TNPSC Thervupettagam

முக்கியத் தினங்கள் - ஆகஸ்ட்

December 1 , 2018 2246 days 19055 0

To read this article in English: Click Here

ஆகஸ்ட் - 1
பூமியின் சுற்றுச்சூழல் எல்லை மீறிய தினம் (Earth Overshoot Day)
  • 2018 ஆம் ஆண்டின் பூமியின் சுற்றுச்சூழல் எல்லை மீறிய தினம் ஆகஸ்ட் 01 அன்று ஏற்பட்டது. 1970களில் இருந்து பூமியின் சுற்றுச்சூழல் எல்லை மீறல் அனுசரிப்பு தொடங்கியதிலிருந்து இந்த தினம், இவ்வருடம் சற்று முன்பே நிகழ்ந்துள்ளது.
  • உலக தட பிணையம் (Global footprint Network) மற்றும் இயற்கைக்கான உலக அளவிலான நிதி (World Wide Fund - WWF) ஆகியவற்றால் இது கணக்கிடப்பட்டுள்ளது.

  • இயற்கை மீதான மனிதனின் வருடாந்திர தேவை குறிப்பிட்ட வருடத்தில் பூமியால் மறு உற்பத்தி செய்யும் திறனை மீறும் தினம் இத்தினமாகும்.
  • 2018-ல் மொத்த வருடத்திற்கான இயற்கையின் வளங்கள் மொத்தமும் வெறும் 8 மாத காலத்திலேயே உபயோகப்படுத்தப்பட்டு விட்டன.
  • அதாவது மனித இனம் தற்பொழுது பூமியின் சுற்றுச்சூழலினால் மறு உற்பத்தி செய்யும் திறனை விட 17 மடங்கு வேகத்தில் இயற்கையைப் பயன்படுத்துகிறது.
  • இந்த வருடம் சுற்றுச்சூழல் எல்லை மீறிய தினம் கடந்த வருட தினத்தை விட இரண்டு நாட்கள் முன்பாகவே நிகழ்ந்தது. ஆகஸ்ட் 01-க்குப் பிறகு ஒவ்வொரு தினமும் இயற்கை வளங்களின் மீதான சுரண்டலாகவே கருதப்படும்.
உலக தாய்ப் பாலூட்டும் வாரம் (ஆகஸ்ட் 1 முதல் 7 ஆம் தேதி வரை)
  • உலகெங்கிலும் உள்ள குழந்தைகளின் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்காகவும் குழந்தைகளுக்கு தாய்ப் பாலூட்டுவதை ஊக்கப்படுத்துவதற்காகவும் ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 01 ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 07 ஆம் தேதி வரை உலக தாய்ப் பாலூட்டும் வாரம் அனுசரிக்கப்படுகிறது.

  • தாய்ப் பாலூட்டுவதை பாதுகாப்பதற்காகவும் ஊக்கப்படுத்துவதற்காகவும் ஆதரிப்பதற்காகவும் 1990 ஆம் ஆண்டு ஆகஸ்டில் அரசின் கொள்கை தயாரிப்பாளர்கள், உலக சுகாதார நிறுவனம், யுனிசெப் மற்றும் இதர அமைப்புகளால் கையெழுத்திடப்பட்ட இன்னோசென்ட்டி என்ற பிரகடனத்தை நினைவுகூறும் விதமாக இத்தினம் அனுசரிக்கப்படுகிறது.
  • குழந்தைகளுக்குத் தேவையான ஊட்டச்சத்துகளை அளிப்பதற்கு மிகச் சிறந்த வழி தாய்ப் பாலூட்டுவதாகும்.
  • குழந்தை பிறந்த 1 மணி நேரத்திற்குள்ளிலிருந்து 6 மாதம் வரை கட்டாயம் தாய்ப்பால் அளிக்க வேண்டும் என்று உலக சுகாதார நிறுவனம் பரிந்துரைக்கிறது.
சர்வதேச கோமாளி வாரம்
  • ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 01 ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 07 ஆம் தேதி வரை சர்வதேச கோமாளி வாரம் அனுசரிக்கப்படுகிறது.
  • தன்னார்வ நிகழ்ச்சிகளை நடத்துவதன் மூலம் கோமாளி குழுக்கள் இத்தினத்தை அனுசரிக்கின்றனர்.

 

ஆகஸ்ட் - 2
உலக ஆங்கிலோ இந்தியர்கள் தினம்
  • ஆகஸ்ட் 02 அன்று அனைத்து இந்திய ஆங்கிலோ இந்திய மன்றத்தின் ஜாம்ஷெட்பூர் பிரிவினால் உலக ஆங்கிலோ இந்தியர்கள் தினம் கொண்டாடப்பட்டது.

 

ஆகஸ்ட் - 4
நண்பர்கள் தினம்
  • இந்தியாவில் நண்பர்கள் தினமானது ஆகஸ்ட் மாதத்தின் முதலாவது ஞாயிறு அன்று அனுசரிக்கப்படுகிறது.
  • இத்தினம் 1958 ஆம் ஆண்டில் பராகுவேயில் முதன்முறையாகப் பரிந்துரைக்கப்பட்டது. 2011 ஆம் ஆண்டு ஏப்ரல் 27 அன்று ஐ.நா. பொதுச் சபையானது ஜூலை 30 ஆம் தேதியை சர்வதேச நண்பர்கள் தினமாக அறிவித்தது.
  • ஆனால் இந்தியாவைப் போன்ற பல நாடுகள் ஆகஸ்ட் மாதத்தின் முதலாவது ஞாயிற்றுக் கிழமையை நண்பர்கள் தினமாக அனுசரிக்கின்றன.

 

ஆகஸ்ட் - 5
சர்வதேச மன்னிப்பு தினம்
  • உலகளாவிய மன்னிப்புக் கூட்டணியினால் (The Worldwide Forgiveness Alliance) ஆகஸ்ட் மாதத்தில் சர்வதேச மன்னிப்பு தினம் அனுசரிக்கப்படுகிறது.
  • இத்தினம் ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் மாதத்தின் முதலாவது ஞாயிற்றுக் கிழமை அனுசரிக்கப்படுகிறது.
  • 2018 ஆம் ஆண்டில், ஆகஸ்ட் 05 அன்று இத்தினம் அனுசரிக்கப்பட்டது.

 

ஆகஸ்ட் – 6
ஹிரோஷிமா தினம்
  • 2018 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 06 அன்று ஹிரோஷிமாவின் மீது குண்டு வீசப்பட்டதன் 73வது நினைவு ஆண்டை உலகம் அனுசரித்தது.
  • இரண்டாம் உலகப் போரை முடிவுக்கு கொண்டு வருவதற்காக 1945 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 06 அன்று அமெரிக்கா ஹிரோஷிமாவின் மீது அணுகுண்டை வீசியது.
  • போருக்கு எதிரான மற்றும் அணு ஆயுதத்திற்கு எதிரான விவாதங்கள் மற்றும் செயல் விளக்கங்களின் மீது ஹிரோஷிமா தினம் கவனத்தை செலுத்துகிறது.
  • ஹிரோஷிமா தினம் அணு ஆயுத எதிர்ப்பு தினமாகவும் அனுசரிக்கப்படுகிறது. மேலும் இத்தினம் குண்டு தினம் எனவும் அழைக்கப்படுகிறது.

 

ஆகஸ்ட் - 7
தேசிய கைத்தறி தினம்
  • நாட்டில் கைத்தறி நெசவாளர்களை கௌரவிப்பதற்காக ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 07 அன்று தேசிய கைத்தறி தினம் அனுசரிக்கப்படுகிறது.
  • இத்தினம் 2015 ஆம் ஆண்டு ஏற்படுத்தப்பட்டதற்குப் பின்பு தேசிய கைத்தறி தினத்தின் 3வது பதிப்பு இந்த ஆண்டு அனுசரிக்கப்பட்டது.

  • இத்தினத்தின் கொண்டாட்டமானது நாட்டின் சமூகப் பொருளாதார வளர்ச்சிக்கு கைத்தறி ஆற்றிய பங்கை சுட்டிக் காட்டுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இத்தினம் நெசவாளர்களின் ஊதியத்தை அதிகரிப்பதற்காக கைத்தறியை ஊக்குவிக்கிறது. மேலும் நெசவாளர்களின் பெருமையை இத்தினம் மேம்படுத்துகிறது.
  • இந்தியாவில் கைத்தறித் தொழிற்சாலையின் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு மத்திய அரசாங்கமானது 2015 ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில் ஆகஸ்ட் 07 ஆம் தேதியை தேசிய கைத்தறி தினமாக அறிவித்தது.

 

ஆகஸ்ட் - 8
சர்வதேச பூனைகள் தினம்
  • ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 08 ஆம் தேதி சர்வதேச பூனைகள் தினம் அனுசரிக்கப்படுகிறது.
  • இத்தினம் சர்வதேச விலங்குகள் நல நிதியத்தினால் (International Fund for Animal Welfare) 2002ஆம் ஆண்டு மே  மாதம் ஏற்படுத்தப்பட்டது.
  • ஐரோப்பாவின் பெரும்பாலான நாடுகளில் உலக பூனைகள் தினமானது பிப்ரவரி 17 அன்று அனுசரிக்கப்படுகிறது. இரஷ்யாவில் மார்ச் 01 அன்று உலக பூனைகள் தினம் அனுசரிக்கப்பட்டது.
  • ஜப்பானில் பிப்ரவரி 22 அன்று உலக பூனைகள் தினம் அனுசரிக்கப்படுகிறது.

 

ஆகஸ்ட் - 09
வெள்ளையனே வெளியேறு இயக்க தினம்
  • 1942 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 08 அன்று பம்பாயில் (மும்பை) நடைபெற்ற அனைத்து இந்திய காங்கிரஸ் குழுக் கூட்டத்தில் மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி வெள்ளையனே வெளியேறு இயக்கத்தைத் தொடங்கினார். இதற்கு அடுத்த நாள் இந்திய தேசிய காங்கிரசை சேர்ந்த காந்தி, நேரு மற்றும் பிற முக்கியத் தலைவர்கள் ஆங்கிலேய அரசாங்கத்தினால் கைது செய்யப்பட்டனர்.

 

நாகசாகி தினம்
  • ஹிரோஷிமா நகரத்தின் மீது குண்டு வீசப்பட்டு 3 நாட்கள் கழித்து, 1945 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 09 அன்று இரண்டாவது அணு குண்டு (Fat Man) நாகசாகி நகரத்தின் மீது வீசப்பட்டது.

 

உலகின் பூர்வ குடிகளுக்கான சர்வதேச தினம்
  • 1962 ஆம் ஆண்டு ஜெனீவாவில் நடைபெற்ற பூர்வ குடிகளின் மீதான ஐ.நா. பணிக் குழுவின் முதலாவது சந்திப்பினை அங்கீகரிக்கும் விதமாக ஆகஸ்ட் 9 ஆம் தேதி உலகின் பூர்வ குடிகளுக்கான சர்வதேச தினமாக அனுசரிக்கப்படுகிறது.

  • 2018 ஆம் ஆண்டின் கருத்துருவானது, “பூர்வ குடிகளின் புலம்பெயர்வு மற்றும் இயக்கம்” என்பதாகும்.
  • ஐ.நா. பொதுச் சபையானது “பூர்வ குடிகளின் உரிமைகள்” மீதான A/RES/71/178 என்ற தீர்மானத்தை ஏற்றுக் கொண்டது. மேலும் ஐ.நா. பொதுச் சபையானது 2019 ஆம் ஆண்டை பூர்வ குடிகளின் மொழிகளுக்கான சர்வதேச ஆண்டாக பறைசாற்றுகிறது.

 

ஆகஸ்ட் - 10
உலக உயிரி எரிபொருள் தினம்
  • புதைபடிமம் அல்லாத எரிபொருளின் முக்கியத்துவத்தைப் பற்றி விழிப்புணர்வை ஏற்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு 2018 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 10 ஆம் தேதி உலகெங்கிலும் உலக உயிரி எரிபொருள் தினம் அனுசரிக்கப்படுகிறது (பசுமை எரிபொருள்).
  • மரபுசார் புதைபடிம எரிபொருளுக்கு மாற்றாக உள்ள புதைபடிமம் அல்லாத எரிபொருளின் முக்கியத்துவத்தை இத்தினம் சுட்டிக் காட்டுகிறது. மேலும் உயிரி எரிபொருள் துறையில் இந்திய அரசாங்கத்தால் எடுக்கப்பட்ட பல்வேறு முயற்சிகளை இத்தினம் சுட்டிக் காட்டுகிறது.
  • இந்தியாவில் கடந்த மூன்று வருடங்களாக மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயுத் துறை அமைச்சகமானது உலக உயிரி எரிபொருள் தினத்தை அனுசரிக்கிறது.

 

ஆகஸ்ட் - 11
மகள்களுக்கான தேசிய தினம்
  • மகள்கள் பிறக்கின்றதை சிறப்பிக்கும் விதமாக மகள்களுக்கான சர்வதேச தினம் அனுசரிக்கப்படுகிறது.
  • தாய் மற்றும் தந்தையர்கள் தங்கள் மகள்களின் மீது சிறந்த உறவுமுறையைக் கொண்டுள்ளனர். அவர்கள் தங்கள் மகள்களின் மீது கொண்டுள்ள உறவுமுறை போற்றப்படக் கூடியதாகும்.
  • மகள்களுக்கான தேசிய தினத்தின் அடைமொழியானது #National Daughters Day என்பதாகும். ஆனால் #Daughters என்ற மற்றொரு அடைமொழியும் உண்டு.

 

ஆகஸ்ட் - 12
சர்வதேச இளையோர் தினம்
  • மோதல்களை தடுத்தல் மற்றும் அவற்றை உருமாற்றுதல், அனைவரையும் உள்ளடக்கல், சமூக நீதி, நீடித்த அமைதி ஆகியவற்றிற்கு இளையோர்கள் ஆற்றிய பங்கை கௌரவிக்கும் விதமாக சர்வதேச இளையோர் தினம் அனுசரிக்கப்படுகிறது.

  • 1999 ஆம் ஆண்டில், ஐ.நா. பொதுச் சபையினால் ஆகஸ்ட் 12 ஆம் தேதி சர்வதேச இளையோர் தினமாக தேர்ந்தெடுக்கப்பட்டது.

 

ஆகஸ்ட் - 13
உறுப்பு தான தினம்
  • ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 13 ஆம் தேதி உறுப்பு தான தினம் கடைபிடிக்கப்படுகிறது. இத்தினத்தின் நோக்கம் குடிமக்கள் தங்களது இறப்பிற்குப் பின்பு உறுப்புகள் தானமாக வழங்குவதை ஊக்கப்படுத்துவதாகும். மேலும் இத்தினம் உறுப்பு தானத்தின் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • புது தில்லியில் 2010 ஆம் ஆண்டு மத்திய சுகாதாரம் மற்றும் குடும்பநல அமைச்சகமானது 6வது உலக மற்றும் முதலாவது இந்திய உறுப்பு தான தினம் மற்றும் உறுப்பு தான காங்கிரஸைத் தொடங்கியது.

 

சர்வதேச இடதுகை பழக்கமுடையோர் தினம்
  • இடது கை பழக்கமுடையோரின் தனித்தன்மை மற்றும் வலது கை பழக்கமுடையோரிலிருந்து அவர்களின் வேறுபட்ட தன்மை ஆகியவற்றை அனுசரிப்பதற்காக ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 13 ஆம் தேதி சர்வதேச இடதுகை பழக்கமுடையோர் தினம் அனுசரிக்கப்படுகிறது.
  • சர்வதேச இடதுகை பழக்கமுடையோர் நிறுவனத்தின் (Left handers International Inc) நிறுவனர் மற்றும் தலைவரான கேம்ப்பெல் என்பவரால் 1976 ஆம் ஆண்டில் இத்தினம் முதன்முறையாக அனுசரிக்கப்பட்டது.
  • இடது கை பழக்கமுடைய மக்களை சிறப்பிப்பதற்காக சர்வதேச இடதுகை பழக்கமுடையோர் தினம் ஏற்படுத்தப்பட்டது. மேலும் வலதுகை பழக்கமுடையோர் அதிகமாக உள்ள உலகில் இடது கை பயன்பாட்டின் சாதகங்கள் மற்றும் பாதகங்கள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்துவது இத்தினத்தின் நோக்கமாகும்.

 

 ஆகஸ்ட் - 14

சுதந்திர தினம் - பாகிஸ்தான்
  • பாகிஸ்தானின் சுதந்திர தினம் ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 14 ஆம் தேதி அனுசரிக்கப்படுகிறது. 1947 ஆம் ஆண்டின் ஆகஸ்ட் 14 அன்று பாகிஸ்தான் ஆங்கிலேயர் ஆட்சியிடமிருந்து சுதந்திரம் அடைந்ததை அனுசரிக்கிறது.
  • பாகிஸ்தான் தனி நாடாக உருவான போது கிழக்கு மற்றும் மேற்கு பாகிஸ்தான் என்ற இரு பகுதிகள் இருந்தன. 1971 ஆம் ஆண்டு கிழக்கு பாகிஸ்தானானது மேற்கு பாகிஸ்தானிலிருந்து பிரிந்து வங்க தேசம் என்ற தனி நாடாக உருவெடுத்தது.

 

ஆகஸ்ட் - 15
சுதந்திர தினம் - இந்தியா
  • 1947 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15 ஆம் தேதி இந்தியா ஆங்கிலேயரிடமிருந்து சுதந்திரமடைந்ததை நினைவுகூறும் விதமாக ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 15 ஆம் தேதி இந்திய சுதந்திர தினம் அனுசரிக்கப்படுகிறது. இந்தியாவில் ஆகஸ்ட் 15 ஆம் தேதி பொது விடுமுறையாகும்.
  • இந்திய தேசிய காங்கிரஸின் ஒத்துழையாமை இயக்கம் மற்றும் சுதந்திர போராட்டம் ஆகியவற்றைத் தொடர்ந்து இந்தியா ஆங்கிலேயரிடமிருந்து சுதந்திரம் அடைந்தது.
  • இந்திய விடுதலையானது இந்தியப் பிரிவினையுடன் ஒன்றிப் பொருந்துகிறது.

 

ஆகஸ்ட் - 19
உலக புகைப்பட தினம்
  • உலகம் முழுவதும் உள்ள புகைப்படம் எடுப்பவர்களை ஊக்குவிப்பதற்காக ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 19 ஆம் தேதி உலக புகைப்பட தினம் அனுசரிக்கப்படுகிறது. இத்தினம் ஒரு ஒற்றைப் புகைப்படத்தை ஒரு எளிய நோக்கத்துடன் பகிர்ந்து கொள்ளவும் அவர்களுடைய புகைப்பட உலகத்தை வெளி உலகத்துடன் பகிர்ந்து கொள்ளவும் ஊக்கமளிக்கிறது.

  • 1837 ஆம் ஆண்டில் பிரான்சைச் சேர்ந்த லூயிஸ் டக்யூரி மற்றும் ஜோசப் நைஸ்போர் ஆகியோரால் மேம்படுத்தப்பட்ட புகைப்பட செயல்முறையான டக்யூரியோடைப் கண்டுபிடிப்பிலிருந்து இத்தினம் உருவானது.
  • 1861 ஆம் ஆண்டில் தாமஸ் சுட்டோனால் முதலாவது நீடித்த வண்ண புகைப்படம் எடுக்கப்பட்டது.

 

உலக மனித நேய தினம்
  • ஒவ்வொரு நாளும் மனித நேயப் பணியாளர்கள் போர், பேரிடர் காலங்கள், ஆபத்தான தருணங்கள் மற்றும் அதுபோன்ற சூழ்நிலையில் சிக்கியுள்ளவர்களுக்குத் தேவையான உதவிகளை செய்து வருகின்றனர்.
  • மனித நேயப் பணிகளில் தங்கள் உயிரைப் பணயம் வைத்து பணியாற்றும் மனிதநேயப் பணியாளர்களின் சேவைகளை அங்கீகரிக்கும் விதமாக ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 19 ஆம் தேதி உலக மனித நேய தினம் அனுசரிக்கப்படுகிறது. மேலும் இத்தினம் மனிதநேயப் பணிகளில் மக்களை ஒன்றிணைத்து குரல் கொடுப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • ஈராக்கின் பாக்தாத்தில் அமைந்துள்ள ஐ.நா. தலைமையகத்தின் மீது 2003 ஆம் ஆண்டு நிகழ்த்தப்பட்ட அணுகுண்டுத் தாக்குதலின் நினைவு தினத்துடன் ஒன்றிப் பொருந்துமாறு ஐ.நா. பொதுச் சபையால் இத்தினம் ஏற்படுத்தப்பட்டது.
  • 2018 ஆம் ஆண்டிற்கான உலக மனிதநேய தினத்திற்கான பிரச்சாரமானது #NotATarget என்பதாகும்.

 

ஆகஸ்ட் - 20
உலக கொசுக்கள் தினம்
  • பெண் கொசுக்களின் மூலம் மனிதர்களுக்கிடையே மலேரியா பரவுவதை ஆங்கிலேய மருத்துவரான சர் ரொனால்டு ரோஸ் 1897 ஆம் ஆண்டு கண்டுபிடித்தார். இந்த கண்டுபிடிப்பின் நினைவாக ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 20 ஆம் தேதி உலக கொசுக்கள் தினம் அனுசரிக்கப்படுகிறது.

 

சத்பாவன திவாஸ் (நல்லிணக்க நாள்)
  • இந்தியாவின் முன்னாள் பிரதமரான இராஜீவ் காந்தியின் பிறந்த தினத்தின் நினைவாக ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 20 ஆம் தேதி சத்பாவன திவாஸ் அனுசரிக்கப்படுகிறது.
  • இராஜீவ் காந்தி இந்தியாவின் முதலாவது பிரதம அமைச்சரான ஜவஹர்லால் நேருவின் பேரன் ஆவார். மேலும் இவர் இந்திரா காந்தியின் மகனாவார்.
  • இவர் தனது தாயான இந்திரா காந்தியின் படுகொலைக்குப் பின்பு இந்தியாவின் பிரதமராக பொறுப்பேற்றார். இவர் இந்தியாவின் 6வது பிரதமராக 1984 ஆம் ஆண்டு முதல் 1989 ஆம் ஆண்டு வரை பணியாற்றினார்.

 

க்ஷய் உர்ஜா திவாஸ்
  • அக்ஷய் உர்ஜா திவாஸானது இந்தியாவில் புதுப்பிக்கக்கூடிய ஆற்றல்களின் வளர்ச்சி குறித்த விழிப்புணர்வுப் பிரச்சாரமாகும். இது 2004 ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 20 அன்று அனுசரிக்கப்படுகிறது.
  • இந்தியாவின் மத்திய புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் அமைச்சகமானது 2004 ஆம் ஆண்டில் அக்ஷய் உர்ஜா  திவாஸைத் தொடங்கி வைத்தது.
  • முதலாவது அக்ஷய் உர்ஜா திவாஸ் பிரச்சாரமானது 2004 ஆம் ஆண்டில் புது தில்லியில் நடத்தப்பட்டது. இந்த பிரச்சாரமானது 2005 ஆம் ஆண்டில் புதுதில்லியிலும் 2006 ஆம் ஆண்டில் நாக்பூரிலும் 2007 ஆம் ஆண்டில் ஹைதராபாத்திலும் 2008 ஆம் ஆண்டில் ஹரியானாவின் பஞ்ச் சுக்லாவிலும் நடத்தப்பட்டது.
  • சூரிய ஒளி ஆற்றல், காற்றாலை ஆற்றல், நீர்மின் ஆற்றல் போன்றவை அக்ஷய் உர்ஜா பிரச்சாரத்தின் சில எடுத்துக்காட்டுகளாகும்.

 

ஆகஸ்ட் - 21
உலக மூத்த குடிமக்கள் தினம்
  • ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 21 ஆம் தேதி உலக மூத்த குடிமக்கள் தினம் அனுசரிக்கப்படுகிறது.
  • உலக மூத்த குடிமக்கள் தினத்தை அனுசரிப்பதன் முக்கிய நோக்கங்கள் மூத்த குடிமக்களின் நிலை குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்துவது மற்றும் அவர்களுக்கு உதவி செய்வதாகும்.
  • இத்தினம் முதன்முறையாக ஐ.நா. பொதுச் சபையில் 1990 ஆம் ஆண்டு நவம்பர் 14 ஆம் தேதி அறிவிக்கப்பட்டது.
தீவிரவாதத்தினால் பாதிக்கப்பட்டோருக்கான சர்வதேச நினைவு மற்றும் அஞ்சலி தினம்
  • தீவிரவாதத்தினால் பாதிக்கப்பட்ட மற்றும் அவற்றிலிருந்து உயிர் பிழைத்தோர்களுக்கு ஆதரவு அளித்தல் மற்றும் அவர்களை கௌரவிக்கும் விதமாக ஐ.நா. பொதுச் சபையானது ஆகஸ்ட் 21 ஆம் தேதியை தீவிரவாதத்தினால் பாதிக்கப்பட்டோருக்கான சர்வதேச நினைவு மற்றும் அஞ்சலி தினமாக அறிவித்துள்ளது. மேலும் இத்தினமானது அவர்களின் மனித உரிமைகள் மற்றும் அடிப்படை உரிமைகளைப் பாதுகாத்தல் மற்றும் ஊக்குவித்தல் ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டுள்ளது.
உலக தொழில் முனைவோர்கள் தினம்
  • ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 21 ஆம் தேதி உலக தொழில் முனைவோர்கள் தினம் அனுசரிக்கப்படுகிறது.
  • உலக தொழில் முனைவோர்கள் தினத்தின் நோக்கமானது உலகெங்கிலும் தொழில் முனைவுத் திறன், புத்தாக்கம் மற்றும் தலைமைப் பண்பு ஆகியவற்றிற்கான விழப்புணர்வை ஏற்படுத்துவதாகும்.
  • உலக தொழில் முனைவோர்கள் தினமானது நிறுவனர்கள், மேலாளர்கள், உற்பத்தியாளர்கள், ஒப்பந்ததாரர்கள், வடிவமைப்பாளர்கள் ஆகியேர்களின் தினமாகும்.
  • சர்வதேச தொழில்மன்ற கூட்டணியானது (AIBA - The Alliance of International Business Association) உலக தொழில் முனைவோர்கள் தினத்தை ஊக்கப்படுத்த உலகெங்கிலும் நிகழ்ச்சிகளை நடத்த ஒவ்வொருவரையும் அழைக்கிறது.

 

ஆகஸ்ட் – 22
மெட்ராஸ் தினம்
  • மெட்ராஸ் தினம் என்பது இந்தியாவில் தமிழ்நாட்டில் மெட்ராஸ் நகரம் உருவாக்கப்பட்டதை நினைவு கூறுவதற்காக அனுசரிக்கப்படும் விழாவாகும்.

  • இத்தினம் ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 22 ஆம் தேதி அனுசரிக்கப்படுகிறது. 1639 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 22 ஆம் தேதி ஆங்கிலேயரின் கிழக்கிந்தியக் கம்பெனியால் மதராசப்பட்டினம் அல்லது சென்னை பட்டினம் விலைக்கு வாங்கப்பட்டது.
  • அன்று முதல் இத்தினம் ஒவ்வொரு ஆண்டும் தவறாமல் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

 

ஆகஸ்ட் - 23
அடிமை வணிகம் மற்றும் அவற்றை ஒழித்தலை நினைவு கூறுவதற்கான சர்வதேச தினம்
  • 1791 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 22 மற்றும் 23 ஆம் தேதிகளுக்கு இடைப்பட்ட நள்ளிரவில் சாந்தோ டொமிங்கோவில் ஏற்பட்ட கிளர்ச்சியானது அட்லாண்டிக் பெருங்கடலில் நடைபெறும் அடிமை வணிகத்திற்கு எதிரான கிளர்ச்சியின் தொடக்கமாகும்.
  • அனைத்து மக்களின் நினைவுகளிலும் அடிமை வணிகத்தின் துன்பத்தை எடுத்துரைக்கும் நோக்கத்துடன் அடிமை வணிகம் மற்றும் அவற்றை ஒழித்தலை நினைவு கூறுவதற்கான சர்வதேச தினம் அனுசரிக்கப்படுகிறது.
  • அட்லாண்டிக் பெருங்கடலில் நடைபெற்ற அடிமை வணிகத்தின் நினைவாக யுனெஸ்கோவினால் இத்தினம் ஏற்படுத்தப்பட்டது.

 

ஆகஸ்ட் - 26
உலக சமஸ்கிருத தினம்
  • இத்தினம் பழங்கால இந்திய மொழியான சமஸ்கிருதத்தை ஊக்குவித்தல் மற்றும் உயிர்ப்பூட்டுதல் ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டு அனுசரிக்கப்படுகிறது.
  • இந்து நாள்காட்டியில் சரவண மாதத்தின் பூர்ணிமா தினமான “சரவண பூர்ணிமா” அன்று உலக சமஸ்கிருத தினம் ஒவ்வொரு ஆண்டும் அனுசரிக்கப்படுகிறது.
  • சமஸ்கிருத மொழியானது இந்து மதத்தின் முதன்மை மொழியாக அறியப்படுகிறது. மேலும் இது மற்ற மொழிகளின் அடிப்படையாகவும் விளங்குகிறது.
  • இத்தினம் சமஸ்கிருத மொழியின் முக்கியத்தும் குறித்த பல்வேறு கருத்தரங்குள் மற்றும் நிகழ்ச்சிகள் மூலம் இத்தினம் அனுசரிக்கப்படுகிறது. சமஸ்கிருத தினம் முதன்முறையாக 1969 ஆம் ஆண்டில் அனுசரிக்கப்பட்டது.

 

ஆகஸ்ட் - 29
அணு ஆயுத சோதனைக்கு எதிரான சர்வதேச தினம்
  • 2009 ஆம் ஆண்டு டிசம்பர் 02 அன்று ஐ.நா. பொதுச் சபையின் 64-வது சந்திப்பானது ஆகஸ்ட் - 29 ஆம் தேதியை அணுஆயுத சோதனைக்கு எதிரான சர்வதேச தினமாக அறிவித்தது.
  • அணு ஆயுத சோதனை அல்லது இதர அணு ஆயுத சோதனை மற்றும் அணு ஆயுதமற்ற உலகத்தை அடைவதற்கான இலக்குகளில் ஒன்றான அணு ஆயுத ஒழிப்பின் தேவை ஆகியவை குறித்த கல்வி மற்றும் விழிப்புணர்வை அதிகப்படுத்த இத்தீர்மானம் எடுத்துரைக்கிறது.
  • 1991 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 29 ஆம் தேதி செமிபாலத்தின்ஸ்க் அணு ஆயுத சோதனைத் தளம் மூடப்பட்டதின் நினைவாக அதிக எண்ணிக்கையிலான ஆதரவாளர்கள் மற்றும் துணை ஆதரவாளர்களுடன் கஜகஸ்தான் குடியரசினால் இத்தீர்மானம் முன்மொழியப்பட்டது.
தேசிய விளையாட்டுகள் தினம்
  • இந்தியா முழுவதும் ஆகஸ்ட் 29 அன்று தேசிய விளையாட்டுகள் தினம் கடைபிடிக்கப்படுகிறது. இந்தியாவின் புகழ்பெற்ற ஹாக்கி வீரர்களுக்கு மரியாதை செலுத்துவதை இத்தினம் குறிக்கிறது.

  • மேலும் இத்தினம் தயான் சந்த்தின் பிறந்த தினத்தையும் குறிக்கிறது. புகழ்பெற்ற ஹாக்கி வீரரான தயான் சந்த் 1928, 1932 மற்றும் 1931-ல் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டிகளில் இந்தியாவின் சார்பாக பங்குபெற்று தங்கப் பதக்கங்களை வென்றுள்ளார்.
தெலுங்கு மொழி தினம்
  • இந்திய குடியரசின் ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 29 ஆம் தேதி தெலுங்கு மொழி தினம் அனுசரிக்கப்படுகிறது.
  • தெலுங்கு மொழிக் கவிஞரான கிடுகு வெங்கட இராமமூர்த்தியின் பிறந்த தினத்துடன் ஒன்றிப் பொருந்துமாறு இத்தினம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.
  • ஆந்திரப் பிரதேச மாநில அரசானது தெலுங்கு மொழியை வளர்ச்சியடையச் செய்யும் நோக்கத்துடன் நிதி மற்றும் பரிசுப் பொருட்களை வழங்குகிறது.

 

ஆகஸ்ட் - 30
கட்டாய வெளியேற்றத்திற்கு உள்ளானவர்களுக்கான சர்வதேச தினம்
  • ஆகஸ்ட் 30 ஆம் தேதியன்று ஐக்கிய நாடுகள் சபையானது கட்டாய வெளியேற்றத்திற்கு உள்ளானவர்களுக்கான சர்வதேச தினத்தை அனுசரிக்கிறது.
  • 2010 ஆம் ஆண்டு டிசம்பர் 21 அன்று ஐ.நா. பொதுச் சபையானது 65/209 என்ற தீர்மானத்தின் மூலம் இத்தினத்தை உருவாக்கியது.
  • நாடு முழுவதும் கட்டாய வெளியேற்றம் அல்லது வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டவர்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவது இத்தினத்தின் நோக்கமாகும்.

 

சிறு தொழிற்துறை தினம்
  • சிறு தொழிற்துறைகளை ஆதரவளித்தல் மற்றும் ஊக்கப்படுத்துதல் ஆகியவற்றிற்காக ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 30 ஆம் தேதி சிறு தொழிற்துறை தினம் அனுசரிக்கப்படுகிறது.
  • தற்பொழுது உள்ள சிறு, நடுத்தர மற்றும் பெரிய நிறுவனங்களுக்கு சமமான வளர்ச்சியை அளிப்பதற்கு எடுக்கப்பட்ட முயற்சியின் ஒரு பகுதியாக சிறு தொழிற்துறை தினம் அனுசரிக்கப்படுகிறது.
  • இத்தினத்தை அனுசரிப்பதன் மூலம் மாவட்டங்கள் தங்களது வளர்ச்சித் திறனை வெளிப்படுத்த முடியும். மேலும் நடப்பு ஆண்டில் மாவட்ட வளர்ச்சிக்கான வாய்ப்புகளை இத்தினத்தை அனுசரிப்பதன் மூலம் பெற முடியும்.
  • இந்திய அரசாங்கமானது சிறு மற்றும் புதிதாக தொழில் தொடங்குபவர்களை

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்