TNPSC Thervupettagam

முதலீட்டு வாய்ப்புகள்: கொட்டிக் கிடக்கும் எரிசக்தி துறை

July 8 , 2024 187 days 111 0
  • இந்தியாவின் ஆற்றல் நுகர்வு என்பது கடந்த இரண்டு தசாப்தங்களில் இரு மடங்காக அதிகரித்துள்ளது. இதன் மூலம் உலக எரிசக்தி நுகர்வு சந்தையில் இந்தியா நான்காவது இடத்தை பிடித்துள்ளது. எவ்வாறாயினும், இந்தியாவின் தனிநபர் ஆற்றல் நுகர்வு என்பது உலக சராசரியில் மூன்றில் ஒரு பங்காக மட்டுமே இருப்பதால் இன்னும் பயன்படுத்தப்படாத எரிசக்திக்கான சந்தை வாய்ப்புகள் அதிகமாகவே உள்ளன. இது, இந்த துறையில் உள்ள வர்ச்சி மற்றும் முதலீட்டுக்கான ஏராளமான வாய்ப்புகளை பிரதிபலிக்கிறது.

நாட்டின் வளர்ச்சியும்.. எரிசக்தி துறையும்..:

  • அடுத்த சில தசாப்தங்களில் இந்தியாவின் வளர்ச்சி அதிகரிக்கும்போது மின்சாரம், எரிபொருட்களுக்கான தேவை மேலும் தீவிரமடையும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
  • நாட்டின் பொருளாதார வளர்ச்சியும், எரிசக்தி துறையின் விரிவாக்கமும் ஒன்றோடு ஒன்று நெருக்கமாக பின்னிப் பிணைந்தவை. ஒரு நாட்டில் பொருளாதார வளர்ச்சியை நிலைநிறுத்துவதற்கும், தொழில்மயமாக்கலை தூண்டுவதற்கும், வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதற்கும் வலுவான எரிசக்தி ஆற்றல் துறையானது மிக முக்கியம்.
  • 2070-ம் ஆண்டுக்குள் நிகர பூஜ்ய உமிழ்வை அடைய இந்தியா இலக்கு நிர்ணயித்துள்ளது. இந்த லட்சியம் சூரிய சக்தி, காற்றாலை உள்ளிட்ட புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறைக்கான புதிய வாய்ப்புகளை திறந்துள்ளது. நிகர பூஜ்ய இலக்கை அடைவதற்கு புதுப்பிக்கத்தக்க எரிசக்தி பெரிய உந்துதலாக இருக்கும். எனவே, இந்த துறையில் புதிய முதலீட்டுக்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளன.

அரசாங்க சீர்திருத்தங்கள்:

  • இந்திய எரிசக்தி துறையை மாற்றியமைப்பதில் அரசின் சீர்திருத்த கொள்கைகள் முக்கிய பங்கு வகிக்கின்றன. இதில், உள்நாட்டு எண்ணெய் மற்றும் எரிவாயு ஆய்வுக்கு ஆதரவான கொள்கை, எரிவாயு விலை நிர்ணயத்தில் சீர்திருத்தங்கள், வாகன எரிபொருள் மானியங்களை நீக்குதல், சிறந்த மூலதன ஒதுக்கீடு, எரிவாயு நுகர்வுக்கான ஒருங்கிணைந்த கட்டணத்தை அமல்படுத்துதல், எரிவாயு பரிமாற்ற உள்கட்டமைப்பு, எல்என்ஜி டெர்மினல் உருவாக்கம், நகர எரிவாயு நெட்வொர்க்குகள் மேம்பாடு ஆகியவற்றில் மேற்கொள்ளப்படும் சீர்திருத்த நடவடிக்கைகளும் அடக்கம்.

சந்தை மூலதனம் - லாபம்:

  • 2024 மே 31 நிலவரத்தின் அடிப்படையில் எரிசக்தி சார்ந்த திட்டங்களின் சந்தை மூலதனம் என்பது 8 சதவீதமாக உள்ளது. ஆனால், லாப தொகுப்பு 19 சதவீதமாக காணப்படுகிறது. இது, எரிசக்தி நிறுவனங்கள் தங்களது வளர்ந்து வரும் லாபத்துக்கு ஏற்ப சந்தைப் பங்கை விரிவுபடுத்தும் முதலீட்டுக்கான நம்பிக்கைக்குரிய வாய்ப்பை எடுத்துக்காட்டும் குறியீடாக அமைந்துள்ளது.
  • இந்தியா தனது லட்சியப் பாதையில் வேகமாக செல்ல புதுப்பிக்கத்தக்க எரிசக்தி ஆதாரங்களில் முதலீடுகள், ஆற்றல்-திறனுள்ள தொழில்நுட்பங்களில் முன்னேற்றம், எரிசக்தி உள்கட்டமைப்பில் மேம்பாடு ஆகியவை இன்றியமையாததாக அமையும். இதனை கருத்தில் கொள்ளும்போது, இந்தியாவின் பொருளாதார விரிவாக்கத்தில் முதலீடு செய்ய விரும்பும் முதலீட்டாளர்களுக்கு எரிசக்தி துறை மிகச் சிறந்த வரப்பிரசாதமாகும்.

ஐசிஐசிஐ மியூச்சுவல்:

  • எரிசக்தி துறையில் ஆர்வமுள்ள முதலீட்டாளர்களுக்கு ஐசிஐசிஐ புருடென்ஷியல் மியூச்சுவல் பண்டின் தற்போதைய என்எஃப்ஓ திட்டம் சிறந்த வாய்ப்பாக இருக்கும். இந்த திட்டம் எரிசக்தி துறையில் கவனம் செலுத்துகிறது. ஜூலை 2-ம் தேதி முதல் 16-ம் தேதி வரை இந்த என்எஃப்ஓ திட்டத்தில் முதலீட்டாளர்கள் முதலீடு செய்யலாம். பசுமை எரிசக்தி, எண்ணெய்-எரிவாயு துறை, மின்சாரம் மற்றும் அது தொடர்புடைய நிறுவனங்களில் பரந்த அளவில் முதலீடு செய்வதே இந்த திட்டத்தின் முக்கிய நோக்கமாகும்.

நன்றி: இந்து தமிழ் திசை (08 – 07 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்