TNPSC Thervupettagam

மதிய உணவு திட்டம் - பகுதி 1

September 15 , 2023 471 days 10761 0

(For English version to this please click here)

தமிழ் நாட்டின் மதிய உணவு திட்டம்

  • இந்தியாவிலேயே மதிய உணவு திட்டத்தை (MDMS) அறிமுகப்படுத்திய முதல் மாநிலம் தமிழ்நாடு ஆகும்.
  • சூடான சமைத்த உணவு மூலம் பள்ளிக்குச் செல்லும் குழந்தைகளின் ஊட்டச்சத்து அளவை மேம்படுத்துவதற்கான உலகின் மிகப்பெரிய முயற்சிகளில் MDMS ஒன்றாகும்.
  • இது உலகின் மிகப்பெரிய பள்ளி உணவுத் திட்டமாகும்.
  • இது அரசுப் பள்ளிகளில் 1 முதல் 8 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களை உள்ளடக்கியது.

பின்னணி

  • 1920 ஆம் ஆண்டு, உலகின் முதல் மதிய உணவுத் திட்டமானது சென்னையில் தொடங்கப் பட்டது.
  • சென்னை ஆயிரம் விளக்குப் பகுதியில் உள்ள மாநகராட்சிப் பள்ளி மாணவர்களுக்கு காலை உணவினை வழங்குவதற்கான ஒரு முன்மொழிவுக்கு மதராஸ் மாநகராட்சி மன்றமானது ஒப்புதல் அளித்துள்ளது.
  • அப்போது, ​​பள்ளியில் 165 மாணவர்கள் மட்டுமே இருந்தனர்.
  • இது ஒரு மாணவருக்கு ஒரு நாளைக்கு ஒரு அணாவுக்கு மிகாத செலவில் வழங்கப் பட்டது.
  • அன்றைய மாநகராட்சித் தலைவரும், நீதிக்கட்சியின் முக்கியத்தலைவர்களில் ஒருவருமான தியாகராயச் செட்டியார் அவர்கள் அப்பள்ளியில் படிக்கும் சிறுவர்கள் மிகவும் ஏழ்மையானவர்கள் என்று குறிப்பிட்டுள்ளார்.
  • இத்திட்டமானது பின்னர் மேலும் நான்கு பள்ளிகளுக்கு விரிவுபடுத்தப்பட்டதால் மாணவர்களின் அதிகச் சேர்க்கைக்கு வழிவகுத்தது.
  • ஐந்து பள்ளிகளிலும் மாணவர் சேர்க்கை எண்ணிக்கையானது 1922-23 ஆம் ஆண்டில் 811 ஆக இருந்ததிலிருந்து 1924-25 ஆம் ஆண்டில் 1,671 ஆக உயர்ந்து வியத்தகு முன்னேற்றத்தைக் காட்டியது.
  • இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, 25 பள்ளிகளைச் சேர்ந்த சுமார் 1,000 ஏழை மாணவர்கள் பயன்பெறும் வகையில் இது புதுப்பிக்கப் பட்டது.

முன்னாள் முதல்வர் கே.காமராஜரின் செயல்திட்டம்

  • 1954 ஆம் ஆண்டு கே. காமராஜர் முதலமைச்சராக பதவியேற்ற பிறகு கல்வித் துறையில் சில முயற்சிகளுக்கு வழிவகுத்தார்.
  • இந்தக் கருத்தானது  1956 ஆம் ஆண்டு மாநிலம் முழுவதும் பெரும்பயன்பாட்டைக் கண்டது.
  • தமது மாநிலம் முழுவதும் உள்ள அனைத்துத் தொடக்கப் பள்ளிகளிலும் ஏழைக் குழந்தைகளுக்கு இலவச மதிய உணவு வழங்க அப்போதைய முதல்வர் கே.காமராஜர் முடிவு செய்தார்.
  • இது கவிஞர் மற்றும் சுதந்திரப் போராட்ட வீரரான சுப்பிரமணிய பாரதியின் பிறந்த ஊரான எட்டயபுரத்தில் (தற்போது தூத்துக்குடி மாவட்டத்தின் ஒரு பகுதி) தொடங்கப் பட்டது.
  • 1956-57 ஆம் ஆண்டு பட்ஜெட்டில் பள்ளி மாணவர்களுக்கு ஆண்டுக்கு 200 நாட்களுக்கு மதிய உணவு வழங்குவதற்கான ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
  • இது முதற்கட்டமாக 1,300 சத்துணவு மையங்களில் உள்ள 65,000 மாணவர்களை உள்ளடக்கியதாக தொடங்கப்பட்டது.

இத்திட்டத்தின் நோக்கங்கள்

  • இது இந்தியாவில் மிகவும் பின்தங்கிய சமூகங்களைச் சேர்ந்த குழந்தைகளை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • இது குறிப்பாக பெண்கள், "தீண்டத்தகாதவர்கள்" மற்றும் பழங்குடிச் சமூகங்கள் போன்றோர்களுக்குப் பயனளிக்கும் வகையில் உள்ளது.
  • இந்தச் சமூகத்தைச் சேர்ந்த குழந்தைகளுக்கு கல்விக்கான அணுகலை வழங்கச் செய்வதற்கான யோசனையின் மூலமாக இது இருக்கின்றது.
  • இது உணவின் மூலம் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதோடு, அவர்களின் ஆயுட்காலம் மற்றும் வாழ்க்கைத் தரம் சிறப்பாக இருக்கும்.
  • இலவச மற்றும் கட்டாயப் பள்ளிக் கல்வி மூலம் இந்தத் திட்டமானது கல்வியை ஊக்குவிக்கும்.
  • குழந்தைகளிடையே கல்வியறிவு மற்றும் ஊட்டச்சத்து விகிதங்கள் இரண்டையும் மேம்படுத்துவதற்கு மதிய உணவு திட்டமானது மிகவும் வெற்றிகரமான ஒரு அணுகு முறையாக உள்ளது.

  • உலகிலேயே குழந்தைகளின் ஊட்டச்சத்து குறைபாடு விகிதம் அதிகமாக உள்ள நாடுகளில் ஒன்றாக இருந்தது.
  • இந்தியாவில் 3 வயதுக்குட்பட்ட குழந்தைகளில் 46% பேர் ஊட்டச்சத்து குறைபாட்டால் பாதிக்கப் பட்டுள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது.
  • மேலும், பின்தங்கிய சாதி சமூகங்களைச் சேர்ந்த குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து குறைபாடு அதிகமாக இருப்பதாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

பெண்களுக்கு கல்வி அளித்து தேசத்தைக் கட்டமைத்தல்

  • இது பள்ளி செல்லாத பெண்களுக்கு உணவு, புத்தகங்கள், சீருடைகள், பள்ளி கட்டணம் மற்றும் பிற கல்வி தொடர்பான செலவுகளை வழங்குகிறது.
  • கல்வியை அணுகுவதற்குத் தேவையான கருவிகளை பெண் குழந்தைகளுக்கு வழங்குவதன் மூலம் அவர்களின் வாழ்க்கை மாற்றப்பட்டு அவர்களின் எதிர்காலம் மேம்படுத்தப்படும்.

இலவச மற்றும் கட்டாய கல்வி

  • அன்றைய கல்வி முறையில், மாணவர்கள் ஒரு நாளைக்கு 3 மணி நேரம் மட்டுமே இரண்டு அமர்வுகளில் படித்தனர்: அதில் ஒன்று வகுப்பறையிலும் மற்றும் இரண்டாவது வீட்டில் அவர்கள் பெற்றோரின் தொழிலைக் கற்றுக் கொள்வதாகவும் இருந்தது.
  • இது பரம்பரை கல்விக் கொள்கை என்று அழைக்கப்பட்ட நிலையில் இதில் ஆண்கள் தங்கள் தந்தையின் தொழில்களைக் கற்றுக் கொள்வார்கள் மற்றும் பெண்கள் தங்கள் தாயிடமிருந்து வீட்டு வேலைகளைக் கற்றுக் கொள்வார்கள்.
  • இந்த "கல்வி முறை" பள்ளிக் கல்வியின் நோக்கங்களை அடையத் தவறியதால் பெரும் எதிர்ப்பைச் சந்தித்தது.
  • குறிப்பாக, வகுப்பறையில் சமத்துவத்தை அதிகளவில் உருவாக்குவதற்கான நிலையில் பெரும் பின்னடைவை ஏற்படுத்த இது உதவியது.

சுகாதாரம் மற்றும் கல்வியை மேம்படுத்துதல்

  • மதிய உணவு திட்டம் அமல்படுத்தப்பட்டவுடன், தங்கள் மகன்கள் மற்றும் மகள்கள் இலவச சத்தான உணவினைப் பெறுவதில் பெற்றோர்கள் மிகவும் ஆர்வமாகி அவர்களை பள்ளிக்கு அனுப்பத் தொடங்கினர்.
  • குழந்தைகள் வகுப்பறைகளில் தங்கள் எதிர்காலத்தின் அடித்தளத்தை உருவாக்க பல்வேறு பின்னணியில் இருந்து வரும் சகாக்களுடன் சேர்ந்து கல்வி கற்றுக் கொண்டனர்.
  • ஆனால் புத்தகங்கள் அல்லது சீருடைகள் போன்ற பள்ளி தொடர்பான செலவுகளை அவர்களது குடும்பத்தினரால் ஏற்க முடியாததால் மில்லியன் கணக்கான பெண்கள் இன்னும் பள்ளிக்குச் செல்ல விடாமல் தடுக்கப்படுகின்றனர்.
  • இது உணவு, புத்தகங்கள், சீருடைகள், பள்ளிக் கட்டணம் மற்றும் கல்வி தொடர்பான பிற செலவுகளை ஈடுகட்டுவதன் மூலம் ஆயிரக்கணக்கான பெண்களின் கல்விக்கு ஆதரவளிக்கிறது.
  • ஏனெனில் கல்வி என்பது மக்களின் ஒரு அடிப்படை உரிமையாகும்.

புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். சத்துணவுத் திட்டம்

  • கல்வி ஒரு சமூகத்தின் வளர்ச்சிக்கு அடித்தளமாக அமைகிறது என்ற நிலையில் பசி கற்றலுக்குத் தடையாக உள்ளது.
  • இந்த தொலைநோக்குப் பார்வையோடு அன்றைய முதல்வர் புரட்சித் தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர் அவர்களால் சத்துணவு திட்டமானது 01.07.1982 அன்று திருச்சி மாவட்டத்திலுள்ள பாப்பாக்குறிச்சி கிராமத்தில் அறிமுகப்படுத்தப் பட்டது.
  • இந்தத் திட்டத்தின் கீழ், அரசுப் பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள், சிறப்புப் பயிற்சி மையங்கள், மதராசாக்கள், சர்வ சிக்சா அபியான் கீழ் ஆதரிக்கப் படும் மக்தாப்கள் மற்றும் தேசியக் குழந்தைத் தொழிலாளர் திட்டத்தின் கீழ் செயல்படும் சிறப்புப் பள்ளிகளில் உள்ள குழந்தைகளுக்கு இலவசமாக சமைத்த சத்தான உணவு வழங்கப்படுகிறது.

இந்தத் திட்டத்தின் நோக்கங்கள்

  • குழந்தைகளிடையே ஊட்டச்சத்துக் குறைபாட்டை குறைத்து அவர்களின் கல்வியறிவு விகிதத்தை அதிகரித்தல்.
  • தொடக்கக் கல்வியை உலகளாவியமயமாக்கும் நோக்கில் மாணவர் சேர்க்கையை அதிகரிப்பதோடு, பள்ளி இடைநிற்றலைக் குறைத்தல்.
  • போதிய உணவளிக்கப் பெறாத மற்றும் குறைவான ஊட்டச்சத்துள்ள குழந்தைகளுக்கு ஊட்டச்சத்தினை வழங்குதல்.
  • பின்தங்கிய பின்னணியில் உள்ள குழந்தைகளைத் தவறாமல் பள்ளிக்குச் செல்ல ஊக்குவிப்பதோடு முறையான கல்வியைப் பெற அவர்களுக்கு உதவுதல்.
  • வேலை வாய்ப்புகளை வழங்குவதன் மூலம் பெண்களுக்கு அதிகாரமளித்தல்.

சத்துணவுத் திட்டத்தின் மைல்கற்கள்

  • அங்கன்வாடியில் 2 முதல் 5 வயது வரையிலான குழந்தைகளுக்கும், தொடக்கப் பள்ளிகளில் 5 முதல் 9 வயது வரையிலான குழந்தைகளுக்கும் 01.07.1982 அன்று சத்துணவுத் திட்டமானது அறிமுகப்படுத்தப்பட்டது.
  • இத்திட்டம் 15.09.1982 அன்று முதல் நகர்ப்புறங்களுக்கும் விரிவுபடுத்தப்பட்டதோடு, மேலும் 15.09.1984 அன்று முதல் 10-15 வயதுக்குட்பட்ட அனைத்துக் குழந்தைகளுக்கும் விரிவுபடுத்தப்பட்டது.

திட்டத்தின் முக்கிய அம்சங்கள்

  • 5-9 வயதுக்குட்பட்ட ஆரம்பப் பள்ளிக் குழந்தைகளுக்கும், 10-15 வயதுக்குட்பட்ட மேல்நிலைப் பள்ளிக் குழந்தைகளுக்கும் சூடான சமைத்த சத்தான உணவுகள் வழங்கப் படுகின்றன.
  • ஒரு வருடத்தில் மொத்தம் 210 நாட்களுக்கு என்று ஒரு வாரத்தில் ஐந்து நாட்கள் பள்ளியில் உணவு வழங்கப்படும்.
  • காஞ்சிபுரம், வேலூர், திருவண்ணாமலை, நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம், கோயம்புத்தூர், ஈரோடு, திருப்பூர், திருச்சிராப்பள்ளி, திண்டுக்கல், விருதுநகர், திருநெல்வேலி, தூத்துக்குடி ஆகிய 16 மாவட்டங்களில் உள்ள தேசிய குழந்தைத் தொழிலாளர் திட்டச் சிறப்புப் பள்ளிகளில் குழந்தைகள் சேர்ந்துள்ளனர்.
  • சென்னையிலுள்ள பள்ளிகளில் ஆண்டுக்கு 312 நாட்களுக்கு சூடான சமைத்த சத்தான உணவுகள் வழங்கப்படுகின்றன.

  • தொடக்கப் பள்ளிக் குழந்தைகளுக்கு (1 ஆம் வகுப்பு முதல் 5 ஆம் வகுப்பு வரை) பள்ளியில் நாள் ஒன்றுக்கு ஒரு குழந்தைக்கு 100 கிராம் என்ற அளவிலும் மற்றும் மேல்நிலைப் பள்ளி மற்றும் உயர்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு (6 ஆம் வகுப்பு முதல் 10 ஆம் வகுப்பு வரை) 150 கிராம் என்ற அளவிலும் உணவு தானியங்கள் (அரிசி உணவானது) வழங்கப்படும்.
  • 1982 ஆம் ஆண்டு 6.3 மில்லியன் ஏழைக் குழந்தைகள் பயனடைவார்கள் என்று மதிப்பிடப் பட்டது.
  • இது தற்போது செயல்பாட்டிலுள்ளதோடு மேம்படுத்தப்பட்டும் வருகிறது.

தமிழக அரசு மேற்கொண்ட முயற்சிகள்

  • குறுகிய கால திமுக ஆட்சியில் (1989-91) முதலமைச்சராக இருந்த திரு. மு. கருணாநிதி, 1989 ஆம் ஆண்டு ஜூன் மாதத்திலிருந்து  பதினைந்து நாட்களுக்கு ஒருமுறை வேகவைத்த முட்டையினை வழங்கும் முறையை இதில் அறிமுகப் படுத்தினார்.
  • செல்வி. ஜெயலலிதா அவர்கள் முதலமைச்சராக இருந்தபோது (2011-16), 2013 ஆம் ஆண்டு உணவுப் பட்டியலில் குழந்தைகளின் விருப்பப்படி மசாலா முட்டைகளுடன் பல்வேறு உணவுகள் சேர்க்கப்பட்டன.

-------------------------------------

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்