TNPSC Thervupettagam

பொருளாதார ஆய்வறிக்கை 2023-2024 பாகம் - 02

August 2 , 2024 3 hrs 0 min 71 0

(For English version to this please click here)

2023-2024 பொருளாதார ஆய்வறிக்கையின் சிறப்பம்சங்கள்

  • மொத்த மதிப்பு கூடுதலுக்கு (GVA) துறை சார்ந்தப் பங்களிப்புகள்
  • நிதியாண்டு 2024ல் தற்போதைய விலையில் ஒட்டு மொத்த அளவில் மொத்த மதிப்பு கூடுதலில் விவசாயம், தொழில் மற்றும் சேவைத் துறைகளின் பங்குகள் முறையே 17.7 சதவீதம், 27.6 சதவீதம் மற்றும் 54.7 சதவீதம் ஆகும்.
  • துறைசார் வளர்ச்சி
  • நிதியாண்டு 2024ல் உற்பத்தித் துறை 9.9 சதவீதம் வளர்ச்சி அடைந்துள்ளது; கட்டுமான நடவடிக்கைகள் சார்ந்த துறைகளும் 9.9 சதவீத வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளன.
  • முதலீடுகள் மற்றும் மூலதன உருவாக்கம்
  • தனியார் நிதி அல்லாத நிறுவனங்களின் மொத்த நிலையான மூலதன உருவாக்கம் (GFCF) நிதியாண்டு 2023ல் 19.8 சதவீதம் அதிகரித்து, வளர்ச்சிக்கான முக்கிய உந்துதலாகச் செயல் பட்டது.
  • நில மனை
  • முதல் எட்டு நகரங்களில் 4.1 லட்சம் குடியிருப்புகள் விற்கப்பட்ட நிலையில், 2023 ஆம் ஆண்டில் நில மனை 33 சதவீத வளர்ச்சியைக் கண்டுள்ளது, இது 2013 ஆம் ஆண்டை கணக்கிடும் போது மிக அதிக வளர்ச்சியாகும்.
  • நிதிச் செயலாக்கம்
  • மத்திய அரசின் நிதிப்பற்றாக்குறை, நிதியாண்டு 2023ல் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 6.4 சதவீதத்திலிருந்து நிதியாண்டு 2024ல் 5.6 சதவீதமாகக் குறைந்துள்ளது.
  • மொத்த நிதிப் பற்றாக்குறையானது பட்ஜெட் மதிப்பான ₹9.1 லட்சம் கோடியை விட 8.6 சதவீதம் குறைவாக இருப்பதால், மாநில அரசுகளின் செலவினங்களின் தரம் மேம்பட்டுள்ளது.
  • மூலதனச் செலவு
  • 2024 ஆம் நிதியாண்டிற்கான மூலதனச் செலவு ₹9.5 லட்சம் கோடியாக உள்ளது, இது ஆண்டு தோறும் கணக்கிடப்பட்டதன் அடிப்படையில், 28.2 சதவீதம் அதிகரித்துள்ளது, இது 2020 ஆம் நிதியாண்டை ஒப்பிடும் போது 2.8 மடங்கு அதிகமாகும்.
  • வங்கித் துறை
  • 2024 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் மொத்த வாராக் கடன் சொத்துகளின் விகிதம் 2.8 சதவீதமாகக் குறைந்துள்ளது, இது வங்கிகளின் சொத்துத் தரத்தில் கடந்த 12 ஆண்டுகளில் குறைந்த அளவில் உள்ளதால் இது பெரும் முன்னேற்றத்தை அடைந்துள்ளது.
  • வர்த்தகம் மற்றும் அந்நியச் செலாவணி
  • இந்தியாவின் சேவைகளின் ஏற்றுமதி 2024 ஆம் நிதியாண்டில் 341.1 பில்லியன் டாலர் என்ற புதிய உச்சத்தை எட்டியுள்ளது.
  • 2024 ஆம் மார்ச் மாதத்தின் இறுதியில் உள்ள அந்நியச் செலாவணி கையிருப்பு 11 மாத திட்டமிடப் பட்ட இறக்குமதிகளை ஈடு கட்ட போதுமானது.

  • சமூக நலன்
  • 2013 ஆம் ஆண்டு நேரடிப் பலன் பரிமாற்றம் தொடங்கப்பட்டதில் இருந்து இதுவரை ₹36.9 லட்சம் கோடி ரூபாய் பரிவர்த்தனை செய்யப்பட்டது.
  • பெண் தொழிலாளர் பங்கேற்பு விகிதம் 2017-18 ஆம் ஆண்டு கணக்கிடப்பட்ட 23.3 சதவீதத்தில் இருந்து, 2022-23 ஆம் ஆண்டில் 37 சதவீதமாக உயர்ந்துள்ளது, இதன் முக்கியக் காரணம் கிராமப்புற பெண்களின் பங்கேற்பு அதிகரித்தது ஆகும்.

திறன் மற்றும் வேலைவாய்ப்பு

  • பிரதான் மந்திரி கௌஷல் விகாஸ் யோஜனா 4.0 (PMKVY)
  • இந்தத் திட்டத்தால் 1.43 கோடி நபர்களுக்குப் பயிற்சி அளிக்கப்பட்டது, மேலும் இது வேலை வாய்ப்பிற்கான பயிற்சி மற்றும் வளர்ந்து வரும் துறைகளில் புதிய படிப்புகளையும் உள்ளடக்கி உள்ளது.
  • திறன் இந்தியா டிஜிட்டல் தளம்: 2023 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது.
  • இந்தத் தளம் ஒருங்கிணைக்கப்பட்ட பல திறன் மற்றும் வேலைவாய்ப்பு சேவைகளை வழங்குகிறது என்ற நிலையில் 60 லட்சத்திற்கும் அதிகமான கல்வி கற்போர் இத்தளத்தில் பதிவு செய்துள்ளனர்.

  • தேசிய தொழிற்பயிற்சி ஊக்குவிப்புத் திட்டம்: இத்திட்டம் 26.6 லட்சம் பயிற்சியாளர்களைக் கொண்டது (செப்டம்பர் 2023 வரை).

  • கைவினைஞர் பயிற்சித் திட்டம்: 2014-2022 ஆண்டிற்கு இடைப்பட்ட காலத்தில் 1.1 கோடி நபர்களுக்குத் தொழிற்பயிற்சி நிறுவனங்களில் பயிற்சி அளிக்கப் பட்டது.
  • தொழில்முனைவோர் பயிற்சி: ஏப்ரல் 2018 முதல் மார்ச் 2023 வரை 2 லட்சம் பயனாளிகளுக்கு இந்தப் பயிற்சியானது வழங்கப்பட்டது.
  • தொழில்முனைவு மற்றும் நிதி உள்ளடக்கம்
  • பிரதான் மந்திரி முத்ரா யோஜனா (PMMY)
  • இத்திட்டம் 2024 ஆம் ஆண்டு மார்ச்  மாதத்திற்குள் 47.7 கோடி கடன்களை வழங்க உள்ளது, மேலும் குறு/சிறு வணிகங்களுக்கு ₹10 லட்சம் வரை பிணையில்லாத கடன்களையும் இது  வழங்குகிறது.

  • ஜன் சிக்சன் சன்ஸ்தான் (JSS) திட்டம்
  • இத்திட்டம் கல்வியறிவு இல்லாத மற்றும் அடிப்படைக் கல்வியறிவு பெற்றவர்களை மையப் படுத்தி 26.37 இலட்சம் நபர்களுக்கு, திறன் பயிற்சி அளித்துள்ளது.
  • தேசியப் பயிற்சி ஊக்குவிப்பு திட்டம் (NAPS)
  • இந்தத் திட்டத்தின் மூலம் 32.38 லட்சம் பயிற்சியாளர்களை ஈடுபடுத்தி, 2024 ஆம் ஆண்டிற்குள் பெண்களின் பங்கேற்பை 20.77% ஆக உயர்த்தியது.

  • தொழில் முனைவோர் பயிற்சி
  • NIESBUD மற்றும் IIE ஆகியவை 4.64 லட்சத்திற்கும் அதிகமான பயனாளிகளுக்குப் பயிற்சி அளித்து, பிரதான் மந்திரி வன் தன் யோஜனா போன்ற திட்டங்களுக்கு ஆதரவளித்துள்ளன.

டிஜிட்டல் மற்றும் சர்வதேச முயற்சிகள்

  • நிறுவனக் கூட்டாண்மைகள்
  • NSDC திட்டங்கள் மற்றும் தொழில்துறை ஒத்துழைப்புகள் 21.5 லட்சத்திற்கும் அதிகமான நபர்களுக்குப் பயிற்சி அளித்தன, இதில் முன்னணித் தொழில்நுட்பங்கள் நிறுவனங்கள் உடனான கூட்டாண்மையும் அடங்கும்.
  • PM விஸ்வகர்மா திட்டம்
  • இத்திட்டம் 2023 ஆம் ஆண்டு செப்டம்பர்  மாதத்தில் பாரம்பரியக் கைவினைஞர்களுக்கு திறன் பயிற்சி, கடன் மற்றும் சந்தைப்படுத்துதல் உதவிகளை வழங்குவதற்காக தொடங்கப்பட்டது என்ற நிலையில் 2024 ஆம் ஆண்டு மே மாதத்திற்குள் 4.37 லட்சம் விண்ணப்பதாரர்கள் இதில் பயனடைவார்கள் என எதிர்பார்க்கப் படுகிறது.

அடிப்படை வசதிகள்

  • ஸ்வச் பாரத் மிஷன் (கிராமின்): 11 கோடி கழிப்பறைகள் மற்றும் 2.3 லட்சம் சமூகக் கழிப்பறை வளாகங்கள் (ஜனவரி 2024 வரை) கட்டப் பட்டுள்ளன.

  • ஜல் ஜீவன் மிஷன்: 10.8 கோடி குடும்பங்களுக்கு குழாய் நீர் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன (ஜனவரி 2024 வரை).

  • PM-AWAS (நகர்ப்புற மற்றும் கிராமின்): கடந்த ஒன்பது ஆண்டுகளில் நகர்ப்புறங்கள் மற்றும் கிராமப்புறங்களில் முறையே 79 லட்சம் மற்றும் 2.5 கோடி வீடுகள் கட்டப்பட்டுள்ளன.

  • பிரதம மந்திரி உஜ்வாலா யோஜனா: 2016 ஆம் ஆண்டு முதல், இதுவரையில் 10 கோடி கேஸ் சிலிண்டர் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன.

  • சௌபாக்யா திட்டம்: 21.4 கோடி கிராமப்புறக் குடும்பங்களுக்கு மின்சார இணைப்பு வழங்கப் பட்டுள்ளன (மார்ச் 2019 நிலவரப் படி).

  • பொது மக்கள் சேவை மையங்கள்: கிராமப்புறங்களில் இதுவரையில் 4.5 லட்சம் மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது (நவம்பர் 2023 நிலவரப் படி).

சமூகப் பாதுகாப்பு

  • பிரதம மந்திரி ஜன் தன் யோஜனா: இதன் மூலம் இது வரையில் 51.4 கோடி கணக்குகள் தொடங்கப் பட்டுள்ளன (ஜனவரி 2024 வரை).

  • பிரதம மந்திரி ஜீவன் ஜோதி யோஜனா மற்றும் பிரதம மந்திரி சுரக்சா பீமா யோஜனா:
  • பிரதம மந்திரி ஜீவன் ஜோதி யோஜனா மற்றும் பிரதம மந்திரி சுரக்சா பீமா யோஜனா திட்டங்கள் முறையே 18.5 கோடி மற்றும் 41 கோடி பதிவுகள் இது வரையில் பதிவு செய்யப் பட்டுள்ளன (நவம்பர் 2023 நிலவரப்படி).

  • அடல் பென்ஷன் யோஜனா: நிதியாண்டு 2015ல் 20.7 லட்சமாக இருந்த மொத்த சந்தாதாரர்கள் எண்ணிக்கை, 6.1 கோடியாக உயர்ந்துள்ளது (டிசம்பர் 2023 நிலவரப்படி).

  • பிரதம மந்திரி ஷ்ரம் யோகி மந்தன் யோஜனா: இந்தத் திட்டத்தில் இதுவரையில் 49.7 லட்சம் அமைப்பு சாரா தொழிலாளர்கள் (டிசம்பர் 2023 வரை) பதிவு செய்யப் பட்டுள்ளனர்.

கோவிட்-19 தொற்றுக்கான பதிலளிப்பு

  • கோவிட்-19 நெருக்கடிக்கு இந்தியாவின் பதில், பாதிக்கப்படக் கூடிய பிரிவினரின் குறிப்பிட்டத் தேவைகளை நிவர்த்தி செய்யவும், உணவுப் பாதுகாப்பை உறுதி செய்யவும், தெருவோர வியாபாரிகளுக்கு கடன் வழங்கவும், வேறு நாடுகளில் இருந்து திரும்பிய புலம் பெயர்ந்தோருக்கு வேலைவாய்ப்பை உறுதி செய்யவும் வரையறை செய்யப் பட்டது.

வெளியுறவுத் துறை செயல்திறன்

  • வர்த்தக வெளிப்படைத் தன்மை: இது கணிசமாக அதிகரித்து, திறமையான வள ஒதுக்கீடு மூலம் பொருளாதார வளர்ச்சிக்குப் பங்களிக்கிறது.
  • சேவைகள் ஏற்றுமதி: நிதியாண்டு 2022-23ல் உலகளாவியச் சேவைகள் ஏற்றுமதியில் இந்தியாவின் பங்கு 4% ஆக உயர்ந்ததன் மூலம், இந்தியா உலகளவில் சேவைகளை ஏற்றுமதி செய்யும் ஏழாவது பெரிய நாடாக மாறியது.
  • நடப்புக் கணக்குப் பற்றாக்குறை: முந்தைய ஆண்டில் 67 பில்லியன் டாலராக (மொத்த உள் நாட்டு உற்பத்தியில் 2%) இருந்து, நிதியாண்டு 2023-24ல் இது 23.2 பில்லியன் டாலராக (மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 0.7%) உள்ளது.

காலநிலை மாற்றம் மற்றும் ஆற்றல் மாற்றங்கள்

  • சூரிய சக்தி திறன்: சூரிய சக்தி திறன் 15.03 ஜிகா வாட் அதிகரிக்கப்பட்டு, 2024 ஆம் ஆண்டு ஏப்ரல்  மாதத்திற்குள் ஒட்டு மொத்தமாக 82.64 ஜிகா வாட்டை எட்டவுள்ளது.
  • கார்பன் கடன் வர்த்தகத் திட்டம்: புதைபடிவ எரிபொருள் அல்லாத எரிசக்தி ஆதாரங்களில் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்துடன், குறைந்த கார்பன் பொருளாதாரத்தை ஊக்குவிக்க என்று இத்திட்டம் தொடங்கப்பட்டது.
  • சமூகத் துறை வளர்ச்சிகள்
  • பெருநிறுவன சமூகப் பொறுப்பு (CSR): பெருநிறுவனச் சமூகப் பொறுப்பு செலவுகள் மிகவும் அதிகரித்துள்ளன என்பதோடு கடந்த மூன்று ஆண்டுகளில் ஆண்டுக்கானச் செலவு ₹25,000 கோடியை எட்டியுள்ளது.
  • உயர்கல்வி: நிதியாண்டு 2021-2022ல் மொத்த மாணவர் சேர்க்கை கிட்டத்தட்ட 4.33 கோடியாக உயர்ந்துள்ளது என்பதோடு பெண்களின் சேர்க்கையும் கணிசமாக அதிகரித்துள்ளது.
  • தொழிலாளர் குறியீடுகள் மற்றும் சமூகப் பாதுகாப்பு
  • சமூக பாதுகாப்பு பலன்கள் இப்போது ஜிக் மற்றும் கடைநிலை தொழிலாளர்களுக்கு நீட்டிக்கப் பட்டுள்ளது.
  • மாநிலங்களுக்கு இடையேயான புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு சமூகப் பாதுகாப்பு வழங்க எளிமைப் படுத்தப்பட்ட வரையறை செய்யப்பட்டுள்ளது.
  • பிரதம மந்திரி தெரு வியாபாரிகளின் ஆத்ம நிர்பர் நிதி (PM SVANidhi) திட்டம்
  • இத்திட்டம் ஜூன் 2020ல் தொடங்கப் பட்டது, தெருவோர வியாபாரிகளுக்குப் பிணையில்லாத கடன்களை வழங்குகிறது, இதன் மூலம் 64 லட்சத்திற்கும் அதிகமான தனிநபர்கள் பயனடைந்து உள்ளார்கள்.
  • இதுவரை 58 லட்சத்துக்கும் மேற்பட்ட தெருவோர வியாபாரிகளுக்கு, 82.3 லட்சம் கடன் வழங்கப் பட்டுள்ளது.

  • ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு திட்டம்
  • இத்திட்டம் 2019ல் தொடங்கப்பட்டு, 2023 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்திற்குள் 124 கோடி பரிவர்த்தனைகளுடன் இந்தியா முழுவதும் எளிமையான வகையில் உணவுப் பாதுகாப்பை நன்கு செயல்படுத்துகிறது.

  • பிரதம மந்திரியின் வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டம் (PMEGP)
  • இத்திட்டம் 2018-2024 ஆண்டு முதல் 37.46 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பை உருவாக்கி, விவசாயம் சார் துறை அல்லாத புதிய அலகுகளை அமைப்பதில் தொழில்முனைவோரை நன்கு ஆதரிக்கிறது.

  • தீன்தயாள் அந்த்யோதயா யோஜனா - தேசிய நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் (DAY-NULM)
  • 2018-2024 காலக்கட்டம் முதல் 5.48 லட்சம் வேட்பாளர்களுக்கு சுய வேலைவாய்ப்பு மற்றும் திறமைக்கேற்ப ஊதிய வேலை வாய்ப்புகளை வழங்குவதன் மூலம், நகர்ப்புற ஏழைகளின் வறுமை, மற்றும் அவர்களுக்கு ஏற்படும் பாதிப்பைக் குறைக்கிறது.

  • ஸ்டாண்ட் அப் இந்தியா
  • பெண் தொழில்முனைவோருக்கு 84% உடன், 2.1 லட்சம் கடன்கள் இதுவரை வழங்கப்பட்டுள்ளன.
  • பட்டியலிடப்பட்ட சாதியினர் / பட்டியலிடப்பட்ட பழங்குடியினர் மற்றும் பெண் தொழில் முனைவோருக்கு ₹10 லட்சம் முதல் ₹1 கோடி வரை கடன்களை வழங்குகிறது, 2024 ஆம் ஆண்டு மே மாதத்திற்குள் 2.29 லட்சம் கணக்குகளுக்கு ₹51,724 கோடி மதிப்பிலான கடன்கள் வழங்கப்பட உள்ளன.

  • ஸ்டார்ட் அப் இந்தியா
  • தொழிற்துறை மற்றும் உள்நாட்டு வர்த்தகத்தை மேம்படுத்தச் செய்வதற்கான துறையால் அங்கீகரிக்கப் பட்ட புத்தொழில் நிறுவங்களின் எண்ணிக்கையை 2016 ஆம் ஆண்டில் 300 என்ற அளவிலிருந்து, 2023 ஆம் ஆண்டு டிசம்பரில் 1,17,254 ஆக உயர்த்தி, சுமார் 12.42 லட்சத்திற்கும் அதிகமான வேலைவாய்ப்புகளை உருவாக்கியுள்ளது.

  • முதன்மை நிகழ்ச்சிகள்
  • இந்தியாவில் தயாரிப்போம் (மேக் இன் இந்தியா), டிஜிட்டல் இந்தியா, ஸ்மார்ட் சிட்டி திட்டம் போன்ற பல்வேறு திட்டங்கள் வேலைவாய்ப்பை உருவாக்குவதை ஒரு நோக்கமாகக் கொண்டு உள்ளன.
  • தொழில்: சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் (SMEs)
  • நிதியாண்டு 2021-22ல் சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் உற்பத்தி வெளியீட்டில் 35.4% பங்கினை வகிக்கின்றன.
  • உதயம் பதிவுத் தளம்: இதுவரையில் 4.69 கோடி சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள்கள் 2024 ஆம் ஆண்டு ஜூலை மாதத்திற்குள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

சேவைத் துறையின் செயல்திறன்

  • நிதியாண்டு 2023-24ல் சேவைத் துறையானது கோவிட் தொற்றுநோய்க்குப் பிந்தைய சேவைகள் ஏற்றுமதியில் வலுவான மீட்சியுடன், பொருளாதாரத்திற்கு சுமார் 55% அளவிற்குப் பங்களித்தது.

உள்கட்டமைப்பு துறை மேம்பாடு

  • சாலை இணைப்பை மேம்படுத்துதல்
  • சுங்க சாலைக் கட்டணங்களை டிஜிட்டல்மயமாக்கல்
  • தானியங்கி எண் தகடு அங்கீகாரம் மற்றும் உலகளாவிய ஊடுருவல் செயற்கைக் கோள் அமைப்பைப் பயன்படுத்தி, சுங்கச் சாவடிகளில் காத்திருக்கும் நேரம் 734 வினாடிகளில் இருந்து 47 வினாடிகளாகக் குறைக்கப்பட்டது.
  • வழித்தட வசதிகள் (WSAs)
  • வழித்தட வசதிகளின் எண்ணிக்கை சுமார் 900 ஆகத் திட்டமிடப்பட்டுள்ளது; நிதியாண்டு 2024ல் 322 செயல்படுத்தப் பட்டுள்ளது, மேலும் இதில் 50 செயல்பாட்டு நிலையில் உள்ளது மற்றும் 162 வழித் தட வசதிகள் நிறுவப்பட உள்ளது.
  • நெடுஞ்சாலைப் பராமரிப்புக் கொள்கை
  • சுமார் 37,500 கிமீ நெடுஞ்சாலை வலைப் பின்னல் பராமரிப்பு ஒப்பந்தங்களின் கீழ், மேம்பாடு நீட்டிப்புகளில் நீண்ட கால ஒப்பந்தங்களுடன் செயல்படுத்தப் படுகிறது.
  • நிலையான கட்டுமானம்
  • நிலப்பரப்புத் தளங்களில் இருந்து 13.79 லட்சம் டன் மந்தமான பொருட்களைப் பயன்படுத்தப் படுத்துவது என்ற வகையில் நெடுஞ்சாலை மேம்பாட்டிற்காக நிலையான பொருட்கள் மற்றும் உயர் தொழில்நுட்ப இயந்திரங்களைப் பயன்படுத்துதல்.

பர்வத்மாலா பரியோஜனா

  • இறுதி மைல்கல், மதம் மற்றும் சுற்றுலா இணைப்பை மேம்படுத்த ஆறு கயிறு வழிப் பாதை (ரோப்வே) திட்டங்கள் செயல்படுத்தப் பட்டுள்ளன.
  • கிராமப்புறச் சாலைகளின் மேம்பாடு - பிரதான் மந்திரி கிராம் சதக் யோஜனா (PMGSY).
  • PMGSY-I: இணைக்கப்படாத கிராமப்புறக் குடியிருப்புகளுக்கு அனைத்துக் காலநிலைக்கும் ஏற்ற சாலை இணைப்பு வழங்க 2000 ஆம் ஆண்டு இத்திட்டம் தொடங்கப்பட்டது.
  • PMGSY-II: 50,000 கிமீ தூரத்திற்கு பெரிய கிராமப்புறச் சாலை இணைப்புகளை மேம்படுத்த 2013 ஆம் ஆண்டு இத்திட்டம் தொடங்கப் பட்டது.
  • PMGSY-III: சந்தைகள், பள்ளிகள் மற்றும் மருத்துவமனைகளுக்கு குடியிருப்புகளை இணைக்கும் 1,25,000 கிமீ பாதைகளை ஒருங்கிணைப்பதற்காக 2019 ஆம் ஆண்டு இத்திட்டம் தொடங்கப் பட்டது.

தொழில்துறை வழித்தடத்தின் வளர்ச்சி

  • தேசிய தொழில்துறை வழித்தடத் திட்டம்
  • பல மாதிரி வழித்தட இணைப்பு மற்றும் எதிர்காலத்தில் தொழிற்துறைக்குப் பங்காற்றக் கூடிய நகரங்கள் டெல்லி-மும்பை மற்றும் சென்னை-பெங்களூரு வழித்தடங்கள் உட்பட 11 தொழில் துறை வழித்தடங்கள் உருவாக்கப் பட்டுள்ளன.

  • நில ஒதுக்கீடு
  • 308 நில மனைகள் (1,789 ஏக்கர்) ஒதுக்கப்பட்டு, 2,104 ஏக்கர் வளர்ந்துள்ள தொழில்துறை நில அமைப்பு மற்றும் 2024 மார்ச் மாதத்திற்குள் 2,250 ஏக்கர் வணிக நிலம் / குடியிருப்பு நிலம் ஒதுக்குவதற்குத் தயாராக உள்ளது.
  • ரயில்வே மேம்பாட்டு முயற்சிகள்
  • அம்ரித் பாரத் ரயில் நிலையத் திட்டம்: வசதிகளை மேம்படுத்துதல், கட்டிட மேம்பாடுகள், பல்வேறு மாதிரிகள் ஒருங்கிணைப்பு மற்றும் நிலைத் தன்மை ஆகியவற்றின் மூலம் 1,324 ரயில் நிலையங்களைத் தொடர்ந்து மேம்படுத்துவதற்காக இந்தத் திட்டம் ஆகஸ்ட் 2023ல் தொடங்கப் பட்டது.

  • மும்பை-அகமதாபாத் அதிவேக ரயில் திட்டம்: ஜப்பானின் ஒத்துழைப்புடன் 508 கிலோ மீட்டருக்கு மும்பை-அகமதாபாத் அதிவேக ரயில் திட்டம் 2024 ஆம் ஆண்டு மார்ச் 31 ஆம் தேதிக்குள் 41.7% கட்டுமானச் செயல்பாடு மற்றும் ₹59,291 கோடி செலவில்,  திட்டமிடப் பட்டு உள்ளது.
  • கதி சக்தி பல்-வகை  சரக்குகள் ஏற்றும் முனையம்: மார்ச் 31, 2024 நிலவரப்படி, இரயில்வே அல்லாத நிலத்தில், மேலும் 186 இடங்களுக்கு அனுமதியுடன் 77 கதி சக்தி பல்-வகை  சரக்குகள் ஏற்றும் முனையங்கள் செயல்படுத்தப் பட்டுள்ளன.

  • மின்மயமாக்கல் திட்டம்: 2019-24 முதல் ஆண்டுக்குச் சராசரியாக 5,594 கிமீ பாதையைக் கொண்டு மின்மயமாக்கப்பட்ட வலையமைப்பை 63,456 கிமீ (96.4%) ஆக விரிவுபடுத்தியது.

துறைமுக முயற்சிகள்

  • முக்கியத் துறைமுக நிறுவனங்கள் சட்டம், 2021: பரவலாக்கம் மற்றும் வாங்கும் திறன் சம நிலை (PPP) மாதிரிகள் மூலம் துறைமுகச் செயல்திறனை மேம்படுத்துகிறது.
  • 'ஹரித் சாகர்' வழிகாட்டுதல்கள்: பசுமைத் துறைமுகங்களை ஊக்குவித்தல், மேலும் நான்கு பெரியத் துறைமுகங்கள் ஏற்கனவே அவற்றின் தேவையை விட புதுப்பிக்கத்தக்க ஆற்றலை உருவாக்குகின்றன.
  • 'சாகர் அங்காளன்' தரப்படுத்தல்: பிப்ரவரி 2024ல் இந்தியத் துறைமுகத்தின் செயல்திறனைக் குறிக்கும் வகையில் வெளியிடப்பட்டது.
  • தேசிய கடல்சார் பாரம்பரிய வளாகம்: லோதலில் அமைக்கப்பட்டுள்ள இந்த வளாகமானது இந்தியாவின் கடல்சார் வரலாற்றை எடுத்துக் காட்டுகிறது.
  • வாதவன் துறைமுகத் திட்டம்: மகாராஷ்டிராவில் அனைத்து காலநிலைக்கு ஏற்ற பசுமையான ஆழமான வரைவு துறைமுகத்திற்கான ₹76,220 கோடி திட்டத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது, ஆண்டுக்கு 298 மில்லியன் மெட்ரிக் டன் கொள்ளளவு சேர்க்கப்பட்டுள்ளது.

புதுப்பிக்கப்பட்ட விநியோகத் துறை திட்டம் (RDSS)

  • குறிக்கோள்: முடிவுற்ற - இணைக்கப்பட்ட நிதி உதவியுடன் விநியோக நிறுவனங்களின் செயல் பாட்டுத் திறன் மற்றும் நிதி நிலைத் தன்மையை மேம்படுத்துதல்.
  • செலவு: நிதியாண்டு 2022 முதல் நிதியாண்டு 2026 வரை ₹3.04 லட்சம் கோடி, இதில் அரசின் ஆதரவாக ₹0.98 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
  • இலக்குகள்: நிதியாண்டு 2025க்குள் தொழில்நுட்ப மற்றும் வணிக இழப்புகளை 12-15% ஆகக் குறைத்து, செலவு-வருவாய் இடைவெளியைக் குறைப்பது இதன் இலக்காகும்.

  • உஜாலா திட்டம் - தெரு விளக்கு
  • துவக்கம்: 2015, வழக்கமான தெரு விளக்குகளை ஸ்மார்ட் LED விளக்குகளாக மாற்றுதல்.

  • தாக்கம்: சுமார் 1.31 கோடி LED தெரு விளக்குகள் நிறுவப் பட்டு, ஆண்டுக்கு 8.80 பில்லியன் kWh சேமிக்கப் படுகிறது என்ற நிலையில் இது ஆண்டுக்கு சுமார் 6.06 மில்லியன் டன்கள் CO2 வெளியேற்றத்தைக் குறைக்கிறது.

-------------------------------------

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்