TNPSC Thervupettagam

நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் - II

July 6 , 2019 2015 days 10563 0

கிழக்கு நாடுகளுக்கு திரும்புதல்

  • கிழக்கு நாடுகளை நோக்கிய ஒரு ஆபத்தான பயணத்தை மேற்கொண்டு ஜப்பானை அடைந்த போஸ் அங்கு சிங்கப்பூர் மற்றும் பிற தென்கிழக்கு ஆசிய பிராந்தியங்களில் இருந்து 40,000-க்கும் மேற்பட்ட வீரர்களை சேர்த்தார்.
  • அவர் ‘இந்திய தேசிய இராணுவம் என்று அழைக்கப்பட்ட தனது இராணுவத்தை அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளை ஆங்கிலேயரிடமிருந்து கைப்பற்ற வழி நடத்தியதோடு அத்தீவுகளுக்கு ஷாஹீத் மற்றும் ஸ்வராஜ் தீவுகள் என மறுபெயரிட்டார்.
  •  ஜப்பானானது 1942 ஆம் ஆண்டில் அந்தமான் மற்றும் நிக்கோபர் தீவுகளை கைப்பற்றியது.

  • அந்தமான் மற்றும் நிக்கோபர் தீவுகளில் தற்காலிக அரசாங்கமும் இந்திய தேசிய இராணுவமும் நிறுவப்பட்டன. துணை படைத்தளபதியான A.D லோகநாதன் அதன் கவர்னர் ஜெனரலாகவும் நியமிக்கப்பட்டார்.
  • கைப்பற்றப்பட்ட பிரதேசங்களில் ஆசாத் ஹிந்த் அரசானது 1943 ஆம் ஆண்டு அக்டோபர் 21 ஆம் நாள் செயல்படத் தொடங்கியது.
  • இந்த ஆசாத் ஹிந்த் அரசானது தனக்கென சொந்த நாணயங்கள், தபால் தலைகள், நீதி மன்றங்கள் மற்றும் உரிமையில் சட்டங்களைக் கொண்டிருந்தது மேலும் 9 அச்சு நாடுகளாலும் அங்கீகரிக்கப்பட்டிருந்தது.
  • இந்த அரசானது கிழக்காசியா மாநாடு என்றழைக்கப்பட்ட மாநாட்டில் பார்வையாளர் அந்தஸ்துடன் பங்கேற்றது.
  • துரதிஷ்டவசமாக, உலகப் போரின் போக்கு மாறி ஜப்பானிய மற்றும் ஜெர்மானிய படைகள் சரணடைந்தன இதனால் அடுத்தகட்ட முன்னேற்றத்தை நிறுத்தும்படியான சூழ்நிலை உருவானது.
  • இந்தியா சுதந்திரம் பெறுவதற்கு ஜெர்மனி எவ்வித உதவியையும் செய்யக் கூடும் என்ற நம்பிக்கையை இழந்த பிறகு 1943 ஆம் ஆண்டின் பிப்ரவரி மாதத்தில்  போஸ் ஜப்பானுக்குப் புறப்பட்டார்.
  • இவர் ஜெர்மன் நீர் மூழ்கிக் கப்பலான யு-180 என்றக் கப்பலில் நன்னம்பிக்கை முனையைச் சுற்றி மடகாஸ்கரின் தென் கிழக்குப் பகுதியை நோக்கிப் பயணித்தார்.

 

  • ஜப்பானியப் பேரரசிற்கான மீதமுள்ள பயணத்திற்காக அங்கிருந்து I-29 என்ற நீர் மூழ்கிக் கப்பலுக்கு அவர் மாற்றப்பட்டார்.
  • இரண்டாம் உலகப் போரின் போது இரண்டு வெவ்வேறு நாட்டுக் கடற்படைகளின் இரண்டு நீர் மூழ்கிக் கப்பல்களுக்கிடையே நிகழ்ந்த ஒரு குடிமைப் பயணியின் இடமாற்றம் இதுவேயாகும்.
  • இவர் 1943 ஆம் ஆண்டு மே மாதத்தில் ஜப்பானியர் வசமிருந்த சுமத்ரா தீவில் இறங்கினார்.
  • இவ்வகையில் கிழக்கு நாடுகளை நோக்கி ஒரு ஆபத்தான பயணத்தை போஸ் மேற்கொண்டு ஜப்பானை அடைந்தார்.
  • 1943 ஆம் ஆண்டு ஜூலை மாதம் அங்கு அவர் ராஷ் பீகாரி போஸைச் சந்தித்தார். ராஷ் பீகாரி போஸ் சுபாஷிடம் இந்திய தேசிய ராணுவம் மற்றும் அரசியல் அமைப்பான இந்திய சுதந்திரக் குழு ஆகியவற்றின் தலைமைப் பொறுப்பை ஒப்படைத்தார்.
  • இவ்வகையில் அவர் இந்திய சுதந்திரக் குழுவை உள்ளடக்கிய இந்திய தேசிய இராணுவத்தின் கட்டுப்பாட்டைப்  பெற்றார்.
  • முன்னதாக ஜப்பானானது 1942 ஆம் ஆண்டில் அந்தமான் மற்றும் நிக்கோபர் தீவுகளைக் கைப்பற்றியது.
  • சிங்கப்பூரில் (ஜப்பானியரால் கைப்பற்றப்பட்ட பிரதேசங்கள்) ஆசாத் ஹிந்த் அரசு அல்லது தற்காலிக சுதந்திர இந்திய அரசானது 1943 ஆம் ஆண்டு அக்டோபர் 21 ஆம் நாள் செயல்படத் தொடங்கியது.
  • இது அரசின் தலைவர், பிரதமர், யுத்தம் மற்றும் வெளியுறவுத் துறை அமைச்சர் ஆகிய பொறுப்புகளில் இருந்த சுபாஷின் தலைமையில் இருந்த ஒரு அமைச்சரவையைக் கொண்டது.
  • இந்த ஆசாத் ஹிந்த் அரசானது தனது சொந்த நாணயங்கள், தபால் தலைகள், நீதிமன்றங்கள் மற்றும் உரிமையியல் சட்டங்களைக் கொண்டிருந்தது. மேலும் இந்த அரசு 9 அச்சு நாடுகளாலும் அங்கீகரிக்கப்பட்டிருந்தது.
  • இந்த அரசானது 1943 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் கிழக்காசியா மாநாடு என்றழைக்கப்பட்ட மாநாட்டில் பார்வையாளர் அந்தஸ்துடன் பங்கேற்றது.
  • அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளில் தற்காலிக அரசாங்கமும் இந்திய தேசிய இராணுவமும் நிறுவப்பட்டன. துணை படைத் தளபதியானD லோகநாதன் அதன் கவர்னர் ஜெனரலாகவும் நியமிக்கப்பட்டார்.
  • அவர் அந்தமான் தீவுகளுக்குச் சுற்றுப் பயணம் மேற்கொண்டதோடு அதற்கு ஷாஹீத் மற்றும் ஸ்வராஜ் தீவுகள் என மறுபெயரிடுவதற்கு 1943 ஆம் ஆண்டு டிசம்பர் 30 ஆம் நாள் ஒரு பரிந்துரையையும் அளித்தார்.
  • 1943 ஆம் ஆண்டு டிசம்பர் 30 ஆம் நாள் அந்தமானின் போர்ட் பிளேயரில் உள்ள ஜிம்கானா மைதானத்தில் (தற்போதைய நேதாஜி அரங்கம்) முதன் முறையாக இந்திய தேசியக் கொடியை போஸ் ஏற்றினார்.
  • மேலும் அவர் அந்தமான் தீவுகளை ஆங்கிலேய ஆட்சியில் இருந்து விடுவிக்கப்பட்ட முதல் இந்தியப் பிரதேசமாக அறிவித்தார்.
  • துரதிர்ஷ்டவசமாக, உலகப் போரின் போக்கு மாறி ஜப்பானிய மற்றும் ஜெர்மானிய படைகள் சரணடைந்தன. இதனால் அடுத்தகட்ட முன்னேற்றத்தை நிறுத்தும்படியான சூழ்நிலை போஸிற்கு உருவானது.
இந்திய தேசிய இராணுவ உருவாக்கம்
  • இந்திய தேசிய இராணுவ அமைப்பானது ஜப்பானிய இராணுவ உயர் அதிகாரியான இவைச்சி புஜிவாராவின் சிந்தனையில் உருவானது ஆகும்.
  • புஜிவாராவின் தொடக்கக் கால முன்மொழிற்குப் பிறகு 1941 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தின் இரண்டாம் பகுதியில் புஜிவாராவிற்கும் மோகன் சிங்கிற்கும் இடையேயான பேச்சுவார்த்தையின் விளைவாக இந்திய தேசிய இராணுவம் உருவாக்கப்பட்டது.
  • அங்கு சிங்கப்பூர் மற்றும் பிற தென்கிழக்கு ஆசியப் பிராந்தியங்களில் இருந்து 40,000க்கும் மேற்பட்ட வீரர்கள் அப்படையில் சேர்க்கப் பட்டனர்.
  • இதன் பெயரானது இருவராலும் 1942 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தின் முதல் வாரத்தில் கூட்டாக தேர்ந்தெடுக்கப்பட்டது.
  • இருப்பினும், 1942 ஆம் ஆண்டின் டிசம்பர் மாதத்தில் ஹிகாரி கிகான் என்பவருக்கும் மோகன் சிங்கிற்கும் இடையேயான கருத்து வேறுபாடுகளினால் இந்த முதல் ராணுவ அமைப்பானது கலைக்கப்பட்டது.
  • 1943 ஆம் ஆண்டில் தூரக் கிழக்கு நாடுகளில் சுபாஷின் வருகையுடன் ஒரு சுதந்திர இராணுவத்திற்கான யோசனை மீண்டும் புதுப்பிக்கப்பட்டது.

  • இந்த ராணுவ அமைப்பானது, கேப்டன் லட்சுமி சுவாமிநாதன் தலைமையிலான ஜான்சிராணி படைப் பிரிவு எனும் ஒரு தனி பெண்கள் பிரிவைக் கொண்டிருந்தது. இதுபோன்ற நிகழ்வுகளில் ஆசியாவிலேயே முதலாவது நிகழ்வாக இது கருதப்பட்டது.

  • இந்த இராணுவமானது இந்தியாவை நோக்கிப் பயணிக்க ஆரம்பித்து பர்மாவின் எல்லையைத் தாண்டி 1944 ஆம் ஆண்டு மார்ச் 18 அன்று இந்திய மண்ணில் காலூன்றியது.
  • 1944 ஆம் ஆண்டு ஜூலை 6 ஆம் நாள் சிங்கப்பூரிலிருந்து ஆசாத் ஹிந்த் வானொலி ஒளிப்பரப்பிய தனது உரையில் காந்தியை “தேசத் தந்தை” என போஸ் அழைத்தார். மேலும் தனது யுத்த முயற்சிகளுக்கு காந்தியின் ஆசிகளையும் வாழ்த்துகளையும் போஸ் கோரினார்.
  • இந்தப் பெயரில் காந்தி அழைக்கப்படுவது இதுவே முதன் முறையாகும்.
  • மௌலானா ஹஸ்ரத் மொஹானி உருவாக்கிய “இன்குலாப் ஜிந்தாபாத்” எனும் முழக்கத்தையும் இந்திய தேசிய ராணுவம் பயன்படுத்தியது.
சிந்தாத்தங்கள்
  • 1922 ஆம் ஆண்டு பிப்ரவரியில் பர்தோலி தீர்மானத்தின் மூலம் ஒத்துழையாமை இயக்கத்தை ஒருதலைப் பட்சமாக காந்தி திரும்பப் பெற்ற போது. “பொதுமக்களின் ஆர்வம் / ஒத்துழைப்பு உச்ச நிலைக்கு வந்து கொண்டிருக்கும் போது அதில் பின்வாங்குவது என்பது ஒரு தேசியப் பேரிடருக்கு எவ்விதத்திலும் குறைவானது இல்லை” என போஸ் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்.
  • இந்தியாவிற்கு நிபந்தனையற்ற முழுமையான சுதந்திரத்தைப் பெற போஸ் விரும்பினார். ஆனால் இந்திய காங்கிரஸ் குழுவானது டொமினியன் அந்தஸ்து வழியாக படிப்படியாக சுதந்திரத்தைப் பெற விரும்பியது.
  • இறுதியாக வரலாற்றுச் சிறப்பு மிக்க லாகூர் காங்கிரஸ் மாநாட்டில் காங்கிரஸ் கட்சியானது பூர்ண ஸ்வராஜை (முழுமையான சுதந்திரம்) 1929 ஆம் ஆண்டு டிசம்பர் 19 ஆம் நாள் அதன் குறிக்கோளாக ஏற்றுக் கொண்டது
  • 1934 ஆம் ஆண்டில் சட்ட மறுப்பு இயக்கம் திரும்பப் பெறப்படுவதையும் போஸ் கடுமையாக எதிர்த்தார்.
  • 1940 ஆம் ஆண்டுகளில் இரண்டாம் உலகப் போரின் போது காந்தி பிரிட்டனின் மீது அனுதாபம் கொண்டிருந்தார். மேலும் ஜனநாய அமைப்பிலான ஐரோப்பாவிற்கும் பாசிசக் கொள்கைகளுக்கும் இடையேயான வேறுபாட்டை காந்தி நன்கு உணர்ந்திருந்தார்.
  • எனவே போர்க் காலத்தில் சிக்கல்களை ஏற்படுத்த காந்தி விரும்பவில்லை.
  • ஆனால், போர் மூண்ட பொழுதிலும் போஸ் தனது நிலைப்பாட்டில் இருந்து மாறவில்லை. போரைப் பிரிட்டனின் பலவீனத்தை பயன்படுத்திக் கொள்ளக் கூடிய ஒரு வாய்ப்பாகவே இவர் கண்டார்.
  • இந்தியாவின் சுதந்திரத்தைப் பெற காந்தியின் அகிம்சை முறைப் போராட்டங்கள் போதுமானதாக இருக்காது எனக் கருதிய போஸ் வன்முறை அடிப்படையிலான புரட்சியை ஆதரித்தார்.
  • தம்மை ஒரு சமதர்மவாதி என்று அழைத்துக் கொண்ட சுபாஷ், இந்தியாவில் சமதர்மமானது அதன் தோற்றத்திற்கு சுவாமி விவேகானந்தருக்கு கடன்பட்டிருப்பதாக அவர் நம்பினார்.
  • 1944 ஆம் ஆண்டில் நம்முடைய தத்துவமானது தேசிய சமதர்மத்திற்கும் கம்யூனிசத்திற்கும் இடையே இருக்கும் ஒரு இணைந்த கலவையாக இருக்க வேண்டும் என போஸ் கூறினார்.
  • “எனக்கு உங்கள் இரத்தத்தை தாருங்கள் நான் உங்களுக்கு சுதந்திரத்தைத் தருகிறேன்” என்பது இவரின் பிரபலமான முழக்கமாகும். இது 1944 ஆம் ஆண்டில் ஜூலை மாதம் 4 ஆம் தேதி பர்மாவில் இந்தியர்களின் மத்தியில் அமைந்த ஒரு பேரணியில் அவரால் கூறப்பட்டது.

  • இந்திய தேசிய ராணுவத்தை ஊக்குவிப்பதற்காக அவர் கூறிய “டெல்லி சலோ” (டெல்லிக்குச் செல்க) என்பது வட கிழக்குப் பகுதியில் இந்தியப் படையெடுப்பின் சமயத்தில் கூறப்பட்ட அவரது மற்றொரு பிரபலமான முழக்கமாகும்.
  • ஜெய் ஹிந்த் அல்லது இந்தியா வெல்க என்பது அவரால் பயன்படுத்திய மற்றுமொரு முழக்கமாகும். பின்னாளில் இந்திய அரசாலும் இந்திய ஆயுதப்படைகளாலும் அது ஏற்றுக் கொள்ளப்பட்டது.
  • ஒருமைப்பாடு, ஒப்பந்தம், தியாகம் என்பதன் உருது வார்த்தைகளான “இட்டேஹாத், எட்டெமட், குர்பானி” என்பது அவர் உருவாக்கிய மற்றொரு முழக்கமாகும்.
அவரது  படைப்புகள்
  • இந்தியப் போராட்டம் 1920-1934
  • அவரது வாழ்நாளில் வெளியிடப்படாத பிற படைப்புகளை நேதாஜி ஆய்வுப் பணியகம் வெளியிட்ட “தொகுப்புப் படைப்புகளில்” காண முடியும்.
இறுதிக் காலம்
  • பல அறிஞர்களின் ஒருமித்தக் கருத்தின்படி, சுபாஷ் சந்திர போஸின் மரணமானது 1945 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 18 ஆம் நாள் தைவானில் நிகழ்ந்த அதிக சுமை ஏற்றப்பட்ட ஜப்பானிய விமானத்தின் விபத்தினால் ஏற்பட்டது.
  • இவரின் மர்மமான மரணம் குறித்து விசாரிக்க ஷா நவாஸ் குழு (1956), கோஸ்லா ஆணையம் (1970) மற்றும் முகர்ஜி ஆணையம் (1999) ஆகியவை இந்திய அரசால் நியமிக்கப்பட்டன.
நினைவுச் சின்னங்கள்
  • 1942 ஆம் ஆண்டின் தொடக்கத்தின் ஜெர்மனியில் இருந்த போஸிற்கு இந்தியப் படைப் பிரிவின் இந்திய வீரர்கள், பெர்லினில் இருந்த இந்தியாவிற்கான சிறப்புப் பணியகத்தில் பணியாற்றிய இந்திய மற்றும் ஜெர்மன் அதிகாரிகள் ஆகியோரால் “நேதாஜி” எனும் கௌரவப் பட்டம் அவருக்கு அளிக்கப்பட்டது.
  • பின்னர் இது இந்தியா முழுவதும் பயன்படுத்தப்பட்டது.
  • 1964, 1993, 1997, 2001, 2016 மற்றும் 2018 ஆகிய ஆண்டுகளில் இந்தியாவின் தபால் தலைகளில் போஸ் இடம் பெற்றார்.

  • கொல்கத்தாவின் விமான நிலைத்திற்கு “நேதாஜி சுபாஸ் சந்திரபோஸ் சர்வதேச விமான நிலையம்” எனப் பெயரிடப்பட்டது.
  • சமீபத்தில் இந்தியப் பிரதமர் அந்தமான் தீவுகளில் மூன்று தீவுகளுக்கு மறுபெயரிட்டார்.
  • ரோஸ் தீவு நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் தீவு எனவும் நீல் தீவு ஷாஹீத் தீவு எனவும் ஹேவ்லாக் தீவு ஸ்வராஜ் தீவு  மறுபெயரிடப்பட்டுள்ளது.

 

- - - - - - - - - - - - - -

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்