TNPSC Thervupettagam

முட்டாளும் முற்றாளும்

April 1 , 2021 1216 days 673 0
  • முட்டாள் என்பது தமிழ்ச்சொல். சிலையைப் பல்லக்கில் வைத்துத் தூக்கி வருகிறவர்கள், பல்லக்கைக் கீழே இறக்காமல் இளைப்பாறுவதற்காக இருபுறமும் மரத்தால் முட்டுக் கொடுப்பார்கள்.
  • அவர்களுக்கு அந்த ஒரு வேலையைத் தவிர வேறு வேலை தெரியாது. இவர்கள் முட்டு + ஆள் - முட்டாள்.
  • முட்டாள் என சித்திரிக்கப்பட்டவர்களால்தான் உலகம் பல மாற்றங்களை கண்டியிருக்கிறது.
  • தாய், தன்னை முட்டாள் எனச் சொன்னதற்காக துப்பாக்கியால் சுட்டுக்கொள்ள முயற்சித்தான் ஒரு சிறுவன். ஒரு முறையல்ல மூன்று முறை. என்ன அதிர்ஷ்டம் பாருங்கள்! மூன்று முறையும் அந்த துப்பாக்கி சரியாக வேலை செய்யவில்லை.
  • முட்டாள் என அழைக்கப்பட்ட அந்த சிறுவன்தான், பிற்காலத்தில் நவாபுகளை வென்று ஆங்கிலேய கிழக்கிந்திய கம்பெனி இந்தியாவில் காலூன்ற காரணமாக இருந்தான். அவன்தான் ஆற்காட்டு வீரர் என அழைக்கப்படும் ராபர்ட் கிளைவ்.
  • முற்றன் என்பதற்கு முழுமையானவன் என்று பொருள். இச்சொல்லை தேவாரம், "முற்றிலாதானை முற்றனே யென்று மொழியினும்' எனப் பாடியுள்ளது.
  • முற்று - முற்றன் அதாவது முழு நிறைவானவன்; முற்றும் - முற்றாமை ; முற்றாமை - முடிவு பெறாமை ; முற்று + ஆ - முற்றா; முற்றவை - அறிவால் முதிர்ந்தோர் கூடிய அவை. முற்றறிவு என்பது முழுதுணரும் அறிவு.
  • முற்றறிவன் என்றால் எல்லாம் அறிந்தவன். முற்று + ஆள் = முழுவதும் ஆள். இதற்கு முழுமகன் என்றொரு பொருளுண்டு. முழுமகன் என்றால் "அறிவிலி' என்கிறது திவாகர நிகண்டு.
  • முதல் நூற்றாண்டின் மிகச்சிறந்த மனிதன் ஜூலியஸ் சீசர். இவர்தான் முதலில் நாட்காட்டி முறையை அறிமுகப்படுத்தினார். வருடத்திற்கு 365டீ நாட்கள் என நிர்ணயிக்கப்பட்டதும் இவர் காலத்தில்தான்.
  • சீசருக்கு முந்தைய காலத்தில் நாட்காட்டி முறை இருந்தாலும் அது சந்திரனை அடிப்படையாகக் கொண்டு இருந்தது. சீசர் சூரியனை அடிப்படையாகக் கொண்ட நாட்காட்டி முறையினை அறிமுகப்படுத்தினார்.
  • இந்த நாட்காட்டியானது பத்து மாதங்களைக் கொண்டும் வருடத்தின் முதல் மாதமாக ஏப்ரலை கொண்டும் இருந்தது. ஏப்ரல் என்பதற்கு கிரேக்க மொழியில் தொடக்கத்திலிருந்து எனப் பொருள்படும். இந்த நாட்காட்டி 1581 வரை நடைமுறையிலிருந்தது.
  • 1582 ஆம் ஆண்டு தொடக்கத்தில் போப் கிரிகோரி புதிய நாட்காட்டி ஒன்றை அறிமுகப்படுத்தினார்.
  • இந்த நாட்காட்டி 12 மாதங்களைக் கொண்டும் முதல் மாதமாக ஜனவரியைக் கொண்டும் பயன்பாட்டிற்கு வந்தது. அந்த நாட்காட்டிதான் இன்றும் நடைமுறையில் இருக்கிறது.
  • உலகில் பல வகையான நாட்காட்டிகள் உண்டு. டிசம்பர் 21 உடன் முடிந்த மாயன் நாட்காட்டி, இஸ்லாமிய நாடுகளில் அரபிக் நாட்காட்டி, சீன நாட்காட்டி, தமிழ் நாட்டில் திருவள்ளுவர் நாட்காட்டி என பலவகையான நாட்காட்டிகள் பயன்பாட்டில் இருக்கின்றன.
  • இந்தியாவில் மொகலாய மன்னன் ஒளரங்கசீப் காலம் வரைக்கும் கனிஷ்கர் அறிமுகப்படுத்திய சக ஆண்டு நாட்காட்டிதான் நடைமுறையில் இருந்தது.
  • ஆங்கில கிழக்கிந்திய கம்பெனி வருகைக்குப்பின் ஆங்கில நாட்காட்டி நடைமுறைக்கு வந்தது. இருப்பினும் நம் நாட்டின் தேசிய காலண்டரும் சக நாட்காட்டிதான்.

முட்டாள்கள் நாள்

  • ஐரோப்பிய நாடுகளில் இன்றும் இரண்டு விதமான நாட்காட்டிகள் பயன்பாட்டில் இருக்கின்றன. ஒரு பிரிவினர் ஜனவரி முதல் தேதியைப் புத்தாண்டு தினமாகக் கொண்டாடி மகிழ்கின்றனர். மற்றொரு பிரிவினர் ஏப்ரல் முதல் தேதியைப் புத்தாண்டாக கொண்டாடுகின்றனர்.
  • பத்தொன்பதாம் நூற்றாண்டு தொடக்கத்தில் ஆங்கில மொழியை தாய்மொழியாக் கொண்ட நாடுகள் ஒன்று கூடி ஒரு முடிவை எடுத்தன. "ஜனவரி முதல் தேதியே புத்தாண்டு தினம்.
  • இதை ஏற்க மறுத்து ஏப்ரல் முதல் தேதியைக் கொண்டாடுபவர்கள் முட்டாள்கள்' எனக் கூறின. அது முதல் ஏப்ரல் முதல் தேதி "முட்டாள் தின'மாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.
  • இந்தியாவின் முதல் பிரதமர் ஜவாஹர்லால் நேரு, ஏப்ரல் முதல் தேதி முட்டாள் தினம் எனச் சித்திரிப்பதை ஏற்க மறுத்தார். அதன்படி ஏப்ரல் முதல் தேதியில் புரட்சிகரமான ஒரு திட்டத்தை நடைமுறைப்படுத்த விரும்பினார்.
  • 1957-ஆம் ஆண்டு ஏப்ரல் முதல் தேதி அவர் "ஏப்ரல் முதல் தேதியை உலகம் எப்படிப் பார்க்கிறதோ, நாம் இந்த நாளை மாற்றத்தின் தினமாகப் பார்ப்போம்' என்றவர் காலணா, அரையணா, நாணய முறையை ஒழித்து, தசம நாணய (ரூபாய்) முறையை அறிமுகப்படுத்தினார்.
  • உலக அளவிலான நாடாளுமன்ற விவாதத்தில் முட்டாள் சொல் பற்றிய விவாதமே மிகச்சிறந்த நகைச்சுவை விவாதமாகக் கருதப்படுகிறது.
  • ஒருமுறை ஜெர்மனி நாடாளுமன்றத்தில் பிஸ்மார்க், "இங்கே இருப்பவர்களில் பாதிப் பேர் முட்டாள்கள்' என்றார். அதற்கு பலத்த எதிர்ப்பு கிளம்பியது. உடனே அவரது கருத்தைத் திரும்பப் பெற்றுக்கொண்டு "இங்கே இருப்பவர்களில் பாதிப் பேர் முட்டாள்கள் அல்ல' என்றார்.
  • பிரெஞ்சு நாட்டுப் புரட்சியாளர் வால்டேர், "உலகில் வாழும் மனிதர்கள் எல்லோரும் புத்திசாலிகள் என நினைத்துக்கொண்டு இருந்துவிட்டேன், நான் ஒரு முட்டாள்' என்றார்.
  • நீதிமன்றத்தால், முட்டாள் என குற்றம் சாட்டப்பட்ட சாக்ரடீஸ், நஞ்சு பருகி மரணத்தைத் தழுவும் முன் "நான் ஒரு முட்டாள் என்கிறீர்கள். அப்படியானால் இனி இந்த உலகம் முட்டாள்களின் கீழ்தான் இயங்கபோகிறது' என்று கூறினார்.
  • அவரது கருத்துபடிதான் இன்றைய உலகம் இயங்கிக்கொண்டிருக்கிறது. ஆமாம், இன்றைய உலகத்தை இயக்கிக்கொண்டிருக்கும், கணினிக்கு நாம் சூட்டியிருக்கும் பெயர் "முட்டாள் இயந்திரம்' அல்லவா?

இன்று (ஏப். 1) முட்டாள்கள் நாள்.

நன்றி: தினமணி  (01 – 04 - 2021)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்