TNPSC Thervupettagam

பொருளாதார ஆய்வறிக்கை 2023-2024 பாகம் - 01

July 31 , 2024 162 days 1036 0

(For English version to this please click here)

அறிமுகம்

  • ஜூலை 22, 2024 அன்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சமர்ப்பித்த பொருளாதார ஆய்வறிக்கை 2023-24, கடந்த ஆண்டு இந்தியப் பொருளாதாரத்தின் செயல்திறன் பற்றிய விரிவான பகுப்பாய்வை வழங்குவதோடு எதிர்கால வாய்ப்புகள் மற்றும் கொள்கை வழி முறைகள் பற்றிய நுண்ணறிவினையும் வழங்குகிறது.
  • கோவிட்-19 தொற்றுநோய் மற்றும் பரம்பரையாக வழி வந்த பொருளாதார ஏற்றத்தாழ்வுகள் மூலம் பல்வேறு சவால்கள் இருந்த போதிலும், இந்தியா பொருளாதார ரீதியாக குறிப்பிடத் தக்க முன்னேற்றங்களை அடைத்துள்ளது.

தற்போதையப் பொருளாதார நிலை

  • இன்று, இந்தியா உலகளவில் 5வது பெரிய பொருளாதாரமாக உள்ளது, மேலும் நிதியாண்டு 2024 ஆம் ஆண்டிற்கான மொத்த உள்நாட்டு உற்பத்தி USD 3.7 டிரில்லியன் என மதிப்பிடப்பட்டுள்ளது.
  • தொற்றுநோயின் மிக கடுமையான இடையூறுகள் மற்றும் ஆரம்பகாலப் பெரும் பொருளாதார ஏற்றத் தாழ்வுகள் மற்றும் பலவீனமான நிதித் துறை இங்கு இருந்த போதிலும் இந்தச் சாதனை ஏற்பட்டுள்ளது.
  • 2025 ஆம் நிதியாண்டிற்கான உண்மையான மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி 7% அளவிற்கு அருகில் இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது, என்பதோடு வளர்ச்சி விகிதங்கள் 2030 ஆம் ஆண்டிற்குள் 7% அளவை விட அதிகமாக இருக்கும் என்று கணிக்கப் பட்டுள்ளது.

எதிர்கால வளர்ச்சி வாய்ப்புகள்

  • முன்னோக்கிப் பார்க்கும் போது, ​​அடுத்த மூன்று ஆண்டுகளுக்குள் இந்தியா 5 டிரில்லியன் அமெரிக்க டாலர் என்ற அளவிலான மொத்த உள்நாட்டு உற்பத்தியுடன், உலகின் 3வது பெரிய பொருளாதாரமாக மாறத் தயாராக உள்ளது.

  • நியாயமான அனுமானங்களின் கீழ், 2030 ஆம் ஆண்டிற்குள் 7 டிரில்லியன் அமெரிக்க டாலர் பொருளாதாரத்தை எட்டுவதை இந்தியா இலட்சியமாகக் கொண்டுள்ளது.
  • 2047 ஆம் ஆண்டிற்குள் ‘வளர்ந்த நாடு’ ஆக வேண்டும் என்ற ஒரு லட்சிய இலக்கை அரசாங்கம் நிர்ணயித்துள்ளது.

பொருளாதாரச் சாதனைகள் மற்றும் நிலைத்தன்மை

  • கடந்த தசாப்தத்தில் மேற்கொண்ட தீர்க்கமான கொள்கை நடவடிக்கைகள் இந்தியாவின் உள்கட்டமைப்பு மற்றும் நிதித் துறையைக் கணிசமாக வலுப்படுத்தி, உள்ளடக்கிய மேம்பாடு மற்றும் வேலைவாய்ப்பு உருவாக்கத்தை ஊக்குவித்துள்ளன.
  • நிதி நிலைத்தன்மை மற்றும் பணவீக்கக் கட்டுப்பாட்டில் நாடு குறிப்பிடத்தக்க முன்னேற்றங்களைக் கண்டுள்ளது, இது பொருளாதாரப் பலவீனத்திலிருந்து நாடு பொருளாதார வலிமைக்கு மாறுவதைக் குறிக்கிறது.
  • மூலோபாய நிர்வாக மற்றும் பணவியல் கொள்கைகள் பணவீக்க அழுத்தங்களைத் திறம்பட நிர்வகித்துள்ளன என்ற நிலையில், சில்லறைப் பணவீக்கம் நிதியாண்டு 2024 ஆம் ஆண்டில் சராசரியாக 5.4% ஆக இருந்தது என்பது இது கோவிட் தொற்றுநோய்க்குப் பிறகு மிகக் குறைந்த அளவாகும்.

எதிர்காலச் சீர்திருத்தங்களுக்காக முன்னுரிமை அளிக்க வேண்டிய பகுதிகள்

  • இந்த வளர்ச்சிப் பாதையை நிலைநிறுத்துவதற்கும், மேம்படுத்துவதற்கும், பல்வேறு எதிர்காலச் சீர்திருத்தங்களுக்கான பல்வேறு முன்னுரிமைப் பகுதிகளை இந்தக் கணக்கெடுப்பு எடுத்துக் காட்டுகிறது, அவையாவன:
  • திறன்: வளர்ந்து வரும் பொருளாதாரத்தின் தேவைகளைப் பூர்த்தி செய்ய பணியாளர்களின் திறன்களை மேம்படுத்துதல்.
  • கற்றல் முடிவுகள்: அறிவுள்ள மற்றும் திறமையானப் பணியாளர்களை உருவாக்குவதற்கு கல்வியின் வெளிப்பாடுகளை மேம்படுத்துதல்.
  • சுகாதாரம்: மக்களின் நல்வாழ்வை உறுதி செய்வதற்காக சுகாதாரத் துறையை நன்கு வலுப்படுத்துதல்.
  • ஆற்றல் பாதுகாப்பு: நிலையான மற்றும் நீடித்த ஆற்றல் வழங்கலை உறுதி செய்தல்.
  • குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கான இணக்கச் சுமை குறைப்பு: குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களின் வளர்ச்சியை ஊக்குவிக்க ஒழுங்குமுறைக் கட்டுப்பாடுகளை எளிதாக்குதல்.

  • உழைக்கும் மக்களில் பாலினச் சமநிலை: வேலை வாய்ப்புகளில் பாலினச் சமத்துவத்தை ஊக்குவித்தல்.

சவால்கள் மற்றும் கவனத்திற்குரியவை:

  • பொருளாதாரக் கண்ணோட்டம் மிகவும் பெரு நம்பிக்கையுடன் இருந்தாலும், புவிசார் அரசியல் மோதல்களின் அதிக ஆபத்து கவலைக்குரிய பகுதியாகவே உள்ளது.
  • இந்த அபாயங்களைக் குறைப்பதற்கான தொடர்ச்சியான முயற்சிகளானது, நிலைத்தன்மை மற்றும் வளர்ச்சியைப் பேணுவதற்கு முக்கியமானதாக இருக்கும்.

GDP வளர்ச்சி மற்றும் பொருளாதார நிலைத்தன்மை

  • உண்மையான GDP வளர்ச்சி:
  • இந்தியாவின் உண்மையான மொத்த உள்நாட்டு உற்பத்தியானது 2023-24 நிதியாண்டில் 8.2% வளர்ச்சியடைந்தது, இது நான்கில் மூன்று காலாண்டுகளில் ஏற்பட்ட 8% என்ற அளவை விட அதிகமாகும்.

  • 2024-25 நிதியாண்டுக்கான வளர்ச்சி முன்னறிவிப்பு 6.5% மற்றும் 7% ஆகியவற்றுக்கு இடையே சமநிலையான அபாயங்களுடன் அமைக்கப் பட்டுள்ளது.

  • இந்த வளர்ச்சியானது வலுவான உள்நாட்டுத் தேவை மற்றும் முதலீடுகளின் மறுமலர்ச்சியால் இயக்கப் படுகிறது.
  • மொத்த நிலையான மூலதன உருவாக்கம்: இது அரசாங்க மூலதனச் செலவு மற்றும் நிலையான தனியார் முதலீடு ஆகியவற்றால் மேம்படுத்தப்பட்டு இயல்பான அடிப்படையில் 9% அதிகரித்துள்ளது.
  • சில்லறைப் பணவீக்கம்: உலகளாவிய இடையூறுகள் மற்றும் உள்நாட்டுச் சவால்களை எதிர் கொள்ளும் வகையில் பயனுள்ள நிர்வாக மற்றும் பணவியல் கொள்கை நடவடிக்கைகள் காரணமாக சில்லறைப் பணவீக்கம் 5.4% ஆகக் குறைந்தது.

வேலைவாய்ப்பு மற்றும் வருமானம்

  • இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு: 51.25% இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பாகக் கருதப் படாமல் உள்ளதால், இது திறன் மேம்பாட்டின் அவசியத்தை எடுத்துக் காட்டுகிறது.
  • தனிநபர் வருமானம்: இந்தியாவின் தனிநபர் வருமானம் 1990 ஆம் ஆண்டில் இருந்து ஏழு மடங்குக்கு மேல் அதிகரித்து, 2047 ஆம் ஆண்டில் ₹14.9 லட்சத்தை எட்டும் என்று கணிக்கப் பட்டு உள்ளது.
  • வேலைவாய்ப்பு உருவாக்கம்: பொருளாதாரம் 2030 ஆம் ஆண்டு வரை விவசாயம் அல்லாத துறையில் ஆண்டுதோறும் கிட்டத்தட்ட 78.5 லட்சம் வேலைகளை உருவாக்க வேண்டும்.
  • உற்பத்தியுடன் இணைக்கப்பட்ட ஊக்கத் தொகை திட்டங்கள் ₹1.28 லட்சம் கோடி முதலீட்டில் 8.5 லட்சம் வேலை வாய்ப்புகளை உருவாக்கியுள்ளன.
  • 2022-23 நிதியாண்டில் வேலையின்மை விகிதம் 3.2% ஆகக் குறைந்துள்ளது.

பண மேலாண்மை மற்றும் கடன் வளர்ச்சி

  • வங்கிக் கடன் வளர்ச்சி: ₹164.3 லட்சம் கோடி கடன் வழங்கலுடன் நீடித்த வேகம், மார்ச் 2024, இறுதியில் 20.2% வளர்ச்சி அடைந்துள்ளது.
  • வாராக் கடன்கள்: GNPA விகிதம் மார்ச் 2024, இறுதியில் 12 ஆண்டுகளில் இல்லாத அளவில் 2.8% ஆகக் குறைந்தது.

விலை மற்றும் பணவீக்க மேலாண்மை

  • சில்லறைப் பணவீக்கம்: தீவிர வானிலை நிகழ்வுகள் மற்றும் விநியோகச் சங்கிலியில் சீர் குலைவுகள் போன்ற சவால்கள் இருந்த போதிலும் 5.4% ஆக இருந்தது.
  • உணவுப் பணவீக்கம்: நுகர்வோர் உணவு விலைக் குறியீட்டின் அடிப்படையில், 2021-22 நிதியாண்டில் உணவுப் பணவீக்கம் 3.8% என்ற அளவிலிருந்து 2023-24 நிதியாண்டில் 7.5% ஆக என்ற அளவிற்கு அதிகரித்துள்ளது.

பல்பரிமாண வறுமை குறைப்பு

  • 2015-16 ஆம் ஆண்டு மற்றும் 2019-21 ஆம் ஆண்டிற்கு இடைப்பட்டக் காலத்தில் 13.5 கோடி இந்தியர்கள் பல் பரிமாண வறுமையிலிருந்து வெளியே வந்துள்ளனர், இது கிராமப்புற இந்தியா மற்றும் மிகவும் பின்தங்கிய பகுதிகளால் பெரும் முன்னேற்றத்தை அடைந்து, "அந்தியோதயா" (நிதி ஆயோக் அறிக்கை) என்ற இலட்சியத்தை நிரூபிக்கிறது.

அடிப்படை வசதிகளுக்கான அணுகல்

  • மின்சாரம், நீர் மற்றும் சுகாதாரம்: NFHS (2019-21) ஆம் ஆண்டு அறிக்கையின்படி, மின்சாரம், குடிநீர், சுகாதாரம் மற்றும் சுத்தமான எரிபொருள் அணுகல் தேவை தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது.
  • ஒருவர் தனது கையில் இருந்து செய்யும் சுகாதாரச் செலவு: 2015 ஆம் நிதியாண்டில் மொத்த சுகாதாரச் செலவான 62.6% என்ற அளவிலிருந்து 2020 நிதியாண்டில் 47.1% ஆகக் குறைந்துள்ளது.
  • மகப்பேறு இறப்பு விகிதம் (MMR): 2014-16 ஆம் ஆண்டில் ஒரு லட்சத்துக்கு 130 ஆக இருந்து, 2018-20 ஆம் ஆண்டில் ஒரு லட்சத்துக்கு 97 ஆகக் குறைந்துள்ளது.
  • உயர்கல்வியில் பெண்களின் மொத்தச் சேர்க்கை விகிதமானது (GER), 2018 ஆம் நிதியாண்டில் ஆண்களின் மொத்தச் சேர்க்கை விகிதத்தை முந்தியது.

சுகாதார முன்முயற்சிகள்

  • ஆயுஷ்மான் பாரத்: 30.3 கோடி ஆயுஷ்மான் பாரத் அட்டைகள் உருவாக்கப்பட்டு, இது வரை 6.2 கோடி பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுள்ளனர்.
  • 1.6 லட்சத்திற்கும் அதிகமான ஆரம்ப சுகாதார வசதிகள் ஆயுஷ்மான் ஆரோக்யா மந்திராக மேம்படுத்தப் பட்டுள்ளன.

  • ஜன் ஔசதி கேந்திராக்கள்: நாடு முழுவதும் 10,000 மையங்கள் நிறுவப்பட்டுள்ளது (நவம்பர் 2023 வரை).

  • காசநோய் (TB): 2015 ஆம் ஆண்டு மற்றும் 2022 ஆம் ஆண்டிற்கு இடைப்பட்ட காலத்தில் காச நோய்ப் பாதிப்பு 16% குறைந்துள்ளது, மேலும் அதன் மூலமான இறப்பு விகிதம் 18% குறைந்து உள்ளது.
  • ஜனனி சுரக்சா யோஜனா:
  • ஜனனி சுரக்சா யோஜனா (JSY) ஏழை கர்ப்பிணிப் பெண்களிடையே பிரசவத்தை நன்கு ஊக்குவிப்பதன் மூலம் தாய் மற்றும் பிறந்த குழந்தை இறப்பைக் குறைக்கும் நோக்கத்துடன் செயல்படுத்தப் படுகிறது.
  • 2022 ஆம் நிதியாண்டில் 1 கோடி பயனாளிகள் பயனடைந்துள்ளனர்.

  • பிரதமர் ஜன் ஔசதி கேந்திரா: இத்திட்டத்தின் கீழ், 10,000 மையங்கள் அமைக்கப்பட்டு மலிவு விலையில் மருந்துகளை வழங்குகின்றன.

  • அம்ரித்: இந்தத் திட்டத்தின் கீழ், 300க்கும் மேற்பட்ட மருந்தகங்கள் மானிய விலையில் முக்கியமான மருந்துகளை வழங்குகின்றன.

  • ஆயுஷ்மான் பாவ் பிரச்சாரம்: கோடிக்கணக்கான மக்களுக்குப் பல்வேறு சுகாதார சேவைகள் இதன் மூலம் வழங்கப்படுகின்றன.

  • ஆயுஷ்மான் பாரத் டிஜிட்டல் திட்டம்: 64.86 கோடி அளவில் சுகாதாரக் கணக்குகள் உருவாக்கப் பட்டு ஏராளமான சுகாதார வசதிகள் பதிவு செய்யப் பட்டுள்ளன.

  • இ-சஞ்சீவனி: அலைபேசி மூலம் மருத்துவ சேவையானது சுமார் 26.62 கோடி நோயாளிகளுக்கு அளிக்கப் படுறது.

குழந்தைகளின் மனநலன் சார்ந்தத் திட்டங்கள்

  • ராஷ்ட்ரிய கிஷோர் ஸ்வஸ்திய காரியக்ரம்: இளம்பருவக் குழந்தைகளுக்கான சுகாதார சிகிச்சையகங்கள் மற்றும் சுகாதாரக் கல்வியை வழங்குகிறது.

  • மனோதர்பன்: கோவிட்-19 தொற்றின் போது ஆலோசனை வழங்க உதவியது.

  • ஆயுஷ்மான் பாரத் பள்ளி சுகாதாரத் திட்டம்: உடல்நலம் மற்றும் ஆரோக்கியத் தூதர்களுக்கான பயிற்சியை வழங்குகிறது.

போஷன் பி பதாய் பீ’:

  • தொடங்கப்பட்ட தினம்: மே, 2023.
  • நோக்கம்:
  • அங்கன்வாடி மையங்களில் பாலர்களுக்கான ஒரு உயர்தர வலையமைப்பை உருவாக்குதல்.
  • தாய்மொழியை முதன்மை பயிற்றுமொழியாகப் பயன்படுத்தி 0-3 மற்றும் 3-6 வயது உடையவர்களுக்கு விளையாட்டு அடிப்படையில் கல்வி கற்பித்தல்.
  • இதன் மூலம் 13.9 லட்சம் அங்கன்வாடி மையங்களில் சுமார் 8 கோடி குழந்தைகளுக்கு சேவை வழங்கப் பட்டுள்ளன.

கல்விச் சீர்திருத்தங்கள்

  • தேசியக் கல்விக் கொள்கை (NEP) 2020: கல்விக் கட்டமைப்பை மாற்றியமைக்க அறிமுகப் படுத்தப் பட்டது.
  • ஜாதுய் பிடாரா: கற்றல், கற்பித்தல், பொருள் விளக்கத்திற்கென 2023 ஆம் ஆண்டு தொடங்கப் பட்டது.

  • பராக்: இந்தியப் பள்ளிக் கல்வி அமைப்பில் கண்காணிப்பு, அளவீடு மற்றும் மதிப்பீட்டுச் செயல்பாடுகளை மேம்படுத்த பராக் உருவாக்கப்பட்டது.

  • நிபுன் பாரத் திட்டம்: 2026-27 ஆண்டிற்குள் அடிப்படைக் கல்வியறிவு மற்றும் எண் கணித கற்றலிற்காக தொடங்கப் பட்டது.

  • சமக்ரா சிக்சா சாதனைகள் (2018-19 ஆம் ஆண்டு முதல் 2023-24 ஆம் ஆண்டு வரை):
  • 3,000 பள்ளிகள் பல்வேறு நிலைகளில் தரம் உயர்த்தப்பட்டுள்ளன.
  • 235 புதிய குடியிருப்புப் பள்ளிகள் மற்றும் விடுதிகள் திறக்கப்பட்டன.
  • 28,000க்கும் மேற்பட்ட அளவில் தனித்தனியான பெண்கள் கழிப்பறைகள் கட்டப்பட்டுள்ளன.
  • 1.2 லட்சம் பள்ளிகள் தகவல் மற்றும் தொடர்பு தொழில்நுட்பம் மற்றும் மின்னணு முயற்சிகளின் கீழ் இணைந்து உள்ளன.

  • நிஷ்தா ஒருங்கிணைந்த ஆசிரியர் பயிற்சித் திட்டம்: அனைத்து நிலைகளிலும் உள்ள ஆசிரியர்களை உள்ளடக்கும் வகையில் இத்திட்டம்  விரிவுபடுத்தப்பட்டுள்ளது.

  • மாவட்ட கல்வி மற்றும் பயிற்சி நிறுவனங்கள் (DIETs):
  • செயல்பாட்டு நிலையில் உள்ள 613 மாவட்டக் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனங்களைச் சிறந்த நிறுவனங்களாக மேம்படுத்துதல்.
  • 2024 ஆம் நிதியாண்டில் 125 மாவட்டக் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனங்களுக்கு ₹92,320.18 லட்சம் அளவிற்கு நிதியானது ஒப்புதல் அளிக்கப் பட்டுள்ளது; இதில் முதல் தவணையாக 23 மாநிலங்கள் /யூனியன் பிரதேசங்களுக்கு ₹27,923.53 லட்சம் நிதியானது வழங்கப் பட்டது.

  • வித்யா பிரவேஷ்:
  • அனைத்துத் தரம்-I ரக மாணவர்களுக்கும் 3 மாத விளையாட்டு அடிப்படையிலான கற்றலைப் பள்ளித் தயாரிப்புத் தொகுதி மூலம் வழங்குதல்.
  • 2023-24 ஆம் ஆண்டில் 8.46 லட்சம் பள்ளிகளைச் சேர்ந்த 1.13 கோடி மாணவர்களை உள்ளடக்கிய 36 மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களால் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டது.

  • கஸ்தூரிபா காந்தி பாலிகா வித்யாலயா:
  • பின்தங்கிய வகுப்பைச் சேர்ந்த (SC, ST, OBC, சிறுபான்மையினர், BPL) பெண்களுக்கான குடியிருப்புப் பள்ளிகளை நிறுவுதல்.
  • செயல்பாடு: நாடு முழுவதும் 5,116 கஸ்தூரிபா காந்தி பாலிகா வித்யாலயாவில் இதுவரை 7.07 லட்சம் பெண்கள் சேர்ந்துள்ளனர்.

  • சிறப்புத் தேவைகள் உள்ள குழந்தைகளுக்கான உள்ளடக்கிய கல்வி (CwSN):
  • நோக்கம்: கல்வியின் அணுகல்.
  • செயல்பாடு: 18.50 லட்சம் குழந்தைகள், சிறப்புத் தேவைகள் உள்ள குழந்தைகளுக்கான உள்ளடக்கிய கல்வியை பெற்றுள்ளன; அவர்களுக்கு உதவித் தொகை, ஆதரவு, வீட்டிலேயே கல்வி, சிறப்புக் கல்வியாளர்கள் மற்றும் கற்றல் வளங்கள் வழங்கப்படுகின்றன.

  • அறிவுப் பகிர்வுக்கான மின்னணு உள்கட்டமைப்பு (DIKSHA): பள்ளிக் கல்விக்கான தேசிய மின்னணு வலைதளம் அமைக்கப் பட்டுள்ளது.
  • செயல்பாடு: இதில் 3,53,063 மின் உள்ளடக்கங்கள் உள்ளன; இது 1.71 கோடி பதிவு செய்த பயனர்களைக் கொண்டது, இது தினசரி 2.5 லட்சம் செயலுறு பயனர்களைச் சென்றடைந்து உள்ளது.

  • மாநிலங்களுக்கான கற்பித்தல்-கற்றல் மற்றும் முடிவுகளை வலுப்படுத்துதல் (STARS): இதன் மூலம் ஆறு மாநிலங்களில் பள்ளிக் கல்வியின் தரம் மற்றும் நிர்வாகத்தை மேம்படுத்துதல்.
  • செயல்பாடு: முதல் இரண்டு ஆண்டுகளில் 6/6 இலக்குகள் எட்டப் பட்டன.

  • முன்னேற்ற இந்தியாவிற்கான பிரதம மந்திரி பள்ளிகள் (PM-SHRI):
  • நோக்கம்: 14,500 முன்மாதிரி பள்ளிகளை அமைத்தல்.
  • செயல்பாடு: இதற்காக 10,858 பள்ளிகள் தேர்ந்தெடுக்கப்பட்டன, 2025 ஆம் நிதியாண்டில் 10,080 PM-SHRI பள்ளிகளுக்கு ₹5,942.21 கோடி நிதியானது அங்கீகரிக்கப் பட்டது.

  • உல்லஸ்-நவ் பாரத் சாக்சார்தா காரியக்ரம்: 15 வயதுக்கு மேற்பட்ட எழுத்தறிவு இல்லாதவர்களுக்கான அடிப்படைக் கல்வியறிவு மற்றும் எண்ணியல் சார்ந்த கற்றலை ஊக்குவித்தல்.
  • செயல்பாடு: இதற்காக 1.33 கோடி கற்பவர்கள் மற்றும் 35 தன்னார்வ ஆசிரியர்கள் பதிவு செய்துள்ளனர்; எழுத்தறிவுத் தேர்வில் தேர்ச்சி பெற்றதன் மூலம் 65 லட்சம் பேர் இதன் மூலம் புதிதாக கல்வியறிவு பெற்றுள்ளனர்.

  • பிரதான் மந்திரி போஷன் (போஷன் சக்தி நிர்மான்) திட்டம்: அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் I-VIII வகுப்பு மாணவர்களுக்கு ஒரு சூடான சமைத்த உணவு வழங்குதல்.
  • செயல்பாடு: இதன் மூலம் 11.63 கோடி குழந்தைகள் பயனடைந்துள்ளனர்; இதில் 24.85 லட்சம் சமையல்காரர்கள் மற்றும் உதவியாளர்கள் ஈடுபட்டுள்ளனர், மேலும் 9.1 லட்சம் சமையலறை சார்ந்த-அறைகள் கட்டப் பட்டுள்ளன.

  • தேசிய உதவித் தொகை வழங்கும் திட்டம்:
  • நோக்கம்: பொருளாதாரத்தில் பின்தங்கிய பிரிவைச் சேர்ந்த திறமையான மாணவர்களுக்கு உதவித் தொகை அளித்தல்.
  • செயல்பாடு: ஆண்டுதோறும் 1 லட்சம் என்ற அளவிலான எண்ணிக்கையில் புதிதாக உதவித் தொகை வழங்கப்படுகிறது; 2023-24 ஆம் ஆண்டில் 250,089 மாணவர்களுக்கு ₹300.10 கோடி அளவில் நிதியானது வழங்கப்பட்டது.

  • வித்யாஞ்சலி நிகழ்ச்சி
  • தொடங்கப்பட்ட தினம்: 7, செப்டம்பர் 2021
  • 2020 ஆம் ஆண்டிற்கான தேசிய கல்விக் கொள்கையின் படி, சமூகம் மற்றும் தனியார் துறை ஆதரவின் மூலம் பள்ளி உள்கட்டமைப்பு மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்துதல்.
  • முக்கிய அம்சங்கள்:
  • சமூக ஈடுபாடு: பள்ளிகளை மேம்படுத்த உதவும் தனிநபர்களையும், குழுக்களையும் இது ஊக்குவிக்கிறது.
  • CSR பங்கேற்பு: பெருநிறுவனச் சமூகப் பொறுப்பு (CSR) சார்ந்த திட்டங்கள் மூலம் பள்ளிகளை ஆதரிக்க இது நிறுவனங்களை அனுமதிக்கிறது.
  • பிரத்தியேக வலைதளம்: பள்ளித் திட்டங்களைத் தேர்ந்தெடுத்து ஆதரிக்க நிறுவனங்களுக்கு ஒரு வலைதளத்தை இது வழங்குகிறது.

இந்தியாவின் ஆன்லைன் கற்றல் வடிவமைப்பு

  • ஸ்வயம்: 4.3 கோடி அளவில் பதிவு செய்யப்பட்ட மாணவர்களுடன் பல்வேறு துறைகளில் 13,140+ படிப்புகளை வழங்குகிறது.
  • ஸ்வயம் பிரபா: இளங்கலை/முதுகலை (UG/PG) கல்வி உள்ளடக்கத்தை 48 DTH (வீட்டிற்கு நேரடி ஒளிபரப்பு) சேனல்கள் மூலம் வழங்குகிறது என்பதோடு இது 1.2 மில்லியனுக்கும் அதிகமான மாணவர்களைச் சென்றடைகிறது.

  • ஸ்வயம் பிளஸ்: பல்வேறு தொழில்களில் கவனம் செலுத்தி, கடன் அங்கீகாரம் மற்றும் வேலை வாய்ப்புக்கான உயர்தரப் படிப்புகளை இது வழங்குகிறது.
  • சமர்த்: இது நிர்வாகச் செயல்முறைகளை மின்னணு மயமாக்க சுமார் 3500க்கும் மேற்பட்ட நிறுவனங்களால் ஏற்றுக் கொள்ளப் பட்ட உயர் கல்வி நிறுவனங்களுக்கான ஒரு மின் ஆளுமை தீர்வாகும்.
  • பிரதம மந்திரி இ-வித்யா: 3.5 லட்சத்திற்கும் அதிகமான மின் உள்ளடக்கங்களைக் கொண்ட DIKSHA மற்றும் போட்டித் தேர்வு ஆதாரங்களுக்கான Sathee ஆகிய மின்னணுக் கல்வி முயற்சிகளை இது ஒருங்கிணைக்கிறது.

-------------------------------------

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்