TNPSC Thervupettagam

மத்திய பட்ஜெட் 2024-2025

July 28 , 2024 168 days 1000 0

(For English version to this please click here)

அறிமுகம்:

  • நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் முன்வைத்த மத்திய பட்ஜெட் 2024-25, "அடுத்தத் தலைமுறை சீர்திருத்தங்களை" மையமாகக் கொண்டு இந்தியாவின் பொருளாதார வளர்ச்சிக்கான ஒரு தொலைநோக்குப் பாதையை அமைக்கிறது.
  • இது பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்துதல், உற்பத்தித் திறனை மேம்படுத்துதல் மற்றும் சந்தைச் செயல்திறனை மேம்படுத்துதல் ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • முக்கியச் சீர்திருத்தங்கள் மத்திய மற்றும் மாநிலங்களுக்கு இடையிலான ஒத்துழைப்பை வலியுறுத்தும் நோக்கில் பல்வேறு துறைகளில் பரவியுள்ளன.
  • மேலும் இந்தப் பட்ஜெட் போட்டிக்குரிய கூட்டாட்சியை ஊக்குவிப்பதோடு நீடித்த நிலையான பொருளாதார முன்னேற்றத்தையும் அடைய முயல்கிறது.

முக்கியமாக கவனம் செலுத்த வேண்டிய பகுதிகள்

  • 2024-25 பட்ஜெட் நான்கு முக்கிய குழுக்களின் மீது கவனம் செலுத்துகிறது, அவை: 'கரிப்' (ஏழை), 'யுவா' (இளைஞர்), 'அன்னதாதா' (விவசாயி), மற்றும் 'நாரி' (பெண்கள்).
  • கூடுதலாக, இது முக்கியமான சில பகுதிகளை வலியுறுத்துகிறது: விவசாயம், வேலை வாய்ப்பு மற்றும் திறன், உள்ளடங்கிய மனித வள மேம்பாடு மற்றும் சமூக நீதி, உற்பத்தி மற்றும் சேவைகள், நகர்ப்புற மேம்பாடு, எரிசக்திப் பாதுகாப்பு, உள்கட்டமைப்பு, கண்டுபிடிப்பு, ஆராய்ச்சி & மேம்பாடு மற்றும் அடுத்த தலைமுறைச் சீர்திருத்தங்கள் ஆகியவற்றில் உற்பத்தித் திறன் மற்றும் நெகிழ்வுத்திறத்தை மேம்படுத்துவதாகும்.

1. விவசாயம்

  • மொத்த ஒதுக்கீடு: விவசாயம் மற்றும் அதைச் சார்ந்தத் துறைகளுக்கு ₹1.52 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

புதிய முயற்சிகள்

  • அதிக மகசூல் தரும் ரகங்கள்: 32 வயல்வெளி மற்றும் தோட்டக்கலைப் பயிர்களில் 109 அதிக மகசூல் தரும் மற்றும் காலநிலையை எதிர்க்கும் வகைகளை அறிமுகப்படுத்துவதாகும்.
  • இயற்கை விவசாயம்: அடுத்த இரண்டு ஆண்டுகளில் சுமார் 1 கோடி விவசாயிகளை இயற்கை விவசாயத்தில் ஈடுபடுத்துவது, மேலும் 10,000 என்ற அளவில் தேவை அடிப்படையிலான உயிரி உள்ளீடு ஆராய்ச்சி மையங்களை நிறுவுவதாகும்.
  • டிஜிட்டல் பொது உள்கட்டமைப்பு (DPI): மூன்று ஆண்டுகளுக்குள் மாநிலங்களுடன் இணைந்து விவசாயத்திற்கான டிஜிட்டல் பொது உள்கட்டமைப்பை செயல்படுத்துதல், ஐந்து மாநிலங்களில் ஜன் சமர்த் அடிப்படையிலான கிசான் கடன் அட்டைகளைச் செயல்படுத்துதல்.

2. வேலைவாய்ப்பு மற்றும் திறன்

  • மொத்த ஒதுக்கீடு: கல்வி, வேலைவாய்ப்பு மற்றும் திறன் மேம்பாட்டிற்கு ₹1.48 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
  • வேலைவாய்ப்புத் திட்டங்கள்: ₹2 லட்சம் கோடி செலவில் 4.1 கோடி இளைஞர்கள் பயன்பெறும் வகையில் ஐந்து திட்டங்களை அறிமுகப் படுத்தியுள்ளது.

முக்கிய திட்டங்கள்

  • திட்டம் A: முதல் முறையாக வேலை தேடுபவர்களுக்கு ஒரு மாத சம்பளத்தின் நேரடிப் பலன் பரிமாற்றம், இதில் 210 லட்சம் இளைஞர்கள் பயனடைவார்கள் என எதிர்பார்க்கப் படுகிறது.

  • திட்டம் B: உற்பத்தித் துறையில் வேலை வாய்ப்பு உருவாக்கம், இதன் மூலம் சுமார் 30 லட்சம் இளைஞர்கள் பயனடைவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
  • திட்டம் C: 50 லட்சம் நபர்களின் வேலைவாய்ப்பை ஊக்குவிக்கும் வகையில், பல்வேறு துறைகள் முழுவதும் கூடுதல் பணியாளர்களை உள்ளடக்கிய அதிகாரிகளை மையமாகக் கொண்ட ஒரு திட்டம்.
  • மத்திய நிதியுதவி திறன் திட்டம்: ஐந்து ஆண்டுகளில் 20 லட்சம் இளைஞர்களைத் திறனை மேம்படுத்த மாநிலங்கள் மற்றும் தொழில்துறைகளுடன் இணைந்து செயலாற்றுவதாகும்.

கல்வி

  • உயர்கல்வி கடன்கள்: உயர்கல்விக்காக ₹10 லட்சம் கல்விக்கடன், ஒரு லட்சம் மாணவர்களுக்கு ஆண்டு வட்டி 3% மானியம் ஆகும்.

  • தொழில் பயிற்சி நிறுவனங்களை மேம்படுத்துதல்: 1,000 தொழில் பயிற்சி நிறுவனங்களை மேம்படுத்துதல் மற்றும் ₹7.5 லட்சம் வரையிலான கடன்களை எளிதாக்கும் மாதிரி திறன் கடன் வழங்கும் திட்டத்தைத் திருத்துதல், இதன் மூலம் ஆண்டுதோறும் 25,000 மாணவர்கள் பயன் அடைவார்கள்.

3. மனித வள மேம்பாடு மற்றும் சமூக நீதி

பூர்வோதயா

  • கிழக்கு பிராந்திய மேம்பாடு: மனித வள மேம்பாடு, உள்கட்டமைப்பு மற்றும் பொருளாதார வாய்ப்புகளை மையமாகக் கொண்டு, பீகார், ஜார்க்கண்ட், மேற்கு வங்காளம், ஒடிசா மற்றும் ஆந்திரப் பிரதேசத்தை உள்ளடக்கிய விரிவான வளர்ச்சித் திட்டம் உருவாக்கப்பட்டு உள்ளது.

  • அமிர்தசரஸ் கொல்கத்தா தொழில்துறை வழித்தடம்: கயாவில் தொழில்துறை முனை வளர்ச்சி மற்றும் பல்வேறு சாலை இணைப்புத் திட்டங்களுக்கு மொத்தம் ₹26,000 கோடி கணக்கிடப் பட்டுள்ளது.

ஆந்திர பிரதேச மறுசீரமைப்புச் சட்டம்

  • சிறப்பு நிதி உதவி: நடப்பு நிதியாண்டில் ₹15,000 கோடி என்பதோடு எதிர்காலத்தில் கூடுதல் நிதிக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

  • போலவரம் நீர்ப்பாசனத் திட்டத்தை விரைந்து முடிக்கவும், விசாகப்பட்டினம்-சென்னை மற்றும் ஹைதராபாத்-பெங்களூரு தொழில் வழித்தடங்களில் மிகவும் அத்தியாவசிய உள்கட்டமைப்பு மேம்பாட்டு வசதிகளும் அர்ப்பணிக்கப்பட்டுள்ளது.

பிரதான் மந்திரி ஜன்ஜாதிய உன்னத் கிராம அபியான் திட்டம்

  • பழங்குடியினர் மேம்பாடு: பழங்குடியினர் பெரும்பான்மை கிராமங்கள் மற்றும் ஆர்வமுள்ள மாவட்டங்களில் உள்ள பழங்குடியினரின் சமூகங்களின் சமூக-பொருளாதார நிலையை நன்கு மேம்படுத்துதல்.

4. உற்பத்தி மற்றும் சேவைகள்

சிறு, குறு மற்றும் நடுத்தத்ர தொழில் நிறுவனங்கள்

  • விரிவான தொகுப்பு: சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களுக்கான நிதி, ஒழுங்குமுறை மாற்றங்கள் மற்றும் தொழில்நுட்ப ஆதரவு அளித்தல்.
  • கடன் உத்தரவாதத் திட்டம்: உற்பத்தித் துறையில் சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களுக்கு ₹100 கோடி வரை உத்தரவாதம் அளித்தல்.
  • முத்ரா கடன்: தற்போதைய ₹10 லட்சத்தில் இருந்து ₹20 லட்சமாக உயர்த்தப்பட்ட வரம்பினைக் கொண்டுள்ளது.

  • மின்னணு வர்த்தக வரவுகள் தள்ளுபடி அமைப்பு இயங்குதளம்: கட்டாயத் தளங்களுக்கான கொள்முதல் வரம்பு ₹500 கோடியிலிருந்து ₹250 கோடியாகக் குறைக்கப்படுகிறது.
  • இணைய வணிக ஏற்றுமதி மையங்கள்: சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் மற்றும் பாரம்பரிய கைவினைஞர்களை சர்வதேச அளவில் விற்பனை செய்ய பொது-தனியார் கூட்டாண்மை முறையில் அமைக்கவுள்ளது.

உற்பத்தி மற்றும் சேவைகளை மேம்படுத்துதல்

  • தொழில்முறைப் பயிற்சி: சுமார் ஒரு கோடி இளைஞர்கள் ஐந்து ஆண்டுகளில் 500 முன்னணி நிறுவனங்களில் தொழில்முறைப் பயிற்சி பெறுவார்கள்.
  • தொழில் பூங்காக்கள்: 100 நகரங்களுக்கு அருகில் முழுமையான உள்கட்டமைப்புடன் கூடிய "பொருத்தி மற்றும் செயலாற்று" தொழில் பூங்காக்கள் மேம்படுத்தப்படவுள்ளது.
  • முக்கியமான கனிமத் திட்டம்: உள்நாட்டு உற்பத்தி, மறுசுழற்சி மற்றும் முக்கியமான கனிமச் சொத்துக்களை வெளிநாட்டு கையகப்படுத்துவதும் இதில் அடங்குகிறது.

5. நகர்ப்புற வளர்ச்சி

பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா நகர்ப்புறம் 2.0

  • நகர்ப்புற ஏழைகளுக்கு வீடு: 1 கோடி நகர்ப்புற ஏழை மற்றும் நடுத்தரக் குடும்பங்களின் வீட்டுத் தேவைகளை ₹10 லட்சம் கோடி முதலீட்டில் பூர்த்தி செய்வதை நோக்கமாகக் கொண்டு, ஐந்து ஆண்டுகளில் ₹2.2 லட்சம் கோடி மத்திய நிதியுதவியுடன் வீடு கட்டப்படவுள்ளது.

  • வட்டி மானியங்கள்: வட்டி மானியங்கள் மூலம் மலிவு விலையில் கடன்கள் வழங்க ஊக்குவித்தல்.

நீர் வழங்கல் மற்றும் சுகாதாரம்

  • மாநிலங்களுடனான ஒத்துழைப்பு: 100 முக்கிய நகரங்களுக்கு நீர் வழங்கல், கழிவுநீர்ச் சுத்திகரிப்பு மற்றும் திடக்கழிவு மேலாண்மை திட்டங்களை மேம்படுத்துவதாகும்.
  • சுத்திகரிக்கப்பட்ட நீரின் பயன்பாடு: சுத்திகரிக்கப்பட்ட நீரைப் பாசனத்திற்கும், சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள தொட்டிகளை நிரப்புவதற்கும் பயன்படுத்துவதற்கான பல முயற்சிகள் மேற்கொள்ளப் படுகின்றன.

தெருச் சந்தைகள்

  • பிரதம மந்திரி ஸ்வாநிதி திட்டம் விரிவாக்கம்: ஐந்து ஆண்டுகளில் சுமார் 100 வாராந்திரச் சந்தைகள் அல்லது தெரு உணவு மையங்களை நிறுவுவதாகும்.

6. ஆற்றல் பாதுகாப்பு

அணு ஆற்றல்

  • ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு முன்முயற்சிகள்: பாரத் சிறு உலைகள் மற்றும் பாரத் சிறிய நவீன ரக அணு உலை உட்பட தனியார் துறையுடன் இணைந்து சிறிய மற்றும் நவீன ரக அணு உலைகளின் ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு.
  • சூரிய சக்தி முன்முயற்சி: பிரதான் மந்திரி சூர்ய கர் முஃப்ட் பிஜிலி யோஜனா
  • இடைக்கால பட்ஜெட் அறிவிப்பைத் தொடர்ந்து, பிரதான் மந்திரி சூர்ய கர் முஃப்ட் பிஜிலி யோஜனா, மேல்மாடிகளில் சூரிய மின்சக்தி ஆலைகளை நிறுவும் பணியை தொடங்கியுள்ளது.
  • 1 கோடி வீடுகளுக்கு ஒரு மாதத்திற்கு 300 யூனிட் வரை இலவச மின்சாரம் வழங்குவதே இந்த முன்னெடுப்பின் நோக்கமாகும்.

மேம்பட்ட தீவிர மிகை மாறுநிலை அனல் மின் நிலையங்கள்

  • மேம்பாடு: NTPC மற்றும் BHEL ஆகியவை இணைந்து மேம்பட்ட தீவிர மிகை மாறுநிலை (AUSC) அனல் மின் நிலையங்களுக்கான உள்நாட்டு தொழில்நுட்பத்தை உருவாக்கியுள்ளன, இதன் விளைவாக முழு அளவிலான 800 மெகாவாட் கொண்ட வணிக ஆலையானது உருவாகிறது.

  • பொருளாதாரப் பலன்கள்: இந்த ஆலைகளுக்கு உயர்தர எஃகு மற்றும் மேம்பட்ட உலோகவியல் பொருட்களை உற்பத்தி செய்வதற்கான உள்நாட்டுத் திறன்களை மேம்படுத்துவதன் மூலம் இது கணிசமான பொருளாதார நன்மைகளை வழங்குகிறது.

பாரம்பரிய குறு மற்றும் சிறு நிறுவனங்களுக்கான ஆதரவு

  • ஆற்றல் தணிக்கைகள்: பித்தளை மற்றும் செராமிக் ஆகியவற்றைக் கொண்ட துறைகளில் உள்ளவை போன்ற பாரம்பரியமான குறு மற்றும் சிறு நிறுவனங்களுக்கு முதலீடு செய்து தருவதற்கான ஆற்றல் தணிக்கைகள் நடத்தப்படவுள்ளன.

  • நிதி உதவி: இந்த நிறுவனங்கள் தூய்மையான எரிசக்தி ஆதாரங்களுக்கு மாறுவதற்கும், ஆற்றல் திறன் நடவடிக்கைகளை செயல்படுத்துவதற்கும் வேண்டி நிதி உதவியானது வழங்கப் படுகிறது.
  • அடுத்தக் கட்டத்தில் கூடுதலாக 100 திரள் நிறுவனங்களுக்கு இந்த உத்தியானது விரிவுபடுத்தப் படுத்தப் பட உள்ளது.

உள்கட்டமைப்பு மேம்பாடு

  • மூலதனச் செலவு: அரசாங்கம் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 3.4% தொகையினை மூலதனச் செலவினங்களுக்காக என்று ₹11,11,111 கோடியை ஒதுக்கீடு செய்துள்ளது.
  • கிராமப்புறச் சாலைகள்: 25,000 கிராமப்புறக் குடியிருப்புகளுக்கு அனைத்துச் சூழ்நிலைக்கும் தாங்கக் கூடிய வகையில் அமையும் இணைப்புகளை உறுதி செய்வதற்கான பிரதான் மந்திரி கிராம் சதக் யோஜனா (PMGSY) திட்டத்தின் 4 ஆம் கட்டம் தொடங்கப்படவுள்ளது.

  • நீர்ப்பாசனம் மற்றும் வெள்ளக் கட்டுப்பாடு: ₹11,500 கோடி மதிப்பீட்டில் நிதியுதவியானது, கோசி-மெச்சி என்ற பெயர் கொண்ட மாநிலங்களுக்கு இடையேயான இணைப்பு போன்ற திட்டங்களுக்கும், துரிதப்படுத்தப்பட்ட நீர்ப்பாசனப் பயன் திட்டம் மற்றும் பிற ஆதாரங்களின் மூலம் 20 நடப்பு மற்றும் புதிய திட்டங்களுக்கும் வழங்கப் பட இருக்கிறது.

  • சுற்றுலா மேம்பாடு: பீகாரில் உள்ள கயாவில் உள்ள விஷ்ணுபாத் கோயிலும், புத்த கயாவில் உள்ள மகாபோதி கோயிலும், காசி விஸ்வநாதர் கோயிலில் உள்ள நடைபாதையைப் போன்று மேம்படுத்தப்பட உள்ளது.
  • பீகாரில் உள்ள ராஜ்கிர் மற்றும் நாளந்தாவின் விரிவான வளர்ச்சித் திட்டங்களும், ஒடிசாவின் முக்கிய இடங்களை மேம்படுத்துவதற்கான பணிகளும் நடைபெற உள்ளது.

8. கண்டுபிடிப்பு மற்றும் ஆராய்ச்சி & மேம்பாடு

  • அடிப்படை ஆராய்ச்சி மற்றும் முன்மாதிரிகள்: அடிப்படை ஆராய்ச்சி மற்றும் முன் மாதிரிகளின் மேம்பாட்டை ஆதரிக்க அனுசந்தன் தேசிய ஆராய்ச்சி நிதியம் தொடங்கப் பட்டு உள்ளது.

  • விண்வெளிப் பொருளாதாரம்: அடுத்த 10 ஆண்டுகளில் விண்வெளிப் பொருளாதாரத்தை 5 மடங்கு விரிவுபடுத்தும் நோக்கில் ₹1000 கோடி துணிகர மூலதன நிதியை நிறுவியுள்ளது.

9. அடுத்த தலைமுறைச் சீர்திருத்தங்கள்

கிராமப்புற மற்றும் நகர்ப்புற நிலச் சீர்திருத்தங்கள்

  • தனித்துவமான நில அளவீட்டு அடையாள எண் (ULPIN): தனித்துவமான நில அளவீட்டு அடையாள எண் அல்லது பு-ஆதார் அறிமுகம் செய்யப் பட்டுள்ளது.

தொழிலாளர் தொடர்பான சீர்திருத்தங்கள்

  • இ-ஷ்ரம் (E-Shram) இணையதள ஒருங்கிணைப்பு: ஒற்றை நிறுத்தத் தீர்வை உருவாக்க மற்ற இணையதளங்களுடன் விரிவான ஒருங்கிணைப்பு செய்யப்படவுள்ளது.

  • ஷ்ரம் சுவிதா மற்றும் சமாதான் இணையதளங்களை மறுசீரமைத்தல்: தொழில்கள் மற்றும் வர்த்தகத்திற்கான இணக்கத்தை எளிதாக்குவதற்கு வேண்டி இந்த இணையதளங்களானது மேம்படுத்தப் படுகின்றது.

காலநிலை நிதிக்கான வகைகளைப் பிரித்தல்

  • வகைகளைப் பிரித்தல் வளர்ச்சி: காலநிலை தழுவல் மற்றும் தணிப்பு முயற்சிகளுக்கான மூலதனம் பெறும் தன்மையை மேம்படுத்த வகைகள் பிரிப்பை உருவாக்குவதாகும்.

அந்நிய நேரடி முதலீடு மற்றும் வெளிநாட்டு முதலீடு

  • எளிமைப்படுத்தப்பட்ட விதிகள்: அந்நிய நேரடி முதலீட்டை எளிதாக்குவதற்கான விதிகள் மற்றும் ஒழுங்குமுறைகளை நெறிப்படுத்துவதாகும்.
  • முன்னுரிமை: முதலீடுகளில் முன்னுரிமையானது ஊக்குவிக்கப் படுவதாகும்.
  • இந்திய ரூபாய் மதிப்பினை மேம்படுத்துதல்: வெளிநாட்டு முதலீடுகளுக்கு இந்திய ரூபாயைப் பயன்படுத்துவதற்கான வாய்ப்புகளை விரிவுபடுத்தல்.

தேசிய ஓய்வுதியத் திட்டம் வத்சல்யா

  • பங்களிப்புத் திட்டம்: ஆரம்பத்தில் குழந்தைளுக்கு என்று அவர்கள் பெற்றோர்கள் மற்றும் பாதுகாவலர்கள் பங்களிக்க அனுமதிக்கும் இத்திட்டமானது, குழந்தைகள் 18 வயது வந்தவுடன் அதனைச் சாதாரண தேசிய ஓய்வுதிய திட்டக் கணக்காக மாற்றலாம்.

வியாபாரம் செய்வதை எளிமையாக்குதல்

  • ஜன் விஸ்வாஸ் மசோதா 2.0: வணிகம் செய்வதை எளிதாக்குவதற்கும், மேம்படுத்துவதற்கும் அரசாங்கம் இந்த மசோதாவை உருவாக்கி வருகிறது.
  • மாநிலங்கள் தங்கள் வணிகச் சீர்திருத்தச் செயல் திட்டங்களைச் செயல்படுத்தவும், டிஜிட்டல் மயமாக்கலை ஊக்குவிப்பதற்காகவும் இது செயல்படுத்தப் படுகிறது.

புதிய ஓய்வூதியத் திட்டம் (NPS)

  • புதிய ஓய்வூதியத் திட்டம் (NPS) மதிப்பாய்வு: மதிப்பாய்வுக் குழுவானது NPS திட்டம் ஒரு குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தினை அடைந்துள்ளதா என ஆய்வு செய்யும்.
  • பொது மக்களின் நலன்களைப் பாதுகாப்பதை நோக்கமாகக் கொண்டு, நிதி ஆராய்ந்து அறிந்து பேணுவதன் மூலம் பல முக்கியப் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு ஒரு தீர்வானது இதன் மூலம் உருவாக்கப்படுகிறது.

10. வரி தொடர்பான முன்மொழிவுகள்

புதிய வரி முறையை எளிமையாக்குதல்

  • 2024 ஆம் ஆண்டிற்கான புதிய வரி விதிப்பில் வரி விகிதக் கட்டமைப்பானது, வரி செலுத்துவோருக்குத் தெளிவான விவரங்கள் மற்றும் மேம்பட்ட பலன்களை வழங்குவதற்காக திருத்தப்பட்டுள்ளது.
  • திருத்தப்பட்ட வரி அடுக்குகள்:
  • ₹3 லட்சம் வரை: வரி இல்லை
  • ₹3 லட்சம் முதல் ₹7 லட்சம் வரை: 5%
  • ₹7 லட்சம் முதல் ₹10 லட்சம் வரை: 10%
  • ₹10 லட்சம் முதல் ₹12 லட்சம் வரை: 15%
  • ₹12 லட்சம் முதல் ₹15 லட்சம் வரை: 20%
  • ₹15 லட்சத்துக்கு மேல் வருமானம்: 30%

  • கூடுதலாக, நிலையான விலக்கு ₹75,000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
  • புதிய வரி விதிப்பின் கீழ், வரி செலுத்துவோர் ₹17,500 வரை அதிகமாகச் சேமிக்க முடியும் என்பதை இந்த மாற்றங்கள் உறுதிப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
  • இந்தத் திருத்தப்பட்ட அடுக்குகள் மற்றும் அதிகரித்த நிலையான விலக்கு ஆகியவை வரி மீதான  செயல்முறையை மிக எளிமையாகவும், தனி நபர்களுக்கு மிகவும் பயனுள்ளதாகவும் மாற்றுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

வருமான வரிச் சட்டம், 1961  மீதான விரிவான ஆய்வு

  • நோக்கம்: வருமான வரிச் சட்டம், 1961 மீதான விரிவான ஆய்வு, அந்தச் சட்டத்தை மிகவும் சுருக்கமாகவும், தெளிவாகவும், அணுகக் கூடியதாகவும் மாற்றுவதை நோக்கமாகக் கொண்டது.
  • இந்த முன்முயற்சி சர்ச்சைகள் மற்றும் வழக்குகளை குறைக்கும் என எதிர்பார்க்கப் படுவதோடு வரி செலுத்துவோருக்கு வரி மீதான அதிக உறுதியையும் வழங்குகிறது.
  • காலக்கெடு: இம்மதிப்பாய்வு ஆறு மாதங்களுக்குள் முடிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
  • ஆரம்பப் படிநிலைகள்: ஒரு நிதி மசோதாவானது வரி விதிப்பின் பலவேறு அம்சங்களை எளிமையாக்குவதன் மூலம் தொடங்குகிறது.
  • தொண்டு நிறுவனங்கள்: தொண்டு நிறுவனங்களின் வரி முறையில் மாற்றங்கள் ஏற்படுத்தப் பட்டுள்ளது.
  • மூல விகிதங்களில் கழிக்கப்பட்ட வரி விகிதக் கட்டமைப்பு: மூல விகிதங்களில் கழிக்கப் பட்ட வரிக்கான திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

  • மறுமதிப்பீடு மற்றும் தேடல் ஏற்பாடுகள்: மறு மதிப்பீடு மற்றும் தேடல் நடைமுறைகளை நெறிப் படுத்துவதாகும்.
  • மூலதன ஆதாய வரிவிதிப்பு: மூலதன ஆதாயங்களின் வரி விதிப்பில் மாற்றங்கள் செய்யப் பட்டுள்ளன.

ஏஞ்சல் வரி ஒழிப்பு 

  • ரத்து: புத்தொழில் நிறுவனங்களின் முதலீடுகளுக்கு விதிக்கப்பட்ட ஏஞ்சல் வரியை அரசு ரத்து செய்துள்ளது.
  • இந்த நடவடிக்கையானது புத்தொழில் நிறுவனங்களில் முதலீட்டை ஊக்குவிப்பதற்காகவும், இத்துறையின் வளர்ச்சியை ஊக்குவிப்பதற்காகவும் செயல்படுத்தப்பட உள்ளது.

  • பின்னணி:
  • நெருங்கிய நிறுவனங்களில் அதிக மதிப்புள்ள பங்குகள் மீதான சந்தாக்கள் மூலம் கணக்கில் வராத பணத்தைப் பயன்படுத்துவதைத் தடுக்க ஏஞ்சல் வரியானது 2012 ஆம் ஆண்டு அறிமுகப் படுத்தப் பட்டது.
  • விரிவாக்கம்: 2023 மத்திய பட்ஜெட்டில் இந்தியாவில் வசிப்பவர் அல்லாத முதலீட்டாளர்களைச் சேர்க்க என்று இதன் நோக்கம் விரிவுபடுத்தப்பட்டது என்ற நிலையில் இது புத்தொழில் நிறுவனங்களிடமிருந்து குறிப்பிடத் தக்க அளவில் எதிர்ப்பை ஏற்படுத்தியது.

வழக்கு மற்றும் மேல்முறையீடுகள்

அரசு முயற்சிகள்:

  • வழக்குகள் தேக்கம் குறைப்பு: முதல் முறையீடுகள், குறிப்பாக குறிப்பிடத் தக்க வகையில் வரித் தாக்கங்களை  மிக விரைவாகத் தீர்ப்பதற்கு என்று கூடுதல் அதிகாரிகளை நியமிக்கத் திட்டமிட்டு உள்ளது.
  • விவாத் சே விஸ்வாஸ் திட்டம், 2024: மேல்முறையீட்டில் நிலுவையில் உள்ள வருமான வரித் தகராறுகளைத் தீர்க்க முன்மொழியப்பட்ட திட்டம் இதுவாகும்.

  • பாதுகாப்பான துறைமுக விதிகள்: சர்வதேச வரி வழக்குகளைக் குறைப்பதற்கும் உறுதியை வழங்குவதற்கும் பாதுகாப்பான துறைமுக விதிகளை விரிவுபடுத்துதல் மற்றும் அதனை ஈர்ப்பு மிக்கதாக மாற்றுதல்.

வரி ஆதாரத்தை ஆழப்படுத்துதல்

முன்மொழிவுகள்:

  • பாதுகாப்புப் பரிவர்த்தனை வரி (STT): வரி ஆதாரத் தளத்தை விரிவுபடுத்த, எதிர்கால மற்றும் விருப்பத்தேர்வுகள் மீதான பாதுகாப்புப் பரிவர்த்தனை வரிகளை முறையே 0.02% மற்றும் 0.1% ஆக அதிகரிக்கச் செய்வதாகும்.
  • 11. பிற முக்கிய முன்மொழிவுகள்
  • சமப்படுத்தல் வரி: 2% சமன்படுத்தும் வரியை திரும்பப் பெறுதல்.
  • சர்வதேச நிதிச் சேவை மைய (IFSC) வரி நன்மைகள்: சர்வதேச நிதிச் சேவை மையங்களில் (IFSCs) குறிப்பிட்ட நிதிகள் மற்றும் நிறுவனங்களுக்கான வரிச் சலுகைகளை விரிவுபடுத்துதல்.
  • பினாமி பரிவர்த்தனைச் சட்டம்: பினாமி பரிவர்த்தனைகள் (தடை) சட்டம், 1988 என்ற சட்டத்தின் கீழ் தண்டனைகளை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு, முழுமையான மற்றும் உண்மையான தகவல்களை வெளிப்படுத்தும் பினாமிதாரர்களுக்கு அபராதம் மற்றும் வழக்குத் தொடரப் படுவதிலிருந்து விலக்கு அளிக்கப்படுகிறது.

  • சுங்க வரியில் மாற்றங்கள்: சுங்க வரியில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டு உள்ளன.
  • மூலதன ஆதாய வரி விதிப்பு: மூலதன ஆதாய வரி விதிப்பினை எளிமைப்படுத்தல் மற்றும் சீரமைத்தல்.

-------------------------------------

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்