TNPSC Thervupettagam

மேட்டூர் அணை விவகாரம்

July 15 , 2023 358 days 646 0

(For the English version of this Article Please click Here)

  • 1924 ஆம் ஆண்டு என்பது தமிழ்நாடு மற்றும் கர்நாடகா மாநிலங்களுக்கு இடையேயான பிரச்சினையில் ஒரு முக்கியப் புள்ளியாக இருந்தது.
  • அந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 18 தேதி அன்று மதராஸ் மற்றும் மைசூர் அரசுகள் ஒரு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன.
  • இதில் கிருஷ்ணராஜ சாகர் மற்றும் மேட்டூர் அணைகள் கட்டுவது உள்ளிட்டவை அடங்கும்.
  • இந்த வருட ஆண்டானது இந்த நதி தொடர்பான முக்கிய ஒரு வரலாற்று நிகழ்வின் ஒரு நூற்றாண்டு விழாவைக் குறிக்கிறது.
  • காவிரி நதிநீர்ப் பங்கீடு தொடர்பாக தமிழகம் மற்றும் கர்நாடகா ஆகியவற்றுக்கு இடையே நீண்ட காலமாக நிலவி வரும் சர்ச்சையில், 1924 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் இந்த இரு தென் மாநிலங்களின் முன்னோடிகளும் கையெழுத்திட்ட ஒப்பந்தம் என்பது 100வது ஆண்டை எட்டுகிறது.
  • 2007 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் காவிரி நதிநீர்ப் பிரச்னை தீர்ப்பாயத்தின் இறுதி உத்தரவு இந்த ஒப்பந்தத்தினை மாற்றி அமைத்து விட்டது.

உருவாக்கம்

  • இந்த அணையின் உருவாக்கம் குறித்து 1834 ஆம் ஆண்டில் முன் வைக்கப்பட்ட ஆர்தர் காட்டனின் (1803-99) முன்மொழிவை இது குறிக்கிறது.
  • இவர் தென்னிந்தியாவின் பஞ்சத்தைத் தடுக்கவும், பொருளாதாரத்தைத் தூண்டவும் உதவும் நீர்ப்பாசனத் திட்டங்களைச் செயல்படுத்தியப் பெருமைக்குரியவர் என்ற வகையில் ஒரு புகழ் பெற்ற பிரிட்டிஷ் பொறியாளர் ஆவார்.
  • காட்டன் ஒருங்கிணைந்த தஞ்சாவூர் பகுதியில் பாசனத்தை மேம்படுத்த காவிரியில் அணை ஒன்றைக் கட்ட நினைத்தார்.
  • பின்னர் பல பொறியாளர்கள் இந்த யோசனையைப் பின்பற்றினர்.
  • ஒரு கட்டத்தில் காவிரியின் கிளை நதியான பவானியைத் தான் முதலில் தேர்ந்தெடுக்க வேண்டும் என்று தோன்றியது.
  • ஆனால் நீர்வள நிபுணர்களிடையே இதைச் சார்ந்த ஒருமித்த கருத்து எதுவும் இல்லை.
  • எனவே முன்மொழியப்பட்ட பவானி மற்றும் காவிரி நீர்த்தேக்கங்கள் பற்றிய பல்வேறு அறிக்கைகளைப் படித்த பிறகு காவிரியின் குறுக்கே ஒரு அணை கட்டும் திட்டத்தை 1901 ஆம் ஆண்டில் அப்போதைய நீர்ப்பாசனத் துறை உயர்பொது அதிகாரியான ஜெனரல் தாமஸ் ஹைஹாம் என்பவர் விரும்பினார்.
  • ஒன்பது ஆண்டுகளுக்குப் பிறகு மேட்டூர் திட்டத்தை வரைவதற்காக தேர்ந்தெடுக்கப் பட்ட டபிள்யூ.எம் எல்லிஸ் தனது அறிக்கையைச் சமர்ப்பித்தார்.
  • அவரது முன்மொழிவைப் பகுப்பாய்வு செய்தது மூலம் மத்திய நீர்ப்பாசனத் துறை மற்றும் மின் வாரியமானது (CBIP) 1987 ஆம் ஆண்டு 'காவிரி மேட்டூர் திட்டத்தின் வரலாறு' குறித்து ஒரு அறிக்கையினை வெளியீட்டது.
  • இந்த அறிக்கையானது எல்லிஸ் அணைக்கான தளத்தைத் தேர்ந்தெடுக்கும் போது அனைத்து நிபந்தனைகளையும் "பாதுகாக்க இருந்தது" என்பதையும், முன்மொழியப்பட்ட அணைக்கு அவை அவசியம் என்றும், அதேசமயம் "முந்தையப் புலனாய்வாளர்களால் முன்மொழியப் பட்ட தளங்கள் அனைத்தும் அதில் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட அளவு அத்தியாவசியமானவைகளைக் கொண்டிருக்கவில்லை என்றும் சுட்டிக் காட்டினார்.
  • இந்த வெளியீடானது 1936 ஆம் ஆண்டு சி.ஜி பார்பர் எழுதிய ஆவணத்தை அடிப்படையாகக் கொண்டதோடு 1980 ஆம் ஆண்டுகளில் ஏ. மோகனகிருஷ்ணனால் திருத்தப் பட்டது.
  • எல்லிஸ் திட்டமானது ஆங்கிலேய அதிகாரிகளின் பரிசீலனையில் இருந்த போது, ​​ அப்போதைய மதராஸ் மற்றும் மைசூர் ஆகியவற்றுக்கு இடையே காவிரிப் பிரச்சனை மிகுந்த தீவிரம் அடைந்த நிலையில், அவை இரண்டும் 1924 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 18 தேதி அன்று அந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது.

  • இந்த ஒப்பந்தம் கிருஷ்ணராஜ சாகர் அணை (கர்நாடகாவில்) மற்றும் மேட்டூர் அணை (தமிழ்நாட்டில்) ஆகியவற்றை உள்ளடக்கியது.
  • இங்கிலாந்தில் உள்ள அரசாங்கம் இந்தத் திட்டத்திற்கான மதிப்பீட்டை முடிக்க ஒரு வருடம் எடுத்து கொண்டு, இந்தத் திட்டத்திற்கான செலவு 76.12 கோடியாகும் என நிர்ணயிக்கப் பட்ட நிலையில், அது 1910 ஆம் ஆண்டில் வெளியிடப் பட்ட எல்லிஸின் திட்டத்தை விட 21 கோடி அதிகம் என்று CBIP வெளியீடானது பதிவு செய்கிறது.
  • 1925 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 20 தேதி அன்று, அப்போதைய ஆளுநர் விஸ்கவுண்ட் கோஷென் இப்பணியை முறையாகத் தொடங்கி வைத்தார்.
  • அவர் அணைக் கட்டுத் திட்டத்தின் வரலாற்றை விவரிக்கும் போது, 1924 ஆம் ஆண்டு ஒப்பந்தத்தின் படி கையெழுத்திடப் பட்டு பின் இந்த அணை கட்டும் திட்டம் தொடங்கப் பட்டதிலிருந்து சி.பி. ராமசுவாமி ஐயர் (1879-1966) என்பவர் ஆற்றிய ஒரு முக்கியப் பங்கினைக் குறிப்பிட்டார்.
  • ஐயர், பாசனம், மின்சாரம் உள்ளிட்ட விவகாரங்களைக் கையாளும் நிர்வாகக் குழுவில் சட்ட உறுப்பினராக இருந்தவர் ஆவார்.
  • 1924 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 26 தேதி அன்று காவிரியில் வினாடிக்கு 4.56 லட்சம் கன அடி தண்ணீர் வெள்ளமாக வந்த அதே சமயம், எல்லிஸ் திட்டத்தின் படி 2.5 லட்சம் கன அடி நீர் மட்டுமே வழங்கப் பட்டு இருக்கும் என்பதே ஒரு வகையில் மேட்டூர் திட்டம் தொடங்குவதில் ஏற்பட்ட தாமதத்தால் விளைந்த ஒரு முக்கிய நன்மை ஆகும்.
  • இதற்கு முன்பு 1896 ஆம்  ஆண்டில் வெளியேற்றப் பட்ட நீர் 2.07 லட்சம் கன அடியாக இருந்தது.
  • தற்போது அணையானது, 4.41 லட்சம் கன அடி நீரினை வெளியேற்ற முடியும்.

'முக்கிய நிபுணர்களின் கருத்து'

  • இந்த அணையின் கட்டுமானம் முடிய ஒன்பது ஆண்டுகள் ஆன நிலையில், 1934 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 21 ஆம் தேதி அன்று இந்த அணையானது பயன்பாட்டுக்கு வந்தது.
  • இந்தத் திட்டத்தை உருவாக்கிய வகையில் முதன்மையான நிபுணராக இருந்த சி.டி. முல்லிங்ஸ் (இதன் ஆலோசகர், தலைமைப் பொறியாளர் மற்றும் தலைமைப் பொறியியலாளராகப் பணியாற்றியவர்) தனது பணிக்கு நைட்ஹூட் வழங்குவதன் மூலம் தனது பணியானது வெகுவாக அங்கீகரிக்கப் பட்டதைச் சுட்டிக் காட்டினார்.
  • அணைக் கட்டும் திட்டத்தின் ஒரு பகுதியாக, 3.01 லட்சம் ஏக்கர் புதிய நிலப் பரப்புக்குச் நீர் வழங்கச் செய்வதற்காக கிராண்ட் அணைக் கட்டு கால்வாய் அமைப்பு உருவாக்கப்பட்டது.
  • மேலும் பவானிசாகர் மற்றும் அமராவதி ஆகிய இரண்டு நீர்த்தேக்கங்கள் முறையே 1953 மற்றும் 1957 ஆம் ஆண்டுகளில் காவிரியின் துணை நதிகளின் குறுக்கே கட்டப்பட்டன.
  • பாசனத்தை உறுதிப்படுத்துவது, லட்சக்கணக்கான விவசாயிகள் மற்றும் நிலமற்றத் தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை உறுதி செய்வது மற்றும் உணவுப் பாதுகாப்பிற்குப் பங்களிப்பது போன்ற பல்வேறு முன்னேற்றங்கள் இந்த அணையின் முக்கியமான பலன்கள் / நன்மைகள் ஆகும்.
  • 1996 ஆம் ஆண்டு முதல், குறுவை, சம்பா மற்றும் தாளடி ஆகிய மூன்று சாகுபடிப் பருவங்களில் காவிரி டெல்டாவில் குறைந்தது 15 லட்சம் ஏக்கரில் நெல் பயிரிடப்படுகிறது என்பதிலிருந்து இது தெளிவாகிறது.
  • குறைந்தபட்சம் 10 லட்சம் ஏக்கர் நிலப்பரப்பில் சம்பா என்பது முக்கியப் பருவம் என்பதைச் இதன் மூலம் சொல்லத் தேவையில்லை.

  • மேட்டூர் அணையானது 1934 ஆம் ஆண்டில் கட்டப்பட்டதில் இருந்து 2022 ஆம் ஆண்டானது  அதிக அளவு உபரி நீர் திறந்து விடப் பட்டதைக் கண்டுள்ளது.
  • இந்த உபரி நீரின் அளவு என்பது அணையின் கொள்ளளவை விட 4.7 மடங்கு அதிகமாக உள்ளது.

  • 2022 ஆம் ஆண்டிற்கான எண்ணிக்கையைப் பரிசீலித்த பிறகு கடந்த 88 ஆண்டுகளில் திறந்து விடப் பட்ட நீரின் மொத்த உபரி அளவு என்பது சுமார் 3,614 ஆயிரம் மில்லியன் கன அடி (டிஎம்சிஎஃப்டி) என்று நீர்வளத் துறையின் முன்னாள் கண்காணிப்புப் பொறியாளர் ஆர். சுப்ரமணியன் எழுதிய வெளியீடு தெரிவிக்கிறது.
  • தமிழ்நாடு பொதுப்பணித்துறை முதுநிலைப் பொறியாளர்கள் சங்கம் வெளியிட்டுள்ள, 'மேட்டூர் அணை அமைப்புகளின் கட்டுமானம் - ஒரு விளக்கக் கட்டுரை’ என்பது இந்தத் திட்டத்தின் வரலாற்றைக் குறிக்கிறது.
  • 1924 ஆம் ஆண்டின்  ஜூலை மாதத்தில் காவிரியில் வினாடிக்கு 4.56 லட்சம் கன அடி அளவிற்கு வெள்ளப் பெருக்கு ஏற்பட்ட நிலையில் அணையின் நிலப்பரப்பானது எவ்வாறு அசல் இடத்தில் இருந்து மாற்றப் பட்டது என்பது பற்றியும் அது பேசுகிறது.
  • இந்த அறிக்கை 1892 ஆம் ஆண்டு மற்றும் 1924 ஆம் ஆண்டு ஒப்பந்தங்களின் உரையைத் தவிர, காவிரி நதிநீர்ப் பங்கீட்டுத் தீர்ப்பாயத்தின் இடைக்கால மற்றும் இறுதித் தீர்ப்புகள் மற்றும் உச்ச நீதிமன்றத்தின் 2018 ஆம் ஆண்டின் தீர்ப்பின் சில பகுதிகள் ஆகியவற்றைக் கொண்டுள்ளது.

 

-------------------------------------

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்