TNPSC Thervupettagam

பொருளாதார ஆய்வறிக்கை 2023-2024 பாகம் – 03

August 4 , 2024 161 days 670 0

(For English version to this please click here)

புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறை

  • பிரதம மந்திரி உழவர் எரிசக்தி பாதுகாப்பு மற்றும் மேம்பாட்டுப் பிரச்சாரம் (PM-KUSUM): 166 மெகாவாட் திறன் கொண்ட பரவலாக்கப்பட்ட சூரிய ஆற்றல் நிறுவப்பட்டுள்ளது மற்றும் 3.26 லட்சம் விவசாயப் பம்புகள் சூரிய ஒளி மூலம் இயங்குகின்றன.

  • அதிக திறன் கொண்ட சூரிய மின்னழுத்த (PV) தொகுதிகள், உற்பத்தியுடன் இணைக்கப் பட்ட ஊக்கத்தொகை (PLI) திட்டம்: நான்கு உற்பத்தியாளர்கள் ₹24,000 கோடி செலவில் இதன் உற்பத்தியைத் தொடங்கியுள்ளனர்.
  • சூரிய ஆற்றல் பூங்கா திட்டம்: 56 பூங்காக்களுக்கு 39.7 ஜிகாவாட் திறன் அனுமதிக்கப்பட்டு, 11.59 ஜிகாவாட் வரை இயக்கப்படுகிறது.
  • பிரதம மந்திரி சூரிய கர் திட்டம்: நிதியாண்டு 2027க்குள் ₹75,021 கோடி செலவில் 30 GW திறன் கொண்ட குடியிருப்புக் கூரைகளில் சூரிய ஆற்றல் நிறுவுவதை இலக்காகக் கொண்டுள்ளது.

  • காற்றாலை மின்சாரம்: காற்றாலை மின்சாரம் மூலம் 45.89 ஜிகாவாட் திறன் கொண்ட காற்றாலை நிறுவப்பட்டு, இந்தியாவை உலகளவில் நான்காவது கொண்டு சென்றுள்ளது.
  • குறிப்பிடப்பட்ட பாதிப்பிற்கு உள்ளான பழங்குடி குழுக்கள் (PVTG) குடியிருப்புகளுக்கான சூரிய சக்தி: 1 லட்சம் மின்சாரம் இல்லாத PVTG வீடுகளுக்குப் பகுதி கட்ட சூரிய ஆற்றல் மூலம் மின்சாரத்தினை வழங்குதல்.
  • பசுமை ஆற்றல் வழித்தடம்: பசுமை ஆற்றல் வழித்தடம்-I இல் 9,111 கிமீ பரிமாற்றத்திற்கான கம்பிகள் மற்றும் 21,303 MVA துணை மின்நிலையங்கள் முடிக்கப் பட்டன; பசுமை ஆற்றல் வழித் தடம்-II நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

  • உயிரி ஆற்றல் திட்டம்: 9.4 ஜிகாவாட் உயரினத் தொகுதி ஆற்றல், 249.74 மெகாவாட் கழிவு-ஆற்றல் மற்றும் 51.04 லட்சம் உயிரி ஆற்றல் வாயு ஆலைகள் நிறுவப் பட்டுள்ளன.
  • தேசியப் பசுமை ஹைட்ரஜன் திட்டம்: 5 MMT ஆண்டு உற்பத்தி, 125 GW புதுப்பிக்கத் தக்க ஆற்றல் திறன், 2030க்குள் ₹8 லட்சம் கோடி முதலீடு ஆகியவற்றை இலக்காகக் கொண்டுள்ளது.

விளையாட்டுத் துறை

  • கேலோ இந்தியா: 323 உள்கட்டமைப்புத் திட்டங்களுக்கு ₹3,073.7 கோடி நிதியானது ஒதுக்கீடு செய்யப் பட்டுள்ளது.

  • தேசிய விளையாட்டு மேம்பாட்டு நிதி: நிதியாண்டு 2024ல் 10 திட்டங்களுக்கு அனுமதி வழங்கப் பட்டுள்ளது.
  • இந்திய விளையாட்டு ஆணையம்: இதுவரையில் ஒன்பது உள்கட்டமைப்புத் திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப் பட்டுள்ளது என்பதோடு நிதியாண்டு 2024க்குள் சுமார் 13 உள்கட்டமைப்பு திட்டங்கள் முடிக்கப்பட உள்ளது.
  • தேசிய விளையாட்டுப் பல்கலைக் கழகம், இம்பால்: இந்தத் திட்டத்திற்கு ₹611.74 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப் பட்டுள்ளது, 56% நிறைவடைந்துள்ளது.

தெலுங்கானா மாநிலம் சித்திபேட் மாவட்டத்தில் இரும்பு (பார்தன்) வங்கி

  • இது பிளாஸ்டிக் கழிவுகளை குறைக்க இரும்பு பாத்திரங்களை வழங்குகிறது.
  • இது பிளாஸ்டிக் கழிவுகளை குறைத்து, விழிப்புணர்வை ஏற்படுத்து சமூகங்களுக்கு பெரும் வருமானத்தை உருவாக்குகிறது.
  • ஒரு சுழற்சிக்கு 6-8 கிலோ பிளாஸ்டிக் கழிவுகள் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சைலம் கிராமம், மிசோரம் - நிலையான நீர் வழங்கல்

  • மாற்றுச்செயலாக்கம்: ஜல் ஜீவன் இயக்கத்தின் கீழ், தண்ணீர்ப் பற்றாக்குறையிலிருந்து தண்ணீர் போதுமானதாக இருக்க வழி வகை செய்யப் படுகிறது.
  • அமைப்பு: 24x7 சமூகத்தால் நிர்வகிக்கப் படும் நீர் வழங்கல் செயலமைப்பு.
  • உள்கட்டமைப்பு: 900 KLD நீர் சேமிப்பு தொட்டி, சோலார் பம்புகள் மற்றும் 700 KLD மண்டல நீர்த் தேக்கத்தை உடையது.

அணை மறுசீரமைப்பு மற்றும் மேம்பாட்டுத் திட்டம்

  • குறிக்கோள்: அணையின் பாதுகாப்பு மற்றும் செயல்திறனை மேம்படுத்துதல்.
  • அணை மறுசீரமைப்பு மற்றும் மேம்பாட்டுத் திட்டம் கட்டம்-I: ₹2,567 கோடி செலவில் 223 அணைகள் புனரமைக்கப் பட்டது.
  • அணை மறுசீரமைப்பு மற்றும் மேம்பாட்டுத் திட்டம் இரண்டாம் மற்றும் மூன்றாம் கட்டம்: ₹10,211 கோடி செலவில், 736 அணைகள் இலக்காக வைக்கப் பட்டுள்ளது.

அடல் பூஜல் யோஜனா

  • இலக்கு: சமூகப் பங்கேற்புடன் நிலத்தடி நீர் மேலாண்மை நிறுவுதல்.
  • செலவு: சுமார் ₹6,000 கோடி செலவில், ஏழு மாநிலங்களின் 80 மாவட்டங்களில் இந்தத் திட்டம் செயல் படுத்தப் பட்டது.

பிரதான் மந்திரி க்ரிஷி சிஞ்சாயீ யோஜனா (PMKSY)

  • துவக்கம்: 2015-16 ஆம் ஆண்டு விவசாயத்திற்கு நீர் வசதியை மேம்படுத்த இந்தத் திட்டம் தொடங்கப் பட்டது.
  • சாதனைகள்: 58 திட்டங்கள் நிறைவடைந்துள்ளன மற்றும் 2,497 திட்டங்கள் செயல்படுத்தப் பட்டுள்ளது என்பதோடு இதுவரையில் 25.80 லட்சம் ஹெக்டேருக்கு அது நீர்ப் பாசன வசதியை மேம்படுத்தி உள்ளது.

நதிகள் இணைப்பு திட்டம்

  • இலக்கு: 30 நதி இணைப்புகளை இணைத்தல்.
  • முன்னுரிமை திட்டங்கள்: கென் பெட்வா, மாற்றியமைக்கப்பட்ட பார்ட்பதி-காலிசிந்த்-சம்பல் மற்றும் கோதாவரி-காவிரி நீர் இணைப்புத் திட்டங்கள் ஆகும்.

ஸ்மார்ட் சிட்டி மிஷன் (SCM)

  • துவக்கம்: 100 ஸ்மார்ட் நகரங்களை உருவாக்க ஜூன் 2015ல் தொடங்கப் பட்டது.
  • செயல்பாடு: ஜூன் 2024க்குள் ₹1.43 லட்சம் கோடி மதிப்பிலான 7,153 திட்டங்கள் நிறைவடைந்து உள்ளன.

பாரத் வலையமைப்புத் திட்டம்

  • குறிக்கோள்: அனைத்து கிராமப் பஞ்சாயத்துகளுக்கு (GPs) அகன்ற கற்றை அலைவரிசை இணைப்புகளை வழங்குதல்.
  • செயல்பாடு: FTTH இணைப்புகளுக்கான எதிர்காலத் திட்டங்களுடன் ஒளியிழையின் மூலம் 2,11,021 கிராமப் பஞ்சாயத்துகள் இது வரையில் இணைக்கப்பட்டு உள்ளது.

இந்திய அரசாங்கத்தின் கணிமை - ‘மேக்ராஜ்’

  • இலக்கு: அரசாங்கத் துறைகளுக்கு கணிமை வழியாக தகவல் மற்றும் தொலை தொடர்பு தொழில் நுட்ப (ICT) சேவைகளை வழங்குதல்.
  • செயல்பாடு: இந்திய அரசாங்கத்தின் கணிமையைப் பயன்படுத்தும் 25,806 மெய்நிகர் இயந்திரங்கள் மற்றும் 1,767 அரசாங்கப் பயன்பாடுகள் செயல்பாட்டில் உள்ளன.

காலநிலை மாற்றச் சாதனைகள்

  • உமிழ்வு தீவிரம் குறைப்பு: 2005 ஆம் ஆண்டு முதல் 2019 ஆம் ஆண்டு வரை 33%  வரையில் குறைக்கப் பட்டுள்ளது.
  • புதைபடிவமற்ற எரிபொருள் திறன்: புதைபடிவமற்ற எரிபொருள் திறனில் 40% என்ற அளவை எட்டி உள்ளது.
  • சர்வதேசப் பங்களிப்புகள்: ISA, CDRI, LeadIT, IRIS மற்றும் பெரும்பூனைகள் பாதுகாப்பு கூட்டணி போன்ற முன்முயற்சிகள் காலநிலை மாற்றச் செயல்பாட்டின் காரணமாக ஏற்படுத்தப் பட்டு உள்ளன.

கிராமப்புறத் தொழில்முனைவோரை ஊக்குவிக்கும் முயற்சிகள்

  • லக்பதி தீதிஸ் முன்னெடுப்பு
  • 2023 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த முன்முயற்சியானது, மூன்று கோடி சுய உதவிக் குழு குடும்பங்களை, மூன்றாண்டுகளுக்குள் குறைந்தபட்ச ஆண்டு வருமானம் சுமார் ₹1 லட்சமாக உயர்த்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • இது பன்முகப்படுத்தப்பட்ட வாழ்வாதார நடவடிக்கைகள், மாவட்ட அளவிலான திட்டமிடல், வீட்டு ஆதரவு, அரசாங்கத் துறை ஒருங்கிணைப்பு மற்றும் பணியாளர்கள் மற்றும் சமூக உறுப்பினர்களின் திறனை மேம்படுத்துதல் ஆகியவற்றில் கவனம் செலுத்துகிறது.

  • சரஸ் ஆஜீவிகா தளம் மற்றும் இ-சரஸ் அலைபேசி செயலி
  • 2023 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்தத் தளங்கள், கைத்தறிப் பொருட்கள், மரச் சாமான்கள், ஆடைகள், ஊறுகாய்கள் போன்றவை சுய உதவிக்குழுக்களால் தயாரிக்கப்பட்டு, தரம் சார்ந்த கை வினைப்பொருட்களின் பரந்த வரிசையைக் காட்சிப்படுத்துகின்றன.
  • அவர்களின் உள்நாட்டிலேயே வடிவமைக்கப்பட்ட தயாரிப்புகளுக்கு என்று ஒரு பிரத்தியேகச் சந்தையை உருவாக்குவதன் மூலம், இந்தத் தளம் கிராமப்புறப் பெண்களைப் புதிய தொழில் முனைவோராக மாற்றுகிறது.
  • புத்தொழில் கிராம தொழில் முனைவோர் திட்டம் (SVEP) மற்றும் ஆஜீவிகா கிராமின் எக்ஸ்பிரஸ் யோஜனா (AGEY).
  • புத்தொழில் கிராம தொழில் முனைவோர் திட்டம் (SVEP):
  • வணிக சாத்தியக் கூறு மேலாண்மை பற்றிய அறிவை ஊக்குவித்தல், தொடக்கக் கடன் நிதி அணுகலை வழங்குதல் மற்றும் ஏற்கனவே உள்ள நிறுவனங்களை அளவிடுதல் ஆகியவற்றின் மூலம் உள்ளூர் நிறுவனங்களை கட்டமைப்பதில் கிராமப்புறங்களில் உள்ள தொழில் முனைவோர்களை ஆதரிக்கிறது.
  • 29 மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களில், 221 தொகுதிகளில் 2.97 லட்சம் நிறுவனங்கள் இது வரையில் உருவாக்கப்பட்டுள்ளன.

  • ஆஜீவிகா கிராமின் எக்ஸ்பிரஸ் யோஜனா (AGEY):
  • கிராமப்புறங்களுக்கு பாதுகாப்பான, மலிவு விலை மற்றும் சமூகக் கண்காணிப்புப் போக்குவரத்துச் சேவைகளை வழங்குகிறது.
  • தொலைதூரக் கிராமப்புறமான கிராமங்களை இணைக்கும் வகையில் 26 மாநிலங்களில் சுமார் 2,333 வாகனங்கள் இயக்கப்படுகின்றன.

  • கிராமப்புற சுயவேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனத் (RSETI) திட்டம்
  • தேசிய கிராமப்புற வாழ்வாதார இயக்கத்தின் துணைத் திட்டமான, கிராமப்புற சுய வேலை வாய்ப்புப் பயிற்சி நிறுவனத் (RSETI) திட்டம் கிராமப்புறத் தொழில்முனைவோரை நன்கு வலுப் படுத்துவதை நோக்கமாகக் கொண்டது.
  • கிராமப்புற சுயவேலைவாய்ப்புப் பயிற்சி நிறுவன (RSETI) திட்டம் என்பது வங்கிகளால் நிர்வகிக்கப் படும் மற்றும் கிராமப்புற மேம்பாட்டு அமைச்சகத்தால் நிதியளிக்கப்படும் மாவட்ட அளவிலான சுய வேலைவாய்ப்புப் பயிற்சி நிறுவனங்களாகும்.
  • அவர்கள் 18-45 வயதுடைய கிராமப்புற வேலையற்ற இளைஞர்களுக்கு இலவச திறன் பயிற்சி, கடன் உதவி மற்றும் வழிகாட்டுதலை வழங்குகிறார்கள், மேலும் குறுகிய காலப் பயிற்சி மற்றும் நீண்ட காலத் தொழில்முனைவோரின் வழிகாட்டலின் கீழ் பயிற்சியை மேற்கொள்கிறார்கள்.
  • 2009 முதல், 50.72 லட்சம் விண்ணப்பதாரர்கள் பயிற்சி பெற்றுள்ளனர், மேலும் 36.23 லட்சம் விண்ணப்பதாரர்கள் தொழில்முனைவோர் / பயிற்சிபெற்றவர்களாக ஜூன் 2024 வரை பணி அமர்த்தப் பட்டுள்ளனர், அதில் சுமார் 72 சதவீதத்திற்கும் அதிகமான விகிதத்தில் பயனர்கள் பயனடைந்துள்ளனர்.

  • முன்னெடுப்புகள்:
  • சுயஉதவி குழுக்கள் (SHGs):
  • தேசியக் கிராமப்புற வாழ்வாதார இயக்கத்தின் கூட்டுச் சேமிப்பு, கடன் மற்றும் வருமானம் ஈட்டும் செயல்பாடுகளை செயல்படுத்த சுய உதவிக் குழுக்களை உருவாக்குதல் மற்றும் வலுப்படுத்துதல் ஆகியவற்றை ஊக்குவிக்கிறது.
  • கிராமப்புறத் தொழில்முனைவோருக்கு ஒரு முக்கியமான நிதி ஆதரவு அமைப்பாக சுய உதவிக் குழுக்கள் செயல்படுகின்றன.
  • SHG-வங்கி இணைப்புத் திட்டம்:
  • தேசிய கிராமப்புற வாழ்வாதார இயக்கமானது கடன் மற்றும் நிதிச் சேவைகளை எளிதாக அணுகுவதை உறுதி செய்வதற்காக வேண்டி முறையான வங்கி நிறுவனங்களுடன் சுய உதவிக் குழுக்களை இணைக்க உதவுகிறது.
  • இந்தத் திட்டமானது SHG உறுப்பினர்களுக்கு வணிக முயற்சிகளுக்கான கடன்களைப் பெற உதவுகிறது.
  • கிராமப்புற தொழில்முனைவோருக்கு நிதியளித்தல்:
  • நபார்டு சுய உதவிக் குழுக்கள் மற்றும் குறுந்தொழில் முனைவோர்களுக்குப் பயிற்சி மற்றும் நிதியுதவி அளித்து, இணைய வழியில் பொருட்களை விற்பனை செய்வதில் அவர்களுக்கு உதவுகிறது.

கிராமப்புற நிர்வாகத்தை மேம்படுத்த டிஜிட்டல்மயமாக்கல் முயற்சிகள்

  • இ-பஞ்சாயத் திட்ட அமைப்பு: பஞ்சாயத்துகளின் பணியையும், செயல்முறைகளையும் நெறிப் படுத்துகிறது, தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் மற்றும் செயல்பாட்டாளர்களுக்குப் பயன் அளிக்கிறது.
  • இ-கிராம சுவராஜ் திட்டம்: மின்னணுப் பஞ்சாயத்துத் தளமானது கிராமப் பஞ்சாயத்துகளின் முழு சுயவிவரத்தை வழங்குகிறது.

  • ஸ்வாமித்வா திட்டம்: கிராமப்புற வீட்டு உரிமையாளர்களுக்கு 'உரிமைகள் பதிவேட்டினை' வழங்குவதோடு, சொத்துக்களை விற்றுப் பணமாக்குதல் மற்றும் நிலம் சார்ந்த சச்சரவுகளைக் குறைக்கிறது.

ஓய்வூதியத் திட்டங்களின் பங்களிப்பு

  • பிரதான் மந்திரி ஷ்ரம் யோகி மான்-தன் (PM-SYM): இத்திட்டம் 2019 ஆம் ஆண்டு தொடங்கப் பட்டது, இதில் 50 லட்சத்திற்கும் அதிகமான தொழிலாளர்கள் பதிவு செய்யப்பட்டுள்ளனர்.

விவசாயத் துறை:

  • பிரதான் மந்திரி ஃபசல் பீமா யோஜனா (PMFBY) மற்றும் தேசிய வேளாண் சந்தை (eNAM) போன்ற திட்டங்கள் விவசாயம் மற்றும் அதை சார்ந்தத் துறைகளில் திறன் மேம்பாட்டில் கவனம் செலுத்துகின்றன.

  • விவசாய வளர்ச்சி
  • கடந்த ஐந்து ஆண்டுகளில் விவசாயத் துறை சராசரியாக 4.18% வளர்ச்சியடைந்துள்ளது, இது மக்கள் தொகையில் 42.3% ஐ ஆதரிக்கிறது.
  • விவசாயக் கடன்
  • வழங்கப்பட்ட மொத்த கடன்: பயிர் மற்றும் பருவ காலக் கடன்களுக்கு ₹22.84 லட்சம் கோடி விவசாயக் கடன்கள் வழங்கப் பட்டுள்ளன.

பிரதான் மந்திரி ஃபசல் பீமா யோஜனாவில் சமீபத்திய தொழில்நுட்பத் தலையீடுகள்

  • மின்னணு உரிமை கோரல் கட்டணத் தொகுதி
  • வெளிப்படையான மற்றும் திறமையான கோரிக்கை தீர்வுக்காக, தேசியப் பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தை (NCIP) பொது நிதி மேலாண்மை அமைப்புடன் (PFMS) ஒருங்கிணைக்கிறது.
  • தொழில்நுட்பத்தின் அடிப்படையில் மகசூல் மதிப்பீடு (எஸ்-தொழில்நுட்பம்)
  • துல்லியமான பயிர் மகசூல் மதிப்பீடுகளுக்கான தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துகிறது, பல மாநிலங்களில் 100 மாவட்டங்களில் சோதனை நடத்தப் பட்டது.
  • வானிலை தகவல் வலைப் பின்னல் & தரவு அமைப்பு (WINDS)
  • விவசாயிகளுக்கு வானிலைத் தரவு அணுகலை மேம்படுத்த ஒவ்வொரு தொகுதியிலும், தானியங்கி வானிலை நிலையங்கள் (AWS) மற்றும் ஒவ்வொரு கிராமப் பஞ்சாயத்திலும் தானியங்கி மழை அளவீடுகள் (ARG) நிறுவத் திட்டமிடப்பட்டுள்ளது.
  • பயிர்களின் நிகழ்நேரக் கண்டறிதல்கள் மற்றும் புகைப்படங்களின் சேகரிப்பு (CROPIC)
  • பயிர்ச் சேதத்தைச் சரிபார்க்கவும், மதிப்பிடவும் பயிர்ப் புகைப்படங்களைச் சேகரிக்கிறது, இது மகசூல் மதிப்பீட்டிற்கு உதவுகிறது.

சுற்றுலா மற்றும் விருந்தோம்பல் துறை:

  • ஹுனர் சே ராஸ்கர் டக் (HSRT) திட்டம் போன்ற முன்முயற்சிகள் சுற்றுலா மற்றும் விருந்தோம்பல் துறையில் வேலைவாய்ப்பு மற்றும் தொழில்முனைவோரை அதிகரிக்க, திறன் பயிற்சியை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளன.

மாநில அளவிலான முன்னெடுப்புகள்:

  • மகாராஷ்டிரா:
  • இளைஞர்களுக்கு திறன் பயிற்சி மற்றும் வேலை வாய்ப்புகளை வழங்குவதற்காக மாநில அரசு மகாராஷ்டிரா மாநில திறன் மேம்பாட்டுச் சங்கத்தை (MSSDS) தொடங்கியுள்ளது.
  • கர்நாடகா:
  • கர்நாடகத் திறன் மேம்பாட்டுக் கழகம் (KSDC) தொழில் சார்ந்த திறன் பயிற்சி அளிப்பதிலும், தொழில் முனைவோரை ஊக்குவிப்பதிலும் கவனம் செலுத்துகிறது.
  • ராஜஸ்தான்:
  • ராஜஸ்தான் திறன் மற்றும் வாழ்வாதார மேம்பாட்டுக் கழகம் திறன் பயிற்சித் திட்டங்கள் மூலம் இளைஞர்களின் வேலைவாய்ப்பை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

பொது-தனியார் கூட்டாண்மை:

  • டாடா சமூக அறிவியல் நிறுவனம் (TISS):
  • திறன் மேம்பாடு மற்றும் தொழில்முனைவோர் அமைச்சகத்துடன் (MSDE), டாடா சமூக அறிவியல் நிறுவனம் கூட்டு சேர்ந்து திறன் பயிற்சி மற்றும் வேலை வாய்ப்புகளை உருவாக்குகிறது.
  • லார்சன் & டூப்ரோ (எல்&டி):
  • கட்டுமானத் துறையில் திறன் பயிற்சி அளிக்க தேசிய திறன் மேம்பாட்டுக் கழகத்துடன் (NSDC) இணைந்து லார்சன் & டூப்ரோ நிறுவனம் பணியாற்றுகிறது.
  • இன்ஃபோசிஸ்:
  • மாணவர்கள் மற்றும் தொழில் வல்லுநர்களுக்கு இலவச டிஜிட்டல் திறன் பயிற்சி அளிக்க இன்ஃபோசிஸ் ஸ்பிரிங்போர்டு திட்டத்தை அறிமுகப் படுத்தியுள்ளது.

-------------------------------------

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்