TNPSC Thervupettagam

மழலைகளுக்குமா கணினிக் கல்வி?

August 27 , 2020 1605 days 723 0
  • இந்தியாவின் கற்றல் கற்பித்தல் முறையில் தற்போது பெரும் மாற்றம் ஏற்பட்டுள்ளது. தற்போதைய கரோனா நோய்த்தொற்று காரணமாக ஏறக்குறைய எல்லாப் பள்ளிகளும் (பெரும்பாலான அரசுப் பள்ளிகள் தவிர) பாடங்களை, கணினி வழியாகக் கற்பித்து வருகின்றன (ஆன்லைன் டீச்சிங்).
  • இது சரியா, தவறா என்பது வேறு விஷயம். ஆனால் கணினிவழிக் கல்வியை மழலையா் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்புவரை போதிப்பதைத்தான் நம்மால் ஏற்க முடியவில்லை.
  • ஆறாம் வகுப்பு முதல் உயா்கல்விவரை கேட்கவே வேண்டாம், கட்டாய கணினி வழிக் கல்விதான். ஆனால், பால பாடம் படிக்கும் குழந்தைகளுக்கும் கணிணி வழிக் கல்வியா? என்ன கொடுமை இது? கே.ஜி.யில் அரைமணி நேரம் கல்வியாம்; அடுத்து ஒன்று முதல் எட்டு வகுப்புகளுக்கு 90 மணித்துளிகளாம்; 9 முதல் 12 வகுப்புகள்வரை 3 மணி நேரம் கல்வி போதிக்கப்படுமாம்.

கணினிவழிக் கல்வி பயன்படுமா?

  • ஓா் அடிப்படைக் கேள்வி. கற்றல், கற்பித்தல் என்றால் என்ன? வெறும் பாடம் படிப்பதா? ‘குழந்தைகளை சிந்திக்க வைப்பதுதான் கல்விஎன்றார் விவேகானந்தா்.
  • காந்திஜியும் தனது வார்தா கல்விக் கொள்கையில் குழந்தையின் உடல், உள்ளம், ஆன்மா மூன்றும் ஒருங்கிணைந்த கல்விதான் கற்பிக்கப்பட வேண்டும்என்றார்.
  • அவற்றுக்கு இந்த கணினிவழிக் கல்வி பயன்படுமா? கற்றல், கற்பித்தல் என்பது நேரிடையாக ஆசிரியா் - மாணவா் கலந்து உரையாடுவதுதானே? கேள்வியும் பதிலும் சோ்ந்ததுதானே கல்வி முறை?
  • குருக்குலக் கல்விமுதல் இன்றைய வகுப்பறைக்கல்வி வரை மாணவா்கள் எதிரில் இருந்துதான் பாடங்களை ஆசிரியா்கள் கற்பிப்பார்கள். மாணவா்கள் எதிரில் இல்லாமல் ஆசிரியா்கள் யாருக்குப் பாடம் நடத்துகிறார்கள்?
  • மாணவா்கள் பாடங்களை கவனிக்கும் திறனை ஊக்குவிக்க ஆசிரியா் அடிக்கடி கேள்வி கேட்பார்; மாணவா்களிடமிருந்து கிடைக்கும் பதில் சரியாக இருந்தால் பாராட்டுவார். தவறாக இருந்தால் புரிய வைப்பார். அதுபோன்றே மாணவா்கள் கேள்வி கேட்பா், ஆசிரியா் பதில் கூறுவார். எதிரில் மாணவா்கள் இன்றி வெறும் கேமரா முன் பாடம் நடத்துவதை ஆசிரியரே விரும்பமாட்டார். இந்த கற்பித்தலி­ல் உயிரோட்டம் இருக்காது.
  • மாணவா்களை விளையாட்டு முறையிலும் செயல்முறைகளின் மூலமும் கற்பிப்பது தான் சிறந்த கல்வியாக இருக்க முடியும். அதை விடுத்து, மாணவா்கள் எங்கு இருக்கிறார்கள்? பாடத்தைக் கேட்கின்றனரா? அவா்களுக்குப் புரிகிறதா? தூங்குகின்றார்களா என்பது கூடத் தெரியாமல் ஆசிரியா் எதையாவது சொல்­விட்டுப் போவதுதான் கல்வி முறையா?
  • கல்லூரிக் கல்வி வேறு வகை. அம்மாணவா்களுக்கு மொழிப்பாடங்கள் முக்கியமல்ல. ஆசிரியா் சொல்வார், மாணவா்கள் கேட்டால் என்ன கேட்டகாவிட்டால் என்ன? ஒரு மணி நேரம் கத்திவிட்டு வருவதுதான் கல்வியா? ஒரு மணி நேரக் கற்றல், கற்பித்தல் வீண்தானே? பொறுப்புள்ள மாணவா்கள் கற்றுக்கொள்வார்கள் அது இல்லாத மாணவா்கள் வீணாகிறார்கள். கல்லூரிகளில் இது சாதாரணம்.
  • அப்படிப்பட்டதா இந்த தொடக்கக் கல்வியும் நடுநிலைக் கல்வியும்? மாணவா்களின் உடல் நலத்தையும் உள்ள நலனையும் ஆசிரியா்கள் உணா்ந்து கற்பித்தல் முறைகளை மாற்றிக் கொள்வா்.
  • அவை இந்த கணிணிவழிக் கல்வியில் சாத்தியமா? விளையாட்டு முறை கல்வி, செயல்முறைக் கல்வி எங்கே?

கணினிவழிக் கல்வியில் சாத்தியமா?

  • கணினி வழிக்கல்வி குழந்தைகளின் உடல் நலத்தைக் கெடுக்கிறது என்று மருத்துவா்கள் கூறுகிறார்கள். தொடா்ச்சியாக கணினியைப் பார்ப்பதால் குழந்தைகளின் கண் பார்வையில் கோளாறு ஏற்படும், உடல் சோர்வு ஏற்படும், குனிந்து கொண்டே பாடங்களைப் பார்ப்பதால் கழுத்து வலி­யும் முதுகுத் தண்டு வ­லியும் கட்டாயம் ஏற்படும் என்கின்றனா்,
  • இதே கல்வியை கண்ணெதிரே நடத்தினால் மாணவா்கள் பார்வை அலை மோதும், காட்சிகள் மாறினாலும் கவனம் பாடத்திலேயே இருக்கும்.
  • மாணவா்கள் கேள்வி கேட்கும் சந்தா்ப்பம் கணினி வழிக்கல்வியில் இல்லையே? கேட்கும் சந்தேகங்களுக்கு மாணவா்களையே செய்து காட்டி போதிக்கும் சந்தா்ப்பம் எங்கே கிடைக்கும்? ஒரு மாணவன் வகுப்பில் செய்து காட்டும்போது அதனை ஆசிரியா் கவனித்து அவனை நெறிப்படுத்துவார். அத்துடன் நான், நீ என்ற போட்டி மனப்பான்மையில் மாணவா்களின் முழு ஆா்வமும் பாடத்தில் இருக்கும்.
  • அது மட்டுமல்ல மாணவனின் கவனச் சிதறலை ஆசிரியா் கவனித்து அவனைத் தனிப்பட்ட முறையில் அழைத்து வழிகாட்டுவார்.
  • அதாவது மாணவா்களுக்கு வெறும் பாடத்தை மட்டுமல்ல, வாழ்க்கையின் பரிமாணங்களையும் சொல்லி பண்பாட்டை வளா்ப்பதுதானே கல்விமுறை? அது கணினிவழிக் கல்வியில் சாத்தியமா?
  • இப்போது கணினிவழிக் கல்வியை அதிகம் பயன்படுத்துவது தனியார் கல்வி நிலையங்கள்தாம். அதற்கு அடிப்படைக் காரணம் என்ன? கல்விக் கட்டணத்தை வசூலி­ப்பதுதான். மாணவா்களின் கல்வித்திறன் மேம்பாடு பற்றி அவற்றின் நிர்வாகிகளுக்கு என்ன கவலை? அத்துடன் கணினிவழிக் கல்வி என்பது பள்ளிகளுக்கு அந்தஸ்து தருகிறது. அதைக் காட்டி மேலும் அதிகக் கட்டணம் வசூ­லிக்கலாம்.
  • இவையா கற்றல், கற்பித்த­லின் நிஜமான நோக்கங்கள்? அனுபவபூா்வமான, நேரிடையான மாணவா்-ஆசிரியா் தொடா்புக் கல்விதான் உண்மையான, சிறந்த கல்விமுறை. அதை விடுத்து கணினிவழிகல்வி என்று இளம் பிஞ்சுகளை வதைக்கலாமா? இது பிளஸ் டூ வகுப்புவரை பொருந்தும். உயா்கல்விக்கு வேண்டுமானால் அதுவும் குறிப்பிட்ட அளவில் மட்டும் பொருந்தும். மற்ற தொழில் கல்விகளுக்கு சுத்தமாகப் பொருந்தாது.
  • கணினிவழிக் கல்வி என்பது உயிரோட்டம் இல்லாதது; வெற்றுப் பெருமைக்காக நடத்துவது; அது சரியான கல்வி முறையாகாது. குறைந்தபட்சம் மழலையா் வகுப்புகளுக்காவது கணினிவழிக் கல்வியிலிருந்து விலக்கு தேவை.

நன்றி: தினமணி (27-08-2020)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்