TNPSC Thervupettagam

தேசிய பல் பரிமாண வறுமைக் குறியீடு, 2023 - தமிழ்நாடு

October 17 , 2024 38 days 589 0

தேசிய பல் பரிமாண வறுமைக் குறியீடு, 2023 - தமிழ்நாடு

(For English version to this please click here)

அறிமுகம்

  • வறுமையானது நீண்ட காலமாக, முதன்மையாக வருமானம் மற்றும் நுகர்வு ஆகியவற்றின் மூலம் புரிந்து கொள்ளப் படுவதோடு, தனிநபர் அல்லது குடும்பத்தின் பொருளாதார நிலையை மதிப்பிடுவதற்கான பண அளவீடுகளிலும் அது கவனம் செலுத்துகிறது.
  • இருப்பினும், இந்த குறுகியப் பார்வை பெரும்பாலும் வறுமையின் சிக்கலான உண்மைகளை அறியத் தவறி விடுகிறது.
  • NITI ஆயோக் உருவாக்கிய தேசிய பல் பரிமாண வறுமைக் குறியீடு (MPI), பல் பரிமாணங்கள் மூலம் வறுமையை மதிப்பிடுவதற்கு அல்கிரே போஸ்டர் முறையைப் பயன்படுத்துவதன் மூலம் மிகவும் முழுமையான அணுகுமுறையை முன்னெடுக்கிறது.
  • 10 குறிகாட்டிகளைக் கருதும் உலகளாவிய MPI போலல்லாமல், தேசிய MPI ஆனது 12 குறிகாட்டிகளை உள்ளடக்கியது என்பதோடு, இது பற்றாக்குறையைப் பற்றிய சிறந்த புரிதலை வழங்குகிறது.
  • இந்தப் பகுப்பாய்வானது வறுமைக் குறைப்பு மற்றும் காலப்போக்கில் பல் பரிமாண வறுமையில் உள்ள நபர்களின் எண்ணிக்கையில் ஏற்படும் சரிவின் போக்குகளை ஆராய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • பல் பரிமாண வடிவங்கள் மூலம், இந்தப் போக்குகளை ஆராய்வதன் மூலம், வறுமை ஒழிப்பு முயற்சிகளின் செயல்திறனையும், தொடர்ந்து இருக்கும் சவால்களையும் நாம் நன்றாகப் புரிந்து கொள்ள முடியும்.

தமிழ்நாட்டின் வறுமைக் குறிகாட்டிகளின் கண்ணோட்டம்

  • 2015-16 ஆம் ஆண்டு மற்றும் 2019-21 ஆம் ஆண்டிற்கு இடைப்பட்ட காலக் கட்டத்தில், தமிழ்நாட்டில் பல் பரிமாண வறுமையில் குறிப்பிடத்தக்க ஏழ்மைக் குறைவு ஏற்பட்டுள்ளதாக வழங்கப்பட்ட தரவு காட்டுகிறது.
  • வறுமைக் கோட்டிற்குக் கீழ் வாழும் மக்களின் விகிதத்தை அளவிடும் வறுமை விகிதம் 4.76% லிருந்து 2.20% ஆகக் குறைந்துள்ளது.
  • கூடுதலாக, வறுமையின் தீவிரம், ஏழை மக்கள் மத்தியில் வறுமையின் தீவிரத்தைச் சுட்டிக் காட்டுவதோடு, இது 39.97%லிருந்து 38.70% ஆக குறைந்துள்ளது.
  • இதன் விளைவாக, ஒட்டு மொத்தப் பல் பரிமாண வறுமைக் குறியீடு (MPI) 0.019லிருந்து 0.009 ஆகக் குறைந்தது.
  • இந்தக் கண்டுபிடிப்புகள் தமிழ்நாட்டில் வறுமை ஒழிப்பு முயற்சிகள் அதன் குடிமக்களின் வாழ்க்கையை மேம்படுத்துவதில் வெற்றி பெற்றுள்ளன என்பதை எடுத்துரைகின்றன.
  • இந்தக் குறிகாட்டிகள் பல் பரிமாண வறுமையைக் குறைப்பதில் தமிழகத்தின் முன்னேற்றத்தைக் கூட்டாக எடுத்துக்காட்டுகின்றன மற்றும் தொடர்ந்து கவனம் செலுத்த வேண்டிய பகுதிகளையும் முன்னிலைப்படுத்துகின்றன.

தமிழ்நாட்டின் கிராமப்புற மற்றும் நகர்ப்புறங்களில் பல் பரிமாண வறுமை

  • தமிழகத்தில் 2015-16 ஆம் ஆண்டு மற்றும் 2019-21 ஆம் ஆண்டிற்கு இடையில் பல் பரிமாண வறுமை கணிசமாக குறைந்துள்ளது.
  • நகர்ப்புறங்களுடன் ஒப்பிடுகையில் கிராமப்புறங்களில் வறுமையில் கணிசமான குறைப்பு ஏற்பட்டுள்ளது என்பதோடு வறுமை விகிதத்தில் 59.67% குறைவு மற்றும் MPI குறியீட்டில் 62.07% குறைவு ஏற்பட்டுள்ளது.
  • மேலும் வறுமையின் தீவிரம் இரு பகுதிகளிலும் ஒப்பீட்டளவில் நிலையானதாக இருந்தது.
  • இந்தக் கண்டுபிடிப்புகள் கிராமப்புறங்களில் இலக்குசார் தலையீடுகள் வறுமையைக் குறைப்பதில் பயனுள்ளதாக இருந்ததாகக் கூறுகின்றன.

  • 2015-16 ஆம் ஆண்டு மற்றும் 2019-21 ஆண்டுகளில் தமிழ்நாட்டில் பல் பரிமாண வறுமையின் கலவையை இந்தப் படங்கள் காட்டுகின்றன.
  • வறுமையின் மூன்று பரிமாணங்களாகக் கருதப்படுவது சுகாதாரம், கல்வி மற்றும் வாழ்க்கைத் தரம்.
  • ஒவ்வொரு பரிமாணத்திலும், ஊட்டச்சத்து, குழந்தைகள் மற்றும் இளம் பருவத்தினரின் இறப்பு, தாய்வழி ஆரோக்கியம், பள்ளிப் படிப்பு ஆண்டுகள், பள்ளி வருகை, சுகாதாரம், வீடு, குடிநீர், மின்சாரம், சொத்துக்கள் மற்றும் வங்கிக் கணக்குகள் போன்ற பல்வேறு குறிகாட்டிகள் வறுமையை மதிப்பிடுவதற்குப் பயன்படுத்தப்படுகின்றன.

முக்கியக் கண்டுபிடிப்புகள்:

  • உடல்நலம்: சுகாதாரப் பராமரிப்பைப் பொறுத்த வரையில் பின்தங்கிய மக்களின் சதவீதம் 2015-16 ஆம் ஆண்டில் 31.02% ஆக இருந்து 2019-21 ஆம் ஆண்டில் 27.24% ஆகக் குறைந்துள்ளது.
  • இதற்கு முதன்மைக் காரணங்களாக ஊட்டச்சத்து மற்றும் குழந்தைகள் மற்றும் இளம்பருவ இறப்பு ஆகியவற்றில் ஏற்பட்ட மேம்பாடுகள் காரணமாகும்.
  • கல்வி: கல்விப் பற்றாக்குறை விகிதம் 25.70%லிருந்து 19.62% ஆகக் குறைந்துள்ளது என்ற நிலையில், பள்ளிப் படிப்பு மற்றும் பள்ளி வருகையின் ஆண்டுகளில் குறிப்பிடத்தக்க முன்னேற்றமும் ஏற்பட்டுள்ளது.
  • வாழ்க்கைத் தரம்: வாழ்க்கைத் தரமின்மை விகிதம் 43.05% இலிருந்து 41.99% ஆகக் குறைந்தது.
  • சுகாதாரம், வீடுகள் மற்றும் சொத்துக்களில் முன்னேற்றங்கள் காணப்பட்டன, ஆனால் மின்சாரம் மற்றும் வங்கிக் கணக்குகளில் பற்றாக்குறை நீடித்துள்ளது.
  • ஒட்டுமொத்தமாக, 2015-16 மற்றும் 2019-21 ஆகிய ஆண்டுகளுக்கு இடையில் தமிழ்நாட்டில் பல் பரிமாண வறுமை குறைந்துள்ளதாகத் தரவுகள் குறிப்பிடுகின்றன.
  • இருப்பினும், குறிப்பாக வாழ்க்கைத் தரம் மற்றும் சில சுகாதாரக் குறிகாட்டிகள் ஆகியவற்றில் இன்னும் முன்னேற்றத்திற்கு இடமிருக்கிறது.

உடல்நலம்:

  • ஊட்டச்சத்து: 24.77% மக்கள் ஊட்டச்சத்து குறைபாடு அல்லது உணவுப் பாதுகாப்பற்றவர்கள் ஆவர்.
  • குழந்தைகள் மற்றும் இளம்பருவ இறப்பு: 19.17% குழந்தைகள் மற்றும் இளம் பருவத்தினர் இறப்பு அல்லது மோசமான உடல்நலக் குறைபாடுகளால் ஆபத்தான நிலையில் உள்ளனர்.
  • தாய்வழி ஆரோக்கியம்: 1.15% கர்ப்பிணிப் பெண்கள், போதுமான தாய்வழி சுகாதாரம் காரணமாக இறப்பு அல்லது நோயுற்ற அபாயங்களை எதிர்கொள்கின்றனர்.

கல்வி:

  • பள்ளிப் படிப்பு ஆண்டுகள்: மக்கள் தொகையில் 0.84% ​​மட்டுமே கல்வியைப் பெற்றுள்ளனர்.
  • பள்ளி வருகை: 6.70% குழந்தைகள் மற்றும் இளம் பருவத்தினர் பள்ளியில் சேர்க்கப்படவில்லை.

வாழ்க்கைத் தரம்:

  • சமையல் எரிபொருள்: 3.31% வீடுகளுக்குத் தூய சமையல் எரிபொருள் கிடைக்கப் பெற வில்லை.
  • சுகாதாரம்: 6.61% வீடுகளுக்கு முறையான சுகாதார வசதிகள் இல்லை என்பதோடு அங்கு திறந்த வெளியில் மலம் கழிக்கும் பழக்கமும் உள்ளது.
  • குடிநீர்: 8.53% மக்களுக்குப் பாதுகாப்பான குடிநீர் கிடைக்கவில்லை.
  • மின்சாரம்: 1.03% வீடுகளுக்கு மின் இணைப்பு இல்லை.
  • வீட்டு வசதி: 1.30% குடும்பங்கள் மோசமான வீடுகளில் வாழ்கின்றனர்.
  • சொத்துக்கள்: 24.06% குடும்பங்களில் மரச் சாமான்கள், உபகரணங்கள் அல்லது கால்நடைகள் போன்ற அத்தியாவசியச் சொத்துக்கள் இல்லை.
  • வங்கிக் கணக்கு: 15.10% மக்கள், நிதி உள்ளடக்க ரீதியாக ஒதுக்கப் பட்டவர்கள் மற்றும் வங்கிக் கணக்கு இல்லாதவர்கள்.

உடல்நலம்:

  • ஊட்டச்சத்து: 2015-16 ஆம் ஆண்டில் 3.96% ஆக இருந்த மக்கள்தொகையில் 2.54% பேர் பல் பரிமாண ஏழைகளாகவும், 2019-21 ஆம் ஆண்டில் பின்தங்கியவர்களாகவும் உள்ளனர்.
  • குழந்தை மற்றும் இளம் பருவ இறப்பு: 2015-16 ஆம் ஆண்டில் 1.79%லிருந்து 2019-21 ஆம் ஆண்டில் 1.29% ஆகக் குறைந்துள்ளது.
  • தாய்வழி சுகாதாரம்: 2015-16 ஆம் ஆண்டில் 0.24%லிருந்து 2019-21 ஆம் ஆண்டில் 0.13% ஆகக் குறைந்துள்ளது.

கல்வி:

  • பள்ளிப் படிப்பு ஆண்டுகள்: 2015-16 ஆம் ஆண்டில் 2.24%லிருந்து 2019-21 ஆம் ஆண்டில் 1.29% ஆகக் குறைந்துள்ளது.
  • பள்ளி வருகை நாட்கள்: 2015-16 ஆம் ஆண்டில் 2.79%லிருந்து 2019-21 ஆம் ஆண்டில் 1.64% ஆகக் குறைந்துள்ளது.

வாழ்க்கைத் தரம்:

  • சமையல் எரிபொருள்: 2015-16 ஆம் ஆண்டில் 0.59%லிருந்து 2019-21 ஆம் ஆண்டில் 0.43% ஆகக் குறைந்துள்ளது.
  • சுகாதாரம்: 2015-16 ஆம் ஆண்டில் 4.42%லிருந்து 2019-21 ஆம் ஆண்டில் 1.86% ஆகக் குறைந்துள்ளது.
  • குடிநீர்: 2015-16 ஆம் ஆண்டில் 1.96%லிருந்து 2019-21 ஆம் ஆண்டில் 1.16% ஆகக் குறைந்துள்ளது.
  • மின்சாரம்: 2015-16 ஆம் ஆண்டில் 0.39%லிருந்து 2019-21 ஆம் ஆண்டில் 0.09% ஆகக் குறைந்து ள்ளது.
  • வீட்டுவசதி: 2015-16 ஆம் ஆண்டில் 0.41%லிருந்து 2019-21 ஆம் ஆண்டில் 0.24% ஆகக் குறைந்து உள்ளது.
  • சொத்துகள்: 2015-16 ஆம் ஆண்டில் 3.96%லிருந்து 2019-21 ஆம் ஆண்டில் 1.85% ஆகக் குறைந்து உள்ளது.
  • வங்கிக் கணக்கு: 2015-16 ஆம் ஆண்டில் 1.36%லிருந்து 2019-21 ஆம் ஆண்டில் 0.36% ஆகக் குறைந்துள்ளது.

முக்கியக் கண்டுபிடிப்புகள்:

  • பிராந்திய ஏற்றத்தாழ்வுகள்: தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் MPI மதிப்பெண்களில் குறிப்பிடத்தக்க வேறுபாடுகள் உள்ளன.
  • தெற்கு மற்றும் மேற்கு பிராந்தியங்களில் உள்ள சில மாவட்டங்கள் ஒப்பீட்டளவில் குறைந்த MPI மதிப்பெண்களைக் கொண்டுள்ளன என்பது குறைந்த அளவிலான வறுமையைக் குறிக்கிறது, அதே நேரத்தில் வடக்கு மற்றும் கிழக்குப் பகுதிகளில் உள்ள மாவட்டங்கள் அதிக MPI மதிப்பெண்களைக் கொண்டுள்ளன என்பது அதிக வறுமையைக் குறிக்கிறது.
  • வறுமையின் செறிவுகள்: நீலகிரி, ராமநாதபுரம் மற்றும் விருதுநகர் மாவட்டங்கள் போன்ற சில பகுதிகள், அதிக MPI மதிப்பெண்களைக் கொண்ட மாவட்டங்களின், அதிக செறிவைக் கொண்டுள்ளன என்பதோடு, இது இந்தப் பகுதிகளில் வறுமையை நிவர்த்தி செய்ய இலக்குசார் தலையீடுகளின் அதிக தேவையையும் குறிக்கிறது.
  • வறுமைக் குறைப்பில் முன்னேற்றம்: சில மாவட்டங்கள் வறுமையைக் குறைப்பதில் முன்னேற்றத்தைக் காட்டியுள்ளன என்பது முந்தைய கணக்கெடுப்புக் காலத்துடன் ஒப்பிடும் போது குறைவான MPI மதிப்பெண்கள் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது என்ற நிலையில் மற்றவை குறைந்த முன்னேற்றம் அல்லது வறுமை நிலைமையினை அதிகரித்துள்ளன.

ஒட்டு மொத்தச் செயல்திறன்:

  • இந்த வரைபடம் தமிழ்நாட்டில் பல் பரிமாண வறுமையின் இடஞ்சார்ந்தப் பரவலை எடுத்துக் காட்டுகிறது, பிராந்திய ஏற்றத்தாழ்வுகளை வெளிப்படுத்துகிறது மற்றும் வறுமையை நிவர்த்தி செய்வதற்கும் அதன் மூலம் குடிமக்களின் நல்வாழ்வை மேம்படுத்துவதற்கும் இலக்குசார் தலையீடுகள் முக்கியமானவையாக கருதப்படுகிறது.

குறிப்பிட்ட மாவட்ட ஒப்பீடுகள்:

  • தென் மாவட்டங்கள்: கன்னியாகுமரி, திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி போன்ற மாவட்டங்கள் பொதுவாக குறைந்த MPI மதிப்பெண்களைக் கொண்டிருக்கின்றன என்பது  வறுமையின் குறைந்த அளவைக் குறிக்கிறது.
  • வட மாவட்டங்கள்: நீலகிரி, ராமநாதபுரம் மற்றும் விருதுநகர் போன்ற மாவட்டங்கள் அதிக MPI மதிப்பெண்களைக் கொண்டுள்ளன என்பது அதிக வறுமை நிலைகளைக் குறிக்கிறது.
  • மத்திய மாவட்டங்கள்: சேலம், நாமக்கல் மற்றும் ஈரோடு போன்ற மாவட்டங்கள் அதிக மற்றும் குறைந்த MPI மதிப்பெண்களின் கலவையை வெளிப்படுத்துகின்றன என்பது இந்தப் பிராந்தியங்களில் வறுமையின் மாறுபட்ட நிலைகளைக் குறிக்கிறது.

இலக்குசார் தலையீடுகள்:

  • MPI மதிப்பெண்களின் அடிப்படையில், அதிக வறுமை உள்ள மாவட்டங்கள், குறிப்பிட்ட பற்றாக்குறை காரணிகளை நிவர்த்தி செய்யவும் அங்குள்ள மக்கள் நலனை மேம்படுத்தவும் இலக்குசார் தலையீடுகளுக்கு முன்னுரிமை அளிக்கலாம்.
  • இந்தத் தலையீடுகளில் கல்வி, சுகாதாரம், உள்கட்டமைப்பு மேம்பாடு மற்றும் வறுமை ஒழிப்புத் திட்டங்கள் ஆகியவை அடங்கும்.

தமிழ்நாடு மாவட்டங்களில் பல் பரிமாண வறுமை

  • 2019-21 (NFHS-5) மற்றும் 2015-16 (NFHS-4) ஆகிய ஆண்டுகளில் நடத்தப்பட்ட தேசிய குடும்ப நலக் கணக்கெடுப்பின் (NFHS) பல்வேறு தரவுகளின் அடிப்படையில், இது தமிழ்நாட்டின் ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள பல் பரிமாண ஏழ்மையில் உள்ள மக்கள்தொகையின் சதவீதத்தை வழங்குகிறது.

ஒவ்வொரு மாவட்டத்திற்கும் பல் பரிமாண வறுமை விகிதங்கள்:

  • புதுக்கோட்டையில் 11.14% ஆக பல் பரிமாண வறுமை விகிதம் உள்ளது, அதைத் தொடர்ந்து திண்டுக்கல் மாவட்டத்தில் அது 8.4% ஆக உள்ளது.
  • சென்னையில் மிகக் குறைந்த அளவில் பல் பரிமாண வறுமை விகிதம் 0.93% ஆக உள்ளது.
  • ஒப்பீட்டளவில் அதிகப் பல் பரிமாண வறுமை விகிதங்களைக் கொண்ட பிற மாவட்டங்களில் சிவகங்கை (8.64%), அரியலூர் (8.71%), மற்றும் நாகப்பட்டினம் (8.38%) ஆகியவை அடங்கும்.
  • ஒப்பீட்டளவில் குறைந்த பல் பரிமாண வறுமை விகிதங்களைக் கொண்ட மாவட்டங்களில் கோயம்புத்தூர் (2.29%), கன்னியாகுமரி (1.52%), மற்றும் வேலூர் (1.16%) ஆகியவை அடங்கும்.
  • ஒட்டு மொத்தமாக, தமிழ்நாட்டில் பல் பரிமாண வறுமை விகிதங்கள் NFHS-4 ஆய்விலிருந்து NFHS-5 ஆய்வின் போது குறைந்துள்ளது என்பதோடு இது வறுமையைக் குறைப்பதில் பெரு முன்னேற்றத்தைக் குறிக்கிறது.
  • இருப்பினும், மாவட்டங்களுக்கிடையில் மிக குறிப்பிடத்தக்க வேறுபாடுகள் இன்னும் உள்ளன, என்பதோடு மேலும், குறிப்பாக அதிக வறுமை விகிதங்களைக் கொண்ட மாவட்டங்களில் பல் பரிமாண வறுமையை நிவர்த்தி செய்ய அதிக முயற்சிகள் தேவைப்படுகின்றன.

தமிழ்நாட்டில் உள்ள மாவட்டங்களில் பல் பரிமாண வறுமையில் மாற்றங்கள்

  • தமிழ்நாட்டில் 2015-16 ஆம் ஆண்டு மற்றும் 2019-21 ஆம் ஆண்டிற்கு இடைப்பட்டக் காலத்தில் உள்ளவர்களின் எண்ணிக்கை விகிதத்தில் (பல் பரிமாண ஏழை மக்கள் விகிதம்) சதவீதத்தில் புள்ளி மாற்றத்தின் மாவட்ட வாரியான ஒப்பீட்டை இந்தப் படம் வழங்குகிறது.

முக்கியக் கண்டுபிடிப்புகள்:

  • ஒட்டுமொத்த முன்னேற்றம்: பெரும்பாலான மாவட்டங்களில் வறுமை விகிதம் குறைந்து உள்ளது என்பது பல் பரிமாண வறுமையின் குறைப்பைக் குறிக்கிறது.
  • கணிசமான குறைப்பு: புதுக்கோட்டை, பெரம்பலூர், விழுப்புரம் மற்றும் தூத்துக்குடி ஆகியவை பல் பரிமாண வறுமையில் குறிப்பிடத்தக்கச் சரிவைக் கண்டுள்ளன.
  • குறைந்தபட்ச மாற்றங்கள்: காஞ்சிபுரம், திருப்பூர் மற்றும் நீலகிரி போன்ற சில மாவட்டங்கள், மட்டும் அவற்றின் எண்ணிக்கை விகிதங்களில் குறைந்தபட்ச மாற்றங்களைச் சந்தித்துள்ளன.
  • அதிகரிப்பு: சென்னை மற்றும் திண்டுக்கல் ஆகிய இரண்டு மாவட்டங்களில் மட்டுமே பல் பரிமாண ஏழைகளின் மக்கள் தொகை விகிதத்தில் சிறிது அதிகரித்துள்ளன.

குறிப்பிட்ட மாவட்ட மாற்றங்கள்:

  • புதுக்கோட்டை: வறுமை விகிதம் 6.51 சதவீதம் குறைந்துள்ளது.
  • பெரம்பலூர்: வறுமை விகிதம் 5.82 சதவீதம் குறைந்துள்ளது.
  • விழுப்புரம்: வறுமை விகிதம் 5.66 சதவீதம் குறைந்துள்ளது.
  • தூத்துக்குடி: வறுமை விகிதம் 5.46 சதவீதம் குறைந்துள்ளது.
  • சென்னை: வறுமை விகிதம் 0.37 சதவீதம் அதிகரித்துள்ளது.
  • திண்டுக்கல்: வறுமை விகிதம் 0.10 சதவீதம் அதிகரித்துள்ளது.

  • மேற்கண்ட படமானது, NFHS-4 (2015-16) மற்றும் NFHS-5 (2019-21) ஆகியவற்றின் அடிப்படையில் ஒவ்வொரு மாவட்டத்தில் உள்ளவர்களின் எண்ணிக்கை, தீவிரம் மற்றும் பல் பரிமாண வறுமைக் குறியீடு (MPI) ஆகியவற்றை மையமாகக் கொண்டு, தமிழ்நாட்டில் உள்ள பல் பரிமாண வறுமையின் விரிவானப் பகுப்பாய்வை வழங்குகிறது.

வறுமை விகிதம்

  • பல் பரிமாண ஏழை மக்கள் தொகையின் விகிதத்தை அளவிடும் வறுமை விகிதம் பெரும்பாலான மாவட்டங்களில் குறைந்துள்ளது.
  • குறிப்பிடத்தக்க வீழ்ச்சி: அரியலூர் (8.73% முதல் 3.53%),
  • சென்னை (2.29% முதல் 0.96%),
  • கோவை (6.28% முதல் 3.78%),
  • கடலூர் (2.9% முதல் 1.76%),
  • தருமபுரி (5.16% முதல் 2.15%),
  • திண்டுக்கல் (4.18% முதல் 2.15%),
  • ஈரோடு (2.72% முதல் 1.4%),
  • காஞ்சிபுரம் (1.52% முதல் 0.67%),
  • கன்னியாகுமரி (2.9% முதல் 1.25%),
  • கரூர் (4.9% முதல் 2.11%),
  • கிருஷ்ணகிரி (4.4% முதல் 2.19%),
  • மதுரை (5.82% முதல் 1.38%),
  • நாகப்பட்டினம் (8.14% முதல் 1.81%),
  • நாமக்கல் (7.61% முதல் 1.79%),
  • பெரம்பலூர் (11.14% முதல் 4.3%),
  • புதுக்கோட்டை (13.14% முதல் 4.53%),
  • ராமநாதபுரம் (6.56% முதல் 2.44%),
  • சேலம் (5.5% முதல் 1.54%),
  • சிவகங்கை (7.23% முதல் 2.45%),
  • தஞ்சாவூர் (2.4% முதல் 1.36%),
  • நீலகிரி (8.64% முதல் 2.36%),
  • தேனி (4.7% முதல் 1.18%),
  • திருவள்ளூர் (2.5% முதல் 1.09%),
  • திருவாரூர் (5.7% முதல் 2.6%),
  • தூத்துக்குடி (6.9% முதல் 2.76%),
  • திருச்சிராப்பள்ளி (3.11% முதல் 1.96%),
  • திருநெல்வேலி (3.72% முதல் 1.94%),
  • திருப்பூர் (5.11% முதல் 2.57%),
  • திருவள்ளூர் (3.96% முதல் 1.09%),
  • விழுப்புரம் (7.25% முதல் 3.62%), மற்றும்
  • விருதுநகர் (6.9% முதல் 3.26% வரை) போன்ற அனைத்தும் மாவட்டங்களிலும் குறைந்துள்ளது.
  • பற்றாக்குறையின் செறிவு
  • பெரும்பாலான மாவட்டங்களில் ஏழை மக்கள் மத்தியில் பற்றாக்குறையின் செறிவு குறைந்து உள்ளது.
  • உதாரணமாக அரியலூரில் 41.75% ஆக இருந்து 36.92% ஆக பற்றாக்குறையின் செறிவு குறைந்து உள்ளது.

பல் பரிமாண வறுமைக் குறியீடு (MPI)

  • வறுமை விகிதம் மற்றும் தீவிரம் ஆகியவற்றை இணைக்கும் ஒட்டுமொத்த MPI ஆனது அனைத்து மாவட்டங்களுக்கும் குறைந்துள்ளது.
  • உதாரணமாக, சென்னையின் MPI 0.033 என்ற அளவில் இருந்து 0.014 ஆக குறைந்துள்ளது.

குறிப்பிட்ட மாவட்ட மாற்றங்கள்

  • சென்னை: வறுமை விகிதம் 2.29%லிருந்து 0.96% ஆக சற்று அதிகரித்துள்ள நிலையில், தீவிரம் 40.31%லிருந்து 37.14% ஆக குறைந்துள்ளது என்பதோடு இது நிலையான MPIக்கும் வழி வகுத்து உள்ளது.
  • திண்டுக்கல்: வறுமை விகிதம் மற்றும் தீவிரம் ஆகிய இரண்டும் அதிகரித்துள்ளதால், அதிக MPI வறுமை விகிதம் 4.18%லிருந்து 2.15% ஆகவும், தீவிரம் 38.67%லிருந்து 47.5% ஆகவும் அதிகரித்து உள்ளது.
  • சேலம்: வறுமை விகிதம் 5.5%லிருந்து 1.54% ஆகவும், தீவிரம் 44.74%லிருந்து 38.6% ஆகவும் கணிசமாகக் குறைந்துள்ளது, இருப்பினும், ஒட்டு மொத்த MPI 0.027லிருந்து 0.007 ஆக மேம்பட்டு உள்ளது.

முடிவுரை:

  • தமிழ்நாட்டின் பெரும்பான்மையான மாவட்டங்கள் பல் பரிமாண வறுமையைக் குறைப்பதில் முன்னேற்றம் அடைந்துள்ள நிலையில், குறிப்பிட்ட சில பிராந்தியங்கள் எதிர்கொள்ளும் தொடர்ச்சியான சவால்களை இந்தத் தரவு எடுத்துக் காட்டுகிறது.
  • வறுமையின் அடிப்படைக் காரணங்களைத் தீர்க்க, குறிப்பாக குறைந்த அல்லது முன்னேற்றம் இல்லாத மாவட்டங்களில் கூடுதல் முயற்சிகள் தேவைப்படுகின்ற.

                -------------------------------------

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்