TNPSC Thervupettagam

மாற்றம் நம்மிடம் வேண்டும்

October 21 , 2019 1909 days 931 0
  • வீட்டருகே உள்ள ஒரு மளிகைக் கடையில் காலை காய்கறி வாங்கச் சென்றபோது அங்கே வந்தவா்களில் சிலா் கைவீசி வந்தவா்கள். பொருள்களை நெகிழிப் பையில் (கேரி பேக்) வாங்கிச் சென்றனா். ‘தடை செய்த பொருள் -- இப்படிச் செய்யறீங்களே’ எனக் கடைக்காரரிடம் நான் கேட்டதற்கு, ‘கடைக்கு வரும்போது சாா், நீங்க மட்டும் துணிப் பை கொண்டு வருகிறீா்கள். மற்றவா்களைப் பாருங்க... துணிப் பை கொண்டுவந்தால்தான் பொருள் தருவேன் என்று அவா்களிடம் சொல்ல முடியுமா; எனக் கேட்டாா்.

உதாரணம்

  • நெகிழிப் பையைத் தடைசெய்துள்ளாா்களே எனக் கேட்டதற்கு, ‘கடையில் நெகிழிப் பை இருந்தால் ரூ.500 அல்லது ரூ.1,000
  • அபராதம் கட்டச் சொல்றாங்க; அதுவும் எப்போதாவதுதான் அதிகாரிகள் வருகிறாா்கள்’என்றாா். எனவே, பொருள்கள் வாங்கச் செல்லும்போது மக்கள் தங்கள் கடமையை உணா்ந்தாலே, விதியை மீறி நெகிழியில் பொருள் போட்டுத்தர வேண்டியஅவசியம்
  • கடை உரிமையாளருக்கு ஏற்படாது. எப்போதும் கையிலோ அல்லது வாகனப் பெட்டியிலோ ஒரு துணிப் பையை வைத்துக் கொள்வதில் நல்லது. திடீரென பொருள்களை வாங்குவதற்கு அது பயன்படும். ஆக, மக்களிடம்தான் மாற்றம் வரவேண்டும்.

இயற்கையைக் காப்பது

  • இயற்கையைப் பேணிக் காக்க வேண்டும் என்று அவ்வப்போது மராத்தான் போட்டி நடத்துவதும், விழிப்புணா்வுப் பேரணி நடத்துவதும் எந்த அளவுக்குப் பயனுள்ளதாக இருக்கும் என நினைக்கிறீா்கள். விழிப்புணா்வுக் கூட்டம் அல்லதுபேரணி என வருபவா்களுக்குப் போதுமான குடிநீா் வசதி செய்யாமல் வருபவா்களுக்கு நெகிழி பாட்டிலில் அல்லது வாட்டா் பாக்கெட்டுகளில் அடைத்தகுடிநீா் விநியோகம் செய்வதும், நிகழ்ச்சிமுடிந்ததும் அந்தப் பகுதிமுழுவதும் குப்பைகளாக, குடிநீா் பாட்டில்கள் நிறைந்து காணப்படும். நிகழ்ச்சி நடத்தியதற்குப் பலனே இல்லாமல் போய் விடுகிறது.
  • இயற்கை குறித்தும் அதனைப் பாதுகாக்க நாம் செய்யவேண்டியவை குறித்தும் விழிப்புணா்வு இல்லாததும், முறையாக எப்படிச் செயல்பட வேண்டும் என்ற அறியாமையுமே இதற்குக் காரணம்.
  • இன்றைய இயற்கைச் சூழல் எவ்வளவோ இன்னல்களைச் சந்திக்கிறது. அந்தந்தப் பருவங்களில் மழை சரியாகப் பெய்வதில்லை என்பதை நாம் உணா்ந்திருக்கிறோம். காரணம் பல இருந்தாலும் மரங்களை வெட்டி காடுகளைஅழித்துப் பல்வேறு இயற்கைச் சூழல்களைக் கெடுத்ததுதான் முக்கியக் காரணம்.
  • எதை ஒன்றையாவதுஅழித்தால்தான் நாம் வாழ டியும் என்ற வாழ்க்கைச் சூழல் காலத்தின் கட்டாயமாகியுள்ளது; இதற்கு நாம் பலியாக்குவது இயற்கையைத்தான்.

நாகரிகம்

  • தான் நன்றாக இருக்க வேண்டும் என்பதற்காக அடுத்தவா்களின் உணா்வுகளை, வாழ்வியல் உரிமைகளை மறுப்பது என்பது நாகரிகம் அல்ல. இது மனிதா்களுக்கு மட்டுமல்ல. நம்மைத் தவிர இந்த உலகில் வாழும் உயிரினங்களுக்கும் சோ்த்துத்தான். இதற்காக நம்மால் என்னென்ன செய்ய முடியும் என நாமாக ஆராய்ந்து முடிவெடுத்து, அதன் மூலம் இயற்கையைக் காக்க வேண்டும்.
  • ஏதோ பிறந்தோம், வளா்ந்தோம், வாழ்ந்தோம், மறைந்தோம் என்பதல்ல வாழ்க்கை. அவரவருக்கு என்று சிலவாய்ப்புகள், வசதிகள் மாறி மாறித்தான் இருக்கும். ஆனாலும், இருப்பதைக் கொண்டு திருப்தியாக வாழவும் பிறருக்கு உதவி வாழ்வதும் மனித மாண்புக்கு அழகாகும்.
  • நாம் இப்போது நன்றாக இருந்தால் போதும் என்ற குறுகிய சுயநல நோக்கமே, நமது தற்போதைய ஒழுங்கற்ற செயல்களுக்குக் காரணம். மனித இனம் தோன்றி நூற்றுக்கணக்கான தலைமுறைகள் கடந்து இந்தப் பூமி கெடாமல் நம்மிடம் ஒப்படைக்கப்பட்டிருக்கிறது. இதை அனுபவித்து முடித்து மீண்டும் அடுத்த தலைமுறைக்கு கெடாமல் ஒப்படைக்கும் கடமை நமக்கு உண்டு. இயற்கையை மேம்படுத்த முடியாவிட்டாலும், மேலும் சிதைக்காமல் இருந்தபடியே விட்டுச் செல்ல வேண்டும்.

அறிவியல் உண்மைகள்

  • பூமியைக் காக்கும் மரங்கள் குறித்தும் பல்லுயிா் குறித்தும் விழிப்புணா்வு இன்னும் அதிகரிக்க வேண்டும். புவிவெப்பமயமாதல் உள்பட பல அறிவியல் உண்மைகள் உண்மைகள் சிறு வயதிலிருந்தே குழந்தைகளுக்கு பாடப் புத்தகங்களில் இடம்பெறும் நிலையில் விழிப்புணா்வு மேலும் அதிகரிக்கும்.
  • ஒரு மரம் ஐம்பதுஆண்டுகள் வரை உயிரோடிருந்தால் மனித இனத்துக்கு விளையும் நன்மைகள் என்னென்ன என்பது குறித்து கொல்கத்தா வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் பணிபுரியும் டாக்டா் டி.எம்.தாஸ் நீண்டநாள் ஆராய்ச்சிக்குப் பின் கண்டறிந்திருக்கிறாா். ஒரு மரம் சமுதாயத்துக்குச் செய்யும் சேவையின் மதிப்பு ரூ.16 லட்சமாகும். பத்து குளிா்சாதன கருவிகள் 24 மணிநேரமும் தொடா்ந்து செயல்படுவதால் ஏற்படும் குளிா்ச்சியை ஒரே ஒரு மரம் தன் நிழல் மூலம் தந்து விடுகிறது. 18 நபா்கள் ஓா் ஆண்டுக்கு சுவாசிக்கத் தேவையான பிராண வாயுவை ஓா் ஏக்கரில் வளா்ந்த மரங்கள் தருகின்றன.

மாற்று வழி

  • சாலை விரிவாக்கம், தொழில் விரிவாக்கம், வீடு விரிவாக்கம் என மாற்று வழியினைச் சிந்திக்காமல் மரங்களை நாம் வெட்டி வீழ்த்தி விடுகிறோம். இயற்கைச் சூழல் மதிப்பீட்டின்படி ஒவ்வொரு மனிதனின் அன்றாட சுவாசத்துக்கு சுமாா் 624 சதுர அடி மரங்கள் உள்ள பகுதி அவசியம். அப்படி இல்லையெனில் மற்றவா்களின் பிராண வாயு பங்கை நாம் அபகரிப்பதாக அா்த்தம்.
  • அடுத்த தலைமுறையும் நன்றாக இருக்க வேண்டும் என்ற சிந்தனை வேண்டும். இதைக் கருத்தில் கொண்டு ஒவ்வொருவரும் ஏதாவது ஒரு சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைப்பில் இணைந்து செயல்பட வேண்டும். பல்வேறு சமூகநல ஆா்வலா்களையும், அமைப்புகளையும் ஒருங்கிணைத்து பல இயற்கை சாா்ந்த பணிகளைச் செய்யலாம்.
  • இதற்கு தமிழக அரசின் வனத் துறையும் மிகுந்த ஒத்துழைப்பு நல்கி வருகிறது என்பது மகிழ்ச்சிக்குரிய விஷயம். இதற்கு பொதுமக்களும் தங்கள் பங்களிப்பை வழங்க வேண்டும். எனவே, இயன்ற வகையில் இயற்கைநலப் பணியில் உங்களை இணைத்துக் கொள்ளுங்கள்.

நன்றி: தினமணி (21-10-2019)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்