TNPSC Thervupettagam

மின்வாகன மின்கலன்களின் பின்னணியில் உள்ள பொருளாதாரம்

September 30 , 2019 1739 days 2444 0

இதுவரை

  • வழக்கமான எரிபொருளைப் பயன்படுத்தும் வாகனங்களில் இருந்து மக்களை மின்கலங்களை எரிபொருளாகப் பயன்படுத்தும் மின் வாகனங்களை உபயோகப் படுத்துமாறு  மாற்றுவதற்காக, நிதி ஆயோக் அமைப்பு, 2019 ஆம் ஆண்டு மே மாதம் உள் எரிப்பு இயந்திரத்தில் (Internal combustion engine) இயங்கும் அனைத்து முச்சக்கர வண்டிகளின் விற்பனையையும்  மார்ச் மாதம் 2023 ஆம் ஆண்டுக்குப் பிறகு தடை செய்ய முன்மொழிந்துள்ளது.
  • மார்ச் மாதம் 2025 ஆம் ஆண்டுக்குப் பிறகு விற்கப்படும் 150 சி.சி.க்கு குறைவாக உள்ள அனைத்துப் புதிய இரு சக்கர வாகனங்களும் மின்சாரத்தில் இயங்குபவையாக இருக்க வேண்டும் என்றும் அந்த அமைப்பு பரிந்துரைத்துள்ளது.
  • இந்தத் திட்டங்களுக்கு இணங்க, ஜூலை 5ம் தேதி முன்வைக்கப்பட்ட மத்திய நிதிநிலை அறிக்கையானது அதன் ஆரம்பகால தேர்ந்தெடுப்பாளர்களுக்கு வரிச் சலுகைகளை அறிவித்துள்ளது.
  • நிதி ஆயோக்  கொள்கை அமைப்பின் இந்த முன்மொழிவை தானியங்கி வாகன தொழில் அமைப்பு எதிர்த்ததோடு மட்டுமல்லாமல், மின்சார வாகனம் தொடர்பான கொள்கைகளை வடிவமைப்பதில், மின்மயமாக்கப்பட்ட வாகனங்களின் உற்பத்தி மற்றும் அவற்றின் பயன்பாட்டுடன் தொடர்புடைய பல்வேறு செலவுகள் காரணமாக இன்னும் பொருளாதார ரீதியாக இது சாத்தியமில்லை என்று அந்த அமைப்பு கவலை கொண்டுள்ளது.
வழக்கமான வாகனங்கள் மற்றும் மின்சார வாகனங்களின் செலவுக் கட்டமைப்புகள்
  • உள் எரிப்பு இயந்திரம் கொண்ட வாகனங்களுடன் ஒப்பிடும்போது மின்சார வாகனங்களின் இயந்திர இயக்கச் செலவுகளின் பகுதி (இயக்க  அச்சுகளுடன் பரிமாற்றத்தை இணைக்கும் ஒரு மோட்டார் வாகனத்தில் உள்ள அமைப்பு) மற்றும் முழு வாகனத்தின் விலை நான்கு சதவீதம் புள்ளிகள் குறைவாக இருக்கும்.
  • இருப்பினும், மின்கலன் தொகுப்பு ஆனது ஒரு மின்சார வாகனத்தின் விலையில் கிட்டத்தட்ட பாதி ஆகும்.
  • மின்சார வாகனங்களின் மதிப்பில் எந்தவொரு அர்த்தமுள்ள விலைக் குறைப்பிற்கும், மின்கலன் தொகுப்புகளின் விலை கணிசமாகக் குறைக்கப்பட வேண்டும்.

  • விளக்கப்படம் 1 - ஒரு வழக்கமான உள் எரிப்பு இயந்திரம் கொண்ட வாகனத்தின் செலவுக் கணக்கீட்டை மின்சார வாகனத்துடன் ஒப்பிடுகிறது.
  • விளக்கப்படம் 2 - இரண்டு வகைகளுக்கு இடையிலான இயந்திர இயக்கச் செலவுக் கணக்கீட்டை ஒப்பிடுகிறது.

 

மின்கலன் தொகுப்புகளின் கூறுகள்
  • மின்சார வாகனங்களில் பயன்படுத்தப்படும் பிரதான மின்கலன்கள் லித்தியம் அயனிகளைக் கொண்ட மின்கலன்கள் ஆகும்.
  • இதன் உடனடி வணிகப் பயன்பாட்டிற்கான புதியத் தொழில்நுட்பங்கள் எதுவும் நம்மிடம் இல்லை.
  • மின்கலனின் பொருட்கள் அல்லது முக்கியக் கூறுகளின் விலை, அதாவது எதிர்மின்வாய் (கேத்தோடு ), நேர்மின்வாய் (ஆனோடு), மின்னாற்பகுளி (எலக்ட்ரோலைட்), பிரிப்பான் போன்றவை மொத்த செலவில் அதிக (60%) பங்கினைக் கொண்டிருக்கின்றன.
  • மீதமுள்ளவை தொழிலாளர்களுக்கான சம்பளம், நிறுவனச் செலவுகள் மற்றும் இலாப வரம்புகள் ஆகியவை ஆகும். உழைப்பு என்பது ஒட்டுமொத்தச் செலவின் ஒப்பீட்டளவில் மிகக் குறைவான கூறு ஆகும்.
  • மின்கலன் தொகுப்புகளின் விலையில் ஏதேனும் குறைப்பு என்பது மூலப் பொருட்களின் விலை அல்லது உற்பத்தி நிறுவனச் செலவுகள் ஆகியவற்றிலிருந்து வர வேண்டும்.
லித்தியம் அயனி கொண்ட மின்கலன் தொகுப்புகளின் செலவு
  • லித்தியம் அயனி கொண்ட மின்கலன் தொகுப்புகளின் செலவு கடந்த தசாப்தத்தில் அல்லது பத்தாண்டுகளாக அதிகரிக்கத் தொடங்கியது.
  • ஆனால் இந்த மின்கலன் தொகுப்புகளின் விலை கடந்த சில ஆண்டுகளில் தொடர்ந்து வீழ்ச்சியடைந்துள்ளது.
  • இந்த விலைக் குறைப்புக்களானது  தொழில்நுட்ப வளர்ச்சி, பொருளாதாரத்தின் அளவு மற்றும் லித்தியம் அயனி  மின்கலன்களுக்கான தேவை அதிகரித்தது ஆகியவற்றின் காரணமாக ஏற்பட்டன.
  • முக்கிய உற்பத்தியாளர்களிடையே ஏற்படும் கடுமையான போட்டியும் இவற்றின் விலைகளைக் குறைப்பதில் ஒரு முக்கிய கருவியாக உள்ளது.
  • 2010 முதல் 2016 ஆம் ஆண்டு வரையிலான லித்தியம் அயனி கொண்ட  மின்கலன்களின் விலையில் ஏற்பட்ட மாற்றத்தைக் கீழ்க்கண்ட விளக்கப்படம் காட்டுகிறது.
  • ஆனால் மின்கலன் செலவை மேலும் குறைக்க முடியுமா என்பது இன்னும் தெளிவாக அறியப்படவில்லை.
  • மின்கலன் தொகுப்புகளின் விலையில் மூலப்பொருட்களின் செலவு 60%  கொண்டிருப்பதால், இவற்றின் மீதான செலவுகளைக் மேலும் குறைப்பதற்கான வாய்ப்பு குறைவாகவே உள்ளது.
  • லித்தியம் அயனி கொண்ட மின்கலன் தொகுப்புகளின் செலவு மாறுபாட்டை கீழ்க்கண்ட வரைபடம் காட்டுகிறது.

 

மின்சார வாகனங்களை ஏற்றுக் கொள்வதில் இந்தியாவின் நிலை
  • இந்தியாவில், மின் மகிழுந்துகளை விட இரு சக்கர மின் வாகனங்களின் பயன்பாடு அதிக எண்ணிக்கையில் உள்ளதாக இருக்கும். ஏனெனில் இந்தியப் போக்குவரத்துச் சந்தை இரு சக்கர வாகனங்களால் அதிக அளவு உந்தப் படுகின்றது.
  • நிதி ஆயோக்கின் கருத்துப்படி, இந்தியச் சாலைகளில் பயணிக்கும் 79% வாகனங்கள் இரு சக்கர வாகனங்கள் ஆகும்.
  • ரூபாய் 10 லட்சத்திற்கும் குறைவாக மதிப்புடைய மூன்று சக்கர வாகனங்கள் மற்றும் மகிழுந்துகள் முறையே மொத்த வாகனங்களின் எண்ணிக்கையில் 4% மற்றும் 12% ஆகும்.
  • மகிழுந்துகளுடன் ஒப்பிடும் போது இரு சக்கர வாகனங்களுக்கு சிறிய மின்கலன்கள் தேவைப்படும். எனவே அது ஒட்டுமொத்த அளவில் மலிவான விலை கொண்டதாக இருக்கும்.
  • இந்தியா உள்நாட்டிலேயே லித்தியம் அயனி செல்களை அதிக அளவில் தயாரிக்க வேண்டும்.
  • இப்போது, கலங்கள் இறக்குமதி செய்யப்பட்டு மின்கலன்களில் பொருத்தப் படுகின்றன.
  • லித்தியம் அயனி உற்பத்திக் கூடங்களை அமைப்பதற்கு அதிக மூலதனச் செலவினங்கள் தேவைப் படுகின்றன.
  • ஆனால் மின்சார வாகனங்களின் விற்பனை அதிகரிக்கும்போது இந்தியாவில் மின்கலங்களின் உற்பத்தியும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப் படுகின்றது.
சுற்றுச்சூழலுக்கு உகந்த மின்சார வாகனங்களின்  இயல்பு
  • வழக்கமான உள் எரிப்பு இயந்திரம் கொண்ட வாகனங்களில், பெட்ரோல் அல்லது டீசல் போன்றவை எரிபொருள்களாகப் பயன்படும்.
  • ஆனால், மின்சார வாகனங்களில், மின்கலன்கள் எரிபொருளாகப் பயன்படுத்தப்  படுவதில்லை; மின்கலன்கள் உருவாக்கிய  எலக்ட்ரான்கள் வாகனத்திற்கு எரிபொருளாகின்றன.
  • மின்கலன் என்பது எலக்ட்ரான்கள்/ஆற்றலைச்  சேமிக்கும் ஒரு சாதனம் ஆகும். இது மின்சாரத்திலிருந்தேப் பெறப் படுகின்றது.
  • தற்போது, இந்தியாவின் பெரும்பாலான மின்சாரம் வழக்கமான மரபு சார்ந்த ஆற்றல் மூலங்களைப் பயன்படுத்தி உற்பத்தி செய்யப் படுகிறது.
  • 2018-19 ஆம் ஆண்டில், இந்தியாவின் 90% மின்சாரம் நிலக்கரி உள்ளிட்ட வழக்கமான மரபு சார்ந்த ஆற்றல் மூலங்களில் இருந்து உற்பத்தி செய்யப்பட்டது. மேலும் சுமார் 10% சூரிய, காற்று மற்றும் உயிரி போன்ற புதுப்பிக்கத்தக்க ஆற்றல் மூலங்களில் இருந்து உற்பத்தி செய்யப்பட்டது.
  • புதுப்பிக்கத்தக்க ஆற்றல்  மூலங்களில் இருந்து உற்பத்தி செய்யப்படும் மின்சார விகிதம் பல ஆண்டுகளாக அதிகரித்துள்ள நிலையில், அவற்றை பயன்படுத்தும் வகையில் ஏற்றுக் கொள்வதற்கு  இன்னும் கூடுதலாக பல நடவடிக்கைகளை  மேற்கொள்ள வேண்டும்.
  • ஏனென்றால், மின்சார வாகனங்களின் மின்னேற்றும் உள்கட்டமைப்பு புதுப்பிக்கத்தக்க ஆற்றல் மூலங்கள் மூலம் உண்மையிலேயே நிலையானதாக இருக்க வேண்டும்.

 

óóóóóóóóóó

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்