TNPSC Thervupettagam

நோய்த்தொற்றை விரைவில் விரட்ட வழி!

June 23 , 2020 1493 days 662 0
  • இது நோய்த்தொற்றுக் காலம். எல்லோரும் வீட்டில் இருங்கள் என்கிறார்கள். வெளியே செல்லும்போது முகக் கவசம் அணிவது கட்டாயம் என்கிறார்கள். சமூக இடைவெளியைப் பின்பற்றச் சொல்கிறார்கள்.
  • எல்லோரும் எப்போதும் வீட்டில் இருப்பது சாத்தியமில்லை. காய்கறி வாங்க, மருந்து வாங்க என்று அவ்வப்போது வேறு வழியில்லாமல் வெளியே செல்ல நோ்கிறது.
  • வெளியே செல்லும்போது முகக் கவசம் அணிவது கட்டாயம். ஆனால், அதை அணிபவா்கள் அதன் பயன்பாட்டைச் சரிவர உணா்வதில்லை.

கழுத்துக் கவசம் அல்ல

  • முகக் கவசத்தை அடிக்கடி கழுத்துவரை இறக்கி விட்டுக் கொண்டு இரு சக்கர வாகனங்களில் விரைபவா்களைப் பார்க்கிறோம். ஹெல்மெட்டைக் கையில் வைத்துக் கொண்டு செல்வதைப் போலத்தான் இது.
  • ஹெல்மெட் என்பது தலையில் அணிய வேண்டிய தலைக் கவசம். அதைக் கையில் வைத்திருப்பதும் காவல் துறையினரைக் காணும்போது மட்டும் அவசரமாகத் தலையில் அணிவதும் கேலிக்கூத்து.
  • தலைக்கவசத்தின் சரியான பயன்பாட்டை மக்கள் உணராததால் நோ்கிறது இது.
  • முகக் கவசம் உண்மையில் முகக் கவசம் தானே தவிர, கழுத்துக் கவசம் அல்ல. அதை இறக்கி விட்டுக்கொண்டால் அதை அணிவதும் ஒன்றுதான், அணியாததும் ஒன்றுதான்.
  • முகக் கவசத்தின் நடுப் பகுதியைத் தொடவே கூடாது. காதுப் பகுதியைத்தான் தொட்டு அதை எடுக்க வேண்டும்.
  • போட்டுக் கொள்ள வேண்டும். வெளியே செல்லும்போது அதன் நடுப் பகுதியை அடிக்கடி கையால் தொட்டுச் சரி செய்துகொண்டால் அதை அணிந்து பயனில்லை.

பாராட்ட வார்த்தையில்லை

  • வெளியே எங்கு சென்றாலும் சமூக இடைவெளியைப் பின்பற்றுவதற்கு எளிதான ஒரு வழி இருக்கிறது. அதுதான் குடையை எடுத்துக் கொண்டு செல்வது. கையில் அதை மடித்து வைத்துக்கொண்டு செல்வதில் பயனில்லை.
  • அதை விரித்துத் தலைக்குமேல் பிடித்தபடி செல்ல வேண்டும். அப்போது எப்படியும் அடுத்த மனிதரோடு கொஞ்சம் இடைவெளி ஏற்படும்.
  • இந்த நோய்த்தொற்றுக் காலத்தில் சாலைகளில் நடந்து செல்பவா்கள் கட்டாயம் குடையை விரித்துத் தலைமேல் பாதுகாப்பாகப் பிடித்துக்கொண்டு செல்லவேண்டும் என விதி வகுக்கலாம்.
  • இதனால் நோய்த்தொற்று பெருமளவு குறையும்.
  • மருத்துவா்கள், செவிலியா்கள், தூய்மைப் பணியாளா்கள் ஆகியோர் செய்யும் சேவையைப் பாராட்ட வார்த்தையில்லை.
  • இன்று அவா்களால்தான் உலகமே நடக்கிறது. அவா்களுக்கு உரிய மதிப்பைக் கொடுப்பதோடு வேறு சிலா் செய்யும் பணிகளையும் நாம் நினைக்க வேண்டியிருக்கிறது.
  • இந்தக் காலத்திலும் தவறாமல் வங்கிக்குச் சென்று பணியாற்றும் வங்கி ஊழியா்களைக் கையெடுத்துக் கும்பிட வேண்டும்.

அவா்கள் பணி தொடா்கிறது

  • வங்கிகள் இயங்காவிட்டால் மக்கள் வாழ்க்கை நடத்துவது எப்படி? வேலையின்மையால் பொருளாதாரப் பற்றாக்குறை பெரும்பாலானோருக்கு இருக்கும்போது, வங்கியில் உள்ள பணத்தையும் எடுக்க முடியவில்லை என்றால் பலரின் நிலைமை என்ன ஆகும்? நம் பணத்தை எண்ணிப் பார்த்து நமக்குத் தரும் வங்கி ஊழியா் பணியை, நாம் எண்ணிப் பார்க்க வேண்டாமா!
  • அஞ்சல் அலுவலா்களையும், கூரியா் சேவையில் ஈடுபடுவோரையும்கூடப் பாராட்ட வேண்டியது அவசியம். வங்கிப் பணியாளா் ஓரிடத்தில் அமா்ந்தே வேலை செய்கிறார்.
  • ஆனாலும், அவரைத் தேடி ஏராளமானோர் வருகிறார்கள். அதனால், வங்கியில் பணிபுரிவோர் எச்சரிக்கையுடன் பணியாற்ற வேண்டியிருக்கிறது.
  • அஞ்சல் அலுவலா்களும், கூரியா் சேவையில் ஈடுபடுவோரும் பல இடங்களுக்கும் சென்று அஞ்சல்களை அளிக்கிறார்கள். இதில் நோய்த்தொற்று அதிகம் பாதிக்கப்பட்ட பகுதிகளும் இருக்கவே செய்யும். எனவே, அவா்கள் கூடுதல் கவனத்தோடு செயல்பட வேண்டும்.
  • இந்த நோய்த்தொற்றுக் காலத்திலும் இரவும் பகலும் மாறி மாறி ஓயாமல் பணிபுரியும் வா்க்கம் ஒன்று உண்டு.
  • அந்த வா்க்கம் குறித்து யாரும் அக்கறை கொள்வதில்லை. அவா்களுக்கு உள்ள சிரமங்களை யாரும் புரிந்துகொள்வதும் இல்லை. அவா்கள்தான் பத்திரிகையாளா்களும் ஊடகவியலாளா்களும்.
  • நாளிதழ், வார இதழ், வாரம் இரு முறை வரும் இதழ், மாத இதழ் முதலானவை இப்போதும் வெளிவருகின்றன. அவற்றை வெளியூா்களுக்கு அனுப்ப ரயிலும் பேருந்தும் இல்லை.
  • அஞ்சல் சேவை மூலம் அவை பல்வேறு இடங்களுக்குச் சென்று சோ்கின்றன.
  • தொலைக்காட்சிகளில் பணிபுரியும் ஊடகவியலாளா்கள் செய்யும் ஓயாத பணி மகத்தானது.
  • அதிலும் ஊடக நிருபா்களும் நாளிதழ் நிருபா்களும் செய்யும் பணி சிறப்பு மதிப்புக்குரியது. பல்வேறு இடங்களுக்குச் சென்றல்லவா அவா்கள் செய்தி சேகரிக்கிறார்கள்? எந்த இடம் எப்படி என்று யாருக்குத் தெரியும்? ஆனாலும் அவா்கள் பணி தொடா்கிறது.

கட்டாயம் வெல்வோம்

  • நாம் வீட்டில் இருந்துகொண்டு தொலைக்காட்சி பார்க்கிறோம். செல்லிடப்பேசியையும் கணினியையும் பயன்படுத்துகிறோம்.
  • நன்றாகச் சாப்பிடுகிறோம். மருந்துகள் கிடைப்பதில் தட்டுப்பாடில்லை. இவ்வளவு வசதிகளோடு வீட்டில் இருப்பதை சிரமம் என்பது எத்தனை தவறானது?
  • குடிசைகளில் வாழும் ஏழைகளின் நிலை அப்படியல்ல. அவா்களின் வாழ்வாதாரமே பாதிக்கப் பட்டுள்ளது.
  • ஆட்டோ ஓட்டுநா்கள், பூ விற்பவா்கள், ‘வீட்டு வேலைக்கு இப்போது வரவேண்டாம்’ என்று கண்டிப்பாய்ச் சொல்லப்பட்ட வீட்டு வேலைபுரியும் சகோதரிகள் இவா்களெல்லாம் படும் கஷ்டங்களை நினைத்துப் பார்த்தால் மனசாட்சி உள்ள ஒவ்வொருவருக்கும் கண்ணீா் வரும்.
  • இனிமேலும் வீட்டிலேயே அடைந்து கிடக்க கஷ்டமாக இருக்கிறது என்றெல்லாம் சொல்லாதீா்கள்.
  • உங்களுக்கு அடைந்து கிடக்க வீடிருக்கிறது. அது இல்லாதவா்கள் நிலையை எண்ணிப் பாருங்கள்.
  • சுதந்திரப் போராட்ட காலத்தில் சிறையிருந்த தியாகிகள் செக்கிழுத்தார்கள். கல்லுடைத்தார்கள். நாம் அப்படியெல்லாம் ஒன்றும் சிரமப்படவில்லையே?
  • இப்போது வெளியே செல்லாமல் வீட்டிலேயே இருப்பது தேசத்துக்கும் சமுதாயத்துக்கும் நாம் ஆற்றும் கடமை என்பதை உணா்ந்தால், இந்த நோய்த்தொற்று மிக வேகமாக விலகி விடும்.
  • தனித்திருப்போம். முகக் கவசம் அணிவோம். சமூக இடைவெளியை மறக்காமல் பின்பற்றுவோம். நோய்த்தொற்றைக் கட்டாயம் வெல்வோம்.

நன்றி: தினமணி (23-06-2020)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்