேசியப் புலனாய்வுத் துறையின் அதிகார வரம்பிற்கு உட்பட்ட குற்றங்களுக்கான விரைவான மற்றும் திறமையான சட்ட நடவடிக்கைகளை உறுதி செய்கிறது.
  • அமர்வு நீதிமன்றங்களைச் சிறப்பு நீதிமன்றங்களாக நியமிப்பதன் மூலம், அரசாங்கமானது விசாரணைச் செயல்முறையை ஒழுங்குபடுத்துவது மற்றும் பயங்கரவாதம் மற்றும் ஒழுங்கமைக்கப் பட்ட குற்றங்களை எதிர்த்துப் போராடுவதன் மூலம் சட்ட அமலாக்கத்தின் செயல்திறனை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • இந்த விதியின் கீழ் நிறுவப்பட்ட சிறப்பு நீதிமன்றங்கள், தேசியப் புலனாய்வுத் துறை சட்டத்தின் கீழ் வழக்குகளை உடனடியாகவும், திறம்படக் கையாளத் தேவையான அதிகார வரம்பையும், அதிகாரத்தையும் கொண்டுள்ளன.
  • சிறப்பு நீதிமன்றங்களின் பங்களிப்பானது, விரைவான நீதியை உறுதி செய்வதற்கும், தேசியப் பாதுகாப்பைப் பேணுவதற்கும் அரசாங்கத்தின் உறுதிப்பாட்டினை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.

பட்டியலிடப் பட்ட குற்றங்களின் விரிவாக்கம்:

  • தேசியப் புலனாய்வுத் துறைச் சட்டத்தின் அட்டவணையில் புதிய குற்றங்களைச் சேர்த்தல், வளர்ந்து வரும் அச்சுறுத்தல்கள் மற்றும் சவால்களைத் திறம்பட எதிர்கொள்ள புலனாய்வுத் துறையை மேம்படுத்துகிறது.

-------------------------------------

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்