TNPSC Thervupettagam
September 10 , 2018 2121 days 3080 0
  • பீம்ஸ்டெக் (BIMSTEC – Bay of Bengal Initiative for Multi-Sectoral Technical and Economic Cooperation) என்ற அமைப்பின் விரிவாக்கமானது பல்துறை தொழில்நுட்ப மற்றும் பொருளாதார ஒத்துழைப்பிற்கான வங்காள விரிகுடா என்பதாகும்.
  • இது தெற்கு ஆசியா மற்றும் தென் கிழக்கு ஆசியாவைச் சேர்ந்த ஏழு நாடுகளின் சர்வதேச அமைப்பாகும்.
  • இந்த அமைப்பில் வங்க தேசம், பூடான், இந்தியா, மியான்மர், நேபாளம், இலங்கை மற்றும் தாய்லாந்து ஆகிய நாடுகள் உள்ளன.
  • இந்த அமைப்பின் நிரந்தரத் தலைமையகம் டாக்காவில் 2014 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. இந்த அமைப்பின் செலவினத்திற்கு இந்தியா 33 சதவிகிதம் அளிக்கிறது (பிராந்திய மக்கள் தொகையில் 65 சதவிகிதம்).
  • இது5 மில்லியன் மக்களைக் கொண்டுள்ளது. இது உலக மக்கள் தொகையில் 21 சதவிகித மக்களைக் கொண்டுள்ளது. மேலும் இது கூட்டாக மொத்த உள்நாட்டு உற்பத்தியில் US$2.7 டிரில்லியனைக் கொண்டுள்ளது.
  • இந்த துணைப் பிராந்திய அமைப்பானது பேங்காக் பிரகடனத்தின் மூலம் 1997 ஆம் ஆண்டு ஜுன் மாதம் 6-ம் தேதி அன்று தொடங்கப்பட்டது.
  • முதன்முதலில் இந்த பொருளாதார அமைப்பானது ‘BIST-EC’ என்ற பெயருடன் நான்கு உறுப்பு நாடுகளால் (Bangladesh, India, Sri lanka and Thailand Economic Cooperation) ஆரம்பிக்கப்பட்டது.
  • 1997 ஆம் ஆண்டு டிசம்பர் 22 ஆம் தேதி மியான்மர் இந்த அமைப்பில் இணைக்கப்பட்ட பின்பு இது ‘BIMST-EC’ (Bangladesh, India, Myanmar, Sri lanka and Thailand Economic Cooperation) என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது.
  • முதன்முதலில் நேபாளம் 1998-ல் பார்வையாளராக இந்த அமைப்பில் இணைந்தது.
  • 2004 ஆம் ஆண்டு பிப்ரவரியில் 6-வது அமைச்சரவை கூட்டத்தொடரின் போது நேபாளம் மற்றும் பூடான் முழு நேர உறுப்பினர்களாயின. இதன் பிறகு இந்த அமைப்பிற்கு ‘BIMSTEC’ என்று பெயர் மாற்றப்பட்டது.
  • BIMSTEC அமைப்பு தலைமைப் பொறுப்பிற்கு அகரவரிசை முறையை பயன்படுத்துகிறது. BIMSTEC அமைப்பிற்கு தலைமையாக வங்க தேசத்தில் தொடங்கி சுழற்சி முறையில் தலைமை முறை நடைமுறைபடுத்தப்பட்டுள்ளது.
  • 2004 ஆம் ஆண்டு ஜூலை 31 ஆம் தேதி நடைபெற்ற பீம்ஸ்டெக்கின் முதல் கூட்டத் தொடரின் போது ‘BIMSTEC’ எனப் பெயர் மாற்றப்பட்டது.

பீம்ஸ்டெக்கின் நோக்கங்கள்

  • வர்த்தகம், முதலீடு, தொழிற்துறை, தொழில்நுட்பம், மனிதவள மேம்பாடு, சுற்றுலா, விவசாயம், ஆற்றல், கட்டமைப்பு மற்றும் போக்குவரத்து வசதி ஆகியவற்றின் துறைகளில் குறிப்பிட்ட ஒத்துழைப்புத் திட்டங்களை அடையாளம் காணுதல் மற்றும் செயல்படுத்துதல் மூலமாக வேகமான பொருளாதார வளர்ச்சி மற்றும் சமூக செயல்பாடுகளை ஊக்கப்படுத்துவது.
  • சம பங்கீடு மற்றும் ஒத்துழைப்பு ஆகியவற்றின் மூலம் துணைப் பிராந்தியத்தில் பொருளாதார வளர்ச்சி மற்றும் சமூக செயல்பாடுகளை ஊக்கப்படுத்துவது.
  • பொருளாதார, சமூக, தொழில்நுட்ப மற்றும் அறிவியல் சார்ந்த துறைகளின் பொது நலனை கருத்தில் கொண்டு உயிர்ப்புள்ள கூட்டுச்செயல்பாடு மற்றும் பரஸ்பர உதவிகள் அளிப்பதை ஊக்குவிப்பது.
  • கல்வி, தொழில்சார் மற்றும் தொழில்நுட்ப பிரிவுகளில் ஒருவருக்கொருவர் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி வசதிகளுக்கு உதவுவது.
  • இதே நோக்கங்கள் மற்றும் பயன்பாடுகள் கொண்ட சர்வதேச மற்றும் பிராந்திய அமைப்புகளுடன் நெருக்கமான ஒத்துழைப்பு அளிப்பது.

பீம்ஸ்டெக்கின் கொள்கைகள்

  • பீம்ஸ்டெக் அமைப்பிற்குள் ஒத்துழைப்பு என்பது சமத்துவ இறையாண்மை, பிராந்திய ஒருமைப்பாடு, அரசியல் சுதந்திரம், உள் விவகாரங்களில் தலையிடாத் தன்மை, அமைதி மற்றும் இருசாரருக்குமான பயன்பாடு ஆகியவற்றின் அடிப்படையிலானது.
  • பீம்ஸ்டெக் அமைப்பிற்குள் ஒத்துழைப்பு என்பது உறுப்பு நாடுகள் பங்கு கொள்ளும் இருநாடுகளுக்கிடையேயான உறவுகள், பிராந்திய அல்லது சர்வதேச ஒத்துழைப்பிற்கான கூடுதல் வசதியே தவிர அதற்கு மாற்று அல்ல.

முக்கியப் பணிகள்

  • பீம்ஸ்டெக் என்பது துறை ரீதியான கூட்டுறவு அமைப்பாகும். இது வர்த்தகம், தொழில்நுட்பம், ஆற்றல், போக்குவரத்து, சுற்றுலா மற்றும் மீன்துறை ஆகிய துறைகளில் ஒத்துழைப்பை நல்குவது ஆகும்.
  • மேலும் 2008-ம் ஆண்டில் விவசாயம், பொது சுகாதாரம், வறுமை ஒழிப்பு, தீவிரவாத எதிர்ப்பு, சுற்றுச்சூழல், கலாச்சாரம், மக்கள் - மக்கள் தொடர்பு மற்றும் பருவநிலை மாற்றம் ஆகிய துறைகளுக்கு தனது ஒத்துழைப்பை விரிவுபடுத்தியது.

             பீம்ஸ்டெக் மாநாடுகள்

No. Date Host country Host city
1st 31 July 2004 Thailand Bangkok
2nd 13 November 2008 India New Delhi
3rd 4 March 2014 Myanmar Nay PyiDaw
4th 30, 31 Aug 2018 Nepal Kathmandu
5th TBD Sri Lanka Colombo
  • பீம்ஸ்டெக் போக்குவரத்து கட்டமைப்பு மற்றும் தளவாட வசதி ஆய்வு ஆகிய பணிகளை மேற்கொள்ள 2005 ஆம் ஆண்டில் பீம்ஸ்டெக் அமைப்பானது ஆசிய வளர்ச்சி வங்கியுடன் இணைந்து பணியாற்ற முடிவு செய்தது. இப்பணிகள் 2014 ஆம் ஆண்டு முடிவுற்றது.

துவக்க முயற்சிகள் மற்றும் ஒப்பந்தங்கள்

  • 2017 ஆம் ஆண்டு அக்டோபர் 10 முதல் 13 வரை தேசிய பேரிடர் எதிர்ப்புப் படையால் (NDRF- National Disaster Response Force) பேரிடர் மேலாண்மை பயிற்சி நடத்தப்பட்டது.
  • உறுப்பு நாடுகளுக்கிடையே வர்த்தகம் மற்றும் முதலீட்டை ஊக்குவிப்பதற்காகவும் மற்ற நாடுகள் பீம்ஸ்டெக் நாடுகளுடன் வர்த்தகம் செய்வதற்காகவும் பீம்ஸ்டெக் உறுப்பு நாடுகளால் பீம்ஸ்டெக் தடையில்லா வர்த்தக பகுதி செயல்திட்ட ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது (BFTAFA – BIMSTEC Free Trade Area Framework Agreement).
  • தாய்லாந்தை நிரந்தரத் தலைமையாகக் கொண்டு வர்த்தகம் தொடர்பாக கலந்து பேசி முடிவு செய்யும் குழு அமைக்கப்பட்டது.
  • உறுப்பு நாடுகளுக்கிடையே வர்த்தகத்தை மேம்படுத்துவதற்காக 20 கடல்மைல் தொலைவிற்குள் கப்பல் போக்குவரத்தை மேம்படுத்த 2017 ஆம் ஆண்டு டிசம்பர் 1 அன்று BIMSTEC கடலோர கப்பல் போக்குவரத்து ஒப்பந்தத்தின் வரைவு விவாதிக்கப்பட்டது.

BIMSTEC-ன் முக்கியவத்துவம்

  • BIMSTEC ஆனது6 பில்லியன் மக்கள் தொகையுடன் உலக மக்கள் தொகையில் 5வது இடத்தில் உள்ளது. இது சிறந்த சந்தை முதலீட்டை வழங்குகிறது.
  • இந்தியாவின் பிராந்திய யுக்தி சார்ந்த மற்றும் பொருளாதார நலன்களை எடுத்து செல்ல BIMSTEC அமைப்பு ஒரு உந்து சக்தியாக இருக்கிறது.
  • இந்தியா-பாகிஸ்தான் பிரச்சனை சார்க் அமைப்பில் எதிரொலிப்பதைப் போல் பீம்ஸ்டெக்கில் இப்பிரச்சனை எதிதொலிப்பதில்லை.

சவால்கள்

  • அடிப்படை கட்டமைப்பு வசதி குறைவு
  • பிராந்தியத்திற்குள்ளான முதலீடு மிகக் குறைவு
  • புவியியல் ரீதியான இணைப்பு மிகவும் குறைவு

சமீபத்திய மாநாடு - 2018

  • ஏழு உறுப்பு நாடுகளும் கலந்து கொண்ட 4-வது பீம்ஸ்டெக் மாநாடானது காத்மாண்டுவில் ஆகஸ்ட் 31 ஆம் தேதி காத்மாண்டு பிரகடனத்துடன் நிறைவடைந்தது. இம்மாநாடு ஆகஸ்ட் 3-ம் தேதி நேபாளத்தின் காத்மாண்டுவில் தொடங்கியது.
  • இம்மாநாட்டின் கருத்துருவானது “அமைதியை நோக்கிய, செழிப்பான மற்றும் நீடித்த வங்காள விரிகுடா பகுதியாகும்.”

  • இம்மாநாட்டின் போது பீம்ஸ்டெக் விநியோக அமைப்பு மூலம் இணைப்பை உருவாக்குவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தை பீம்ஸ்டெக் நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் கையெழுத்திட்டனர்.
  • பீம்ஸ்டெக்கில் தற்பொழுது தலைமை பதவி வகிக்கும் நேபாளம் அதன் பதவிக்காலம் நிறைவடைந்ததையடுத்து இலங்கையின் அதிபர் மைத்திரிபாலா சிரிசேனாவிடம் தலைமைப் பதவியை அளித்தது. நேபாளப் பிரதமர் P சர்மா ஒலி நிறைவு உரையாற்றினார். பீம்ஸ்டெக்கின் அடுத்த மாநாடன 5-வது மாநாட்டை இலங்கை நடத்துகிறது.

எடுக்கப்பட வேண்டிய முயற்சிகள்

  • பீம்ஸ்டெக் தலைமையிலான வளர்ச்சியானது ஊக்கப்படுத்துவதாக இருக்கிறது. அதை தக்க வைத்துக் கொள்ளவும் பிராந்திய ஒத்துழைப்பிற்காக நீடித்த தளமாக பீம்ஸ்டெக்கை வலுப்படுத்தவும் பின்வரும் முயற்சிகளை எடுக்க வேண்டும்.
  • முடிவு எடுத்தலில் ஒழுங்கு முறையை உறுதிபடுத்துவதற்காக தொடர்ச்சியாக மாநாடுகளை நடத்த வேண்டும்.
  • செயலகத்தின் செயல்திறனை மனித வளம் மற்றும் நிதி மூலம் மேம்படுத்துதல்.
  • முடிவுகள் மற்றும் பயன்களை சரியாக வெளிப்படுத்துவதன் மூலம் மற்ற நாடுகள் பீம்ஸ்டெக்கின் மீது கவனத்தை செலுத்த ஊக்கப்படுத்தும். (சுற்றுலாத் துறையில் உள்ள திட்டங்கள், டிஜிட்டல் இணைப்பு, ஆற்றல் இணைப்பு மற்றும் பேரிடரின் போது மனிதாபிமான உதவி)
  • உறுப்பு நாடுகளுக்கிடையே ஏற்படும் பிரச்சனைகளை தீர்த்து வைப்பதற்கான தளமாக BIMSTEC அமைப்பை மேம்படுத்துதல். ஒருமித்த கருத்துகள் ஏற்படுவதற்காக BIMSTEC நாடுகளுக்கிடையே விவாதங்களை ஏற்படுத்துதல்.
  • BIMSTEC தனது உறுப்பு நாடுகளுக்கு பல்வேறு வாய்ப்புகளை வழங்குகிறது. BIMSTEC ஆனது இந்தியாவிற்கு அதன் கிழக்கு நோக்கிய கொள்கை மற்றும் தெற்கு ஒத்துழைப்பிற்கு உதவுகிறது. வங்க தேசம் மற்றும் மியான்மர் ஆகிய நாடுகளுடன் இந்தியப் பகுதிகளை இணைப்பதன் மூலம் வடகிழக்கு பகுதிகளை வளர்ச்சியடையச் செய்வது என்பது இந்தியாவின் புது முயற்சியாகும். பீம்ஸ்டெக்கானது தாய்லாந்தின் மேற்கு நோக்கிய கொள்கைக்கு உதவுகிறது. பீம்ஸ்டெக் செயல்திட்டத்தின்படி, இந்தியா மற்றும் தாய்லாந்து நாடுகளின் சந்தைகள் மூலம் சிறிய நாடுகள் பயனடைய முடியும்.
  • அமைதி மற்றும் வளர்ச்சியை ஏற்படுத்துவதற்கு ஒன்றிணைந்து பணியாற்றுவதற்காக பீம்ஸ்டெக் ஒரு வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்கிறது.
  • சார்க் மற்றும் பீம்ஸ்டெக் ஆகிய இரண்டு அமைப்புகள் புவியியல் ரீதியாக இணைந்த பிராந்தியங்களில் கவனத்தை செலுத்துகிறது. ஆனால் சார்க் மற்றும் பீம்ஸ்டெக் ஆகிய இரண்டு அமைப்புகள் ஒன்றுக்கொன்று இணையானதல்ல. சார்க் என்பது முற்றிலும் பிராந்திய அமைப்பாகும். ஆனால் பீம்ஸ்டெக்கானது தெற்கு ஆசியா மற்றும் ஆசியான் நாடுகள் ஆகிய பிராந்தியங்களை இணைக்கும் அமைப்பாகும். பீம்ஸ்டெக்கானது சார்க் நாடுகளை ஆசியானுடன் இணைப்பதற்கு தனித்துவ வாய்ப்பை வழங்குகிறது.

சார்க் - பீம்ஸ்டெக்

  சார்க் பீம்ஸ்டெக்
1. தெற்காசியாவில் கவனத்தை செலுத்தும் பிராந்திய அமைப்பாகும். தெற்கு ஆசியா மற்றும் தென்கிழக்கு ஆசிய நாடுகளை இணைக்கும் பிராந்தியங்களுக்கிடையிலான அமைப்பாகும்.
2. இது பனிப்போர் நடைபெற்ற காலகட்டத்தில் 1985 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது. பனிப்போர் முடிவுற்ற காலக்கட்டத்தில் 1997-ல் ஏற்படுத்தப்பட்டது.
3. பிராந்திய அரசியலில் பாதிப்புகளை சந்திக்கிறது. இதன் நோக்கம் நாடுகளுக்கிடையே பொருளாதார ஒத்துழைப்பை மேம்படுத்துவதாகும்.
4. சமச்சீரற்ற அதிகாரப் பகிர்வு இந்தியா மற்றும் தாய்லாந்து ஆகிய நாடுகள் அதிகாரப் பகிர்வை ஏற்படுத்துகிறது.
5. பிராந்தியங்களுக்கிடையிலான வர்த்தகம் 5 சதவீதம் மட்டுமே பிராந்தியங்களுக்கிடையிலான வர்த்தகம் பத்து ஆண்டுகளில் 6 சதவீதமாக அதிகரித்துள்ளது.

 

- - - - - - - - - - - - - -

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்