TNPSC Thervupettagam

மணியம்மை பெரியார்

April 5 , 2019 2060 days 5480 0
  • மணியம்மை 1920 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 10 ஆம் நாள் வேலூரில் பிறந்தார். இவரின் இயற்பெயர் காந்திமதியாகும்.
  • அவரது தந்தை கனக சபையின் நண்பரும், தனித்தமிழ் ஆர்வலருமான கு.மு.அண்ணல் தங்கோ காந்திமதிக்கு ‘அரசியல் மணி’ என்னும் பெயரைச் சூட்டினார்.
  • இவர் 1944-ல் சேலத்தில் திராவிடர் கழகம் எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்ட நீதிக் கட்சியின் உறுப்பினராவார்.
  • இவர் தனது குழந்தைப் பருவத்தில் இருந்தே சுயமரியாதை இயக்கத்தின் மாணவராக இருந்தார். மேலும் பெரியாரின் மீது தீவிர பற்றுள்ளவராகவும் இருந்தார்.
  • அடுத்த சில ஆண்டுகளில் பெரியாரின் மிக நம்பகத் தன்மை வாய்ந்த தொண்டராகவும் வளர்ந்தார்.
  • பெரியாரின் சுற்றுப் பயணங்களில் மணியம்மையும் அவருடன் சென்று அவரின் நலம் பேணுபவராக இருந்தார்.
  • 1946-ல் ‘விடுதலை’ இதழின் அச்சிடுபவர் மற்றும் வெளியிடுபவராக மணியம்மை, பெரியாரால் நியமிக்கப்பட்டார்.
  • இவர் சமஸ்தானங்கள் தொடங்கி சித்தர் பாடல்கள் வரையிலான பலவற்றைக் குறித்து கட்டுரைகள் எழுதியுள்ளார்.
  • இவரின் ‘கந்தபுராணமும் இராமயணமும் ஒன்றே’ எனும் கட்டுரையின் முதல் பகுதி 1944 ஆம் ஆண்டிலும் அதன் இரண்டாம் பகுதி குடியரசு இதழில் 1947 ஆம் ஆண்டிலும் வெளி வந்தது.
  • 1948-ம் ஆண்டில் நடந்த இந்தி எதிர்ப்புப் போராட்டத்துக்கு அரசு தடை விதித்த போதிலும், அதை மீறிப் போராடிய மணியம்மை கும்பகோணத்தில் கைது செய்யப்பட்டார்.
  • நீதிமன்றத்தில் ‘உங்கள் மதம் என்ன?’ என்ற நீதிபதியின் கேள்விக்கு ‘`எனக்கு மதம் கிடையாது” என்றும் “உங்கள் சாதி என்ன?” என்ற கேள்விக்கு “திராவிடச் சாதி” என்றும் பதிலளித்து, சிறைத்தண்டனை விதிக்கப்பட்டார்.
  • பிராமணாள் கபேவுக்கு எதிரான போராட்டத்திலும் கலந்து கொண்டு கைதானார்.

  • இந்த அமைப்பின் மீதான அவரது கடும் நம்பிக்கையும் பொறுப்புமே மணியம்மையைப் பெரியாரின் சட்டப்பூர்வ வாரிசாக பெரியாரை முடிவெக்க வழிவகுத்தது.
  • 1949 ஆம் ஆண்டில் இருவருக்கும் திருமணமாகாத நிலையில் மணியம்மையை தனது அரசியல் வாரிசாக பெரியார் அறிவித்தார். மேலும் கட்சி அறக்கட்டளையின் நிதி நிர்வாகத்தையும் அவர் கவனிப்பார் எனவும் பெரியார் அறிவித்தார்.

  • 1949 ஆம் ஆண்டில் பெரியார் மற்றும் மணியம்மை ஆகியோர் பதிவுத் திருமணம் செய்துக் கொண்டனர். வயது வித்தியாசத்தின் காரணமாக கட்சியின் பல உறுப்பினர்கள் இத்திருமணத்தை எதிர்த்தனர்.
  • அந்தக் காலகட்டத்தில் பெண் குழந்தைகளுக்குச் சொத்துரிமை கிடையாது என்பதால் மணியம்மையைத் தத்து எடுத்துச் சொத்துகளுக்கு வாரிசு ஆக்க முடியாது. எனவே சட்ட நிர்பந்தத்தின் அடிப்படையில் பெரியார் மணியம்மையைத் திருமணம் செய்துகொண்டார்.
  • ‘இது சட்ட ஏற்பாடு தானே தவிர, வழக்கமான நடைமுறையில் உள்ள பொருளின்படியான திருமணம் அல்ல. மணியம்மை வாழ்நாள் அடிமையும் அல்ல’ என்றார் பெரியார்.
  • ஏற்கெனவே கறுப்புச்சட்டை அணிவது, சுதந்திர நாள் துக்க நாளா, இன்பநாளா என்னும் முரண்பாடு, தேர்தல் அரசியலில் ஆர்வம் ஆகியவற்றால் பெரியாருடன் முரண்பட்ட அண்ணா, மணியம்மை திருமணத்தை முன்னிட்டு திராவிடர் கழகத்திலிருந்து வெளியேறினார்.
  • அதன் பின்னர் அண்ணா 1949 ஆம் செப்டம்பர்  17 ஆம் தேதியில் சென்னை ராயபுரத்தில் உள்ள ராபின்சன் பூங்காவில்  தி.மு.க-வை உருவாக்கினார்.
  • 1967-ல் பம்பாயில் சிவசேனாவால் தமிழர்கள் தாக்கப்பட்டபோது, பெரியார் சிவசேனை எதிர்ப்புக் குழு ஒன்றை உருவாக்கினார். அதில் மணியம்மையும் ஓர் உறுப்பினராக இருந்தார்.
  • பெரியாரின் மரணத்திற்குப் பிறகு திராவிடர் கழகத்தின் தலைவரான மணியம்மை தனது மறைவுக் காலம் வரை (1978) ஐந்து ஆண்டுகளுக்கு அப்பதவியில் இருந்தார்.
  • இவரை தமிழ்நாட்டின் முதல் பெண் அரசியல் தலைவர் என பலரும் கருதுகின்றனர்.
  • காங்கிரஸ் அல்லது திமுக கட்சிகளுக்கு பல உறுப்பினர்கள் மாற எண்ணிக் கொண்டிருக்கும் வேளையில் இவர் மாநிலம் முழுவதும் கட்சியை ஒருங்கிணைக்கும் பொருட்டு சுற்றுப் பயணம் மேற்கொண்டார்.
  • பெரும்பாலான பொதுமக்களிடம் இருந்தும் முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியிடமிருந்தும் எதிர்மறையான விமர்சனங்களை எதிர்கொண்ட ‘ராவண லீலா’ எனும் நாடகத்திற்கு 1974 ஆம் ஆண்டு இவர் தலைமை தாங்கினார்.
  • 1977 ஆம் ஆண்டு அக்டோபர் 30 அன்று முன்னாள் பிரதமர் இந்திரா காந்திக்கு கருப்புக் கொடி காட்டியதால் கைது செய்யப்பட்டு ஆறு மாதங்கள் சிறையிலடைக்கப்பட்டார்.
  • பெரியாரின் நலத்திட்ட பணிகளை மேற்கொள்வதில் மணியம்மையும் மிகப்பெரிய பங்கினைக் கொண்டிருந்தார்.
  • ஏழைப் பெண்கள் மற்றும் ஆதரவற்ற சிறுமிகளுக்காக இல்லமொன்றை பெரியார் தொடங்கினார். அதனைப் பெரியார் பின்னர் மணியம்மையிடம் ஒப்படைத்தார். இந்நாள் வரை அவர் தொடங்கிய அறக்கட்டளையானது மாநிலம் முழுவதும் 40-க்கும் மேற்பட்ட இல்லங்களை நடத்தி வருகிறது.
  • தனது மறைவிற்கு முன்னதாக மணியம்மை ஒரு அறக்கட்டளையைத் துவங்கி கல்வி நடவடிக்கைகளுக்காக தனது சொந்த சொத்துக்கள் அனைத்தையும் அந்த அறக்கட்டளைக்கு மாற்றினார்.
  • 1974-ல் தொடங்கப் பட்ட இந்த அறக்கட்டளையானது பெரும்பாலும் பெண்களுக்காகவென்று 40 கல்வி நிறுவனங்களை நடத்தி வருகிறது.
  • 20 ஆண்டுகள் மணியம்மையை விட மூத்தவராக இருந்த போதிலும் பாரதிதாசன் இவரை அன்னை (அம்மா) என்றே குறிப்பிட்டுள்ளார்.
  • பகுத்தறிவு இயக்கமான திராவிடர் கழகத்தின் ஒரே பெண் தலைவரான இவரின் பிறந்தநாளை முன்னிட்டு மார்ச் 10-ம் நாள் தமிழ்நாடு முழுவதும் திராவிடர் கழக மகளிரணி சார்பாக சனாதன தர்ம எதிர்ப்பு போராட்டமான மனுதர்ம சாத்திரத்தை எரிக்கும் நிகழ்வு 10 இடங்களில் நடைபெற்றது.
  • ஈரோட்டில் இருந்த பெரியாரின் இல்லத்தை நினைவு இல்லமாக மாற்றுவதற்காக அப்போதைய கருணாநிதி தலைமையிலான திமுக அரசுக்கு மணியம்மை அந்த இல்லத்தைக் கொடுத்தார். அதற்கு ‘தந்தை பெரியார் - அண்ணா நினைவகம்’ என பெயர் சூட்டப் பட்டது.
  • அண்ணாவின் தளபதியான கருணாநிதிக்கு 1975 ஆம் ஆண்டு செப்டம்பர் 21 ஆம் தேதியன்று சென்னை அண்ணா சாலையில் ஒரு சிலை மணியம்மையால் திறந்து வைக்கப் பட்டது.
  • உலகின் மிகப்பெரிய நாத்திக இயக்கத்தினை தலைமையேற்று வழி நடத்தியவர் மணியம்மை ஆவார்.
  • அவர் 1978 ஆம் ஆண்டு மார்ச் 16 ஆம் நாள் காலமானார்.
  • இவரையடுத்து கி. வீரமணி திராவிடர் கழகத்தின் தலைவரானார்.
  • வரலாற்றுச் சிறப்பு மிக்க இந்த பெண்மணியின் நூற்றாண்டு பிறந்த நாள் விழாக் கொண்டாட்டம் இவ்வாண்டு துவங்குகின்றது.

  • தமிழ்நாடு அரசானது ஏழை பெற்றோர்கள் தங்களது மகளுக்கு திருமணம் செய்து வைக்கவும் ஏழைச் சிறுமிகளின் கல்வி நிலையை மேம்படுத்தவும் 1981-1982 ஆம் ஆண்டில் ஈ.வெ.ரா மணியம்மை நினைவு ஏழை கைம்பெண்களின் குழந்தைகளுக்கு திருமண உதவி திட்டத்தினை அறிவித்தது.

- - - - - - - - - - - - - - -

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்