PREVIOUS
வரிசை எண் | தேதி | முக்கிய தினங்கள் |
1 | பிப்ரவரி 1 | இந்தியக் கடலோரக் காவல் படை தினம் நோக்கம்: இந்திய கடலோரப் பகுதிகளைப் பாதுகாத்தல் மற்றும் பிராந்திய கடல்பகுதிகள் (Territorial Waters), தொடர்ச்சியான மண்டலம் (Contiguous Zone), பிரத்தியேக பொருளாதார மண்டலம் (Exclusive Economic Zone) ஆகியவற்றை உள்ளடக்கிய பகுதிகளில் கடல்சார் சட்டங்களை அமல்படுத்தல் கடைபிடிக்கும் அமைப்பு: இந்திய அரசு |
2 | பிப்ரவரி 2 | உலக ஈரநிலங்கள் தினம் நோக்கம்: ஈரான் நாட்டிலுள்ள ராம்சார் (காஸ்பியன் கடற்கரையில் அமைந்துள்ள நகரம்) நகரில் 1971, பிப்ரவரி 2 அன்று நடைபெற்ற ஈர நிலங்கள் மீதான மாநாட்டில் (ராம்சார் மாநாடு) கையெழுத்திட்ட தினத்தைக் குறித்தல். |
3 | பிப்ரவரி 4 | உலக புற்றுநோய் தினம் நோக்கம்: புற்றுநோயை தடுத்தல், கண்டறிதல் மற்றும் புற்றுநோய்க்கான மருத்துவத்தைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துதல். கடைபிடிக்கும் அமைப்பு: உலக சுகாதார நிறுவனம் |
4 | பிப்ரவரி 5 | பாதுகாப்பான இணைய தினம் நோக்கம்: ஆன்லைன் தொழில்நுட்பங்கள் மற்றும் கைபேசி ஆகியவற்றில் பாதுகாப்பான மற்றும் மிகவும் பொறுப்புடைமையுடைய பயன்பாட்டை குறிப்பாக குழந்தைகள் மற்றும் இளைஞர்களிடையே ஊக்குவித்தல். கடைபிடிக்கும் அமைப்பு: Insafe - INHOPE நெட்வொர்க் |
5 | பிப்ரவரி 6 | பெண் பிறப்புறுப்பு சிதைத்தலின் பூஜ்ஜிய சகிப்புத் தன்மைக்கான சர்வதேச தினம் நோக்கம்: பெண் பிறப்புறுப்பு சிதைப்பைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துதல் மற்றும் இந்நடைமுறையை ஒழித்தலை ஊக்குவித்தல். கடைபிடிக்கும் அமைப்பு: UNICEF (ஐக்கிய நாடுகளின் சிறுவர் நிதியம்) |
6 | பிப்ரவரி 10 மற்றும் ஆகஸ்ட் 10 | தேசிய குடற்புழு நீக்க தினம் நோக்கம்: பள்ளிகள் மற்றும் அங்கன்வாடிகளிலுள்ள 1 முதல் 19 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு குடற்புழுவை நீக்கல். கடைபிடிக்கும் அமைப்பு: இந்திய அரசு |
7 | பிப்ரவரி 11 | அறிவியலில் மகளிர் மற்றும் பெண்களுக்கான (Women & Girls) சர்வதேச தினம் நோக்கம்: அறிவியல் துறையில் பெண்களின் சாதனை; சமமான அணுகல் (Equal access) மற்றும் பங்களிப்பை சிறப்பித்துக் காட்டுதல். கடைபிடிக்கும் அமைப்பு: ஐ.நா. |
8 | பிப்ரவரி 12 | தேசிய உற்பத்தித் திறன் தினம் நோக்கம்: தற்காலத்திற்குத் தொடர்புடைய கருத்துருக்களுக்கேற்ப உற்பத்தி உபகரணங்கள் & தொழில் நுட்பங்களை செயலாக்கம் செய்வதற்குப் பங்குதாரர்களை ஊக்கப்படுத்துதல். கடைபிடிக்கும் அமைப்பு: தேசிய உற்பத்திக் கழகம் |
9 | பிப்ரவரி 13 | உலக வானொலி தினம் நோக்கம்: நம் வாழ்க்கையில் வானொலியின் பங்களிப்பை நினைவு கூர்தல். கடைபிடிக்கும் அமைப்பு: யுனெஸ்கோ சரோஜினி நாயுடு பிறந்த தினம் – இந்தியாவின் நைட்டிங்கேல் என அறியப்படுபவர். |
10 | பிப்ரவரி 20 | சமூக நீதிக்கான உலக தினம் நோக்கம்: வறுமை, விலக்கல் (Exclusion), வேலையின்மை போன்ற பிரச்சினைகளை சமாளிப்பதற்கான முயற்சிகளை ஊக்குவித்தல். கடைபிடிக்கும் அமைப்பு: ஐ.நா. |
11 | பிப்ரவரி 21 | சர்வதேச தாய்மொழி தினம் நோக்கம்: மொழி மற்றும் கலாச்சாரப் பன்முகத் தன்மை & பன்மொழி ஆகியவற்றைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தல். கடைபிடிக்கும் அமைப்பு: யுனெஸ்கோ |
12 | பிப்ரவரி 22 | உலக சிந்தனை தினம் நோக்கம்: உலக நாடுகள் அனைத்திலுமுள்ள தங்களது சகோதரிகளைப் (மற்றும் சகோதரர்கள்) பற்றி எண்ணுதல், அதனை வழிகாட்டுதல் பற்றிய பொருள், மற்றும் அதன் உலகளாவிய விளைவுகளைப் பற்றி சிந்தித்தல். கடைபிடிக்கும் அமைப்பு: வாக் (World Association for Girl Guides and Girl Scouts - WAGGG) |
13 | பிப்ரவரி 24 | மத்திய கலால் தீர்வை தினம் நோக்கம்: ஊழலை ஒழிப்பதற்காக இந்தியா முழுவதும் சிறப்பாக பணி மேற்கொள்வதற்காக கலால் தீர்வைத் துறையினரை ஊக்குவித்தல் கடைபிடிக்கும் அமைப்பு: இந்திய அரசு |
14 | பிப்ரவரி 27 | உலக அரசு சாரா நிறுவனங்கள் தினம் நோக்கம்: உலகம் முழுவதும் அரசு சாரா நிறுவனங்களைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தல் மற்றும் அவைகளினுடைய முக்கியத்துவத்தை அங்கீகரித்தல். கடைபிடிக்கும் அமைப்பு: அரசு சாரா நிறுவனங்கள் |
15 | பிப்ரவரி 28 | தேசிய அறிவியல் தினம் நோக்கம்: 1982ல் சர்.சி.வி.இராமனால் கண்டுபிடிக்கப்பட்ட ராமன் விளைவை நினைவு கூர்தல். கடைபிடிக்கும் அமைப்பு: இந்திய அரசு |
16 | பிப்ரவரி மாதத்தின் கடைசி நாள் | உலக அரிதான நோய்கள் தினம் நோக்கம்: அரிதான நோய்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துதல், அரிதான நோய்களுடைய தனிநபர்கள் மற்றும் அவர்களுடைய குடும்பத்தினருக்கு மருத்துவ சிகிச்சை மற்றும் மருத்துவ ஆலோசனைகள் ஆகியவற்றிற்கான அணுகலை மேம்படுத்துதல். கடைபிடிக்கும் அமைப்பு: யூராய்ட்ஸ் (அரிதான நோய்களுக்கான ஐரோப்பிய நிறுவனம் - EURORDIS ) |