TNPSC Thervupettagam

தேசிய சுகாதாரக் கொள்கை 2017

January 24 , 2019 2178 days 13372 0
தேசிய சுகாதாரக் கொள்கை
  • ஐந்தாண்டுத் திட்டங்களில் உள்ள சுகாதாரத் துறைகளுக்கான அணுகுமுறைகளுக்கு 1983 ஆம் ஆண்டின் தேசிய சுகாதாரக் கொள்கை மற்றும் 2002 ஆம் ஆண்டின் தேசிய சுகாதாரக் கொள்கை ஆகிய இரண்டும் வழிகாட்டியாக இருந்தன.
  • சுகாதார முன்னுரிமைகள் மாறிக் கொண்டிருக்கின்றன. தாய் மற்றும் குழந்தைகள் இறப்பு கணிசமான அளவில் குறைந்திருத்தாலும் தொற்றா நோய்கள் மற்றும் சில தொற்றும் நோய்களின் பாதிப்புகள் இன்னும் அதிகரித்துக் கொண்டிருக்கின்றன.
  • முக்கியமான மாற்றம் என்னவெனில் வலுவான சுகாதாரத் துறையானது இரட்டை இலக்கத்தில் வளர்ந்து வருவதாக மதிப்பிடப்பட்டுள்ளது.
  • மற்றொரு முக்கியமான மாற்றம் என்னவெனில், வறுமைக்கு முக்கியமாக பங்களிக்கக் கூடியதில் ஒன்றான சுகாதாரச் செலவுகளின் நிகழ்வுகள் தற்பொழுது அதிகரித்து வருகின்றன.
  • வளர்ந்து வரும் பொருளாதார வளர்ச்சியானது சுகாதாரத்தின் மீதான நிதித் திறனை மேம்படுத்துகிறது.

 புதிய கொள்கை - 2017

  • 03.2017 அன்று பிரதம அமைச்சர் தலைமையிலான மத்திய அமைச்சரவையின் கூட்டத்தின் போது தேசிய சுகாதாரக் கொள்கை – 2017ற்கு ஒப்புதல் வழங்கப்பட்டது.
  • அனைவருக்கும் மலிவான தொகையில் சுகாதார நலச் சேவைகளை வழங்குதல் மற்றும் நாடு தழுவிய சுகாதாரக் காப்பீடு அளித்தல் ஆகியவை இதன் நோக்கங்களாகும்.

 இலக்குகள்

  • இக்கொள்கையானது அனைவருக்கும் சுகாதார நலத்தை குறிப்பாக போதிய வசதியில்லாதவர்கள் அல்லது வாழ்வாதாரத்தில் பின்தங்கியவர்கள் உள்பட அனைவருக்கும் உறுதி செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

  • சுகாதார சேவைகளைப் பெறுதல், தரத்தை மேம்படுத்துதல் மற்றும் குறைந்த செலவில் சுகாதார சேவைகளை வழங்குதல் ஆகியவற்றின் மூலம் இதை அடைய முடியும்.
நோக்கங்கள்
  • அனைத்துத் துறைகளின் ஒருங்கிணைந்த கொள்கை நடவடிக்கை மூலமும் பொது சுகாதாரத் துறையின் மூலமும் நோய்களைத் தடுத்தல், நோய்களை குணப்படுத்துதல், வலி நிவாரணிகள் மற்றும் மறுவாழ்வு சேவைகளை அளித்தல் ஆகியவற்றின் மூலம் சுகாதார நிலையை மேம்படுத்துதல்.
குறிப்பிட்ட இலக்குகள் மற்றும் நோக்கங்கள்
  • சுகாதார நிலை மற்றும் திட்டத்தின் தாக்கம்.
வாழ்நாள் கால அளவு மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கை
  • 2025 ஆம் ஆண்டில் பிறப்பின் போதான வாழ்நாள் கால அளவை 67.5 வயதிலிருந்து 70 ஆக அதிகரித்தல்.
  • 2022 ஆம் ஆண்டில் முக்கியமான நோய்கள் மற்றும் அதன் முக்கியமான வகைகளை மதிப்பிடுவதற்காக "இயலாமையால் பாதிக்கப்பட்ட வாழ்நாள் ஆண்டுகளின்” (Disability Adjusted Life Years - DALY) மீது வழக்கமான கண்காணிப்பை ஏற்படுத்துதல்.
  • 2025 ஆம் ஆண்டில் தேசிய (நாடு) மற்றும் தேசியத்திற்குக் கீழுள்ள நிலையில் (மாநிலம்) மொத்த கருவுறுதல் வீதத்தை1 என்ற அளவிற்கு குறைத்தல்.
 வயது அடிப்படையிலான இறப்பு
  • 2025 ஆம் ஆண்டில் ஐந்து வயதிற்குக் கீழுள்ளவர்களின் இறப்பை 23 ஆகக் குறைத்தல். மேலும் 2020 ஆம் ஆண்டில் தாய் இறப்பு விகிதத்தை தற்போதைய நிலையிலிருந்து 100 ஆக குறைத்தல்.
  • 2019 ஆம் ஆண்டில் குழந்தை இறப்பை 28 ஆக குறைத்தல்.
  • 2025 ஆம் ஆண்டில் பச்சிளங்குழந்தைகளின் இறப்பை 16 ஆக குறைத்தல்.
நோய்களின் தாக்கம் மற்றும் அதன் நிகழ்வுகளைக் குறைத்தல்
  • எச்ஐவி / எய்ட்ஸ்களுக்கான இலக்குகள் என்று அழைக்கப்படும் 90 : 90 : 90 என்ற சர்வதேச இலக்குகளை 2020 ஆம் ஆண்டில் அடைதல்.
  • 2018 ஆம் ஆண்டில் தொழுநோயையும் 2017 ஆம் ஆண்டில் காலா அசார் (கருங்காய்ச்சல்) நோயையும் 2017 ஆம் ஆண்டில் யானைக்கால் நோயையும் முற்றிலும் ஒழித்த நிலையைத் தொடருதல்.

  • 2025 ஆம் ஆண்டில் கண் பார்வையற்றோரின் எண்ணிக்கையை 1000ற்கு 0.25 ஆகக் குறைத்தல். மேலும் நோய் பாதிப்பைத் தற்போதைய நிலையிலிருந்து மூன்றில் ஒரு பகுதியாகக் குறைத்தல்.
  • 2025 ஆம் ஆண்டில் இருதயம் தொடர்பான நோய்கள், புற்றுநோய், நீரிழிவு நோய் மற்றும் நீண்ட நாட்களாகத் தொடரும் சுவாச நோய்கள் ஆகியவற்றின் மூலம் ஏற்படும் இறப்பை 25% குறைத்தல்.

சுகாதார அமைப்புகளின் செயல்பாடுகள்

சுகாதார சேவைகள்
  • 2025 ஆம் ஆண்டில் பொது சுகாதார வசதிகளைத் தற்போதைய நிலையிலிருந்து 50 சதவிகிதம் அதிகரித்தல்.
  • 2025 ஆம் ஆண்டில் பிறப்பிற்கு முந்தையப் பாதுகாப்பை 90 சதவிகிதத்திற்கு அதிகமாகவும் பிறப்பின்போது முறையான மருத்துவ முறையின் மூலம் குழந்தை பிறத்தலை 90 சதவிகிதத்திற்கு அதிகமாகவும் நிகழச் செய்தல்.
  • 2025 ஆம் ஆண்டில் புதிதாக பிறந்த குழந்தைக்கு அதன் ஒரு வயது வரை அனைத்து விதமான தடுப்பு மருந்துகளையும் 90 சதவிகிதத்திற்கு மேல் வழங்குதல்.
  • 2025 ஆம் ஆண்டில் தேசிய மற்றும் மாநில அளவில் குடும்பக் கட்டுப்பாட்டின் தேவையை 90 சதவிகிதத்தற்கு மேல் நிறைவு செய்தல்.
  • 2025 ஆம் ஆண்டில் குடும்பத்தில் உள்ள தனிப்பட்ட நபர்களின் உயர் இரத்த அழுத்தம் மற்றும் நீரிழிவு நோய்களின் "கட்டுப்படுத்தப்பட்ட நோய்களின் நிலைமையை" 80 சதவிகிதமாக தொடரச் செய்தல்.
சுகாதாரம் தொடர்பான மற்ற துறைகளின் இலக்குகள்
  • புகையிலைப் பயன்பாட்டினால் ஏற்படும் நோய்களின் காரணமாக அதன் தற்போதையப் பயன்பாட்டினை 2020 ஆம் ஆண்டில் 15 சதவிகிதமாகவும் 2025 ஆம் ஆண்டில் 30 சதவிகிதமாகவும் குறைத்தல்.
  • 2025 ஆம் ஆண்டில் ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளின் உயரம் குறைவாக இருத்தல் என்ற குறைவின் தாக்கத்தை 40 சதவிகிதமாகக் குறைத்தல்.
  • 2020 ஆம் ஆண்டில் பாதுகாப்பான குடிநீர் மற்றும் துப்புரவு ஆகியவற்றை அனைவரும் பெறும்படி செய்தல் (சுவச் பாரத் திட்டம்).
  • 2020 ஆம் ஆண்டில் தொழில்சார் பாதிப்புகளை தற்போதைய ஒரு லட்சம் விவசாயப் பணியாளர்களுக்கு 334 விவசாயப் பணியாளர்கள் என்ற நிலையிலிருந்துப் பாதியாகக் குறைத்தல்.
  • தேசிய மற்றும் மாநில அளவில் குறிப்பிட்ட சுகாதார நிலையைக் கண்காணித்தல்.

சுகாதார அமைப்புகளை வலுப்பெறச் செய்தல்

சுகாதார நிதி
  • 2025 ஆம் ஆண்டில் அரசினால் சுகாதாரத் துறைக்கு செலவிடப்படும் தற்போதைய நிலையான மொத்த உள்நாட்டு உற்பத்தியின் 1.15 சதவிகிதத்திலிருந்து 2.5 சதவிகிதமாக அதிகரிக்கச் செய்தல்.
  • 2020 ஆம் ஆண்டில் மாநில சுகாதாரச் செலவினங்களை அதன் பட்ஜெட்டில் 8 சதவிகிதத்திற்கும் மேல் அதிகரிக்கச் செய்தல்.
  • 2025 ஆம் ஆண்டிற்குள்ளாக குடும்பங்கள் தீடீரென்று எதிர்கொள்ளும் சுகாதார செலவினங்களை தற்போதைய நிலையிலிருந்து 25% ஆகக் குறைத்தல்.
சுகாதார கட்டமைப்பு மற்றும் மனித வளம்
  • 2020 ஆம் ஆண்டில் உயர் முன்னுரிமை மாவட்டங்களில் இந்தியப் பொது சுகாதார தர நிலையின் விதிமுறைகளின்படி அவசர காலங்களில் உதவக் கூடிய மருத்துவர்கள் மற்றும் உதவியாளர்களின் எண்ணிக்கையை உறுதி செய்தல் (IPHS – Indian Public Health Standard).
  • 2025 ஆம் ஆண்டில் உயர் முன்னுரிமை மாவட்டங்களில் IPHS – விதிமுறைகளின்படி மொத்த மக்கள் தொகையில் சமூக சுகாதார தன்னார்வலர்களின் விகிதத்தை அதிகரிக்கச் செய்தல்.
  • 2025 ஆம் ஆண்டில் உயர் முன்னுரிமை மாவட்டங்களில் IPHS – விதிமுறைகளின்படி ஆரம்ப துணை சுகாதார நிலையங்கள் மற்றும் துணை சுகாதார நிலையங்களை ஏற்படுத்துதல்.
சுகாதார மேலாண்மை
  • 2020 ஆம் ஆண்டில் சுகாதார அமைப்புகள் மீதான மாவட்ட நிலையிலான மின்னணுத் தரவுதள தகவல்களை உறுதி செய்தல்.
  • 2020 ஆம் ஆண்டில் பொது சுகாதார முக்கியத்துவம் வாய்ந்த நோய்களுக்கான பதிவுகளை ஏற்படுத்துதல் மற்றும் சுகாதார அமைப்புகளை வலுப்பெறச் செய்தல்.

  • 2025 ஆம் ஆண்டில் தேசிய சுகாதார தகவல் அமைப்பு, சுகாதார தகவல் பரிமாற்றம் மற்றும் ஒருங்கிணைந்த சுகாதார தகவல் மையம் ஆகியவற்றை ஏற்படுத்துதல்.

 கொள்கையின் அம்சங்கள்

  • போதிய முதலீட்டை உறுதி செய்தல் - குறிப்பிட்ட கால அளவில் பொது சுகாதார செலவினத்தை மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 2.5 சதவிகிதத்திற்கு அதிகரிக்க ஒரு சாத்தியமான அடையக் கூடிய இலக்கை இந்த திட்டம் பரிந்துரைக்கிறது.
  • முன்னெச்சரிக்கை மற்றும் மேம்படுத்து சுகாதாரம் - இந்த கொள்கையானது சுகாதாரச் சூழலை மேம்படுத்துவதற்கான ஏழு முன்னுரிமைப் பகுதிகளின் மீதான ஒத்துழைப்பு நடவடிக்கையைக் கண்டறிந்துள்ளது. அவையாவன
    • சுவச் பாரத் அபியான்
    • சமப்படுத்தப்பட்ட ஆரோக்கியமான உணவுகள் மற்றும் தொடர் உடற்பயிற்சிகள்
    • புகையிலை, மது மற்றும் போதைப் பொருள்களின் தவறான பயன்பாடுகளின் மீது கவனம் செலுத்துவது.
    • யாத்ரி சுரக்ஷா - இரயில் மற்றும் சாலை நெரிசல் விபத்துகளால் ஏற்படும் இறப்புகளைத் தடுத்தல்.
    • நிர்பயா நாரி – பாலின வன்முறைக்கு எதிரான நடவடிக்கை
    • பணியிடங்களில் மன அழுத்தத்தைக் குறைத்தல் மற்றும் பாதுகாப்பை மேம்படுத்துதல்
    • வெளிப்புற மற்றும் உள்புற காற்று மாசுபாட்டைக் குறைத்தல்.
  • பொது சுகாதார சேவை வழங்கும் அமைப்பு : இக்கொள்கையானது சுகாதார நல சேவைகளை ஒருங்கிணைப்பதில் ஏழு முக்கியமான கொள்கை மாற்றங்களை பரிந்துரைக்கிறது.

------------

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்