TNPSC Thervupettagam
December 19 , 2017 2386 days 7788 0
நோபல் பரிசு

- - - - - - - - - - - - -

 
  • நோபல் பரிசு என்பது ஒவ்வொரு ஆண்டும் சுவீடன் மற்றும் நார்வே நாடுகளை சார்ந்த நிறுவனங்களால் கல்வியியல், கலாச்சாரம் அல்லது அறிவியல் முன்னேற்றத்திற்காக வழங்கப்படும் சர்வதேச விருதாகும்.
ஆல்ஃபிரெட் நோபல்
  • ஆல்ஃபிரெட் நோபல் சுவீடனிலுள்ள ஸ்டாக்ஹோம் நகரத்தில் 1833-ஆம் ஆண்டு அக்டோபர் 21-ஆம் தேதியன்று பிறந்தார். அவர் ஒரு வேதியியல் அறிஞராவார். அவர் 1896-ஆம் ஆண்டு டிசம்பர் 10-ஆம் தேதி (63-ஆம் வயதில் இத்தாலியிலுள்ள சான்ரேமோ என்ற இடத்தில் இறந்தார்.
நோபல் பரிசு
  • நோபல் பரிசு 1895-ஆம் ஆண்டு ஆல்பெர்ட் நோபெலின் நினைவாக ஏற்படுத்தப்பட்டது. எனினும் 1901-ஆம் ஆண்டு முதல் தான் வேதியியல், இலக்கியம், அமைதி, இயற்பியல் மற்றும் மருத்துவம் ஆகிய துறைகளுக்கு வழங்கப்படுகிறது.
  • பொருளியலுக்கான நோபல் பரிசு என்று பரவலாக அறியப்படும் பொருளாதார அறிவியலுக்கான வெரிஜஸ் ரிக்ஸ் பாங்க் பரிசானது நோபலின் நினைவாக (Nobel Memorial Prized in Economic Sciences) பொருளியலில் சீர்மிகு பங்களிப்புகளை நல்கியோருக்கு ஆண்டுதோறும் வழங்கப்படும் ஓர் விருதாகும். இது முதலில் உருவாக்கப்பட்ட விருதுக் குழுமத்துக்குள் இல்லை. இது 1968-ஆம் ஆண்டு தான் தொடங்கப்பட்டது.
  • இது 1968-ஆம் ஆண்டில் சுவீடனின் நடுவண் வங்கியான வெரிஜஸ் ரிக்ஸ் பாங்க்கின் 300-ஆம் ஆண்டு கொண்டாட்டங்களின்போது நோபலின் நினைவாக அந்த வங்கியின் நிதிக்கொடை கொண்டு நிறுவப்பட்டதாகும்.
  • நோபல் பரிசு பெறும் ஒவ்வொருவருக்கும் ஒரு தங்கப்பதக்கம், பட்டயம் மற்றும் பணப் பரிசு ஆகியவை வழங்கப்படும். (2017-ஆம் ஆண்டின்படி, ஒவ்வொரு நோபல் பரிசும் 90,00,000 SEK ஆகும்). 1980-க்கு முன்பு 23 கேரட் தங்கத்தால் ஆன பதக்கங்கள் செய்யப்பட்டன. அதற்கு பின்பு 24 கேரட் தங்க முலாம் பூசப்பட்ட 18 கேரட் பசுந்தங்கத்தால் செய்யப்பட்ட பதக்கம் வழங்கப்பட்டது.
  • 1901ம் ஆண்டு முதல் 2016 வரை நோபல் பரிசுகள் 579 முறை 911 நபர்களுக்கும், பல்வேறு நிறுவனங்களுக்கும் வழங்கப்பட்டுள்ளது. ஒரு தடவைக்கு மேல் இப்பரிசு பெற்றவர்களை கணக்கில் வைத்து கொண்டால் இதுவரை 23 நிறுவனங்களும் 881 தனிநபர்களும் இவ்விருதை பெற்றுள்ளனர்.
  • இறந்தவர்களுக்கு இப்பரிசு வழங்கப்படமாட்டாது எனினும் பரிசு அறிவித்த பின்பு அதை பெறுவதற்கு முன்னர் பரிசினைப் பெறவேண்டிய நபர் இறந்துவிட்டால் அவருக்கு பரிசு வழங்கப்படும். பொதுவாக 3 நபர்களுக்கு மேல் ஓர் நோபல் பரிசு பகிர்ந்து அளிக்கப்பட மாட்டாது. இருந்தாலும் அமைதிக்கான நோபல் பரிசு வழங்கும்போது 3 நிறுவனங்களுக்கு மேல் பகிர்ந்தளிக்க முடியும்.
  நோபல் நிறுவனங்கள் மற்றும் நோபல் தேர்வு குழு
  • நோபல் நிறுவனமானது ஒரு தனியார் நிறுவனமாக 1900ம் ஆண்டு ஜூன் 29ல் ஏற்படுத்தப்பட்டது. இதன் முக்கிய பணியானது நிதி மேலாண்மை மற்றும் பரிசு வழங்குவது சம்பந்தமான நிர்வாகம் ஆகியவை ஆகும். ஆனால் இந்நிறுவனம் நோபல் பரிசை பெறுவதற்கான நபர்களை தேர்வு செய்வதில் பங்கு கொள்ளாது.
  • நோபல் பரிசினைப் பெறுவதற்கான நபர்களை தேர்வு செய்யும் பணிக்கு நோபல் குழுவானது பொறுப்பேற்றிருக்கிறது. அதில் ஒவ்வொரு பரிசிற்கும் ஒரு குழு என மொத்தம் 5 நோபல் குழுக்கள் உள்ளன.
  • இயற்பியல், வேதியியல், மருத்துவம் மற்றும் இலக்கியத்திற்கான பரிசுகளை அதனைச் சார்ந்த நிறுவனக் குழுக்கள் பரிந்துரை செய்யும். இப்பரிந்துரையிலிருந்து நோபல் சபையானது இறுதிப் பெயரை பட்டியலிடும்.
  • 5-வது நோபல் குழுவான நார்வே நோபல் குழுவானது அமைதிக்கான நோபல் பரிசினை அறிவிக்கும். அறிவியலுக்கான சுவீடன் அரசு நிறுவனமானது பொருளாதாரத்திற்கான நோபல் பரிசினை அறிவிக்கிறது.
  • இந்த நோபல் பரிசானது முந்தைய ஆண்டில் கண்டுபிடிக்கப்பட்ட கண்டுபிடிப்புகளுக்கு மட்டும் அளிக்கப்படுகிறது.
  விருது வழங்கும் விழா
  • அமைதிக்கான நோபல் பரிசு தவிர இதர நோபல் பரிசுகள் சுவீடன் நகரிலுள்ள ஸ்டாக் ஹோம் நகரத்தில் ஆல்ஃபிரட் நோபலின் இறந்த தினமான டிசம்பர் 10ம் தேதியன்று வழங்கப்படும். இப்பரிசை பெறுபவர்கள் தனது துறை சம்பந்தமாக ஒரு சொற்பொழிவை பரிசு வழங்கும் விழாவிற்கு சில நாட்கள் முன்னதாக ஆற்ற வேண்டும். அமைதிக்கான நோபல் பரிசானது அதே நாளில் நார்வே தலைநகரான ஆஸ்லோவில் நார்வே நோபல் குழுவினரால் நார்வே நாட்டின் நாட்டினுடைய மன்னரின் முன்னிலையில் வழங்கப்படுகிறது.
  ஒன்றிற்கு மேற்பட்ட முறை நோபல் பரிசு பெற்றவர்கள்
  • நான்கு பேர் ஒரு தடவைக்கும் மேல் பரிசு பெற்றுள்ளனர்.
Sl. No Name Prize title Subject Notes
1 Marie Curie Physics (1903) radioactivity only person to be awarded a Nobel Prize in two different sciences
Chemistry (1911) Isolation of pure radium
2 Linus Pauling Chemistry (1954) chemical bond and its application only laureate of two unshared prizes.  
Peace Prize 1962 activism against nuclear weapons
3 John Bardeen Physics 1956 invention of the transistor
Physics 1972 theory of superconductivity
4 Frederick Sanger Chemistry 1958 determining the structure of the insulin molecule
Chemistry 1980 inventing a method of determining base sequences in DNA
  • அமைதிப் பரிசினை இரண்டு சர்வதேச அமைப்புகள் பலமுறை வாங்கியிருக்கின்றன.
  1. சர்வதேச செஞ்சிலுவை சங்கக் குழு 3 முறை வாங்கியிருக்கிறது.
  • 1917 மற்றும் 1944-ல் உலகப் போரில் பங்காற்றியமைக்காக.
  • 1963 – இதன் நூற்றாண்டு விழாக் கொண்டாட்டத்தின் போது.
  1. அகதிகளுக்கு உதவியமைக்காக, அகதிகளுக்கான ஐ.நா.வின் அமைப்புக்கு 1954 மற்றும் 1981 ஆகிய ஆண்டுகளில் இருமுறை இவ்விருது வழங்கப்பட்டிருக்கிறது.
  நோபல் பரிசு பெற்ற ஒரே குடும்பத்தை சேர்ந்த உறுப்பினர்கள்
  • கியூரி குடும்பமே இதுவரை அதிக அளவிலான பரிசுகளைப் பெற்றிருக்கிறது. கியூரி குடும்பத்தைச் சேர்ந்த 5 பேருக்கு 4 நோபல் பரிசுகள் அளிக்கப்பட்டிருக்கிறது.
  1. மேரிகியூரி அவர் கணவர் பியரி கியூரியுடன் இணைந்து இயற்பியலுக்கான நோபல் பரிசை 1903ம் ஆண்டும், மேரி கியூரி மட்டும் வேதியலுக்கான நோபல் பரிசை 1911ம் ஆண்டும் பெற்றுள்ளனர்.
  2. அவர்களின் மகளான இரீனே ஜூலியட் கியூரி வேதியலுக்கான நோபல் பரிசினை அவரின் கணவர் பிடரிக் ஜூலியட் கியூரியுடன் இணைந்து 1935-ஆம் ஆண்டு பெற்றார்.
  3. மேரி கியூரியினுடைய கணவரின் இரண்டாவது மகளான ஹென்ரி லெபைசி யுனிசெஃப் அமைப்பின் தலைவராக இருந்த போதுதான் அந்நிறுவனத்திற்கு 1965ம் ஆண்டில் அமைதிக்கான நோபல் பரிசு அளிக்கப்பட்டது.
  • இந்தியாவில் சி.வி. ராமன் 1930ல் இயற்பியலுக்கான பரிசை வென்றார். அவருடைய உறவினரான சுப்ரமணியம் சந்திரசேகரும், இயற்பியலுக்கான நோபல் பரிசினை 1983ல் பெற்றார்.
  பெண் பரிசாளர்கள்
  • 2017ம் ஆண்டு வரை வழங்கப்பட்ட நோபல் பரிசுகளில் 844 பேர் ஆண்கள், 48 பேர் பெண்கள் (மேரி கியூரி இருமுறை வென்றுள்ளார்) ஆவர். மேலும் 27 நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.
  • 2009ம் ஆண்டில் மட்டுமே அதிகளவிலான பெண்களுக்கு (5 பேருக்கு) நோபல் பரிசு வழங்கப்பட்டது.
  • சமீபமாக, 2015ம் ஆண்டில் டூ யுயு மற்றும் ஸ்வெத்லானா அலெக்ஸிவிச் ஆகிய இரு பெண்கள் நோபல் பரிசினை பெற்றனர்.
  மகாத்மா காந்திக்கு ஏன் அமைதிக்கான நோபல் பரிசு தரப்படவில்லை?
  • நார்வேஜியன் நோபல் குழுவானது 1937-39 மற்றும் 1947ம் ஆண்டுகளில் மகாத்மா காந்தியின் பெயரை அமைதிக்கான நோபல் பரிசுக்காக பரிந்துரை செய்தது எனினும் 1948ம் ஆண்டு மகாத்மா காந்தி சுட்டு கொல்லப்பட்டார். அதனால் அவருக்கு நோபல் பரிசு வழங்க இயலவில்லை. இதற்காக நார்வே நோபல் குழு பிற்காலத்தில் வருத்தம் தெரிவித்தது.
  • காந்தி இறந்த வருடமான 1948ல் தகுதியான நபர் யாரும் இல்லையென்று அமைதிக்கான நோபல் பரிசு எவருக்கும் வழங்கப்படவில்லை. 1989ம் ஆண்டில் 14வது தலாய்லாமாவிற்கு அமைதிக்கான நோபல் பரிசினை வழங்கும் போது நோபல் குழுவின் தலைவர் கூறியதாவது, “காந்திக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் இவ்விருது வழங்கப்படுகிறது”.
  2017-ம் ஆண்டிற்கான நோபல் பரிசுகள் 1. மருத்துவத்திற்கான நோபல் பரிசு
  • அமெரிக்காவைச் சேர்ந்த ஜெப்ரேசி ஹால், மைக்கேல் ராஷ்பேஷ் மற்றும் மைக்கேல் டபிள்யூ. யங் ஆகிய 3 பேருக்கு மருத்துவத்திற்கான நோபல் பரிசு பகிர்ந்தளிக்கப்படுகிறது.
  • உயிரியல் கடிகாரங்களை கட்டுப்படுத்தும் மூலக்கூறு இயக்கவியலை கண்டறிந்தமைக்காக இப்பரிசு அறிவிக்கப்பட்டிருக்கிறது.
2. இயற்பியலுக்கான நோபல் பரிசு
  • 2017ம் ஆண்டின் இயற்பியலுக்கான நோபல் பரிசானது ஈர்ப்பு அலைகளை உறுதி செய்த கண்டுபிடிப்பிற்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த சாதனைக்காக ராய்னர் வெய்ஸ், எஸ். தோர்ன், பேரி சி. பேரிஷ் ஆகிய 3 அமெரிக்க விஞ்ஞானிகளுக்கு இயற்பியலுக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.
3. வேதியலுக்கான நோபல் பரிசு
  • உயிரியல் மூலக்கூறுகளின் படங்களை மேம்படுத்திய 3 விஞ்ஞானிகளுக்கு வேதியலுக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.
  • ஜாக்குவிஸ் துபாஷே, ஜோவாஷிம் ஃபிராங்க் மற்றும் ரிச்சர்ட் ஹெண்டர்சன் ஆகியோருக்கு வழங்கப்பட இருக்கிறது.
4. இலக்கியத்திற்கான நோபல் பரிசு
  • பிரிட்டிஷ் எழுத்தாளர் கசூவோ இஷிகோரா 2017ம் ஆண்டு இலக்கியத்திற்கான நோபல் பரிசினை வென்றுள்ளார்.
  • 1954ம் ஆண்டு நாகசாகியில் பிறந்த இவர், தம்முடைய ஐந்தாம் வயதில் இங்கிலாந்துக்கு சென்றுவிட்டார். இவர் 7 நாவல்களையும், குறுங்கதைகளையும், திரைக்கதைகளையும் எழுதியிருக்கிறார்.
5. அமைதிக்கான நோபல் பரிசு
  • அமைதிக்கான நோபல் பரிசு அணு ஆயுதத்துக்கு எதிரான ‘‘ஐகேன்” (ICAN) என்ற அமைப்பிற்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
  • ஐகேன் (ICAN – International Campaign to Abolish Nuclear Weapons) அமைப்பு ஆனது தொடர்ந்து அணு ஆயுதங்களுக்கு எதிராக போராடி வருகிறது. இது ஜெனிவாவைத் தலைமையிடமாக கொண்டு செயல்படுகிறது.
6. பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு
  • 2017ம் ஆண்டின் பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு அமெரிக்கரான ரிச்சர்டு எச். தாலருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
  • உளவியலுடன் பொருளாதாரத்தை ஒருங்கிணைத்த ஆராய்ச்சிக்காக அவருக்கு நோபல் பரிசு வழங்கப்பட இருக்கிறது. ரிச்சர்ட். எச். தாலர் பொருளாதார முடிவெடுக்கும் பகுப்பாய்வுகளை ஆராய்வதில் மனோ ரீதியான, உண்மையான யதார்த்தங்களை தெரிவித்துள்ளார்.
  நோபல் பரிசு பெற்ற இந்தியர்கள்
ஆண்டு பரிசைப் பெற்றவர் பிரிவு குறிப்பு
1913 ரவீந்தரநாத்தாகூர் இலக்கியம்
1930 சி.வி. ராமன் இயற்பியல் ஒளிவிலகல் விளைவினை கண்டறிந்தமைக்காக
1979 அன்னை தெரசா (ஒட்டாமன் பேரரசில் கோப் ஜீ என்ற ஊரில் பிறந்தவர்) அமைதி வறுமையில் வாடியவர்கள் மற்றும் நோயுற்றோருக்கு உதவியதற்காக
1988 அமிர்த்தியா சென் பொருளாதாரம் நலன்சார் பொருளாதாரத்திற்காக வழங்கப்பட்டது
2014 கைலாஷ் சத்யார்த்தி அமைதி குழந்தைகளின் நலனிற்கு பாடுபட்டதற்காக பாகிஸ்தானை சேர்ந்த யூசுப் மலாலா என்ற சிறுமியுடன் சேர்த்து இவருக்கு வழங்கப்பட்டது
மேலை நாடுகளிலுள்ள இந்திய வம்சாவழியினர்
  • கீழ்க்காணும் நோபல் பரிசு பெற்றவர்கள் ஆங்கிலேயர் காலத்தில் இந்தியாவில் பிறந்தவர்கள் அல்லது இந்திய வம்சாவழியினர் ஆனால் இந்திய குடிமகன்கள் அல்லர்.
ஆண்டு பரிசை பெற்றவர் நாடு பிரிவு குறிப்பு
1968 ஹர்கோவிந்த் கொரானா (ராய்ப்பூரில் பிறந்தவர்) அமெரிக்கா மருத்துவம் மரபுக் குறியீடு பற்றியும் புரத்தை செயற்கையாக உற்பத்தி செய்வதில் அவற்றின் பங்கு பற்றி செய்த ஆய்விற்காக வழங்கப்பட்டது.
1983 சுப்ரமணியம் சந்திரசேகர் (லாகூரில் பிறந்தவர்) அமெரிக்கா இயற்பியல் விண்மீன்கள் பற்றிய ஆய்விற்கு வழங்கப்பட்டது.
2009 வெங்கட்ராமன் ராமகிருஷ்ணன் (சிதம்பரத்தில் பிறந்தவர்) இங்கிலாந்து வேதியியல் ரைபோசோம்களின் அமைப்பு மற்றும் செயல்பாடுகள் பற்றிய ஆய்விற்காக வழங்கப்பட்டது.
இதர நபர்கள்
  • கீழ்க்காணும் நோபல் பரிசு பெற்றவர்கள் இந்தியாவுடன் தொடர்புடையவர்கள் ஆவர். இந்தியாவில் பிறந்த வெளிநாட்டினர் அல்லது அவர்களின் பெற்றோர்கள் இந்தியாவில் பிறந்திருந்தால் இந்தியாவுடன் தொடர்புடையவராக கருதப்படுகிறது.
ஆண்டு பரிசை பெற்றவர் நாடு பிரிவு
1902 ரொனால்டு ராஸ் (அல்மோராவில் பிறந்தவர்) இங்கிலாந்து மருத்துவம்
1907 ருட்யார்ட் கிப்ளிங் (மும்பையில் பிறந்தவர்) இங்கிலாந்து இலக்கியம்
1989 14-வது தலாய்லாமா (சீனாவின் டேக்ட்சர் என்ற ஊரில் பிறந்தவர்) இந்தியா அமைதி
2001 வி.எஸ்.நேபால் (டிரினிடாட் டொபாகோவின் சவுகுணாஸ் என்ற ஊரில் பிறந்தவர்) இங்கிலாந்து இலக்கியம்
 

- - - - - - - - - - - - -

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்