TNPSC Thervupettagam

மதிய உணவு திட்டம் - பகுதி 2

September 17 , 2023 481 days 1001 0

(For English version to this please click here)

தொடக்கக் கல்விக்கான தேசிய ஊட்டச்சத்து ஆதரவுத் திட்டம் (NP-NSPE) (மதிய உணவுத் திட்டம்)

  • இது பொதுவாக மதிய உணவுத் திட்டம் என்று அழைக்கப்படுகிறது.
  • 1995 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15 அன்று இந்திய அரசானது தொடக்கக் கல்விக்கான தேசிய சத்துணவு திட்டத்தினைத் தொடங்கியது.
  • இத்திட்டமானது ஆரம்பக் கட்டத்தில் பயிலும் குழந்தைகளுக்கு மதிய உணவினை வழங்கும்.
  • இத்திட்டம் 1920 ஆம் ஆண்டு முதன்முதலில் தமிழகத்தில் தொடங்கப்பட்டது.
  • 1930 ஆம் ஆண்டு முதல் பிரெஞ்சு நிர்வாகத்தின் கீழ் உள்ள யூனியன் பிரதேசமான புதுச்சேரியில் மதிய உணவுத் திட்டமானது செயல்படுத்தப்பட்டு வருகிறது.
  • 1980 ஆண்டின் நடுப்பகுதியில், இத்திட்டமானது கேரளா, குஜராத் மற்றும் பாண்டிச்சேரிக்கு விரிவுபடுத்தப்பட்டது.
  • 2001 ஆம் ஆண்டில், இந்திய உச்ச நீதிமன்றமானது அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளிகளிலும் சமைத்த மதிய உணவினை வழங்குமாறு அனைத்து மாநில அரசுகளுக்கும் உத்தரவிட்டது.
  • இது 2007 ஆம் ஆண்டில் பொருளாதாரத்தில் பின்தங்கிய 3,479 தொகுதிகளில் (EBBs) உள்ள உயர்நிலைப் பள்ளி  (6 முதல் VIII வகுப்பு வரை) குழந்தைகளுக்கும் விரிவுபடுத்தப் பட்டது.
  • பின்னர் இது 2008 ஆம் ஆண்டு உலகளாவிய அளவில் தொடக்கநிலைப் பள்ளிகளில் விரிவுபடுத்தப்பட்டது.

நோக்கங்கள்

  • வகுப்பறை பசியிலிருந்து குழந்தைகளைப் பாதுகாத்தல்.
  • பள்ளி மாணவர்களின் சேர்க்கை மற்றும் வருகையை அதிகரித்தல்.
  • கல்வி மற்றும் ஊட்டச்சத்தில் பாலின இடைவெளியைக் குறைத்தல்.
  • அனைத்துச் சாதிகளைச் சேர்ந்த குழந்தைகளிடையே சமூகமயமாக்கலை மேம்படுத்துதல்.
  • குழந்தைகளிடையே ஊட்டச்சத்து குறைபாடு பிரச்சினைகளைத் தீர்த்தல்
  • பெண்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்குவதன் மூலம் பெண்களின் சமூக அதிகாரத்தை மேம்படுத்துதல்.
  • அரசு, உள்ளாட்சி மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும் EGS மற்றும் AIE மையங்களில் I - VIII வகுப்புகளில் உள்ள குழந்தைகளின் ஊட்டச்சத்து நிலையை மேம்படுத்துதல்.
  • விளிம்புநிலை பிரிவைச் சேர்ந்த ஏழைக் குழந்தைகளை அதிக அளவில் முறையாக பள்ளிக்குச் செல்ல ஊக்குவிப்பதோடுவகுப்பறை நடவடிக்கைகளில் பெரும் கவனம் செலுத்த அவர்களுக்கு உதவுதல்.
  • சாதிய பாரபட்சங்களையும் ஏற்றத்தாழ்வுகளையும் நீக்கி குழந்தைகளிடையே சமத்துவத்தை வளர்த்தல்.
  • விவசாயம் மற்றும் அது தொடர்பான இதற் பிற பொருட்களில் கூட்டுறவு நிறுவனங்களின் சந்தைப் படுத்தல் மற்றும் வர்த்தக நடவடிக்கைகளை ஒருங்கிணைத்து மேம்படுத்துதல்.
  • 8 ஆம் வகுப்பிற்குப் பிறகும் மாணவர்கள் தொடர்ந்து படிப்பதை உறுதி செய்தல் வேண்டும்.

பயனாளிகள்

  • பின்வரும் பள்ளிகளில் ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை படிக்கும் குழந்தைகள்
  • அரசு பள்ளிகள்
  • அரசு உதவி பெறும் பள்ளிகள்
  • சிறப்பு பயிற்சி மையங்கள் மற்றும்
  • சர்வ சிக்சா அபியானின் கீழ் ஆதரிக்கப்படும் மதரஸாக்கள் (இரண்டாம் நிலை மதப் பள்ளிகள்) மற்றும் மக்தாப்கள் (தொடக்க மதப் பள்ளிகள்).
  • இது நாடு முழுவதும் உள்ள மாற்று மற்றும் புதுமையான கல்வி மற்றும் தேசிய குழந்தைத் தொழிலாளர் திட்டத்தின் கீழ் இயங்கும் பள்ளிகளில் படிக்கும் குழந்தைகளையும் உள்ளடக்கியது.

செயல்படுத்துதல் மற்றும் நிதி

​​​​​​​

  • இத்திட்டம் மூன்று மாதிரிகள் வடிவில் செயல்படுத்தப்படுகிறது.

சர்வதேச உதவி

  • அரசுப் பள்ளிகளுக்கு உதவும் வகையில் பல சர்வதேச தொண்டு நிறுவனங்கள் உள்ளன.

மையப்படுத்தப்பட்ட மாதிரி

  • உள்ளூர் பகுதியில் ஒரு வெளிப்புற அமைப்பு உள்ளது.
  • இவ்வமைப்பைச் சேர்ந்தவர்கள் உணவைச் சமைத்துப் பள்ளிகளுக்கு வழங்கச் செய்கிறார்கள்.

​​​​​​​

பரவலாக்கப்பட்ட மாதிரி

  • இந்த மாதிரியில், உள்ளூர் சமையல்காரர்கள், சுயஉதவிக் குழுக்கள் மற்றும் பலர் உதவியுடன் இணைந்து இத்தளத்தில் உணவு தயாரிக்கப் படுகிறது.
  • இந்தத் திட்டத்தின் செயல்பாடுகளை மேற்பார்வையிட ஒவ்வொரு மாநிலமும் /யூனியன் பிரதேசங்களும், மாவட்டம் மற்றும் தொகுதி அளவில் மாநில வழிகாட்டுதல் மற்றும் கண்காணிப்புக் குழுக்களை (SSMCs) அமைக்க வேண்டும்.
  • இது மத்திய அரசின் ஒரு நிதியுதவி திட்டமாகும்.
  • எனவே, செலவானது மத்திய அளவில் (60%) மற்றும் மாநிலங்கள் அளவில் (40%) பகிர்ந்து கொள்ளப்படுகிறது.
  • இதற்கான ஒப்புதல் அளிப்பு கல்வித் துறை அமைச்சகம் ஆகும்.

​​​​​​​

செயல்படுத்துவதிலுள்ள முக்கிய சிக்கல்கள்

  • மத்தியப் பிரதேசம் மற்றும் ராஜஸ்தான் போன்ற மாநிலங்களில் உணவு வழங்குவதில் சாதி அடிப்படையிலான பாகுபாடு நிலவுகிறது.
  • பல மாநிலங்களில், உணவு வழங்குவதில் முறைகேடு உள்ளது.
  • பெரும்பாலும் பள்ளிகளுக்கு உணவு தானியங்கள் வழங்குவதில் முறைகேடு நடக்கிறது.
  • ஜார்கண்ட் மற்றும் மணிப்பூர் போன்ற சில மாநிலங்களில், சமூகப் பங்களிப்பு என்பது மிகவும் குறைவாக உள்ளது.
  • பல பள்ளிகளில் வழங்கப்படும் உணவு ஊட்டச்சத்து தரத்தினைப் பூர்த்தி செய்யாமல்  மோசமான சுகாதாரத்தைக் கொண்டுள்ளது.

​​​​​​​

பிற மாநிலங்கள் மேற்கொண்ட முயற்சிகள்

  • ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களைத் தவிர, ஒன்பதாம் மற்றும் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கும் இத்திட்டத்தின் கீழ் பலனடையும் வகையில் ஆந்திர அரசு அதனை விரிவுபடுத்தியுள்ளது.
  • பீகாரில் மாநிலத்தில், சம்பாரண் என்ற ஒரு முயற்சியின் கீழ், சமூகத்தின் பல்வேறு பிரிவுகளைச் சேர்ந்த மக்களால் சாப்பிடுவதற்கு தேவையான எஃகு தட்டுகள் பள்ளிகளுக்கு வழங்கப் பட்டன.
  • சத்தீஸ்கர், கோவா மற்றும் ஹரியானா போன்ற மாநிலங்களின் கிராமப் புறங்களிலுள்ள பள்ளிகளில், சுய உதவிக் குழுக்களைச் சேர்ந்த பெண்கள் மதிய உணவுத் திட்டத்தின் சமையல் வேலையில் ஈடுபட்டுள்ளனர்.
  • குஜராத் அரசானது திதி போஜன் என்ற சமூகப் பங்கேற்பு முயற்சியைப் பின்பற்றுகிறது.
  • பிறந்த நாள் மற்றும் ஆண்டு விழா போன்ற சந்தர்ப்பங்களில் பள்ளி மாணவர்களுக்கு கிராம மக்கள் தாமாக முன்வந்து உணவு வழங்குவதும் இதன் கீழ் உள்ளது.
  • இது ஹரியானா மாநிலத்திலும் பின்பற்றப் படுகிறது.
  • ஸ்னேஹ் போஜன் என்பது மகாராஷ்டிராவில் உள்ள இதே போன்ற ஒரு முயற்சி ஆகும்.
  • சமையலறைத் தோட்டம் என்பது நாடு முழுவதும் உள்ள பல பள்ளிகளில் பயன்படுத்தப் படும் மற்றொரு நடைமுறையாகும்.
  • இத்திட்டத்திற்கு தேவையான காய்கறிகள் பள்ளி தோட்டத்தில் பயிரிடப் படுகிறது.
  • இத்திட்டத்தைச் சிறப்பாக செயல்படுத்த, பல்வேறு பள்ளிகள் சமூகப் பங்களிப்பை ஊக்குவிக்கின்றன.

MDM விதிகள், 2015

  • 2015 ஆம் ஆண்டு செப்டம்பர் 30 அன்று தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டம் (NFSA) 2013 என்ற சட்டத்தின் படி, மதிய உணவுத் திட்டத்தின் விதிகள் 2015 ஆனது வெளியிடப்பட்டது.
  • மதிய உணவுத் திட்டத்தின் கீழ் நிதி தீர்ந்து விட்டால், மதிய உணவிற்காக பிற நிதியைப் பயன்படுத்தப் பள்ளிகளுக்கு அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது.
  • பள்ளிகள் மற்றும் பிற தேவையான அமைப்புகள் குழந்தைகளுக்குச் சமைத்த உணவை வழங்க முடியாத சந்தர்ப்பங்களில் இது பின்பற்றப்படும்.
  • அவர்கள் பயனாளிகளுக்கு உணவுக் கொடுப்பனவுகளை வழங்குகிறார்கள்.
  • உணவின் சீரற்ற மாதாந்திரச் சோதனையானது அங்கீகாரம் பெற்ற ஆய்வகங்களால் கையாளப்பட வேண்டும்.
  • இந்த 2015 ஆம் ஆண்டிற்கான விதிகளின் கீழ், ஏதேனும் ஒரு பள்ளியின் குழந்தைகளுக்குத் தொடர்ச்சியாக 3 பள்ளி நாட்கள் அல்லது ஒரு மாதத்தில் 5 நாட்கள் உணவு கிடைக்கவில்லை என்றால், சம்பந்தப்பட்ட மாநில அரசானது அதற்கான நபர் அல்லது அந்த நிறுவனத்தின் பொறுப்பை உறுதி செய்ய வேண்டும்.

​​​​​​​

MDM 2015 விதிகளின் முக்கிய அம்சங்கள்

  • ஆறு முதல் பதினான்கு வயதுக்குட்பட்ட 1-8 ஆம் வகுப்பிலுள்ள ஒவ்வொரு குழந்தையும் பள்ளி விடுமுறை நாட்களைத் தவிர ஒவ்வொரு நாளும் பின்வரும் வகையில் சமைத்த சத்தான உணவைப் பெறத் தகுதியுடையவர்;

​​​​​​​

  • பள்ளிகள் மதிய உணவினைத் தயாரிப்பதற்காக AGMARK தரமான பொருட்களை மட்டும் வாங்க வேண்டும்.
  • பள்ளி வளாகத்தில் மட்டுமே உணவு வழங்க வேண்டும்.
  • ஒவ்வொரு பள்ளியிலும் மதிய உணவைச் சுகாதாரமான முறையில் சமைக்க சுகாதாரமான சமையல் உள்கட்டமைப்பு இருக்க வேண்டும்.
  • பள்ளி மேலாண்மைக் குழுவானது (SMCs) MDM விதிகளைக் கண்காணிப்பதில் முக்கியப் பங்கு வகிக்கிறது.
  • 2009 ஆம் ஆண்டு இலவச மற்றும் கட்டாயக் கல்விக்கான உரிமைச் சட்டம் அல்லது கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் SMCகள் இதற்கு என்று அமைக்கப் பட்டுள்ளன.
  • தலைமையாசிரியர்கள் அல்லது தலைமையாசிரியைகள் மதிய உணவுத் திட்டத்தில்  நிதிப் பற்றாக்குறை ஏற்பட்டால் பள்ளியின் நிதியினைப் பயன்படுத்த அதிகாரம் பெற்றுள்ளனர்.
  • இருப்பினும், MDM திட்டத்தின் நிதியில் பள்ளிக்கு வரவு வைக்கப் பட்டவுடன், மதிய உணவுத் திட்ட  நிதிக்கு அதைத் திருப்பிச் செலுத்த வேண்டும்.
  • உணவின் ஊட்டச்சத்து மதிப்பு மற்றும் தரத்தை உறுதி செய்வதற்காக மாநில உணவு மற்றும் மருந்து நிர்வாகத் துறையானது மாதிரிகளைச் சேகரிக்கலாம்.

​​​​​​​

நன்மைகள்

வளர்ச்சி குன்றல்

  • 1993-2016 வரையிலான தரவின் அடிப்படையில், இலவச பள்ளி மதிய உணவைப் பெற்ற தாய்மார்கள் பெற்ற குழந்தைகளிடையே குறைந்த வளர்ச்சியானது பெருமளவில் குறைந்து காணப்படுகிறது.
  • வளர்ச்சிக் குன்றல் என்பது, அதாவது வயதுக்கு ஏற்ற உயரம் குறைவாக இருப்பதானது, நீண்ட காலமாக குறைவான ஊட்டச்சத்து உட்கொள்ளல் மற்றும் அடிக்கடி ஏற்படும் தொற்றுகளால் ஏற்படுகிறது.
  • பொதுவாக இரண்டு வயதிற்கு முன்பே வளர்ச்சிக் குன்றல் ஏற்படுவதோடு, மேலும் அதன் விளைவுகள் பெரும்பாலும் மீள முடியாதவை ஆகும்.
  • 2005 ஆம் ஆண்டு இடைநிலைத் திட்டமானது செயல்படுத்தப்பட்ட பகுதிகளில் வளர்ச்சி குன்றிய நிலை கணிசமாகக் குறையத் தொடங்கியது.
  • இத்திட்டத்தின் தாக்கமானது வீணாகுதல் (உயரத்திற்கேற்ற எடையின்மை) மற்றும் வளர்ச்சி குன்றியது (வயதுக்கேற்ற உயரமின்மை) ஆகியவற்றிலும் காணப் பட்டது.
  • ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளின் உயரத்திற்கேற்ற எடையின்மை வீதமானது NFHS-3 இல் 21% என்ற அளவிலிருந்து NFHS-4 இல் 19.8% என்ற அளவாகக் குறைந்துள்ளது.
  • இதேபோல், அதே காலகட்டத்தில் வளர்ச்சி குன்றிய நிலை 48% என்ற அளவிலிருந்து 38.4% என்ற அளவாகக் குறைந்துள்ளது.

​​​​​​​

தலைமுறைகளுக்கு இடையிலான நன்மைகள்

  • இந்தியக் குழந்தைகளில் மூன்றில் ஒன்றுக்கு மேற்பட்டவர்கள் வளர்ச்சி குன்றியவர்கள் அல்லது அவர்களின் வயதைக் காட்டிலும் உயரம் மிகக் குறைவானவர்கள் என்ற வகையில், இது அவர்களின் நாள்பட்ட ஊட்டச்சத்துக் குறைபாட்டைப் பிரதிபலிக்கிறது.
  • வளர்ச்சிக் குன்றிய நிலைக்கு எதிரான போராட்டம் பெரும்பாலும் இளம் குழந்தைகளுக்கு ஊட்டச் சத்தை அதிகரிப்பதில் கவனம் செலுத்துகிறது.
  • ஆனால் ஊட்டச்சத்து நிபுணர்கள் நீண்ட காலமாக தங்கள் சந்ததியினரின் வளர்ச்சி குன்றியதைக் குறைக்க தாய்வழி ஆரோக்கியம் முக்கியம் என்று வாதிடுகின்றனர்.

2020 ஆம் ஆண்டு உலகளாவிய ஊட்டச்சத்து அறிக்கை

  • 2020 ஆம் ஆண்டு உலகளாவிய ஊட்டச்சத்து அறிக்கையின் படி, 2025 ஆம் ஆண்டில் உலகளாவிய ஊட்டச்சத்து இலக்குகளை விட குறைவாக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ள 88 நாடுகளில் இந்தியாவும் ஒன்றாகும்.

ஊட்டச்சத்து நன்மைகள்

  • இத்திட்டத்தின் மூலம் வழங்கப்படும் உணவு, வளரும் குழந்தைகளின் அத்தியாவசிய ஊட்டச்சத்துத் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் வடிவமைக்கப் பட்டுள்ளது.
  • தானியங்கள், பருப்பு வகைகள், காய்கறிகள் மற்றும் சில சமயங்களில் முட்டைகள் உள்ளிட்ட பல்வேறு உணவுப் பொருட்களைச் சேர்ப்பதன் மூலம் அது ஒரு சமச்சீரான உணவை உறுதி செய்கிறது.
  • புரதங்கள், வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் போன்றவற்றைப் போதுமான அளவு உட்கொள்வது உடல் வளர்ச்சி, அறிவாற்றல் வளர்ச்சி மற்றும் நோய் எதிர்ப்புச் சக்திக்கு இன்றியமையாதது.

​​​​​​​​​​​​​​

-------------------------------------

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்