TNPSC Thervupettagam

தொல்லியல் ஆய்வில் ஏஐ

March 12 , 2025 3 days 51 0

தொல்லியல் ஆய்வில் ஏஐ

  • செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம் தொல்லியல் துறையில் பல்வேறு ஆய்வுகளுக்கு உலக அளவில் பயன்பட்டு வருகிறது. அதைப் பயன்படுத்துவதற்கு முன் தொல்லியல் ஆய்வாளர்கள் அதை அறிந்து கொள்ள வேண்டியது அவசியம்.

ஏ.ஐ பயன்பாடு:

  • செயற்கை நுண்ணறிவின் இயந்திரக் கற்றல் (Machine learning), ஆழமாகக் கட்டமைக்கப்பட்ட கற்றல் அல்லது படிநிலைக் கற்றல் (Deep learning), தரவு அறிவியல் (Data Science), தரவுப் பகுப்பாய்வு (Data Analysis), ஆக்கமுறை செயற்கை நுண்ணறிவு (Generative Artificial Intelligence) உள்ளிட்ட பல்வேறு நுட்பங்கள் - படிமுறைகள் (algorithms) வழியாக இயங்குகின்றன. மேற்குறிப்பிட்ட உள்கூறுகளைக் கற்பதற்கு, அடிப்படையில் பைதன் (Python) போன்ற கணினி நிரல்களைத் தெரிந்துகொள்வது அவசியம்.
  • இத்தொழில்நுட்பம் தொல்பொருள் இடங்களைப் பல்வேறு லேசர் தொழில்நுட்பங்களின் உதவியுடன் கண்டறிவதற்கும், ஆய்வில் எடுக்கப்படுகிற பொருள்கள் சேதம் அடைந் தால் பொருள்களுடைய மறுகட்டமைப்புக்கும் பயன்படு கிறது. நரம்பு வலையமைப்புத் (Neural Network) தொழில்நுட்பம் வாயிலாக, அதன் சில நெறி முறைகள், கணினியில் உள்ளீடு செய்து வைக்கப்பட்டுள்ள தகவல்களின் அடிப்படையில் தொல்லியல் அகழாய்வுக்கான இடங்களை, கொடுக்கப்பட்டுள்ள படங்களின் அடிப்படையில் ஆய்வு செய்து வழங்கி, தொல்லியல் ஆய்வாளர்கள் தொல்லியல் தளத்தில் ஒரு குறிப்பிட்ட இடத்தில் அகழாய்வு செய்ய வேண்டிய பகுதியை அடையாளப் படுத்துகின்றன.
  • செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தில் உள்ள இயந்திரக் கற்றல் நுட்பம் பண்டைய கால எழுத்துப் பொறிப்புகளில் நீண்ட காலமாகத் தீர்க்க முடியாமல் இருக்கக்கூடிய சிக்கல்களைத் தீர்க்க முடியும். மறைக்குறியீடு பகுப்பாய்வில் (Cryptanalysis) இத்தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி சாத்தியமான குறிவிளக்கத் தொழில்நுட்பங்களை (Decoding Techniques) முறையாகப் பயன்படுத்த முடியும்.
  • குறியாக்கப்பட்ட எழுத்துகளை (Encoded Text) நிரல் நெறிமுறையின் வாயிலாகக் கணினிக்குள் செலுத்துவதன் மூலம் தொல்லியல் ஆய்வாளர்கள், கணினி பொறியாளர்களின் உதவி யோடு எழுத்துகளில் இருக்கக்கூடிய பல்வேறு குறியீட்டு முறைகளையும், எழுதப்பட்ட உத்திகளையும் இனங்காணுவதோடு, அவற்றிலுள்ள வரலாற்றுத் தகவல்களைத் துல்லியமாக அறிந்துகொள்வதற்கு மிகவும் பயன்படுகிறது.

ஆழ்கடல் அகழாய்விலும் ஏ.ஐ:

  • எலும்புக்கூடுகளில் உள்ள முக அடையாளங்களைக் காண்பதற்கும், உயிரியளவியல் பகுப்பாய்வுக்கும் (Biometric Analysis) இத்தொழில்நுட்பம் உலக அளவில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. ஆய்வா ளர்கள் முகத்தினுடைய முழுமையான கூறுகளைக் கணினி நிரல் வழிமுறைகளின் வாயிலாக மறு கட்டமைப்பு செய்ய முடியும். எலும்புக்கூடுகளில் இருக்கக்கூடியக் கூறுகளை அடையாளம் காண்ப தோடு, இறந்த தற்கான காரணம், உடல்நிலை எவ்வாறு இருந்தி ருக்கும் என்பனவற்றை ஆய்வு செய்வதற்கு இத்தொழில்நுட்பம் பயன்படுகிறது.
  • ஆழ்கடல் அகழாய்வில் எதிரொலிக்கருவி வரை படம் (Sonar Mapping), முன்கணிப்பு மாதிரி (Predictive Modelling) மற்றும் இயந்திர கற்றல் வழிமுறைகள் போன்ற செயற்கை நுண்ணறிவுக் கருவிகள் மூலம், ஆராய்ச்சியாளர்கள் இப்போது கடல் தளத்தின் பரந்த பகுதிகளை இணையற்ற துல்லியத்துடன் ஆராய்ந்து, பகுப்பாய்வு செய்ய முடிகிறது. மேலும் ஒருகாலத்தில் அடைய முடியாதவை என்று கருதப் பட்ட, நீண்டகாலமாகக் கண் டெடுக்க முடியாமல் இருந்த கலைப்பொருள்களைக் கண்டறிய முடிகிறது.
  • மேலும், செயற்கை நுண்ணறிவுத் தொழில் நுட்பத்தின் அடுத்தகட்ட வளர்ச்சி நிலையாக இருக்கக் கூடிய மிகை மெய்நிலை (Augmented Reality), மெய் நிகர் உண்மை (Virtual Reality) உள்ளிட்ட தொழில் நுட்பங்கள் தொல்லியல் ஆய்வில் இன்றைக்கு உலக அளவில் அதிகமாகப் பயன்படுத்தப்படுகின்றன. இவை பண்டைய காலத் தொல் பொருள்கள், இடங்களை முப்பரிமாண கோணத்தில் உருவாக்கி பார்வை யாளர்கள் கடந்த காலத்தோடு பயணிக்கக்கூடிய உணர்வை ஏற்படுத்தி பரவசத்தில் ஆழ்த்துகின்றன.
  • இத்தகைய செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தை இந்திய அளவில் தொல்லியல் ஆய்வாளர்கள் பயன்படுத்தத் தொடங்கினால், வரலாற்றை, இன்னும் ஆழமாக துல்லியமாக மெய்நிகர் தன்மையோடு எடுத்துச் சொல்ல மிகப்பெரிய வாய்ப்பாக அமையும்.

நன்றி: இந்து தமிழ் திசை (12 – 03 – 2025)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்