நோபல் பரிசு வென்றவர்கள் 2024
(For English version to this please click here)
அறிமுகம்
- நோபல் பரிசு என்பது ஆல்ஃபிரட் நோபலால் (ஸ்வீடன் நாட்டவர்) நிறுவப்பட்ட மதிப்புமிக்க சர்வதேச விருதுகளின் தொகுப்பாகும்.
- இது பல்வேறு துறைகளில் மனிதகுலத்திற்கு சிறந்தப் பங்களிப்பு வழங்குபவர்களை கௌரவிக்கிறது.
ஆல்ஃபிரட் நோபல்: நோபல் பரிசை நிறுவியவர்
- ஒரு பன்முக கண்டுபிடிப்பாளர், தொழில்முனைவோர், அறிவியலாளர் மற்றும் எழுத்தாளரான ஆல்ஃபிரட் நோபல் தனது மரணத்திற்குப் பின் அவரது விருப்பத்தின் மூலம் நோபல் பரிசுகள் உருவாக்கப் பட்டது.
- அவர் டைனமைட்டைக் கண்டுபிடித்து 355 காப்புரிமைகளைப் பெற்றுள்ளார்.
- 1895 ஆம் ஆண்டில் அவர் நிறுவிய நோபல் பரிசுகளில் அவரது மாறுபட்ட ஆர்வங்கள் பிரதிபலிக்கின்றன.
நோக்கம் மற்றும் தத்துவம்
- நோபலின் உயிலில், கடந்த ஆண்டுகளில் "மனிதகுலத்திற்கு மிகப்பெரும் நன்மையை" வழங்கிய தனிநபர்கள் அல்லது நிறுவனங்களுக்கு விருதுகள் வழங்கப்பட வேண்டும் என்று குறிப்பிடப் பட்டுள்ளது.
- இந்தக் கொள்கையானது பல்வேறு துறைகளில் பரிசு பெறுபவர்களைத் தேர்ந்தெடுக்கிறது.
பரிசு வகைகள்
- நோபல் பரிசுகள் பின்வரும் வகைகளில் வழங்கப் படுகின்றன:
- இயற்பியல்
- வேதியியல்
- உடலியல் அல்லது மருத்துவம்
- இலக்கியம்
- பொருளாதாரம்
- அமைதி
- 1968 ஆம் ஆண்டில், ஆல்பிரட் நோபலின் நினைவாக அவரது அங்கீகரிக்கப்பட்ட சாதனைகளின் வரம்பை விரிவுபடுத்தும் வகையில் பொருளாதார அறிவியலுக்கான ஸ்வெரிஜஸ் ரிக்ஸ்பேங்க் பரிசை அறிமுகப்படுத்தியது.
வரலாறு மற்றும் விருதுகள்
- முதல் நோபல் பரிசுகள் 1901 ஆம் ஆண்டில் வழங்கப்பட்டன என்பதோடு, உலகப் போர்களின் போது சில குறுக்கீடுகள் இருந்த போதிலும், இந்தப் பாரம்பரிய விருது வழங்கும் நிகழ்வானது ஆண்டுதோறும் தொடர்கிறது.
நோபல் தினம்
- ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 10 அன்று கொண்டாடப்படும் நோபல் தினம், ஆல்ஃபிரட் நோபலின் நினைவு தினத்தை நினைவு கூர்கிறது என்பதோடு இந்தப் பரிசு பெற்றவர்களுக்கு விருதுகள் வழங்கும் சந்தர்ப்பமாகவும் இத்தினம் கருதப்படுகிறது.
நோபல் அறக்கட்டளை
- 1900 ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட நோபல் அறக்கட்டளை என்பது நோபலின் செல்வத்தை நிர்வகிப்பதற்கான ஒரு பொறுப்பு அமைப்பாகும்.
- இது பரிசுகளின் நீண்ட கால நிலைத் தன்மையை உறுதி செய்கிறது.
- இது பரிசு வழங்கும் நிறுவனங்களின் சுதந்திரத்தைப் பராமரிக்கிறது மற்றும் பல்வேறு விழிப்புணர்வு முயற்சிகள் மூலம் நோபல் பரிசு மரபுகளை மேம்படுத்தும் வகையில் செயல்படுகிறது.
நோபல் பரிசு பற்றிய செய்திகள்
நோபல் பரிசு கூறுகள்
- அங்கீகாரப் பொருட்கள்: பரிசு பெற்றவர்கள் நோபல் பரிசு சான்றிதழ், ஒரு பதக்கம் மற்றும் பரிசுத் தொகையை விவரிக்கும் ஆவணத்தைப் பெறுகிறார்கள் என்ற நிலையில், இந்த ஆண்டு இந்தப் பரிசுத் தொகை 10 மில்லியன் ஸ்வீடிஷ் குரோனா (தோராயமாக $900,000) ஆகும்.
பரிசுப் பங்கீடு
- பரிசைப் பகிர்தல்: நோபல் பரிசு மூன்று நபர்கள் வரையில் வழங்கப்படலாம்.
- அமைதிப் பரிசு என்பது நிறுவனங்களுக்கும் வழங்கப்படலாம்.
நோபல் பரிசு நிபந்தனைகள்
- மரணத்திற்குப் பிந்தைய விருதுகள்: நோபல் பரிசை மரணத்திற்குப் பின்பு வழங்க முடியாது, ஆனால் 1974 ஆம் ஆண்டு முதல், அதன் அறிவிப்புக்குப் பிறகு பரிந்துரைக்கப்பட்ட ஒருவர் இறந்து விட்டால், அவர்கள் விருதினை பெறத் தகுதியானவர் ஆவார்.
தேர்வு செயல்முறை
- பொறுப்புள்ள நிறுவனங்கள்: ஆல்ஃபிரட் நோபல் பரிசுத் தேர்வுக்காகப் பின்வரும் குறிப்பிட்ட நிறுவனங்களை நியமித்தார்:
- இயற்பியல் மற்றும் வேதியியலுக்கான ராயல் ஸ்வீடிஷ் அறிவியல் கழகம்.
- உடலியல் அல்லது மருத்துவத்திற்கான கரோலின்ஸ்கா நிறுவனம்.
- இலக்கியத்திற்கான ஸ்வீடிஷ் கழகம்.
- அமைதிப் பரிசுக்காக நார்வே நாடாளுமன்றத்தால் தேர்ந்தெடுக்கப்பட்ட குழு.
பரிசு வழங்கும் முறை
- நோபல் பரிசானது இயற்பியல், வேதியியல், உடலியல் அல்லது மருத்துவம், இலக்கியம் மற்றும் பொருளாதாரம் ஆகிய துறைகளில் ஸ்வீடன் நாட்டின் ஸ்டாக்ஹோம் நகரில் வழங்கப் படுகிறது
- நோபல் பரிசுகளில் அமைதிப் பரிசு மட்டும் ஸ்வீடன் நாட்டின் ஸ்டாக்ஹோம் நகரில் வழங்கப் படுவதில்லை.
- நார்வே நாட்டு மன்னர் மற்றும் ராணியின் முன்னிலையில் நார்வே நாட்டின் நோபல் பரிசுக் குழுவின் தலைவரால் நார்வே நாட்டுத் தலைநகரான ஒஸ்லோவில் நோபல் அமைதிப் பரிசு வழங்கப் படுகின்றது.
- பரிந்துரைகள்: நோபல் பரிசு பெறுவதற்கு, ஒரு தகுதியான பரிந்துரையாளரால் ஒருவர் பரிந்துரைக்கப் பட வேண்டுமே தவிர சுயப் பரிந்துரைகள் எதுவும் அனுமதிக்கப்படாது.
- இந்தப் பரிந்துரைகள் அனைத்தும் பிரத்தியேகமானவை என்பதோடு இந்த விருது வழங்கும் அமைப்புகளால் நிறுவப்பட்ட நிபந்தனைகளுடன் இதற்கான அழைப்பும் தேவைப்படுகிறது.
பரிசு பெற்ற முக்கிய நபர்கள்
- இள வயதில் பரிசு பெற்றவர்: மலாலா யூசுப்சாய் 2014 ஆம் ஆண்டில் அமைதிக்கான நோபல் பரிசை 17 வயதில் பெற்று, நோபல் பரிசு பெற்றவர்களில் மிகவும் இளையவர் ஆனார்.
- நோபல் பரிசு பெற்றவர்களில் மிக வயதானவர்: 2019 ஆம் ஆண்டில் வேதியியல் பரிசு பெற்ற ஜான் பி. குட்எனஃப் என்பவர், 97 வயதில் நோபல் பரிசு பெற்று, நோபல் பரிசு பெற்றவர்களில் மிக வயதானவர் என்ற பெருமையைப் பெற்றார்.
- இரண்டு முறை கௌரவிக்கப் பட்டவர்: 1903 ஆம் ஆண்டில் இயற்பியலுக்கான நோபல் பரிசையும், 1911 ஆம் ஆண்டில் வேதியியலுக்கான நோபல் பரிசையும் பெற்று, இரண்டு முறை நோபல் பரிசைப் பெற்ற ஒரே பெண்மணி மேரி கியூரி ஆவார்.
விருதுகளை திரும்பப் பெறுதல்
- திரும்பப் பெற முடியாத தன்மை: ஆல்ஃபிரட் நோபலின் உயில் மற்றும் நோபல் அறக்கட்டளையில் உள்ள சட்டங்களில் கூறப்பட்டுள்ளபடி, ஒருமுறை வழங்கப்பட்ட நோபல் பதக்கத்தை திரும்பப் பெற முடியாது.
இந்தியாவைச் சார்ந்த நோபல் பரிசு பெற்றவர்கள்
- இந்தியா இன்றுவரையில் 12 நோபல் பரிசு பெற்றவர்களை உருவாக்கியுள்ளது என்ற நிலையில் இதில் ஐந்து பேர் இந்தியக் குடிமக்கள் மற்றும் ஏழு பேர் இந்திய வம்சாவளியினர் அல்லது குடியுரிமை பெற்றவர்களாக உள்ளனர்.
இந்தியாவில் நோபல் பரிசு பெற்றவர்களில் முக்கிய நபர்கள்
- ரவீந்திரநாத் தாகூர்:
- ரவீந்திரநாத் தாகூர் 1913 ஆம் ஆண்டில் நோபல் பரிசு பெற்றார்.
- அவரது இலக்கியத்திற்கானப் பங்களிப்புகளுக்காக இந்த விருதைப் பெற்ற முதல் இந்தியக் குடிமகன் மற்றும் ஆசியாவில் முதல் நபர் இவர் ஆவார்.
- அன்னை தெரசா:
- இந்தியாவில் நோபல் பரிசு பெற்ற ஒரே பெண்மணி இவர்,
- தனது மனிதாபிமான சேவைக்காக அங்கீகரிக்கப்பட்டு 1979 ஆம் ஆண்டில் அமைதிக்கான நோபல் பரிசைப் பெற்றார்.
- இந்தப் பரிசு பெற்றவர்கள் உலக அரங்கில் இந்தியாவின் வளமான கலாச்சார மற்றும் அறிவுசார் பாரம்பரியத்தைப் பிரதிநிதித்துவப் படுத்துகின்றனர்.
இந்தியாவில் இருந்து நோபல் பரிசு பெற்றவர்கள் (பிரிட்டிஷ் இந்தியா மற்றும் சுதந்திர இந்தியா):
மருத்துவத்துக்கான நோபல் பரிசு 2024
- பரிசு பெற்றவர்கள்: விக்டர் அம்ப்ரோஸ் (அமெரிக்கா) மற்றும் கேரி ருவ்குன் (அமெரிக்கா)
மைக்ரோஆர்என்ஏ-வின் கண்டுபிடிப்பு மற்றும் மரபணு ஒழுங்குமுறையில் அதன் பங்கு
- விக்டர் அம்ப்ரோஸ் மற்றும் கேரி ருவ்குன் ஆகியோரின் அங்கீகரிக்கப்பட்ட பணி மையங்களாகக் கருதப்படுவது மைக்ரோஆர்என்ஏ கண்டுபிடிப்பாகும்.
- அவர்கள் மரபணுவின் பிந்தையப் படியெடுத்தல் செயல்பாடுகளில் மரபணு ஒழுங்குமுறையில் அதன் செயல்பாட்டை ஆராய்ந்தனர்.
- அவர்களின் ஆய்வுகள் வட்டப்புழு சி. எலிகன்ஸ் மீது கவனம் செலுத்தியது.
- அவர்கள் லின்-4 மைக்ரோஆர்என்ஏ என்பது லின்-14 மரபணுவின் புரத உற்பத்தியை எவ்வாறு தடுக்கிறது என்பதைக் கண்டறிந்தனர்.
அவர்களின் ஆராய்ச்சியின் தாக்கம்:
- மரபணு ஒழுங்குமுறை நுண்ணறிவு: மைக்ரோஆர்என்ஏ-வின் செயல்பாட்டைப் புரிந்து கொள்வது பல்வேறு உயிரியல் செயல்முறைகளுக்கு முக்கியமானது, ஏனெனில் இது புரத உற்பத்தியைக் கட்டுப்படுத்துகிறது.
- இந்த ஒழுங்குமுறையில் ஏற்படும் இடையூறுகள் புற்றுநோய் மற்றும் நீரிழிவு போன்ற நோய்களுக்கு வழி வகுக்கிறது.
- மருத்துவம் சார்ந்தவை: அவர்களின் கண்டுபிடிப்புகள் புற்றுநோய், நீரிழிவு மற்றும் தன்னுடல் தாங்கு திறன் நோய் உட்பட பல நோய்களைத் தடுப்பதிலும், பங்களிப்பதிலும் மைக்ரோஆர்என்ஏ-வின் பங்கை வலியுறுத்துகின்றன.
- உதாரணமாக, மைக்ரோஆர்என்ஏ தொடர்பான மரபணுக்களில் ஏற்படும் பிறழ்வுகள் பிறவி கேட்கும் திறன் இழப்பு அல்லது எலும்புக் கோளாறுகளை ஏற்படுத்துகிறது.
- சிகிச்சைப் பயன்பாடுகள்: மைக்ரோஆர்என்ஏ அடிப்படையிலான சிகிச்சைகள் பற்றிய ஆராய்ச்சி நடந்து வருகிறது என்ற நிலையில் மரபணுக் கோளாறுகளை இலக்காகக் கொண்ட இலக்குசார் சிகிச்சைகள் இனிமேல் சாத்தியமாகும்.
- குறிப்பிட்ட வகை புற்றுநோய்களுக்குத் தீர்வு காண மைக்ரோஆர்என்ஏ செயல்பாட்டை மாற்றி அமைப்பது என்பது சிகிச்சை உத்திகளில் அடங்கும்.
- பரிணாம முக்கியத்துவம்: மைக்ரோஆர்என்ஏ-க்கள் மில்லியன் கணக்கான ஆண்டுகளாக மரபணு பரிணாம வளர்ச்சியில் முக்கியப் பங்கு வகிக்கின்றன என்ற நிலையில் இவை பல்லுயிர் உயிரினங்களில் செல்கள் மற்றும் திசுக்களின் வளர்ச்சியை பாதிக்கின்றன.
- அசாதாரண மைக்ரோஆர்என்ஏ செயல்பாடானது பல்வேறு வளர்ச்சிக் கோளாறுகளுடன் தொடர்புடையது.
2024 இயற்பியலுக்கான நோபல் பரிசு வென்றவர்கள்
பரிசு பெற்றவர்கள்:
- ஜான் ஹாப்ஃபீல்ட் (பிரின்ஸ்டன் பல்கலைக்கழகம், அமெரிக்கா)
- ஜெஃப்ரி ஹிண்டன் (டொராண்டோ பல்கலைக்கழகம், கனடா)
பங்களிப்புகள்:
- ஹாப்ஃபீல்ட் வலையமைப்பு: ஜான் ஹாப்ஃபீல்ட் ஹெபியன் கற்றல் கொள்கைகளின் அடிப்படையில், ஒரு தொடர்ச்சியான நரம்பியல் வலையமைப்பை உருவாக்கியதோடு, உருப்படிவம் கண்டறிதல் போன்ற செயல்களை மேம்படுத்த அவர் புள்ளியியல் இயற்பியலைப் பயன்படுத்தினார்.
- கட்டுப்படுத்தப்பட்ட போல்ட்ஸ்மேன் இயந்திரம் (RBM):
- ஜெஃப்ரி ஹிண்டன் நரம்பியல் வலையமைப்புகளில் மேம்பாடுகள் செய்ததன் மூலம் ஆழ்ந்தக் கற்றலை மாற்றி அமைத்தார் என்பதோடு சிக்கலானத் தரவை மிகவும் திறம்படச் செயலாக்க இவர் அனுமதித்தார்.
- இந்த வேலை செயற்கை நுண்ணறிவின் ஆற்றலைக் கணிசமாக மேம்படுத்தியுள்ளது.
அவர்களின் பணியின் தாக்கம்:
- செயற்கை நுண்ணறிவிற்கான அடித்தளம்: அவர்களின் கண்டுபிடிப்புகள் இயந்திரக் கற்றலுக்கான அடிப்படையை நிறுவி, செயற்கை நுண்ணறிவு அமைப்புகளைத் திறம்பட கற்கவும், மாற்றியமைக்கவும் உதவுகிறது.
- ஆழ்ந்த கற்றலில் முன்னேற்றங்கள்: ஹிண்டனின் பணி என்பது, இயற்கையான மொழிச் செயலாக்கம் உட்பட சிக்கலான பணிகளைச் சமாளிக்க, செயற்கை நுண்ணறிவு மாதிரிகளை அனுமதித்துள்ளது.
- பரந்த செயற்கை நுண்ணறிவு பயன்பாடுகள்: அவர்களின் பங்களிப்புகள் உரையாடு மென்பொருள் மற்றும் பட அங்கீகார அமைப்புகள் போன்ற பல்வேறு தொழில்நுட்பங்களை ஆதரிக்கின்றன.
- செயற்கை நுண்ணறிவு ஒருங்கிணைப்பில் இயற்பியல்: பெரிய தரவுத் தொகுப்புகளை நிர்வகித்தல், இயற்பியல் மற்றும் செயற்கை நுண்ணறிவு ஆகிய துறைகளை இணைக்கும் போது ஹாப்ஃபீல்டின் முறைகள் கணக்கீட்டுத் திறனை மேம்படுத்துகின்றன.
வேதியியலுக்கான நோபல் பரிசு 2024 வென்றவர்கள்
பரிசு பெற்றவர்கள்:
- டேவிட் பேக்கர் (அமெரிக்கா): அவரது கணக்கீட்டுப் புரத வடிவமைப்பில், அவரின் அற்புதமானப் பங்களிப்புக்காக என்று அவர் அங்கீகரிக்கப்பட்டார்.
- டெமிஸ் ஹசாபிஸ் மற்றும் ஜான் ஜம்பர் (அமெரிக்கா): செயற்கை நுண்ணறிவு மாதிரியான ஆல்பாஃபோல்ட் 2 என்பதின் வளர்ச்சிக்காக இது வழங்கப்பட்டது என்பதோடு இது புரதக் கட்டமைப்புகளையும் முன்னறிவிக்கிறது.
பங்களிப்புகள்:
- டேவிட் பேக்கர்: தனிப் பயன் மென்பொருளைப் பயன்படுத்தி புதிய புரதங்களை வடிவமைப்பதற்கான புதுமையான முறைகளை இவர் உருவாக்கினார் என்ற நிலையில் இது குறிப்பிட்டப் பயன்பாடுகளுக்கு ஏற்ற 'வடிவமைப்பாளர்' புரதங்களை உருவாக்க வழி வகுத்தது.
- அவரது குழுவானது 2003 ஆம் ஆண்டு முதல், கணக்கீட்டுப் புரத வடிவமைப்பைச் செம்மைப் படுத்தி வருகிறது என்ற நிலையில் இது பல்வேறு வகையான புரதங்களை உருவாக்கவும் அனுமதிக்கிறது.
- டெமிஸ் ஹசாபிஸ் மற்றும் ஜான் ஜம்பர்: ஆல்பாஃபோல்ட் 2 என்பதை உருவாக்கினார்கள் என்ற நிலையில் இது மில்லியன் கணக்கான புரதங்களின் கட்டமைப்புகளை கணிக்கக் கூடிய ஒரு அற்புதமான செயற்கை நுண்ணறிவு மாதிரியாகும்.
- ஆல்பாஃபோல்ட் 2 என்பது, 2020 ஆம் ஆண்டில் மிகவும் சிக்கலானப் புரதக் கட்டமைப்புகளைத் துல்லியமாகக் கணிப்பதன் மூலம் ஒரு குறிப்பிடத் தக்க மைல்கல்லை எட்டியது என்பதோடு இது முந்தைய கையேடு முறைகளை விட அதிகமாக கணித்துள்ளது.
அவர்களின் பணியின் முக்கியத்துவம்:
- புரட்சிகர புரத ஆராய்ச்சி: அவர்களின் பங்களிப்புகள் குறிப்பிட்டப் பயன்பாடுகளுடன் தனிப்பயன் புரதங்களை உருவாக்க உதவுகிறது.
- இந்தக் கண்டுபிடிப்பு மருந்துக் கண்டுபிடிப்பு, உயிரித் தொழில்நுட்பம் மற்றும் பொருளறிவியல் போன்ற துறைகளை மாற்றும் திறனைக் கொண்டுள்ளது.
- அறிவியல் முன்னேற்றத்தை துரிதப்படுத்துதல்: ஆல்பாஃபோல்ட் 2 என்பதின் விரைவான கணிப்புத் திறன்கள் ஆராய்ச்சிக்கான காலக்கெடுவை வெகுவாகக் குறைத்து, உயிரியல் செயல்பாடுகள் மற்றும் நோய் வழிமுறைகள் பற்றிய மதிப்பு மிக்க பல்வேறு நுண்ணறிவுகளை வழங்குகின்றன.
- வேதியியலில் பரவலான தாக்கம்: இந்த விருது நவீன வேதியியலின் இடைநிலைத் தன்மையை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது என்பதோடு, பாரம்பரிய முறைகளுக்கு அப்பால் புலத்தின் எல்லைகளை விரிவுபடுத்தும் செயற்கை நுண்ணறிவு மற்றும் கணக்கீட்டுக் கருவிகளின் ஒருங்கிணைப்பையும் எடுத்துக் காட்டுகிறது.
- உடனடி அங்கீகாரம்: ஹசாபிஸ் மற்றும் ஜம்பரின் கண்டுபிடிப்புகளைத் தொடர்ந்து நான்கு முதல் ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு இந்தப் பரிசு வழங்கப்பட்டது என்பதோடு இது சமகால அறிவியல் முன்னேற்றங்களில் அவர்களின் பணியின் மீதான விரைவான தாக்கத்தையும் வலியுறுத்துகிறது.
2024 பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு வென்றவர்கள்
பரிசு பெற்றவர்கள்:
- டாரன் அசெமோக்லு (அமெரிக்கா)
- சைமன் ஜான்சன் (அமெரிக்கா)
- ஜேம்ஸ் ராபின்சன் (அமெரிக்கா)
ஆராய்ச்சி:
- நாடுகளுக்கிடையேயான செல்வச் சமத்துவமின்மை குறித்த அவர்களின் அற்புதமான ஆராய்ச்சிக்காக இவர்கள் இந்தப் பரிசு பெற்றவர்களாக அங்கீகரிக்கப்பட்டனர்,
- குறிப்பாக ஐரோப்பிய காலனித்துவவாதிகளால் நிறுவப்பட்ட அரசியல் மற்றும் பொருளாதார அமைப்புகள் நீண்ட காலச் செழிப்பு மற்றும் சமூக நிறுவனங்களை எவ்வாறு பாதிக்கின்றன என்பதை ஆய்வு செய்தனர்.
அவர்களது பணியின் மீதான கண்ணோட்டம்:
- நிறுவனங்களின் ஆய்வு: அவர்கள் நாடுகளின் செழிப்பு மற்றும் வளர்ச்சியை வடிவமைப்பதில் அரசியல் மற்றும் பொருளாதார நிறுவனங்களின் முக்கியப் பங்கை ஆய்வு செய்தனர்.
- காலனித்துவத்தின் தாக்கம்: அவர்களின் ஆராய்ச்சி ஐரோப்பியக் காலனித்துவ வாதிகளால் திணிக்கப்பட்ட அமைப்புகள் மற்றும் நாடுகள் முழுவதும் செல்வச் சமத்துவமின்மையின் மீதான அவற்றின் நீடித்த விளைவுகளை ஆராய்கிறது.
- ஒப்பீட்டு ஆய்வுகள்: இதற்கு ஒரு குறிப்பிடத்தக்க உதாரணம் என்பது, அமெரிக்கா-மெக்சிகோ எல்லையால் பிரிக்கப்பட்டுள்ள நோகேல்ஸ் நகரத்தை ஒப்பிடுவதை உள்ளடக்கியது ஆகும்.
- இது வெவ்வேறு நிறுவனக் கட்டமைப்புகள் இருபுறமும், வெவ்வேறு அளவிலான செழுமைக்கு எவ்வாறு வழி வகுக்கும் என்பதை விளக்குகிறது.
- ஜனநாயகத்தின் மீது கவனம் செலுத்துதல்: அவர்களின் கண்டுபிடிப்புகள் ஜனநாயக ஆட்சிக்கு மாறுகின்ற நாடுகள், ஜனநாயகமற்ற ஆட்சிகளைக் கொண்ட நாடுகளுடன் ஒப்பிடும் போது விரைவான பொருளாதார வளர்ச்சியை அனுபவிப்பதாகச் சுட்டிக் காட்டுகின்றன.
- வெளியீடு: நாடுகளுக்கிடையேயான பொருளாதார ஏற்றத்தாழ்வுகளின் மீதான தோற்றத்தை ஆராயும் செல்வாக்கு மிக்க புத்தகமான "Why Nations Fail" என்ற புத்தகத்தை அசெமோக்லு இணைந்து எழுதியுள்ளார்.
அவர்களின் பணியின் முக்கியத்துவம்:
- செல்வ சமத்துவமின்மையைப் புரிந்துகொள்ளுதல்: அவர்களின் ஆராய்ச்சியானது நிறுவன வேறுபாடுகள் நாடுகளிடையே செழுமையின் பல்வேறு நிலைகளை எவ்வாறு விளக்குகின்றன என்பதை வெளிப்படையாகக் காட்டுகிறது.
- நிறுவனங்களின் முக்கியத்துவம்: அவை நிறுவனங்களின் அவசியத்தை நிலையான வளர்ச்சியை அடைவதற்கும், சமத்துவமின்மையைக் குறைப்பதற்கும், உள்ளடக்கிய அரசியல் மற்றும் பொருளாதாரத்தை வலியுறுத்துகின்றன.
- நடைமுறைத் தாக்கங்கள்: அவர்களின் நுண்ணறிவு, வளர்ச்சியைத் தூண்டும் வகையில் ஏழை நாடுகளில் உள்ள நிறுவனங்களைச் சீர்திருத்துவதை நோக்கமாகக் கொண்ட பல்வேறு கொள்கைகளைத் தெரிவிக்கிறது.
- உலகளாவிய தொடர்பு: இந்தக் கண்டுபிடிப்புகள் நாடுகளுக்கு இடையிலான வருமான இடைவெளியை குறைக்க உதவுவதில் முக்கியமானவை.
- ஜனநாயகத்திற்கான ஆதரவு: அவர்களின் பணி பொருளாதார வளர்ச்சி மற்றும் சமூக வளர்ச்சியில் ஜனநாயக நிறுவனங்களின் சாதகமான விளைவுகளை எடுத்துக்காட்டுகிறது.
2024 இலக்கியத்திற்கான நோபல் பரிசு வென்றவர்
பரிசு பெற்றவர்:
அங்கீகாரம்:
- வரலாற்று அநீதிகள் மற்றும் மனிதப் பலவீனத்தை ஆராயும் அவரது "intense poetic prose" என்ற இலக்கியதிற்கு இந்த விருதானது வழங்கப்பட்டது.
- இந்த அங்கீகாரம் என்பது ஐரோப்பாவை மையமாகக் கொண்ட வெற்றியாளர்களின் சமீபத்தியப் போக்கில் இருந்து விலகுவதைக் குறிக்கிறது என்ற நிலையில் ஸ்வீடிஷ் கழகம் சமகால உரைநடைக்கான அவரது புதுமையான பங்களிப்புகளை ஒப்புக் கொண்டுள்ளது.
ஹான் காங் மற்றும் அவரது படைப்புகள் பற்றி:
- ஆரம்பகால வாழ்க்கை: ஹான் காங் தனது இலக்கியப் பயணத்தை கவிதையுடன் தொடங்கினார் என்ற நிலையில் 2016 ஆம் ஆண்டில் சர்வதேச மேன் புக்கர் பரிசை வென்ற அவரது நாவலான " The Vegetarian " (2007) மூலம் அவர் மிக குறிப்பிடத்தக்க அங்கீகாரத்தைப் பெற்றார்.
முக்கிய கருப்பொருட்கள்:
- அவரது எழுத்து ஆணாதிக்கம், வன்முறை, துயரம் மற்றும் வரலாற்று அநீதிகளின் கருப்பொருள்களை அடிக்கடி ஆராய்வதோடு, தீவிரமான மற்றும் கவிதைக் கற்பனையை தீவிரமான கதைகளுடன் இணைக்கிறது.
குறிப்பிடத்தக்கப் படைப்புகள்:
- The Vegetarian: இந்த நாவல் ஒரு பெண் இறைச்சி உண்பதை நிறுத்துவதையும், அவளது குடும்பத்தில் இருந்து வரும் வன்முறை எதிர்வினைகளையும் ஆராய்கிறது.
- Human Acts (2016): தென் கொரியாவில் 1980 குவாங்ஜு எழுச்சியின் ஒரு கடுமையான ஆய்வாக இந்நூல் உள்ளது என்பதோடு, இந்த வரலாற்று நிகழ்வில் பாதிக்கப்பட்டவர்களுக்காகவும் இது குரல் கொடுத்தது.
- The White Book (2017): துக்கம் மற்றும் நினைவாற்றல் பற்றிய தியானப் பிரதிபலிப்பு, வெள்ளை நிறத்தின் குறியீட்டைச் சுற்றி கட்டமைக்கப் பட்டுள்ளது.
- Greek Lessons (2023): காதல் மற்றும் இழப்பைப் பற்றிய மனதைத் தொடும் கதையான இது பேச்சை இழந்த ஒரு பெண் மற்றும் பார்வையை இழந்த ஒரு ஆசிரியரை மையமாகக் கொண்டது.
- We Do Not Part: கொரிய வரலாற்றில் மறைக்கப்பட்ட படுகொலையின் பின்னணியில் அமைக்கப் பட்ட இந்த இந்த நூல் கூட்டாக அநீதி மற்றும் நினைவலையை ஆராய்கிறது.
தாக்கம்:
- ஹான் காங்கின் படைப்புகள் கொரிய இலக்கியத்தின் உலகளாவிய வரம்பைக் கணிசமாக விரிவுபடுத்தியுள்ளன என்பதோடு, தன்னுணர்வேற்றம் மற்றும் ஆழமாக அணுகுதலின் மூலம் உலகளாவிய மனித அனுபவங்களுடன் ஈடுபடும் திறனையும் இவை எடுத்துக் காட்டுகின்றன.
2024 அமைதிக்கான நோபல் பரிசு வென்றவர்
பரிசு பெற்றவர்:
- நிஹான் ஹிடாங்கியோ (ஜப்பான்)
அங்கீகாரம்:
- 2024 ஆம் ஆண்டுக்கான அமைதிக்கான நோபல் பரிசு என்பது, ஹிரோஷிமா மற்றும் நாகசாகி அணுகுண்டு தாக்குதலில் இருந்து தப்பியவர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் ஜப்பானிய அமைப்பான, ஹிபாகுஷா" என்று அழைக்கப் படுகிற, நிஹான் ஹிடாங்கியோவுக்கு வழங்கப்பட்டது.
- இந்த விருதானது அணு ஆயுதக் குறைப்பை ஊக்குவிக்கவும், அணு ஆயுதங்களின் பேரழிவு விளைவுகளை முன்னிலைப்படுத்தவும் அவர்கள் மேற்கொண்ட சில அயராத முயற்சிகளை அங்கீகரித்துள்ளது.
நிஹான் ஹிடாங்கியோவின் கண்ணோட்டம்:
அடித்தளம்:
- இந்த அமைப்பு 1956 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 10 ஆம் தேதி அன்று ஹிரோஷிமா மற்றும் நாகசாகி அணுகுண்டுகளில் இருந்து தப்பியவர்களுக்கான தேசிய அமைப்பாக நிறுவப்பட்டது.
- ஹிபாகுஷா மனிதக் குரல்களை ஒருங்கிணைக்கவும், அவர்களின் நலனை மேம்படுத்தவும், அணு ஆயுதங்களுக்கு எதிராக வாதிடவும் உருவாக்கப்பட்டது.
தலைமை அமைப்பு:
- ஹிபாகுஷா அந்த அமைப்பில் உள்ளவர்களால் வழி நடத்தப் பட்டது என்பதோடு அது உலகக் கொள்கையில் செல்வாக்கு செலுத்துவதற்கும், அமைதியை மேம்படுத்துவதற்கும் வேண்டி நேரடி அனுபவங்களைப் பகிர்ந்து கொள்கிறது.
முக்கியச் செயல்பாடுகள்:
- பரிந்துரைத்தல்: ஐக்கிய நாடுகள் சபை போன்ற உலகளாவியத் தளங்கள் மூலம் அணு ஆயுதக் குறைப்புக்கு அழுத்தம் கொடுப்பது.
- கல்வி: அணுசக்தி போரின் போது மனித மற்றும் சுற்றுச்சூழல் பாதிப்புகள் பற்றிய விழிப்பு உணர்வை ஏற்படுத்துதல்.
- கூட்டாண்மை: உடன்படிக்கை அடிப்படையிலான அணு ஆயுதத் தடையை ஆதரிப்பதற்காக சர்வதேச அணு ஆயுத ஒழிப்புப் பிரசார அமைப்பு (ICAN) போன்ற குழுக்களுடன் ஒத்துழைத்தல்.
- கலாச்சார தாக்கம்: 1945 ஆம் ஆண்டு முதல் அணு ஆயுதங்களைப் பயன்படுத்துவதற்கு எதிரான உலகளாவிய விதிமுறைக்குப் பங்களிப்பு செய்தல்.
- அவர்களின் பணியின் முக்கியத்துவம்: நிஹான் ஹிடாங்கியோவானது அணு ஆயுதங்களின் ஆபத்துகள் குறித்து ஒரு உலகளாவிய விழிப்புணர்வை ஏற்படுத்திய நிலையில் தற்போது நாடுகளின் அணுசக்தித் திறன்களை விரிவுபடுத்தும் சவால்கள் இருந்த போதிலும் சர்வதேச ஆயுதக் குறைப்பு முயற்சிகளுக்கு அது ஆதரவளித்தது.
-------------------------------------