TNPSC Thervupettagam

பிரசாந்த சந்திரா மஹல்நோபிஸ்

July 25 , 2018 2317 days 1923 0
  • பிரசாந்த சந்திரா மஹலநோபிஸ் என்பவர் இந்திய அறிவியலாளர் மற்றும் செயல்முறைப் புள்ளியலாளர்.
  • புள்ளியியல் அளவீடான மஹலநோபிஸ் தொலைவிற்காக இவர் நினைவு கூறப்படுகிறார். இவர் சுதந்திர இந்தியாவில் முதலாவது திட்டக் குழுவின் உறுப்பினர்களில் ஒருவராக பணியாற்றினார்.
  • இந்தியாவில் மஹலநோபிஸ் நவீனப் புள்ளியலின் தந்தை என்று கருதப்படுகிறார்.

  • பேராசிரியர் மஹலநோபிஸின் 125வது பிறந்த தினம் ஜூன் 29, 2018 ஆகும்.
  • பிரசாந்த சந்திரா மஹலநோபிஸ் கேம்பிரிட்ஜில் உள்ள கிங்ஸ் கல்லூரியின் நூலகத்தில் அதிக நேரத்தை செலவிட்டார். மஹலநோபிஸின் ஆசிரியர் அவருக்கு அந்தக் காலகட்டத்தில் தத்துவார்த்த புள்ளியியலின் முன்னணி புத்தகமான, பயோமெட்ரிக்கா (Biometrica) என்னும் புத்தகத்தை அறிமுகப்படுத்தினார்.

குறிப்பிடத்தக்க பணிகள்

  • பிரசாந்த சந்திரா மஹலநோபிஸ் இந்தியப் புள்ளியியல் நிறுவனத்தைத் தொடங்கி புள்ளியியல் ஆய்வின் முன்னோடியாகத் திகழ்ந்தார். தேசிய மாதிரி கணக்காய்வு அலுவலகம் (NSSO - National Sample Survey Office) மற்றும் மத்தியப் புள்ளியியல் நிறுவனம் (CSO - Central Statistical Office) ஆகியவற்றின் மூலம் இந்தியப் புள்ளியல் அமைப்பிற்கு அடித்தளமிடப்பட்டது.
  • முதல் புள்ளியியல் நிறுவனம் ஜெர்ட்டுரூடு கோக்ஸ் என்பவர் தலைமையில் அமெரிக்காவில் அமைக்கப்பட்ட போது, ஐஎஸ்ஐ அதற்கு மாதிரியாகப் பயன்படுத்தப்பட்டது.
  • 1920-ன் தொடக்கத்தில் மஹலநோபிஸ் கல்கத்தாவின் பிரசிடென்சி கல்லூரியில் புள்ளியியல் ஆய்வு மையத்தைத் தொடங்கினார்.
  • பிரசாந்தா இந்தியப் புள்ளியியலின் பத்திரிக்கையான ‘சன்கியா’ என்ற பத்திரிக்கையைத் தொடங்கினார். ‘சன்கியா’ என்ற வார்த்தையின் பொருள் ‘அறிவைத் தீர்மானித்தல்’ மற்றும் ‘எண்’ என்பதாகும்.
  • மஹலநோபிஸ் 1926-ல் ஒரிசாவில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கம் சம்பந்தமாக 60 வருட தரவுகளை ஆய்வு செய்தார். இந்த ஆய்வின் மூலம் முப்பது ஆண்டுகளுக்குப் பிறகு மகாநதி ஆற்றின் குறுக்கே ஹிராகுட் அணை கட்டப்பட்டது.
  • நவீன உலகில் பீட்டர் ஹால் (Peter Hall) என்பவர் போற்றப்படும் புள்ளியியலாளர்களில் ஒருவர் ஆவார். அவர் ‘பூட்ஸ்ட்ராப் முறை’ உருவாக காரணமாக இருந்தவர். இது நவீனப் புள்ளியியலின் மிகவும் சக்தி வாய்ந்த நுட்பமாக 1930 மற்றும் 1940களில் மஹலநோபிஸால் ஆய்வு செய்யப்பட்டது.
  • கணித நோபல் என்றழைக்கப்படும் ‘அபேல் விருதை’ வென்ற இந்தியாவைப் பூர்வீகமாகக் கொண்டவரான ஒரே நபர் எஸ்.ஆர்.ஸ்ரீனிவாச வரதன் ஆவார். இவர் 1959-ல் ஐஎஸ்ஐ-ல் பிஹெச்டி-ஐ முடித்துள்ளார்.

நன்றி: தி இந்தியன் எக்ஸ்பிரஸ்

- - - - - - - - - - - - - - - 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்