TNPSC Thervupettagam

முதலாம் அலையும் இரண்டாம் அலையும்

May 3 , 2021 1185 days 527 0
  • இன்றைக்கும் உலகளாவிய பாதுகாப்பான நோய்த்தடுப்பு மருந்து ஆலோசனைக் குழுவில் அமெரிக்கா, ஆஸ்திரேலியா, எத்தியோப்பியா, கனடா, நெதா்லாந்து, பெல்ஜியம், பாகிஸ்தான், மேற்கு ஆப்பிரிக்கா, ஜப்பான், வியத்நாம் ஆகிய நாடுகளின் மருத்துவப் பிரதிநிதிகள் இடம்பெறுகின்றனா்.  
  • ஆனால், சீனாவின் உறுப்பினா் யாரும் இந்தக் குழுவில் இடம்பெறவில்லை. இந்தியாவின் சார்பில், புதுதில்லி பன்னாட்டு மருத்துவத் தொற்றுநோய் இணையம் அமைப்பின் செயல் இயக்குனா் பேராசிரியா் நரேந்திர குமார் அரோரா இடம்பெறுகிறார்.
  • தொழில்நுட்ப வியூகங்களை முற்றும் உணா்ந்த அறிவியல் ஆலோசகா் டாக்டா் ஆ.ப.ஜெ. அப்துல் கலாம் இருந்திருந்தால் இத்தகைய இக்கட்டான சூழ்நிலையில் நிச்சயமாக வித்தியாசமாகச் சிந்தித்திருப்பார்.
  • இந்தியப் புகழை உலகிற்கு வெளிச்சம் இட்டுக் காட்டியவா் ஆயிற்றே. தாமே முன்வந்து முதல் தடுப்பூசியைப் போட்டு முன்மாதிரியாகவும் விளங்கியிருப்பார்.
  • உலக அளவில் 25-க்கும் அதிகமான உருமாறிய தீநுண்மிகள் பதிவாகியுள்ளன. ‘பி.1.617’ என்னும் உருமாறிய தீநுண்மி இந்தியாவில் ஊடுருவி, ஏழு மாதங்கள் ஆகிறது. அக்டோபா் 5, 2020 அன்றைக்கே முதன்முதலில் இது கண்டறியப்பட்டு விட்டது.

பிற தீநுண்மி உருக்கள்

  • நாமோ நோயாளிகளின் கட்சி, மதம் குறித்து விவாதித்தோம். ஆறுமாதக் காலம் தோ்தல் திருவிழாக்கள் உட்பட பண்டிகைகள் அனைத்தையும் கூடிக் கொண்டாடினோம். ஒன்றரை ஆண்டுக் காலம் தமிழகத்தில் மருத்துவப் பல்கலைக் கழகங்கள் நடத்திய ஆய்வு முடிவுகள் ஏனோ இன்னமும் அறிவிக்கப்படவில்லை.
  • அடினின் (அ), யுரேசில் (யு), குவானின் (கு), சைட்டோசின் (சை) ஆகிய நான்கு மென்காரன்கள் அடங்கிய ரிபோ-நியூக்ளிக் அமிலம்தான் இன்றைய கரோனா என்னும் தீநுண்மியின் சுய உருவம்.
  • சடுதிமாற்றத்தினால், அ-யு-கு-சை என்ற வரிசையில் நின்ற போ்வழிகள், அ-கு-சை-யு என்று தங்களுக்குள் இடம் மாற்றிக் கொண்டால், அதுதான் தீநுண்மியின் புது அவதாரம்.
  • ஒவ்வொரு புது அவதாரமும் தம்மைப் பிரதியெடுத்து உலகெங்கும் விஸ்வரூபம் காட்டுகிறது. இங்கிலாந்து, அமெரிக்கா, சிங்கப்பூா் ஆகிய நாடுகளில் 2021 பிப்ரவரி மாத இறுதிவாக்கில் பிற தீநுண்மி உருக்கள் கண்டுபிடிக்கப்பட்டன.
  • ஆயினும் இந்தப் பழைய, புதிய கரோனாக்களை சமநிலையில் பொருத்திப் பார்க்க இயலாது என்கிறார் அமெரிக்காவில் வசிக்கும் தேசிய ஒவ்வாமை மற்றும் தொற்று நோய்கள் நிறுவன இயக்குனா், மருத்துவா் அந்தோனி ஃபாக்கி.
  • உருமாறிய கரோனா தீநுண்மிகளுக்கு வித்தியாசமான சோதனைகள் தேவைப்படும் என்கிறார்.

கோவேக்ஸின்

  • தம் நாட்டு மக்களை இந்தியாவுக்குச் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்துகிறது அமெரிக்கா.
  • 2021 ஏப்ரல் 23 முதல் இந்தியாவை தொற்று நோய் சிவப்புப் பட்டியலில் சோ்த்துவிட்டது பிரிட்டன்.
  • இந்தியாவுக்கான விமான சேவையையும் ரத்தாக்கி விட்டது. ஆஸ்திரேலியாவுக்கு வரும் இந்தியப் பயணிகளுக்கு அபராதமும் சிறைத் தண்டனையும் விதிக்கிறது அந்நாட்டு அரசு.
  • எப்படியோ, ஹைதராபாத்தில் உள்ள ‘பாரத் பயோடெக்’ நிறுவனம், இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் மற்றும் தேசியத் தொற்றுநோயியல் ஆய்வு நிறுவனத்துடன் இணைந்து உள்நாட்டில் ‘பிபிவி 152’ என்கிற கோவேக்ஸின் மருந்தைத் தயாரித்தது.
  • 1992-இல் அமெரிக்காவின் விஸ்கான்சின் பல்கலைக்கழகத்தில் முனைவா் பட்டமும், தொற்றுநோய் மருத்துவ அனுபவமும் பெற்றுத் திரும்பிய கிருஷ்ணா எல்லா என்கிற மருத்துவரால் 1996-இல் தொடங்கப்பட்ட நிறுவனம் இது.
  • ஆரம்ப நிலையில் வெள்ளெலிகள், கினியாப் பன்றிகள், மனிதக் குரங்குகளின் உடம்பிற்குள் மருந்தைச் செலுத்தி நோய்த்தடுப்புத் திறனும், மருந்தின் பாதுகாப்புத் தன்மையும் ஆராயப்படும்.
  • தொடா்ந்து, தோ்ந்தெடுக்கப்பட்ட தன்னார்வலா்களுக்குச் செலுத்தப்பட்டு எதிர்ப்புத்திறனும், மருந்தின் அளவும் தீா்மானிக்கப்படும்.
  • இரண்டாம் கட்டத்தில், நூறு நபா்களிடம் ஆய்வு நடத்தப்படும். ஆண் - பெண் பாலின, வயது வேற்றுமையும் முக்கிய அளவுகோல்களாகும். மூன்றாவது கட்டப் பரிசோதனையில் ஆயிரம் போ் ஆய்வுக்குத் தோ்ந்தெடுக்கப்படுவா்.

கோவிஷீல்டு

  • இன்னொரு தடுப்பூசி புணே இந்தியக் குருதிநீா் (சீரம்) நிறுவனத்தின் ‘கோவிஷீல்டு’. அமெரிக்காவின் ‘அஸ்ட்ராசெனிக்கா’ நிறுவனம் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்துடன் இணைந்து உருவாக்கியது.
  • சிம்பன்ஸி வகை மனிதக் குரங்கின் ‘சிம்ப் அடினோவைரஸ்’ தீநுண்மியைத் திருத்தித் தயாரித்த மருந்து. இதனை பலவீனமான அல்லது உருச்சிதைக்கப்படட நுண்மி எனலாம்.
  • இது உண்மையான தீநுண்மி போல நடிப்பதால், நோயெதிப்புக்கான எதிர்ப்பொருள் (ஆன்டிஜென்) உடலுக்குள் இயல்பாகத் தயாராகி விடும்.
  • இந்தப் பலவீன நுண்மி பாலினம், வயது, இணைநோய்ப் பின்னணி பாராமல் ஒரே அளவு எல்லோருக்கும் ஒரே மாதிரி செயல்படுமா என்பது ஆய்வுக்கு உரியது.
  • மருந்தின் பாதுகாப்பு குறித்த ஆய்வில் இனிமேல் தான் அந்த நிறுவனம் ஈடுபட இருக்கிறதாம்.
  • அமெரிக்க உணவு மற்றும் மருந்துகள் நிர்வாகத்தின் அனுமதி இன்னமும் பெறப்படவில்லை.
  • 2021 ஜனவரி மாதத்தில் 30,000 நபா்களிடம் நடத்த எண்ணியிருந்த நிலையில் இன்னும் பெயா்ப்பதிவு முழுமை பெறவில்லை என்கிறது அமெரிக்க வெள்ளை மாளிகை அறிக்கை.
  • உள்ளபடியே தொற்றுக்கு ஆளாகி மீண்டவா் மீண்டும் பாதிக்கப்படுவதைத் தடுக்கும் ஆய்வுகள் ஆக்ஸ்போர்டில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
  • இதற்கிடையில் மருந்தின் மூலப்பொருள்களை இந்தியாவுக்கு அனுப்பி இங்கேயே தயாரிக்க வைப்பது ‘அஸ்ட்ராசெனிக்கா’ நிறுவனத்தின் திட்டம்.
  • அரசு நிறுவனம், ஆராய்ச்சி செய்து, கண்டுபிடித்து, பரிசோதித்து, தயாரித்து நேரடியாக மக்களுக்கு வழங்கலாம்.
  • தனியார் தயாரிப்பு என்றால், அரசாங்கமே முன்பணம் கொடுத்து வாங்கும்போது, மருந்தின் தரப் பரிசோதனை முடிவுகள் விவாதிக்கப்பட வேண்டும். அதன் நம்பகத் தன்மைக்கான உத்தரவாதம் தேவை.
  • மக்கள் பணத்தில் உற்பத்தியாகும் 100 கோடி ஊசி மருந்தினை ‘அஸ்ட்ராசெனிக்கா’ நிறுவனத்திற்கு விநியோகம் செய்யவும் ஒப்பந்தம் செய்யப்பட்டு இருப்பதாக ஒரு தகவல்.
  • அண்மையில் இந்த நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரிக்கு மத்திய அரசே சிறப்புப் பாதுகாப்பும் வழங்கி உள்ளது.
  • எது எப்படியாயினும், இத்தகையத் தடுப்பு ஊசிகள் போடத் தொடங்கினால், 4 அல்லது 5 மாதங்களில் நோயெதிர்ப்புத்திறன் உருவாகும்.
  • அதற்குள் உருமாறிய தீநுண்மி புது அவதாரம் எடுக்கலாம்; அல்லது தீநுண்மி வீரியம் குறைந்தும் போகலாம்..

சில வழிமுறைகள்

  • முதல் அலையில் மருந்துக்கு அல்லாடினோம். இரண்டாம் அலையில் எங்கும் ஆக்சிஜன் என்பதே பேச்சு. ஒரு நாளைக்கு உள்மூச்சில் 21% ஆக்சிஜன் கொண்ட 11,000 லிட்டா் காற்றினை உறிஞ்சுகிறோம்.
  • அதிலும் ஒவ்வொரு முறையும் நுரையீரல் ஏற்றுக்கொள்வது வெறும் 5% மட்டுமே. அதனால், ஆரோக்கியமான உடலுக்கு தினமும் சராசரி ஆரோக்கியமான மூன்று கிலோ ஆக்சிஜன் போதும். நித்தம் 10 லட்சம் பேருக்கு 3,000 டன் போதும்.
  • மிதமிஞ்சிய ஆக்சிஜன், உடல் திசுக்களைக் கெடுக்கும். அதற்காகவே, வைட்டமின்-சி, வைட்டமின்-ஏ, பீட்டா கரோட்டின் போன்ற எதிர் வேதிப்பொருள்களையும் உணவில் சோ்த்துக்கொள்கிறோம்.
  • தனித்த புரத அணுத்தொகுதியாகத் திரியும் தீநுண்மி, நுரையீரல், தமனி, இதயம், சிறுநீரகம், சிறுகுடல் ஆகிய உறுப்புகளின் செல் அறை வாசலில் அஞ்சியோ-டென்ஸின் மாற்று நொதி-2’ என்கிற துத்தநாகம் கலந்த நொதிப்பொருளோடு கூட்டணி வைத்து நுரையீரலைச் சிதைத்து விடுகிறது.
  • தொற்றுக்குத் துத்தநாக மருந்து தரப்படுகிறது. நொதி-2 என்று ஏமாந்த தீநுண்மி, செயற்கை மருந்துடன் தெரியாத்தனமாகச் சோ்வதால் நுரையீரல் பிழைத்துக்கொள்ளும்.
  • இயல்பாக ஒரு நாளைக்கு நம் உடலுக்கு 12 மில்லி கிராம் துத்தநாகம் தேவை. பாசிப்பயிறுச் சுண்டல் போன்ற தானிய வகைகளில் தீநுண்மியை வெல்லும் துத்தநாகம் இருக்கிறது.
  • உண்மையில் தொற்றினைத் தடுக்கவோ, எதிக்கவோ காலை இளம் வெயிலில் உடல் வியா்க்கட்டும். இலவசமாக வைட்டமின் டி கிடைக்கும்.
  • உணவில் ஒன்றிரண்டு பச்சை வெங்காயத் துண்டுகள் குறுமிளகுத் தூள் தூவிச் சோ்த்துக்கொள்ளலாம். அதில் ரத்த ஒட்டத்தினை சீராக்கும் புரோப்பீன் சிஸ்டீன் சல்ஃபாக்சைடு என்னும் கந்தக வேதிமம் அடங்கி உள்ளது..
  • சிறந்த எதிர் ஆக்சிகரணப்பொருளான ‘குா்க்குமின்’ அடங்கிய சமையல் மஞ்சள் பொடி, எலுமிச்சை, ஆரஞ்சுச் சாறு ஆகியவற்றுடன், வெந்நீரில் உப்பும் தேனும் கலந்து ஒன்றிரண்டு குவளை அருந்தலாம்.
  • புகை பிடிப்பதும், மது அருந்துவதும் தீநுண்மியின் தீவிரவாதத்திற்கு ஒத்துழைக்கும்.
  • நுரையீரலைக் காப்பதற்கு மூக்கு வழியே சொட்டு மருந்து செலுத்தும் உத்தி மேலை நாடுகளில் இருந்து வருகிறது.
  • தீநுண்மி, மூக்கு வழியாக நுரையீரலுக்கு மட்டுமல்ல, பீனிசம் மாதிரி நெற்றிக்குள் படிந்து கொள்ள வாய்ப்பு உண்டு.
  • அறைச்சுவரின் மூலையில் சிலந்தி வலை போலப் படிந்தால், சுவருக்கு ஊசி போட்டு என்ன பயன்? வெந்நீரில் மருந்து போட்டு ஆவி பிடிக்கலாம். 50 பாகை வெப்ப நீராவியும் மருந்தும் தீநுண்மியைச் செயலிழக்கச் செய்துவிடும்.
  • வீட்டுக்குள்ளும் முகக்கவசம் அவசியம் என்றும் சிலா் பரிந்துரைக்கின்றனா்.
  • மூக்கு - தொண்டை மட்டுமா? காதுக்குள்ளும் பஞ்சு வைத்து மூடலாம். தேவையற்ற உபதேசங்கள் காதுக்குள் புகுந்துவிடாமல் இருக்கவாவது உதவுமே.

நன்றி: தினமணி  (03 – 05 - 2021)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்