ஒரு வருடத்திற்கு மேலாக, ஒன்றன்பின் ஒன்றாக வெவ்வேறு நாடுகளில் காட்டுத்தீ பரவல் அதிகரித்து வருகிறது. அல்ஜீரியாவில் மட்டுமல்லாமல் மத்தியதரைக் கடல் நாடுகளான கிரீஸ், துருக்கி, சைப்ரஸ் ஆகிய நாடுகளில் கடந்த சில வாரங்களாகக் காணப்படும் காட்டுத்தீ ஒட்டுமொத்த உலகத்தையும் அச்சத்தில் ஆழ்த்தி இருக்கிறது.
அமெரிக்காவில் அமேசான் காடுகள் தொடர்ந்து பல வாரங்களாகப் பற்றி எரிந்ததும், ஆஸ்திரேலியாவில் காட்டுத்தீயை அணைக்க முடியாமல் தவித்ததும் சமீபத்திய நிகழ்வுகள்.
பூமி வெப்பமயமாதல்
‘இன்டர் கவர்மென்டல் பேனல் ஆன் கிளைமேட் சேஞ்ச்’ (ஐபிசிசி) அமைப்பின் ஆறாவது அறிக்கை வெளியாகி இருக்கிறது. 234 விஞ்ஞானிகள் கொண்ட குழு தயாரித்திருக்கும் அந்தப் புதிய அறிக்கை உலகம் ஆபத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருப்பதைச் சுட்டிக் காட்டியிருக்கிறது.
உலகின் பல பாகங்களிலும் எதிர்பாராமலும், அசாதாரணமாகவும் காட்டுத்தீயும், பிரளயமும் அதிகரிப்பதன் பின்னால் பூமி வெப்பம் அடைதலும், தட்பவெப்பநிலை மாற்றமும் இருப்பதை அந்த அறிக்கை சுட்டிக் காட்டுகிறது.
ஐக்கிய நாடுகள் சபையால் நியமிக்கப்பட்டிருக்கும் ஐபிசிசி ஏழு வருடங்களுக்கு ஒரு முறை இதுபோன்ற தட்பவெப்ப நிலை குறித்த அறிக்கையை ஆய்வு செய்து சமர்ப்பிக்கிறது.
மனிதர்களின் செயல்பாடுகளின் மூலம் உலகத்தின் வெப்ப நிலை அதிகரிக்கிறது என்பது மட்டுமல்ல, அதன் தொடர்ச்சியாக அதிகரித்த மழை, புயல் காற்று, வெள்ளம் என்று மிகப்பெரிய பேராபத்துகள் நம்மை எதிர்கொள்கின்றன என்பதை சமீபத்திய அறிக்கை சுட்டிக்காட்டி எச்சரிக்கிறது.
மத்தியதரைக் கடல் நாடுகளிலும், அமெரிக்காவிலும் எதிர்%