TNPSC Thervupettagam

பயப்படுவதற்கு ஒன்றுமில்லை... சீனா ஒரு காகிதப் புலிதான்

July 3 , 2023 563 days 297 0
  • சீனாவின் வலிமையை உலகம் மிரண்டு பார்க்கிறது என்றும். சீனாவின் ஆட்டத்தை கட்டுப்படுத்தவே இந்தியாவை அமெரிக்கா தன் பக்கம் இழுக்க முயல்கிறது என்றும் ஒரு பொதுவான கருத்து நிலவுகிறது. ஆனால், யதார்த்தம் அப்படி இல்லை. சீனா நிஜப் புலி அல்ல. அது ஒரு காகிதப் புலி.
  • சீனாவைப் பற்றிய 5 விஷயங்களை மனதில் கொள்ள வேண்டியது அவசியம். அந்த 5 கூறுகள் சீனாவை எந்த நேரம் வேண்டுமானாலும் சரிவில் தள்ளலாம்.
  • முதலாவது, சீனா அதன் உணவு தேவைக்கு வெளிநாடுகளையே நம்பி உள்ளது. இராண்டாவது, சீனாவில் போதியஎரிசக்தி இல்லை. சீனா அதற்கு தேவையான எரிசக்தியை வெளிநாடுகளிலிருந்தே இறக்குமதி செய்கிறது. மூன்றாவது, உற்பத்திக்குத் தேவையான போதிய கச்சா பொருள்கள் சீனாவிடம் இல்லை. வெளிநாடுகளைத்தான் சார்ந்திருக்கிறது. நான்காவது, சீனா மிகப் பெரிய ராணுவக் கட்டமைப்பைக் கொண்டிருக்கலாம். ஆனால், அதன் உண்மையான பலம் இன்னும் சோதிக்கப்படவில்லை. ஐந்தாவது, சீனாவுக்கு அடிப்படை அறிவு இல்லை. ஏனைய நாடுகளுடன் நட்புறவு கொள்ளாமல், நிறைய எதிரிகளைக் சீனா கொண்டிருக்கிறது. அதன் நட்பு நாடுகள் என்று சொல்லப்படுபவைக்கூட பெரிய அளவில் பலன்தரக்கூடியவை அல்ல.

உணவு தேவையில் தடுமாற்றம்:

  • சீனாவின் மொத்த நிலப்பரப்பில் கால் பங்கு மட்டுமே விவசாயத்துக்கு ஏற்றது. அதனால், சீனா தலைகீழாக நின்றாலும், அதற்குத் தேவையான உணவை விளைவிக்க முடியாது. அப்படியென்றால், சீனாஅதன் உணவு தேவைக்கு என்ன செய்கிறது. வெளிநாடுகளிலிருந்துதான் இறக்குமதி செய்கிறது. அடுத்த 5 ஆண்டுகளுக்கு, மிக அதிக அளவில் கோதுமை இறக்குமதி செய்வதற்கு சீனா ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது. இது உலக கோதுமை வர்த்தகத்தில் 50 சதவீதத்துக்கு மேல். இவ்வளவு கோதுமையை சீனா ஏன் இறக்குமதி செய்கிறது? காரணம், உணவு பற்றாக்குறையால் கலவரம் ஏற்படக் கூடாது என்பதில் சீன கம்யூனிஸ்ட் கட்சி மிகுந்த கவனத்துடன் இருக்கிறது. சுவாரஸ்யம் என்னவென்றால், சீனர்கள் கோதுமையை பிரதான உணவாகக் கொள்வதில்லை. அப்படியென்றால், இவ்வளவு கோதுமையை வைத்து சீனா என்ன செய்யப்போகிறது? சீனா தடுமாற்றத்தில் இருப்பதை இது காட்டுகிறது.
  • அடுத்து எரிசக்தி. உலக எரிவாயு விநியோகத்தில் 90 சதவீதத்தை சீனா வாங்குகிறது. எரிசக்தி இறக்குமதி தொடர்பாக ரஷ்யாவுடன் சீனா நீண்டகால ஒப்பந்தம் மேற்கொண்டிருக்கிறது. ஆனால், உக்ரைன் உடனான போரைத் தொடர்ந்து ரஷ்யா அதன் எரிசக்தி விநியோகத்தில் திணறுகிறது. இதனால், சீனாவுக்கான விநியோகம் பாதிக்க வாய்ப்புள்ளது. ஆக,எரிசக்தி சார்ந்தும் சீனா பலவீனமான இடத்தில் உள்ளது.
  • கச்சா பொருள்களைப் பொறுத்தவரையில், வளமிக்க நாடுகளைக் குறிவைத்து சீனா செயல்பட்டு வருகிறது. ஆனால், தற்போது உலக நாடுகள் தங்கள் வளத்தைப் பாதுகாப்பதில் கவனம் செலுத்தத் தொடங்கியுள்ளன. ஆக, கச்சா பொருள்சார்ந்து சீனாவுக்கு நெருக்கடி ஆரம்பித்துள்ளது.
  • இன்னொரு விஷயம். சீனா அதன் யுவானை டாலருக்கு மாற்றான சர்வதேச நாணயமாக மாற்ற முயற்சி செய்து வருகிறது. துயரம் என்னவென்றால் வட கொரியா, பாகிஸ்தான், ரஷ்யாதான் சீனாவின் இந்த திட்டத்துக்கு பெரும் ஆதரவு தரும் நாடுகள். சிரிப்புதான் வருகிறது. யுவான் சர்வதேச செலாவணியாக மாறவேண்டுமென்றால், மற்ற நாடுகள் சீனாவின் மீதும் அதன் நாணயத்தின் மீதும் பெரும் நம்பிக்கைக் கொள்ள வேண்டும். சீனாவை எந்த நாடுகள் நம்பும்?
  • 4-வது போருக்கு லாயக் கில்லை. சீனாவின்ராணுவக் கட்டமைப்பு. சீனாகடைசியாக போரிட்டது 1979-ல்தான். அதுவும் சிறிய நாடானவியட்நாமுக்கு எதிராக. அப்போதும் சீனாவின் மூக்கு உடைபட்டது. அதன்பிறகு சீனா போருக்குதுணியவில்லை. சீனா நிறைய ராணுவதளவாடங்களை வைத்திருக்கலாம். ஆனால், அதன் வீரர்கள் அணிவகுப்புநடத்தத்தான் லாயக்கு. அவர்கள் சண்டையிடுவதில் ஆர்வம் காட்டுவதில்லை. தன் சொந்த வீரர்கள் மீது சீனா கம்யூனிஸ்ட்கட்சிக்கு நம்பிக்கை கிடையாது. இதனால், போர் ஏற்படுவதை சீனா தவிர்க்கவே முயலும்.

எல்லாருடனும் பகை:

  • இறுதியாக, அடிப்படை அறிவு. உண்மையில் சீனாவுக்கு அடிப்படை அறிவே இல்லை. அது உலகத்திலிருந்து தன்னை துண்டித்துக்கொண்டுள்ளது. எந்த நாட்டுடனும் சீனாவுக்கு ஆரோக்கியமான உறவுஇல்லை.
  • அப்படியென்றால், ஏன் எல்லாரும் இந்த காகித புலியைப் பெரிதாக பார்க்கிறார்கள்? ஏன் அமெரிக்கா சீனாவுடன் தீவிர மோதல் மேற்கொள்ள தயங்குகிறது? காரணம், அமெரிக்கா சீனாவில் பெரும் முதலீடு மேற்கொண்டு இருக்கிறது. இதனால்தான் அமெரிக்காவின் கொள்கைகள் சீனாவை பிரதானப்படுத்தி அமைகின்றன. இதன் காரணமாகவே, 2 நாடுகளும் போருக்கு முயல்வதில்லை.
  • சரி, இந்த இரு நாடுகளுக்கு மத்தியில்இந்தியாவின் நிலவரம் என்ன? சீனாவும்அமெரிக்காவும் நமக்குத் தேவையானவற்றை வழங்குகின்றன. குறைந்த விலையில் சீனா நமக்கு சரக்குகளை அனுப்புகிறது. அதிநவீன தொழில்நுட்பங்களை அமெரிக்கா அனுப்புகிறது. இதற்கு மேல் என்ன வேண்டும். தற்கால இளைஞர்கள் மொழியில் சொன்னால், “கூல் ப்ரோ, கீப் அட் இட்.”

நன்றி: இந்து தமிழ் திசை (03  – 07 – 2023)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்