TNPSC Thervupettagam

வங்கம், கேரளம், அசாம்

May 5 , 2021 1360 days 565 0
  • தமிழ்நாட்டிலும் புதுச்சேரியிலும் வாக்காளர்கள் ஆட்சி மாற்றத்தை விரும்பியுள்ள நிலையில் அசாம், வங்கம், கேரளம் ஆகிய மூன்று மாநிலங்களிலும் ஆளுங்கட்சியை மீண்டும் தனிப் பெரும்பான்மையுடன் மக்கள் தேர்ந்தெடுத்திருப்பது அவர்களது தெளிவான முடிவையே காட்டுகிறது.
  • மக்களின் முன்னுள்ள அரசியல் தெரிவுகளில் அவர்கள் எதைத் தேர்ந்தெடுக்கிறார்கள் என்பதை எளிதில் விளக்கிவிட முடியாது. அதே நேரத்தில், ஆளுமை மிக்க தலைவர்களைக் கொண்ட கட்சிகளே முன்னிலை பெற்றுவிடுகின்றன.
  • வங்கத்தில் மம்தா முன்னெடுத்த துணைதேசிய உரையாடல், இந்துத்துவப் பிரச்சாரங்களுக்கான அரசியல் விளைவுகளைக் குறைந்தபட்சம் தற்காலிகமாகத் தடுத்துவைத்திருப்பது புரிகிறது.
  • வங்கத்தில் பாஜக மிகவும் தீவிரமாகப் போராடிய முதல் சட்டமன்றத் தேர்தல் இது. 2016 தேர்தலில் வெறும் 3 இடங்களைப் பெற்ற பாஜக, இப்போது 76 இடங்களை வென்றுள்ளது.
  • அதே நேரத்தில், அம்மாநிலத்திலிருந்து கம்யூனிஸ்ட், காங்கிரஸ் கட்சிகள் முற்றிலுமாகத் துடைத்தழிக்கப்பட்டிருக்கின்றன.
  • பாஜக வெற்றிவாய்ப்பை இழந்திருந்தாலும் அது நடத்திய பெருந்திரளான பிரச்சாரங்களின் தாக்கம் எளிதில் முடிந்துவிடும் என்று எண்ணுவதற்கில்லை.
  • மூன்றாவது முறையாக முதல்வராகப் பொறுப்பேற்றிருக்கும் மம்தாவுக்கு, கட்டுக்கடங்காமல் பெருகிக்கொண்டிருக்கும் கரோனா ஒரு சவாலாக முன்னிற்கிறது.
  • கேரளத்தில் ஆட்சியில் இருக்கும் சிபிஐ(எம்) தலைமையிலான இடதுசாரி ஜனநாயக முன்னணி, தொடர்ந்து இரண்டாவது முறையாக வெற்றி பெற்றுள்ளது.
  • அடுத்தடுத்த ஆண்டுகளில் இரண்டு பெருவெள்ளங்களையும் பெருந்தொற்றுக் காலத்தையும் மிகச் சிறப்பாக நிர்வகித்த பினராயி விஜயனுக்கு மக்கள் அளித்த பரிசு இது.  

நன்றி: இந்து தமிழ் திசை (05 - 05 – 2021)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்