TNPSC Thervupettagam

பெண்கள் இட ஒதுக்கீடு மசோதா 2023 - பகுதி 1

October 7 , 2023 286 days 2577 0

(For English version to this please click here)

பெண்கள் இட ஒதுக்கீடு மசோதா

  • சுதந்திரமடைந்து 75 ஆண்டுகள் ஆன பின்னரும் கூட, மக்கள்தொகையில் பாதியளவு கூட கணிசமாக பாராளுமன்றத்தில் பெண்களின் பிரதிநிதித்துவம் இல்லை.
  • இதில் பெண்களின் இடங்கள் வெறும் 14% மட்டுமேயாகும்.
  • கடந்த பொதுத்தேர்தல்களில் நாடாளுமன்ற பெண் உறுப்பினர்களின் எண்ணிக்கை 15%க்கு மேல் இருந்ததில்லை.
  • இது தேசத்தைக் கட்டியெழுப்புவதில் பெண்களின் முக்கிய பங்கினைப் பயன்படுத்த பெண்கள் இடஒதுக்கீடு மசோதாநிறைவேற்றப்படுவதன் முக்கியத்துவத்தை எடுத்துக் காட்டுகிறது.
  • சமீபத்தில், மக்களவை (LS) மற்றும் மாநிலங்களவை (RS), இரண்டும் பெண்கள் இடஒதுக்கீடு மசோதா 2023 (128வது அரசியலமைப்பு திருத்த மசோதா) அல்லது நாரி சக்தி வந்தன் ஆதினியத்தை நிறைவேற்றியது.
  • இதன்மூலம், புதிய பாராளுமன்றக் கட்டடத்தில் நிறைவேற்றப்படும் முதல் மசோதாவாக இது திகழ்கிறது.

  • அரசாங்க ஆதாரத்தின் படி, இந்த மசோதாவுக்கு மாநிலங்களின் ஒப்புதல் தேவை இல்லை.
  • ஏனெனில் இது நாடாளுமன்றத்தில் மாநிலங்களின் பிரதிநிதித்துவ  இடங்களின் எண்ணிக்கையை மாற்றாது.
  • அதனால், நாடாளுமன்றத்தில் மாநிலங்களின் பிரதிநிதித்துவம் பாதிக்கப்படாமல் இருக்கும்.
  • இது 2023 ஆம் ஆண்டு செப்டம்பர் 19 அன்று நாடாளுமன்றத்தின் சிறப்புக் கூட்டத்தின் போது மக்களவையில் அறிமுகப்படுத்தப்பட்டது.
  • இந்த மசோதாவை மத்திய சட்டத்துறை அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் மக்களவையில் தாக்கல் செய்தார்.
  • 2023 ஆம் ஆண்டு செப்டம்பர் 20 அன்று மக்களவையில் இம்மசோதாவானது 454 வாக்குகள் ஆதரவாகவும், இரண்டு வாக்குகள் எதிராகவும் கொண்டு நிறைவேற்றப் பட்டது.
  • 2023 ஆம் ஆண்டு செப்டம்பர் 21 அன்று மாநிலங்களவையானது 214 வாக்குகளை ஆதரவாகக் கொண்டு ஒருமனதாக இம்மசோதாவை நிறைவேற்றியது.

  • துணைக் குடியரசுத் தலைவர் ஜெகதீப் தன்கர் நடத்திய வாக்கெடுப்பின் போது எந்த நாடாளுமன்ற உறுப்பினரும் எதிராக வாக்களிக்காமல் மாநிலங்களவையானது இதற்கு 100% ஆதரவாக வாக்களித்ததைக் கண்டது.
  • 2023 ஆம் ஆண்டு செப்டம்பர் 29 அன்று குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு அவர்கள் மசோதாவில் கையெழுத்திட்டார், மேலும் அரசிதழில் அறிவிப்பும் அதே நாளில் வெளியிடப்பட்டது.
  • இப்போது அது 2023 ஆம் ஆண்டு அரசியலமைப்பு (106வது திருத்தம்) சட்டம் என அறியப் படும்.
  • 2026 ஆம் ஆண்டிற்குப் பிறகான முதல் எல்லை நிர்ணயத்திற்குப் பிறகு (2026 வரை முடக்கம்) மட்டுமே இந்த இடஒதுக்கீடு விரைவில் அமலுக்கு வரும் என்று இது தெளிவுபடுத்துகிறது.
  • இந்த மசோதாவானது மக்களவை, மாநில சட்டப் பேரவைகள் மற்றும் டெல்லி சட்டசபையில் மூன்றில் ஒரு பங்கு இடங்களைப் பெண்களுக்கு ஒதுக்குகிறது.

  • மக்களவை மற்றும் மாநிலச் சட்டப் பேரவைகளில் SC (பட்டியலிடப்பட்ட சாதிகள்) மற்றும் ST (பட்டியலிடப்பட்ட பழங்குடியினர்) ஆகியோருக்கு ஒதுக்கப்பட்ட இடங்களுக்கும் இது பொருந்தும்.
  • இது புதிதாகத் திறக்கப்பட்ட நாடாளுமன்றக் கட்டிடத்தில் பரிசீலிக்கப்பட்ட வரலாற்றுச் சிறப்புமிக்க முதல் மசோதாவாகும்.
  • தற்போது 2026 ஆம் ஆண்டு வரை நிறுத்தி வைக்கப்பட்டுள்ள முதல் எல்லை நிர்ணயத்தைத் தொடர்ந்து இம்மகளிர் இட ஒதுக்கீடு அமல்படுத்தப்படும்.
  • எல்லை நிர்ணயம் என்பது மக்களவை மற்றும் சட்டமன்றத் தொகுதிகளின் பிராந்திய வரம்புகளையும், ஒவ்வொரு மாநிலத்திலும் உள்ள சட்டமன்ற மற்றும் மக்களவைத் தொகுதிகளின் எண்ணிக்கையையும் மறுசீரமைப்பதாகும்.
  • இது சமீபத்திய மக்கள்தொகை கணக்கெடுப்பில் உள்ள புள்ளிவிவரங்களின் அடிப்படையில் செய்யப் படும் ஒரு குறிப்பிட்ட கால நடைமுறையாகும்.
  • 2008 ஆம் ஆண்டு அனைத்துத் தொகுதிகளுக்கும் எல்லை நிர்ணயம் செய்யப்பட்டு, எல்லை நிர்ணய ஆணையத்தின் இறுதி ஆணை வெளியிடப்பட்டது.

  • இருப்பினும், மாநிலங்களவை மற்றும் மக்களவையில் இடங்களை மறுசீரமைப்பதில் தற்போது முடக்கம் ஏற்பட்டுள்ளது.
  • 2002 ஆம் ஆண்டில், 84வது திருத்தச் சட்டத்தின் மூலம் 82வது பிரிவு திருத்தப் பட்டது.
  • 2026 ஆம் ஆண்டிற்குப் பிறகு நடத்தப்பட உள்ள முதல் மக்கள்தொகைக் கணக்கெடுப்பின் புள்ளிவிவரங்கள் கிடைக்கும் வரையில் மாநில வாரியாக மக்களவைத் தொகுதிகளின் ஒதுக்கீடு மற்றும் ஒவ்வொரு மாநிலத்தையும் தொகுதிகளாகப் பிரிப்பதை மறுசீரமைக்க வேண்டிய அவசியமில்லை.

இந்திய அரசியலமைப்பிலுள்ள பெண்களுக்கு அரசியல் அதிகாரம் வழங்குவதற்கான ஏற்பாடுகள்

  • உறுப்புரை 15(3): பெண்களின் சமூக-அரசியல் முன்னேற்றத்தைப் பாதுகாப்பதற்காக, சட்டமியற்ற அல்லது வேறுவிதமாக "சிறப்பு ஏற்பாடுகளை" செய்ய அரசிற்கு அதிகாரம் உள்ளது.
  • பிரிவு 325: இரு பாலினத்தவருக்கும் சம உரிமைகளை உத்தரவாதப்படுத்துவதோடு, மேலும் ஆண்களுக்குச் சமமான நிலையில் பெண்கள் பொருளாதார, சமூக, கலாச்சார மற்றும் அரசியல் உரிமைகளை அனுபவிக்கும் உரிமையை வழங்குகிறது.

மசோதாவின் நோக்கங்கள்

  • முன்மொழியப்பட்ட மசோதாவானது, மக்களவை மற்றும் மாநில சட்டப் பேரவைகளில் பெண்களுக்கு மூன்றில் ஒரு பங்கு (33.33%) இட ஒதுக்கீட்டைக் கோருகிறது.
  • மக்களவை, மாநிலச் சட்டப் பேரவைகள் மற்றும் டெல்லி சட்டசபையில் பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு வழங்க வேண்டும்.
  • இது தற்போதுள்ள SC மற்றும் ST இடஒதுக்கீடுகளில் மூன்றில் ஒரு பங்கு இடங்களை பெண்களுக்கு ஒதுக்குகிறது.
  • இதில் சுழற்சி அடிப்படையில் இடங்கள் ஒதுக்கப்படும் என்பதோடு, மேலும் 15 ஆண்டுகளுக்குப் பிறகு முன்பதிவு நிறுத்தப்படும் (காலாவதி விதி).

பின்னணி

  • 1996 ஆம் ஆண்டு முன்னாள் பிரதமர் திரு அடல் பிஹாரி வாஜ்பாய் பதவி வகித்த காலத்திலிருந்தே பெண்களுக்கான இடஒதுக்கீடு மசோதா மீதான விவாதம் நிலவி வருகிறது.
  • அப்போதைய அரசுக்குப் பெரும்பான்மை இல்லாததால், இந்த மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்க முடியாமல் போனது.

பெண்களுக்கான இடங்களை முன்பதிவு செய்வதற்கான முன்முயற்சிகள்

  • அரசியலில் பெண்களுக்கான இடஒதுக்கீட்டுப் பிரச்சினையை இந்திய தேசிய இயக்கத்திலிருந்து அறியலாம்.
  • 1931 ஆம் ஆண்டில், மூன்று பெண்கள் அமைப்புகளின் தலைவர்களான பேகம் ஷா நவாஸ் மற்றும் சரோஜினி நாயுடு ஆகியோர் இணைந்து புதிய அரசியலமைப்பில் பெண்களின் நிலை குறித்த அதிகாரப்பூர்வக் குறிப்பினைப் பிரிட்டிஷ் பிரதமருக்கு வெளியிட்டனர்.
  • 1988 ஆம் ஆண்டு பெண்களுக்கான தேசிய முன்னோக்கு திட்டமானது பெண்களுக்குப் பஞ்சாயத்து மட்டத்திலிருந்து பாராளுமன்றம் வரை இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று பரிந்துரைத்தது.
  • இந்தப் பரிந்துரைகளானது, அரசியலமைப்பின் வரலாற்றுச் சிறப்புமிக்க 73வது மற்றும் 74வது திருத்தங்களைச்  சட்டமாக்க வழி வகுத்தது.
  • இது பஞ்சாயத்து ராஜ் நிறுவனங்களில் பெண்களுக்கான மூன்றில் ஒரு பங்கு இடங்களையும், பஞ்சாயத்து ராஜ் நிறுவனங்களின் அனைத்து மட்டங்களிலும், நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளிலுள்ள தலைவர் அலுவலகங்களில் மூன்றில் ஒரு பங்கு இடங்களை முறையே அனைத்து மாநில அரசுகளும் பெண்களுக்கு ஒதுக்க வேண்டும் என்று ஆணையிடுகிறது.

  • இந்த இடங்களுக்குள், மூன்றில் ஒரு பங்கு பட்டியல் சாதிப் பெண்கள் / பழங்குடியினப் பெண்களுக்கும் ஒதுக்கப்பட்டுள்ளது.
  • 1996 ஆம் ஆண்டு கீதா முகர்ஜி குழுவின் சில பரிந்துரைகள் இந்த மசோதாவின் பதிப்பில் சேர்க்கப்பட்டுள்ளன.
  • OBCகளுக்கான இடஒதுக்கீட்டை அனுமதிக்கும் வகையில் அரசியலமைப்பு திருத்தம் செய்யப்பட்டவுடன் அதில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு (OBCs) இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று அக்குழு பரிந்துரைத்தது.
  • மேலும், மாநிலங்களவை மற்றும் சட்டப் பேரவைகளுக்கும் இடஒதுக்கீட்டை நீட்டிக்க அக்குழு பரிந்துரைத்தது.
  • எனினும் இந்தப் பரிந்துரைகள் எதுவும் மசோதாவில் இணைக்கப்படவில்லை.
  • 1996 - பெண்களுக்கான இட ஒதுக்கீடு மசோதா 1996 ஆம் ஆண்டு அறிமுகப் படுத்தப் பட்டதோடு, அது கூட்டு நாடாளுமன்றக் குழுவிற்குப் பரிந்துரைக்கப் பட்டது.
  • இருப்பினும்மக்களவை கலைக்கப்பட்டதால் இந்த மசோதா காலாவதியானது மற்றும் மீண்டும் அறிமுகப்படுத்தப் பட வேண்டி இருந்தது.
  • 1998 – இந்த மசோதா மீண்டும் அறிமுகப்படுத்தப்பட்டது, எனினும் மீண்டும் அது போதுமான ஆதரவைப் பெறத் தவறியதால் அது காலாவதியானது.
  • 1999 - 13வது மக்களவையில் NDA அரசாங்கத்தால் மசோதா மீண்டும் அறிமுகப் படுத்தப் பட்டது.
  • பெண்களுக்கான அதிகாரமளித்தலுக்கான தேசியக் கொள்கையானது (2001) உயர் சட்ட மன்றங்களில் இட ஒதுக்கீடு பரிசீலிக்கப்படும் என்று கூறியிருந்தது.
  • மேலும் இது 2003 ஆம் ஆண்டில் இரண்டு முறை அறிமுகப்படுத்தப் பட்டது.

  • 2004 - UPA அரசாங்கமானது, அதன் குறைந்தபட்சப் பொது செயல் திட்டத்தில் சேர்த்து இறுதியாக 2008 ஆம் ஆண்டு அதனைத் தாக்கல் செய்தது.
  • மக்களவையில் இது காலாவதியாகாமல் தடுக்கப் பட வேண்டி இந்த முறை 2008 ஆம் ஆண்டு மாநிலங்களவையில் இம்மசோதா 108வது அரசியலமைப்பு சட்டத் திருத்த மசோதாவாக அறிமுகம் செய்யப் பட்டது.

  • 2010 ஆம் ஆண்டு மார்ச் 9, அன்று மாநிலங்களவையில் இம்மசோதா நிறைவேற்றப் பட்டது, ஆனால் மக்களவையில் இது அறிமுகப்படுத்தப்படவில்லை.
  • காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணியால், மக்களவையில் ஒருமித்த கருத்து இல்லாத காரணத்தாலும், அதை நிறைவேற்ற போதுமான எண்ணிக்கையில் இல்லாததாலும் இம்மசோதாவைக் கொண்டு வர இயலவில்லை.
  • அப்போதைய நாட்களிலிருந்து, சட்டமன்ற அமைப்புகளில் பெண்களுக்கு இட ஒதுக்கீடு வேண்டும் என்ற கோரிக்கை புதிதல்ல.
  • 2013 ஆம் ஆண்டு மே மாதத்தில், பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம் பெண்களின் நிலை குறித்து ஆராய ஒரு குழுவை அமைத்தது.
  • உள்ளாட்சி அமைப்புகள், மாநிலச் சட்டப் பேரவைகள், நாடாளுமன்றம், அமைச்சர்கள் நிலைகள் மற்றும் அரசாங்கத்தின் அனைத்து முடிவெடுக்கும் அமைப்புகளிலும் பெண்களுக்கு குறைந்தபட்சம் 50% இடஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும் என்று அக்குழு பரிந்துரைத்தது.
  • 2015 ஆம் ஆண்டில், இந்தியாவில் பெண்களின் நிலை குறித்த அறிக்கையானது, மாநிலச் சட்டசபைகளிலும், நாடாளுமன்றத்திலும் பெண்களின் பிரதிநிதித்துவம் தொடர்ந்து மோசமாக உள்ளது என்று குறிப்பிட்டது.

  • இக்குழுவானது உள்ளாட்சி அமைப்புகள், மாநில சட்டப் பேரவைகள், நாடாளுமன்றம், அமைச்சர்கள் நிலைகள் மற்றும் அரசாங்கத்தின் அனைத்து முடிவெடுக்கும் அமைப்புகளிலும் பெண்களுக்கு குறைந்தபட்சம் 50% இடஒதுக்கீடு வழங்கவும் பரிந்துரைத்தது.

தேவை

  • 2023 ஆம் ஆண்டு நிலவரப்படி, மக்களவையில் 82 பெண் நாடாளுமன்ற உறுப்பினர்களும் (15.2%) மாநிலங்களவையில் 31 பெண்களும் (13%) உள்ளனர்.
  • முதலாவது மக்களவையிலிருந்து (5%) எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ள நிலையில், பல நாடுகளை விட இது இன்னும் குறைவாகவே உள்ளது.
  • தற்போது, ​​நாட்டில் உள்ள ஒவ்வொரு மாநிலத்திலும் பெண் சட்டமன்ற உறுப்பினர்களின் விகிதம் 16 சதவீதத்திற்கும் குறைவாகவே உள்ளது.
  • பெரிய மாநிலங்களில், மேற்கு வங்கம் அதன் மக்கள் தொகையில் 14 சதவீதம் பெண் சட்டமன்ற உறுப்பினர்களை கொண்டு மற்ற மாநிலங்களை விட சிறப்பாக உள்ளது.
  • கர்நாடகா, தெலுங்கானா மற்றும் தமிழ்நாடு உட்பட 17 மாநிலங்களில் இந்த விகிதம் 10 சதவீதத்திற்கும் குறைவாக உள்ளது.
  • 2023 ஆம் ஆண்டு தேர்தலில், நாகாலாந்து முதன் முதலில் இரண்டு பெண் MLA களைப் பெற்றது.
  • மிசோரமில் பெண் MLAகள் தற்போது யாரும் இல்லை.
  • மேலும் மிசோரம் கடந்த ஏழு சட்டமன்றங்களிலும் ஒரு பெண் MLAவினைக் கூட கொண்டு இருக்கவில்லை.
  • வாக்காளர் பட்டியலில் ஆண்களை விட பெண்கள் அதிகம் உள்ள மாநிலம் மிசோரம் என்பது குறிப்பிடத் தக்கது.

  • சமீபத்திய ஐ.நாவின் பெண் அமைப்பின் தரவுகளின்படி, பெண்கள் பிரதிநிதித்துவத்தில் ருவாண்டா (61%), கியூபா (53%), நிகரகுவா (52%) ஆகியவை முதல் மூன்று நிலையிலுள்ள நாடுகள் ஆகும்.
  • பெண்கள் பிரதிநிதித்துவத்தில் வங்காளதேசம் (21%) மற்றும் பாகிஸ்தான் (20%) ஆகியவை கூட இந்தியாவை விட முன்னணியில் உள்ளன.
  • பாராளுமன்றங்களுக்கிடையேயான சங்கம் என்ற அமைப்பு வழங்கிய தரவுகளின் அடிப்படையில், பெண்கள் பிரதிநிதித்துவத்தில் இந்தியாவின் தரவரிசை மொத்தம் 193 நாடுகளில் 148வது இடத்தில் உள்ளது.
  • உலக சராசரியான 26.5 சதவீதத்துடன் ஒப்பிடுகையில் இந்த தரவரிசையின் நிலை இவ்வாறு உள்ளது.
  • BRICS நாடுகளுடன் ஒப்பிடும் போது, ​​புதிய உறுப்பினர்கள் உட்பட, ஈரானுக்கு (6%) மேல்நிலையில், இந்தியா இரண்டாவது மிகக் குறைந்த பங்கைக் கொண்டுள்ளது (15%).
  • காலப்போக்கில், தென்னாப்பிரிக்காவும் எத்தியோப்பியாவும் தங்கள் தேசிய சட்டமன்றங்களில் பெண்கள் பிரதிநிதித்துவத்தில் மாபெரும் முன்னேற்றத்தைக் கண்டுள்ளன.

முக்கிய அம்சங்கள்

கீழவையில் பெண்களுக்கான இட ஒதுக்கீடு

  • சட்டப்பிரிவு 330 என்பதின் விதிகளிலிருந்துப் பெறப்பட்டு, அரசியல் சாசனத்தில் 330A என்ற சட்டப்பிரிவைச் சேர்க்க இந்த மசோதா வழிவகை செய்கிறது.
  • இது மக்களவையில் SC/ST பிரிவினருக்கு இடஒதுக்கீடு வழங்குகிறது.
  • மாநிலங்கள் அல்லது ஒன்றியப் பிரதேசங்களில் உள்ள பல்வேறு தொகுதிகளுக்கு சுழற்சி முறையில் பெண்களுக்கு ஒதுக்கப்பட்ட இடங்களை வழங்கலாம் என்று இம்மசோதா குறிப்பிடுகிறது.
  • SC/ST பிரிவினருக்கு ஒதுக்கப்பட்ட இடங்களில், சுழற்சி அடிப்படையில் மூன்றில் ஒரு பங்கை பெண்களுக்கு வழங்க வேண்டுமென இம்மசோதா கோருகிறது.

https://d1covn42hdyucn.cloudfront.net/a4d11a5b-2d41-4b43-a6dd-d63a417ed7da.png

மாநிலச் சட்டப் பேரவைகளில் பெண்களுக்கான இட ஒதுக்கீடு

  • இந்த மசோதா சட்டப்பிரிவு 332A ஐ அறிமுகப்படுத்துகிறது.
  • ஒவ்வொரு மாநிலச் சட்டப் பேரவையிலும் பெண்களுக்கான இட ஒதுக்கீட்டை அது கட்டாயமாக்குகிறது.
  • கூடுதலாக, SC மற்றும் ST பிரிவினருக்கு அங்கு ஒதுக்கப்பட்ட இடங்களில் மூன்றில் ஒரு பங்கு பெண்களுக்கு ஒதுக்கப்பட வேண்டும்.
  • மேலும், சட்டப் பேரவைகளுக்கு நேரடித் தேர்தல் மூலம் நிரப்பப்படும் மொத்த இடங்களில் மூன்றில் ஒரு பங்கும் பெண்களுக்கு ஒதுக்கப்படும்.

டெல்லி தேசிய தலைநகரப் பகுதியில் பெண்களுக்கான இடஒதுக்கீடு (புதிய பிரிவு 239AA)

  • அரசியலமைப்பின் பிரிவு 239AA டெல்லி ஒன்றியப் பிரதேசத்திற்கு அதன் நிர்வாக மற்றும் சட்டமன்றச் செயல்பாடுகள் தொடர்பாகத் தேசியத் தலைநகர் என்ற சிறப்பு அந்தஸ்தை வழங்குகிறது.
  • சட்டப்பிரிவு 239AA (2)(b) என்பது இம்மசோதாவால் திருத்தப்பட்டது.
  • பாராளுமன்றத்தால் உருவாக்கப்பட்ட சட்டங்கள் டெல்லியின் தேசியத் தலைநகரப் பிரதேசத்திற்கும் பொருந்தும் என்ற விதியினையும் அது சேர்த்தது.

இட ஒதுக்கீட்டின் ஆரம்பம் (புதிய விதி - 334A)

  • இந்த மசோதா அமல்படுத்தப்பட்டப் பின் நடத்தப்படும் முதல் மக்கள் தொகை கணக்கெடுப்பு வெளியிடப்பட்ட பிறகு இந்த இட ஒதுக்கீடு அமலுக்கு வரும்.
  • அந்த மக்கள் தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில், பெண்களுக்கு இடஒதுக்கீடு வழங்க எல்லை நிர்ணயம் செய்யப்படும்.
  • இந்த இட ஒதுக்கீடு 15 ஆண்டுகளுக்கு வழங்கப்படும்.
  • எவ்வாறாயினும், இது பாராளுமன்றத்தால் உருவாக்கப்பட்ட சட்டத்தால் தீர்மானிக்கப் படும் தேதி வரையில் தொடரும்.

-------------------------------------

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்