TNPSC Thervupettagam

நீடித்த வளர்ச்சிக்கான இலக்குகள்

December 29 , 2018 2204 days 4981 0
  • ஐக்கிய நாடுகள் சுற்றுச்சுழல் மற்றும் வளர்ச்சிக் கருத்தரங்கு UNCED (United Nations Conference on Environment and Development - UNCED) பிரேசிலின் ரியோ டி ஜெனிரோவில் நடைபெற்று 20 ஆண்டுகள் கழித்து 2012 ஆம் ஆண்டில் முன்பு நடைபெற்ற அதே நகரத்தில் ஐக்கிய நாடுகள் நீடித்த வளர்ச்சிக் கருத்தரங்கு (United Nations Conference on Sustainable Development – UNCSD) நடைபெற்றது. இக்கருத்தரங்கு ரியோ +20 (Rio+20) என்றும் புவி உச்சி மாநாடு 2012 என்றும் அழைக்கப்படுகிறது.
  • ரியோ+20 மாநாட்டில், "நாம் விரும்பும் எதிர் காலம்" என அழைக்கப்படும் தீர்மானம் ஒன்று உறுப்பு நாடுகளால் ஏற்றுக் கொள்ளப்பட்டது.
  • “நாம் விரும்பும் எதிர்காலம்” என்ற தீர்மானத்தில் ஏற்றுக் கொள்ளப்பட்ட கொள்கைகளின் அடிப்படையில் நீடித்த வளர்ச்சிக்கான இலக்குகள் கட்டமைக்கப்பட்டுள்ளன.

  • 2015 ஆம் ஆண்டு செப்டம்பர் 25 அன்று 2030 ஆம் ஆண்டில் வளர்ச்சி நிரல் என்ற “நமது உலகத்தை மாற்றியமைத்தல் :  நீடித்த வளர்ச்சிக்கான 2030 ஆம் ஆண்டிற்கான நிரல்” என்ற கொள்கையானது ஐக்கிய நாடுகள்  பொதுச் சபையின் 193 நாடுகளால் ஏற்றுக் கொள்ளப்பட்டது.
  • நீடித்த வளர்ச்சிக்கான இலக்குகள் என்பது 2015 ஆம் ஆண்டில் ஐக்கிய நாடுகள் பொதுச் சபையினால் உருவாக்கப்பட்ட 17 உலகளாவிய இலக்குகளின் (169 குறிப்பிட்ட இலக்குகள்) தொகுப்பாகும்.
  • நீடித்த வளர்ச்சிக்கான இலக்குகளானது வறுமை, பட்டினி, சுகாதாரம், கல்வி, உலக வெப்பமயமாதல், பாலின சமனிலை, நீர், துப்புரவு, ஆற்றல், நகரமயமாதல், சுற்றுச்சூழல் மற்றும் சமூக நீதி ஆகியவற்றை உள்ளடக்கிய சமூக மற்றும் பொருளாதார வளர்ச்சிப் பிரச்சனைகளாகும்.
  • 2030 ஆண்டின் நிரலை ஏற்றுக்கொள்வதன் மூலம், “யாரும் விடுபடாமல் அனைவரையும் உள்ளடக்கிய” மற்றும் “இலக்குகளை முதலில் அடைய முயற்சி செய்தல்” என்ற உறுதிமொழியை ஐக்கிய நாடுகளின் உறுப்பு நாடுகள் உறுதி எடுத்துக் கொண்டன.

 

பின்புலம்
  • புத்தாயிரம் ஆண்டு வளர்ச்சி இலக்குகளின் (MDG - Millennium Development Goals) வெற்றியைத் தொடர்ந்து இந்த 17 இலக்குகள் நிர்ணயிக்கப்பட்டுள்ளன. கடந்த 15 ஆண்டுகளாக பல்வேறு முக்கியமான பகுதிகளில் புத்தாயிரம் ஆண்டு வளர்ச்சி இலக்குகள் சிறப்பான செயல்பாட்டைச் செலுத்தியுள்ளன.
  • 2016 ஆம் ஜனவரி முதல் இந்த நீடித்த வளர்ச்சிக்கான இலக்குகள் செயல்பாட்டுக்கு வந்தன.
  • நீடித்த வளர்ச்சிக்கான இலக்குகளானது ஐக்கிய நாடுகள் வளர்ச்சி திட்டத்தின் (UNDP - United Nations Development Program) கொள்கைகள் மற்றும் 2030 ஆம் ஆண்டு வரை அதற்கான நிதி வழங்குதல் ஆகியவற்றிற்கு வழிகாட்டும்.
  • ஐக்கிய நாடுகள் வளர்ச்சி நிறுவனம் என்ற முறையில் ஐக்கிய நாடுகள் வளர்ச்சித் திட்டமானது 170 நாடுகள் மற்றும் பிராந்தியங்களில் இந்த நீடித்த வளர்ச்சிக்கான இலக்குகளை எட்டுவதற்கு தமது பணியின் மூலம் உதவுகிறது.

 

MDG-ன் சாதனைகள்
  • 1 பில்லியனுக்கும் மேற்பட்ட மக்கள் மிகக் கொடிய வறுமையிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர் (1990 ஆண்டு முதல்).
  • குழந்தைகள் இறப்பு பாதிக்கும் அதிகமாக குறைந்துள்ளது (1990 ஆண்டு முதல்).
  • பள்ளிக் குழந்தைகள் இடைநிற்றலின் எண்ணிக்கையானது பாதிக்கும் அதிகமாக  குறைந்துள்ளது (1990 ஆண்டு முதல்).
  • எச்.ஐ.வி / எய்ட்ஸ் தொற்றுகள் ஏறக்குறைய 40 சதவீதம் குறைந்துள்ளது. (2000 ஆம் ஆண்டு முதல்)

 

நீடித்த வளர்ச்சிக்கான இலக்குகள்
  • இலக்கு 1 :               ஏழ்மையின்மை
  • இலக்கு 2 :               பசியினை ஒழித்தல்
  • இலக்கு 3 :               நல்ல ஆரோக்கியம் மற்றும் அனைவருக்கும் நல் வாழ்வை உறுதி செய்தல்.
  • இலக்கு 4 :               தரமான கல்வி
  • இலக்கு 5 :               பாலின சமனிலை
  • இலக்கு 6 :               தூய்மையான நீர் மற்றும் துப்புரவு
  • இலக்கு 7 :               புதுப்பிக்கவல்ல மற்றும் மலிவான ஆற்றல்
  • இலக்கு 8 :               நல்ல பணிகள் மற்றும் பொருளாதார வளர்ச்சி
  • இலக்கு 9 :               தொழிற்சாலை, புதுமையாக்கம் மற்றும் கட்டமைப்பு
  • இலக்கு 10 :               சமமின்மையைக் குறைத்தல்
  • இலக்கு 11 :               நிலையான நகரங்கள் மற்றும் சமூகங்கள்
  • இலக்கு 12 :               வளங்களை பொறுப்பான முறையில் பயன்படுத்துதல்
  • இலக்கு 13 :               பருவநிலை நடவடிக்கைகள்
  • இலக்கு 14 :               நீர்நிலைகளின் மீதான வாழ்வு
  • இலக்கு 15 :               நிலத்தின் மீதான வாழ்வு
  • இலக்கு 16 :               அமைதி, நீதி மற்றும் வலிமையான நிறுவனங்கள் (சமூகம்)
  • இலக்கு 17 :               நிலையான இலக்குகளுக்கான கூட்டணிகள்

இந்தியாவில்
  • நீடித்த வளர்ச்சி இலக்குகள் இந்தியக் குறியீடானது கூட்டாட்சி திட்டக் கொள்கை நிறுவனமான நிதி ஆயோக் மற்றும் ஐ.நா. வினால் வெளியிடப்பட்டது.
  • 2030 ஆம் ஆண்டில் நீடித்த வளர்ச்சி இலக்குகளை எட்டுவதற்கான பணியில் இந்திய மற்றும் மாநிலங்களின் செயல்பாடுகளை அளவிடுவதற்காக, நிதி ஆயோக் ஆனது 2018 ஆம் ஆண்டில் முதலாவது நீடித்த வளர்ச்சி இலக்குகள் இந்தியக் குறியீட்டின்  அடிப்படை அறிக்கை வெளியீட்டை வெளியிட்டுள்ளது.

  • நீடித்த வளர்ச்சி இலக்குகள் இந்தியக் குறியீட்டின்படி இந்தியா ஒட்டுமொத்தமாக 58 புள்ளிகளைக் கொண்டுள்ளது. இது 2015 ஆம் ஆண்டு இந்தியா மற்றும் 192 நாடுகளால் ஏற்றுக் கொள்ளப்பட்ட நீடித்த வளர்ச்சி இலக்குகளை இந்தியா பாதியளவுக்கு மேல் கடந்துள்ளதை இப்புள்ளி விவரம் காட்டுகிறது. இந்தக் குறியீடானது 17 நீடித்த வளர்ச்சிக்கான இலக்குகளில் சுகாதாரம், பாலின சமத்துவம், தூய்மையான ஆற்றல், கட்டமைப்பு, கல்வி, அமைதி மற்றும் வலுவான பொறுப்புள்ள நிறுவனங்களைக் கட்டமைத்தல் ஆகிய 13 நீடித்த வளர்ச்சி இலக்குகளைக் கொண்டுள்ளது.
  • மாநில அளவில் போதுமான தகவல்கள் இல்லாததால் காலநிலை நடவடிக்கைகள் மற்றும் கடல்சார் வளங்களின் நீடித்த பயன்பாடு உள்ளிட்ட 4 இலக்குகள் இந்த தரவரிசையில் விடுபட்டுள்ளன.

 

மாநிலங்களில்
  • 2018 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் நீடித்த வளர்ச்சி இலக்குகளை செயல்படுத்துவதற்காக மூன்று ஆண்டு செயல்திட்டம் மற்றும் ஏழாண்டு உத்திசார் திட்டத்துடன் நீடித்த வளர்ச்சி இலக்குகளை எட்டுவதற்காக தனது ஆண்டு நிதிநிலை அறிக்கையில் சிறப்பு கவனத்தை செலுத்திய இந்தியாவின் முதலாவது மாநிலமாக ஹரியானா உருவெடுத்துள்ளது.
  • ஒட்டுமொத்த அளவில் இந்த குறியீட்டில் கேரளா முதலிடத்தில் (69) உள்ளது  அதன்  சிறந்த ஆரோக்கியம், பசியைக் குறைத்தல், பாலின சமத்துவத்தை எட்டுதல் மற்றும் தரமான கல்வியை அளித்தல் ஆகியவற்றில் சிறப்பாக செயல்பட்டதை காரணமாக கொண்டிருக்கின்றது.
  • இந்த தரவரிசையானது நீடித்த வளர்ச்சி இலக்குகளின் ஒட்டுமொத்த புள்ளியான 100 புள்ளிகளை அடைய மாநிலங்கள் அந்த இலக்குகளை எட்டுவதற்கான இடைவெளியைக் காட்டுகிறது.

  • தூய்மையான குடிநீர் வழங்குதல், துப்புரவு, சமமின்மையைக் குறைத்தல் மற்றும் மலைச் சூழலைப் பாதுகாத்தல் ஆகியவற்றில் ஒட்டுமொத்த புள்ளி மதிப்பீட்டில் இமாச்சலப் பிரதேசம் அஹ்டே போன்ற புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது.
  • இந்த குறியீட்டில் ஒன்றியப் பிரதேசங்களிடையே, தூய்மையான நீர் வழங்குதல் மற்றும் துப்புரவு ஆகியவற்றில் ஒட்டுமொத்தமாக 68 புள்ளிகளுடன் சண்டிகர் முதலிடத்தில் உள்ளது. தரமான கல்வியை அளிப்பதில் சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்தியதும் சண்டிகர் அதிகமான புள்ளிகளைப் பெற உதவியது.

  • தமிழ்நாடு 68 புள்ளிகளைக் கொண்டுள்ளது. இந்த குறியீட்டில் வறுமை ஒழிப்பில் தமிழ்நாடு முதலிடத்திலும் தரமான கல்வியை வழங்குவதில் கேரளா முதலிடத்தையும் பிடித்துள்ளன. இந்த குறியீட்டில் இதற்கு அடுத்து சண்டிகர் மற்றும் இமாச்சலப் பிரதேசம் ஆகியவை இடம் பிடித்துள்ளன.
  • நல்ல உடல்நலம் மற்றும் சிறந்த ஆரோக்கியம் ஆகியவற்றில் கேரளா மற்றும் தமிழ்நாடு ஆகிய மாநிலங்கள் முதலிடத்தில் உள்ளன. பாலின சமத்துவத்தை பொறுத்தவரை இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களும் ஒட்டுமொத்த இந்தியாவுமே அதிக கவனம் செலுத்த வேண்டியுள்ளது. பாலின சமத்துவத்தில் முன்னிலையில் உள்ள சிக்கிம் மாநிலம், சண்டிகர் மற்றும் அந்தமான் & நிக்கோபர் ஆகிய ஒன்றிய பிரதேசங்கள் நீடித்த வளர்ச்சி இலக்குகளின் புள்ளியில் பாதியளவை தாண்டிக் கடந்துவிட்டன.
  • இமாச்சலப் பிரதேசம், கேரளா மற்றும் தமிழ்நாடு ஆகிய மாநிலங்கள் வறுமை ஒழிப்பு மற்றும் சமமின்மை நீக்குதல் போன்ற முக்கியமான நீடித்த வளர்ச்சி இலக்குகளை எட்டுவதில் முன்னோடி மாநிலங்களாக உள்ளன. மாநிலங்களுக்கான இந்த தர வரிசைப் பட்டியலில் அசாம், பீகார் மற்றும் உத்தரப் பிரதேசம் ஆகிய மாநிலங்கள் பின்தங்கி உள்ளன.

----------------

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்