TNPSC Thervupettagam

தொழில்துறையின் வருடாந்திர ஆய்வறிக்கை 2022-23

October 8 , 2024 5 hrs 0 min 54 0

தொழில்துறையின் வருடாந்திர ஆய்வறிக்கை 2022-23

(For English version to this please click here)

முன்னுரை

  • புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகம் (MoSPI) சமீபத்தில் 2022-23 நிதியாண்டிற்கான தொழில்துறையின் வருடாந்திர ஆய்வின் (ASI) முடிவுகளை வெளியிட்டுள்ளது.
  • இந்த கணக்கெடுப்பு ஏப்ரல் 2022 முதல் மார்ச் 2023 வரையிலான காலகட்டத்தை உள்ளடக்கியது.
  • ASI 2022-23 என குறிப்பிடப்படும் தொழில்துறையின் வருடாந்திர ஆய்வு (ASI), நவம்பர் 2023 மற்றும் ஜூன் 2024 ஆகியவற்றுக்கு இடைப்பட்ட காலப் பகுதியில் நடத்தப்பட்ட ஒரு விரிவான களப்பணிகளை உள்ளடக்கியது.
  • இந்தியாவில் உற்பத்தித் துறையின் மாறுபாடுகளைக் கைப்பற்றுவதற்கும், பகுப்பாய்வு செய்வதற்கும் ASI ஒரு முக்கியக் கருவியாகும்.
  • நோக்கம்: பல்வேறு தொழில்களின் தொகுப்பு, வளர்ச்சி மற்றும் கட்டமைப்பில் ஏற்படும் மாற்றங்கள் பற்றிய அர்த்தமுள்ள நுண்ணறிவுகளை வழங்குவதே இதன் முதன்மை நோக்கம் ஆகும்.
  • வெளியீடு, மதிப்புக் கூட்டல், வேலைவாய்ப்பு மற்றும் மூலதன உருவாக்கம் போன்ற முக்கிய அளவுருக்களை ஆராய்வதன் மூலம், ASI ஆனது கொள்கை வகுப்பாளர்கள், பொருளாதார வல்லுநர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்களுக்கு அத்தியாவசிய ஆதாரமாக செயல்படுகிறது.
  • ASI 2022-23 ஆய்வின் கண்டுபிடிப்புகள் தேசிய மற்றும் மாநில அளவில், தேசிய கணக்குப் புள்ளி விபரங்களுக்கு கணிசமானப் பங்களிப்பை வழங்குகின்றன.
  • பொருளாதாரச் செயல்திறன் மற்றும் உற்பத்தித் துறையின் போக்குகளைப் புரிந்து கொள்வதற்கு இந்தத் தரவு முக்கியமானதாகும்.
  • இது தகவல் அறிந்து முடிவெடுக்கும் மற்றும் மூலோபாயத் திட்டமிடலை செயல்படுத்துகிறது.

உற்பத்தித் தொழில்களின் வேலை வளர்ச்சி 12 வருட உயர்வு

  • வரலாற்றுச் சிறப்புமிக்கதாக வேலைவாய்ப்பு அதிகரிப்பு: உற்பத்தித் தொழில்களில் மொத்த ஊழியர்களின் எண்ணிக்கை 7.5% அதிகரித்து, 2022-23 இல் 1.84 கோடியை எட்டியுள்ளது.
  • இது 2021-22 ஆம் ஆண்டில் 1.72 கோடியாக இருந்தது.
  • இது கடந்த 12 ஆண்டுகளில் உற்பத்தித் துறையில், வேலை வாய்ப்பு வளர்ச்சியின் அதிகபட்ச விகிதத்தைக் குறிக்கிறது.

முன்னணி துறைகள்:

  • உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகளில் அதிக வேலைவாய்ப்பு பதிவு செய்யப்பட்டுள்ளது அவையாவன:
  • உணவுப் பொருட்கள் வழங்கும் துறை
  • ஜவுளித் துறை
  • அடிப்படை உலோகங்கள் உற்பத்தித் துறை
  • ஆயுத்த ஆடைகள் உற்பத்தித் துறை
  • மோட்டார் வாகனங்கள், இழுவை வண்டிகள் மற்றும் பகுதி இழுவை வண்டிகள் தயாரிக்கும் துறைகள்.

தொழிற்சாலை வளர்ச்சி மற்றும் மீட்பு

  • தொழிற்சாலைகளின் அதிகரிப்பு: 2021-22 ஆம் ஆண்டில் மொத்தத் தொழிற்சாலைகளின் எண்ணிக்கை 2.49 லட்சத்திலிருந்து 2022-23 ஆம் ஆண்டில் 2.53 லட்சமாக உயர்ந்தது என்பது கோவிட்-19 தொற்றுநோயைத் தொடர்ந்து ஏற்பட்ட முதல் முழு மீட்புக் கட்டத்தைக் குறிக்கிறது.

முறைசாரா துறைகளின் வேலைவாய்ப்புச் சரிவு

  • முறைசாரா வேலைவாய்ப்புப் போக்குகள்:
  • மாறாக, முறைசாரா துறையில் பணிபுரியும் தொழிலாளர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது.
  • 2022-23 ஆம் ஆண்டிற்கான இணைக்கப்படாத நிறுவனங்களின் (ASUSE) வருடாந்திர கணக்கெடுப்பின் படி, முறைசாரா துறைகள், சுமார் 16.45 லட்சம் தொழிலாளர்களை இழந்து உள்ளது.
  • இது சுமார் 1.5% சரிவைக் குறிக்கிறது என்ற நிலையில் மொத்தத் தொழிலாளர்களின் எண்ணிக்கை 10.96 கோடியாக உள்ளது.
  • இந்த எண்ணிக்கை 2015-16 ஆம் ஆண்டில் 11.13 கோடியாகக் குறைந்துள்ளது.

உற்பத்தித் துறை வளர்ச்சி பற்றிய நுண்ணறிவு

  • பிந்தைய கோவிட் மீட்பு:
  • உற்பத்தித் துறையானது கோவிட் தொற்றுநோய் அதிர்ச்சியிலிருந்து தெளிவாக மீண்டு வருவதை இந்தத் தரவுகள் சுட்டிக் காட்டுகின்றன என்பதோடு  இது உற்பத்தித் துறையில் ஏற்பட்டுள்ள உயர்வை எடுத்துக்காட்டுகிறது.

ASI மீள்பார்வை

  • மதிப்பாய்வுப் பரவல்:
  • ASI தொழில்துறைப் புள்ளி விவரங்களின் முதன்மை ஆதாரமாக செயல்படுவதோடு இது ஒழுங்கமைக்கப்பட்ட உற்பத்தியில் கவனம் செலுத்துகிறது.
  • மின்சாரத்தைப் பயன்படுத்தி 10 அல்லது அதற்கு மேற்பட்ட தொழிலாளர்களைப் பணி அமர்த்தும் தொழிற்சாலைகளும், மின்சாரம் இல்லாமல் 20 அல்லது அதற்கு மேற்பட்ட தொழிலாளர்களைப் பணியமர்த்தும் தொழிற்சாலைகளும் இதில் அடங்கும்.

முக்கிய வளர்ச்சிக்கான தொழில்கள்

  • வளர்ச்சிக்கு முக்கியப் பங்களிப்பாளர்கள்: 2022-23 ஆம் ஆண்டில் உற்பத்தி வளர்ச்சியை ஊக்குவிக்கும் முக்கியத் தொழில்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.
  • அடிப்படை உலோக உற்பத்தித் துறைகள்
  • கற்கரி & சுத்திகரிக்கப்பட்ட பெட்ரோலியப் பொருட்கள் சார்ந்த துறைகள்
  • உணவுப் பொருட்கள் சார்ந்த துறைகள்
  • இரசாயனப் பொருட்கள் சார்ந்த துறைகள்
  • மோட்டார் வாகனங்கள் உற்பத்தி செய்யும் துறைகள்

மாநிலங்களின் வேலைவாய்ப்புப் பங்களிப்பு

  • முதல் ஐந்து மாநிலங்கள்: உற்பத்தியில் அதிக எண்ணிக்கையிலான நபர்களை வேலைக்கு அமர்த்தும் ஐந்து மாநிலங்களின் வரிசை கீழே கொடுக்கப்பட்டுள்ளன.
  •  1. தமிழ்நாடு
  •  2. மகாராஷ்டிரா
  •  3. குஜராத்
  •  4. உத்தரப் பிரதேசம்
  •  5. கர்நாடகா

மொத்த மதிப்பு சேர்க்கப்பட்டது (GVA)

  • GVA தரவரிசை: 2022-23 ஆம் ஆண்டிற்கான மொத்த மதிப்பு சேர்ப்பு (GVA) அடிப்படையில், தர வரிசை பின்வருமாறு.
  •  1. மகாராஷ்டிரா
  •  2. குஜராத்
  •  3. தமிழ்நாடு
  •  4. கர்நாடகா
  •  5. உத்தரப் பிரதேசம்
  • வெளியீட்டுப் பங்களிப்பு: 2021-22 ஆம் ஆண்டுடன் ஒப்பிடும் போது இந்த துறைகள் மொத்த உற்பத்தியில் 58% பங்களித்தன என்ற நிலையில் உற்பத்தி வளர்ச்சி 24.5% மற்றும் GVA வளர்ச்சி 2.6% ஆகியனவாகும்.

வேலைவாய்ப்பு மற்றும் GVA ஒப்பீடுகள்

  • கோவிட் தொற்று நோய்க்கு முந்தைய வேலைவாய்ப்பு நிலைகள்: 2022-23 ஆம் ஆண்டில் உற்பத்தித் தொழில்களில் ஈடுபட்டுள்ள நபர்களின் எண்ணிக்கை, தொற்றுநோய்க்கு முந்தைய நிலைகளை (2018-19) விட 22.14 லட்சத்துக்கும் அதிகமாகும்.
  • சராசரி ஊதிய உயர்வு: இந்தத் துறையில் ஒரு நபருக்கான சராசரி ஊதியம் முந்தைய ஆண்டை விட 2022-23 ஆம் ஆண்டில் 6.3% அதிகரித்துள்ளது.

மாநில வேலைவாய்ப்புப் பங்களிப்புகள்:

  • முதல் ஐந்து மாநிலங்கள் மொத்த உற்பத்தியானது வேலைவாய்ப்பில் 55% ஆகும்.

மூலதன முதலீட்டு வளர்ச்சி

  • மொத்த நிலையான மூலதன உருவாக்கம்: உற்பத்தித் துறையில் மொத்த நிலையான மூலதன உருவாக்கத்தில் கணிசமான அதிகரிப்பு உள்ளது.
  • இது 2022-23 ஆம் ஆண்டில் 77% வளர்ச்சியடைந்து ரூ.5.85 லட்சம் கோடியை எட்டியுள்ளது.
  • மேலும் இது 2021-22 ஆம் ஆண்டில் இருந்த ரூ.3.3 லட்சம் கோடியிலிருந்து குறிப்பிடத்தக்க ஒரு உயர்வைக் குறிக்கிறது.
  • நிகர நிலையான மூலதன உருவாக்கம்: நிகர நிலையான மூலதன உருவாக்கம் 781.6% அதிகரித்து ரூ.2.68 லட்சம் கோடியாக உள்ளது.
  • உற்பத்தித் துறை லாபம்: உற்பத்தித் துறையில் லாபம் 2.7% வளர்ச்சியடைந்து, ரூ.9.76 லட்சம் கோடியை எட்டியுள்ளது.

பொருட்களின் இருப்பு மாற்றங்கள்

  • பொருட்களின் இருப்பு: 2022-23 ஆம் ஆண்டில், பொருட்கள், எரிபொருள்கள் மற்றும் பகுதி முடிக்கப்பட்ட பொருட்களின் இருப்பு 50%க்கும் அதிகமாக சுருங்கியது அதே சமயத்தில் முடிக்கப்பட்ட பொருட்களின் இருப்பு 36.1% குறைந்துள்ளது.
  • இந்த கண்டுபிடிப்புகள் இந்தியாவின் உற்பத்தித் துறையின், வலுவான மீட்சி மற்றும் வளர்ச்சிப் பாதையை விளக்குகின்றன.
  • அவை தொற்று நோய்க்குப் பிந்தைய நிலப்பரப்பில் குறிப்பிடத் தக்க வேலைவாய்ப்பு ஆதாயங்கள் மற்றும் மூலதன முதலீட்டின் அதிகரிப்பு ஆகியவற்றை எடுத்துக் காட்டுகின்றன.
  • இந்த நேர்மறையானப் போக்கு என்பது, வளர்ந்து வரும் பொருளாதாரச் சூழலை வழி நடத்தும் துறைகளின் நிலைத்தன்மை மற்றும் சாத்தியத்தைப் பிரதிபலிக்கிறது.

ASI 2022-23 முடிவுகளின் முக்கிய சிறப்பம்சங்கள்

  • 2022-23 நிதியாண்டிற்கான தொழில்துறையின் வருடாந்திர கணக்கெடுப்பு (ASI) உற்பத்தித் துறையின் ஆரோக்கியம் மற்றும் வளர்ச்சியைப் பிரதிபலிக்கும் பல குறிப்பிடத்தக்க கண்டுபிடிப்புகளை வழங்குகிறது.
  • GVA வளர்ச்சி: 2021-22 ஆம் ஆண்டுடன் ஒப்பிடும் போது மொத்த மதிப்புச் சேர்ப்பு (GVA) தற்போதைய விலைகளில் 7.3% கணிசமான அதிகரிப்பைக் கண்டுள்ளது.
  • உள்ளீட்டுச் செலவுகள் 24.4% என்ற அளவிற்கு அதிகரித்தன, அதே நேரத்தில் உற்பத்தி 21.5% அதிகரித்துள்ளது என்பது ஒரு வலுவான உற்பத்தி சூழலைக் குறிக்கிறது.
  • விரிவான துறை வளர்ச்சி: 2022-23 ஆம் ஆண்டிற்கான முதலீடு செய்யப்பட்ட மூலதனம், உள்ளீடு, வெளியீடு, GVA, வேலைவாய்ப்பு மற்றும் ஊதியங்கள் உட்பட பல்வேறு பொருளாதார அளவுருக்கள் முழுவதும் நேர்மறையான போக்குகளைக் குறித்தது.
  • இந்த வளர்ச்சியானது கோவிட் தொற்றுநோய்க்கு முந்தைய நிலைகளை விட முழுமையாக அதிகரித்து, வலுவான மீட்சியை எடுத்துக் காட்டுகிறது.
  • மாநிலப் பங்களிப்புகள்: முக்கிய மாநிலங்களில், GVA அடிப்படையில் மகாராஷ்டிரா முதலிடத்தில் உள்ளது என்ற நிலையில் அதைத் தொடர்ந்து குஜராத், தமிழ்நாடு, கர்நாடகா மற்றும் உத்தரப் பிரதேசம் ஆகியவை உள்ளன.
  • ஒட்டு மொத்தமாக, இந்த முதல் ஐந்து மாநிலங்கள் 2022-23 ஆம் ஆண்டில் மொத்த உற்பத்தி GVA மதிப்பு 54%க்கும் அதிகமாகப் பங்களித்தன.
  • தற்போதைய விலையில் ASI 2018-19 முதல் ASI 2022-23 வரையிலான சில முக்கிய அளவுருக்களின் மதிப்பு அட்டவணையில் கொடுக்கப் பட்டுள்ளது.

  • தற்போதைய விலைகளில் ASI 2018-19 முதல் ASI 2022-23 வரையிலான சில கட்டமைப்பு விகிதங்கள் மற்றும் தொழில்நுட்ப இணை-திறன்களின் மதிப்புகள் பின்வரும் அட்டவணையில் கொடுக்கப் பட்டுள்ளது.

 

சிறந்த தொழில்கள்

  • ஒரு சில முக்கியப் பண்புகளுக்கு, ஒட்டு மொத்தமாக மொத்த மதிப்பில் முக்கிய சதவீதப் பங்குகளைக் கொண்ட, அகில இந்திய அளவில் முதல் ஐந்து தொழில்கள் கீழே உள்ள அட்டவணையில் குறிப்பிடப்பட்டுள்ளன.

சிறந்த மாநிலங்கள்

  • கீழே உள்ள ஒவ்வொரு பண்புகளுக்கும், ஒட்டு மொத்தமாக மொத்த மதிப்பில் அவற்றின் சதவீதப் பங்குகளின் அடிப்படையில் முதல் ஐந்து மாநிலங்கள் பின்வருமாறு:

ASI 2022-23 முடிவுகளிலிருந்து காட்சிப் படுத்தல்கள்

  • 2021-22 ஆம் ஆண்டு முதல் 2022-23 ஆம் ஆண்டு வரையிலான சில முக்கியமான அளவுருக்களில் முழுமையான மதிப்பில் (லட்சத்தில்) மாற்றத்தைக் காட்டும் நீர்வீழ்ச்சி விளக்கப் படம்: அகில இந்திய அளவில்.

வரைபடம் விளக்கும் 10 தொழில்களின் உற்பத்தி GVA மதிப்பில் 72% :

2022-23 ஆம் ஆண்டில் முக்கியத் துணைத் துறைகளின் உற்பத்தி வேலைவாய்ப்பைக் காட்டும் பட்டை விளக்கப்படம்:

தொழிற்சாலை வேலைவாய்ப்பில் தமிழகத்தின் முக்கியப் பங்கு

  • வேலைவாய்ப்பில் முதல் மாநிலம்: இந்தியாவில் உள்ள மொத்த உற்பத்தித் தொழிலாளர்களில் 15% பங்கைக் கொண்டு, உற்பத்தித் துறையில் அதிக எண்ணிக்கையிலான நபர்களைக் கொண்ட மாநிலமாக தமிழ்நாடு உள்ளது.
  • மொத்த வேலைவாய்ப்புப் புள்ளிவிவரங்கள்: இந்தியா முழுவதும் தொழிற்சாலைகளில் ஈடுபட்டுள்ள நபர்களின் மொத்த எண்ணிக்கை 1,84,94,962 ஆகும்.
  • தொழிற்சாலைகளின் எண்ணிக்கை: இந்தியாவில் மொத்தமுள்ள 2,53,334 தொழிற்சாலைகளில், 15.66% தொழிற்சாலைகளைத் தமிழ்நாடு பெற்று, எண்ணிக்கையில் அதிக தொழிற்சாலை கொண்ட மாநிலமாக விளங்குகிறது.

-------------------------------------

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்