பொருளாதார ஆய்வறிக்கை 2024/2025 - பகுதி 02
(For English version to this please click here)
- விலைகள் மற்றும் பணவீக்கம்: மாறுபாடுகளைப் புரிந்து கொள்ளுதல்
- உலகளாவிய பணவீக்கப் போக்குகள்:
- உலகளாவியப் பணவீக்கம் 2022 ஆம் ஆண்டு 8.7% என்ற அளவிலிருந்து, 2024 ஆம் ஆண்டில் 5.7% ஆக குறைந்துள்ளது (IMF).
- இந்தியாவின் பணவீக்கம்:
- இந்தியாவில் சில்லறைப் பணவீக்கம் 2024 ஆம் நிதியாண்டில் 5.4% என்ற அளவிலிருந்து, 2025 ஆம் நிதியாண்டில் 4.9% ஆகக் குறைந்துள்ளது (ஏப்ரல் - டிசம்பர் 2024).
- பணவீக்க இலக்கு:
- RBI மற்றும் IMF ஆனது இந்தியாவின் நுகர்வோர் விலை பணவீக்கம், 2026 ஆம் நிதியாண்டிற்குள் 4% இலக்குடன் படிப்படியாக சீரமையும் என்று கணித்துள்ளது.
- தட்பவெப்ப நிலையைத் தாங்கும் வேளாண்மை:
- தட்பவெப்ப நிலையைத் தாங்கும் பயிர் வகைகளின் மேம்பாடு மற்றும் மேம்படுத்தப்பட்ட விவசாய நடைமுறைகள் தீவிர வானிலை விளைவுகளைத் தணிக்கவும், நீண்ட கால விலை நிலைத் தன்மையை உறுதி செய்யவும் முக்கியமாகும்.
- நடுத்தர காலக் கண்ணோட்டம்: கட்டுப்பாட்டு நீக்கம் வளர்ச்சியை உந்துகிறது
- புவி-பொருளாதாரத் துண்டாடுதல் (GEF):
- வரலாறு காணாத பொருளாதாரச் சவால்கள் மற்றும் வாய்ப்புகளுக்கு மத்தியில் இந்தியா மாற்றத்தைச் சந்தித்து வருகிறது.
- GEF உலகமயமாக்கலை மாற்றுகிறது, மேலும் இது பொருளாதார மறுசீரமைப்புகளுக்கு வழி வகுக்கிறது.
- விக்சித் பாரத் 2047 ஆம் ஆண்டிற்கான வளர்ச்சி இலக்கு:
- 2047 ஆம் ஆண்டிற்குள் "விக்சித் பாரத்" (வளர்ச்சியடைந்த இந்தியா) என்ற பார்வையை அடைய, 10 முதல் 20 ஆண்டுகளுக்குச் சராசரியாக 8% வளர்ச்சி விகிதம் இந்தியாவிற்குத் தேவைப் படுகிறது.
- உலகளாவிய மெய்மைகள்:
- இடைக் கால வளர்ச்சிக் கண்ணோட்டமானது GEF, சீனாவின் உற்பத்தி வலிமை மற்றும் ஆற்றல் மாற்றத்திற்கு சீனாவை நம்பியிருப்பது போன்ற புதிய உலகளாவிய மெய்மைகளைக் கருத்தில் கொள்ள வேண்டும்.
- கட்டுப்பாடு நீக்கம் மற்றும் பொருளாதாரச் சுதந்திரம்:
- இந்தியா உள்நாட்டு வளர்ச்சியை உந்துவதற்கு, முறையான கட்டுப்பாடுகளை நீக்குவதில் கவனம் செலுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
- இடைக் கால வளர்ச்சியை மேம்படுத்துவதற்கான ஒரு முக்கியக் கொள்கை முன்னுரிமையாக முறையான கட்டுப்பாடு நீக்கம் பார்க்கப் படுகிறது.
- வணிகம் செய்வதை எளிதாக்குவதில் கவனம் செலுத்துதல் 2.0:
- சீர்திருத்தங்கள் மூலம் வணிகம் செய்வதை எளிதாக்குவதை மேம்படுத்துதல் மற்றும் மிகவும் சாத்தியமான மிட்டல்ஸ்டாண்டை (MSME துறை) உருவாக்குவதில் கவனம் செலுத்தப்படுகிறது.
- மாநில அளவிலான சீர்திருத்தங்கள்:
- தரநிலைகளை தாராளமயமாக்கவும், கட்டணங்களைக் குறைக்கவும், இடர் அடிப்படையிலான விதிமுறைகளைப் பயன்படுத்துதல் மற்றும் அமலாக்கத்திற்கான சட்டப் பாதுகாப்புகளை நிறுவச் செய்தல் ஆகியவற்றிற்காக மாநிலங்கள் ஊக்குவிக்கப் படுகின்றன.
- முதலீடு மற்றும் உள்கட்டமைப்பு: அதனைத் தொடர்ந்து செயல்படுத்துதல்
- உள்கட்டமைப்புக்கான பொதுச் செலவு: பொது உள்கட்டமைப்புச் செலவினங்களை அதிகரிப்பதிலும், வளங்களைத் திரட்டுவதிலும் கவனம் செலுத்துகிறது.
- மூலதனச் செலவு வளர்ச்சி: 2020 ஆம் நிதியாண்டு முதல் 2024 ஆம் நிதியாண்டு வரை உள்கட்டமைப்புக்கான மூலதனச் செலவில் 38.8% வளர்ச்சி.
- ரயில்வே வலையமைப்பு விரிவாக்கம்: 2031 கிமீ வரைக்கும் ரயில்வே வலையமைப்பு இயக்கப் பட்டது (2024 ஆம் ஆண்டு ஏப்ரல் - நவம்பர்), 17 புதிய இணை வந்தே பாரத் ரயில்கள் அறிமுகப்படுத்தப் பட்டன.
- சாலை வலையமைப்பு விரிவாக்கம்: 2024 ஆம் நிதியாண்டில் (ஏப்ரல் - டிசம்பர்) 5853 கிமீ வரை தேசிய நெடுஞ்சாலைகள் அமைக்கப் பட்டன.
- தொழில்துறை வழித்தட மேம்பாடு: தேசியத் தொழில்துறை தாழ்வாரத் திட்டத்தின் கீழ் 3788 ஏக்கர் பரப்பளவில், 383 மனைகள் முதல் கட்டத்திற்காக ஒதுக்கப் பட்டது.
- துறைமுக செயல்திறன்: கொள்கலன் கரைக்குத் திரும்பும் நேரம் 48.1 மணி நேரத்திலிருந்து 30.4 மணி நேரமாகக் குறைக்கப் பட்டது (2025 ஆம் நிதியாண்டு, ஏப்ரல் – நவம்பர்).
- புதுப்பிக்கத்தக்க ஆற்றல் வளர்ச்சி: சூரிய மற்றும் காற்றாலை ஆற்றல் திறனில் 15.8% அதிகரிப்பு, புதுப்பிக்கத்தக்க ஆற்றல் மொத்த நிறுவப்பட்ட திறனில் 47% ஆகும்.
- கிராமப்புற மின்சாரம்: 18,374 கிராமங்கள் மின்மயமாக்கப் பட்டுள்ளன, 2.9 கோடி வீடுகளுக்கு மின்சாரம் வழங்கப்பட்டுள்ளது.
- எண்ம இணைப்பு: 2024 ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்திற்குள், அனைத்து மாநிலங்களிலும் 5G இணைப்பு நிறைவடைந்தது, 2024 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்திற்குள் 10,700+ கிராமங்கள் 4G மூலம் இணைக்கப் பட்டுள்ளது.
- நீர் அணுகல்: ஜல் ஜீவன் இயக்கத்தின் கீழ், 12 கோடி குடும்பங்கள் குழாய் மூலம் குடிநீர் பெற்றுள்ளனர்.
- ஸ்வச் பாரத் திட்டம்: இரண்டாம் கட்டத்தில் (2024 ஆம் ஆண்டு ஏப்ரல் – நவம்பர்) 1.92 லட்சம் கிராமங்கள் திறந்தவெளி கழிப்பிடமற்ற (ODF) பிளஸ் என அறிவிக்கப் பட்டது.
- வீட்டு வசதி முயற்சிகள்: பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா (PMAY) திட்டத்தின் கீழ், 89 லட்சம் வீடுகள் கட்டி முடிக்கப் பட்டுள்ளன.
- நகர்ப்புற போக்குவரத்து: மெட்ரோ மற்றும் விரைவு ரயில் அமைப்புகள் 29 நகரங்களில் 1,000 கி.மீ.க்கு மேல் விரிவுபடுத்தப் பட்டுள்ளன.
- நிலமனைத் துறை ஒழுங்குமுறை: 1.38 லட்சம் நிலமனைத் திட்டங்கள் பதிவு செய்யப்பட்டு 1.38 லட்சம் புகார்கள் தீர்க்கப் பட்டுள்ளன.
- விண்வெளித் துறை: ககன்யான் மற்றும் சந்திரயான் - 4 திட்டங்கள் உட்பட, 56 செயலில் உள்ள விண்வெளிச் சொத்துக்களை இந்தியா இயக்குகிறது.
- பொது - தனியார் ஒத்துழைப்பு: தேசிய உள்கட்டமைப்பு தொடர் திட்டம் மற்றும் பணமாக்கல் தொடர் திட்டம் ஆகியவற்றில் தனியார் துறை பங்கேற்பை வளர்க்கிறது.
- தொழில்: வணிக சீர்திருத்தங்கள் பற்றிய அனைத்தும்
- தொழில்துறை துறை வளர்ச்சி: மின்சாரம் மற்றும் கட்டுமானம் சார்ந்த நிதியாண்டில், 6.2% வளர்ச்சி எதிர்பார்க்கப் படுகிறது.
- திறன் உற்பத்தி மற்றும் தொழில்துறை 4.0: சம்ரத் உத்யோக் மையங்கள் மூலம் ஊக்குவிக்கப் படுகிறது.
- தானியங்கு சாதனங்கள் துறை வளர்ச்சி: 2024 ஆம் நிதியாண்டில் உள்நாட்டுத் தானியங்கு சாதனங்களின் விற்பனை 12.5% அதிகரித்துள்ளது.
- மின்சாதனங்களின் உற்பத்தி: 99% திறன்பேசிகள் உள்நாட்டில் தயாரிக்கப் படுகின்றன, மின்னணு உற்பத்தியில், கூட்டு வருடாந்திர வளர்ச்சி விகிதம் (CAGR) 17.5% (2015 ஆம் நிதியாண்டு முதல் 2024 ஆம் நிதியாண்டு வரை).
- மருந்தகத் துறை: 2024 ஆம் நிதியாண்டில் ₹4.17 லட்சம் கோடிக்கு விற்பனை செய்து, கடந்த ஐந்து ஆண்டுகளில் CAGR விகிதத்தில், 10.1% வளர்ந்துள்ளது.
- காப்புரிமை தாக்கல்: காப்புரிமை தாக்கல் செய்வதில் இந்தியா உலகளவில், 6வது இடத்தில் உள்ளது (WIPO அறிக்கை 2022).
- MSME வளர்ச்சி: முக்கியப் பொருளாதாரத்தை செயல்படுத்தக் கூடிய, தற்சார்புடைய இந்தியா நிதி மூலம் சமத்துவ நிதிக்காக ₹50,000 கோடியை வழங்குகிறது.
- தொகுப்பு மேம்பாடு: நாடு முழுவதும் MSME தொகுப்பு மேம்பாட்டுத் திட்டத்தை அரசு செயல்படுத்துகிறது.
- சேவைகள்:
- சேவைகள் துறையில் வளர்ச்சி: மொத்த மதிப்பு கூடுதல் (GVA) பங்களிப்பு 2014 ஆம் நிதியாண்டில் 50.6% ஆக இருந்து, 2025 ஆம் நிதியாண்டில் 55.3% ஆக அதிகரித்துள்ளது.
- சேவைகள் ஏற்றுமதியில் உலகளாவியப் பங்கு: 2023 ஆம் ஆண்டில் உலகளாவியச் சேவைகள் ஏற்றுமதியில் 4.3% பெற்று இந்தியா 7வது இடத்தில் உள்ளது.
- தகவல் மற்றும் கணினி சேவைகள்: கடந்த பத்தாண்டுகளில் 12.8% வளர்ச்சியடைந்துள்ளது, GVA பங்கு 6.3% என்ற அளவிலிலிருந்து, 10.9% ஆக அதிகரித்துள்ளது.
- ரயில்வே துறை வளர்ச்சி: பயணிகள் போக்குவரத்தில் 8% அதிகரிப்பு மற்றும் சரக்கு வருவாயில் 5.2% வளர்ச்சி (2024 ஆம் நிதியாண்டு).
- சுற்றுலாத் துறை: GDPக்கான பங்களிப்பு 2023 ஆம் நிதியாண்டில், தொற்றுநோய்க்கு முந்தைய அளவில் 5% ஆகத் திரும்பியுள்ளது.
- வேளாண்மை மற்றும் உணவு மேலாண்மை: எதிர்காலத் துறை
- மொத்த உள்நாட்டு உற்பத்தியில் வேளாண்மையின் பங்களிப்பு: 2024 ஆம் நிதியாண்டில், GDPக்கு 16% பங்களித்தது.
- அதிக மதிப்புள்ள வேளாண்மையில் வளர்ச்சி: தோட்டக் கலை, கால்நடை வளர்ப்பு மற்றும் மீன்வளம் ஆகியவை முக்கிய வளர்ச்சி காரணிகள் ஆகும்.

- காரீஃப் உணவு தானிய உற்பத்தி: கடந்த ஆண்டை விட 89.37 LMT அதிகரித்து, 1647.05 LMT என்ற அளவை எட்டும் என எதிர்பார்க்கப் படுகிறது.
- குறைந்தபட்ச ஆதரவு விலை (MSP): 2025 ஆம் நிதியாண்டில், துவரம் பருப்பு மற்றும் கம்பிற்கான MSP முறையே 59% மற்றும் 77% அதிகரித்துள்ளது.
- மீன்பிடித்தல் மற்றும் கால்நடை வளர்ச்சி: மீன்வளத் துறையில் CAGR 8.7% ஆகவும், கால்நடைகளில் 8% ஆகவும் வளர்ந்துள்ளது.
- உணவுப் பாதுகாப்பு நடவடிக்கைகள்: PMGKAY திட்டத்தின் கீழ், இன்னும் ஐந்து ஆண்டுகளுக்கு இலவச உணவு தானியங்களைத் தொடர்ந்து வழங்க உள்ளது.
- உழவர் நலத் திட்டங்கள்: PM-KISAN திட்டத்தின் மூலம், 11 கோடி விவசாயிகள் பயனடைந்துள்ளனர், 23.61 லட்சம் பேர் பிரதான் மந்திரி கிசான் யோஜனா திட்டத்தின் கீழ் பதிவு செய்துள்ளனர்.
- பருவநிலை மற்றும் சுற்றுச்சூழல்: செயல்படுத்தும் முறைகள்
- நிலையான வளர்ச்சிக்கான இந்தியாவின் லட்சியம்: 2047 ஆம் ஆண்டிற்குள் ஒரு வளர்ந்த நாடாக மாறுவதற்கான குறிக்கோள் மற்றும் நிலைத் தன்மையில் வேரூன்றி உள்ளது.
- புதைபடிவமற்ற எரிபொருள் மின் உற்பத்தி: 2024 ஆம் ஆண்டு நவம்பர் மாதத்திற்குள் (213,701 மெகாவாட்) புதைபடிவமற்ற எரிபொருள் மூலங்களிலிருந்து மொத்தமாக நிறுவப்பட்ட திறனில் 46.8% பெறப் பட்டது.
- வன கார்பன் உறிஞ்சு அமைப்புகள்: இந்தியா கூடுதலாக 2.29 பில்லியன் டன்கள் CO2க்கு சமமான கார்பன் உறிஞ்சு அமைப்புகளை (2005-2024) உருவாக்கியுள்ளது.
- சுற்றுச்சூழலுக்கான வாழ்க்கை முறை (LiFE): இந்தியா உலகளாவிய வாழ்க்கை இயக்கத்தை வழி நடத்துகிறது, சூழல் நட்பு வாழ்க்கை முறையை ஊக்குவிக்கிறது.
- LiFE தாக்கம்: உலகளவில் சுமார் 440 பில்லியன் அமெரிக்க டாலர்களை, குறைந்த நுகர்வு மற்றும் குறைந்த விலைகள் மூலம் 2030 ஆம் ஆண்டுக்குள் சேமிக்க முடியும்.
- சமூகத் துறை: பரவல் நீட்டிப்பு மற்றும் அதிகாரமளித்தல்
- சமூக சேவைகள் செலவு: 2021 ஆம் நிதியாண்டிலிருந்து 2025 ஆம் நிதியாண்டு வரை அரசாங்கச் செலவு CAGR விகிதத்தில் 15% வளர்ந்துள்ளது.
- குறைந்து வரும் வருமான சமத்துவமின்மை: கிராமப்புறங்களில் கினி குணகம் 0.266 என்ற அளவிலிருந்து 0.237 ஆகவும், நகர்ப்புறங்களில் 0.314 என்ற அளவிலிருந்து 0.284 ஆகவும் (2022 - 2024) குறைந்துள்ளது.
- அரசாங்க சுகாதாரச் செலவு: அரசாங்கப் பங்கு 29% என்ற அளவிலிருந்து 48% ஆக அதிகரித்தது, மேலும் செலவீனம் 62.6% என்ற அளவில்இருந்து 39.4% ஆகக் குறைக்கப் பட்டது.
- ஆயுஷ்மான் பாரத் PM-JAY: மருத்துவச் செலவுகளில் ₹1.25 லட்சம் கோடி சேமிப்புக்கு வழி வகுத்தது.
- SDG இலக்குகளின் உள்ளூர்மயமாக்கல்: கிராமப் பஞ்சாயத்து மட்டத்தில் பட்ஜெட்டானது SDG நோக்கங்களுடன் ஒத்துப் போகிறது.
- வேலைவாய்ப்பு மற்றும் திறன் மேம்பாடு: இருத்தலுக்கான முன்னுரிமைகள்
- தொழிலாளர் சந்தை மேம்பாடு: 2017-18 ஆம் ஆண்டில் 6.0% ஆக இருந்த வேலையின்மை விகிதம், 2023-24 ஆம் ஆண்டில் 3.2% ஆக குறைந்துள்ளது.
- இந்தியாவின் மக்கள்தொகை நன்மை: இந்தியாவின் மக்கள்தொகையில் 26%, 10 முதல் 24 வயதுக்குட்பட்டவர்கள் என்பதோடு, இது உலகளவில் இளையோர்கள் கொண்ட நாடுகளில் ஒன்றாக உள்ளது.
- பெண்களின் தொழில்முனைவு: அரசாங்க முன்னெடுப்புகள் பெண் தொழில்முனைவோருக்கு கடன் அணுகல், சந்தைப்படுத்துதல், திறன் மேம்பாடு மற்றும் தொடக்க உதவி ஆகியவற்றிற்கு உதவுகின்றன.
- வளர்ந்து வரும் வேலை வாய்ப்புகள்: எண்மப் பொருளாதாரம் மற்றும் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் போன்ற வளர்ந்து வரும் துறைகள் குறிப்பிடத்தக்க வேலைவாய்ப்பை உருவாக்கும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.
- திறமையான பணியாளர் மேம்பாடு: தானியங்கிகள், செயற்கை நுண்ணறிவு, எண்ம மயமாக்கல் மற்றும் பருவநிலை மாற்றம் போன்ற போக்குகளுக்கு ஏற்ப திறமையான பணியாளர்களை அரசாங்கம் உருவாக்கி வருகிறது.
- பிரதம மந்திரி ஊக்கத் தொகை திட்டம்: வேலைவாய்ப்பை உருவாக்குவதற்கான மாற்றங்களை உருவாக்கும் திட்டம்.
- முறையான வேலைவாய்ப்பு வளர்ச்சி: EPFO அமைப்பின் கீழ் நிகர ஊதியச் சேர்த்தலானது, கடந்த ஆறு ஆண்டுகளில் இரண்டு மடங்காக அதிகரித்துள்ளது, இது முறையான வேலை வாய்ப்பின் வளர்ச்சியைக் குறிக்கிறது.
- AI சகாப்தத்தில் தொழிலாளர்:
- பணியாளர்கள் மீது AI தொழில்நுட்பத்தின் தாக்கம்: சுகாதாரம், கல்வி மற்றும் வணிகம் போன்ற துறைகளில் முடிவெடுப்பதில் AI தொழில்நுட்பம் மனிதச் செயல்திறனை மிஞ்சும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.
- AI செயல்படுத்தலுக்கான தடைகள்: சவால்களில் நம்பகத்தன்மை, திறமையின்மை மற்றும் உள்கட்டமைப்புப் பற்றாக்குறைகள் ஆகியவை அடங்கும், இது கொள்கை வகுப்பாளர்களுக்கு ஒரு தளத்தை வழங்குகிறது.
- இந்தியாவின் வாய்ப்புக்கான தளம்: இந்தியாவிற்கு AI தொழில்நுட்பத்தின் எதிர்காலத் தாக்கத்திற்கான அடித்தளங்களை உருவாக்குவதற்கும், நிறுவனங்களின் பதிலை உருவாக்கச் செய்வதற்கும் இது சரியான காலமாகும்.
- மேம்பட்ட நுண்ணறிவு: எதிர்கால வேலைத் திறன் மற்றும் திறனை மேம்படுத்த இயந்திர நுண்ணறிவுடன், மனித திறன்களை ஒருங்கிணைக்கிறது.
- AI ஒருங்கிணைப்புக்கான ஒத்துழைப்பு: AI தொழில்நுட்ப மாற்றங்களின் மீதான பாதகமான விளைவுகளைக் குறைக்க அரசு, தனியார் துறை மற்றும் கல்வியாளர்கள் ஒத்துழைக்க வேண்டும்.
- நேர்மறை வளர்ச்சிக் கண்ணோட்டம்
- 2026 ஆம் நிதியாண்டில் இந்தியாவின் பொருளாதாரம் 6.3% மற்றும் 6.8% இடையே எதிர்பார்க்கப் படும் வளர்ச்சியுடன் சாதகமான பாதையில் உள்ளது, இது உலகளாவியச் சவால்களுக்கு மத்தியிலும் மீள்தன்மையைக் குறிக்கிறது.
- கட்டமைப்பு சீர்திருத்தங்களின் தாக்கம்
- உள்கட்டமைப்பு, தொழில்துறை மற்றும் டிஜிட்டல் சேவைகள் போன்ற முக்கியத் துறைகளில் கட்டமைப்பு சீர்திருத்தங்கள், நிலையான நீண்ட கால வளர்ச்சியை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.
- வளர்ச்சிக்கான அர்ப்பணிப்பு
- சமூகச் சேவைகள், விவசாயம் மற்றும் திறன் மேம்பாடு ஆகியவற்றில் முன்னெடுப்புகளுடன் உள்ளடக்கிய வளர்ச்சியில் அரசாங்கத்தின் கவனம், உலகளாவியப் பொருளாதாரத் தலைவராக இந்தியாவின் நிலையை வலுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
- உலகளாவிய நிச்சயமற்றத் தன்மையை வழி நடத்துகிறது
- உலகளாவியப் பொருளாதார மாற்றங்களுக்கு மத்தியில் இந்தியாவின் மீள்தன்மை உத்தி சார்ந்தது, கட்டுப்பாடுகள் நீக்கம் மற்றும் எளிதாக வணிகம் செய்வதல் ஆகியவை வளர்ந்து வரும் உலகளாவிய நிலப்பரப்பில் வாய்ப்புகளைப் பயன்படுத்துவதற்கு மிக முக்கியமானதாக இருக்கும்.
- 'விக்சித் பாரத்' பாதை
- தொடர்ச்சியான சீர்திருத்தங்கள், உத்தி சார்ந்த முதலீடுகள் மற்றும் தொழில்நுட்பத்தால் உந்தப்பட்ட வளர்ச்சியில் கவனம் செலுத்துவதன் மூலம், இந்தியா 2047 ஆம் ஆண்டிற்குள் வளர்ந்த நாடாக மாறுவதற்கான தனது குறிக்கோளை அடையும் பாதையில் உள்ளது.
-------------------------------------