TNPSC Thervupettagam

மின்னணு சிகரெட்டுகள் மீதான இந்தியாவின் தடை

September 26 , 2019 1889 days 2194 0
இதுவரை
  • மின்னணு சிகரெட் தடை (உற்பத்தி, இறக்குமதி, ஏற்றுமதி, போக்குவரத்து, விற்பனை, விநியோகம், சேமிப்பு மற்றும் விளம்பரம்) அவசரச் சட்டம், 2019 என்ற ஒன்று உடனடியாக அமல்படுத்தப் படுவதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.
  • இதன் விளைவாக, அதை மீறும் எவரும் ஒரு வருடம் வரை சிறையில் அடைக்கப்படுவார்கள் அல்லது ₹1,00,000 வரை அபராதம் விதிக்கப் படுவார்கள் அல்லது முதல் முறையாக செய்யும் குற்றத்திற்காக இந்த இரண்டு முறையிலும் தண்டிக்கப்படுவார்கள்.
  • மின்னணு சிகரெட்டுகளைச் சேமித்து வைத்திருப்பதும் தண்டனைக்குரியது ஆகும்.
  • மின்னணு சிகரெட்டுகள் ஆனது உடல்நலக் குறைவை உண்டாக்குவதையும் சேர்த்து, புகையிலைப் பயன்பாட்டைக் குறைப்பதற்கான அரசாங்கத்தின் முயற்சிகளைக் குறைக்கும்  நிலையை ஏற்படுத்தும் என்று அரசாங்கம் கவலை கொண்டுள்ளது.
  • இந்த அவசரச் சட்டம் ஆனது பாராளுமன்றம் நவம்பர் மாதத்தில் கூடும் போது அதன் ஒப்புதலைப் பெறவிருக்கிறது.
  • இந்த அறிவிப்புக்கு முன்னர், 15 மாநிலங்களும் ஒரு ஒன்றியப் பிரதேசமும் ஏற்கனவே மின்னணு சிகரெட்டுகளைத் தடை செய்திருந்தன.
  • அவற்றில் பஞ்சாப், கர்நாடகா, மிசோரம், கேரளா, ஜம்மு & காஷ்மீர், உத்தரப்பிரதேசம், பீகார், மகாராஷ்டிரா, தமிழ்நாடு, ஜார்க்கண்ட், இமாச்சலப் பிரதேசம், புதுச்சேரி, ராஜஸ்தான், மேகாலயா, ஒடிசா மற்றும் நாகாலாந்து ஆகியவையும் அடங்கும்.

 

மின்னணு சிகரெட்டுகள் இயங்கும் முறை
  • மின்னணு மூலம் உடலில் நிகோட்டினை செலுத்தும் முறையான (ENDS - Electronic Nicotine Delivery Systems) அல்லது எரியாத புகையிலைப் பொருட்கள் பல பெயர்களால் அறியப் படுகின்றன – ஆவியாக்கும் சாதனங்கள், மின்னணு ஹுக்காக்கள், மின்னணு சிகரெட்டுகள் மற்றும் மின் குழாய்கள் போன்றவை இதன் சில எடுத்துக்காட்டுகள் ஆகும்.
  • பாரம்பரிய சிகரெட்டுகளைப் போல தோற்றமளிக்கும் வகையில் மின்னணு சிகரெட்டுகள் தயாரிக்கப்படுகின்றன. அவை புகையிலை இல்லாத நிகோடின் விநியோக சாதனங்களாக விற்பனை செய்யப்படுகின்றன.
  • பாரம்பரிய சிகரெட்டுகளைப் போல புகையிலை இலைகளை எரிப்பதற்குப் பதிலாக, மின்கலன் மூலம் இயக்கப்படும் சாதனமான மின்னணு சிகரெட் ஆனது நிகோடின் கொண்ட ஒரு கரைசலையும்  அதனுடன் மற்ற சில பொருட்களையும் சேர்த்து சூடாக்குவதன் மூலம் ஒரு வளிமக் கரைசலை உருவாக்குகிறது.

  • நிகோடின் மற்றும் நறுமணச் சுவையூட்டிகளைத்  திரவ வடிவில் கொண்டுள்ள இந்தச் சாதனமானது கிளிசரால் மற்றும்/அல்லது புரோபிலீன் கிளைக்கால் போன்ற கரைப்பான்களை முதன்மையாகக் கொண்டுள்ளது. 
  • நுண்ணியத் துகள்கள் மற்றும் வாயுக்களைக் கொண்டுள்ள வளிமக் கரைசல் சிகரெட் புகையை உருவகப்படுத்துகிறது.
  • ஒரு ஆழ்ந்த உறிஞ்சுதலைத் தொடர்ந்து, அந்த வளிமக் கரைசல்  பயனரின் வாய் மற்றும் நுரையீரலுக்கு வழங்கப்படுகிறது. அதில் மீதமுள்ள மற்ற வாயுக்கள் வெளியேற்றப் படுகின்றன.

மின்னணு சிகரெட்டுகளின் விளைவுகள்

  • புகைப் பிடிப்பதைப் போலன்றி, மின்னணு சிகரெட்டுகளின் மோசமான உடல்நலப் பாதிப்புகள் இன்னும் தெளிவாக அறியப்படவில்லை.

  • ஆனால் பாரம்பரிய சிகரெட்டுகளைப் போலவே, மின்னணு சிகரெட்டுகளும் மிக நுண்ணியத்  துகள்கள் மற்றும் நிகோடினை நுரையீரலுக்குள் ஆழமாக வெளியிடுகின்றன. அதன் பின்னர் அவை இரத்தத்தால் உறிஞ்சப் படுகின்றன.
  • மற்ற காரணிகளை எடுத்துக் கொண்ட பின்னர், மாரடைப்பு அபாயத்தில் 79% அதிகரிப்பு மின்னணு சிகரெட்டின் தினசரி பயன்பாட்டால் ஏற்பட்டுள்ளதாக 2018 ஆம் ஆண்டின் ஒரு ஆய்வில் கண்டறியப் பட்டுள்ளது.
மின்னணு  சிகரெட்டுகள் மற்றும் புகைப் பழக்கத்தை கைவிடுதல்
  • இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகத்தின் இ-சிகரெட்டுகள் குறித்த ஒரு வெள்ளை ஆய்வறிக்கையின் படி, பயன்படுத்தப்படும் மின்கலன் வெளியீட்டு மின்னழுத்தத்தைப் பொறுத்து, நிகோடின் கரைப்பான்கள் அசிட்டால்டிஹைட், ஃபார்மால்டிஹைட் மற்றும் அசிட்டோன் போன்ற புற்றுநோய் ஏற்படுத்தும் காரணிகளை மாறுபட்ட அளவுகளில் வெளியிடலாம் என்று அறிய முடிகிறது.
  • திரவ-ஆவியாதல் கரைசல்களானது புற்றுநோய்கள் & இதயம், நுரையீரல் மற்றும் மூளை நோய்கள் உள்ளிட்ட பல மோசமான உடல்நல விளைவுகளை ஏற்படுத்தக் கூடிய நச்சு இரசாயனங்கள் மற்றும் உலோகங்களைக் கொண்டுள்ளன.
  • மின்னணு சிகரெட்டுகளில் பயன்படுத்தப்படும் டயசெட்டில் போன்ற சுவையூட்டிகள்  தீவிர நுரையீரல் நோயுடன் சம்பந்தப்பட்டவை ஆகும்.
  • மின்னணு சிகரெட்டுகளில் ஆவியாகும் கரிமச் சேர்மங்கள், நிக்கல், தகரம் மற்றும் ஈயம் போன்ற கன உலோகங்கள் உள்ளன.
  • 2016 ஆம் ஆண்டில், அமெரிக்காவில் உள்ள பொது அறுவைச் சிகிச்சை நிபுணர் ஒருவர், "இளைஞர்களிடையே உள்ள மின்னணு சிகரெட் பயன்பாடு பொது நலத்திற்குத் தீங்கு விளைவிக்கக் கூடியதாகும்; இளமைப் பருவத்தில் நிகோடினை பயன்படுத்துவது என்பது போதைப் பொருள்களுக்கு அடிமையாகுதலை ஏற்படுத்தக்  கூடியதாகும். மேலும் அது அவர்களின் வளரிளம் வயது மூளைக்குத் தீங்கு விளைவிக்கக் கூடியதாகும்” என்று அறிவுறுத்தியுள்ளார்.
  • நிகோடின் என்ற பொருளானது கவனம், கற்றல், மனநிலை போன்ற செயல்களுக்கும் உந்துவிசைக் கட்டுப்பாட்டைக் கட்டுப்படுத்தும் மூளையின் சில பகுதிகளுக்கும் தீங்கு விளைவிக்கின்றது.
  • மூளைச் செல்களுக்கு இடையேயான இணைப்புகள் உருவாகும் முறையிலும் நிகோடின் மாற்றத்தை உருவாக்குகிறது. இளம் பருவத்தினரின் மூளையில் அதிகமான ஒத்திசைவுகளை உருவாக்குவதால் இது கவலைக்குரியது ஆகும்.
  • விலங்குகளில், வளிமக் கரைசல்  வெளிப்பாடு ஆனது  "அழற்சிக் குறிப்பான்களின் சுரப்பு, தூண்டப்பட்ட காற்றுப் பாதை உயர்வினைத் திறன் மற்றும் நீடித்த, நாள்பட்ட திசுச் சிதைவுகளை  ஏற்படுத்தும்" என்று கண்டறியப்பட்டுள்ளது.
  • ஆனால் 2018 ஆம் ஆண்டில், இங்கிலாந்தின் பொது சுகாதார நிறுவனமான பப்ளிக் ஹெல்த் இங்கிலாந்து, புகைப் பிடிப்பதை விட ஆவியாக்குதல் சாதனங்கள் குறைந்தது 95% பாதுகாப்பானது என்ற தனது கூற்றை மீண்டும் வலியுறுத்தியுள்ளது.
புகைப் பழக்கத்தைக் கைவிட மின்னணு சிகரெட்டுகள் உதவுகின்றனவா?
  • அதன் உற்பத்தியாளர்கள் மின்னணு சிகரெட்டுகளை தீங்கைக் குறைவாக கொண்டிருக்கும் ஒரு பொருளாக ஊக்குவித்துள்ளனர்.
  • தற்போது, ​​நிகோடின் திட்டுகள் மற்றும் நிகோடின் கோந்துகள் ஆகியவற்றுடன் ஒப்பிடப்படும்போது, ​​புகைப் பிடிப்பதை நிறுத்த மின்னணு சிகரெட்டுகள் மக்களுக்கு உதவுகின்றன என்ற கூற்றை ஆதரிப்பதற்கானச் சான்றுகள் உள்ளன.
  • ஒவ்வொரு குப்பியிலும் உள்ள நிகோடினின் அளவு மாறுபடுகின்றது; அதனால் ஒவ்வொரு தொடர் உறிஞ்சுதலிலும் உறிஞ்சுக் குழாயில் உள்ள நிகோடின் உட்கொள்ளப் படும் அளவும் மாறுபடுகிறது.
  • மின்னணு சிகரெட்டுகளின் விவரத் துணுக்கில் குறிப்பிடப்பட்டுள்ள நிகோடினின் உள்ளடக்கம் மற்றும் உண்மையான அளவு ஆகியவையும் வேறுபடுவதாக கண்டறியப் பட்டிருக்கின்றன.
  • அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகம் புகை பிடிப்பதைக் குறைப்பதற்கான ஒரு மாற்றாக மின்னணு சிகரெட்டுகளை அங்கீகரிக்க வில்லை.
  • ஒரு ஆய்வில், மின்னணு சிகரெட்டுகள் ஆனது அதிக சதவீத மக்கள் புகைபிடிப்பதை விட்டு வெளியேற வழிவகுத்த போதிலும், கிட்டத்தட்ட 80% விலகியவர்கள் இன்னும் ஆவியாகும் கருவிகளைப்  பயன்படுத்துகிறார்கள் என்று கண்டறிந்துள்ளது.
  • உணவு மற்றும் மருந்து நிர்வாகத்தின் செயல் ஆணையர் மருத்துவர் நெட் ஷார்ப்லெஸ், "மின்னணு சிகரெட் பயன்படுத்தும் பெரும்பாலான நபர்கள் தொடர்ந்து சிகரெட்டுகளைப் புகைப்பதால், மின்னணு சிகரெட்டுகளானவை அவர்களைப் புகை பிடிப்பதை கைவிட  உதவுகின்றன என்ற கூற்று சரியாக இல்லை” என்று கூறியுள்ளார்.
  • தி ட்ரூத் இனிஷியேட்டிவ் (புகையிலை எதிர்ப்பு அமைப்பு)  என்ற அமைப்பு மேற்கோள் காட்டிய 2015 ஆம் ஆண்டு ஆய்வு, மின்னணு சிகரெட்டைப் பயன்படுத்துபவர்களில் கிட்டத்தட்ட 60% பேர் வழக்கமான சிகரெட்டுகளையும் பயன்படுத்தி  இரட்டைப் பயனர்கள் என அழைக்கப்படுகின்றனர் எனக் கண்டறிந்தது.
  • 25 ஆய்வுகளின் ஒரு தொகுத்தப் பகுப்பாய்வு ஆனது, புகைப் பிடிப்பதை நிறுத்த மின்னணு சிகரெட்டுகளை ஒரு கருவியாகப் பயன்படுத்திய புகைப் பிடிப்பவர்கள் புகைப் பிடிப்பதை விட்டு விடுவதற்கான வாய்ப்பு 27% குறைவாக இருப்பதைக் கண்டறிந்துள்ளது.
மின்னணு சிகரெட்டுகளுக்கு அடிமையாதல்
  • நோய்க்  கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்கள் 2018 ஆம் ஆண்டு நடத்திய தேசிய இளைஞர் புகையிலைக் கணக்கெடுப்பின்படி, அமெரிக்காவில் 3.6 மில்லியனுக்கும் அதிகமான குழந்தைகள் மின்னணு சிகரெட்டுகளைப் பயன்படுத்துகின்றனர்.

  • 30 நாட்களுக்கு ஒருமுறையாவது மின்னணு சிகரெட்டைப் பயன்படுத்திய அமெரிக்க உயர்நிலைப் பள்ளி மாணவர்களின் எண்ணிக்கை 2017 இல் 11.7% ஆக இருந்து 2018 இல் 20.8% ஆக உயர்ந்தனர்; நடுத்தரப் பள்ளி குழந்தைகளுக்கு இந்த அதிகரிப்பு 48% ஆகும்.
  • மின்னணு சிகரெட்டில் உள்ள சுவைகள் குழந்தைகள் அவற்றைப் பயன்படுத்துவதற்கான முதல் மூன்று காரணங்களில் ஒன்றாகக் குறிப்பிடப் பட்டுள்ளன.
  • சிகரெட் போன்ற பிற வகை புகையிலைப் பொருட்களை விட மின்னணு சிகரெட்டுகள் குறைவான தீங்கு விளைவிக்கும்” என்ற தவறானக்  கருத்து மற்றொரு முக்கியக் காரணம் ஆகும்.
  • மின்னணு சிகரெட்டுகளைப் பயன்படுத்தும் இளைஞர்கள் வழக்கமான பாரம்பரிய சிகரெட்டுகளைப் புகைப்பதற்கான வாய்ப்புகளும் அதிகம் உள்ளன.

 

óóóóóóóóóó

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்