PREVIOUS
வரிசை எண் | தேதி | முக்கிய தினம் |
1 | ஜனவரி 4 | உலக பிரெய்லி தினம் (லூயிஸ் பிரெய்லியின் பிறந்த தினம்) நோக்கம் : கண் பார்வையற்றோர் எழுத மற்றும் வாசிக்க ஏதுவான பிரெய்லி மொழியை கண்டுபிடித்த லூயிஸ் பிரெய்லியின் முயற்சியை அங்கீகரித்தல். |
2 | ஜனவரி 6 | போரில் பெற்றோரை இழந்தோருக்கான உலக தினம் நோக்கம்: குறிப்பிட்ட பாதிக்கப்பட்டோரின் அவலநிலையை நிலையை அங்கீகரிக்கும் வகையில் சர்வதேச சமூகங்களை இயலச் செய்தல். |
3 | ஜனவரி 9 | பிரவாஸி பாரதிய திவாஸ் (வெளிநாடு வாழ் இந்தியர் தினம்) நோக்கம் : இந்தியாவின் வளர்ச்சிக்கான வெளிநாடு வாழ் இந்தியர்களின் பங்களிப்பை பெருமைப்படுத்துதல். அதோடு, ஜனவரி 9, 1915 அன்று காந்தியடிகள் தென்னாப்பிரிக்காவிலிருந்து இந்தியாவிற்குத் திரும்பியதனை நினைவு கூர்தல். கடைபிடிக்கும் அமைப்பு : இந்திய அரசு. |
4 | ஜனவரி 10 | உலக இந்தி தினம் நோக்கம்: 1975 ஆம் ஆண்டு நாக்பூரில் நடைபெற்ற உலக இந்தி மாநாட்டை குறித்தல் மற்றும் உலகளவில் இந்தி மொழியை பரப்புதல். கடைபிடிக்கும் அமைப்பு : வெளியுறவுத்துறை அமைச்சகம் |
5 | ஜனவரி 11 | லால் பகதூர் சாஸ்திரி இறந்த தினம் |
6 | ஜனவரி 12 | தேசிய இளைஞர் தினம் நோக்கம் : சுவாமி விவேகானந்தரின் பிறந்த தினத்தை நினைவு கூர்தல். கடைபிடிக்கும் அமைப்பு : இந்தியா |
7 | ஜனவரி 15 | இந்திய இராணுவ தினம் நோக்கம் : ஜனவரி 15, 1949 அன்று இந்தியாவிற்கான கடைசி ஆங்கிலேயே ராணுவத் தளபதியான சர் பிரான்சிஸ் பட்செர்ரிடமிருந்து, லெப்டினன்ட் ஜெனரல், K.M.கரியப்பா இராணுவத் தளபதி பொறுப்பைப் பெற்றுக் கொண்டதை அங்கீகரித்தல் கடைபிடிக்கும் அமைப்பு : இந்தியா |
8 | ஜனவரி 23 | நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் பிறந்த தினம்/ நாட்டுப் பற்றுக்கான தேசிய தினம் / தேஷ் பிரேம் திவாஸ் கடைபிடிக்கும் அமைப்பு : இந்தியா |
9 | ஜனவரி 24 | தேசிய பெண் குழந்தைகள் தினம் நோக்கம் : சமூகத்தில் பெண் குழந்தைகள் சந்திக்கும் சமத்துவமின்மையைப் பற்றி பொது மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்துதல். கடைபிடிக்கும் அமைப்பு : இந்தியா |
10 | ஜனவரி 25 | தேசிய வாக்காளர் தினம் (2011லிருந்து) நோக்கம் : அரசியல் செயல்முறைகளில் அதிக அளவில் பங்கெடுப்பதற்காக இளைஞர்களை ஊக்குவித்தல். கடைபிடிக்கும் அமைப்பு : இந்தியா தேசிய சுற்றுலா தினம் நோக்கம் : நாட்டின் பொருளாதாரத்தில் சுற்றுலாத் துறையின் முக்கியவத்துவத்தைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துதல். கடைபிடிக்கும் அமைப்பு : இந்தியா |
11 | ஜனவரி 26 | சர்வதேச சுங்கத் தீர்வை தினம் நோக்கம் : எல்லைப் பாதுகாப்பை நிர்வகித்தலில் சுங்க அமைப்புகள் மற்றும் அதிகாரிகளின் செயல்பாட்டை அங்கீகரிப்பதற்காக கடைபிடிக்கும் அமைப்பு : உலக சுங்க அமைப்பு குடியரசு தினம் (1950லிருந்து) நோக்கம் : ஜனவரி 26, 1950 அன்று செயல்பாட்டிற்கு வந்த இந்திய அரசியலமைப்பைப் பெருமைப்படுத்துதல். கடைபிடிக்கும் அமைப்பு : இந்தியா |
12 | ஜனவரி 27 | யூதப் படுகொலையினை நினைவு கூர்வதற்கான சர்வதேச தினம் நோக்கம்: இரண்டாம் உலகப்போரின்போது நடந்த யூதப் படுகொலையை நினைவு கூர்தல் கடைபிடிக்கும் அமைப்பு : யுனெஸ்கோ |
13 | ஜனவரி 28 | தரவு பாதுகாப்பிற்கான தினம் நோக்கம்: தரவுகளைப் பாதுகாப்பதற்கான சிறந்த செயல்முறைகளைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துதல் மற்றும் அவற்றை ஊக்குவித்தல் கடைபிடிக்கும் அமைப்பு : அமெரிக்கா, கனடா, இந்தியா, 47 ஐரோப்பிய நாடுகள் லாலா லஜபதி ராய் பிறந்த நாள் |
14 | ஜனவரி 30 | தியாகிகள் தினம் நோக்கம் : இந்திய இறையாண்மையைப் பாதுகாப்பதற்காக தன் இன்னுயிரை மாய்த்தவர்களை பெருமைப்படுத்துதல் & மகாத்மா காந்தியடிகளின் இறந்த தினத்தை அனுசரித்தல். கடைபிடிக்கும் அமைப்பு : இந்தியா |
15 | ஜனவரி 31 | தேசிய பேரிடர் மீட்புப்படை தோன்றிய தினம் நோக்கம் : தேசிய பேரிடர் மீட்புப்படையின் பேரிடர் கால செயல்பாடுகளை அங்கீகரித்தல். கடைபிடிக்கும் அமைப்பு : இந்திய அரசு |
16 | ஜனவரி 11 - 17 | சாலை பாதுகாப்பு வாரம் நோக்கம் : சாலைப் பாதுகாப்பு, வாகன ஒட்டு விதிகள் மற்றும் எச்சரிக்கைகளைப் பற்றிய அறிவை வளர்த்தல் கடைபிடிக்கும் அமைப்பு : சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சகம் |
17 | ஜனவரி மாதத்தின் கடைசி ஞாயிற்றுக் கிழமை | உலக தொழுநோய் தினம் நோக்கம் : உலக தொழுநோய் அல்லது ஹான்சனின் நோய் பற்றிய பொது விழிப்புணர்வை அதிகரித்தல். கடைபிடிக்கும் அமைப்பு : அரசு சாரா நிறுவனங்கள் |