TNPSC Thervupettagam

பாரத ரத்னா மற்றும் 2024 ஆம் ஆண்டிற்கான விருது பெற்றவர்கள்

April 20 , 2024 265 days 2777 0

(For English version to this please click here)

பாரத ரத்னா ஓர் அறிமுகம்:

  • இந்தியாவின் குடிமகனுக்கு வழங்கப்படும் மிக உயரிய விருதான பாரத ரத்னா 1954 ஆம் ஆண்டு நிறுவப் பட்டது.
  • இனம், தொழில் அல்லது பாலினம் ஆகியவற்றைப் பொருட்படுத்தாமல் தனிநபர்களின் தகுதியின் அடிப்படையில் இந்த விருது வழங்கப் படுகிறது.
  • பாரத ரத்னா விருது வென்றோர்களுக்கு குடியரசுத் தலைவரால் கையொப்பமிடப்பட்ட சான்றிதழும் (Sanad) ஒரு பதக்கமும் வழங்கப் படுகிறது.

தகுதி மற்றும் தேர்வு:

  • எந்தவொரு துறையிலும் சிறப்பாகப் பணியாற்றியவர்களின் சேவை அல்லது செயல்திறனுக்காக பாரத ரத்னா விருது வழங்கப்படுகிறது.
  • இவ்விருதிற்கான நபர்களைப் பிரதமர் ஜனாதிபதிக்கு நேரடியாக பரிந்துரை செய்கிறார் எனவே  முறையான பரிந்துரைகளின் அடிப்படையில் இதற்கு நபர்கள் தேர்வு செய்யப்படுவதில்லை.
  • ஆண்டுக்கு அதிகபட்சமாக மூன்று விருதுகள் மட்டுமே வழங்கப் படுகிறது.

விதிவிலக்காக பாரத ரத்னா விருது பெற்றவர்கள்:

  • இது முதன்மையாக இந்தியக் குடிமகனுக்கு வழங்கப் படுகிறது.
  • இதற்கு மாறாக இந்தியக் குடிமகன் அல்லாத அன்னை தெரசா, கான் அப்துல் கபார் கான் மற்றும் நெல்சன் மண்டேலா ஆகியோர்களுக்கும் இந்த விருதானது வழங்கப் பட்டுள்ளது.

திருத்தங்கள் மற்றும் மறைவிற்கு பின்னர் அறிவிக்கப்பட்ட விருதுகள்:

  • இந்த விருதுகள் ஒருவரின் மறைவிற்கு பின்னர் வழங்கப்படுவது முதலில் அனுமதிக்கப் படவில்லை, ஆனால் இது 1955 ஆம் ஆண்டில் திருத்தப்பட்டது.
  • முதன்முதலில் மறைவிற்குப் பின் விருது பெற்றவர் லால் பகதூர் சாஸ்திரி ஆவர்.

விதிவிலக்குகள் மற்றும் சமீபத்திய நிகழ்வுகள்:

  • பாரத ரத்னா விருதுக்கான வழிகாட்டுதலின்படி, ஆண்டுக்கு மூன்று பேர் மட்டுமே இதனைப் பெறுவர் என்ற தொடக்கக் காலங்களில் என நிர்ணயிக்கப்பட்ட விதியானது 1999 ஆம் ஆண்டில் திருத்தப் பட்டது.
  • அப்போது ஜெயப்பிரகாஷ் நாராயண், அமர்த்தியா சென், கோபிநாத் போர்டோலோய் மற்றும் ரவிசங்கர் ஆகியோரைக் கௌரவிக்கும் வகையில் முதன்முதலில் இவ்விருது ஐந்து நபர்களுக்கு என்ற வியில் வழிகாட்டுதலுக்குப் புறம்பாக வழங்கப்பட்டது.
  • 2024 ஆம் ஆண்டு, இந்த வழிகாட்டுதல்கள் மீண்டும் மீறப்பட்டு, தற்போது ஐந்து நபர்களுக்கு வழங்கப் பட்டு உள்ளது.

2024 விருது பெற்றவர்கள்:

  • பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் இந்த ஆண்டிற்கான பாரத ரத்னா விருது பெறுபவர்களின் பட்டியலில் மான்கொம்பு சாம்பசிவன் சுவாமிநாதன், பாமுலபார்த்தி வெங்கட நரசிம்ம ராவ், சவுத்ரி சரண் சிங், கர்பூரி தாக்கூர் மற்றும் லால் கிருஷ்ண அத்வானி ஆகியோரை அறிவித்தார்.

​​​​​

மான்கொம்பு சாம்பசிவன் சுவாமிநாதன்

  • டாக்டர் எம் எஸ் சுவாமிநாதன் "இந்தியாவின் பசுமைப் புரட்சியின் தந்தை" என அழைக்கப் படுகிறார்.
  • இவர் வேளாண் அறிவியலாளர் மற்றும் வேளாண் வல்லுநர் ஆவர்.
  • பசுமைப் புரட்சி: 1960களின் மத்தியில் விவசாயத்தில் பெரும் மாற்றம் ஏற்பட்டு, அதிக மகசூல் தரும் பயிர் வகைகள் பயிரிடப் பட்டது.
  • எம்.எஸ்.சுவாமிநாதனின் பங்கு: இவர் இந்தியாவின் பசுமைப் புரட்சியை வழிநடத்தியவர் ஆவார்.
  • அதிக மகசூல் தரும் பயிர் வகைகளின் வளர்ச்சி: தானிய விளைச்சலை அதிகரிக்க புதிய கோதுமை ரகப் பயிர்களை உருவாக்க டாக்டர். நார்மன் போர்லாக் உடன் இணைந்து அவர் பணியாற்றினார்.
  • விவசாயிகளுக்கான ஆதரவு: புதிய தானிய வகைகளின் பயன்களை விவசாயிகளுக்கு எடுத்து உரைப்பதற்கான செயல்விளக்கத் தளங்களை அவர் நிறுவினார்.
  • தாக்கம்: இந்தியாவின் கோதுமை உற்பத்தி இரட்டிப்பாக்கப் பட்டு, அது தானிய இறக்குமதியின் தேவையைக் குறைத்தது.

உணவுப் பாதுகாப்பு மற்றும் விவசாயிகள் நலனை உறுதி செய்தல்

  • உணவுப் பாதுகாப்பு ஆலோசனை: இந்தியாவின் உணவுப் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக பயிர் விளைச்சலை அதிகரிப்பிற்கு அப்பாலும் எம்.எஸ்.சுவாமிநாதன் இலக்கு வைத்துள்ளார்.
  • ஏழை நுகர்வோருக்கு உணவு தானியங்களை வழங்குவதற்கும், பசியைப் போக்குவதற்கும், பயனுள்ள பொது விநியோக முறைக்கு அவர் வாதிட்டார்.
  • 1960களில் அமெரிக்க இறக்குமதியை நம்பியிருந்த, வறட்சியால் பாதிக்கப்பட்ட நாடாக இருந்த இந்தியாவை 1971 ஆம் ஆண்டில் உணவில் அவர் தன்னிறைவு அடையச் செய்தார்.
  • வேளாண் அறிவியல் மற்றும் உணவுப் பாதுகாப்பிற்கானப் பங்களிப்புகளுக்காக 1987 ஆம் ஆண்டு அவர் உலக உணவுப் பரிசு பெற்றார் என்பதோடு அந்தப் பரிசுத் தொகையுடன் எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி அறக்கட்டளை (MS Swaminathan Research Foundation) நிறுவப்பட்டது.

விவசாயிகளுக்கான தேசிய ஆணையம்

  • விவசாயிகளுக்கான தேசிய ஆணையத் தலைவராக இருந்த சுவாமிநாதன் குறைந்தபட்ச பயிர் ஆதரவு விலை, விரைவான உள்ளடக்கிய வளர்ச்சி மற்றும் விவசாயிகள் தற்கொலைக்கு தீர்வு காண்பதற்கான கொள்கைகளை பரிந்துரைத்து, அறிக்கைகளை வெளியிட்டார்.
  • விவசாயிகளின் நலன்களைப் பாதுகாப்பதற்காக 2001 ஆம் ஆண்டு பயிர் வகைகள் மற்றும் விவசாயிகளின் உரிமைகள் பாதுகாப்புச் சட்டத்தை உருவாக்குவதற்கான கருவியாக அவர் செயல்பட்டார்

விருதுகள் மற்றும் அங்கீகாரங்கள்

விவரங்கள்

கவுரவ டாக்டர் பட்டங்கள்

உலகெங்கிலும் உள்ள பல்கலைக்கழகங்களில் இருந்து 80க்கும் மேற்பட்ட கவுரவ டாக்டர் பட்டங்களை அவர் பெற்றுள்ளார்.

நாடாளுமன்ற உறுப்பினர்

2007 ஆம் ஆண்டு முதல் 2013 ஆம் ஆண்டு வரை அவர் மாநிலங்களவையில் பணியாற்றினார்.

சர்வதேச விருதுகள்

சமூகத் தலைமைக்கான ராமன் மகசேசே விருது, 1971

ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் உலக அறிவியல் விருது, 1986

உலக உணவுப் பரிசு, 1987

UNEP சசகாவா சுற்றுச்சூழல் பரிசு, 1994

ஃபிராங்க்ளின் டி ரூஸ்வெல்ட் நான்கு சுதந்திரப் பதக்கம், 2000

யுனெஸ்கோவின் மகாத்மா காந்தி பரிசு, 2000

தேசிய விருதுகள்

எஸ்.எஸ்.பட்நாகர் விருது, 1961

பத்மஸ்ரீ, 1967

பத்ம பூஷன், 1972

பத்ம விபூஷன், 1989

அமைதி, ஆயுதக் குறைப்பு மற்றும் மேம்பாட்டிற்கான இந்திரா காந்தி பரிசு, 2000

லால் பகதூர் சாஸ்திரி தேசிய விருது, 2007

பாமுலபார்த்தி வெங்கட நரசிம்ம ராவ்

ஆரம்பகால வாழ்க்கை மற்றும் தொழில்முறை:

  • நரசிம்ம ராவ் முற்காலத்தில் நிஜாம் ஆண்ட ஹைதராபாத் மாநிலத்தில் ஜூன் 28, 1921 ஆம் ஆண்டு பிறந்தார்.
  • இவர் சுதந்திரப் போராட்டத்திலும், கல்வியிலும், இலக்கியத்திலும் மிகுந்த ஈடுபாடு கொண்டிருந்தார்.

பிரதமர் மற்றும் இலக்கியப் பங்களிப்புகள்:

  • இந்தியாவின் 9வது பிரதமராக 1991 ஆம் ஆண்டு முதல் 1996 ஆம் ஆண்டு வரை இவர் பதவி வகித்தார்.
  • இவர் புகழ்பெற்ற தெலுங்கு நாவலான 'வேய் படாகலு'வின் ஹிந்தி மொழிபெயர்ப்பான 'சஹாஸ்ரஃபானை' வெளியிட்டார்.

பொருளாதார சீர்திருத்தங்கள்:

  • இந்தியாவில் வணிகங்கள் செய்வதற்கு தேவையான உரிமத்தின் கட்டுப்பாடுகளை அகற்றி, இந்திய தொழில்களின் போட்டித்தன்மையை அதிகரிக்க வேண்டி, அதிகாரத்துவத் தடைகளைக் குறைப்பதை நோக்கமாகக் கொண்டு இவர் செயல்பட்டார்.
  • பொருளாதாரத் தாராளமயமாக்கல், சந்தைசார் கொள்கைகள் மற்றும் தனியார் மற்றும் வெளிநாட்டு முதலீடுகளை இவர் மேம்படுத்தினார்.

வெளியுறவுக் கொள்கை முன்னெடுப்புகள்:

  • நரசிம்ம ராவ் இஸ்ரேலுடன் இராஜதந்திர உறவுகளை ஏற்படுத்தினார்.
  • இவர் இந்தியாவின் கிழக்கு நோக்கிய கொள்கையை அறிமுகப்படுத்தினார்.
  • வர் வெகு காலமாக அமெரிக்காவுடனான இறுக்கமான உறவை மேம்பட்ட உறவாக மாற்றினார்.

அரசியலமைப்பு திருத்தங்கள்:

  • இவர் உள்ளாட்சி அமைப்புகளுக்கு அதிகாரம் அளிக்கும் வகையில் 73 மற்றும் 74 வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டத்தை இயற்றுவதை மேற்பார்வையிட்டார்.

சௌத்ரி சரண் சிங்

ஆரம்பகால வாழ்க்கை மற்றும் அரசியல் வாழ்க்கை:

  • இவர் 1902 ஆம் ஆண்டு மீரட்டில் நடுத்தர வர்க்க விவசாயக் குடும்பத்தில் பிறந்தார்.
  • இவர் பல்வேறு அமைச்சர் பதவிகளை வகித்து காங்கிரஸ் கட்சியில் அரசியல் பயணத்தை தனது தொடங்கினார்.

தலைமைப் பண்புகள்:

  • இவர் 1967 ஆம் ஆண்டு உத்தரப் பிரதேசத்தின் முதலமைச்சரானார்.
  • 1979 ஆம் ஆண்டு குறுகிய காலத்திற்கு அவர் பிரதமராகப் பணியாற்றினார், னால் அரசியல் கொந்தளிப்புகளுக்கு மத்தியில் அவர் தனது பதவியினை ராஜினாமா செய்தார்.

மரபு மற்றும் பங்களிப்புகள்:

  • ஜனதா கட்சியின் ஒரு முக்கிய நபரான இவர், நிலச் சீர்திருத்தங்கள் மற்றும் விவசாயக் கொள்கைகள் பற்றிய அவரது கட்டுரைகளுக்குப் பெயர் பெற்றவர் ஆவார்.
  • குறிப்பிடத்தக்க நிலச் சீர்திருத்த மசோதாக்கள் உட்பட விவசாயச் சீர்திருத்தத்தை இலக்காகக் கொண்ட முக்கிய சட்டமன்ற முன்முயற்சிகளுக்குத் தலைமை தாங்கியதற்காக அவர் புகழ் பெற்றவர் ஆவார்.

கர்பூரி தாக்கூர்

ஆரம்பகால வாழ்க்கை மற்றும் அரசியல் வழிகாட்டுதல்:

  • "ஜன் நாயக்" என்று அழைக்கப்படும் கர்பூரி தாக்கூர் பீகாரின் 11வது முதல்வராக இரண்டு முறை பணியாற்றி உள்ளார்.
  • இவர் ஜெயப்பிரகாஷ் நரேன், டாக்டர் ராம் மனோகர் லோஹியா மற்றும் ராம்நந்தன் மிஸ்ரா போன்ற தலைவர்களின் வழிகாட்டுதல்கள் மூலம் உருவான ஒரு சுதந்திரப் போராட்ட வீரர் மற்றும் உறுதியான ஒரு பொதுவுடைமை வாதி ஆவார்.
  • 1952 ஆம் ஆண்டில் அரசியலில் நுழைந்து 1985 ஆம் ஆண்டு வரை சட்டமன்ற உறுப்பினராகப் பணியாற்றி, இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்களில் (OBC) மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினரான (EBC) நை (Nai) என்ற சமூகத்தை அவர் பிரதிநிதித்துவப்படுத்தினார்.

முதலமைச்சர் பதவிக் காலம் மற்றும் இட ஒதுக்கீடு கொள்கை:

  • கர்பூரி தாக்கூரின் 1977 ஆம் ஆண்டு பதவிக் காலத்தில், முங்கேரி லால் ஆணையம், முஸ்லீம்களில் நலிந்த பிரிவினர் உட்பட பிற்படுத்தப்பட்ட வகுப்பினரை மறுவகைப்படுத்தப் பரிந்துரைத்தது.
  • இது 1978 ஆம் ஆண்டில் இட ஒதுக்கீட்டு முன்மாதிரியை அறிமுகப்படுத்தியது.
  • இது இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்கள் (OBC), மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினரானகள் (EBC), பெண்கள் மற்றும் உயர் சாதியினரிடையே பொருளாதாரத்தில் பின்தங்கிய வகுப்பினருக்கு குறிப்பிட்ட ஒதுக்கீடுடன் 26% அளவிற்கு இடஒதுக்கீடுகளை வழங்கியது.
  • இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 27% இட ஒதுக்கீடு அளிக்க வேண்டும் என்று மண்டல் கமிஷன் அறிக்கைக்கு முன்பாகவே இது வெளியிடப் பட்டது.

கொள்கை அமலாக்கங்கள்:

  • இவர் இந்தி மற்றும் உருதுவை இரண்டாவது அதிகாரப்பூர்வ மொழியாக உயர்த்தினார்.
  • இவர் பள்ளிக் கட்டணத்தைத் தள்ளுபடி செய்து, பஞ்சாயத்து ராஜ் முறையை அங்கு வலுப் படுத்தினார்.

லால் கிருஷ்ண அத்வானி

  • பிறப்பு: இந்தியப் பிரிவினைக்கு முந்தைய காலத்தில் நவம்பர் 8, 1927 ஆம் ஆண்டு கராச்சியில் இவர் பிறந்தார்.
  • ஆரம்பகால இணைப்பு: ராஷ்ட்ரிய ஸ்வயம்சேவக் சங்கம் (RSS) மற்றும் பாரதிய ஜன சங்கத்துடன் இவர் இணைந்தார்.
  • அரசியல் நுழைவு: ஆர்எஸ்எஸ் மூலம் அரசியலில் சேர்ந்தார் மற்றும் 1951 ஆம் ஆண்டு பாரதிய ஜன சங்கத்தில் இவர்  உறுப்பினரானார்.
  • ராஜ்யசபா உறுப்பினர்: 1970 ஆம் ஆண்டு ராஜ்யசபாவிற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டு இவர் தனது அரசியல் பயணத்தைத் தொடங்கினார்.
  • பாஜகவின் இணை நிறுவனர்: இவர் 1980 ஆம் ஆண்டு பாரதிய ஜனதா கட்சியை (BJP) நிறுவச் செய்வதற்கு உதவினார்.
  • துணைப் பிரதமர்: 2002 ஆம் ஆண்டு முதல் 2004 ஆம் ஆண்டு வரை இந்தியாவின் துணைப் பிரதமராகப் பணியாற்றினார்.
  • பங்களிப்புகள்: பொருளாதாரச் சீர்திருத்தங்கள், உள்கட்டமைப்பு மேம்பாடு மற்றும் 1998 ஆம் ஆண்டு இந்தியாவின் அணுசக்தி சோதனைகளில் இவர் முக்கியப் பங்காற்றினார்.

 

பாரத ரத்னா விருது பெற்றவர்களின் பட்டியல்

வரிசை எண்.

விருது பெற்றவர்கள்

ஆண்டு

1

சக்கரவர்த்தி ராஜகோபாலாச்சாரி

1954

2

சர்வபள்ளி ராதாகிருஷ்ணன்

1954

3

சந்திரசேகர வெங்கட ராமன்

1954

4

பகவான் தாஸ்

1955

5

மோக்ஷகுண்டம் விஸ்வேஸ்வரய்யா

1955

6

ஜவஹர்லால் நேரு

1955

7

கோவிந்த் பல்லப் பந்த்

1957

8

தோண்டோ கேசவ் கார்வே

1958

9

பிதான் சந்திர ராய்

1961

10

புருஷோத்தம் தாஸ் டாண்டன்

1961

11

ராஜேந்திர பிரசாத்

1962

12

ஜாகிர் உசேன்

1963

13

பாண்டுரங் வாமன் கேன்

1963

14

லால் பகதூர் சாஸ்திரி

1966

15

இந்திரா காந்தி

1971

16

வராஹகிரி வேங்கட கிரி

1975

17

குமாரசாமி காமராஜ்

1976

18

அன்னை மேரி தெரசா போஜாக்ஷியு (அன்னை தெரசா) 1

1980

19

வினோபா பாவே

1983

20

கான் அப்துல் கபார் கான்

1987

21

மருதூர் கோபாலன் ராமச்சந்திரன்

1988

22

பீமா ராவ் ராம்ஜி அம்பேத்கர்

1990

23

நெல்சன் ரோலிஹ்லாஹ்லா மண்டேலா

1990

24

ராஜீவ் காந்தி

1991

25

சர்தார் வல்லபாய் படேல்

1991

26

மொரார்ஜி ரஞ்சோட்ஜி தேசாய்

1991

27

மௌலானா அபுல் கலாம் ஆசாத்

1992

28

ஜஹாங்கீர் ரத்தன்ஜி தாதாபாய் டாடா

1992

29

சத்யஜித் ரே

1992

30

குல்சாரி லால் நந்தா

1997

31

அருணா ஆசஃப் அலி

1997

32

ஏ.பி.ஜே. அப்துல் கலாம்

1997

33

மதுரை சண்முகவடிவு சுப்புலட்சுமி

1998

34

சிதம்பரம் சுப்ரமணியம்

1998

35

ஜெயப்பிரகாஷ் நாராயண்

1999

36

அமர்த்தியா சென்

1999

37

லோக்பிரியா கோபிநாத் போர்டோலோய்

1999

38

ரவிசங்கர்

1999

39

லதா தினாநாத் மங்கேஷ்கர்

2001

40

உஸ்தாத் பிஸ்மில்லா கான்

2001

41

பீம்சென் குருராஜ் ஜோஷி

2009

42

சி. என். ஆர். ராவ்

2014

43

சச்சின் ரமேஷ் டெண்டுல்கர்

2014

44

அடல் பிஹாரி வாஜ்பாய்

2015

45

மதன் மோகன் மாளவியா

2015

46

நானாஜி தேஷ்முக்

2019

47

பூபேந்திர குமார் ஹசாரிகா

2019

48

பிரணாப் முகர்ஜி

2019

49

கர்பூரி தாக்கூர்

2024

50

லால் கிருஷ்ண அத்வானி

2024

51

பாமுலபார்த்தி வெங்கட நரசிம்ம ராவ்

2024

52

சௌத்ரி சரண் சிங்

2024

53

மான்கொம்பு சாம்பசிவன் சுவாமிநாதன்

2024

-------------------------------------

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்